Feb 14, 2007

பிப்ரவரவி 14

மற்றவர்கள் அனுப்பிய
அன்பர் தின வாழ்த்துகளிடையே
நீ அனுப்பிய காதலர் தின வாழ்த்து
அழகாய் தெரிந்தது
எனது செல்போனில்.
--------------------------------------**-----------------------------------

அது என்ன
இன்றைக்கு மட்டும்
நீயும் நானும்
அதிகமாய் நேசிக்கப்படுகிறோம்
என்றது
ரோஜா பூக்களும்
வாழ்த்து அட்டைகளும்!!
-----------------------------------**-------------------------------------

நீ காதலிப்பவனுடன் வாழ்ந்தால்
பிப்ரவரவி 14 மட்டும்தான் காதலர் தினம்
உன்னை காதலிப்பவனுடன் வாழ்ந்தால்
என்றென்றும் காதல் தினம் தான்!
------------------------------**-----------------------------------------
காகிதத்தில் முத்துமுத்தாய்
நீ எனக்கு எழுதிய
கவிதைகளைவிட
கன்னத்தில்
முத்தமாய் இட்ட
கவிதையே இனிக்கிறது!!
-------------------------------**-----------------------------------------

4 comments:

  1. பிப்ரவரி 14 னு போட்டுட்டு நாலே நாலுதானா?

    மக்கள் நெறைய எழுதியிருப்பாங்கன்னு வந்தா ஏமாத்துறாங்களே!!!

    ReplyDelete
  2. என்னப்பா ... இதுக்கே நான் கஷ்டப்பட்டுதான் எழுதினேன்... பரவாயில்ல.. அடுத்த தடவை நிறைய எழுதுறேன்..

    ReplyDelete
  3. நீங்கள் மட்டும் இது போன்ற காதல் கவிதைகள் தொடர்ந்து எழுதினால்
    இயற்கையிடம் ஆணையிடுகிறேன்
    உடனே வந்திடும்
    தினமும்
    பிப்ரவரி 14!

    "கன்னத்தின் கவிதை" - நான் ரசித்தேன்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வாழ்த்து அட்டையும் ரோஜாக்களும் பேசியது...அழகான கவிதை

    ReplyDelete