Jul 16, 2011

ஜஸ்ட் சும்மா (16/7/11)

நேற்று இம்ரான் நடித்த murder 2 படத்தை பார்த்தேன்! படம்னா இப்படி தான் இருக்கனும். அப்படியே என்னை இன்னொரு உலகிற்கு அழைத்து சென்றது. பயங்கரமா இருந்துச்சு! இம்ரானின் நடிப்பு, கதையின் வேகம், படத்திலுள்ள வசனங்கள் அனைத்தும் அருமை! டாப்!!

********************************************************************

போன வாரம் 'i am sam' படத்தை பார்த்து முடித்தபிறகும் அழுகையை நிறுத்த முடியவில்லை என்னால். படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்தில் அழ ஆரம்பித்து அதற்கு அப்பரம் நிறுத்தவே முடியவில்லை. என்ன ஒரு கதை!! முடியல என்னால! வசனங்கள் ஒவ்வொன்றும்.... சொல்ல வார்த்தை இல்லை. அந்த படத்தை தழுவி 'தெய்வ திருமகள்' வெளிவந்து இருக்கிறது. சக வலைப்பதிவர்களின் விமர்சனத்தை பார்த்தேன். படம் பார்க்கும் ஆவலை மேலும் தூண்டிவிட்டார்கள்!!!:)))

****************************************************************
கதை எழுதும் போட்டி ஒன்றில் பங்கேற்றேன். முதல் பரிசு lump sum, கிட்டதட்ட என் மூன்று மாத சம்பளம் சுளையாய் கிடைக்கும்!:))) போட்டி முடிவு october மாதம் தான் தெரியும். ஆவலுடன் காத்து இருக்கிறேன்.

****************************************************************

google plus புதிதாய் வந்து இருக்கிறது. அதில் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் சேர்ந்தேன். ஆனால், ஒன்னும் சுவாரஸ்சியமாக தெரியவில்லை. twitterரே எனக்கு பிடிக்கவில்லை, google plus பிடிக்குமா? போக போக தெரியும்...

****************************************************************

வீட்டில் அம்மா என்னை masters எடுத்து படிக்க சொல்லி ஒரே நச்சரிப்பு! எனக்கும் படிப்பிற்கும் 'divorce' ஆகி ஒரு வருஷம் ஆகிவிட்டது. மறுபடியுமா?? no way!! எனக்கு உலகில் பிடிக்காத ஒரு விஷயம்- படிப்பது!! வேலை பார்ப்பதில் எனக்கு அதிக ஈடுபாடு இல்லை என்றாலும், படிப்பை ஒரு வழியாய் முடித்துவிட்டதில் பெரிய சந்தோஷம். graduation ceremony அன்னிக்கு, எனக்கு நானே எடுத்த முடிவு- இனி, எக்காரணத்தையும் கொண்டு மறுபடியும் படிக்கவே கூடாது! 24 வருடங்களாய் படித்தது போதும்!! ஐயோ சாமி.....இனிமேலு முடியாது, mummy!!!

***********************************************************************

Jul 10, 2011

வெள்ளிக்கிழமை என்பது...




வேலைக்கு போன பிறகு தான் புரியது 'வெள்ளிக்கிழமை' மீது இருக்கும் காதல்! ஐயோ எப்ப டா வார இறுதி வரும்னு 'வைதேகி காத்திருந்தாள்' விஜய்காந்த் மாதிரி காத்து இருப்பேன். அதுவும் சரியா, என்னைய(மற்ற பலரையும்) வெறுப்பேத்தும் வகையில் வெள்ளிக்கிழை மதியம் மீட்டிங் வைப்பார் பாஸ்! மதியம் ஆரம்பித்து மூன்று மணி நேரம் கதிகலங்க பேசுவார் பேசுவார் பேசிகொண்டே இருப்பார்.

மீட்டிங் பேசப்படும் எந்த ஒரு விஷயம் எனக்கும் என் வாழ்க்கையிலும் எந்த ஒரு நன்மையையும் கொடுக்கபோவதில்லை. இருந்தாலும் உட்கார்ந்து கேட்கனும். சில நேரத்தில் கொடுமையாய் கொடூரமாய் இருக்கும். போன மீட்டிங் போது பேசியதை மறுபடியும் பேசுவதற்கு ஒரு மீட்டிங். 'போட்டு தள்ளிடலாம்'னு வரும்!! வெள்ளிக்கிழமை அன்று இப்படி அறுத்தால்?? உச்சி முதல் பாதம் வரை வலிக்கும்! மனசு ரெம்ம்ம்ம்ம்ம்ப வலிக்கும்

அப்பரம் மீட்டிங் முடிஞ்சு கேபினுக்குள் வந்து உட்கார்ந்து ஒரு பெருமூச்சு விடுவோம் பாருங்க, மேசையில் இருக்கும் பேப்பர் எல்லாம் பறக்கும்! எங்க மறுபடியும் கூப்பிடுவாரோனு பயந்து அவசர அவசரமாய் மடிகணினியை எடுத்து drawerவில் வைத்துவிட்டு, மேசையில் கிடக்கும் walletயையும் phoneயையும் எடுத்து பையில் போட்டுகொண்டு சீனியர் ஆபிசர் கண்ணில் படாமல் விறுவிறு என்று ஓடி போய் பேருந்து நிறுத்தும் இடத்தில் நின்றால் வரும் சந்தோஷம் இருக்குதே- யப்பா!!!!!!!!!!! கோச்சிகிட்டு போன boyfriend (அல்லது உங்க girlfriend) கிட்ட வந்து நம்மள பார்த்து smile பண்ற மாதிரி இருக்கும்.

வெள்ளிக்கிழமையே, ஐ லவ் யூ!! வேலைக்கு போன பிறகு, உன் அருமை புரியுது!

(ஞாயிற்றுகிழமை இரவு என்பது பிடிக்காத மாமியர் வீட்டுக்கு வர மாதிரி!! மறுநாள் திங்கள் ஆச்சே!!!!!!:(((((((((((

Jul 3, 2011

அப்பரம் இன்னிக்கு என்ன plan?-6

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5

அவன் போட்ட facebook statusக்கு பல பதில்கள் வந்து குவிந்தன. ஆனால், யாரிடம் பதில் வர வேண்டியிருந்ததோ அவளிடமிருந்து மட்டும் ஒரு பதிலும் வரவில்லை. இரவு மணி 11 ஆகியது. மனம் வேண்டாம் என்றாலும், அதை கேட்கவில்லை சந்தோஷ். மாயாவுக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பினான்.

வீட்டுக்கு சீக்கிரம் போயிட்டீயா? அம்மா திட்டினாங்களா?

அவளிடமிருந்து இதற்கும் பதில் வராது என்று நினைத்திருந்தான். ஆனால், உடனே பதில் வந்தது அவனுக்கு கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.

கொஞ்சம் திட்டினாங்க. ஆனா, பரவாயில்ல, ஏதோ சமாளிச்சுட்டேன்.

அன்று மதியம் நடந்த விஷயத்தைப் பற்றி பொருட்படுத்தாமல அவள் சாதாரணமாய் பதில் அளித்தது, அவனுக்கு ஆறுதலையும் தாண்டி ஒரு குட்டி சந்தோஷத்தை தந்தது. மாயாவிற்கு தனது மேல் எந்த ஒரு கோபமும் இல்லை என்பதை புரிந்து கொண்டான்.

ஒரு வாரம் சென்றது. அவள் எந்த குறுந்தகவலும் அனுப்பவில்லை. பொறுத்தார் பூமி ஆள்வார். ஆனால், பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு. அந்த எல்லையை தொட்டு பல நாட்களாகி சந்தோஷ் எல்லை கொட்டிலே நின்று கொண்டிருந்தான். ஒரு வாரம், ஒரு மாதமாகியது. பதில் வரவில்லை. அவன் காத்திருந்தான். அவளுக்கு மேலும் குழப்பத்தை உண்டாக்க வேண்டாம் என்று சந்தோஷ் அவளைத் தொடர்பு கொள்ளவில்லை பல மாதங்களாய்.

நான்கு மாதங்கள் சென்றன.

"டேய் ரவி, அவளுக்காக 4 மாசம் வேட் பண்ணியாச்சு. அவ ஒரு மெசேஜ்கூட அனுப்பல. வீட்டுல பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. நான் என்ன சொல்லி சமாளிக்குறது?" தாடியுடன் சந்தோஷ். ரவியும் சந்தோஷுக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் முழித்தான். நாட்கள் சென்றன.

ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை அன்று சந்தோஷ் பிரென்சில் jogging groundல் உட்கார்ந்து இருந்தான். அவனுக்கு மனம் சரியில்லாத போது எல்லாம் அங்கு செல்வான். யாரும் அதிகமாய் வரமாட்டார்கள். காலை 7 மணி அன்று. ஒரே ஒரு சின்ன நாய்க்குட்டி மட்டும் அங்கும் இங்கும் ஓடி கொண்டு இருந்தது. கொஞ்சம் அதிகமாகவே தாடியுடன் இருப்பதை கண்ட அந்த நாய்க்குட்டி அவனை பாவமாய் பார்த்தது. அவன் கண்டு கொள்ளவில்லை.

மழை எந்நேரமும் வருவது போல் இருந்தது. ஆனால், அவன் அவ்விடத்தை விட்டு செல்லவில்லை. ஏதோ ஒரு உருவம் அவன் அருகே வருவதுபோல் உணர்ந்தான். திரும்பி பார்த்தான் வலப்பக்கம்.

மாயா நின்று கொண்டிருந்தாள். அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள்.

மாயா, "jogging ah?" என்று கேட்டாள். பல மாதங்களாக பார்க்காதவனிடம் கேட்ட கேள்வி அது. பல மாதங்கள் கழித்து அவளைப் பார்த்தது ஒருவிதத்தில் சந்தோஷம் என்றாலும் அவள் கேட்ட கேள்வி அவனுக்கு ஏரிச்சலை உண்டாக்கியது.

மாயா, "jog பண்ண வரீயா?"

இல்லை என்றும் சொல்ல முடியவில்லை. மனதில் உள்ள சோர்வினால் ஆமாம் என்றும் சொல்ல முடியவில்லை. இருந்தாலும், அவன் கிளம்பி அவளுடன் ஓட சென்றான். சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றி ஓடி வந்தனர் அமைதியாய். எதுவுமே பேசவில்லை. ஓடி முடித்தபிறகு, இருவரும் பெஞ்சில் உட்கார்ந்தனர். அங்கும் இங்கும் ஓடி கொண்டிருந்த நாய்க்குட்டி பெஞ்சு அருகே வந்து விளையாடி கொண்டிருந்தது.

"so cute..." நாய்க்குட்டியைப் பார்த்து சொன்னாள் மாயா.

ஒருத்தன் இங்க உன் பின்னாடி நாய் மாதிரி சுத்திக்கிட்டு இருக்கான், அவன பத்தி உனக்கு கவலை இல்லையா?- என அவளிடம் கத்த வேண்டும் என்று இருந்தது. ஆனால், கத்தவில்லை.

பையிலிருந்து energy bottle drinkயை எடுத்தவள், "நீ ஏன் எந்த ஸ் எம் ஸும் அனுப்புல? நாலு மாசம் ஆச்சு...."

அவன் புருவங்களை சுழித்தான்.

"ஓகே." என்றாள் மாயா.

"எதுக்கு?" என்றான் சந்தோஷ்.

"நீ கேட்டீயே? அதுக்கு." பதில் அளித்தாள் மாயா.

"நான் என்ன கேட்டேன்?" சந்தோஷுக்கு ஒன்றுமே புரியவில்லை.

"நாலு மாசத்துக்கு முன்னாடி நீ கேட்டீயா...அதுக்கு?" விளக்கினாள் மாயா. அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் புரிய வர, அவனுக்கு மகிழ்ச்சி பொங்கியது.

"you mean... love?" என்றான் சந்தோஷ்.

"ம்ம்...." என்றபடி புன்னகையித்தாள். மேகங்களுக்கும் மகிழ்ச்சி போலவும், அவை உடைத்து கொண்டு மழையை பொழிய வைத்தன.

"ஓ நோ! வா..." என்று மழையில் நனைந்தவனை இழுத்து கொண்டு shelther areaக்கு செல்ல முற்பட்டாள். ஆனால், சந்தோஷ் அவளைவிட வில்லை.

"சரியா சொல்லு.... do you love me?"

மழையில் இருவரும் நனைந்தனர். விளையாடி கொண்டிருந்த நாய்க்குட்டி ஒதுக்குபுரத்திற்கு ஓடிவிட்டது.

"ம்ம்...yes," அவனை இழுத்து கொண்டு செல்ல, அவனும் அவளை பின் தொடர்ந்தாள். ஆனந்த வெள்ளம் மனதில், மழை வெள்ளம் திடலில். தன் பையிலிருந்த ஒரு சின்ன துண்டை எடுத்து துவட்டினாள் அவள்.

"எப்படி திடீரென்னு?" என்றான் சந்தோஷ், இன்னும் அவள் சொன்னதிலிருந்து மீளாதவனாய்.

"தெரியல. மனசுல திடீரென்னு தோணுச்சு. நீ நாலு மாசம் ஒரு ஸ் எம் ஸும் அனுப்பாத போது, வாழ்க்கைல ஒன்னுமே இல்லாத மாதிரி ஒரு feel," என்றாள் மாயா. அவள் சொல்வதைக் கேட்க அவனுக்கு தொண்டைக்கும் வயிற்றுக்கும் உருவமில்லாத பல உருண்டைகள் உருண்டன. அவள் பேச பேச அவனின் புன்னகை அளவும் அதிகமானது. வானத்தில் பறப்பதுபோல் உணர்ந்தான்.

தொடர்ந்தாள், "வீட்டுக்கு தெரிஞ்சா...அவ்வளவு தான்! ஆனா, இருந்தாலும் பரவாயில்ல... நீ எல்லாத்தையும் பார்த்தப்பன்னு ஒரு தைரியம்."

நிம்மதி பெருமூச்சு விட்டான் சந்தோஷ். ரொம்ப நேரம் பேசினர். நேரம் போனது தெரியாமல் இருவரும் பேசினர். சந்தோஷ், "ஐயோ மாயா, லேட் ஆகலையா உனக்கு? 11 மணி ஆச்சு." அவன் பயந்தான்.

"பரவாயில்ல உன் அத்தைகிட்ட பொய் சொல்லிட்டு தான் வந்து இருக்கேன்," சிரித்தாள் மாயா. சிரித்தான் சந்தோஷும்.

"ஒரே ஒரு தடவ ஐ லவ் யூ சொல்லேன்...ப்ளீஸ்..." கெஞ்சினான் சந்தோஷ். வெட்கப்பட்டாள்.
அவள் ஐ லவ் யூ சொல்லாமல் வெறும் வெட்கத்தை மட்டுமே பதிலாய் தந்தது அவன் அடிவயிற்றில் ஏதோ செய்தது. அன்று முதல் சந்தோஷை பார்க்க வேண்டும் என்றால் ஒவ்வொரு பொய்யையும் புதிதாய் உருவாக்கினாள்- பல நண்பர்களின் தாத்தா பாட்டிகளை கொன்று இருக்கிறாள், தோழிகளின் குழந்தைகளுக்கு காத்து குத்தி இருக்கிறாள், வேலை பார்க்கும் நண்பர்களுக்கு மருத்துவமனையில் ஆப்ரேஷன் செய்து இருக்கிறாள்.

*********************************************

இரவு மணி 9.

போர்வையை ஆடையாய் போர்த்தியிருந்த சந்தோஷ், போர்வையை லேசாக தன் வசம் இழுத்தான். அவனின் குறும்பு செயலைக் கண்ட மாயா, அவனது கையைத் தடுத்தாள். இழுத்த போர்வையை தன் பக்கம் மறுபடியும் இழுத்து வைத்துக் கொண்டாள் மாயா.

மதியம் ரவி ஃபோன் செய்து இருந்ததையும் அவன் மனைவி மாலாவுக்கு surprise party கொண்டாட அழைப்புவிடுத்தான் என்பதையும் கூறினாள் மாயா.

"hey that's sweet of him. என்னிக்கு பார்ட்டி? ரெண்டு பேரும் போய் ஜமாச்சிட வேண்டியது தான்!" என்றான் சந்தோஷ்.

"july 18" சற்று கவலையாய் சொன்னாள் மாயா.

"ஏன் என்ன ஆச்சு?" என்றவன் படுக்கையில் இருவருக்கும் நடுவே கிடந்த கொஞ்ச இடத்திற்கும் 'seal' வைத்தான். கன்னம் அருகே விழுந்த அவளது முடியை அவள் காதுமடல் பின்னாடி சொரிகினான்.

"இன்னிக்கு தான் email check பண்ணேன். அடுத்த வாரமே training வர சொல்லிட்டாங்க. schedule மாத்திட்டாங்க," என்றாள் மாயா.

மாயாவுக்கு லண்டனில் காற்பந்து training contract கிடைத்தது. 3 வருடம் பயிற்சி. 6 மாதத்திற்கு ஒரு முறை விடுமுறை கிடைக்கும். அதுவும் 2 வாரங்களுக்கு தான். மாயா எப்போது அதனை 3 வாரங்களுக்கு கேட்பாள். நல்ல திறமையான விளையாட்டாளர் என்பதால் அவளது வேண்டுகோலை ஏற்றுகொள்வார்கள்.

"சரி பரவாயில்ல விடு. உன் சார்பா நான் போய் பார்ட்டிய ஜமாச்சிடுறேன்..." என்றான் சந்தோஷ். அவனது நெஞ்சில் தனது ஆள்காட்டி விரலால் ஐ லவ் யூ என கிறுக்கி கொண்டிருந்தாள்.

"லண்டன்ல உன்னைய எவ்வளவு மிஸ் பண்ணுவேன் தெரியுமா?" கிறுக்கலைத் தொடர்ந்தாள். பலமுறை ஐ லவ் யூ என்பதையே மறுபடி மறுபடியும் எழுதி கொண்டிருந்தாள்.

சிரித்தவன், "அங்க தான் நிறைய வெள்ளக்காரங்க இருப்பானே. அப்பரம் என்ன?" என கண் சிமிட்டினான். புன்னகையித்தாள் மாயா.

"எனக்கு மட்டும் என்னவா? ஆபிஸ் முடிஞ்ச வந்தா, வீடு வெறுச்சோடி கிடக்கும். சில நேரத்துக்கு தோணும், அப்படியே flight எடுத்து லண்டனுக்கு போயிடலாம்னு," அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

மாயா, "நீயும் என்கூட வந்துடேன்."

சந்தோஷ் சிரித்தான், "நமக்காக எல்லாம் என் பாஸ் லண்டன்ல புது ஆபிஸ் திறக்க மாட்டான். இன்னும் ஒரு வருஷம் தானே...சீக்கிரம் ஓடிடும்."

அவளது ஆள்காட்டி விரலைப் பிடித்தவன், "இதுல எழுதியது போதும். இப்ப இதுல எழுது," என்றவன் அவளது ஆள்காட்டி விரலை அவளின் உதடுகள் மேல் வைத்தான். சொன்னதைச் செய்தாள்.

அவள் காது அருகே சென்று ஏதோ ஒன்று சொல்ல, மாயா, "ச்சீ ஜொள்ளா..." என்று அவனது கன்னங்களை செல்லமாய் அடித்தாள். கடிகாரத்தை பார்த்தவள், "9.45 ஆச்சு, உனக்கு பசிக்கலையா?"

"ஐயோ இன்னுமா?" முழித்தான் சந்தோஷ்.

விளையாட்டாய் முறைத்தவள், "dinner பத்தி சொன்னேன், mr santhosh."

உணவு உண்டபிறகு, இருவரும் balconyயில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து பழைய நினைவுகளை அசைபோட்டபடி ஃபோட்டோ ஆல்பங்களைப் பார்த்து ரசித்தனர்.

*முற்றும்*

Jul 2, 2011

தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்-16

பார்த்தால் ஆர்யா மாதிரி இருக்கு. சிரித்தால் விஷால் மாதிரி இருக்கு. பின்னர் எப்படிங்க சைட் அடிக்காம இருக்க முடியும். பொங்கலுக்கே வெடி வெடிப்போம், தீபாவளி வந்தால் சும்மா இருப்போமா என்ன?

இவர் பெயர் நாணி, அட ஞானி இல்லங்க, நாணி. தெலுங்கு படத்தில் நடித்தவர். தற்போது வெப்பம் என்னும் தமிழ் படத்தில் நடிக்கிறார். இப்படம் ஒரு பெண் இயக்குனரால் உருவாக்கப்பட்டது, அதுவும் கௌதம் மேனனின் உதவி இயக்குனராம் (கொசுறு செய்தி)

சரி சரி, நம்ம கதைக்கு வருவோம். இவரை முதல் முதலில் பார்த்தது...இப்பாடலில் தான். அதுக்கும் அப்பரம் கனவுகளிலும் அடிக்கடி வருகிறார். இதனால் john abrahamக்கு நெருக்கடி வராமல் இருந்தால் சரி:)))))




(இவர் சிரிக்கும்போது, left கன்னத்தில் குழி விழுவதை கவனிக்க மறந்துடாதீங்க!:)))