Apr 26, 2012

daddy mummy வீட்டில் இல்ல(series 3)- பகுதி 7


(series 3) பகுதி 6

ஒருவித பயம் கலந்த அறுவறுப்புடன் வீட்டிற்குள் நுழைந்தாள் விஜி. தோழிகள்கூட இருக்கும்போது இருந்த கொஞ்ச நம்பிக்கையும் தைரியமும்கூட இப்போது இல்லை. வீட்டிற்குள் ஒரு பெரிய பட்டாளமே உட்கார்ந்து மாப்பிள்ளை ஃபோட்டோக்களை பார்த்து கொண்டிருந்தனர்- விஜியின் அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, சித்தி, சித்தப்பா, தங்கைகள் மற்றும் ஜோதிட தரகர்.

விஜியைப் பார்த்த பாட்டி, "வா வா.....இந்த பையன் ஓகேவா?" என்று ஒரு மாப்பிள்ளை ஃபோட்டோவை காட்டினார். தலை வெடித்துவிடுவது போல் இருந்த விஜிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அழுத கண்கள் சிவந்து காணப்பட்டன.  இவர்கள் செய்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம், தனது விருப்பம் எது என்று புரியாமல் இவர்கள் செய்யும் கூத்தை கண்டு இன்னும் அழுகை வந்தது அவளுக்கு. 

*****************************************************************************

காரில், சசியும் சித்தார்த்தும் சினிமாவுக்கு சென்று கொண்டிருந்தனர். 

"புது கார் நல்லா இருக்கு சித்து." என்றாள் சசி. 

"என் familyக்கு அடுத்தபடியா நீ தான் இதுல travel பண்ணுற. என் friendsகூட இந்த கார்ல இன்னும் ஏறல. " என்றான் சித்து கவனத்தை சாலையிலும் சசிமேலும் செலுத்தியவாறு.

"ஓ...really?" புன்னகையித்தாள் சசி. 

"உன்கிட்ட ஒரு suggestion கேட்கனும்?" என்று சசி கேட்டேள்.

"life matter இது...." என இழுத்தாள் சசி. வண்டியை ஓட்டி கொண்டே உம் போட்டுகொண்டு கேட்டான். 

"காலேஜ் படிக்கற ஒரு பொண்ணு அவ படிப்ப கூட முடிக்காம அவங்க வீட்டுல கல்யாணம் ஏற்பாடு பண்ணா என்ன செய்றது?" என்று மொட்டையாக சொல்ல,

சித்தார்த்தின் புருவங்கள் சுருங்கின.

"என்ன சொல்ற?" என்று மறுபடியும் கேட்டான்.

"அந்த பொண்ணு என்ன சொல்லி வீட்டுல உள்ளவங்கள சமாளிக்கறது?" என்று மறுபடி சொல்லியதும் காரை டக்-கென்று நிறுத்தினான். பின்னாடி வந்த மோட்டர்சைக்கில்காரன் ஹாரன் அடித்தான். 

'சரியா ஓட்டுங்கடா' என கையசைவு செய்தபடி போனான் மோட்டார் சைக்கில்காரன். சசிக்கு ஒன்னும் புரியவில்லை. காரைவிட்டு வெளியே சென்றான் சித்தார்த். சசியும் அவனை பின்தொடர்ந்தான்.

சசி, "என்ன சித்து....ஏன் கார நிறுத்தின?" 

சித்தார்த், "தெரியும்டி உங்கள பத்தி. கூடவே இருந்து பிடிச்சது எல்லாம் பண்ணுவீங்க. கல்யாணம்னா வந்தா....வீட்டுல பாக்குறாங்க. US மாப்பிள்ள இருக்குனு சொல்வீங்க. நான் உங்கள அண்ணன் மாதிரி நினைச்சு தான் பழகினேன் அப்படிம்பிங்க."

தொடர்ந்தான் சித்தார்த், "வீட்டுல ஏதாச்சு சொன்னாங்கன்னா. ஆமா நான் சித்தார்த்-னு ஒரு பையன லவ் பண்ணுறேன் - னு சொல்ல வேண்டியது தானே? தைரியம் இல்லேனா அப்பரம் எதுக்கு உங்களுக்கு எல்லாம் லவ்?"

******************************************************************************

"அட பாவி!!! correctஆ பேச சொன்னா கமல் மாதிரி பேசி குழப்பிவிட்டு வந்து இருக்க. சரி அப்பரம் என்ன சொன்னான்?" என்று கலா கூறினாள் சசியை பார்த்து. சசி நடந்தவற்றைக் கூறி முடித்தாள்.

சுதா, "அப்பரம் என்ன ஆச்சு?"

சசி, "கோபத்துல கிளம்பிட்டான். ஃபோன் பண்ணி பார்த்தேன். ஆனா எடுக்கல."

கலா, "anyway, congrats மச்சான்! அந்த ஷு ஷு sugar boyய வர சொல்லு, பேசலாம், நாள் fix பண்ணலாம்." என்று bru coffee விளம்பரத்திலும் வருவதுபோல் கிண்டல் அடித்தாள்.

சசி, "அதலாம் ஒன்னுமில்ல." என்றபடி வெட்கப்பட்டாள்.

கலா, "இந்த பாரு. வெட்கப்படுறேனு சொல்லி, இந்த காலால கோலம் போடுற வேலையலாம் வேண்டாம். இன்னிக்கு தான் நான் கஷ்டப்பட்டு என் ரூம vaccum cleaner வச்சு துடைச்சேன்." என்று பேசிகொண்டிருக்கும் வேளையில் சுதா ஒரு மாதிரியாய் இருப்பதை கண்டாள் சசி.

சசி, "ஏய் என்ன ஆச்சு சுதா?"

சுதா, "ஒன்னுமில்ல."

கலா, "ஒன்னுமில்ல-னு பொண்ணுங்க சொன்னா ஏதோ இருக்குனு அர்த்தம். kya bole ladki..." என ஹிந்தியிலும் விட்டு அடித்தாள்.

சுதா, "நாளைக்கு ghazal கச்சேரிக்கு கூப்பிட்டான் ரவி."

கலா, "அப்படினா???" தலையை சொரிந்தாள்.

சசி, "ஞான சூனியமே.அப்படினா நம்ம classical மாதிரி அதுவும் ஒரு வகை இசை கச்சேரி."

கலா, "ஹாஹா...சும்மா பாட்டு கச்சேரி தானே. போயிட்டு வா. முக்கியமா நம்ம விஜி பிரச்சனைக்கு ஒரு ஐடியா கேளு!"

சுதா, "ஆனா எனக்கு இந்த பாட்டு கச்சேரிலாம் பிடிக்காது. அவன் கூப்பிட்டதாலே no-னு சொல்ல முடியல." என்று பெருமூச்சுவிட்டாள்.

கலா, "இது என்ன பெரிய விஷயமா? hindustani இசையில 17  வருஷமா முழ்கி இருக்குற மாதிரி ஒரு லுக் கொடு. அவங்க பாடும்போது தலையை அப்பப்ப right-க்கும் left-க்கும் ஆட்டு. அப்பரம் கைய இப்படி வச்சு...." என்றவள் அடை போடுவது போல் சைகை செய்து,

"இசையை ரசிக்கற மாதிரி பீலா விடு."

இப்படி மூவரும் சிரித்து பேசிகொண்டிருக்கும்போது கலாவின் அம்மா பேசும் சத்தம் கேட்டது. கலாவின் அம்மா,

"விஜி...வா. வீட்டுல சொன்னாங்க. கல்யாணமாம் உனக்கு. congrats!! all the best!" என்றார்.

காயப்பட்ட புண்ணில் ஆசிட் ஊற்றியதுபோல் இருந்தது விஜிக்கு. கலாவின் அறைக்குள் சென்றார்.

விஜி, "உங்க அம்மாகிறதால சும்மா விட்டேன்." கோபத்துடன் மெத்தையில் அமர்ந்தாள்.

கலா, "விடு மச்சி. mothers என்றாலே அப்படி தான்!"

விஜி, "நான் decide பண்ணிட்டேன். நான் ஓடி போக போறேன்."

கலா, "hello!! ஓடி போறதுக்கு நீ ஒன்னும் காதல் சந்தியாவும் இல்ல. வழி அனுப்பி வைக்கறத்துக்கு நாங்களும் ஒன்னும் நாடோடிகள் சசிகுமார் கூட்டமும் இல்ல. வேற ஏதாச்சு ஒழுங்கா முடிவு எடுக்குறீயா?"

விஜி, "முடிவு எடுக்கறதுக்குள்ள என் உயிர எடுத்துடுவாங்கனு நினைக்குறேன்."

மற்றவர்கள் சிரித்தனர்.

சுதா, "timingல பின்னுற போ!!"

விஜி, "என் tragedy உங்களுக்கு comedyயா இருக்கா?"

சசி, "இங்க பார்டா, மறுபடியும்!!"

கலா, "ஓகே விஜி. don't worry. நல்லதே நடக்கும். aal izz well."

விஜி, "சசி, சித்தார்த் ஏதாச்சு ஐடியா சொன்னாரா?" என்றதும் சசி சொன்ன கதை மறுபடியும் repeat telecast ஆனது.

விஜி, "ஓ மை காட். sorry sasi. என்னால தானே குழப்பம். but anyway congrats" கவலையிலும் கொஞ்சம் சிரித்தாள்.

சசி, "actually விஜி... உன் வீட்டுல படிப்புக்கு ரொம்ப importance கொடுப்பாங்களே. நீ வேணும்னா இப்படி சொல்லி பாரேன்- நான் படிச்சு பெரிய ஆளா வரனும். அப்பரம் தான் மத்தது எல்லாம்."

கலா, "படிச்சா பெரிய ஆளா வர முடியாது. சாப்பிட்டா தான் பெரிய ஆளா வர முடியும்" என்றபடி மேசையில் இருந்த chocolate cakeயை எடுத்து கடித்தாள்.

விஜி, "எல்லா சொல்லி பாத்துட்டேன். என்னைய convince பண்றதுக்காக புதுசு புதுசா சொல்றாங்கய்யா வீட்டுல. எங்க அம்மா சொன்னாங்க actually பாட்டிக்காக இதலாம் பண்ணலயாம். போன வருஷத்துலேந்தே போற இடத்துல எல்லாம் கேட்குறாங்களாம்."

கலா, "போற இடத்துல எல்லாம் கேட்க, நீ என்ன புது பாடலா?"

அப்போது விஜியின் கைபேசி அலறியது. புதிதாக வந்த mms.

விஜியின் அம்மாவிடமிருந்து புதிதாய் ஒரு மாப்பிள்ள ஃபோட்டோ. விஜி அந்த மெசேஜை அனைவருக்கும் கேட்கும்படி படித்தாள்,

"விஜி, இந்த பையன வீட்டுல எல்லாருக்கும் பிடிச்சுருக்கு. நீ பாத்து சொல்லு. பாட்டி சொன்னாங்க இந்த பையனுக்கு ஒரு தெய்வீக முகம் இருக்குனு."

(பகுதி 8)

Apr 18, 2012

daddy mummy வீட்டில் இல்ல(series 3)- பகுதி 6

series 1 series 2

series 3 பகுதி 5

விஜியின் பாட்டிக்கு சீரியஸ் ஆன செய்தி விஜியின் தோழிகளுக்கு தெரிய வர, மருத்துவமனைக்கு விரைந்தனர்.

விஜி சோகமாக இருந்தாள். அவளை சமாதானப்படுத்த சசி,

"cool down viji. ஒன்னும் ஆகாது. பாட்டி will be fine."

விஜிக்கு அழுகை அழுகையாய் வந்தது. ஜாலியாக இருக்கும் விஜி இப்படி அழுது யாரும் பார்த்தது இல்லை. அவள் தேம்பி தேம்பி அழுதாள். சசி, கலா, சுதா ஆகியோர் விஜியின் கையை பிடித்து ஆறுதல் சொல்லி பார்த்தனர்.

அங்கு மருத்தவர்களும் தாதியர்களும் விஜியின் பெற்றோர்களிடம் ஏதோ பேசி கொண்டிருந்தனர். கலா,

"சரி வா விஜி, நீ ரொம்ப tiredஆ இருக்க. let's drink coffee."

மருத்துவமனையை ஒட்டிய காபி ஷாப்பில் நால்வரும் உட்கார்ந்து இருந்தனர். எப்போதுமே கேலியும் கிண்டலுமாக இருந்தவர்கள் இப்போது அமைதியாக இருந்தனர். காபி குவளையை இரண்டு கைகளால் பிடித்தபடி விஜி,

"i hate my பாட்டி!!" என்று சொல்லிவிட்டு கத்தினாள். பக்கத்து மேசையில் இருந்தவர்கள் இவர்களை ஒரு மாதிரியாய் பார்த்து முறைத்தனர்.

சுதா, "விஜி, what happened to you?"

விஜி மறுபடியும் அதையே சொன்னாள், ""i hate my பாட்டி."

மூவருக்கும் ஒன்றுமே புரியவில்லை. கலா, " பாட்டிக்கு என்ன ஆச்சு?"

விஜி, "அதுக்கு ஒன்னும் ஆகாது. எனக்கு தான் ஏதாச்சு ஆக போகுதுனு நினைக்குறேன்!"

புரியாமல் முழித்தவர்களுக்கு நடந்த கதையை சொன்னாள் விஜி.

"என் பாட்டிக்கு சாதாரண நெஞ்சு வலி தான். ஆனா அவங்க ரொம்ப ஓவரா பண்ணுறாங்க. ஏதோ கடைசி ஆசை ரேஞ்சுக்கு பில் டப் பண்ணுறாங்க...." என்று அழுகைக்கு இடையே தேம்பினாள் விஜி.

"என்ன சொன்னாங்க?" ஆவலுடன் சுதா.

"அவங்க கண்ண மூடறத்துக்குள்ள என் கல்யாணத்த பாக்கனுமா. அதுக்கு என் அம்மாவும் ஓகே-னு தலைய ஆட்டுறாங்க. இன்னும் 6 மாசத்துல....." என்று சொல்லி முடிப்பதற்குள் விஜிக்கு தொண்டையில் துக்கம் அடைக்க, கண்ணீர் வழிய அழுதாள்.

கலா விஜியை பார்த்து, " மச்சி, சாரி....." என்றவள் குபீர் என்று வாய்விட்டு கைகொட்டி சிரித்தாள்.


தொடர்ந்தாள் கலா, "இல்ல என்னால சிரிப்ப control பண்ண முடியல."

சுதாவும் லேசாய் புன்னகையித்தாள்.

சசி, "உனக்கு மத்தவங்க feelingsஎ புரிஞ்சிக்கவே தெரியாதா? you are such an evil-hearted devil." என்றாள் கலாவை பார்த்து.

கலா, "hello hello stop it I say. hahahaha...விஜி.... சாரி மச்சி. நீ அழுதத பார்த்தா பாட்டிக்கு இப்பவோ அப்பவோனு நினைச்சேன். இப்படி கதையில twist போடுவாங்கனு தெரியல. அதுக்கு நீ இப்படி அழுவேனும் தெரியல. அதான் சிரிச்சுட்டேன்."

சுதா, " என்ன விஜி, பண்ண போற?"

விஜி, "எனக்கு மயக்கமே வருது. எங்கயாச்சும் ஓடி போயிடலாம்னு தோணுது." தலையில் கை வைத்தாள்."

சசி, "உனக்கு ஏற்கனவே ஒரு boyfriend இருக்கு. அப்படினு சொல்லிடு. ஒன்னும் பண்ண முடியாது!" என்று சொல்லிவிட்டு ஏதோ ஒரு அறிவியல் கண்டுபிடிப்பை கண்டுபிடித்ததுபோல் பெருமையுடன் முகத்தை வைத்து கொண்டாள்.

கலா, "பைத்தியமா வாழலாம் ஆனா பைத்தியத்தோடு வாழ முடியாது!!!" என்று சசியை பார்த்து துப்பினாள்.

சசி, "ஏன்? நான் கொஞ்சம் புத்திசாலித்தனமா பேசிட கூடாதே!உடனே உனக்கு பொறாமை பொங்கிகிட்டு வந்துடுமே!!"

கலா, "சுதா, இந்த கொசுவ baygon அடிச்சு கொல்லுடி!"

சுதா, "சசி, உனக்கு புரியலையா? உன் ஐடியா படி செய்தால், அவங்க அம்மா ஓகே சொல்லிடுவாங்க. இப்பவே கல்யாணத்த முடிச்சிடுவோம்னு சொல்லுவாங்க!" என்று சசிக்கு புரியும்படி கூறினாள். அப்போது தான் தனது சொதப்பலான ஐடியாவை நினைத்து நாக்கை கடித்து கொண்டு, சசி, "ஓ....ஆமால."

சசி, "சாரி விஜி...நான் ஏதோ generalஆ ஒரு ஐடியா சொன்னேன்."

கலா, "நீ generalஆ சொல்றீயோ ஜனகராஜ் மாதிரி சொல்றீயோ. காமெடி பண்றது நிறுத்திட்டு, please come up with a feasible solution!" என்று கட்டளையிட்டாள்.

சுதா, "ஐடியா மணி நீதானே கலா. நீயே ஒரு ஐடியா சொல்லேன்."

கலா, "ம்ம்ம்...." என்று விரல்களை தாடையில் வைத்து மேலே அனாந்து பார்த்து யோசித்தவள்,

"ஆ....ஐடியா!! யாருமே இல்லாத டீக்கடையில டீ ஆத்துறதவிட, கூட்டமா இருக்குற இடத்துல கூல் drinks விக்கலாமே!!!"

சசி, "அது சரி. நானே பரவாயில போல. புரியுற மாதிரி உளறமாட்டீயா?" என்றாள்.

சுதாவும் விஜியும் சேர்ந்தே முழித்தனர்.

விஜி, "ஒன்னும் புரியல" என்று கூறிகொண்டு கண்ணீரை துடைத்து கொண்டாள்.

கலா, " அதாவது....நம்ம girls மட்டும் யோசிச்சுகிட்டு இருந்தால், one side solution தான் கிடைக்கும். boys கிட்டயும் opinions கேட்டால் தான் ஒரு தெளிவு பிறக்கும்." என்று சுத்த தமிழில் முடித்தாள்.

சுதா, "அதுக்கு???"

கலா, "காதலில் விழுந்த சுதா மற்றும் சசி அவர்களே, உங்க ஆளுங்குகிட்ட ஐடியா கேளுங்க. கூட்டமா யோசிச்சா, நிறைய ஐடியா கிடைக்கும். அத வச்சு ஒரு முடிவு பண்ணலாம்."

சசி, "ஏய்...என்ன ஆளு அது இதுனு சொல்ற? he's just a friend."

கலா, "just a friendஓ, phone a friendஓ.... ஐடியா கேட்டு சொல்ற. அது தான் உனக்கு இந்த வாரம் assignment."
கலா சொல்லி முடிப்பதற்குள், சுதா ரவிக்கு மெசேஜ் செய்து கொண்டிருந்தாள். அதை பார்த்த கலா, "வெரி குட் சுதா. தீயா வேல பாக்குற. நீ வாழ்க்கைல பெரிய இடத்த முடிப்ப." என்று அவளது முதுகில் தட்டினாள் கலா.

விஜி அழுவதை நிறுத்திவிட்டு, " இதலாம் சரியா வருமா... எனக்கு பயமா இருக்கு."

கலா, "கேள்விகள் நம்ம சுத்தியே இருக்கு. பதில்கள் நம்ம பக்கத்துல இருக்கனும்னு அவசியமில்ல. opposite streetல இருந்தாலும் தேடி கண்டுபிடிப்போம். கவலைய விட்டு மச்சி!" என்று சொல்லிமுடித்து விஜிக்கும் இன்னொரு காபியை ஆர்டர் செய்தாள்.

அதற்குள் விஜியும் அம்மா அவளுக்கு ஃபோன் செய்தார்.

"விஜி, நாங்க வீட்டுக்கு போறோம். முக்கியமான விஷயம் பேசனும். please come back home fast." என்று சொல்லிவிட்டு ஃபோனை கட் செய்தார் விஜியின் அம்மா.

(பகுதி 7)

Apr 12, 2012

daddy mummy வீட்டில் இல்ல(series 3)- பகுதி 5

series 1 series 2


பகுதி 4

"ஹாய் சுதா. thank u so much. இன்னும் தூங்கலையா?" ரவியின் குரலை ஃபோனில் கேட்டதும் ரொம்ப சந்தோஷம் அடைந்தாள்.

சுதா, "இல்ல படிச்சுகிட்டு இருந்தேன்...."

"அப்பரம்" என்றான் அவன்.

"எத்தன மணிக்கு தூங்குவ, ரவி?"

"depends on the day... but normally 1 am போல ஆகும்."

சில நேரங்களில் குறுந்தகவல் உரையாடல்கள் தான் சுலபம். ஒருத்தரிடம் அதிகம் பேசுவோம் குறுந்தகவலில். ஆனால், நேரிலோ ஃபோனிலோ அதிகம் பேச வராது. அப்படி ஒரு சூழலில் தான் இருவரும் தவித்தனர்.

"நாளைக்கு காலேஜ் இல்லையா?"

"ம்ம்...இருக்கு... சரி ரவி நான் தூங்க போறேன். இன்னொரு நாளைக்கு பேசலாம்..." ஃபோனை வைக்க விருப்பமில்லை அதே சமயம் என்ன பேசுவது என்றும் தெரியவில்லை சுதாவிற்கு.

இரவு நடந்தவற்றை சுதா காலேஜ் வகுப்பில் விஜி, கலா, சசியிடம் சொல்லி கொண்டிருந்தாள்.

"அட பாவி, நீயும் ஒரு ட்ராக்ல போய்கிட்டு இருக்கீயா? ம்ம்...நடத்து நடத்து..." கலா சிரித்தாள். அப்போது வகுப்பிற்குள் ஆசிரியர் வந்தார். நால்வரும் மற்ற மாணவர்களும் சரியான இடத்தில் உட்காராமல் கண்டபடி வெவ்வேறு இடங்களில் உட்கார்ந்து இருப்பதை பார்த்து கொதித்து எழுந்தார்.

"what nonsense is this? no discipline. no manners." என்று கத்தி கொண்டே உள்ளே வந்தார்.

முணுமுணுத்து கொண்டே கலா, "காலையிலே பொண்டாட்டி கூட சண்டை போட்டு இருக்காரு."

விஜி, "எப்படி உனக்கு தெரியுமா?" என்றாள் சத்தமில்லாமல். மாணவர்கள் அவரின் கத்தலுக்கு பயந்து விரைந்து தங்களது இடங்களில் உட்கார்ந்து கொண்டனர்.

கலா, "அங்க போட முடியாத சத்தத்த இங்க வந்து போடும் போதே தெரியுல?" என்றாள்.

பாடத்தை நடத்தாமல் இவர்கள் உருபுடாமல் நாட்டின் முன்னேற்றத்தையும் தடுக்க வந்திருக்கும் 'தகறாருகள்' என விலாசி தள்ளிவிட்டார். தங்க விலை ஏறியதற்கும் இவர்கள் பொறுப்பில்லாமல் கண்டபடி உட்கார்ந்ததே காரணம் என்பதுபோல் முடித்தார் தனது 'பூஜையை'. காதில் இரத்தம் வராத குறையாய் வகுப்பை விட்டு வெளியே சென்றனர் மாணவர்கள் காலேஜ் மணி ஒலித்தபிறகு.

காலேஜ் cafeteriaவில் நால்வரும் அமர்ந்தனர். சசி சற்று சோகமாக இருந்தாள். சுதா, "ஓய் சசி, what happened? ஏன் இந்த சோகம்ஸ்?"

சசி, "இல்ல சார் சொன்னது சரி தான். நம்ம பொறுப்பில்லாம இருக்கோம்."

கலா 'விஜய்காந்தின்' அமைதியான குரலில், "எத்தன ஏழை பசங்க செருப்பில்லாம இருக்காங்களே அத பத்தி கவலப்பட்டு இருக்கீயா?" என்றது விஜியும் சுதாவும் சிரித்தனர்.

சசி, " கலா, stop it. நம்ம ஏற்கனவே ஒரு examல நல்லா பண்ணல்ல. இன்னும் 6 மாசத்துல காலேஜ் முடியும். அதுக்கு அப்பரம் graduation, வேலை...." என்று முடிப்பதற்குள் சுதா,

"அதுக்கு ஏன் இப்பவே கவலப்படுறே. நீ தான் நல்ல படிப்பீயா. கண்டிப்பா பெரிய இடத்துல வேலை கிடைக்கும். உன் வாழ்க்கை settled. இந்த கலா தான் கொஞ்சம் கவலப்படனும் ஆனா அவளே ஜாலியா இருக்கா." என்று கலாவை கலாய்த்தாள்.

மேசையில் இருந்த விஜியின் கோக் bottleயை எடுத்து சுதா மேல் விளையாட்டாய் எறிவதுபோல் பாசாங்கு செய்தாள். இருந்தாலும் சசி கவலையாக இருந்தால், இவர்கள் செய்த எந்த காமெடியையும் பொருட்படுத்தாமல். விஜி ,சுதாவையும் கலாவையும் சற்று அமைதியாக இருக்க சொன்னாள்.

விஜி, "hey girls, come on. sasi isn't liking this."

கலா, விஜியை பார்த்து, "டாக்டர் எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல டாக்டர், என் சசியை காப்பாத்துங்க டாக்டர்!!" என்று அழுவதுபோல் நடித்தாள். அதை பார்த்து விஜியும் சுதாவும் புன்னகையித்தனர். அப்போது மேசையில் இருந்த சசியின் ஃபோன் அலறியது. பேசி கொண்டே இடத்தைவிட்டு தள்ளி போய் பேசினாள்.

கலா, "கவலப்படாதீங்க மச்சிஸ். treatmentக்கு போய் இருக்கா."

கொஞ்ச நேரம் கழித்து, முகம் முழுக்க சந்தோஷத்துடன் மறுபடியும் வந்த சசி, "அப்பரம் girls. வேற என்ன? வெளியே போவோமா?"

மற்ற மூவரும் முழித்துவிட்டு சிரித்தனர்.

சுதா, "எங்களுக்கு இந்த உலகத்துல தெரிஞ்ச ரெண்டே இடம். வீடு, காலேஜ்."

கலா, "அப்பரம் சசி, சித்தார்த் மச்சான் என்ன சொல்லுறாரு?"

சசி, "உனக்கு எப்படி தெரியும்?"

கலா, "இந்த மாதிரி விஷயத்துல நாங்க படிக்காமலேயே phd வாங்கியிருக்கோம். சொல்லு என்ன சொன்னுச்சு?"

சசி, "சொன்னாரு..." என்று திருத்தி கூறும்படி முறைத்தாள்.

கலா, "அடி பாவி! இது உனக்கே too muchஆ தெரியுல."

விஜி, "சரி விடு கலா. சின்ன சிறுசுங்க அப்படி தான் இருக்குங்க.." என்று கொதிக்கிற எண்ணெயில் அப்பளம் பொரித்தாள்.

சசி, "we are meeting this weekend."

சுதா, "dating again?"

சசி, "it's just an outing."

கலா, "குடும்பத்தோட போங்களேன்." இதை கேட்டதும் கண்கள் பயத்தால் விரிந்தன சசிக்கு.

சிரித்து கொண்டே கலா, "முடியாதுல. கண்டிப்பா அதுக்கு பெயர் dating தான்."

*************

விஜி வீட்டில் இருந்தாள் டிவி பார்த்து கொண்டு. திடீரென்று அறையில் இருந்த விஜியின் பாட்டி சத்தம்போட்டு கத்தினார். அறைக்கு விரைந்தனர். அங்கு பாட்டி மயக்கம் போட்டு கீழே விழுந்து கிடந்தார்.

(பகுதி 6)

Apr 2, 2012

2- சிறுகதை

இரவு மணி 8.30 ஆனது. இருந்தாலும் அலுவலகத்தைவிட்டு வெளியேறாமல் அங்கேயே சுற்றி கொண்டிருந்தேன் என்ன செய்வது என்று தெரியாமல். வெள்ளிக்கிழமை அன்று இவ்வளவு நேரமாகியும் வீட்டிற்கு போக மனமில்லை எனக்கு.

நண்பன், "என்ன டா விமல், இன்னும் இங்கேயே இருக்க?"

எனது கணினி முன் உட்கார்ந்து கொண்டு கிரிக்கெட் செய்திகளை படித்தவாறு நண்பனிடம், "இல்ல டா...." என இழுத்தேன்.

ஏதோ பிரச்சனை என்று புரிந்து கொண்ட நண்பன், "என்ன தல? இன்னிக்கு அனாதையா?"

புரியாமல் முழித்தேன் நான், "what?"

நண்பன், " அம்மா அப்பா இல்லாதவன் அனாதை கிடையாது. எவன் ஒருவன் அலுவலகத்திலும் இருக்க பிடிக்காமலும் வீட்டுக்கும் போக பிடிக்காமலும் இருக்கிறானோ அவன் தான் அனாதை!! நல்ல நாள்-லே உனக்கு ஆபிஸ்ல 6 மணிக்கு மேல இருக்க பிடிக்காது..... என்ன தல, வீட்டுல சண்டையா?"

நான், "எப்படி டா?" சிரித்தேன் சோகத்தை மறைத்து கொண்டு.

நண்பன், " 5 வருஷம் service தல!" கல்யாணமாகி 5 வருஷம் ஆனதை நசுக்காய் சொன்னான்.

நான், "ஆமா டா. எப்படி டா 5 வருஷத்த ஓட்டுன? அவன் அவன் 25 வருஷ விழா கொண்டாடுறான். government இவங்களுக்கு எல்லாம் எதாச்சு தியாகி பட்டம் கொடுக்கும் டா." அலுவலகம் மூடும் ஒலி எழுப்பியதால் இருவரும் அலுவலகத்தை விட்டு வெளியே சென்றோம். எனக்கு எங்கே போவது என்று தெரியாமல் முழித்தேன்.

"விமல்... என் வீட்டுக்கு வந்துட்டு போ." என அழைத்தவனிடம்,

"வேண்டாம் டா..ஹாஹாஹா....அப்பரம் நீ 'அனாதையா' ஆகிட போற?"

இரவு மணி 9.30 ஆனது. பொதுவாக இந்த சமயம் வீட்டுக்கு போகவில்லை என்றால் நிஷா உடனே கைபேசிக்கு அழைத்துவிடுவாள். ஆனால், அவள் அப்படி செய்யவில்லை அன்று. எனது கைபேசியை பலமுறை பார்த்தேன்.

"இவ ஃபோன் பண்ணாலும் மனசு பதறுது. பண்ணா இருந்தாலும் மனசு பதறுது." என முணுமுணுத்தேன். ஒருவழியாக இரவு 1015 மணி போல் வீட்டை அடைந்தேன். நிஷா ஒய்யாரமாக சோபாவில் படுத்து கொண்டு தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தான். நேற்று போட்ட சண்டையின் மிச்ச மீதியை இன்னிக்கும் போடுவாள் என்று தயாராகி இருந்தேன். பைக் சாவியை சுவரில் இருந்த கம்பியில் மாட்டினேன். அவள் என்னை பார்த்தால் ஆனால் பேசவில்லை. கண்டு கொள்ளவில்லை. அவள் சோபா பக்கத்தில் காலியாக இருந்த சோபா சீட்-ல் உட்கார்ந்தேன்.

தொலைக்காட்சியில் மௌனம் பேசியதே பாடல் ஓடியது. அப்போது எங்களுக்குள் இருந்த மௌனம் பேசாமல், கொலவெறி ஆடியது. 15 நிமிடங்கள் ஆனது. இருவருமே பார்த்து கொள்ளவில்லை. பேசி கொள்ளவில்லை. அவள் 'சாரி' கேட்பாள் என காத்திருந்தேன். என்னிக்கு பொண்ணுங்க 'சாரி' முதல கேட்டு இருக்காங்க?

fridge-ல் ஏதேனும் இருக்கிறது என பார்க்க போனேன். எனக்குள் இருந்த பசியும் கொலவெறி ஆடியது. ஆனால் fridge காலியாக இருந்தது. அவளைத் தூரத்திலிருந்து கவனித்தேன். அவள் ஜாலியாக தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தாள். அந்த ரெட் நைட்டியில் அழகாய் வேற இருந்தாள். இருந்தாலும், கோபத்தையும் ஈகோவையும் வரவழைத்து கொண்டேன்.

பசி வயிற்றில் symphony வாசித்தது. "ச்சே...ஏதாச்சு சாப்புடுறீயானு கேட்குறாளா பாரு..." எரிச்சல் எரிச்சலாய் வந்தது அவள் மீது. எரிச்சலுடன் மேசை பக்கத்தில் உட்கார்ந்தேன். மேசை முழுவதும் நிஷாவின் அலுவலக பேப்பர்களும் மடிகணினியும் இருந்தன.

அப்போது தான் அதை பார்த்தேன். தூக்கி வாரி போட்டது எனக்கு. உலகம் இருண்டு விட்டதாய் தோன்றியது. அந்த கடிதத்தை மறுபடியும் எடுத்து படித்தேன். நிஷாவை பார்த்தேன். எனக்கு கத்தி அழுகனும் போல் இருந்தது.

"you will be joining our institute for training in bangalore for 6 months." என்ற வாக்கியம் என் மூச்சை நிறுத்தியது. என் நிஷா என்னைவிட்டு 6 மாதம் பிரிந்து இருக்க போகிறாளா? சண்டை அடிக்கடி போடுவேன். முக்கால்வாசி நேரம் என் தவறாக தான் இருக்கும். பல நாள் பேசாமல் இருந்திருப்போம். ஆனால், ஒரு நாளும் பிரிந்து இருக்க வேண்டும் என எண்ணியது இல்லை. நிஷா போக போகிறாள் என்று நினைக்கும்போதே எனக்கு தலை சுற்றியது. நெஞ்சு அடைத்தது.

கண்களை கட்டி காட்டில் விட்டது போல் ஆனது. அறைக்குள் சென்று மெத்தையில் உட்கார்ந்தேன். அலமாரி பக்கத்தில் அவள் துணிகளை அடிக்கி வைத்திருந்தாள். என்னிடம் ஒரு வார்த்தைகூட சொல்லாமல் இருக்கிறாளே என நினைத்து கோபம் ஒரு புரம், போகாதே போகாதே என மனம் அழுதது ஒரு புரம்.

அறைக்குள் வந்தாள் நிஷா.

"ஏன் என்கிட்ட சொல்லல?" என்று கேட்டேன். நிஷா முழித்தாள். கலைந்திருந்த மிச்ச துணிகளை மடிக்க ஆரம்பித்தாள்.

"ஏன் என்கிட்ட சொல்லல?" மறுபடியும் கேட்டேன்.

"எத பத்தி?" கண்டுகொள்ளாமல் அவள் வேலையை தொடர்ந்தாள். எனக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வர அவள் கையை வெடுக்கென்று பிடித்து என் பக்கம் திருப்பி கொண்டேன்.

"என்னைய விட்டு போக போறீயா? என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லனும்னு உனக்கு தோனலயா?" என்றேன்.

"ஏய் புரியுற மாதிரி பேசுறீயா?" அவள் கத்தினாள்.

"training letter மேசைல பாத்தேன்."

"அத பாத்துட்டு தான் இந்த ஓவர் சீன் போடுறீயா?" சொல்லிகொண்டே என் கைபிடியிலிருந்து அவளது கையை எடுத்து கொண்டாள்.

"நீ எதையும் சரியா பண்ண மாட்டேனு தெரியும். அதுக்குனு இந்த அளவுக்கா?அது எனக்கு இல்ல. office colleague-க்கு. proof read பண்ண எடுத்துட்டு வந்தேன்" என்று சொல்லிகொண்டே துணிகளை அலமாரியில் எடுத்து வைத்தாள். முட்டாள் போல் அங்கேயே நின்றேன். என்னைப் பார்த்து நிஷா,

"ஏன்? 6 மாசம் நான் இல்லேனா, ஜாலியா இருக்கலாம்னு தோனிச்சா?" என்றாள்.

"இல்ல"

"அப்பரம்?"

"செத்துடலாம்னு தோனிச்சு." அமைதியாய் நான் கூற, நிஷாவுக்கு அதிர்ச்சி. அவளின் கையை பிடித்து மெத்தையில் உட்கார்ந்தேன். அவளது வலது கையை பிடித்தவாறு அவளின் கண்களை பார்த்து,

"சாரி மா. இனி சண்டைய போட மாட்டேன். really very sorry."

"இத நீ 47வது தடவ சொல்ற?"

புன்னகையித்தேன் நான்.

"சாரி..."

"உன் மேல நான் இன்னும் கோபத்துல தான் இருக்கேன். நீ போய் சாப்பிடு first-u. அப்பரம் பேசுறேன்....." என்றாள் நிஷா பாதி சிரிப்புடன்.

"என்ன சாப்டுறது?fridge காலியா இருக்கு."

"சார், நீங்க எதயும் சரியாவே பாக்க மாட்டீங்களா சார்? மேசையில் தான் உன் சாப்பாடு இருக்கு. குளிச்சுட்டு போய் சாப்பிடு." என்று கூறியபடி, எனது tie-யை அவிழ்த்தாள்.

"ஏன் பாக்குறது இல்ல....இந்த ரெட் நைட்டில.... முடியல டி.... செமயா இருக்கே" என்று கண் சிமிட்டினேன்.

"ச்சீ...இப்படி தான் ஒரு பொண்ணுகிட்ட indecentஆ பேசுவீயா?" என்று காரி துப்பாத குறையாய் சொன்னவள் எழுந்து போக முற்பட்டாள். அவளை இழுத்தேன். நான் மெத்தையில் விழ, அவள் என்மேல் விழுந்தாள்.

"டேய் அழுக்கு மூட்டை. ஆபிஸ் முடிஞ்சு வந்தீயே, சட்டைய கழுட்டுனீயா? குளிச்சீயா? நைட் 11 மணி ஆகுது டா. சாப்பிடாம இங்க சீன் போட்டுகிட்டு இருக்க?" என்று என் கன்னத்தில் செல்லமாய் அடித்தாள்.

"ஏன் டா, என்னைய எப்ப பாத்தாலும் திட்டிகிட்டு இருக்க. நான் பாவம் இல்ல?" முகத்தை பரிதாபமாய் வைத்து கொண்டு கேட்க,

கிண்டலாய் அவள், "யாரு? நீ பாவமா? நேத்திக்கு எப்படி கண்ட படி திட்டுன என்னைய? பாவி!"

அவள் பேசி கொண்டிருக்கும்போது, அவளை மெத்தையில் சாய்த்தேன். நெற்றியில் இதழ் பதித்து, காதோரமாய், "i love you."

"இதலாம் நல்லா தான் பேசுற. இந்த கோபம் மட்டும் தான்!" என்றவள் என் மூக்கோடு அவள் மூக்கை வைத்து உரசினாள்.

வாய்விட்டு சிரித்தேன், "நீ என்னைய மாத்திடுவேனு confidence இருக்கு."

நிஷா, "so இப்படியே நைட் முழுக்க பேசிகிட்டு இருக்கலாம்னு ஐடியாவா?"

நான், "வேற என்ன பண்ணலாம்ங்கற?" என அவளது நைட்டியில் இருக்கும் zip-க்கு கை போனது.

"அடி வாங்க போற!" என்று எழுந்து சென்றாள். கையில் துண்டை திணித்து போய், "போய் குளிடா அழுக்கா!" என்றாள். அவள் மீதி துணிகளை அலமாரியில் வைத்தாள். நான் அவளையே பார்த்து கொண்டிருந்தேன். நாங்க சந்தித்த முதல் நாள், பேசிய முதல் வார்த்தை, அவள் என்மேல் கோபப்படும் போது கண்களில் தெரியும் அவள் காதல், என்னையை நக்கலாய் பேசும் விதம், என்னை ஒருபோதும் மற்றவர்கள் முன்னிலையில் விட்டு கொடுக்காமல் பேசும் குணம்..... என்னமோ தெரியவில்லை, அனைத்து சிந்தனைகளும் அடிவயிற்றில் ஒரு சந்தோஷத்தை கொடுத்தன.

புன்னகையித்தபடி, மறுபடியும் அவளை பின்னாடியிலிருந்து கட்டிபிடித்து கழுத்தில் இதழ் பதித்து, "love you, ராட்சசி" என்று சொல்லிவிட்டு குளியலறைக்குள் ஓடினேன்.

*முற்றும்*

Apr 1, 2012

'3' படம் பார்த்தா தப்பா சார்?

வியாழக்கிழமையே போய் டிக்கெட்டுகளை வாங்கி கொண்டேன் சனிக்கிழமை காட்சிக்கு. வேலையில promotion கிடைத்ததால், நானே treat பண்ணுறேனு (தேவையில்லாம வாக்கு கொடுத்து) சொல்லி உயிர்த்தோழிகள் இருவருடன் சென்றேன்.

தமிழ் சினிமாவில், பெண் இயக்குனர்கள் ரொம்ப குறைவு. தைரியமா ஒரு படம் செய்ய நிறைய பொறுமை வேணும். அதற்கு முதல் பாராட்டு ஐஸ்வர்யாவுக்கு.

பிடித்த விஷயங்கள்
1) கண்ணழகா பாடல் இசை
2) ஸ்ருதி/தனுஷ் வீடு. அவ்வளவு அழகு!!
3) புதுமையான கல்யாணம்- clubல்
4) சிவா கார்த்திகேயனின் சில காமெடி வெடிகள்
5) ஒருசில romantic scenes/dialogues- "உன்னைய காய படுத்த மாட்டேன். மத்தவங்க உன்னைய காயப்படுத்த விட மாட்டேன்."


ஆனால், ஏங்க இந்த மாதிரி படத்த எடுத்தீங்க? முதல் பாதி நல்லா இருந்துச்சு. அப்படியே இங்கீலிஷ் படம் மாதிரி 1 மணி நேரத்துல, அதாவது, interval-லேயே படத்தை முடித்து இருக்கலாம். இரண்டாம் பாதி ஐயோ யோ யோ!!! ஆசான் படி நடக்க வேண்டும் என்பது நல்லது தான். அதுக்காக செல்வராகவன் மாதிரியேவா படத்த எடுக்கனும்!??

தியெட்டரில் வந்த கமெண்ஸ் "இந்த தனுஷ் ஒரு படத்துலயும் தெளிவாவே இருக்க மாட்டானா?"

மன்னிக்க முடியாத குற்றங்கள்:

1) அடிக்கடி ஸ்ருதிஹாசனை அழ வைத்தது
2) psychiatrist clinic மோசமான நிலையில் இருந்தது.
3) கொலவெறி பாடலை உப்பு சப்பு இல்லாமல் எடுத்தது.
4) ஸ்ருதிஹாசன் தங்கைக்கு ஏன் வாய் பேச முடியாத character? அவள் எப்படி திடீரென்று பேசுகிறாள்?
5) climax???????????

கொலவெறி பாடலை வெள்ளைக்காரன்கள் வைத்தோ, அல்லது பெரிய பட்ஜெட் செலவில் செட் போட்டோ எடுத்து இருக்க தேவையில்லை. ரசிக்கும்படியாக ஒரு signature step, அல்லது சில celebritiesகளை வைத்தோ எடுத்து இருந்திருக்கலாம். :((((((((((((((((((((((((((((((((((

ஆமா, காருக்கு எதுக்கு அச்சாணி என்பது போல்?? இந்த படத்துக்கு '3' என்று எதற்கு பெயர் வந்தது?

90 மார்க் வாங்ககூடிய மாணவன் தேர்வில் வெறும் 40 மார்க் வாங்கினால் வலிக்கும் இதயம் போல் என் இதயம் இருந்தது படம் முடிந்தபிறகு. ஏங்க ஐஸு, இப்படி பண்ணிட்டீங்க?


(படத்தை பார்த்த ஒரு சில தோழிகள், கல்யாணமான தோழிகளுக்கு ரொம்பவே பிடித்து இருந்தது என்று கூறினார்கள். facebook status முழுக்க ஆஹா ஓஹோனு பாராட்டு!!
அவங்களுக்கு ஒன்னே ஒன்னு தான் சொல்லனும்-
போங்க சார் போங்க! போய் புள்ள குட்டிங்கள படிக்க வையுங்க சார்!)