Aug 25, 2009

எனக்கே என்னை தெரியாமல்-4

கை நிறைய மாத்திரைகள். தன் அறை படுக்கையில் உட்கார்ந்து இருந்தாள். காலையில் பள்ளிக்கு கொண்டு சென்ற பாட்டிலில் கொஞ்சம் தண்ணீர் இருந்தது. திறந்து கொஞ்சம் குடித்தாள் தேவி. துயரம் தொண்டையை அடைத்தது. மனம் படபடத்தது. கைகள் நடுங்கின.


தான் செய்வது முட்டாள்தனம் என்று மூளைக்கு புரி்ந்தாலும், புண்பட்ட மனத்திற்கு நிம்மதி வேண்டிய சூழ்நிலை. அவசியம். தேவை. வாய் அருகே மாத்திரைகளை கொண்டு சென்றபோது கைபேசி அலறியது.


"ஹாய் தேவி, a very good and surprising news. you have been selected to represent our kick-boxing club in the international contest in canada. congrats ya. am so happy and proud of you!! get ready to rock on. see you tmr. need to explain the contest procedures. good nitez." என்று பாக்சிங் மாஸ்ட்டரிடமிருந்து குறுந்தகவல் வந்தது.


ஸ் எம் ஸை பார்த்துவிட்டு அழ ஆரம்பித்தாள், 20 நிமிடங்களுக்கு. சந்தோஷமும் துக்கமும் ஒரே நேரத்தில் தேவியால் ஏற்று கொள்ள முடியவில்லை. சந்தோஷமான செய்தி அவள் மனதிற்கு நிம்மதியை கொடுத்தது. சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் வந்த செய்தி அவளை எந்த ஒரு முட்டாள்தனமான காரியத்தையும் செய்யவிடாமல் தடுத்தது.


அந்த குறுந்தகவலை பல முறை பார்த்து மகிழ்ச்சி அடைந்தாள். தொலைந்த வாழ்க்கை ஒரு சின்ன குறுந்தகவல் மூலம் வரும் என்று நினைக்கவில்லை. உடனே தனது கிக் பாக்சிங் மாஸ்ட்டருக்கு ஃபோன் போட்டு தன் பிரச்சனையை கூறினாள், பள்ளியில் நடந்ததையும் கூறினாள். தான் தற்கொலை முயற்சிக்கு முற்பட்டதாகவும் கூறினாள்.


அவருக்கு பெரிதும் அதிர்ச்சியாக இருந்தது. இதுநாள் வரை தேவியை ஒரு மாணவியாக, தைரியமான பெண்ணாக பார்த்தவருக்கு அவள் சொன்ன ஷயங்கள் விஜித்திரமாக இருந்தது. இருப்பினும், அவள் மீது அதிக மரியாதை வந்ததே தவிர அவளை ஒதுக்கவில்லை. மாஸ்ட்டர் ஆறுதலாக பேசியது அவளுக்கு ஆனந்த கண்ணீரை வரவழைத்தது.


உலகில் கடவுளே இல்லை என்று நினைக்கும்போது தான் ஏதோ ஒரு ரூபத்தில் கடவுள் வருவார். தேவிக்கு அந்நேரம் தெய்வமாக தெரிந்தவர் மாஸ்ட்டர் தான். தற்கொலை முயற்சியை கைவிட்டாள்.


மாஸ்ட்டரின் ஊக்கத்தால் போட்டிக்காக தீவிரமாக பயிற்சி செய்தாள். பள்ளியில் மறுபடியும் சேர்த்து கொள்ளும்படி தேவி சார்பாக மாஸ்ட்டர் பேசினார். ஆனால், எதுவுமே வேலைக்கு ஆகவில்லை. கடைசியில் வேறு ஒரு பள்ளியில் கஷ்டப்பட்டு சேர்ந்து படிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டாள் தேவி. மிகுந்த சிரமத்துடன் பள்ளி படிப்பை முடித்து, sports science மேற்கல்வி படிப்பை படித்தாள்.


பல போட்டிகளில் பங்குபெற்று தனது குருவுக்கு பெருமையை தேடி தந்தாள். தானாகவே ஒரு உடற்பயிற்சி நிலையத்தை உருவாக்கி, பலவித உடற்பயிற்சிகளை சொல்லிகொடுத்து கொண்டிருக்கிறாள் தேவி. காலேஜ் படிக்கும்போதே, தனது சிகை உடை அலங்காரத்தை முற்றிலுமாக மாற்றிகொண்டாள்.


தன் மனதிற்கு ஒரு உருவம் வேண்டும் என்பதற்காக தான் மாற்றி கொண்டாளே தவிர வெளிஉலகத்திற்கு தான் ஒரு lesbian என்று காட்டவேண்டும் என்பதற்காக ஒரு போதும் தன்னை மாற்றிகொள்ளவில்லை.

***

"actually கீதா, தேவியோட இந்த quality தான் என்னைய ரொம்ப ஈர்த்துச்சு. அவ யாருன்னு அவளுக்கு தெரியும்....ஆனா அத வெளிப்படையா காட்டனும்னு அவசியம் இல்லேன்னு நினைக்குற ஆளு. that's what i really really like about her." ரினிஷா சொல்லவும் தேவி குளித்துமுடித்து வரவும் சரியாக இருந்தது.


தேவி, "நீங்க யாரும் இன்னும் சாப்பிடாம இருக்கீங்க? let's eat. i am damn hungry man." என்றபடி மேசையை சுத்தம் செய்தாள். ரினிஷா உணவை மேசையில் கொண்டு வந்து வைத்தாள். சொன்ன கதையை கொஞ்சம் கொஞ்சமாக ஜீரணித்து கொண்டு இருந்தாள் கீதா. இன்னும் மீளாத கீதா,


"எப்படி தேவி....இவ்வளவு கஷ்டங்களையும்....?" என்றாள்.


சிரித்துகொண்டே, "இதலாம் ஒரு கஷ்டம்னு நினைக்க முடியாது. உலகத்துல எத்தனையோ பேரு.....take for instance....கை கால் இல்லாதவங்க, சந்தோஷமா வாழ்க்கைய ஓட்டிகிட்டு இருக்காங்க ஏதோ ஒரு வகையில. அவங்களோட நிலைமைய பாக்கும்போது நம்மளோடது எல்லாம் nothing."


கீதாவிற்கு உணவு பரிமாறப்பட்டது.


"இன்னும் கொஞ்சம் போடவா?" ரினிஷா உபசரித்தாள்.


சாப்பிட்டு முடித்தபிறகு, ரி்னிஷா பழங்கள் கொண்டு வந்தாள். அதற்கு தேவி, "டியர், நான் உன்கிட்ட எத்தன தடவ சொல்லியிருக்கேன். fruits should be taken before meals. not after meals. indigestion வரும் பா...." சற்று கோபித்து கொண்டாள்.


சிரித்தபடி ரினிஷா, "ஓ...shut up man! நீயும் உன் factsம். ஏதோ சாப்பிட்டோமா இருந்தோமான்னு இல்லமா எப்ப பாத்தாலும் ஒரு கருத்து....." தேவியின் முடியை செல்லமாய் கலைத்துவிட்டாள்.


"சரியா சாப்பிடாம இருந்தா, இந்த மாதிரி கண்ட இடத்துல கொழுப்பு வந்திடும்." ரினிஷாவின் இடுப்பை கிள்ளினாள் தேவி.


"oh just shut up man!" சிரித்துகொண்டு மேசையில் இருந்த தட்டுகளை எடுத்து சென்றாள்.


இருவரின் கிண்டலை பார்த்து ரசித்தாள் கீதா. தேவியிடம் கீதா, "ரினிஷாவ உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா?"


புன்னகையித்தாள் தேவி. சோபாவில் உட்கார்ந்திருந்த கீதா-தேவியுடன் சேர்ந்து கொண்டாள் ரினிஷா.


"ரினிஷா, நீங்க எப்படி தேவிய மீட் பண்ணீங்க? அந்த கதைய சொல்லவே இல்ல...." கீதா கேட்டாள்.


"ஓ...bedtime story கேக்கனுமா?" கிண்டல் அடித்தாள் தேவி. தொடர்ந்தாள் கதையை....


***

ரினிஷா நிறைய பொது தொண்டு செய்வதில் ஆர்வம் உடையவள். பல்வேறு மருத்துவமனைகளில் ரத்த தானம் முகாம் நடத்தி வந்தாள். தேவிக்கு இரத்த தானம் கொடுக்கும் பழக்கம் உண்டு. அப்படி ஒரு முறை தேவி தன் வீட்டு பக்கத்தில் இருக்கும் மருத்துவமனையில் ரத்த தானம் கொடுக்கும்போது தான் முதன்முறையாக ரினிஷாவை பார்த்தாள்.

அன்று ரினிஷா வழக்கம்போல் எல்லாரிடமும் சிரித்துபேசி கொண்டு இருந்தாள். registration formயை கவுண்ட்டரில் கொடுத்தாள் தேவி. அங்கு இருந்து ரினிஷா விவரங்களை சரி பார்த்தாள்,

"ம்ம்ம்.....name.......home address......date of birth......" பிறந்த தேதியை பார்த்தபிறகு ஆச்சிரியம் அடைந்தாள்.

"அட நானும் 19th august தான்...ஆனா உங்களவிட ஒரு வயசு கம்மி" புன்னகையித்தபடி சொன்னாள் ரினிஷா. புதிய நபர்களிடம் அதிகம் பேசாத தேவி எப்போதும் போலவே புன்னகையை பதிலாய் வீசினாள்.

முகாமை முடித்துவிட்டு கிளம்ப தயாரானாள் ரினிஷா.

தேவி வந்த வேலையை முடித்து கொண்டு தன் பைக்கை ஸ்ட்டார்ட் செய்யும்போது மழை ஜோராக பெய்ய தொடங்கியது.

நனைந்தபடியே மருத்துவமனை கேட் அருகே நின்றுகொண்டிருந்தாள் ரினிஷா call taxiக்காக. அவளை கடந்து வேகமாக சென்றாள் தேவி தனது பைக்கில். ஆனால் ஏனோ தெரியவில்லை தேவி பைக்கை reverse செய்தாள். ரினிஷா பக்கம் வந்தாள்......

(தொடரும்)

பகுதி 5

Aug 23, 2009

கந்தசாமி- நொந்து maggi noodlesaa போயிட்டேன் சாமி!

தமிழ் சினிமாவின் கஷ்டகாலமோ இல்ல என் கஷ்டகாலமோ நான் சமீபத்தில் பார்த்த எந்த படமும் நல்லாவே இருப்பதில்ல! (ஏன் கந்தசாமி..ஏன்? நான் கடவுள சொன்னேன்?)

நேத்திக்கு நைட் ஷோ பார்த்தேன். சாரி.... படத்து தூங்கிட்டேன். கடைசி ஒரு மணி நேரம் நல்லா தூங்கிட்டேன். படம் முடிஞ்சி அக்கா எழுப்பிவிட்டாள். படத்தைவிட பின்னாடி, ஏதோ அடிதடி நடந்துச்சு....அது இன்னும் சுவாரஸ்சியமா இருந்துச்சு!!

சில கேள்விகள்:

1) சுசி கணேசன், உங்களுக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசையா? முழு படத்தில் ஹீரோவா நடிக்கலாமே. இந்த படத்துல வந்த மாதிரி ஒரு சின்ன ரோல் பண்ணாம, முழு நீள படத்தில் நடிங்க, கலைப்புலி தாணுவே காசு போடுவாரு!

2) கலைப்புலி தாணு ஐயா, வெளியே போயிட்டு வர ஆட்டோ செலவுக்கு காசு ஏதேனும் வேணும்ன்னா சொல்லுங்க...... கந்தசாமி கடவுள்கிட்ட லெட்டர் எழுதி போடுவோம்!

3) சேவல் முருகன் அவதாரம்.... சரி ஏதோ ஒத்துகிறேன்....அப்பரம் ஏன்ய்யா மியாவ் மியாவ் பூனைக்குட்டி பாட்டு வந்துச்சு? பூனைக்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்?

4) அடுத்த படத்தில் ஸ்ரேயாவுக்கு (அப்படி அந்த வாய்ப்பு அவங்களுக்கு இருந்தா), தோழி வேடம் இருந்தால் என்னைய கூப்பிடுங்க. தோழி அவங்களுக்கு அறைவிடுற மாதிரி ஒரு சீன் வைங்க. நான் அந்த தோழி ரோல் செய்யுறேன்..... ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

5) ஸ்ரேயாவுக்கு சரியா payment கொடுக்கல்ல....டப்பிங் 'ஜகஜோதியா' இருக்கு!

6) விக்ரம் அங்கிள், ஆமா அங்கிள்....உங்க முகத்துல வயதான கலை தெரியுது... அதான் அப்படி கூப்பிட்டேன். அங்கிள் ப்ளீஸ், இனிமேலு இந்த மாதிரி சூப்பர்ஹீரோ படம் பண்ணாதீங்க. எனக்கு வாந்தி, பேதி, மயக்கம், தலைவலி இப்படி பன்றி காய்ச்சல் symptomsம் வருது!

7) மெக்சிகோ நாட்டுக்கு கதை ஏன் போனுச்சு? சரி கதையே இல்லேங்கிறீங்களா, சரி ரைட்டு விடுங்க.

8) வடிவேலு சார், நீங்க வேற ஏதாச்சு business செய்யுங்களேன்....அதான் காமெடி ஸ்டாக் முடிஞ்சு போச்சே!

9) பிரபு தாத்தா, உங்கள நினைச்சா எனக்கு சிப்பு தான் வருது. எங்க ஊருல ஒரு போலீஸ் வேலை இருக்கு. வந்து பாக்குறீங்களா?

10) கடைசி ஒன்னே ஒன்னு கேட்டுகிறேன். 'என் பெயரு மீனாகுமாரி' பாடலை பார்த்து முகம் சுளித்து வாய், மூக்கு எல்லாம் கோணிக்கிட்டு போச்சு. மருந்து அனுப்பி வைங்க, 'கந்தசாமி' படக்குழுவினரே!! அந்த பாடலை பார்த்து, அழ ஆரம்பிச்ச என் சித்தி பையன் இன்னும் அழுதுகிட்டு இருக்கான். மந்திரிச்சு விடனும்னு நினைக்குறேன். யாராச்சு சாமியார் கிடைப்பாங்களா?

சூப்பர்ஹீரோ படம் அடுத்து சூர்யா 'ஆதவன்' அப்படி பண்ணுறாராம். சூர்யா, பாத்து பண்ணுங்க!!

கந்தசாமி- நொந்து maggi noodlesஆ போயிட்டேன் சாமி!

Aug 21, 2009

எனக்கே என்னை தெரியாமல்-3

பகுதி 1 

பகுதி 2

"ட்ட்ரீரீரீங்........ட்ட்ரீரீரீங்...." வாசல்மணி ஒலி எழுப்பியது. கதவை திறந்தாள் ரினிஷா.


"ஹாய்....கீதா...வல்கம்" புன்னகையுடன் ரினிஷா. வரும்வழியில் கற்பனை செய்ததைவிட பல மடங்கு அழகாய் இருந்தாள் ரினிஷா.


பதிலுக்கு கீதா நன்றி என்பதுபோல் சற்று தலையாட்டினாள். வீட்டை சுற்றிபார்த்தாள் கீதா. "வாவ்...so beautiful man! எப்படி இவ்வளவு அழகா வச்சு இருக்கீங்க வீட்ட? nice man...really nice." பூரிப்பு அடைந்தாள் கீதா.



மாறாத புன்னகையுடன் ரினிஷா, "நம்மள சுத்தி எல்லாமே அழகா இருக்கனும்னு நினைக்குற ஒரே இடம் வீடு தான். வெளியே போனோம்னா, அத எதிர்பார்க்க முடியாதுல.....அதான்....."



ரினிஷா சொன்னதில் உள்ள ஆழ்ந்த அர்த்தம் கீதாவிற்கு புரிந்தது. பிடித்தும் இருந்தது. "நீங்க ரெண்டு பேரும் பேசிகிட்டு இருங்க.... i'll go freshen up. alrite?" என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்றாள் தேவி. அவள் சென்றபிறகு, கீதாவும் ரினிஷாவும் பேசிகொள்ளவில்லை. ஹால் ஒரே அமைதியாகவே இருந்தது. கீதாவிற்கு எப்படி, எதை கேட்பது என்று தெரியவில்லை. கீதாவின் முகத்தில் ஓடிய குழப்ப நிலைகளை அறிந்த ரினிஷா,



"என்னமோ கேட்கனும்னு இருக்க...ஆனா....சொல்ல கஷ்டப்படுற....." புன்னகையிட்டாள். தொடர்ந்தாள் ரினிஷா,



"don't worry.....எதுவா இருந்தாலும் சொல்லுங்க..... "



கீதா, "இல்ல....நீங்களும் தேவியும் எப்படி....."



ரினிஷா, "எப்படின்னா?...."



கீதா, "இல்ல...எப்படி ஒன்னா....ஒரே வீட்டுல.....actually how did u people got to know each other."

கொஞ்சம் சிரித்தாள் ரினிஷா. "இன்னிக்கு நைட் ஒரு flashback கேட்டே ஆகனும்னு இருக்க போல...." மறுபடியும் சிரித்தாள்.

***
சின்ன வயதிலிருந்தே 'tomboy' போல தான் திரிந்தாள் தேவி. இதற்கு காரணம் அவர்கள் வீட்டில் இருந்தவர்கள் என்று ஒரு வாக்கியத்தில் சொல்லிவிட முடியாது. பாட்டியிடம் வளர்ந்தவள். அப்பா இன்னொருத்தி வீட்டில். அம்மாவோ சூதாட்டாக்காரி. பல இடங்களில் கடன். தேவியின் இரண்டு அண்ணன்களும் தேவியை போட்டு அடித்து விளையாடுவதையே பொழுது போக்காக வைத்திருந்தார்கள். நிம்மதி இல்லாத சூழலில் இருந்து விடபட வேண்டும் என்று தேவி ஆசைப்பட்டாள்.

எது செய்வதாக இருந்தாலும் தனியாக செய்தாள். குடும்பத்தின் மீது வெறுப்பு. தனித்து வாழ வேண்டும் என்று திட்டவட்டமாக முடிவு செய்தாள். தன்னை தைரியமான நபராக மாற்றி கொள்ள கராத்தே, கிக்-பாக்சிங் போன்ற நடவடிக்கைகளில் ஈடுப்பட்டாள். பள்ளி ஹாக்கி குழுவில் இருந்தாள்.
தன் கிக் பாக்சிங் மாஸ்டர் தான் தேவிக்கு பெரிய inspiration. அவரின் mannerism, style, பேசும்விதம் இவற்றால் பெரிதும் கவரப்பட்டாள். ஆனால் சதாரண பெண் போல் அவரின் மீது ஆசை வரவில்லை. அதையும் தாண்டி ஒரு எண்ணம். அவரை போலவே இருக்க வேண்டும், அவரை மாதிரியே மாற வேண்டும் என்று பைத்தியம் போல் சுற்றினாள்.

அவர் செய்யும் உடற்பயிற்சிகளையும் weight-lifting பயிற்சிகளையும் தேவியும் பின்பற்றினாள். நீட்டமாக இருந்த முடியை வெட்டினாள். மாஸ்டர் வலது கையில் போட்டிருக்கும் வளையம் போலவே தானும் போட்டு கொண்டாள். தன் அறை அலமாரியில் நிறைய polo t-shirts தொங்க ஆரம்பித்தன. தனக்குள் ஏதோ ஒன்று மாறுவதை உணர்ந்தாள். இருப்பினும் அது அவளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. அவளின் மாற்றங்கள் மற்ற யாருக்கும் தெரியவில்லை. வீட்டில் யாரேனும் கவனித்தால் தானே.

பள்ளி இறுதியாண்டில் பாட்டின் இறப்பு அவளை பாதித்தது. இருந்த ஒரு துணையும் இல்லை. அண்ணன்கள் அவளின் உடை மாற்றங்களை பார்த்து, "டேய் எனக்கு தங்கச்சி இல்லடா. தம்பி பொறந்து இருக்கான்." என்று கிண்டலும் கேலியும் செய்தார்கள். அப்போது தான் உணர்ந்தாள் தான் செய்யும் விஷங்கள் மற்றவர்கள் கண்களில் தென்படுவதை.
அழுது புரள ஒரு மடி இல்லை. ஆறுதலுக்கு அவ்வளவாக தோழிகளும் இல்லை. பாலைவானத்தில் தண்ணீர் தேடினாள் தேவி. மற்றவர்களின் கேலி பேச்சுக்கு ஆளாகினாள். வகுப்பு மாணவர்களிடம் பேசுவதை முற்றிலும் தவிர்த்தாள்.

ஒரு நாள் ஹாக்கி பயிற்சி முடிந்து உடை மாற்றுவதற்காக அனைத்து பெண்களும் changing roomகளுக்கு சென்றன. அப்போது தனியாக உட்கார்ந்து காலணிகளை கழற்றிகொண்டிருந்தாள். குளித்துவிட்டு வந்தனர் சில பெண்கள்; உடம்பில் துண்டுகளை மட்டும் கட்டி கொண்டு. தேவி உட்கார்ந்திருக்கும் எதிர்புரத்தில் தான் அந்த 4 பெண்கள் பேசி சிரித்து கொண்டிருந்தனர். தாங்கள் பேசும் சுவாரஸ்சியத்தில், அதில் இருந்த ஒரு பெண் தன் துண்டு அவிழ்ந்துவிடும் நிலையில் இருப்பதைகூட கவனிக்கவில்லை. துண்டின் நிலையை கண்ட தேவி அந்த பெண்ணிடம் சொல்வதற்காக அவளை நோக்கி ஓடினாள்.

தேவி அந்த துண்டை பிடித்தாள்; அவிழ்ந்துவிட்டது!

தேவி தான் வேண்டும் என்றே துண்டை அவிழ்த்துவிட்டாள் என்று ஒருத்தி கத்தினாள். அனைவருக்கும் அதிர்ச்சி! அந்த பெண் தேவியின் கன்னத்தில் பளார் என்று அறைந்தாள். பெற்ற பெண்கள் தேவியை சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்து நொறுக்கினார்கள். வலி, வேதனை, அவமானம்!
பள்ளி நிறுவனத்திற்கு செய்தி தெரிந்துவிட்டது. தேவி ஒரு பெண்ணாக இல்லாமல் வேறு ஒருவிதமாக நடந்துகொள்வதை குற்றம் என்றனர்.தேவியின் இந்த சிந்தனை தான் பெண்களிடம் தவறாக நடந்துகொள்ள அவளை தூண்டியது என்றனர்.

உண்மை எனவென்று தெரியாமல் பேசுகிறார்களே என்று தேவி வடித்த கண்ணீர் துளிகள் எல்லை இல்லை. தேவியை பள்ளியில் இருந்து நீக்கினார்கள். பள்ளியில் பிரச்சனை எல்லாம் முடிந்து வீட்டிற்கு போகும்போது மணி 11. கயிறா? தலைவலி மாத்திரையா? கீழே விழுவதா? என்று பல யோசனைகள். மரண வலியை விலை கொடுத்து வாங்கினாள்.
"சார், மூன்னு பாக்கெட் தலவலி மாத்திர கொடுங்க...." பணத்தை நீட்டினாள் கடைக்காரரிடம்.

(தொடரும்)

பகுதி 4

பகுதி 5

Aug 11, 2009

எனக்கே என்னை தெரியாமல்-2

பகுதி 1


திடுக்கிட்டு போனாள் அவள். தேவி புன்னகையுடன், "ஐ எம் தேவி..." என்றாள்.


ஆச்சிரியத்துடன் அவள், "நீங்க யாரு...."


"உங்கள கொஞ்ச நேரமா கவனிச்சேன். mostly, அந்த பேப்பர யாரும் கண்டுகொள்ள மாட்டாங்க. அப்படி நீங்க தேடி வந்து பாத்தீங்கன்னா...you really need some help i think. ஒன்னும் பயப்படாதீங்க... நான் இந்த அக்னி மன்றத்துல தான் இருக்கேன்." என்றாள் தேவி, கை குலக்குவதற்காக கைகளை நீட்டினாள்.


ஏதோ தொலைந்து போன குழந்தையை மறுபடியும் பார்த்ததுபோல் அந்த பெண்மணி முகத்தில் ஒரு மறுமலர்ச்சி, மகிழ்ச்சி, நிம்மதி. சற்று தன்மையான குரலில், "அப்ப நீங்க...." என்று இழுத்தாள்.


"yes... you are right. i am a lesbian."


அந்த பெண்மணிக்கு மறுபடியும் ஆச்சிரியம். "ஓ...நான் கீதா..." தேவியுடன் கைகுலுக்கி கொண்டாள். ஆனால், மறுநொடியே ஒரு சோக ரேகை பரவியது கீதாவின் முகத்தில். அதை முற்றிலும் புரிந்து கொண்ட தேவி,


"வா கீதா...அந்த காபி ஷாப்புல பேசலாமா?" என்று சொன்னாள்.


"2 cappuccino." ஆர்டர் செய்தாள் தேவி.



"என்னால முடியல தேவி. ஏன் எனக்குள்ள இப்படி...." கண்கள் குளமாகி கன்னங்களில் அருவியாய் ஊற்றியது. தேவி எதுவும் பேசவில்லை. கீதாவை சற்று நேரம் அழவிட்டாள். உலகத்திலுள்ள பல பிரச்சனைகளின் முதல் எழுத்தும் கண்ணீர் தான், முற்றுப்புள்ளியும் கண்ணீர் தான். மேசையில் இருந்த tissue paperரை எடுத்து கொடுத்தாள் தேவி.

அழுகையின் நடுவே, "thanks" தேவி கொடுத்ததை வாங்கி கொண்டாள்.

"நான் ஏன் இப்படி இருக்கேன்?" கீதா தேம்பி அழுதாள்.

"எப்படி?" தேவி கேட்டாள். இந்த கேள்வி கீதாவிற்கு ஆச்சிரியமாக இருந்தது.

boy-cut hairstyle, baggy shirt, wrist band,one side ear stud-கீதாவின் தோற்றம். தன்னை ஒரு முறை பார்த்தவாறு, "இந்த மாதிரி டிரஸ் பண்ணியிருக்கேன்.... என்னால normal girlஆ இருக்க முடியல." அழுகை நின்றது.

ஆர்டர் செய்த cappuccino வந்தது. அதை குடித்துகொண்டே தேவி, "so இப்படி டிரஸ் போட்டா lesbianனு யாரு சொன்னது?"

இந்த கேள்வி கீதாவை சிந்திக்க வைத்தது. மேலும் குழம்பி போனாள்.

"இங்க பாரு கீதா...dressing sense and fashion have got nothing to do with who you are. உன் மனசுக்குள்ள இருக்குற ஃவீலிங்ஸ் தான் முக்கியம். there are lesbians who wear normal girls' outfits.....sarees....punjabi suits.... நம்ம society இருக்குற பெரிய தப்பே அது தான். we try to label people according to what they wear. இந்த மாதிரி superficial things எல்லாம் தூக்கி போடு. உன் மனசுல என்ன தோணுது?" கீதாவின் சில குழப்பங்களுக்கு விடை அளித்ததுபோல் இருந்தாலும் அவள் மேலும் குழப்பம் அடைந்தாள்.

கீதா, " என்னால ஒரு பொண்ணு மாதிரி நடந்துக்க முடியல....i am not feminine at all."

வேறு ஏதேனும் ஆர்டர் வேண்டுமா என்று கேட்பதற்காக வந்தான் சர்வர்.

"இல்ல வேண்டாம்ப்பா..." அனுப்பிவைத்தாள் தேவி.

மீண்டும் கீதாவிடன் தொடர்ந்தாள் தேவி, "இப்ப உனக்கு எத்தன வயசு?"

கீதா, "காலேஜ் first year படிக்குறேன்."

தேவி, "சில பேருக்கு 13, 14 வயசுலே தெரிஞ்சிடும். சில பேருக்கு உன் வயசுல தான் புரியும். ஆனா இன்னும் சில பேருக்கு..... கல்யாணம் ஆனபிறகு தான் புரியும்.... சிலருக்கு 55, 60 வயசு வரைக்கும்கூட தெரியாமலேயே வாழ்ந்துகிட்டு இருப்பாங்க....the most important thing is to take time to self-reflect on yourself. நம்ம இப்படி தான்னு முடிவு எடுத்துட கூடாது உடனே."

கீதா, "நீங்க சொல்றது எனக்கு புரியல்ல...."

தேவி, " Are your feelings for women stronger than your feelings for men? .....Do you get more excited about the idea of kissing a man or kissing a woman? Who do you see yourself settling down with in the future? Are you more physically attracted to men's or women's bodies?
Who do you fantasize about more, men or women?....." என்று வரிசையாக கேள்வி மழை பொழி்ந்தாள்.

இப்படிப்பட்ட கேள்விகளை எதிர்பாராத கீதா முழித்தாள்.

"இந்த கேள்விகளுக்கு பதில் இருக்கனும்னு அவசியமில்ல. எல்லாத்துக்கும் ஆம் என்ற பதில் வரனும்னு அவசியம் இல்ல. மனசு சம்மந்தப்பட்ட விஷயம். ஆனா...முடிவு உன் கையில தான். மத்தவங்களுக்காக உன்னைய மாத்திக்க வேண்டியது இல்ல. மாத்திக்காம இருக்கவும் தேவையில்ல." தேவியின் கேள்வியும் பதிலும் கீதாவின் மனதை திறப்பதுபோல் இருந்தது.

கீதா, "ஏன் இந்த complications.....?"

தேவி, "நம்ம இருக்குற உலகம் அப்படி. lesbians/gays ஏத்துக்குற மனபக்குவம் இல்ல. கடவுள் எப்படி ஆண் பெண் படைச்சாரோ அப்படி தான் என்னையும் படைச்சார். if people think we are going against nature.... that's wrong. in fact we are embracing nature. we accept the changes within ourselves...... which is natural!"

தேவியுடன் அமைந்த உரையாடல் ஒருவித புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது கீதாவிற்கு. தாழ்வுமனபான்மை நீங்கியது போல் உணர்ந்தாள். "நீங்க எப்படி உணர்ந்தீ்ங்க? சின்ன வயசுலே...you knew you were like this?" கீதாவிற்கு தேவியின் வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமா இருந்தது.

சிரித்தவாறு, "i learnt it the hard way. இந்த மாதிரி எடுத்து சொல்ல ஆளு இல்ல. எந்த மன்றமும் கிடையாது...."

கீதா, "அப்பரம் எப்படி?"

தேவி, "கஷ்டப்பட்டு..... கொஞ்ச அடிப்பட்டு.... நிறைய அழுகை...அவமானம்... வெறுப்பு.... தற்கொலை முயற்சிகூட பண்ணியிருக்கேன்..... " சிரித்தாள்.

கண்கள் ஆச்சிரியத்தில் விரிந்தன கீதாவிற்கு. வாயை விரல்களால் பொத்தியபடி, "ஐயோ! அப்பரம் என்ன ஆச்சு?"

அச்சமயம் தேவியின் கைபேசி அலறியது மறுமுனையில் ரினிஷா. தேவி நடந்தவற்றை கூறினாள் ரினிஷாவிடம்.

ரினிஷா, "oh god, is she ok now? you wanna invite her for dinner at our place tonight. நேரம் ஆச்சு டா."

தேவி, "ok sure. don't worry. we'll be there soon."

பேசிமுடித்தபிறகு தேவி கீதாவை அவள் வீட்டிற்கு அழைத்தாள். தேவியை பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் கீதாவை, "no problem... let's go." என்று சொல்ல வைத்தது. கீதாவின் மனதில் ஓடி கொண்டிருந்த கேள்வியை கேட்டுவிட வேண்டும் என்று துடிதுடித்தாள்.

பைக்கில் ஏறுவதற்கு முன் கீதா, "தேவி....ரினிஷா வந்து....உங்க..." இழுத்தாள்.

தேவி, "we are in a relationship. staying together." தனது helmetடை போட்டுகொண்டாள்.

தொடரும்....


பகுதி 3

பகுதி 4

பகுதி 5

Aug 10, 2009

எனக்கே என்னை தெரியாமல்-1

தேவி தன் வேலையை முடித்துவிட்டு 'அக்னி' மன்றத்திற்கு சென்றாள். வேலை இடத்திலிருந்து 20 நிமிடங்கள் தூரம் தான். பைக் கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தாள். முடி கலைந்திருந்தது. சீப்பை எடுத்து சரியாய் சீவி கொண்டாள். பைக்கை ஸ்டார்ட் செய்து 80km/hr வேகத்தில் ஓட்டினாள். மன்றத்தை அடைந்ததும் அலுவலக அறைக்குள் நுழைந்தாள். அலுவலக ஃபோன் மணி ஒலித்தது. தேவி எடுத்தாள்.

"ஹேலோ இது அக்குனியா??....." மறுமுனையில் இருந்தவன் பீர் அடித்துவிட்டு உளறுகிறான் என்பதை அறிந்து கொண்டாள் தேவி.

பொறுமையாக தேவி, "ஆமா...சொல்லுங்க"

"நாங்க இங்க 10 பசங்க இருக்குறோம்.... ஜாலியா இருக்க பொண்ணுங்க வேணும்... அனுப்ப முடியுமா? என்ன ரேட்டு?" என்று உளறிகொண்டே சிரிக்க, அவன் பின்னாடி இருந்தவர்களும் சேர்ந்து சிரிக்கும் சத்தம் கேட்டது தேவிக்கு. உடனே ஃபோனை வைத்தாள். மறுபடியும் ஃபோன் ஒலித்தது.

"hey you f***ing bitc***..... என்னடி உனக்கு இவ்வளவு கொழுப்பு....வா டி பேசாம?" என்றான் அதே குடிக்காரன்.

பொறுமையை இழந்த நேரத்தில் தேவி ஃபோனில் கத்தலாம் என்று வாயை திறக்கும்போது அங்கு வந்தாள் விம்ஸ். புருவங்கள் சுருங்கி, கோபத்தில் கன்னம் சிவக்க, காட்சியளித்த தேவியிடம் விம்ஸ், "என்ன ஆச்சு?"

ஃபோன் ரிசீவரை கையில் பொத்தியபடி நடந்தவற்றை விம்ஸிடம் கூறினாள். விம்ஸ் உடனே ஃபோனை வாங்கி கொண்டாள், போதையில் உளறியவனின் அட்ரஸை வாங்கிகொண்டாள் நாசுக்காய். அடுத்த நொடி காவலர்களுக்கு ஃபோன் செய்து புகார் செய்தாள்.

"இந்த பொறுக்கி பசங்கள இப்படி தான் டீல் பண்ணனும் தேவி! take it easy man! cool..." என்று தேவியின் தோளில் தட்டினாள்.

"do you want coffee?" காபி dispenser பக்கத்தில் சென்ற விம்ஸ். வேண்டாம் என்பதுபோல் தலை அசைத்தாள் தேவி. சிறிது நேரத்தில் மன்றத்திற்கு 10 பேருக்கு மேல் வந்தனர். அலுவலக conference அறையில் மீட்டிங் ஆரம்பித்தது 645 மணி அளவில். மன்ற தலைவர் ஒரு கோப்பை மேசையில் வைத்தார்.

கோப்பில் அச்சடிக்கப்பட்ட வார்த்தைகள்- Agni Welfare Organisation for Lesbians. அங்கு அறையில் இருந்த அனைவரும் லெஸ்பியன்கள் தேவி உட்பட.

"அக்னி" பாதிக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட லெஸ்பியனுகளுக்காக உருவாக்கப்பட்ட மன்றம். இதில் பல உறுப்பினர்கள் உள்ளனர். இன்று வந்திருந்த 10 பேர் மன்றத்தின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள். பல கஷ்டங்களுக்கு நடவே சிரமப்பட்ட இந்த மன்றத்தை நடத்தி வருகிறார்கள். முழு நேரமாக வேறு வேலைகள் செய்தாலும் பகுதி நேரமாக மன்றத்திற்காக வேலை செய்கிறார்கள்.

மீட்டிங்கில் பலவற்றை பேசி ஆராய்ந்தனர். இந்த மாதம் மன்றத்திற்கு உதவி கேட்டு வந்தவர்களின் எண்ணிக்கை, மன்றத்தை பற்றி எவ்வாறு பொது மக்களிடம் தெரிவிக்கலாம் ஆகியவற்றை பற்றி பேச்சு நடக்கையில் விமஸ் அந்த குடிக்காரன் பிரச்சனையை சொன்னாள். மன்றத்தலைவர்,

"நம்ம ஒரு நல்லது பண்றதுக்காக, ரயில்வேஸ், பஸ், சூப்பர்மார்க்கேட்ல brochures வைக்குறோம்...ஆனா இந்த மாதிரி ஆளுங்க அதுல இருக்குற நம்பர பாத்து...ச்சே..." தலையில் கைவைத்தார்.

“இதுக்கு ஒரு முடிவு கட்ட முடியாதா?” என்றார் ஒருவர்.

“இந்த உலகத்துல கடைசி மனுஷன் இருக்குற வரை அது கஷ்டம்.” புன்னகையித்தார் இன்னொருவர்.

கையில் இருந்த மாத ரீப்போர்ட்டை படித்தார் தலைவர், “இந்த மாதம் உதவிக்கு வந்தவங்க 87 பேர். இவங்கள 42 உறுப்பினரா சேந்துட்டாங்க. இவங்கள 37% வேலை பாக்குறாங்க. 41% படிச்சுகிட்டு இருக்காங்க. 22% பேர் 55 வயதை தாண்டியவங்க."

மீட்டிங் தொடர்ந்தது. மணி 8. விடைபெற்று கொண்டு அனைவரும் வீட்டிற்கு கிளம்பினர்.

போகும் வழியில் விம்ஸ், "தேவி, நாங்கலாம் டினர் சாப்பிட போறோம். join us man!"

தேவி, "இல்ல..... ரினிஷா எனக்காக வேட் பண்ணிக்கிட்டு இருப்பா...i got to go." புன்னகையித்தாள்.

விமஸ், "no problem then. you take care dude. see you soon!"



தனது பைக்கை ஸ்ட்டார்ட் பண்ண போகும்போது ரினிஷாவிடமிருந்து ஒரு ஸ் எம் ஸ், 'dear, get some cheese and a loaf of bread.' குறுந்தகவலை படித்துமுடித்த தேவி தனது பையில் கைபேசியை போட்டாள். சூப்பர்மார்க்கெட்டுக்கு நடையை கட்டினாள். பொருட்களுக்கு காசு கட்டுவதற்காக கியூவில் நின்றபோது ஒன்றை கவனித்தாள் தேவி-'அக்னி' மன்ற தகவல்களை கொண்ட information paperகள் கை துடைக்கவும் பொட்டலம் மடிக்கவும் பயன்படுத்தப்படுவதை. அவளுக்கு கோபம் வந்தது. இருந்தாலும், ஒன்றும் சொல்லவும் முடியவில்லை, ஏதேனும் செய்யவும் முடியவில்லை.



கொஞ்ச நேரம் அதையே கவனித்து கொண்டிருந்தாள். சிறு பிள்ளைகள் அந்த தாட்களை எடுத்து பேப்பர் விமானம் செய்வதை பார்த்தாள். அச்சமயம் ஒரு பெண்மணி, சுமார் 20 வயது இருக்கும் யாரும் கவனிக்காத நேரம் பார்த்து ஒரு பேப்பரை தன் பையில் திணித்தாள். அந்த பெண்மணியின் கண்கள் திருதிருவென்று முழித்தன. தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதிசெய்ய சுற்றும்முற்றும் பார்த்தாள்.

அந்த பெண்மணி ஒரு மூலைக்கு சென்று தகவல் பேப்பரிலிருந்த ஃபோன் நம்பரை தனது கைபேசியில் குறித்துகொண்டாள். தேவி அந்த பெண்மணியின் கண்களை பார்த்தாள். கண்கள் கலங்கியிருந்தன. தேவி அவளை நோக்கி நடந்தாள். திரும்பி நின்றுகொண்டிருந்தவளின் தோளில் கைவைத்தாள் தேவி.....

(பகுதி 2)

பகுதி 3

பகுதி 4

பகுதி 5

Aug 4, 2009

லவ் ஆஜ் கல்- தமிழ் படங்களுக்கு இணையாக ஒரு படம்!

இப்ப வர தமிழ் படங்கள் சில பாக்க முடியலன்னா, ஹிந்தி படங்களும் அவ்வாறு வந்தால் நாங்கலாம் என்ன செய்றது? அட போங்கப்பா...லவ் ஆஜ் கல் பாடல்கள் செம்ம பாட்டா இருக்கே. படமும் சூப்பரா இருக்கும்னு நம்பி தோழி ஒருத்தியின் பேச்சை நம்பி போனேன். ம்ஹும்.... நம்பி கெட்டவர்களின் பட்டியலில் என் பெயரையும் சேர்த்து கொள்ளுங்க!

சிவா மனசுல சக்தி படத்த பார்த்து நொந்து போன நிலைமை தான் லவ் ஆஜ் கல் படம் பார்த்தபிறகு வந்தது. ஆரம்பிக்கும்போதே, என்னடா இது ஒரு background இசையும் காணும். ஏதோ போதுன்னு ஒரு நினைப்பு வந்துச்சு. அதுக்கு அப்பரம் லண்டனிலிருந்து இந்தியா, அப்பரம் அமெரிக்கா...இப்படி இடங்களை மாற்றி, கதையின் திசையும் திசை தெரியாமல் காண போகுது. பாடல்கள் நல்லா இருக்கு. ஆனா, நடன அசைவுகள் இன்னும் நல்லா இருந்து இருக்கலாம்! சைவ், நீங்க ஏன் ஏதோ vibrating mobile phoneயை முழுங்கிவிட்ட மாதிரி ஆடுறீங்க? சைவ் அலிகான் சிங் வேடத்தில் ரொம்ப நல்லா பொருந்துகிறார். இவரின் முதல் தயாரிப்பாம் இப்படம். படம் வர்த்தக ரீதியாக பிச்சிகிட்டு போகுதாம். வாழ்த்துகள். என்னைய மாதிரி ரசிகர்கள் அதிகம் இல்லாத வரைக்கும் எந்த படமும் வெற்றி படம் தான்!

தீபிகா- சும்மா சொல்ல கூடாது. ரொம்ம்ம்பவே அழகா சிரிக்குறாங்க!!

இந்த படம் என்னை பொருத்தவரை இன்னொரு ஜப் வீ மெட்!

(அப்பரம் லக் படமும் பார்த்தேன். ஒன்னும் சொல்ற மாதிரி இல்ல.... நான் இனிமே கன்னட படங்கள் பார்க்கலாமான்னு இருக்குறேன். ஸ்ருதிஹாசனே, ஏன்? ஏன்? இதுக்கு மேல உங்ககிட்ட நான் எதுவும் சொல்ல விரும்பல!)

Aug 2, 2009

லவ் ஆஜ் கல்

சைவ் அலிகான் தயாரித்து நடித்து வெளிவந்திருக்கும் படம் தான் லவ் ஆஜ் கல்.(love aaj kal). நேரடியாக மொழிபெயர்த்தால்- காதல் அப்போதும் இப்போதும்! jab we met படத்தை எடுத்தவர் தான் இப்படத்தையும் இயக்கி இருக்கிறார். ஜப் வீ மேட் படம் சகிக்கல! ஆனா, இந்த படம் அப்படி இருக்காதுன்னு ஒரு ஆசை!(படத்தை பார்த்த தோழி சொன்னாள் நல்லா இருக்குன்னும்)

இப்படத்தில் பாடல்களை கேட்டேன். simply awesome!!

twist(remix)- ஆட்டம் போட வைக்கும் பாடல். இன்று காலையிலிருந்து இப்பாடலை தான் கேட்டு கொண்டே இருக்கிறேன்.
aahun(remix)- ப்ரீத்தம் தான் இசையமைப்பாளர். சும்மா பின்னி பெடல் எடுத்து இருக்கிறார். ரொம்ம்ம்ம்ம்ப பிடிச்ச பாடல்.
thoda thoda pyar- பாங்ரா வகையை சேர்ந்த பாடல். கண்டிப்பா, பாடலை கேட்டீங்கன்னா, மெய்மறந்து ஆடுவீங்க....

இப்படி பாடல் அனைத்தும் சூப்பர் ஹிட்!!! படத்தை மிக விரைவில் பார்க்க போகிறேன்:) விமர்சனத்தை பிறகு எழுதுறேன்.