Dec 30, 2009

daddy mummy வீட்டில் இல்ல (series 3)- பகுதி 3

பகுதி 1
பகுதி 2

மனம், கால்கள், கைகள், மூக்கு, நாக்கு எல்லாமே பயத்தால் நடுங்கின. ஆனால் கலா மட்டும் ரொம்ப சாதாரணமாக அமைதியாக 'இந்தியன் மூவி நியூஸ்' மாத இதழை புரட்டி கொண்டிருந்தாள்.

சசி, "முருகா முருகா முருகா..." என்று ஓதி கொண்டிருந்தாள். சுதா மடிக்கணினியில் காலேஜ் இணைய பக்கத்திற்கு சென்றாள். காலேஜ் தேர்வு முடிவுகள் என்னும் லிங்க்கை கிளிக் செய்தாள் சுதா. விஜி, சுதா, சசி ஆகியோரின் கண்கள் பெயர் பட்டியலை மேலும் கீழும் அளந்தன. சசி சத்தமாக வாசித்தாள் முடிவுகளை.

விஜியின் grades: C, C, C, B,C
சுதாவின் grades: B,B,D,D,C
சசியின் grades: A,A,B,C,C
கலாவின் grades: C,C,D,D,D

விஜி, "ஓ ஷிட்..... மார்க்ஸ் என்ன இப்படி பிச்சைக்காரன் வாந்தி எடுத்த மாதிரி இருக்கு..." தலையில் கை வைத்தாள்.

கலா சமாதானப்படுத்தினாள் அனைவரையும், "ஏய் கேர்ள்ஸ்...cheer up cheer up! எல்லாரும் pass பண்ணிட்டோம்ல...அப்பரம் என்ன கவலை... the destiny is not important- the journey matters the most!" சிரித்தாள்.

சுதா, "ஏ... வீட்டுல இந்த மார்க்ஸ காட்டினால் செருப்பு பிஞ்சிடும்..."

கலா, "அப்போ புது செருப்பு வாங்கலாம்னு சந்தோஷப்பட்டுக்கோ மச்சி!"

சசி, " நான் செத்தேன் டி... நான் C கிரேட் வாங்கினதே இல்ல வாழ்க்கையில... கண்டிப்பா எனக்கு சங்கு தான்." கண்கள் கலங்கின.

கலா, "ஐயோ ஏன் கேர்ள்ஸ்.... கிரேட் பத்தி மட்டுமே யோசிக்குறீங்க. grades don't measure your true intelligence. இந்த A... B... இதெல்லாம் நம்ம 4 வயசா இருந்தபோது கத்துகிட்ட ஒரு எழுத்து, அவ்வளவு தான்!! that don't decide our fate and we should not allow them to decide our fate. so what if you have scored a C or D in an exam? it doesn't make u less human being. "

சுதா, "வீட்டுல எப்படி டி சமாளிக்க முடியும்? திட்டியே கொன்னுடுவாங்க. "

சிரித்துகொண்டே கலா, " ஒரு மூக்கு, ஒரு வாய படைச்ச கடவுள் எதுக்கு ரெண்டு காதுகள படைச்சான்னு நினைக்குற? பெத்தவங்க திட்டுறது அவங்க கடமை, அதுல அவங்களுக்கு கொஞ்சம் பெருமையும்கூட வச்சுக்க... ஒரு காதுல திட்ட வாங்கினா, மறு காதுல அத வெளியாக்கிடனும். தப்பி தவறி மனசுக்கு போனுச்சு அப்பரம் ரெம்ம்ம்ம்ம்ப கஷ்டம். take it easy policy... மச்சிஸ்" சினிமா நியூஸின் மறுபக்கத்தை திருப்பினாள்.

சசிக்கு சற்று கோபம் வர, "உனக்கு என்ன மனசுல பெரிய இவள்னு நினைப்பா... உன்னால தான் நான் இப்படி ஆயிட்டேன்...."

மற்ற மூன்று பெண்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. கலாவும் முழித்தாள்.

சசி தொடர்ந்தாள், "இந்த செம்ஸ்ட்டர் ரொம்ப ஆட்டம் போட்டுடோம்! clubbing, movie அது இதுன்னு.... எல்லாம் உன்னால தான் கலா!" கோபத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் கைபேசியை மெத்தையில் தூக்கி எறிந்தாள்.

கலா, "இந்த வயசுல enjoy பண்ணாம அப்பரம் எப்ப டி enjoy பண்ண போறோம்..."

சசி எதுவுமே பேசவில்லை. கலாவுக்கு சற்று எரிச்சல் வர, "ஆமா, எனக்கு ஒன்னு புரியல... சசி ஏன் இப்படி ஓவர் சீன் போடுறான்னு! பாத்து சசி, ரொம்ப கோபம் பட்டா, சின்ன வயசுலே ஹார்ட் அட்டேக் வந்துடுமா?" சிரிக்க ஆரம்பித்தாள் கலா.

சசிக்கு ஆத்திரம் உச்சி மண்டைக்கு ஏற, " could you please stop your laughter and ur nonsense? you r such an irritating pest! don't get on my nerves kala!" கண்களில் கண்ணீர் கொட்டியது. கோபம், எரிச்சல், வெறுப்பு கலந்த கண்ணீர்.

உடனே சுதா, " quiet quiet. அம்மாவுக்கு கேட்டுட போகுது! shhhhhhh..." சாந்தம் படுத்தினாள்.

கலா, " சசி, நீ தான் இங்க ஓவரா பண்ணிகிட்டு இருக்க... not me. for your info, you better stop your bloody nonsensical over-emotional crying session now! right now!"

மீண்டும் தொடர்ந்தாள், " இங்க பாருங்க கேர்ள்ஸ்... புத்தக அறிவு வேற, பகுத்தறிவு வேற. வாழ்க்கைல நமக்கு உதவ போறது பகுத்தறிவு தான். அத வளர்த்துக்க... நம்ம நாலு இடத்துக்கு போனும்.... காலேஜ் புக்ஸவிட்டுடு மத்த விஷயங்களை பத்தியும் படிக்கனும். life is like a road with speed breakers. இந்த கிரேட்ஸ் வந்து ஒரு speed breaker மாதிரி நினைச்சுக்குங்கோ.... road முழுக்க speed breakers இருக்க போறது இல்ல."

சசி அழுகையிலும், " life is not a road, it is a race!"
இவர்கள் இருவரும் சண்டை போட்டு கொள்வது விஜிக்கும் சுதாவுக்கும் குழப்பமாக இருந்தாலும், அவ்வபோது சிரித்து கொண்டனர்.

கலா, " ஆமை முயல் கதை கேள்விப்பட்டு இருக்கீயா? மெதுவா போன ஆமை தான் அந்த ரேஸுல ஜெயிச்சுது!"

சசி, " ஆனா, அந்த ரேஸுல இரண்டு பேரு தான் இருந்தாங்க... நம்ம போற ரேஸுல பல மில்லியன் பேர் ஓடிகிட்டு இருக்காங்க... நம்ம ஜெயிக்கனும்னா கண்டிப்பா வேகமா போய் தான் ஆகனும். மத்தவங்ககூட போட்டி போட்டு தான் ஆகனும்."

கலா மற்ற இரு பெண்களையும் பார்த்து, "ஏய் இந்த சசியோட friendshipa நான் 'divorce' பண்ணுறேண்டி ...... ஏன் மேன் இவ பாட்டி மாதிரி பேசிகிட்டு இருக்கா.... "

விஜி, "சசி, கூல் டவுன் மேன்... கலா சொல்றதிலும் ஒரு பாயிண்ட் இருக்கு. கூல் பா கூல் பா...."

சுதா, " வீட்டுல எப்படி சமாளிக்குறது?"

கலா, " வீட்டுல எல்லாரும் நல்ல மூட்ல இருக்கும்போது சொல்லு. இந்த தடவ எல்லாருமே ரொம்ப மோசமா தான் செஞ்சு இருக்காங்க. பேப்பர் கஷ்டமா இருந்துச்சு. கிளாஸுல நிறைய பேர் paper moderate பண்ண lecturersகிட்ட பேச போறாங்க. அப்படி இப்படின்னு நல்ல பீலா விடு. முகத்த சோகமா வச்சுக்கோ. அவங்க எகுறினா, நீ எப்போதுமே அமைதியா இரு. முடிஞ்சா இன்னிக்கு நைட் சாப்பாடு வேண்டாம்னு சொல்லிடு. அப்ப தான் புள்ள கவலை படுது நம்ம அதிகமா திட்ட கூடாதுன்னு பெத்தவங்க நினைப்பாங்க!! எப்படி?"

சுதா, "நீ கண்டிப்பா அடுத்த வருஷம் தேர்தல நிக்குற...."

என்ன சொன்னாலும் சசி சமாதானம் ஆகவில்லை. யாரிடமும் பேசமால் வீட்டிற்கு சென்றாள்.

லீவு முடிய கொஞ்ச நாட்கள் தான் இருந்தது. பரிட்சை முடிவுகளை சொல்லி வீட்டில் என்ன நடந்தது என்று ஒருத்தருக்கு ஒருத்தர் தகவல்களை தெரிவித்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் ஏற்படவில்லை. ஸ் எம்ஸ் மூலம் தான் தெரிந்தது, வீட்டில் செம்ம டோஸ்த் விழுந்தது என்று. ஆனால், ஒரு படத்தின் 'ஒன் லைன்' கதையை கேட்பதற்கும் முழு திரைக்கதையுடன் கதையை கேட்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா?

கலா அனைவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பினாள்- "girls, meet at carlo cafe at 5 pm tmr."

(பகுதி 4)

Dec 29, 2009

daddy mummy வீட்டில் இல்ல (series 3)- பகுதி 2

பகுதி 1

சசி, சித்தார்த்கூட சென்ற விஷயம் சுதாவின் அம்மாவுக்கு தெரிந்துவிட்டது என்றதும் அவளது மனம் வயிற்றுக்குள் சென்று மூச்சு குழாய் வழியாய் மேலே உருண்டு நாவில் நிற்பதுபோல் உணர்ந்தாள். மற்ற மூன்று பெண்களும் விளையாட்டாய் பேசிய பேச்சு பெரிய விபரிதமாய் முடிய போகிறேதே என்ற பயத்தில் கால்கள் 'டான்ஸ் இந்தியா டான்ஸ்' நிகழ்ச்சியை நடத்தின.

அறை கதவை முழுவதுமாய் திறந்தார் சுதாவின் அம்மா, "ஆமா கோகிலா, நான் பார்த்தேனே...நேத்திக்கு அவ அந்த சித்தார்த்கூட வெளியே போறத... அப்போ தான் அவன் மாமியார் பார்த்தா...அதுக்குள்ள தொடரும்னு போட்டான்... பாவிபய.. இனி திங்கட்கிழம வரைக்கும் வேட் பண்ணனுமே..." என்றார் தொலைபேசியில். சுதாவின் அம்மா தன் தோழியிடம் சீரியல் கதையை பற்றிதான் பேசுகிறார் என்று தெரிந்து பிறகு தான் போன உயிர் திரும்பி வந்தது நால்வருக்கும். சாப்பிட கேக் கொண்டு வந்தார் சுதாவின் அம்மா. அதை சுதா கையில் கொடுத்துவிட்டு தொலைபேசியில் மீண்டும் தீவிரமாய் பேச தொடங்கினார்.

அவர் அறையை விட்டு சென்றபிறகு, கலா குபீர் என்று சிரிக்க ஆரம்பித்துவிட்டாள். அதை தொடர்ந்து, விஜி, சுதா. சசி இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாதவளாய் உட்கார்ந்து இருந்தாள். அவளை சுயநினைவுக்கு கொண்டு வர கலா, சசியின் கைபேசியை பார்த்து, "ஏய் சித்தார்த் calling you di." என்று பொய் சொன்னாள்.

அதற்கு சசி, "எங்க? எங்க?" என்று அடிச்சு போட்ட கறுப்பான்பூச்சி போல் குதித்தாள். அதை பார்த்து மறுபடியும் சிரித்தனர் மற்ற பெண்கள். கோபம் அடைந்த சசி, "பொறுங்கடி.... நீங்களும் ஒரு நாள் இப்படி மாட்டுவீங்க... அப்ப இருக்குது உங்களுக்கு..."

சுதா கடிகாரத்தை பார்த்தாள். "ஏய் என் ஃபோன கொடுக்க ரவி இப்ப வந்துடுவான்.... வாங்க போவோம்."

"இவ என்னடி வயலுக்கு வேலை பாக்க போற மாதிரி எல்லாரையும் கூப்பிடுறா... நீயே போயிட்டு வா!" விஜி, சுதாவின் படுக்கையில் படுத்து கொண்டே பதில் அளித்தாள். சுதாவின் அம்மா கொண்டு வந்த கேக் துண்டுகளை ரசித்து ருசித்து சாப்பிட்டு கொண்டிருந்தாள் கலா.

"ப்ளீஸ் டி வாங்க போலாம்..." எல்லாரையும் கெஞ்சி அழைத்தாள் சுதா.

"கடவுளே, ஏன் என்னைய இந்த களுசட கூட்டத்தோட சேர வைக்குற." சிரித்துகொண்டே கலா, "சரி சரி வா போவோம்...."

சுதாவின் அம்மாவிடம், "மா, நாங்க கொஞ்சம் வெளியே போயிட்டு வறோம்." நைஸாக ஸ்கேப் ஆனாள் சுதா. சுதா ரவியை பக்கத்து தெருவுக்கு வர சொன்னாள்.

"ஏய் சுதா, ரவி யாருன்னு எப்படி கண்டுபிடிப்ப?" சசி புத்திசாலித்தனமான ஒரு கேள்வியை கேட்டாள். அதற்கு சுதா, "நான் ரவிகிட்ட சொன்னேன் ஒரு அழகான பொண்ணு, 3 அட்ட பிகரோட நிப்பா... அந்த அழகான பொண்ணு தான் சுதான்னு. " புன்னகையித்தாள்.

"அடியே அருந்ததீதீதீதீ!!!" தொதித்து எழுந்தாள் விஜி! அடிக்க வந்த விஜியை தடுத்தாள் சுதா. "ஏய் நான் சும்மா சொன்னேன் டி.... அவர்கிட்ட நான் ஒன்னுமே சொல்லல.... பாத்துக்கலாம் விடு..." என்றாள் சுதா. அனைவரும் ஆளுக்கொரு திசையில் பார்வையை வைத்திருந்தனர்.

காத்திருந்து காத்திருந்து கால்வலி வந்த கலா, "ஏ என்ன மேன் சுதா, அவன பொங்கலுக்கு வர சொன்னா, கிரிஸ்மஸுக்கு தான் வந்து சேருவான் போல.... இவன கல்யாண பண்ணிக்காத... கல்யாணத்துக்கு வர சொன்னா... straightaa honeymoonக்கு தான் வந்து சேரவான்."

விஜி சிரித்தகொண்டே, " சுதாவுக்கு அது தான் ஈஷ்டம்னு நினைக்குறேன்." முறைத்தாள் சுதா. இவர்கள் பார்த்திராத திசையிலிருந்து ரவி வந்தான்.

இந்த பெண்கள் கூட்டத்தை நெருங்கியவன், "ஹாலோ excuse me girls... sorry நான் இந்த ஏரியாவுக்கு புதுசு. இங்க சுதான்னு ஒரு பொண்ணு தங்கியிருக்காங்க. அவங்க ஃபோன தொலைச்சுட்டாங்க. அத கொடுக்க வந்திருக்கேன். அவங்க யாரு...எங்க இருப்பாங்க...actually இந்த இடத்துக்கு தான் வர சொன்னாங்க.... well do you know sutha? are you living in this area?" சிரித்த முகத்துடன் நின்றான் ரவி.

கலா சசியின் முகத்தை பார்த்தாள். சசி விஜியின் முகத்தை பார்த்தாள். மூவரும் சுதாவின் முகத்தை பார்த்தனர். சிரிப்பை அடக்க முடியவில்லை!!

'ஏ ஏ ஏ ஏ....பலே பலே பலே பலே பலே பலே பலே பலே பலே பலே'

ரவி ஒரு பஞ்சாபி. தலையில் தர்பன் கட்டியிருந்தான். யாரும் எதிர்பாராத வகையாக ரவி காட்சியளித்தது அனைவருக்கும் ஆச்சிரியத்தை தந்தது. எச்சில் முழுங்கிய சுதா, "ஹாய், நீங்க தேடி வந்த... சுதா... நான் தான்." கண்கள் அவன் முகத்தைவிட்டு அகலாமல்.

"ஓ what a surprise!" என்றான்.

"எங்களுக்கும் தான்." சிரிப்பை அடக்கியபடி மற்றவர்கள் கோரஸாக பாடினர். மற்ற பெண்களை பார்த்து புருவம் உயர்த்தி ரவி, "சாரி...நீங்க....?"

சுதா அறிமுகப்படுத்தினாள்.

"உங்க முழு பெயர்?" கலாவுக்கு வாய் அரித்தது.

"ரவிஷாந்த் ஷர்மா கபூர்"

"நீங்க எப்படி இவ்வளவு நல்லா தமிழ் பேசுறீங்க?" காபி வித் அனு போல் கையில் கோக் வைத்து கொண்டு விஜி கேட்டாள்.

சிரித்தான் ரவி. "இல்லங்க... நாங்க இருக்குற ஏரியாவுல நிறைய தமிழ் மக்கள் இருக்காங்க... ப்ளஸ்.. மொழிகள பத்தி research பண்ணிகிட்டு இருக்கேன்... so i love languages... tamil is one of the ancient languages in the world. சின்ன வயசுலேந்தே தமிழ் தெரியும்"புன்னகையித்தான்.

சுதா கொஞ்சம் மயக்கத்திலேயே இருந்தாள்.

"சரிங்க...nice to meet you girls. i got to go. i have to attend a seminar today. so take care. keep in touch." விடைபெற்று கொண்டான் ரவி.

அவன் சென்றபிறகு, கலா சுதாவை பார்த்து, "உங்க அப்பா பிரகாஷ் ராஜ் மாதிரி அவுறத confirm."

சசி, "அப்ப இது புது படம்- சுதாவும் நானும்."

விஜி, "வாங்க கேர்ஸ்.... சப்பாத்தி மாவு வாங்கிட்டு போவோம். இப்பலேந்து நார்த் இந்தியன் சாப்பாடு எப்படி செய்யுறத கத்துக்கனும் பாரு...." கைகொட்டி சிரித்தாள்.

"அடுங்குங்க டி...." சுதா எச்சரித்தாள்.

"he said keep in touch. what does that mean?" சுதாவின் கண்களில் வெட்கம் மின்னியது.

"அப்படின்னா, உன் மாமியார் கால அமுக்கிவிடனும்னு அர்த்தம்." கலா கிண்டல் செய்தாள்.

" shut up idiot!" சுதா கத்தினாள்.

"அவரோட நம்பர வாங்கினீயா?" விஜி கேட்டாள்.

"இல்லையே.....ஓ ஷிட்!!!" முகத்தில் சோகம் பரவியது.

கலா ரொம்ப கூலா, "ஹாலோ அறிவுக்கு பொறாந்த அறிவுகளா... சுதா உன் வீட்டு ஃபோன்ல caller id இருக்குல... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தானே அவன் ஃபோன் பண்ணான்.... வீட்டுக்கு போய் நோட் பண்ணிக்கிச்சா போச்சு!"

"ஓ மை காட்!!!! எப்போதுமே எங்களுக்கு நீ தான் தலிவா!" சுதா கலாவை கட்டிபிடித்தாள்.

வீட்டை வந்து அடைந்ததும், சுதா ரவியின் நம்பரை நோட் செய்து கொண்டாள். தொலைக்காட்சி பார்த்தனர். கலா வேண்டுமென்றே ஹிந்தி சேனலுக்கு மாற்றினாள். சமையலறையிலிருந்த சுதாவின் அம்மா, "யாரடி அவ புரியாத மொழில டிவி பாக்குறது...." சத்தம் போட்டார்.

"இனிமே புரிஞ்சுக்க வேண்டிய மொழி ஆண்ட்டி....." கலா சத்தமாய் கூற, சுதா கலாவின் கையை கிள்ளினாள்.

"ஏன் கலா உலறுர.... மாத்தங்குடி சேனல... இப்போ சீரியல் நேரம்... மாத்துங்க மாத்துங்க..... " என்று கைகளை கழுவியபடி ஹாலுக்கு வந்தார் சுதாவின் அம்மா. மற்ற பெண்களுக்கு போர் அடித்ததால், சுதாவின் அறைக்குள் சென்றனர். அப்போது விஜியின் கைபேசி அலறியது, " ஹாய் மச்சிஸ், semester results are out. check them online." வகுப்பு தோழியிடமிருந்து மெசேஜ்.

அதை பார்த்து வாய் பிளந்தபடி விஜி, "ஓ ஷிட்.... results are out!!"
சசி, " இரண்டு வாரம் கழிச்சு தானே வரும்னு சொல்லியிருந்தாங்க...."
சுதா, "ஏய் சீக்கிரம் அந்த லெப்டாப்பை எடு...." மடிக்கணினி கலாவின் பக்கத்தில் இருந்தது!

அதை அறக்க பறக்க திறந்தாள்.......

(பகுதி 3)

சைட் அடிக்கப்பட்டுக் கொண்டிருப்பவர்கள்- 10

3 idiots படம் பார்த்த பிறகு, ஷர்மன் ஜோஷி மீது ஒரே லவ்வ்வ்வ்வ்வ்வ்வ்ஸ்ஸ்ஸு!! சிறப்பு அம்சம்: மூக்கு & அப்பாவியா தோன்றும் அவரது கண்கள்.
மனுஷன் படத்துல பின்னு பின்னுனு பின்னியிருக்கிறார். ஒரு பத்து பேர் இருந்தால், இவர் அவர்கள் நடுவே இருந்தால்கூட பளிச்சென்று தெரிவார் :) படத்தில் அமீர் கூட அருமை- நடிப்பு, நடை, body language. இருந்தாலும், எனக்கு ஷர்மன் ஜோஷி மீது தான் கண்ணு. ஹிஹிஹிஹி....

அடுத்தவர், டான்ஸ் இந்தியா டான்ஸ் நிகழ்ச்சியில் வரும் terence lewis. சிங்கையில் திடீரென்று subscribe செய்யாத சேனல்கள்கூட தெரிந்தது இரண்டு நாட்களுக்கு. அதில் star gold, star plus, zee tv, sony tv என்று பல இந்தி சேனல்கள் தெரிந்தன. பொங்கலுக்கே நான் வெடி வெடிப்பேன், தீபாவளி வந்தால் சும்மா விடுவேனே! இரவு முழுவதும் உட்கார்ந்து எல்லாம் இந்தி சேனல்களை மாற்றி மாற்றி பார்த்தேன். மொழி புரியுதோ புரியலையோ, காதுகளுக்கு இனிமை, கண்களுக்கு குளிர்ச்சி... என்ற ஒரு ரகமா போனது இரண்டு நாட்கள். அப்போது தான் டான்ஸ் இந்தியா டான்ஸ் நிகழ்ச்சியில் வரும் நடுவர் terence lewis இருந்தார்.

ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப அழகாய் சிரிக்கிறார். it is not just a smile. வாய்விட்டு சிரிக்கிறார். சிலர் வாய் விட்டு சிரித்தால், காட்டுமிராண்டி மாதிரி இருக்கும். ஆனால், இவர் அப்படி இல்லை. வாய்விட்டு சிரிப்பவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்! ஆக ஆக ஆக.... எனக்கும்ம்ம்ம்ம்...இவரை..... *ஐயோ போங்க எனக்கு வெட்கமா இருக்கு*

Dec 17, 2009

daddy mummy வீட்டில் இல்ல(series 3)- பகுதி 1

இது சீசன் 3.

****************************************

கண்ணாடி கடையில் கலா சொன்னது ஞாபகம் வந்தது- ஹாஹா...முதல தடவ மாட்டிகிட்டபோது ஒரு சித்தார்த் நம்ம கதைக்குள்ள வந்தான்...இப்போ எந்த ஜெயம் ரவி வர போறானோ.

அந்த ஞாபகம் வர அனைவரும் சிரித்தனர்.

மறுமுனையில் இருந்த ரவி, "ஹாலோ ஹாலோ....என்ன ஒரே சத்தமா இருக்கு?"

"ஒன்னுமில்ல" என்று சுதா வெட்கப்பட்டாள்.

கலா, "அடே மச்சி, வெட்கப்படுறாளே! மறுபடியும் மறுபடியும் சாச்சுபுட்டான் மச்சான். " என்று சொல்லியபடியே மெத்தையில் விழுந்தாள்.

சுதா ரவியிடம் தன் வீட்டு முகவரியை கொடுக்கமால் தன் வீட்டு அருகே இருக்கும் இன்னொரு தெருவின் முகவரியை கொடுத்து அங்கு வர சொன்னாள் ரவியை.

விஜி உடனே, "ஏய் வீட்டுக்கு வர சொல்ல வேண்டியது தானே. அப்படியே இரண்டு பேரையும் வச்சு நிச்சயதார்த்தம் முடிச்சு கல்யாண தேதியையும் முடிவு பண்ணிடலாம் பாரு...." கலாவும் சசியும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

"ஓய்... என்ன நக்கலா... சும்மா ஃபோன் பண்ணான்...அதுக்குள்ள அநியாயத்துக்கு இப்படி கலாய்க்குறீங்களே. நீங்களாம் உருபுட மாட்டீங்க!!" செல்லகோபத்துடன் சுதா.

"ஏய் தோடா கண்ணகி சாபம் விடுறாங்களாம்! நம்மெல்லாம் எரிஞ்சு போயிடுவோமா!! ஹிஹி..." கிண்டல் செய்தாள் கலா.

"எனிவே, வெட்க கெட்ட பிரபுதேவாவா இருக்குறதவிட விவரமான சிம்புவா இருக்குறது மேல்... யூ சி!" உலக மகா புதுமொழியை ஓதினாள் சுதா.

சசி தன் கண்ணாடியை சரிசெய்தவாறே, "என்னடி.... உனக்கு இப்படி பேச சொல்லி யாரு சொல்லிகொடுக்குறா..."

"ஆமா.... சுதா சொல்றது சரி தான். ரவியின் குரல் வேணும்னா இளமையா இருக்கலாம். ஆனா அவனுக்கு ஏற்கனவே கல்யாணமாகி புள்ளகுட்டியெல்லாம் இருந்துச்சுன்னா.." கலா கூறினாள்.

"ஐயோ அத விடுங்கடி.... அவரு வந்தபிறகு பாத்துக்கலாம். இப்போ நம்ம எதுக்கு இங்க வந்தோம்? சசியோட டேட்டிங் கதைய பத்தி கேட்க தானே!! சொல்லுடி மின்ன்ன்ன்னனல்!! " என்றாள் விஜி சசியை உரசியபடி.

"ஒன்னும் நடக்கல...." என்றாள் சசி.

"நீங்க இரண்டு பேரும் எங்க நடந்தீங்க? அத சொல்லு." சுதா பொறுமையை இழந்தாள்.

சசி தன் டேட்டிங் கதையை தொடர்ந்தாள், "நீங்க என்னைய பஸுல ஏத்திவிட்ட பிறகு....."
----------------------------------------------------

சசி ஒரு மணி நேரத்திற்கு முன்பே சென்றுவிட்டாள். இதற்கு பெயர் தான் ஆர்வகோளாறு ப்ளஸ் வயசுகோளாறு! பையன் சித்தார்த்தும் இதே ரகம் தான். அவன் இரண்டு மணி நேரத்திற்கு முன்பே அங்கு நின்று கொண்டிருந்தான். இருவரின் பார்வைகளும் சந்தித்து கொண்டன. அப்போது 'நம்தனம் நம்தனம் நம்தனம்' என்னும் இளையராஜா பிண்ணனி இசை வரும் என்று எதிர்பார்த்தீங்க என்றால் நீங்கள் ரொம்ப தமிழ் படங்கள் பார்க்குறீர்கள் என்று அர்த்தம். அந்த நேரத்தில் பக்கத்தில் நின்று கொண்டிருந்த நாய்களின் சத்தம் தான் காதுகளை கிழித்தன.

'ஹாய்...' என்றான் சித்தார்த். சிரித்தாள். கண்ணாடியை சரி செய்து கொள்ளவில்லை. ஏன் என்றால் அன்று அவள் போட்டிருந்தாள் contact lens. இருவரும் billiards விளையாட சென்றார்கள். சசிக்கு விளையாட தெரியாது. ஆக அவன் அவளுக்கு சொல்லிகொடுப்பான் என்று சசி எதிர்பார்த்தாள். அச்சமயம் மின்சாரம் தடை ஏற்பட்டது. அந்த இடத்தில் generatorரும் வேலை செய்யவில்லை என்று விளையாட்டு மன்றத்தின் உரிமையாளர் கூற, அங்கிருந்து எல்லாரும் வெளியேறினர் சசி சித்தார்த் உட்பட.

ஆஹா, வடை போச்சே!! என்ற முகத்துடன் சசியும் சித்தார்த்தும் காட்சியளித்தனர். பின்னர், இருவரும் சாப்பிட போக முடிவு எடுத்தனர்.

"fast food or restuarant?" என்று சித்தார்த் கேட்க, சசிக்கு மகிழ்ச்சி.

அவனே முடிவு செய்யாமல் தன் விருப்பத்திற்கும் இடம் கொடுக்கிறானே என்று சசி சந்தோஷப்பட்டாள். 'ஜெண்டில்மேன்ய்யா.' என்றது அவள் மனம்.

இருவரும் ஒரு இத்தாலி உணவகத்திற்குள் சென்று உணவு உண்டனர்.
--------------------------------------------------------------------------------------

"அப்பரம் காச அவன் கட்டுனா... ஜெண்டில்மேன்ய்யா.... வீட்டுக்கு வந்துட்டோம். அவ்வளவு தான்." சசி கதையை முடித்தாள்.

விஜி தூங்கி விழுந்தாள். சுதா முறைத்து கொண்டிருந்தாள். கலாவிற்கு வாயில் நல்லா வந்தது, வாந்தி இல்ல, கெட்ட வார்த்தைகள்.

"ஏண்டி இது தான் உங்க ஊருல கிளுகிளுப்பான டேட்டிங் கதையா? இதுக்கு நான் பாட்டி வடைய சுட்ட கதைய கேட்டுருப்பேனே....உன்னையெல்லாம்...." பக்கத்தில் இருந்த புத்தகத்தை தூக்கி சசியிடம் எறிந்தாள் கலா.

"ஏய், don't misuse them. this is அஷ்ட்ட லட்சுமி!" என்றாள் சசி. தூக்க மயக்கத்திலிருந்த விஜி, "யாரு? ஜோதி லட்சுமியா? எங்க எங்க?"

"பாரு பச்சை குழந்தை டி விஜி..... நீ டேட்டிங் போன கதையை கேட்டு சந்தோஷப்படலாம்னு வந்தா... இப்படி மொக்கை போட்டுடீயேடி... ச்சே.... உனக்கு ஏண்டி இந்த பன்றிகாய்ச்சலெல்லாம் வந்து தொலைய மாட்டேங்குது!!" கலா கத்தினாள் சசியை பார்த்து.

"இங்க பாரு... டேட்டிங் எல்லாம் எங்க personal matter. சித்தார்த் கூட இத பத்தி யாருக்கிட்டயும் சொல்லவேண்டாம்னு தான் சொன்னாரு. ஏதோ பிரண்ட் ஆச்சேன்னு சொன்னா... ரொம்ப தான் உங்களுக்கு...." சிரித்தபடியே சொன்னாள் சசி.

" என்னது personalaa? சித்தார்த் அதுக்குள்ள எப்படி அவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆனாரு!" விஜி சத்தம் போட்டாள்.

சுதா, " personalaa....பொறு பொறு... இத எப்படி public மேட்டரா ஆக்குறேன்னு பாரு. அம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாமா, நம்ம சசி என்ன பண்ணா தெரியுமா? நேத்திக்கு...." என்று சுதா தன் அம்மாவை கூப்பிட்டாள்.

கதவு திறக்கும் சத்தம் கேட்க, சுதாவின் அம்மா, "தெரியுமே நேத்திக்கு அந்த சித்தார்த்கூட அவ வெளியே போறத நான் பாத்தேனே!" என்றாள்.

கலா, விஜி, சுதா, சசி முகத்தில் ஈயாடவில்லை. சசியின் மண்டையில் சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ங்குது!!!

(பகுதி 2)

Dec 11, 2009

நான் சமைச்சா தாங்கமாட்டே, நாலு மாசம் தூங்க மாட்டே!




உலக வரலாற்றில் முதன் முறையாக சமையல் அறை என் வீட்டில் எங்கே இருப்பது என்பதை கண்டுபிடித்துவிட்டேன். அங்கு சென்று நான் என் முதல் சாதனையை செய்துவிட்டேன். தோசை செய்தேன். (ஓய்...யாருப்பா அங்க சிரிக்குறது... இவ்வளவு ஈசியான சமையல்..இதுக்கா இந்த பில்டப்புன்னு நீங்க நினைக்கலாம். பெரியவங்க சீக்கிரம் நடப்பது சகஜமான ஒன்னு, ஆனா அதுவே ஒரு குழந்தை முதல் அடியை எடுத்து வைத்து நடக்கும்போது அது அதற்கு சாதனையாக தோன்றும். நான் குழந்தைப்பா!)

தோசை மாவு இருக்கு. சாதாரண தோசைய செஞ்சு சாப்பிட்டால், அது எப்படி முடியும்??...நம்ம எவ்வளவு பெரிய ஆளு! அதிரடியா செஞ்சு சாப்பிடனும்னு நினைச்சு சமையல் புத்தகத்தை எடுத்தேன். அதில் ' chilli mushroom thosai' செய்முறையை பார்த்தேன். ஆனா அதை செய்யவில்லை. அதை சற்று மாற்றி என் ஸ்டைலில் செய்தேன். (நாளைக்கு இந்த உலகம் என்னைய பாத்து ஈயடிச்சான் காபின்னு சொல்லிடகூடாது பாருங்க அதுக்கு தான்...)

என் தோசைக்கு நான் வைச்ச பெயர் 'chilli potatoe thosai'. (ஆமா பெரிய மாற்றம் அப்படின்னு உங்க mindvoice பேசுறது எனக்கு கேக்குது) இருந்தாலும் எதுக்கும் அசரமாட்டாள் இந்த அசுர சூறாவளி! சொந்தமா யோசிச்சு, கையில் கிடைத்த காய்கறிகளை போட்டு ஒரு கலவையா தோசையை செய்து முடித்தேன். முதல் ரெண்டு தடவை தோசை, தோசை மாதிரி வரவில்லை.

எனக்கு ஆண்டவன் கொடுத்த கிட்னியையும் சேர்த்து யோசிச்சேன். ஏன் தோசை இப்படி போகுதுன்னு. வேற தோசை கல்லை எடுத்தேன், எண்ணையை கொஞ்சமாக ஊற்றினேன், சரியா வந்துடுச்சு!

ஆப்ரேஷன் 'தோசை' வெற்றிகரமாக முடிந்ததால் மறுநாள் மதிய சாப்பாட்டையே தயாரிக்க முற்பட்டாள் இந்த சூறாவளி. 'sambal chicken sanjay', 'keerai kanchana' and 'fish cutlet gupta'. சிவப்பு மிளகாயை போட்டு செய்த கோழி, கீரை மற்றும் மீன் கட்லெட். சாதாரண உணவு தான்...இருந்தாலும் நம்ம என்ன செஞ்சாலும் அதில் ஒரு வித்தியாசம் வேண்டும், ஒரு பில்டப் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆக தான் ஒவ்வொரு பெயருக்கு பின்னால் ஒரு நார்த் இந்தியன் பெயர். கேட்டா, நான் செஞ்சது வட இந்திய சமையல்ன்னு சொல்லி பீலா விடதான்.

ரெண்டு நண்பர்களை சாப்பிட கூப்பிட்டேன். அவர்கள் தங்களது குலதெய்வங்களை நன்கு வேண்டிகொண்டு தான் வீட்டிற்கு வந்தார்கள். சாப்பிட்டார்கள். நல்லா இருக்குன்னு சொன்னாங்க! (அப்படி தான் சொல்லியாகனும் பாருங்க) நானும் சாப்பிட்டு பார்த்தேன். 'இப்படி ஒரு சூப்பரான சமையலை சாப்பிட்டதே இல்லை' என்று மனதார என்னையே நான் பாராட்டி கொண்டேன். காக்கையும் தன் குஞ்சும் பொன் குஞ்சும். எனக்கும் என் சமையல் சூப்பர் சமையலே!!

Dec 4, 2009

ஜஸ்ட் சும்மா (5/12/09)

குர்பான் படம் பார்த்தேன். பிடித்து இருந்தது (கரண் ஜோகர் எழுதிய கதை என்பதால் இருக்கலாம்... ஹிஹி) ஏன் என்றால் மற்ற விமர்சனங்கள் அவ்வளவாக சாதகமாக இல்லை. எந்த படமும் ஜாலியான படம் தான் - ஜாலியான நண்பர்களுடன் பார்த்தால்! அடுத்து 'பா' என்னும் ஹிந்தி படத்தை பார்க்கவுள்ளேன். அமிதாப் பச்சன் வயதிற்கு இப்படி ஒரு படம் பண்ணுவது என்பது ரொம்ம்ம்ம்ப ஆச்சிரியமான விஷயம். அவர் ஒரு வியாதியால் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்... (13 வயது பிள்ளையாய்). நம்மூர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இந்த மாதிரி படங்களை நடிக்க சொல்லுங்களேன், யாராவது ப்ளீஸ்!!
--------------------------------------------------------------------------------------------

டாடி மம்மி வீட்டில் இல்லை- முன்பு எழுதிய கதை. அதன் பார்ட் 2 - தடைபோட யாருமில்லை. தொடர்ந்து என் வலைப்பூவை படிப்பவர்களுக்கு இக்கதை ஞாபகம் இருக்கலாம். பார்ட் 3 வரும் என்று சொல்லியிருந்தேன். பார்ட் 3 கதையை அடுத்து எழுதலாம் என்று இருக்கிறேன். ஹிஹிஹி.... (வேற எந்த கதையும் கற்பனைக்கு வரமாட்டேங்குது)

-------------------------------------------------------------------------------------------

பையா பட பாடல்களை கேட்டேன். யுவன் பாடிய பாடல் அருமை!!
-------------------------------------------------------------------------------------------

என்னபா இது...நம்ம golf player tiger woods கள்ள காதல் விவகாரம் இப்படி நாறுது! அட அந்த ஆள் மீது ரொம்ம்ம்ம்ம்ம்ப மரியாதை வச்சு இருந்தேனே! ச்சே.... இப்படி போச்சே. அட மனுஷன் தப்பு செய்றான், தடயம் இல்லாமல் செஞ்சு இருக்ககூடாதா! ஹிஹிஹி.... என் policy ரொம்ப simple: தப்பி தவறிகூட தப்பு செய்யாதே, அப்படி மீறி தப்பு செய்தால், தடயம் இருக்குமாறு செய்யாதே.
----------------------------------------------------------------------------------------

என் வலைப்பூவில் இப்போ 112 followers!!ஆஹா...இன்னுமா நம்மள இந்த உலகம் நம்புது! இருந்தாலும் அனைவருக்கும் என் நன்றி:)

Nov 29, 2009

தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்-9

தேர்வு முடிஞ்சாச்சு.. படம் பார்ப்பது, இசை நிகழ்ச்சிகளுக்கு போவது, புத்தகம் படிப்பது என்று ஆக்கபூர்வமான செயல்களில்(சைட் அடிப்பது உள்பட) நான் ஈடுபட்டு கொண்டு வருகிறேன். சிங்கையில் 'கலா உத்சவம் 2009' என்ற நிகழ்ச்சியில் டில்லியில் இருந்து 'அட்வைத்தா' என்னும் இசை குழு 45 நிமிடம் நிகழ்ச்சி நடத்தினார்கள். http://www.advaitaonline.net/aboutus.html

இதில் 7 பசங்க... அழகான பசங்க.....அதில் ரெண்டு பேரை தான் நான்...ம்ம்... அதே தாங்க!!

suhail yusuf khan- 'sarangi' என்னும் இசை கருவியை மீட்டும் விதம்...ஆஹா...simply divine! ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப impress ஆயிட்டேன்:)

chayan adhikari- இந்த குழுவின் பாடகர் மட்டும் கிடார் வாசிப்பவர். பாடல்வரிகளும் இவர் தான் எழுதுகிறார். அவர் அப்படியே தன்னை மறந்து கண்களை மூடி பாடினார் பாருங்க...... சான்ஸே இல்லங்க.

இவர்களது இசை வட்டிலிருந்து ஒரு பாடல். இந்த பாடலை கிட்டதட்ட 100 முறை கேட்டு இருப்பேன்.:) ஹிஹிஹி....

Nov 18, 2009

பிடித்த பிடிக்காத 10 விஷயங்கள்

எனக்கு பிடித்த பிடிக்காத 10 விஷயங்கள்.
இந்த தொடர் பதிவினை எழுத சொல்லி புறா அனுப்பாத குறையாக தகவல் சொல்லிய கார்த்திக் தம்பிக்கு நன்றி.

உணவு
பிடிக்கும்: கோழி பிரியாணி
பிடிக்காது: கத்திரிக்காய்

டீவி சேனல்
பிடிக்கும்:travel & living (பல நாட்டு கலாச்சாரத்தை பற்றி காட்டுவார்கள்)
பிடிக்காது: கார்ட்டூன்ஸ் (ஐயோ சின்ன வயசுலேந்தே பிடிக்கவே பிடிக்காது!!)

இயக்குனர்
பிடிக்கும்: ஹிந்தியில் கரண் ஜோகர், தமிழில் கௌதம் மேனன், வெங்கட் பிரபு
பிடிக்காது: கே ஸ் ரவிக்குமார்

நடிகை:
பிடிக்கும்: ஹிந்தியில் வித்யா பாலன், தமிழில் என்றென்றும் எங்கள் தலைவி சிம்ரன்
பிடிக்காது: ஜெனிலியா (ரொம்ப கியூட் அப்படின்னு நினைப்பு..)

குணம்
பிடிக்கும்: சிரிப்பாக பேசும் தன்மை
பிடிக்காது: பெண்களை அடிமைகளாய் நினைக்கும் குணம் உடையவர்கள்

குளிர் பானம்
பிடிக்கும்: lemon juice
பிடிக்காது: பெப்சி

நாள்
பிடிக்கும்: லீவு நாட்கள்
பிடிக்காது: தேர்வு நாட்கள்

இடம்
பிடிக்கும்: என் அறை. உலகத்திலுள்ள எட்டாவது அதிசயம் இதுவே! ஹிஹி.
பிடிக்காது: road signs இல்லாத சாலைகள்

கார்
பிடிக்கும்: bmw
பிடிக்காது: சின்ன வாகனமா இருந்தால் பிடிக்காது

இணையதளம்
பிடிக்கும்: youtube, blogger, tamilmanam
பிடிக்காது: என் காலேஜ் இணையதளம்.

இதை தொடர அழைக்கின்றேன் இவர்களை,
கோபி அண்ணா, வினையூக்கி, சிம்பா, விக்கேனஷ்வரி அக்கா, ரீனா அக்கா

(நீங்கள் ஏற்கனவே எழுதியிருந்தால், ம்ம்...என்ன பண்ணலாம்... மறுபடியும் எழுதுங்க..ஹிஹி..)

Nov 17, 2009

2012- படமா இது?

நேற்று 2012 படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. பரிட்சை இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு. அதுக்குள்ள படமா? அப்படின்னு சில பேர் நினைக்கலாம். பொறுங்க பொறுங்க மேட்டருக்கு வரேன். டிக்கெட் இலவசமா கிடைச்சா போகாம இருப்பீங்களா? அமிராமி மாலில் இருக்கும் 350 ரூபாய் டிக்கெட் வாங்கி படுத்துகிட்டே படம் பார்க்கலாமே, அந்த மாதிரி இங்கயும் படுத்துகிட்டே படம் பார்க்கும் தியேட்டர் இருக்கு.

அக்கா ஒரு ஃபோட்டோ எடுக்கும் போட்டியில் கலந்து கொண்டு இரண்டு சினிமா டிக்கெட்டுகளை ஜெயிச்சாங்க. அந்த டிக்கெட்டுகளை வச்சு தான் படம் பார்க்க போனோம். ஒரு டிக்கெட் விலை (S$36. ரூபாய்க்கு கணக்கு பண்ணால்...ம்ம்ம்..abt Rs 800) இப்படி ஒரு அருமையான வாய்ப்பை நழுவுவிடுவோமா??

சரி படத்துக்கு வருவோம். "படமா இது? இல்ல நான் கேட்குறேன்...படமா இது" அப்படின்னு என்னைய புலம்ப வச்ச எத்தனையோ படம் இருக்க...இந்த படம் என்னைய பிரமிக்க வைத்துவிட்டது. "இது படம் இல்லைய்யா...பாடம். a threatening wake up call."

படம் ஆரம்பம் முதல் கடைசி வரை படத்திலேயே ஐக்கியம் ஆயிட்டேன். (இன்னும் மீள முடியாது நிலைமையில் தான் இருக்கேன்). படத்துல தண்ணியை தண்ணி மாதிரி செலவு பண்ணியிருக்கானே...அப்போ காச எந்த மாதிரி செலவு பண்ணியிருப்பான். கிராபிக்ஸில் புகுந்து விளையாடி இருக்காங்க. ஒன்னும் சொல்றதுக்கு இல்ல. இந்த உலகமே பாக்க வேண்டிய படம். படத்துல பிடிச்ச வசனம் "the moment we stop fighting for each other, that's the moment we ruined humanity."

கடைசி வரைக்கும் போராடி பாக்கோனும். உலகம் உண்மையாகவே 2012 அழிய போகுதா? என்ற கேள்விக்கு நம்மை இப்பவே தயார் நிலையில் இருக்க சொல்லுது படம். பல காட்சிகள் நம்மை சீட் நுனிக்கு இழுத்து செல்லும். ' life is fair yet it is cruel.' என்பதை அழகாய் ஒரே ஒரு காட்சியில் காட்டியிருப்பார்கள். ரஷிய விமானத்தை ஓட்டி செல்பவன் மற்றவர்களை தப்பிக்க சொல்லிவிடுவான். காரணம் விமானத்தில் உள்ள எஞ்ஜீன் கெட்டுபோய்விடும். மற்றவர்கள் தப்பித்து விடுவார்கள். இவன் விமானத்தை கஷ்டப்பட்டு நிறுத்துவான். மலை உச்சியில் நின்றுவிடும். யப்பாடா என்று பெருமூச்சு விடும் நேரத்தில், விமானம் balance செய்ய முடியாமல் கீழே விழுந்து நொறுங்கிவிடும்.

அப்போ படத்துல குறையே இல்லையா என்று நினைக்கலாம். இருக்கு இருக்கு.... அமெரிக்கா ஜனாதிபதியை ரெம்ம்ம்ம்ம்ப நல்லவராய் காட்டிய விதம் எனக்கு கொஞ்சம் சிரிப்பா இருந்தது. ஹீரோவின் குடும்பம் மட்டும் எல்லாவற்றையும் கடந்து தப்பித்து போகும் விதம். இவ்வாறு, கூர்ந்து பார்த்தால் லாஜிக் இடிக்கும். இருந்தாலும், படத்தின் பிரமாண்டத்தில் இவையெல்லாம் தூசியாய் போய்விட்டது.

மனதில் எழுந்த வியப்பு: அப்படி உலகம் அழிந்தால், பணக்காரன் spaceshipல் ஏறி தப்பித்து விடுவான், அப்போ ஏழைகள்?

சீனாவில் உள்ளவர்களுக்கு மூளை எப்படிய்யா வேலை செய்யுது?

ஆக மொத்தத்தில் படம் சூப்பர்!! கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.

Nov 9, 2009

ஜஸ்ட் சும்மா(9/11/09)

பரிட்சை இன்னும் 15 நாட்களில் ஆரம்பிக்க போகுது. வகுப்பில் கிளாஸ் பரிட்சை ஒன்னு வச்சாங்க. அதுல..ம்ம்... 5 மார்க் மேல வந்தாவே பெரிய விஷயம்னு நினைக்குறேன். கேள்வியை பார்த்து படிச்சு புரிஞ்சுக்கவே மயக்கம் வந்துட்டு!

"மனிதன் புரிந்து கொள்ள இது மனித பரிட்சை அல்ல. அதையும் தாண்டி கொடூரமானது!" - சங்கம் வைக்கும் அளவுக்கு வசதியில்லாத சங்கம்.

போட்டு அடிச்சு ஏதாச்சு பண்ணி, படிக்கவேண்டிய சூழ்நிலை வந்திருக்கு. பார்ப்போம்.
_----------------------------------------------------------------------------------------

சமீபத்தில் 'கண்டேன் காதலை' படத்தை பார்த்தேன். அரை மணி நேரத்துக்கு மேல பாக்க முடியல படத்த. பரத் பேசாம வேற வேலைக்கு போகலாம். யோவ், ஹிந்தி படத்த காபி அடிக்குறீங்க....அத இந்த அளவுக்கா காபி அடிப்பீங்க!! ஐயோ ஐயோ...
-----------------------------------------------------------------------------------------

சித்து ப்ளஸ் டூ படப்பாடல் வெளியாகிவிட்டன. பாக்யராஜ் இயக்கத்தில் அவர் மகன் நடிக்கும் (நடிச்சு இருக்காரான்னு தெரியல...) படம். இசை தரண். பூவே பூவே பாடல் செம்ம பாட்டுய்யா! இந்த பாட்டு மட்டும் தான் நல்லா வந்துருக்கு. சூப்பர் பாடல்! கேட்டு பாருங்க. யூவன், சின்மயி பாடியிருக்காங்க.
-----------------------------------------------------------------------------------------

ஓபாமா சிங்கைக்கு வருகை தந்து இருந்தார்.பார்க்க தான் வாய்ப்பு கிடைக்கல. இல்லை என்றால் எங்க வீட்டு தீபாவளி முறுக்கு இரண்டு கொடுத்து விட்டுருக்கலாம் அமெரிக்காவுக்கு, அப்பரம்..மிஷேல் அண்ணி சாப்பிட வேண்டாமா? ஹிஹிஹி.......
-----------------------------------------------------------------------------------------

Nov 6, 2009

கல்கி சஞ்சிகைல நம்ம பெயரு வந்து இருக்குப்பா!


நேத்திக்கு சகபதிவர் ஒருத்தர், கார்த்திகா ரஞ்சன்கிட்ட (http://www.neyamukil.blogspot.com) பேசிகிட்டு இருந்தேன். என்னோட வலைப்பூ பக்கத்த பத்தி கல்கில எழுதியிருக்கேன்னு சொன்னாங்க. ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப சந்தோஷமா இருந்துச்சு. அவங்க எனக்கு அந்த செய்தியை ஸ்கேன் செய்து அனுப்பவதாக சொன்னாங்க. கோபி அண்ணாகிட்ட இந்த விஷயத்த பத்தி சொன்னேன். உடனே அனுப்பிவச்சார் ஸ்கேன் செய்து. நன்றி அண்ணா.

இதற்கிடையில், நானும் நம்ம கண்ணால அந்த புத்தகத்துல என்ன எழுதியிருக்குன்னு படிக்கலாம்னு வாங்கி பார்த்தேன். நானும் சென்று வாங்கினேன். முதலில் எந்த பக்கத்தில் வந்து இருக்குதுன்னு தெரியாம புரட்டி புரட்டி பார்த்தேன். அப்பரம் அகப்பட்டு விட்டது பக்கம்.
அப்பரம் என்ன "எல்லாம் புகழும் ஒருவன் ஒருவனுக்கு...." பாட்டு அந்த கடையில நிக்குற எல்லாருமே என்னைய பாத்து பாடுற மாதிரி ஃவீலிங். ஹிஹி.....

என் வலைப்பதிவின் பெயர். சமீபத்தில் எழுதிய அடிக்கடி செய்து அடித்து கொண்டிருப்பவரின் பட்டியல் என்னும் பதிவை போட்டு இருந்தார்கள். சின்ன செய்தியாக இருந்தாலும், எனக்கு இது மிகப்பெரிய சாதனை. சொல்ல வார்த்தை இல்லை. கார்த்திகா அக்காவுக்கு மறுபடியும் நன்றி!!!

Oct 21, 2009

நான் ரொம்ம்ம்ப பிஸி

ஒரு காலத்துல தினமும் 2 பதிவுகள் போட்டு கொண்டிருந்தேன். இப்ப பத்து நாளைக்கு ஒரு தடவ, ஒரு மாசத்துக்கு ஒரு தடவன்னு நிலைமை மாறிபோச்சு. காலேஜ் என்னை வாட்டி எடுக்குது! முடியல சாமி! இருந்தாலும் இத இப்பவே எஞ்ஜாய் பண்ணனும். வேலைக்கு போனா.... அதுக்கு அப்பரம் எதுவுமே பண்ண முடியாது! :)

என்ன எழுதுறது...ஒரு ஐடியாவும் வரமாட்டேங்குது. முன்பெல்லாம் எத பாத்தாலும் 'இத பத்தி ப்ளாக்ல எழுதனும்'னு தோணும். இப்ப என் சொந்த வலைப்பூவ பாத்தாகூட ஒரு மண்ணும் மண்டைக்கு வர மாட்டேங்குது. வயசாச்சுலே. அப்படி என்ன வயசுனு கேட்குறீங்களா? இப்ப தான் எல்கேஜி முடிஞ்சு யூ கே ஜி போறேன்.

இன்னும் 2 வாரத்துல இந்த காலேஜ் செம்ஸ்ட்டர் முடிஞ்சு விடும். அதுக்கு அப்பரம் இந்த 'வேட்டைக்காரி' முழு வீச்சில் வருவாள்! அது வரைக்கும் கொஞ்ச மந்தமாதா இருக்கும்னு வானிலை ஆய்வுகள் சொல்லுது!ஹிஹிஹி....

Oct 9, 2009

தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்-8

தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்- curtis stone and gerard butler

curtis stone. இப்போது இவர் hallmark channelலில் take home chef எனும் நிகழ்ச்சியை நடத்திவருகிறார். சூப்ப்ப்ப்ப்ரா சமையல் செய்வார்.ஆஸ்திரேலியாவில் பிறந்தவர். பிடித்த அம்சம்- பேசும் விதம் + சிரிப்பு

அடுத்தது ஹாலிவுட் நடிகர் gerard butler. ps i love you, the ugly truth போன்ற படங்களில் நடித்துள்ளார். தாடி வைத்திருக்கும்போது அநியாயத்திற்கு அழகாய் தெரிவார்! பிடித்த அம்சம்- கண்கள்(ஹிஹி...)


முந்தைய பட்டியல்

Oct 7, 2009

wake up sid- இன்னும் தூங்குகிறான்

கரண் ஜோஹர் தயாரிப்பில் அயன் முகர்ஜி (புதிய இயக்குனர், 25 வயசு தான்) இயக்கிய 'wake up sid' என்னும் இந்தி படத்தை பார்த்தேன். மற்ற விமர்சனங்களை படித்து ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப எதிர்பார்த்தேன். ஆனால் ஓரளவுக்கு தான் என்னை மகிழ்வித்தது.

நமது டைரியை படிப்பதுபோல் ஒரு உணர்வு கண்டிப்பா வரும் படத்தை பார்த்தால். பாடல்கள் சுமார் ரகம். 'இக்குதாரா' என்னும் பாடல் எனக்கு பிடித்து இருந்தது. திரைக்கதை கொஞ்சம் மெதுவாகவே செல்வது கொஞ்சம் போர் அடித்தது. இந்த மாதிரி படங்களில் நகைச்சுவை வசனங்கள் பட்டையை கிளப்பியிருக்க வேண்டும். ஆனால், இப்படத்தில் அது அதிகமாய் இல்லை.

படத்தில் எனக்கு பிடித்தவை
1) ஹீரோயின் கொன்கோனா ஷர்மா. அவங்கள எனக்கு ரொம்ம்ம்ம்ப பிடிக்கும். இப்படத்தில் தனது வேலையை நன்றாகவே செய்து இருக்கிறார்.
2) கல்லூரி பரிட்சையில் கோட்டைவிட்டு வீடு திரும்பும் மகனிடம் அப்பா கத்துவது( ஏதோ எப்பவோ என் வாழ்க்கையில நடந்து சம்பவம் மாதிரியே இருந்துச்சு...ஹிஹிஹி)
3) மும்பை நகரத்தை வாழ்க்கையில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என தூண்டிய விதம்.

திரைக்கதையில் வேகம், காட்சிகளில் ஆழம், பாடல்களில் இன்னும் விறுவிறுப்பை சேர்த்து இருந்தால் நல்லா இருந்திருக்கும். என்றாலும், கரண் ஜோஹர்க்காகவே தான் இப்படத்தை பார்த்தேன். பைசா வசூல் என கேள்விப்பட்டேன். எனக்கு மகிழ்ச்சியே.

wake up sid- என் வீட்டு அலாரத்திற்கு பிடிக்கவில்லை!

Oct 2, 2009

ஜஸ்ட் சும்மா(2/10/09)

இந்த வாரம் லீவு. ஆக, நிறைய படங்கள் பார்க்க வாய்ப்பு இருந்தது. the ugly truth, whatever works, he's just not that int you, PS. i love you ஆகிய படங்களை பார்த்தேன். முதல் இரண்டும் தற்போது ஓடிகொண்டிருக்கும் படங்கள். மற்றவற்றை டிவிடியில் பார்த்தேன். இதில் ரொம்ப பிடித்த படம் the ugly truth. ரொம்ப சிரிப்பா இருந்துச்சு!!
பார்த்த அனைத்துமே காமெடி கலந்த காதல் கதைகள் தான்!

the ugly truth மற்றும் PS i love you படங்களில் நடித்த gerard butlerயை ரொம்ம்ம்ம்ம்ம்ப பிடிச்சு போச்சு!!!! ஹிஹி....

------------------------------------------------------------------------------------------

ஜக்குபாய் மற்றும் வேட்டைக்காரன் பாடல்களை கேட்டேன்.

வேட்டைக்காரன்: விஜய் ப்ளஸ் விஜய் ஆண்டனி....கேட்கவா வேண்டும்! ஆட்டம் போட வைக்கும் பாடல்கள். அதிரடியான வரிகள். என் அக்கா பாடலை கேட்டுவிட்டு சிரிச்சா(அவள் ஒரு அஜித் ரசிகை).... என்கிட்ட வந்து, " நான் அடிச்சா தாங்க மாட்டே...." பாடலை கேட்க சொன்னாள். அப்போது தான் முதன் முதலாக பாடலை கேட்டேன். எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. இப்பாடல் காட்சியில் விஜயின் மகன் ஆட போகிறான் என்ற தகவல் கொஞ்ச நாளைக்கு முன்னாடி வந்துச்சு!

புலி உறும்புது பாடலில் ஒரு வரி வரும், "இவன் வரலாற்றை மாற்ற போகும் வருங்காலம் டா"

ம்ம்ம்.....ரொம்ப நல்லா இருந்துச்சு. (என்னைய மாதிரி தீவிரமான ரசிகர்கள் இருக்கும்வரை விஜய் என்ன தான் மொக்கை படங்களை கொடுத்தாலும் டாப்ல தான் இருப்பார்.... உடல் மண்ணுக்கு உயிர் விஜய்க்கு!- அகில உலக விஜய் ரசிகர் மன்றம்)

அடுத்து, ஜக்குபாய் பாடல்கள். இசை அமைத்தவர் எங்க ஊரு ஆளுங்க. சிங்கப்பூரை சேர்ந்தவர்! இத சொல்லும்போதே எனக்கு அம்புட்டு பெருமையா இருக்கு!!! பெயர் ரஃபி. ஏ ஆர் ரகுமானிடம் 10 வருஷமா assistantஆ வேலை பார்த்தவர். ரொம்ப அமைதியான ஒரு நபர் ரஃபி. இங்க நிறைய டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார். அவருடைய 4 தம்பிகளும் இசையில் ஆர்வம் உடையவர்களும்கூட.

முதல் படம் இது அவருக்கு. பெரிய ஹிட் பாடல்கள் இல்லை என்றாலும், ஆப்பிள் லெப்டாப் என்னும் பாடல் கொஞ்ச நல்லா இருக்கு!! கேட்டு பாருங்க.
-----------------------------------------------------------------------------------

oprah winfrey நிகழ்ச்சியில் அபிஷேக் பச்சனும் ஜஸும் கலந்து கொண்டனர். ஹாஹா....ரொம்ப வயதான தம்பதியினர் மாதிரி தெரியுறாங்க....ஹிஹி...நிகழ்ச்சியை பார்க்க இங்க செல்லவும்

http://www.youtube.com/watch?v=_lzu4wYU7Cc&feature=related

Oct 1, 2009

அன்பே, உன்னால் மனம் crazy-4

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் வரை இருவருமே பேசிகொள்ளவில்லை. உள்ளூர இருந்த துயரத்தை இருவருமே காட்டிகொள்ளவில்லை. பயம், வருத்தம், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தனர் இருவரும். வரும் வழியில் விஷ்ணுவிற்கு அடிக்கடி ஆபிஸிருந்து ஃபோன் வந்து கொண்டிருந்தது.

"விஷ்ணு, நம்ம ஹேட் ஆபிஸ் வரைக்கும் போகனும். டில்லிக்கு இன்னிக்கே ப்ளைட் புக் பண்ணவா? சாரி...உங்க வீக்கெண்ட spoil பண்ணிட்டேனா? சாரி...ஆனா இது கொஞ்சம் அவசரம். இந்த வேலைய முடிச்சுட்டு நீங்க இன்னும் நாலு நாளு extra லீவு எடுத்துக்குங்க...பட் இன்னிக்க மட்டும்...கொஞ்சம்....." மறுமுனையில் இருந்த மேனேஜர் வற்புறத்தினார்.

கவலையில் மூழ்கி கிடந்த விஷ்ணு அமைதியாய், "சாரி சார். என்னால போக முடியாது. வேற யாராச்சயும் பாத்துக்குங்க." சொல்லிவிட்டு ஃபோனை வைத்துவிட்டார். அதை கவனித்தாள் தனுஜா. சிறிது நேரம் கழித்து, அதே ஆபிஸர் அதே வேண்டுகோளுடன். ஆனால், எதற்கும் இணங்கவில்லை விஷ்ணு.

இந்த நேரத்தில் தனுஜாவை விட்டு போக அவனுக்கு மனம் வரவில்லை. எப்போதும் கலகலப்பாக இருக்கும் வீடு அன்று சோகபூமியாய் காட்சியளித்தது. தனுஜா படுக்கையில் படுத்து இருந்தாள். அவள் தேம்பி தேம்பி அழுதாள். விஷ்ணு என்ன செய்வது என்று தெரியாமல் சோபாவில் உட்கார்ந்து இருந்தான். மதிய வேளை ஆனது. மதிய உணவை தயாரிக்கும் மனநிலையில் யாரும் இல்லை.

கொஞ்ச நேரம் கழித்து விஷ்ணு தனுஜாவை பார்க்க சென்றான். அவள் அழுவதை கண்ட விஷ்ணு அவளது கன்னங்களில் வழிந்த கண்ணீரை துடைத்தவாறு, "அழாத மா."

எழுந்து உட்கார்ந்த தனுஜா அவன் தோள்மீது சாய்ந்து கொண்டாள்.

"நீ எவ்வளவு ஆசையா இருந்த...ஐ எம் சாரி விஷ்ணு...." அவளால் அழுகையை நிறுத்த முடியவில்லை.

"நீ எதுக்குடா சாரிலாம் சொல்ற....இது யாருடைய தப்பும் கிடையாது. it meant to happen and it has happened. that's all. no one is to be blamed. ஆனா, நீ இப்படி இருக்குறது தான் எனக்கு ரொம்ப கவலையா இருக்கு. cheer up da....please...." என்று அவன் ஆறுதல் சொன்னாலும் அவன் குரலில் தெரிந்தது சோகம்.

மறுபடியும் ஃபோன் வந்தது விஷ்ணுவிற்கு. அப்போது அதை எடுத்து பேச முற்பட்ட விஷ்ணுவின் கைகளிலிருந்து தனுஜா ஃபோனை வாங்கி கொண்டாள். அவள் பேசினாள்,

"சொல்லுங்க சார்...ம்ம்ம்...சரி. no problem sir. he will be there in one hour. thanks."

"தனு, நான் போகலடா....உன்னைய இந்த நிலைமைல....no i don't want to go."

"listen vishnu, i'll be fine soon. நீ கவலை படாம போயிட்டு வா. பாவம்...ரொம்ப முக்கியமான வேலைன்னு சொல்றாருல.....நீ போ....i will be alright soon." கண்ணீர் துளிகளை துடைத்து கொண்டு புன்னகையித்தாள்.

"are you sure?"

ஆம் என்று தலையாட்டினாள். அவனுடைய பெட்டியை தயார் செய்தாள். வாசல் கதவு அருகே நின்று வழியனுப்பி வைத்த தனுஜாவின் நெற்றியில் ஆறுதல் முத்தம் ஒன்று கொடுத்தான் விஷ்ணு.

அரை மணி நேரம் கழித்து வாசல் மணி ஒலித்தது. தனுஜா கதவை திறந்தாள். ஆச்சிரியம்! அங்கே விஷ்ணு. முதன் முதலாக அவனது கண்கள் கலங்கி இருப்பதை கண்டாள். கலங்கிய கண்களுடன் விஷ்ணு, "உன்னைய விட்டு போக முடியலடா" என்று ஓடி வந்து கட்டிபிடித்தான் தனுஜாவை.

*******************************

"we'll be right back after a short commerical break." oprah winfrey சொன்னதை கேட்டு சுயநினைவுக்கு வந்தாள் தனுஜா. அச்சம்பவம் நடந்து ஓராண்டு ஆனதை நினைவு கூர்ந்தாள். அவர்களது நட்பு ஆரம்பித்த விதம், காதல் மலர்ந்த தருணம், கல்யாணம், அவனது சிரிப்பு, அவன் பொழிந்த பாசம், அன்பு. சண்டை போட்டு கொள்ளும் நேரங்களில்கூட அது சண்டையாக முடியாமல் ஏதேனும் காமெடியாகி பேசி முற்றுபுள்ளி வைக்கும் அவனது சாமர்த்தியம் என்று பலவற்றை எண்ணினாள். அவனை ரொம்ப 'மிஸ்' பண்ணுவதாக உணர்ந்தாள்.

திடீரென்று ஒரு சத்தம் அறையிலிருந்து. ஓடி சென்று பார்த்தாள். பொருட்கள் கீழே விழுந்துகிடக்க, அதன் அடியில் விஷ்ணு கிடப்பதை பார்த்து குபீர் என்று சிரித்தாள் தனுஜா.

"அடி பாவி, ஒருத்தன் இங்க விழுந்துகிடக்குறது உனக்கு காமெடியா இருக்கா...." என்றான் விஷ்ணு. பொருட்களை எடுத்து அதன் இடத்தில் வைத்தவாறு தனுஜா,

"நான் தான் சொன்னேன்ல.....ஐயாவுக்கு இந்த மாதிரி வேலையெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு."

"அது என்னமோ உண்மை தான் தனு. பாதி வேலை கூட முடியல. நீங்க பொண்ணுங்க எப்படி தான் எல்லாத்தையும் சரியா செய்றீங்களோ....உங்களுக்கு எல்லாம் தனித்தனியா சிலை வைக்கனும்!"

"இந்த ஐஸ் வச்சது போதும்....." சிரித்தாள் தனுஜா.

"i give up babe. இந்த challengeல நீ தான் ஜெயிச்ச...." விஷ்ணு சொல்ல அதற்கு தனுஜா,

"இல்ல டா...நீ தான் வின்னர்."

அவள் நினைவுகூர்ந்தவற்றை அவனிடம் சொன்னாள். இருவரும் பழைய நினைவுகளை பற்றி பேசி மகிழ்ந்தனர்.

"i think i really miss you." என்றாள்.

"ஹாஹா....thank god. finally you agreed!"

"so........." என்று இழுத்தாள் அவள். அவன் உதடுகள் அருகே சென்றது அவள் உதடுகள்.

"how about the report that you need to send?" என்றான் அவன்.

"all programs cancelled!" என்றாள்.

"you mean there is going to be something something today....."அவன் சிரித்தான்.

"not today....right now!" என்றவளின் உதடுகள் அவனது உதடுகளோடு lock ஆனது. அவ்வாறே அறை கதவும் lock ஆனது.

*PLEASE DO NOT DISTURB THEM*

***முற்றும்***

Sep 27, 2009

அன்பே, உன்னால் மனம் crazy-3

தனுஜாவை வெளியே கூட்டிகொண்டு போக விஷ்ணுவிற்கு ஆசை இருந்தாலும், உள்ளூர ஒரு பயம். ஃபோனில் மட்டுமே பேசி இருக்கிறார்கள். அவ்வபோது பண்டிகை நாட்களில் வாழ்த்து குறுந்தகவல்கள். முதன் முறை சந்திக்க போகும் தருணத்தை எண்ணி விஷ்ணுவிற்கு மகிழ்ச்சி. இருந்தாலும், அவள் அதை எப்படி எடுத்து கொள்வாள் என்று தெரியவில்லை. தனக்கு வேலை கிடைத்துவிட்டது என்னும் தகவலை அவளிடம் நேரில் சொல்ல வேண்டும் என்ற ஆசை.

குறுந்தகவல் அனுப்பினான். குறுந்தகவல் என்னும் ஒன்றை கண்டுபிடித்தவனுக்கு சிலை வைப்பான் விஷ்ணு. அது மட்டும் உறுதி!

விஷ்ணு: ஹாய் தனுஜா, என்ன பண்ற?

தனுஜா: எருமைமாட்டுலேந்து பால் எடுத்துகிட்டு இருக்கேன். பின்ன என்ன மேன்.... project work விஷயமா தலைய பிச்சுகிட்டு இருக்கேன். என்ன இந்த நேரத்துல மெசேஜ்? anything important....

விஷ்ணு:ஹாஹா....ஒன்னுமில்ல சும்மா தான்.வெளியே போகலாமா?

குறுந்தகவலை பார்த்தவுடனே ஃபோன் செய்தாள் தனுஜா.

தனுஜா, "ஹாலோ விஷ்ணு, என்ன சாருக்கு திடீரென்னு என்னைய பாக்கனும்னு தோணுது?" சிரித்தாள்.

விஷ்ணு, "ரொம்ப நாள் பேசிகிட்டு இருக்கோம்.... நேரடியா பாத்துகிட்டா நல்லா இருக்குமேனு தான்..." இழுத்தான்.

"என்ன நல்லா இருக்குமேன்னு...." அவன் இழுத்ததுபோல் இவளும் பாவனை செய்து விஷ்ணுவை கிண்டல் செய்தாள்.

"சரி உனக்கு பிடிக்கலைன்னா, விட்டுடு!" சற்று கோபம் வந்தது விஷ்ணுவிற்கு.

"ஓய் ஓய்....எதுக்கு உனக்கு இப்படி கோபம் வருது. சரி போவோம். எங்க? எப்போ?" என்றாள் தனுஜா.

அவள் ஓகே சொன்னதுமே இளையராஜாவின் RR சவுண்டுகள் அவன் மனதில் அலைபாய்ந்தன.

"how about movie? நாளைக்கு?" கேட்டான் விஷ்ணு.

"முதன் முதலா பாத்துக்கு போறோம்....யாராச்சு படத்துக்கு போவாங்களா? நாளைக்கு i am not free." தனுஜா சொன்னாள்.

"நான் தான் உன்னைய முன்னாடியே பாத்து இருக்கேனே?" அன்று பார்த்ததை தனுஜாவிற்கு ஏற்கனவே சொல்லியிருந்தான்.

"நீ பாத்து இருக்க....நான் உன்னைய பார்த்ததுகிடையாதே? சரி சரி....வரேன்... அங்க யாரு கேன பய மாதிரி இருக்காங்களோ....அது நீயா தான் இருப்பே.... அடுத்த வாரம் திங்கட்கிழம போலாம்" சிரித்தாள் தனுஜா.

"ஐயாவோட smartness நீ பாத்து அசந்துபோயிட போற... அடுத்த வாரமா? இந்த வாரம் வெள்ளிக்கிழம??" என்றான்.

"ஆமா ஆமா....ambulanceலாம் standbyல இருக்க சொல்லிடுறேன்....அழகுல பாத்து மயங்கி விழுந்துட்டேனா? எனக்கு இந்த வாரம் நிறைய வேலை இருக்கு."

"ஷ்ஷ்... சனிக்கிழம?...." என்றான் விஷ்ணு.

"ஃபிரண்ட் அக்காவோட கல்யாணம்?" என்றாள் தனுஜா.

"என்ன எப்ப பாத்தாலும் அது இருக்கு இது இருக்குனு சொல்ற. எங்க ஏரியா எம் பிய பாக்ககூட சீக்கிரம் appointment வாங்கிடலாம் போல...." என்றான்.

"நாங்கலாம் அடுத்த 6 மாசத்துக்கு ஒரே பிஸி. ஏதோ சின்ன பையன் கேட்குறானேன்னு வரேன்....வேட் பண்ண முடியலன்னா.... no problem! i am fine with it." சற்று பிகு பண்ணினாள். ஆனால், அது அவனுக்கு பிடித்து இருந்தது.

"alrite alrite, அடுத்த வாரமே பாப்போம்." என்றவன் நேரம், இடம் போன்ற தகவல்களை கொடுத்தான் அவளிடம்.

அந்த நாளும் வந்தது. குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் காத்துகொண்டிருந்தான் விஷ்ணு. சின்ன பயம், ஒருவித சந்தோஷம்.
தனுஜாவை கண்டுகொண்டான், கையாட்டினான். அவனை நோக்கி அவள் நடந்து வந்தாள்.

இருவரும் புன்னகைகளை பரிமாறிகொண்டனர்.

"ஹாய்." இருவரும் சொன்ன முதல் வார்த்தை. ஃபோனில் அரட்டையும், கிண்டலுமாக இருந்தாலும், நேரில் சந்தித்த போது இருவரும் சற்று அமைதியாக இருந்தனர்.

"என்ன தனுஜா ஃபோன்ல செமயா கிண்டல் அடிப்ப..இப்ப அமைதியா இருக்க?"

"நீ மட்டும் என்னவா.....?" என்று தனுஜா ஆரம்பிக்க, இருவரும் சகஜமாக பேசினர், சிரித்தனர், ஒருவருக்கொருவர் கிண்டல் அடித்து கொண்டனர்.

படம் பார்த்துமுடித்து வெளியே வந்தனர் இருவரும்.

"சாப்பிட போலாமா?" கேட்டான் விஷ்ணு. தனது கைபேசியை ஏதேனும் மெசேஜ் வந்து இருக்கா என்பதை பார்த்தவாறு பதில் அளித்தாள்,

"ம்ம்ம்...போகலாமே?"

"உனக்கு என்ன பிடிக்கும்?" என்று கேட்டான் விஷ்ணு.

"எனக்கு ஓசாமா பல்லு விலக்குற ஸ்டைல் ரொம்ம்ம்ம்ம்ப பிடிக்கும்" என்று நக்கல் அடிக்க, கைகளை அகல விரித்து சிரிக்க ஆரம்பித்தவன் நிறத்தவில்லை.

"ஓய்..control your laughter dude! this is a public place." என்றாள் தனுஜா.

"உனக்கு மட்டும் எப்படி இந்த மாதிரி மொக்கை ஜோக் எல்லாம் அடிக்க வருது... நான் கேட்டது சாப்பாட்டுல என்ன பிடிக்கும்னு?"

"மொட்டையா கேட்டா வேற என்னத்த சொல்றது? சாப்பாடுன்னு நீ சொல்லவே இல்லையே..." என்று பேசி கொண்டே இருவரும் ஒரு உணவகத்திற்குள் நுழைந்தனர்.

சாப்பாடு வருவதற்காக காத்து கொண்டிருக்கும் வேளையில்,

"எனக்கு வேலை கிடைச்சுடுச்சு....உன்கிட்ட சொல்ல தான் இந்த அவுட்டிங்!" என்றான்.

தனுஜா கண்களில் தெரிந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சந்தோஷம் போங்க,

"என்ன இப்ப தான் சொல்ற? congrats man...." என்று அவள் கைகளை நீட்டினாள். அவனும் நீட்டினான். அந்த ஸ்பரிசம் ஒரு கணம் அவனுக்குள் விளக்கமுடியாத மாற்றங்களை கொண்டு வந்தது. அவளையே கண்கொட்டாமல் பார்த்தான்.

"ஹாலோ, ஆர் யூ ஒகே?" அவன் கண் முன் கையாட்டினாள்.

"இல்ல....shake hands பண்ணபோது அருவி தண்ணி பின்னாடி ரிவர்ஸ்ல போய் freeze ஆனுச்சு, காத்து ஒரு நிமிஷம் நின்னு போச்சு. வானத்துல மேகங்களுக்கு ரெட் சிக்னல் விழுந்துச்சு. இந்த மாதிரி ஒரு ஃவீல் வந்துச்சு.....உனக்கு ஒன்னும் ஃவீல் ஆகலையா? என்றான் விஷ்ணு.

சிரித்தபடியே தனுஜா, " ஏன் ஆகல? ரோட்ல மாடு நின்னு மாதிரி. குப்பையில பன்னிக்குட்டிங்க தேடுறத்த நிறுத்துன்னு மாதிரி.....சாக்கடையில எலிங்க ஓடுறது நின்ன மாதிரி இருந்துச்சே....."

மறுபடியும் சத்தம்போட்டு சிரித்தான்.

"நீ ரொம்ப தமிழ் படம் பாத்து கேட்டு போய் இருக்க?" புன்னகையித்தாள் தனுஜா.

அவளது கண்களையும் உதடுகளையும் பார்த்தவண்ணம் இருந்தான். அதை கண்டு கொண்ட தனுஜா மேசையின் மேல் இருந்த அவனது கைகளை செல்லமாய் அடித்து, " hey pervert, stop staring at me."

அவன் புன்முறுவலித்தான்.

"எங்க வேலை? எந்த கம்பெனி?"

"மும்பைல.... " என்றவுடன் அவள் முகத்தில் சோகரேகைகள் பரவுவதை பார்த்தான் விஷ்ணு.

"எப்ப போற?" என்றாள்.

"அடுத்த வாரத்துல...."

"எப்ப வருவ...?"

"திருப்பி எதுக்கு வரனும்? அங்கயே இருந்திட வேண்டியது தான்...." என்றான். தனுஜாவிற்கு கோபம் கலந்த அழுகை வர,

"அப்பரம்....எந்த இதுக்குடா என்னைய...." வாக்கியத்தை முடிக்கவில்லை. வேறு பக்கம் திருப்பிகொண்டாள் முகத்தை.

"உன்னைய....என்ன?" வேண்டுமே என்றே வெறுப்பேற்றினான்.

"ஒன்னுமில்ல." என்றாள்.

"சரி சரி....சும்மா தான் சொன்னேன். லீவு கிடைக்கும்போது திருப்பி இங்க வந்துடுவேன்." என்றான்.

"ம்ம்ம்....." அமைதிகாத்தாள் தனுஜா.

பின்னர், பலமுறை வெளியே சென்றனர். இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து இருந்தாலும், அதை சொல்லி கொள்ள தைரியம் இல்லை. தைரியம் இல்லை என்பதும் இருவருக்கும் தெரியும்.

பம்பாயில் விஷ்ணு பிஸியாக இருந்தான். தனுஜாவிற்கும் வேலை பளு அதிகரித்தது. இருவரும் பேசி கொள்ளும் வாய்ப்புகள் குறைந்தன. தனுஜாவின் பிறந்தநாள் அன்று அவளது ஆபிஸில்....

"ஏய் பேப், உனக்கு யாரோ lobbyல வேட் பண்ணுறாங்க" receptionist சொல்ல தனுஜாவும் வந்தாள். அங்கே விஷ்ணு. அவள் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. பல நாட்கள் பேசவில்லை என்ற குற்ற உணர்வு அவளது கண்களில்.

"விஷ்ணு, what a surprise dude! how have you been?"

"i am good. how are you? happy birthday thanuja"

"தேங் யூ. தேங்ஸ் தேங்ஸ்.....நீ எப்ப மும்பைலேந்து வந்த? ஏன் ஃபோன் பண்ணல?" என்று கேள்விகளை அடுக்கி கொண்டே சென்றாள்.

எந்த கேள்விகளுக்கும் பதில் சொல்லவில்லை விஷ்ணு. அவன் சொன்னது,

"ஐ லவ் யூ தனு. will you marry me?"

என்றாவது ஒரு நாள் சொல்வான் என்று காத்து கொண்டிருந்த தனுஜாவிற்கு அவன் சொன்னது அளவில்லாத சந்தோஷத்தை தந்தது.

***

" ரிப்போர்ட்ட முடிச்சுட்டீயா?" curtain துணிகளை மாற்றியவாறு விஷ்ணு.

"doing it.... do you need help to change the curtains?"

"i'll manage it dear." என்றான். அறைகளுக்கு சென்று ஃபோட்டோ ஃபிரேம்களை சுத்தம் செய்தான். அச்சமயம் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்து கொள்வதற்காக தனுஜா டிவி பார்த்தாள்.

oprah winfrey நிகழ்ச்சியை பார்த்தாள். குழந்தைநல மருத்துவர் ஒருவர் பேசியதை கேட்டு தனுஜாவின் நினைவு அலைகள் பின்னோக்கி சென்றன....

***
"ஐ எம் சாரி mrs vishnu...but உங்களுக்கு miscarriage ஆச்சு." மருத்துவர் கூறினார்.

(பகுதி 4)

Sep 26, 2009

அன்பே, உன்னால் மனம் crazy- 2

பகுதி 1 

தனுஜா பொழிந்து தள்ளினாள் தனது கோபங்களை. மறுமுனையில்,

"ஹாலோ ஹாலோ, யாரு நீங்க? உங்களுக்கு என்ன வேணும்? எனக்கு ஒன்னுமே புரியல...."

தனுஜா, "தப்பு செஞ்சிட்டு, தப்பிக்க பாக்குறீங்களா? உங்ககிட்ட அளவு ஜாக்கெட் கொடுத்து ஒரு மாசம் ஆச்சு. சரியா தைக்க சொன்னா....இப்படி பண்ணி வச்சு இருக்கீங்க?"

"யாரு? சாரி....நீங்க.... ராங்கா ஃபோன் பண்ணிட்டீங்க?"

தனுஜாவுக்கு கோபம் கொந்தளிக்க, "செய்றதயும் செஞ்சுட்டு......" மறுபடியும் 'பூஜை'யை ஆரம்பித்தாள்.

தாங்கமுடியாத விஷ்ணு, "ஸாட்ப்பிட்! நீங்க ஃபோன் பண்ண நம்பர சொல்லுங்க?"

"98*********34" என்றாள்.

சிரித்தபடியே, "எல்லாம் சரி தான்....கடைசில சொன்னீங்களே 34...அது இது இல்ல...என் நம்பர் 43. தப்பா ஃபோன் பண்ணது நீங்க?"

தனுஜா கஞ்சி திண்ண கருப்பான்பூச்சிபோல்(எத்தன நாளைக்கு தான் இஞ்சி திண்ண குரங்குன்னு சொல்றது) ஆனாள்.

"ஐயோ சாரிங்க சாரி.....என் tailor பெயரும் விஷ்ணு தான்.... நான் தான் தப்பா டையல் பண்ணிட்டேன்...சாரி சாரி...." என்றாள் தனுஜா.

"குஷி ஜோதிகா மாதிரி சாரி சொன்னா விட்டுடுவோமா?"

"அப்பரம் என்ன வேணும்?" பவ்யமான குரலில் தனுஜா.

"மானம் நஷ்ட வழக்கு போடுவோம்....சி எம் வரைக்கும் கொண்டு போவோம். பஸ கொளுத்துவோம். காலேஜ் ஸட்ரைக் விடுவோம்....டில்லி வரைக்கும் போகும் இந்த மேட்டர்! ஒரு சின்ன பையன போய்....அதுவும் ஒரு நல்ல சின்ன பையன போய்....." சிரித்தான் விஷ்ணு.

"ஹாலோ மிஸ்ட்டர் இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல...."

"anyway, sorry i gtg. sorry."என்று ஃபோனை கட் செய்ய, விஷ்ணு

"சரியான ஜாக்கெட்ட போட்டு போங்க..ஹாஹா..."

தனுஜா ஃபோன் லைன்னை கட் செய்தாள். விஷ்ணு தனது கைபேசியில் அவளது நம்பரை பார்த்து, "ம்ம்ம்...she has a sweet voice." நம்பரை save செய்துவைத்து கொண்டான்.

சில மாதங்கள் கழிந்தன. ஒருநாள் விஷ்ணு தனது தூரத்த சொந்தக்காரரின் மகளின் காதுகுத்து விழாவிற்கு சென்று இருந்தான். செம்ம போர் அடித்ததால் என்ன செய்வது என்று தெரியவில்லை விஷ்ணுவிற்கு. தனது வயதில் உள்ள பையன்கள் யாருமில்லை அரட்டை அடிப்பதற்கும்.

அவனுக்கு தனுஜாவின் ஞாபகம் வந்தது.

குறுந்தகவல் அனுப்பினான் தனுஜாவிற்கு,

விஷ்ணு: ஹேய் ஜாக்கெட் பொண்ணு, எப்படி இருக்க?

சிறிது வினாடிகள் கழித்து, பதில் குறுந்தகவல் வந்தது.

தனுஜா: ஓய், யாரு இது? mind your language.

விஷ்ணு: அட பாவமே அதுக்குள்ள மறுந்துட்டீயா? நான் தான் ராங் நம்பர் விஷ்ணு... ஜாக்கெட்ட சரியா தைக்கலன்னு நம்மூர் நாட்டாமைக்கு புகார் மனு அனுப்ப பாத்தீங்களே, அந்த பாவப்பட்ட ஜன்மம்.

தனுஜா: ஓ ஓ சாரி சாரி. ஹாய். ஆமா, ஏன் திடீரென்னு ஸ் எம் ஸ்?

விஷ்ணு: ஒன்னுமில்ல சும்மா! போர் அடிச்சது..அதான்...கடலை போடலாம்னு!

தனுஜா: வாட்??? கடலை?? ஹாலோ விஷ்ணு, நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்ல.

விஷ்ணு: ஓ பட், நான் அப்படிப்பட்ட பையன்!

தனுஜா: மனசுல பெரிய காமெடியன் நினைப்பா?

விஷ்ணு: ம்ம்ம்....இப்ப என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க? ஐ மின் இருக்க?

தனுஜா: ஹாஹா...மரியாதையலாம் குறையுது! நான் என்ன பண்ணிகிட்டு இருந்தா உங்களுக்கு...ஐ மின் உனக்கு என்ன? எதுக்கு தேவையில்லாத கேள்வி?

விஷ்ணு: சரி...அப்ப நாட்டுக்கு ரொம்ப தேவையான கேள்விய கேக்குறேன்? உங்களுக்கு தெரியுமா ஜோதிகாவுக்கும் சூர்யாவுக்கும் கல்யாணம் ஆக போகுதுன்னு!! :)

தனுஜா: விஷ்ணு, you are a total crappy fellow i tell u!

விஷ்ணு: but am dead sure that you are very much enjoying it!

தனுஜா: hahaha...whatever dude! நீ படிக்குறீயா? க்ளாஸ்ல கடைசி பெஞ்சா? எப்ப பாத்தலும் பரிட்சைல ஃவேல் பண்ணிடுவீயா?

விஷ்ணு: ஹாஹா...இப்ப உனக்கு மனசுல அலைபாயுதே ஷாலினின்னு நினைப்பா?

தனுஜா: எல்லாம் பொண்ணுங்களும் ஒரு விதத்தில் ஷாலினி மாதிரி அழகு தான். இந்த பசங்கள தான்....மாதவன் மாதிரி ஒருத்தர பாக்குறது ரொம்ம்ம்ம்ம்ப rare! the world is suffering from an imbalance of good guys! tsk tsk...

விஷ்ணு: ஹாஹாஹா....நீங்க சொன்ன ஜோக்க தஞ்சாவூர் பெரிய கோயில தான் எழுதி வைக்கனும்!!

தனுஜா: hoi!! என்ன நக்கலா?

விஷ்ணு: சரி சரி...கூல் கூல்.... நான் வேலை தேடிகிட்டு இருக்கேன்.... நீங்க?

தனுஜா: ஓ..ஐயா வெட்டி ஆபிசரோ? ம்ம்ம்.... நான் ஒரு mncல வேலை பாக்குறேன்.

விஷ்ணு: ஹாலோ அப்படி ஒன்னும் கேவலமா நினைக்காத. வேலை இல்லாம வெட்டியா இருக்குறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா!! அதுக்கலாம் ஒரு தனி கலை இருக்கனும்!

தனுஜா: உனக்கு கொஞ்சம்கூட மானம், ரோஷம் சூடு சொர்ன கிடையாதா?

விஷ்ணு: சாரி பொண்ணுங்ககூட பேசும்போது அதுங்களுக்கு நான் லீவு விட்டுடுவேன்!

இதை பார்த்து விட்டு தனுஜா விழுந்து விழுந்து சிரித்தாள்.

தனுஜா: ஹாஹா.... you are such a funny funny guy! alrite, am busy now. talk to u later.

விஷ்ணு: ஹாலோ, அப்போ என் கதி? என்ன பெரிய பிஸி. இன்னிக்கு சண்டே தானே?

என்ற குறுந்தகவலை அனுப்பவதற்காக முயற்சி செய்தான். ஆனால், நெட்வோர்க் பிரச்சனை என்று கைபேசியில் காட்டியதால், விழா நடக்கும் ஹால்லுக்கு சென்றான். அங்கயும் சரியாகவில்லை. இது சிக்னல் பிரச்சனை என்பதால் ஒரு ரூம்முக்கு சென்றான்.

உள்ளே சரியான கூட்டம். சின்ன குழந்தைகள் விளையாடி கொண்டிருக்க அவன் ரூம் கதவு அருகே நின்று கைபேசியை சரி செய்து கொண்டிருந்த வேளையில் இரு பெண்கள் பேசி கொண்டே வெளியே வந்தனர்.

அதில் ஒருத்தி, "ஏய் என்ன மச்சி, கையும் ஃபோன்னுமா இருக்க? யாருகிட்ட இவ்வளவு நேரமா மெசேஜ் அனுப்பிகிட்டு இருந்த?"

இன்னொருத்தி, "அது ஒன்னுமில்ல மச்சி, அன்னிக்கு சொன்னேன்ல ஒரு ராங் நம்பர் விஷ்ணுன்னு அவன் தான். சும்மா ஸ் எம் ஸ் பண்ணிகிட்டு இருந்தான்..."

அவள், "என்னது? ராங் நம்பர் ஃபிரண்ட்ஷிப்பா? என்ன டி.....பையன் ரொம்ப கடல போடுறானா?"

இவள், "அப்படி சொல்ல முடியாது....பட்....ரொம்ப ஜாலி டைப்."

இவர்கள் பேசியதும் விஷ்ணுவிற்கு ஆயிரம் பட்டாம்பூச்சிகள் புல்லாங்குழல் வாசிப்பதுபோல் இருந்தது. தனுஜாவை அடையாளம் கண்டுகொண்டான். ஆம்ஸ்ட்ராங் நிலவில் மட்டும் கால் அடி வைத்தார் என்றால் விஷ்ணு சந்தோஷத்தால் mars, venus, neptune எல்லாவற்றிலும் கால் அடி வைத்ததுபோல் உணர்ந்தான்.

தனுஜாவை பார்த்தது 3 வினாடி என்றாலும் தன் கேமிரா கண்களால் படம் எடுத்து வைத்து கொண்டான். மனதில் அதை 'develop' செய்ய.

சில பொண்ணுங்களுக்கு அவர்களின் முகபருக்கள்கூட அழகு தான். காலை நேரத்தில் இலைகள் மேல் விழுந்துகிடக்கும் பனித்துளிகள் போல் தனுஜாவின் பொலிவான முகத்தில் கன்னங்களில் ஆங்காங்கே இருந்த பருக்கள்கூட விஷ்ணுவிற்கு அழகாய் தெரிந்தது.

***

"this is for my sweet darling."விஷ்ணு சமையல் அறையிலிருந்து ஒரு கப் ஆரஞ்சு ஜுஸ் கொண்டுவந்தான்.

"எதுக்கு டா இப்போ இது? சொன்ன வேலைய மட்டும் செய்....ஏதாச்சு செஞ்சியா இல்லையா?"

"எல்லாம் on the process of completion..... இந்த ஜுஸ குடிச்சுட்டு தெம்பா ரிப்போர்ட்ட செஞ்சி முடி. alrite. அதுவரைக்கும் உங்களிடமிருந்து விடைபெற்று கொள்வது உன் இம்சை அரசன் விஷ்ணு." சிரித்தபடி மீண்டும் சமையல் வேலைகளை முடிப்பதற்காக சென்றான். திரும்பி வந்தான்.

தனுஜாவின் லெப்டாப்பில் உள்ள 'teri ore' என்னும் இந்திபாடலை ஒலிக்க செய்யவிட்டு, "dedicating this song to you, my sweetheart."என்றபடி தனுஜாவின் கன்னங்களை கிள்ளினான்.
***

"அவள வெளியே கூப்பிடலாமா?" என்றது விஷ்ணுவின் மனசாட்சி.

(பகுதி 3)

Sep 24, 2009

அன்பே, உன்னால் மனம் crazy!- 1

தனுஜா தனது லெப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தாள். காலை மணி 10 ஆனது. "என்ன ஆச்சு...இன்னும் அவன் ஃபோன் பண்ணல...." தனக்குள் முணுமுணுத்து கொண்டாள். microsoft excelலில் டைப் செய்தவற்றை save செய்துவிட்டு ஃபோன் செய்தாள் விஷ்ணுவுக்கு.

அப்போது தான் விஷ்ணு விமானத்தைவிட்டு இறங்கி பெட்டிகளை எடுக்க சென்றான். அவனது கைபேசி அலறியது.

"ஹாய் விஷ்ணு? எங்க இருக்க?"

"ஹாய் தனஜா... என் வருகைக்காக வழி மீது விழி வைத்து காத்துகொண்டிருக்கிறாயா?" என்றான் விஷ்ணு.

தனுஜா சிரித்து கொண்டே, "என்ன ஆச்சு உனக்கு. flightல local சரக்கு ஏதாச்சு குடிச்சியாக்கும்?"

"அடி பாவி!!"

"ஏன் ஃப்ளைட் லேட்?" என்று வினாவினாள் தனுஜா.

"ஒன்னுமில்ல டா, ஏதோ engine problem it seems. bombayலே 2 மணி நேரம் லேட்டா ஆகிட்டான். சரி நான் கொஞ்சம் நேரத்துல வந்துடுவேன்... alrite."

விஷ்ணுவிற்கு வேலை பம்பாயில். ஆக, இரண்டு அல்லது மூன்று மாதத்தில் ஒரு முறை தான் சென்னைக்கு வர முடியும். அப்போதுகூட ஒருசில நாட்களே விடுமுறை கிடைக்கும். ஒரு நாள் லீவு கிடைத்தாலும் பறந்துவந்துவிடுவான் தன் ஆசை மனைவி தனுஜாவை பார்க்க.

பெட்டிகளை மேசையில் வைத்துவிட்டு, சோபாவில் விழுந்தான் அசதியால்.

"how's everything there? how is work going?"அவன் பக்கத்தில் அமர்ந்தபடியே கேட்டாள் தனுஜா.

விஷ்ணு, "ம்ம்...ஏதோ போகுது? அதே வேலை...அதே ஆபிஸ்...அதே traffic jam.." சலித்து கொண்டான். பெட்டியில் இருக்கும் துணிகளை எடுத்து வெளியே வைத்தாள் தனுஜா.

"ஹாஹா....ஏன் இப்படி சலிச்சுக்குற? அங்க தான் நிறைய ஷில்பா ஷெட்டி, ராணி முகர்ஜி, பிரியங்கா சோப்ரான்னு பொண்ணுங்க இருப்பாங்களே...உனக்கு பொழுது நல்லா போகுமே?" தனுஜா விளையாட்டாய் கூறினாள்.

அவனும் சிரித்துகொண்டே, "என்ன தான் சாப்பாத்தி, நாண் இருந்தாலும், என் வீட்டு இட்லிக்கு ஈடாகுமா?" தனுஜாவின் இடுப்பை கிள்ளினான். முறைத்தாள்.
அவனது கையை தள்ளிவிட்டாள் தனுஜா. துவைப்பதற்காக துணிகளை அள்ளிகொண்டு செல்ல முற்பட்டபோது, விஷ்ணு அவளது கைகளை பற்றினான். துணிகள் தரையில் விழ, தனுஜா அவன் மேல் விழுந்தாள் சோபாவில்.

"விஷ்ணு, என்னது...விடு... இன்னிக்கு நிறைய வேலை இருக்குடா எனக்கு." என்றாள் தனுஜா அவனது பிடியில் இருந்து தப்பிக்க முற்பட்டு கொண்டே.

கண்களில் குறும்பு பார்வையுடன் அவன், " all programs cancel!"
பிடிக்கவில்லை என்று அவனது கைகளை விலக்கினாலும், தனுஜாவிற்கு அவன் செய்தது பிடித்து இருந்தது மனத்திற்குள்.

அவள், "ம்ம்ம்...ஏதோ பழமொழி சொல்வாங்களே...காஞ்ச மாடு கம்பைக் கண்டால் பாயுமாம்....அந்த மாதிரில இருக்கு..."

அவன்," காள மாட்டுக்கு பசிக்குது, பசு மாட்டுக்கு பசிக்கலையா?" மயக்கவைக்கும் குரலில்.

"ச்சீ..you shameless flirt."சிரித்துகொண்டே கீழே விழுந்த துணிகளை அள்ளி கொண்டு வாஷிங் மிஷினில் போட்டாள். பின்னாடியே தொடர்ந்து சென்றான் விஷ்ணு. தண்ணீர் குழாயை அழுத்தினாள்; detergent powderயை போட்டாள். பின்னாடியிலிருந்து அவளை இறுக்க கட்டிபிடித்து, "i really miss you da!" விஷ்ணு அவளது காதுமடலை கடித்தான்.

"நீ என்னைய மிஸ் பண்ணவே இல்லையா?" தொடர்ந்தான் விஷ்ணு.

"ஏன் இல்ல? அன்னிக்கு ஒரு நாள்....." என்று முடிப்பதற்குள் விஷ்ணு குஷியாகி,

"அப்பரம் என்ன ஆச்சு?"

தனுஜா, " அன்னிக்கு ஒரு நாள் toilet tubelight கெட்டு போச்சு. மாட்ட முடியல எனக்கு. அப்ப தான் உன்னைய மிஸ் பண்ணேன்...நீ இருந்திருந்தா சரியா போட்டு இருந்திருப்பே இல்ல..." வேண்டும் என்றே கிண்டல் அடித்தாள்.

"அடி பாவி.... இவ்வளவு தானா. இந்த காலத்து பொண்ணுங்களுக்கு புருஷன் மேல் அக்கறை இல்ல! what a pity? what a pity?"செல்ல கோபத்துடன் நெற்றியில் அடித்துகொண்டான்.

"என்னப்பா பண்றது? we are all busy career woman. ஆபிஸ்ல ஏகப்பட்ட வேலை. வீட்டுக்கு வந்தா...வீட்ட பாத்துக்கனும். இருக்குறது 24 மணி நேரம் தான். இதுக்கு நடுவுல டீவி பாக்கனும், ஃபிரண்ட்ஸ் கூட வெளியே போகனும். spa, manicure, pedicure, waxing, threading....exercise, yoga... இவ்வளவு இருக்கு. இதுல எங்க டைம் இருக்கு புருஷன பத்தி யோசிக்க?" நக்கல் அடித்தாள் தனுஜா. குளிர்சாதன பெட்டியை திறந்து காய்கறிகளை எடுத்தாள்.

அமைதியான குரலில், "உண்மையாவே ஒரு ஃவீலிங்ஸும் இல்லையா?"

அவள் மறுபடியும், "என்னா ஃவீலிங்ஸ்??" வடிவேலு பாணியில் சொல்ல, விஷ்ணு விழுந்து விழுந்து சிரித்தான்.

சமையலறையில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்து மேசையில் இருந்த கேரட்டை கடித்தபடியே, "ம்ம்ம்....ஒரு சிங்கம் இங்க புலம்பிகிட்டு இருக்கு. நீ கண்டுக்கவே மாட்டேங்குற?"

சுற்றும்முற்றும் பார்த்து, "சிங்கமா? எங்க? எங்க?" தேடினாள் தனுஜா.

"நான் தான் டி அது!"

"என் அம்மா என்னைய ஏமாத்திட்டாங்களே! என்னைய ஒரு மனுஷனுக்கு கட்டிவைக்க சொன்னா...மிருகத்துக்கு இல்ல கட்டிவச்சுட்டாங்க!" சிரித்தாள் தனுஜா.

"ஓவர் குசும்பா போச்சு உனக்கு." விஷ்ணு, தனுஜாவை இழுத்து தன் மடியில் உட்கார வைத்துகொண்டான்.

"i really miss you and your jokes da." விஷ்ணு தனுஜாவின் கண்களை பார்த்து கூறினான்.

புன்னகையித்தபடி தனுஜா, "அதுக்கு இப்ப என்ன பண்ணலாம்ங்கற?"

"இன்னிக்கு 'சம்திங் சம்திங்' கிடையாதா?" கிறுங்கடிக்க வைக்கும் குரலில் விஷ்ணு.

"ஓய்....nothing doing!" வெடுக்கென்று எழுந்தாள்.

"கொஞ்சம் விட்டா போதுமே... நான் கடவுள் ஆர்யா மாதிரி தலகீழ நின்னாலும் முடியாது!!! நைட்டுக்குள்ள headofficeக்கு ரீப்போர்ட் அனுப்பனும். and somemore ..today...... curtain மாத்தனும். சோபா துடைக்கனும். rooms vaacum பண்ணனும். photo frames arrange பண்ணனும்....." என்று அன்று செய்துமுடிக்க வேண்டியவற்றை கூறினாள் தனுஜா.

"alrite alrite....ஒன்னு செய்வோம். இன்னிக்கு we'll reverse our roles. இன்னிக்கு முழுக்க நான் தனுஜா மாதிரி இருக்கேன். எல்லாத்தையும் நான் செய்றேன். நீ விஷ்ணு மாதிரி இரு. விஷ்ணு என்னென்ன செய்வானோ அத செய். யாரு அவங்க ரோல கரெக்ட்டா செய்றாங்களோ, அவங்க சொல்றபடி தோத்தவங்க செய்யனும். alrite? sounds fun man......" விஷ்ணுவின் கண்கள் விரிந்தன.

"நீ என்ன செய்வ வீட்டுல இருந்தா? நாள் முழுக்க டீவி பார்ப்ப? இது ஒரு பெரிய வேலையா?" தனுஜா சொல்ல அதற்கு விஷ்ணு,

"ஹாலோ!! சும்மா இருக்குறதுல எவ்வளவு கஷ்டம் இருக்கு தெரியுமா? நீ ஒரு நாள் இருந்து பாரு...அப்பரம் தெரியும் என் கஷ்டம்." சிரித்தான்.

அவன் தொடர்ந்தான், "அது மட்டுமா செய்வேன்....அப்பெப்ப வந்து உன்னைய disturb பண்ணுவேன்ல....அந்த மாதிரியும் செய்யனும்."

"அதானே பாத்தேன்.... நீ திருந்த மாட்ட?" தனுஜா பொய் கோபத்துடன்.

"time starts now....." சொல்லிகொண்டே, சமையல் வேலைகளை ஆரம்பித்தான் விஷ்ணு. பெருமூச்சுவிட்டவாறு தனுஜா ஹால்லுக்கு வந்தாள். தனது ஆபிஸ் ரீப்போர்ட்டை செய்ய தொடங்கினாள் . லேப்டாப்பில் பாடல்களை ஒலிக்க செய்தாள். "டெலிஃபோன் மணி போல் சிரிப்பவள் இவளா..." என்ற இந்தியன் படப்பாடல் ஒலிக்க, சமையலறையிலிருந்த விஷ்ணுவை எட்டி பார்த்தாள்.

***
3 ஆண்டுகளுக்கு முன்பு......

"ஹாலோ, மிஸ்ட்டர் விஷ்ணு உங்களுக்கு அளவு ஜாக்கெட் கொடுத்தா...அத வச்சு சரியா தைக்க தெரியாதா? நீங்களாம் எதுக்கு கடை வச்சு இருக்கீங்க? what the hell man...and i need this blouse tonight for a wedding function!!" சரமாரியாக பொழிந்தாள் தனுஜா.

பகுதி 2)

Sep 22, 2009

என்னை போல் ஒருத்தி...-300வது போஸ்ட்

உன்னை போல் ஒருவன்னு எல்லாரும் பேசிகிட்டு இருக்குற நேரத்துல இது என்ன என்னை போல் ஒருத்தின்னு நினைக்குறீங்களா?

ஒன்னும் இல்ல(வேட்....அதுக்குன்னு கிளம்பி போயிடுறதா..? வேட் வேட்...)

இது என் 300வது போஸ்ட். என்னை போல் ஒருத்தின்னு தலைப்பு வச்சா கொஞ்சம் வித்தியாசமா இருக்குமேன்னு நினைச்சு எழுதியது:)

300 பதிவுகளா? என்னாலேயே நம்ப முடியல!!
எவ்வளவு!!
கிட்டதட்ட 4 ஆண்டுகள் 4 மாதங்கள் ஆகிவிட்டன வலைப்பதிவு தொடங்கி! இவ்வளவு ஆண்டுகளாக தொடர்ந்து ஆதரவு கொடுத்துவரும் அனைவருக்கும் இந்த வலைப்பூவை follow செய்து வரும் 85 பேருக்கும் கோடி நன்றிகள்!

நீங்கள் இல்லை என்றால் நான் இல்லை!

மனசாட்சி: ஏ தோடா...என்ன அரசியல குதிக்க போறீயாக்கும்? தேவையில்லாம டையலாக் விடுற?

நான்: அரசியல் இப்போதுக்கு இல்ல...

மனசாட்சி: ஆமா ஆமா....தமிழ்நாட்டுல ரெண்டு பேரு இப்படி தான் சொல்லிகிட்டு திரியுறாங்க...

நான்: இப்போ நீ தான் அரசியல் பண்ணுற?

மனசாட்சி: அட பாவி, கடைசியில என்னையேவா??!!!

இது சும்மா!!!
அனைவருக்கும் நன்றிகள். தொடர்ந்து உங்களது ஆதரவை கொடுத்து வாருங்கள். என்னால் முடிந்த நல்ல பதிவுகளை எழுத முயற்சிக்குறேன்:)

(by the way, இன்னிக்கு தான் 300வது போஸ்ட் எழுதவேண்டும் என்று ஒரு சின்ன பேராசை. ஏன் என்றால், இன்று தான் நான் குழந்தையாக இருந்தபோது முதல் முதலில் அழுதது. அட...என் பிறந்த நாள்ன்னு சொல்ல வந்தேன்!)

Sep 20, 2009

dil bole hadippa &ஈரம்

இந்த வார இறுதியில் ரெண்டு படங்கள் பார்த்தேன். ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளுக்கு அப்பரம் ரெண்டு சூப்பர் படங்களை பார்த்த சந்தோஷம் மனசு முழுவதும்!!

ஈரம்- ஷங்கரின் தயாரிப்பில் வந்துள்ள படம். முதல் பாதி crime thriller. இரண்டாம் பாதியில் திகில்! நல்ல ஒரு கலவை. நடிப்பை என்னமா கொட்டியிருக்காங்க ஆதி, நந்தா, சிந்து மோகன். சிந்து மோகம் சமுத்திரம் படத்தில் முரளியின் ஜோடியா வந்தவங்க.

யம்மா சிந்து, சிம்ளி சூப்பர்ப்!! குறிப்பா சாகும் காட்சியில் கண்கள் ஓரமா கண்ணீர் துளி வரும் பாருங்க.... வாவ் வாவ்!!

நந்தா, உங்களுக்கு படங்கள் சரியா ஓடலன்னு கவலை வேணாம். இனி, நிச்சயம் உங்களுக்கு பெரிய படங்கள் வரும். என்ன ஒரு வில்லத்தனமான நடிப்பு....*கைதட்டல்கள்*

ஆதி: ம்ம்ம்ம்.....'தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்' பட்டியலில் நான் உங்களை சேர்த்து வைத்து இருக்கேன்.:))

இன்னொரு ப்ளஸ்: இசை. பாய்ஸ் படத்தில் இந்த மல்கோவா மாமி கதை எழுதும் பயலா வந்த தமனின் இசை! oh my god, u are talented man!பாடல்கள் அருமையான melodies...வாழ்த்துகள்
-----------------------------------------------------------------------------

தில் போலே ஹடிப்பா.

ராணி முகர்ஹி ஷாஹித் கபூர் நடித்து வெளிவந்துள்ள படம். கொஞ்சம் bend it like beckham, chak de india, she's the man ஆகிய ஆங்கில மற்றும் ஏற்கனவே வந்த ஹிந்தி படங்கள் போல இருந்தாலும் சிரித்து மகிழ வைக்கும் படம்! ஆரம்பம் முதல் கடைசி வரை சிரித்து கொண்டே இருக்கலாம்!

ராணி ஆண் வேடத்தில்(veer pratap singh) வரும் காட்சிகள் எல்லாம் கைதட்டல்கள் பறக்கின்றன. அவ்வளவு cute!! veer pratap singhயை தூக்கி மடியில் வைத்து கொள்ளலாமா என்று தோன்றும்! ஹாஹா.... பாடல்கள் பக்கா பஞ்சாப் வாசம்! ஆடி கொண்டே இருக்கலாம்!

மொத்தத்தில் நல்ல படங்களை பார்த்த திருப்தி இப்போதான் கிடைச்சு இருக்கு!

Sep 15, 2009

எனக்கே என்னை தெரியாமல்-5

பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4
சூடான காபியுடன் ரினிஷா உட்கார்ந்து இருந்தாள் தேவியின் வீட்டில். ஹாலில் இருந்த curtainயை திறந்துவிட்டு ஜன்னல்களை சாற்றினாள்.

"ரொம்ப மழையா இருக்குல." தேவி சொன்னாள்.

"thank you devi."

மழையில் நனைந்த தன்னை வீட்டிற்கு அழைத்தமைக்கு நன்றி சொன்னாள் ரினிஷா. இருவரும் ரொம்ப நேரம் பேசினர். அவர்களுக்கிடையே நிறைய விஷயங்கள் ஒத்துபோயின. ஒரே மாதிரியான விருப்பங்கள்கூட. ரினிஷாவின் கணவன் சந்தேகபேர்வழியாக இருந்தபோதிலும் கஷ்டப்பட்டு வாழ்க்கையை ஓட்டிகொண்டிருப்பதை கேட்ட தேவி,

"தனியா போயிடு ரினிஷா....எதுக்கு கஷ்டம்?"

புன்னகையித்தாள் ரினிஷா. "பார்ப்போம் வாழ்க்கை எப்படி போகுதுன்னு." என்றாள்.

ஆனால், தேவி தான் ஒரு லெஸ்பியன் என்னும் உண்மையை சொல்லவில்லை. மறைப்பதற்காக அல்ல, ஆனால் அதற்கான அவசியம் ஏற்படவில்லை. இருவரும் நல்ல நண்பர்களாகின. தேவியின் பாக்ஸிங் மாஸ்ட்டரும் ரினிஷாவின் நண்பர் ஆனார். மூவரும் நிறைய இடங்களுக்கு சென்றனர். வாழ்க்கை கொஞ்சம் சந்தோஷமாக தெரிந்தது.

அப்படி ஒரு நாள், மூவரும் உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்தபோது தேவி கை கழுவ சென்றாள். அச்சமயம் காபி குடித்து கொண்டிருந்த மாஸ்ட்டர்,
"தேவி, இப்படி சந்தோஷமா இருந்து பாத்தது கிடையாது. நீங்க ரெண்டு பேரும் ஃபிரண்ட்ஸ் ஆனாபிறகு, அவளுக்கு எல்லாம் கிடைச்சு ஒரு ஃவீல் நினைக்குறேன். அதான்..... சந்தோஷமா இருக்கா.... இப்படி ஒரு பொண்ணுகூட ஃபிரண்ஷிப் வச்சு இருக்குற உங்களுக்கு தான் நன்றி சொல்லனும்" என்றார் மாஸ்ட்டர். நல்ல எண்ணத்தில் அவர் சொன்னார். ஆனால், அது உண்மையை போட்டு உடைக்கும் சந்தர்ப்பமாக அமைந்துவிட்டது.

ரினிஷாவிற்கு ஒன்னும் புரியவில்லை.

"மாஸ்ட்டர்...நீங்க என்ன சொல்லவறீங்க?" புருவங்களை உயர்த்தினாள்.

"நீங்களே சொல்லுங்க.... லெஸ்பியன்ஸ்கூட ஃபிரண்டா இருக்க...எத்தன பேரு விருப்பப்படுவாங்க.." என்றார்.

ரினிஷாவிற்கு அதிர்ச்சி!!! ஒன்றும் சொல்லாமல் கிளம்பிவிட்டாள் அவசர வேலை இருப்பதாக சொல்லிவிட்டு. செய்தி தெரிந்த தேவி, பலமுறை ஃபோன் செய்து பார்த்தாள். ஆனால், ரினிஷா எடுக்கவில்லை.

அன்று இரவு தேவியின் வாசல் மணி ஒலித்தது. பெட்டியுடன் ரினிஷா. தேவி தலைகுனிந்து நின்றாள். தோழியிடம் உண்மையை சொல்லாமல் போன வருத்தம் அவள் முகத்தில் படர்ந்தது.

ரினிஷா தேவியை கட்டிபிடித்து அழுதாள்.

"நான் ஒரு உண்மைய உன்கிட்ட சொல்லனும். உன்னைய பாத்த முதல் சந்திப்பிலேயே....ஏதோ ஒரு மாதிரியா இருந்துச்சு. உன்னைய ரொம்ப பிடிச்சு போச்சு. அது ஒரு சாதாரண ஃபிரண்ஷிப்பை மீறிய ஒரு ஈர்ப்பு. சொல்ல தெரியல. நீ தப்பா நினைச்சுப்பேன்னுதான் சொல்லாம விட்டுடேன்......" அழுகையின் நடுவே.

தேவிக்கு ஆச்சிரியமாக இருந்தது.

"இப்ப இந்த நேரத்துல ஏன்...."

"அவர விட்டுடு வந்துட்டேன்."
-----------------------------------------------------------------------------------------

கீதா கதையை கேட்டு விட்டு, "ஆனா, நம்ம societyல இதலாம் ஒத்து வருமான்னு யோசிச்சீங்களா அப்போ."

அதற்கு ரினிஷா, "நான் கொடுக்கும் அன்புக்கு ஒரு இருப்பிடம் தேவைப்பட்டுச்சு. அது என் ex husbandகிட்ட கிடைக்காதுன்னு தெரிஞ்ச பிறகு..... வந்துட்டேன். மத்தவங்க ஆயிரம் சொல்வாங்க. நல்ல மனசு இருக்குற ஒருசில பேர் எங்கள புரிஞ்சுகிட்டாவே சரி. அது போதும் எங்களுக்கு." என்றாள்.

கீதாவிற்கு அன்றைய பொழுது மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. இருவரின் வாழ்க்கை கதையை கேட்டு ஆச்சிரியப்பட்டாள். தன் வாழ்க்கையை எப்படி அமைத்து கொள்வது என்பதை பற்றி யோசனை செய்ய ஆரம்பித்தாள்.

நேரம் ஆகிவிட்டதால் கீதா, "ரொம்ப நன்றிங்க.....really appreciate your time. i had a great evening today. thanks alot."மனமுவந்து நன்றிகளை கூறினாள்.

அப்போது ஒரு குட்டி பொண்ணு அறையிலிருந்து ஓடி வந்து ரினிஷாவின் கால்களை கட்டிபிடித்து, "mummy, look at this. i won the game." கையில் இருந்த video game playerயை காட்டி சிரித்தது.

"யாரு இந்த குழந்தை?" என்று கீதாவின் முகத்தில் உதித்த கேள்வியை கண்டுகொண்ட ரினிஷா,

"my child from my previous marriage." என்றாள்.

கீதா குழந்தையிடம் சென்று, "ஹாலோ, உங்க பேரு என்ன?" என்று கேட்டு தன் பையில் இருந்த ஒரு சாக்லெட்டை கொடுத்தாள்.

"சரி நான் கிளம்புறேன்...." என்றாள் கீதா. வழியனுப்பி வைக்க வாசல்வரை வந்தனர் ரினிஷாவும் தேவியும்.

"ஏதாச்சுன்னா...ஃபோன் பண்ணு." என்றாள் தேவி கீதாவிடம்.

கீதா உடனே, "ம்ம்ம்.... குழந்தைக்கு தெரியுமா?....நீங்க ரெண்டு..." எச்சில் முழுங்கினாள். கேட்க கூடாத கேள்வியை கேட்டுவிட்டதாய் முழித்தாள்.

சிரித்து கொண்டே ரினிஷா, "அவள பொருத்தவர....அவளுக்கு ரெண்டு அம்மா இருக்காங்க...."

*முற்றும்*

(யப்பா சாமி, ஒரு வழி முடிச்சுட்டேன். இந்த பாகம் ரொம்ப சீக்கிரமா முடிஞ்சுட்டு. கதைக்கு எப்படியாச்சு முற்றும் போட்டுவிட வேண்டும் என்பதற்காக தான் முடிச்சேன். ஐயோ....எந்த நேரத்துல எழுத ஆரம்பிச்சேன்னு தெரியல. ஒரே பிஸி... ப்ளாக் பக்கமே தலவச்சு படுக்கல......இனியாவது உருப்படியா எதாச்சு எழுதுறேன். i guess i will be back to form soon!)

Aug 25, 2009

எனக்கே என்னை தெரியாமல்-4

கை நிறைய மாத்திரைகள். தன் அறை படுக்கையில் உட்கார்ந்து இருந்தாள். காலையில் பள்ளிக்கு கொண்டு சென்ற பாட்டிலில் கொஞ்சம் தண்ணீர் இருந்தது. திறந்து கொஞ்சம் குடித்தாள் தேவி. துயரம் தொண்டையை அடைத்தது. மனம் படபடத்தது. கைகள் நடுங்கின.


தான் செய்வது முட்டாள்தனம் என்று மூளைக்கு புரி்ந்தாலும், புண்பட்ட மனத்திற்கு நிம்மதி வேண்டிய சூழ்நிலை. அவசியம். தேவை. வாய் அருகே மாத்திரைகளை கொண்டு சென்றபோது கைபேசி அலறியது.


"ஹாய் தேவி, a very good and surprising news. you have been selected to represent our kick-boxing club in the international contest in canada. congrats ya. am so happy and proud of you!! get ready to rock on. see you tmr. need to explain the contest procedures. good nitez." என்று பாக்சிங் மாஸ்ட்டரிடமிருந்து குறுந்தகவல் வந்தது.


ஸ் எம் ஸை பார்த்துவிட்டு அழ ஆரம்பித்தாள், 20 நிமிடங்களுக்கு. சந்தோஷமும் துக்கமும் ஒரே நேரத்தில் தேவியால் ஏற்று கொள்ள முடியவில்லை. சந்தோஷமான செய்தி அவள் மனதிற்கு நிம்மதியை கொடுத்தது. சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் வந்த செய்தி அவளை எந்த ஒரு முட்டாள்தனமான காரியத்தையும் செய்யவிடாமல் தடுத்தது.


அந்த குறுந்தகவலை பல முறை பார்த்து மகிழ்ச்சி அடைந்தாள். தொலைந்த வாழ்க்கை ஒரு சின்ன குறுந்தகவல் மூலம் வரும் என்று நினைக்கவில்லை. உடனே தனது கிக் பாக்சிங் மாஸ்ட்டருக்கு ஃபோன் போட்டு தன் பிரச்சனையை கூறினாள், பள்ளியில் நடந்ததையும் கூறினாள். தான் தற்கொலை முயற்சிக்கு முற்பட்டதாகவும் கூறினாள்.


அவருக்கு பெரிதும் அதிர்ச்சியாக இருந்தது. இதுநாள் வரை தேவியை ஒரு மாணவியாக, தைரியமான பெண்ணாக பார்த்தவருக்கு அவள் சொன்ன ஷயங்கள் விஜித்திரமாக இருந்தது. இருப்பினும், அவள் மீது அதிக மரியாதை வந்ததே தவிர அவளை ஒதுக்கவில்லை. மாஸ்ட்டர் ஆறுதலாக பேசியது அவளுக்கு ஆனந்த கண்ணீரை வரவழைத்தது.


உலகில் கடவுளே இல்லை என்று நினைக்கும்போது தான் ஏதோ ஒரு ரூபத்தில் கடவுள் வருவார். தேவிக்கு அந்நேரம் தெய்வமாக தெரிந்தவர் மாஸ்ட்டர் தான். தற்கொலை முயற்சியை கைவிட்டாள்.


மாஸ்ட்டரின் ஊக்கத்தால் போட்டிக்காக தீவிரமாக பயிற்சி செய்தாள். பள்ளியில் மறுபடியும் சேர்த்து கொள்ளும்படி தேவி சார்பாக மாஸ்ட்டர் பேசினார். ஆனால், எதுவுமே வேலைக்கு ஆகவில்லை. கடைசியில் வேறு ஒரு பள்ளியில் கஷ்டப்பட்டு சேர்ந்து படிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டாள் தேவி. மிகுந்த சிரமத்துடன் பள்ளி படிப்பை முடித்து, sports science மேற்கல்வி படிப்பை படித்தாள்.


பல போட்டிகளில் பங்குபெற்று தனது குருவுக்கு பெருமையை தேடி தந்தாள். தானாகவே ஒரு உடற்பயிற்சி நிலையத்தை உருவாக்கி, பலவித உடற்பயிற்சிகளை சொல்லிகொடுத்து கொண்டிருக்கிறாள் தேவி. காலேஜ் படிக்கும்போதே, தனது சிகை உடை அலங்காரத்தை முற்றிலுமாக மாற்றிகொண்டாள்.


தன் மனதிற்கு ஒரு உருவம் வேண்டும் என்பதற்காக தான் மாற்றி கொண்டாளே தவிர வெளிஉலகத்திற்கு தான் ஒரு lesbian என்று காட்டவேண்டும் என்பதற்காக ஒரு போதும் தன்னை மாற்றிகொள்ளவில்லை.

***

"actually கீதா, தேவியோட இந்த quality தான் என்னைய ரொம்ப ஈர்த்துச்சு. அவ யாருன்னு அவளுக்கு தெரியும்....ஆனா அத வெளிப்படையா காட்டனும்னு அவசியம் இல்லேன்னு நினைக்குற ஆளு. that's what i really really like about her." ரினிஷா சொல்லவும் தேவி குளித்துமுடித்து வரவும் சரியாக இருந்தது.


தேவி, "நீங்க யாரும் இன்னும் சாப்பிடாம இருக்கீங்க? let's eat. i am damn hungry man." என்றபடி மேசையை சுத்தம் செய்தாள். ரினிஷா உணவை மேசையில் கொண்டு வந்து வைத்தாள். சொன்ன கதையை கொஞ்சம் கொஞ்சமாக ஜீரணித்து கொண்டு இருந்தாள் கீதா. இன்னும் மீளாத கீதா,


"எப்படி தேவி....இவ்வளவு கஷ்டங்களையும்....?" என்றாள்.


சிரித்துகொண்டே, "இதலாம் ஒரு கஷ்டம்னு நினைக்க முடியாது. உலகத்துல எத்தனையோ பேரு.....take for instance....கை கால் இல்லாதவங்க, சந்தோஷமா வாழ்க்கைய ஓட்டிகிட்டு இருக்காங்க ஏதோ ஒரு வகையில. அவங்களோட நிலைமைய பாக்கும்போது நம்மளோடது எல்லாம் nothing."


கீதாவிற்கு உணவு பரிமாறப்பட்டது.


"இன்னும் கொஞ்சம் போடவா?" ரினிஷா உபசரித்தாள்.


சாப்பிட்டு முடித்தபிறகு, ரி்னிஷா பழங்கள் கொண்டு வந்தாள். அதற்கு தேவி, "டியர், நான் உன்கிட்ட எத்தன தடவ சொல்லியிருக்கேன். fruits should be taken before meals. not after meals. indigestion வரும் பா...." சற்று கோபித்து கொண்டாள்.


சிரித்தபடி ரினிஷா, "ஓ...shut up man! நீயும் உன் factsம். ஏதோ சாப்பிட்டோமா இருந்தோமான்னு இல்லமா எப்ப பாத்தாலும் ஒரு கருத்து....." தேவியின் முடியை செல்லமாய் கலைத்துவிட்டாள்.


"சரியா சாப்பிடாம இருந்தா, இந்த மாதிரி கண்ட இடத்துல கொழுப்பு வந்திடும்." ரினிஷாவின் இடுப்பை கிள்ளினாள் தேவி.


"oh just shut up man!" சிரித்துகொண்டு மேசையில் இருந்த தட்டுகளை எடுத்து சென்றாள்.


இருவரின் கிண்டலை பார்த்து ரசித்தாள் கீதா. தேவியிடம் கீதா, "ரினிஷாவ உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா?"


புன்னகையித்தாள் தேவி. சோபாவில் உட்கார்ந்திருந்த கீதா-தேவியுடன் சேர்ந்து கொண்டாள் ரினிஷா.


"ரினிஷா, நீங்க எப்படி தேவிய மீட் பண்ணீங்க? அந்த கதைய சொல்லவே இல்ல...." கீதா கேட்டாள்.


"ஓ...bedtime story கேக்கனுமா?" கிண்டல் அடித்தாள் தேவி. தொடர்ந்தாள் கதையை....


***

ரினிஷா நிறைய பொது தொண்டு செய்வதில் ஆர்வம் உடையவள். பல்வேறு மருத்துவமனைகளில் ரத்த தானம் முகாம் நடத்தி வந்தாள். தேவிக்கு இரத்த தானம் கொடுக்கும் பழக்கம் உண்டு. அப்படி ஒரு முறை தேவி தன் வீட்டு பக்கத்தில் இருக்கும் மருத்துவமனையில் ரத்த தானம் கொடுக்கும்போது தான் முதன்முறையாக ரினிஷாவை பார்த்தாள்.

அன்று ரினிஷா வழக்கம்போல் எல்லாரிடமும் சிரித்துபேசி கொண்டு இருந்தாள். registration formயை கவுண்ட்டரில் கொடுத்தாள் தேவி. அங்கு இருந்து ரினிஷா விவரங்களை சரி பார்த்தாள்,

"ம்ம்ம்.....name.......home address......date of birth......" பிறந்த தேதியை பார்த்தபிறகு ஆச்சிரியம் அடைந்தாள்.

"அட நானும் 19th august தான்...ஆனா உங்களவிட ஒரு வயசு கம்மி" புன்னகையித்தபடி சொன்னாள் ரினிஷா. புதிய நபர்களிடம் அதிகம் பேசாத தேவி எப்போதும் போலவே புன்னகையை பதிலாய் வீசினாள்.

முகாமை முடித்துவிட்டு கிளம்ப தயாரானாள் ரினிஷா.

தேவி வந்த வேலையை முடித்து கொண்டு தன் பைக்கை ஸ்ட்டார்ட் செய்யும்போது மழை ஜோராக பெய்ய தொடங்கியது.

நனைந்தபடியே மருத்துவமனை கேட் அருகே நின்றுகொண்டிருந்தாள் ரினிஷா call taxiக்காக. அவளை கடந்து வேகமாக சென்றாள் தேவி தனது பைக்கில். ஆனால் ஏனோ தெரியவில்லை தேவி பைக்கை reverse செய்தாள். ரினிஷா பக்கம் வந்தாள்......

(தொடரும்)

பகுதி 5

Aug 23, 2009

கந்தசாமி- நொந்து maggi noodlesaa போயிட்டேன் சாமி!

தமிழ் சினிமாவின் கஷ்டகாலமோ இல்ல என் கஷ்டகாலமோ நான் சமீபத்தில் பார்த்த எந்த படமும் நல்லாவே இருப்பதில்ல! (ஏன் கந்தசாமி..ஏன்? நான் கடவுள சொன்னேன்?)

நேத்திக்கு நைட் ஷோ பார்த்தேன். சாரி.... படத்து தூங்கிட்டேன். கடைசி ஒரு மணி நேரம் நல்லா தூங்கிட்டேன். படம் முடிஞ்சி அக்கா எழுப்பிவிட்டாள். படத்தைவிட பின்னாடி, ஏதோ அடிதடி நடந்துச்சு....அது இன்னும் சுவாரஸ்சியமா இருந்துச்சு!!

சில கேள்விகள்:

1) சுசி கணேசன், உங்களுக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசையா? முழு படத்தில் ஹீரோவா நடிக்கலாமே. இந்த படத்துல வந்த மாதிரி ஒரு சின்ன ரோல் பண்ணாம, முழு நீள படத்தில் நடிங்க, கலைப்புலி தாணுவே காசு போடுவாரு!

2) கலைப்புலி தாணு ஐயா, வெளியே போயிட்டு வர ஆட்டோ செலவுக்கு காசு ஏதேனும் வேணும்ன்னா சொல்லுங்க...... கந்தசாமி கடவுள்கிட்ட லெட்டர் எழுதி போடுவோம்!

3) சேவல் முருகன் அவதாரம்.... சரி ஏதோ ஒத்துகிறேன்....அப்பரம் ஏன்ய்யா மியாவ் மியாவ் பூனைக்குட்டி பாட்டு வந்துச்சு? பூனைக்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்?

4) அடுத்த படத்தில் ஸ்ரேயாவுக்கு (அப்படி அந்த வாய்ப்பு அவங்களுக்கு இருந்தா), தோழி வேடம் இருந்தால் என்னைய கூப்பிடுங்க. தோழி அவங்களுக்கு அறைவிடுற மாதிரி ஒரு சீன் வைங்க. நான் அந்த தோழி ரோல் செய்யுறேன்..... ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

5) ஸ்ரேயாவுக்கு சரியா payment கொடுக்கல்ல....டப்பிங் 'ஜகஜோதியா' இருக்கு!

6) விக்ரம் அங்கிள், ஆமா அங்கிள்....உங்க முகத்துல வயதான கலை தெரியுது... அதான் அப்படி கூப்பிட்டேன். அங்கிள் ப்ளீஸ், இனிமேலு இந்த மாதிரி சூப்பர்ஹீரோ படம் பண்ணாதீங்க. எனக்கு வாந்தி, பேதி, மயக்கம், தலைவலி இப்படி பன்றி காய்ச்சல் symptomsம் வருது!

7) மெக்சிகோ நாட்டுக்கு கதை ஏன் போனுச்சு? சரி கதையே இல்லேங்கிறீங்களா, சரி ரைட்டு விடுங்க.

8) வடிவேலு சார், நீங்க வேற ஏதாச்சு business செய்யுங்களேன்....அதான் காமெடி ஸ்டாக் முடிஞ்சு போச்சே!

9) பிரபு தாத்தா, உங்கள நினைச்சா எனக்கு சிப்பு தான் வருது. எங்க ஊருல ஒரு போலீஸ் வேலை இருக்கு. வந்து பாக்குறீங்களா?

10) கடைசி ஒன்னே ஒன்னு கேட்டுகிறேன். 'என் பெயரு மீனாகுமாரி' பாடலை பார்த்து முகம் சுளித்து வாய், மூக்கு எல்லாம் கோணிக்கிட்டு போச்சு. மருந்து அனுப்பி வைங்க, 'கந்தசாமி' படக்குழுவினரே!! அந்த பாடலை பார்த்து, அழ ஆரம்பிச்ச என் சித்தி பையன் இன்னும் அழுதுகிட்டு இருக்கான். மந்திரிச்சு விடனும்னு நினைக்குறேன். யாராச்சு சாமியார் கிடைப்பாங்களா?

சூப்பர்ஹீரோ படம் அடுத்து சூர்யா 'ஆதவன்' அப்படி பண்ணுறாராம். சூர்யா, பாத்து பண்ணுங்க!!

கந்தசாமி- நொந்து maggi noodlesஆ போயிட்டேன் சாமி!

Aug 21, 2009

எனக்கே என்னை தெரியாமல்-3

பகுதி 1 

பகுதி 2

"ட்ட்ரீரீரீங்........ட்ட்ரீரீரீங்...." வாசல்மணி ஒலி எழுப்பியது. கதவை திறந்தாள் ரினிஷா.


"ஹாய்....கீதா...வல்கம்" புன்னகையுடன் ரினிஷா. வரும்வழியில் கற்பனை செய்ததைவிட பல மடங்கு அழகாய் இருந்தாள் ரினிஷா.


பதிலுக்கு கீதா நன்றி என்பதுபோல் சற்று தலையாட்டினாள். வீட்டை சுற்றிபார்த்தாள் கீதா. "வாவ்...so beautiful man! எப்படி இவ்வளவு அழகா வச்சு இருக்கீங்க வீட்ட? nice man...really nice." பூரிப்பு அடைந்தாள் கீதா.



மாறாத புன்னகையுடன் ரினிஷா, "நம்மள சுத்தி எல்லாமே அழகா இருக்கனும்னு நினைக்குற ஒரே இடம் வீடு தான். வெளியே போனோம்னா, அத எதிர்பார்க்க முடியாதுல.....அதான்....."



ரினிஷா சொன்னதில் உள்ள ஆழ்ந்த அர்த்தம் கீதாவிற்கு புரிந்தது. பிடித்தும் இருந்தது. "நீங்க ரெண்டு பேரும் பேசிகிட்டு இருங்க.... i'll go freshen up. alrite?" என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்றாள் தேவி. அவள் சென்றபிறகு, கீதாவும் ரினிஷாவும் பேசிகொள்ளவில்லை. ஹால் ஒரே அமைதியாகவே இருந்தது. கீதாவிற்கு எப்படி, எதை கேட்பது என்று தெரியவில்லை. கீதாவின் முகத்தில் ஓடிய குழப்ப நிலைகளை அறிந்த ரினிஷா,



"என்னமோ கேட்கனும்னு இருக்க...ஆனா....சொல்ல கஷ்டப்படுற....." புன்னகையிட்டாள். தொடர்ந்தாள் ரினிஷா,



"don't worry.....எதுவா இருந்தாலும் சொல்லுங்க..... "



கீதா, "இல்ல....நீங்களும் தேவியும் எப்படி....."



ரினிஷா, "எப்படின்னா?...."



கீதா, "இல்ல...எப்படி ஒன்னா....ஒரே வீட்டுல.....actually how did u people got to know each other."

கொஞ்சம் சிரித்தாள் ரினிஷா. "இன்னிக்கு நைட் ஒரு flashback கேட்டே ஆகனும்னு இருக்க போல...." மறுபடியும் சிரித்தாள்.

***
சின்ன வயதிலிருந்தே 'tomboy' போல தான் திரிந்தாள் தேவி. இதற்கு காரணம் அவர்கள் வீட்டில் இருந்தவர்கள் என்று ஒரு வாக்கியத்தில் சொல்லிவிட முடியாது. பாட்டியிடம் வளர்ந்தவள். அப்பா இன்னொருத்தி வீட்டில். அம்மாவோ சூதாட்டாக்காரி. பல இடங்களில் கடன். தேவியின் இரண்டு அண்ணன்களும் தேவியை போட்டு அடித்து விளையாடுவதையே பொழுது போக்காக வைத்திருந்தார்கள். நிம்மதி இல்லாத சூழலில் இருந்து விடபட வேண்டும் என்று தேவி ஆசைப்பட்டாள்.

எது செய்வதாக இருந்தாலும் தனியாக செய்தாள். குடும்பத்தின் மீது வெறுப்பு. தனித்து வாழ வேண்டும் என்று திட்டவட்டமாக முடிவு செய்தாள். தன்னை தைரியமான நபராக மாற்றி கொள்ள கராத்தே, கிக்-பாக்சிங் போன்ற நடவடிக்கைகளில் ஈடுப்பட்டாள். பள்ளி ஹாக்கி குழுவில் இருந்தாள்.
தன் கிக் பாக்சிங் மாஸ்டர் தான் தேவிக்கு பெரிய inspiration. அவரின் mannerism, style, பேசும்விதம் இவற்றால் பெரிதும் கவரப்பட்டாள். ஆனால் சதாரண பெண் போல் அவரின் மீது ஆசை வரவில்லை. அதையும் தாண்டி ஒரு எண்ணம். அவரை போலவே இருக்க வேண்டும், அவரை மாதிரியே மாற வேண்டும் என்று பைத்தியம் போல் சுற்றினாள்.

அவர் செய்யும் உடற்பயிற்சிகளையும் weight-lifting பயிற்சிகளையும் தேவியும் பின்பற்றினாள். நீட்டமாக இருந்த முடியை வெட்டினாள். மாஸ்டர் வலது கையில் போட்டிருக்கும் வளையம் போலவே தானும் போட்டு கொண்டாள். தன் அறை அலமாரியில் நிறைய polo t-shirts தொங்க ஆரம்பித்தன. தனக்குள் ஏதோ ஒன்று மாறுவதை உணர்ந்தாள். இருப்பினும் அது அவளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. அவளின் மாற்றங்கள் மற்ற யாருக்கும் தெரியவில்லை. வீட்டில் யாரேனும் கவனித்தால் தானே.

பள்ளி இறுதியாண்டில் பாட்டின் இறப்பு அவளை பாதித்தது. இருந்த ஒரு துணையும் இல்லை. அண்ணன்கள் அவளின் உடை மாற்றங்களை பார்த்து, "டேய் எனக்கு தங்கச்சி இல்லடா. தம்பி பொறந்து இருக்கான்." என்று கிண்டலும் கேலியும் செய்தார்கள். அப்போது தான் உணர்ந்தாள் தான் செய்யும் விஷங்கள் மற்றவர்கள் கண்களில் தென்படுவதை.
அழுது புரள ஒரு மடி இல்லை. ஆறுதலுக்கு அவ்வளவாக தோழிகளும் இல்லை. பாலைவானத்தில் தண்ணீர் தேடினாள் தேவி. மற்றவர்களின் கேலி பேச்சுக்கு ஆளாகினாள். வகுப்பு மாணவர்களிடம் பேசுவதை முற்றிலும் தவிர்த்தாள்.

ஒரு நாள் ஹாக்கி பயிற்சி முடிந்து உடை மாற்றுவதற்காக அனைத்து பெண்களும் changing roomகளுக்கு சென்றன. அப்போது தனியாக உட்கார்ந்து காலணிகளை கழற்றிகொண்டிருந்தாள். குளித்துவிட்டு வந்தனர் சில பெண்கள்; உடம்பில் துண்டுகளை மட்டும் கட்டி கொண்டு. தேவி உட்கார்ந்திருக்கும் எதிர்புரத்தில் தான் அந்த 4 பெண்கள் பேசி சிரித்து கொண்டிருந்தனர். தாங்கள் பேசும் சுவாரஸ்சியத்தில், அதில் இருந்த ஒரு பெண் தன் துண்டு அவிழ்ந்துவிடும் நிலையில் இருப்பதைகூட கவனிக்கவில்லை. துண்டின் நிலையை கண்ட தேவி அந்த பெண்ணிடம் சொல்வதற்காக அவளை நோக்கி ஓடினாள்.

தேவி அந்த துண்டை பிடித்தாள்; அவிழ்ந்துவிட்டது!

தேவி தான் வேண்டும் என்றே துண்டை அவிழ்த்துவிட்டாள் என்று ஒருத்தி கத்தினாள். அனைவருக்கும் அதிர்ச்சி! அந்த பெண் தேவியின் கன்னத்தில் பளார் என்று அறைந்தாள். பெற்ற பெண்கள் தேவியை சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்து நொறுக்கினார்கள். வலி, வேதனை, அவமானம்!
பள்ளி நிறுவனத்திற்கு செய்தி தெரிந்துவிட்டது. தேவி ஒரு பெண்ணாக இல்லாமல் வேறு ஒருவிதமாக நடந்துகொள்வதை குற்றம் என்றனர்.தேவியின் இந்த சிந்தனை தான் பெண்களிடம் தவறாக நடந்துகொள்ள அவளை தூண்டியது என்றனர்.

உண்மை எனவென்று தெரியாமல் பேசுகிறார்களே என்று தேவி வடித்த கண்ணீர் துளிகள் எல்லை இல்லை. தேவியை பள்ளியில் இருந்து நீக்கினார்கள். பள்ளியில் பிரச்சனை எல்லாம் முடிந்து வீட்டிற்கு போகும்போது மணி 11. கயிறா? தலைவலி மாத்திரையா? கீழே விழுவதா? என்று பல யோசனைகள். மரண வலியை விலை கொடுத்து வாங்கினாள்.
"சார், மூன்னு பாக்கெட் தலவலி மாத்திர கொடுங்க...." பணத்தை நீட்டினாள் கடைக்காரரிடம்.

(தொடரும்)

பகுதி 4

பகுதி 5

Aug 11, 2009

எனக்கே என்னை தெரியாமல்-2

பகுதி 1


திடுக்கிட்டு போனாள் அவள். தேவி புன்னகையுடன், "ஐ எம் தேவி..." என்றாள்.


ஆச்சிரியத்துடன் அவள், "நீங்க யாரு...."


"உங்கள கொஞ்ச நேரமா கவனிச்சேன். mostly, அந்த பேப்பர யாரும் கண்டுகொள்ள மாட்டாங்க. அப்படி நீங்க தேடி வந்து பாத்தீங்கன்னா...you really need some help i think. ஒன்னும் பயப்படாதீங்க... நான் இந்த அக்னி மன்றத்துல தான் இருக்கேன்." என்றாள் தேவி, கை குலக்குவதற்காக கைகளை நீட்டினாள்.


ஏதோ தொலைந்து போன குழந்தையை மறுபடியும் பார்த்ததுபோல் அந்த பெண்மணி முகத்தில் ஒரு மறுமலர்ச்சி, மகிழ்ச்சி, நிம்மதி. சற்று தன்மையான குரலில், "அப்ப நீங்க...." என்று இழுத்தாள்.


"yes... you are right. i am a lesbian."


அந்த பெண்மணிக்கு மறுபடியும் ஆச்சிரியம். "ஓ...நான் கீதா..." தேவியுடன் கைகுலுக்கி கொண்டாள். ஆனால், மறுநொடியே ஒரு சோக ரேகை பரவியது கீதாவின் முகத்தில். அதை முற்றிலும் புரிந்து கொண்ட தேவி,


"வா கீதா...அந்த காபி ஷாப்புல பேசலாமா?" என்று சொன்னாள்.


"2 cappuccino." ஆர்டர் செய்தாள் தேவி.



"என்னால முடியல தேவி. ஏன் எனக்குள்ள இப்படி...." கண்கள் குளமாகி கன்னங்களில் அருவியாய் ஊற்றியது. தேவி எதுவும் பேசவில்லை. கீதாவை சற்று நேரம் அழவிட்டாள். உலகத்திலுள்ள பல பிரச்சனைகளின் முதல் எழுத்தும் கண்ணீர் தான், முற்றுப்புள்ளியும் கண்ணீர் தான். மேசையில் இருந்த tissue paperரை எடுத்து கொடுத்தாள் தேவி.

அழுகையின் நடுவே, "thanks" தேவி கொடுத்ததை வாங்கி கொண்டாள்.

"நான் ஏன் இப்படி இருக்கேன்?" கீதா தேம்பி அழுதாள்.

"எப்படி?" தேவி கேட்டாள். இந்த கேள்வி கீதாவிற்கு ஆச்சிரியமாக இருந்தது.

boy-cut hairstyle, baggy shirt, wrist band,one side ear stud-கீதாவின் தோற்றம். தன்னை ஒரு முறை பார்த்தவாறு, "இந்த மாதிரி டிரஸ் பண்ணியிருக்கேன்.... என்னால normal girlஆ இருக்க முடியல." அழுகை நின்றது.

ஆர்டர் செய்த cappuccino வந்தது. அதை குடித்துகொண்டே தேவி, "so இப்படி டிரஸ் போட்டா lesbianனு யாரு சொன்னது?"

இந்த கேள்வி கீதாவை சிந்திக்க வைத்தது. மேலும் குழம்பி போனாள்.

"இங்க பாரு கீதா...dressing sense and fashion have got nothing to do with who you are. உன் மனசுக்குள்ள இருக்குற ஃவீலிங்ஸ் தான் முக்கியம். there are lesbians who wear normal girls' outfits.....sarees....punjabi suits.... நம்ம society இருக்குற பெரிய தப்பே அது தான். we try to label people according to what they wear. இந்த மாதிரி superficial things எல்லாம் தூக்கி போடு. உன் மனசுல என்ன தோணுது?" கீதாவின் சில குழப்பங்களுக்கு விடை அளித்ததுபோல் இருந்தாலும் அவள் மேலும் குழப்பம் அடைந்தாள்.

கீதா, " என்னால ஒரு பொண்ணு மாதிரி நடந்துக்க முடியல....i am not feminine at all."

வேறு ஏதேனும் ஆர்டர் வேண்டுமா என்று கேட்பதற்காக வந்தான் சர்வர்.

"இல்ல வேண்டாம்ப்பா..." அனுப்பிவைத்தாள் தேவி.

மீண்டும் கீதாவிடன் தொடர்ந்தாள் தேவி, "இப்ப உனக்கு எத்தன வயசு?"

கீதா, "காலேஜ் first year படிக்குறேன்."

தேவி, "சில பேருக்கு 13, 14 வயசுலே தெரிஞ்சிடும். சில பேருக்கு உன் வயசுல தான் புரியும். ஆனா இன்னும் சில பேருக்கு..... கல்யாணம் ஆனபிறகு தான் புரியும்.... சிலருக்கு 55, 60 வயசு வரைக்கும்கூட தெரியாமலேயே வாழ்ந்துகிட்டு இருப்பாங்க....the most important thing is to take time to self-reflect on yourself. நம்ம இப்படி தான்னு முடிவு எடுத்துட கூடாது உடனே."

கீதா, "நீங்க சொல்றது எனக்கு புரியல்ல...."

தேவி, " Are your feelings for women stronger than your feelings for men? .....Do you get more excited about the idea of kissing a man or kissing a woman? Who do you see yourself settling down with in the future? Are you more physically attracted to men's or women's bodies?
Who do you fantasize about more, men or women?....." என்று வரிசையாக கேள்வி மழை பொழி்ந்தாள்.

இப்படிப்பட்ட கேள்விகளை எதிர்பாராத கீதா முழித்தாள்.

"இந்த கேள்விகளுக்கு பதில் இருக்கனும்னு அவசியமில்ல. எல்லாத்துக்கும் ஆம் என்ற பதில் வரனும்னு அவசியம் இல்ல. மனசு சம்மந்தப்பட்ட விஷயம். ஆனா...முடிவு உன் கையில தான். மத்தவங்களுக்காக உன்னைய மாத்திக்க வேண்டியது இல்ல. மாத்திக்காம இருக்கவும் தேவையில்ல." தேவியின் கேள்வியும் பதிலும் கீதாவின் மனதை திறப்பதுபோல் இருந்தது.

கீதா, "ஏன் இந்த complications.....?"

தேவி, "நம்ம இருக்குற உலகம் அப்படி. lesbians/gays ஏத்துக்குற மனபக்குவம் இல்ல. கடவுள் எப்படி ஆண் பெண் படைச்சாரோ அப்படி தான் என்னையும் படைச்சார். if people think we are going against nature.... that's wrong. in fact we are embracing nature. we accept the changes within ourselves...... which is natural!"

தேவியுடன் அமைந்த உரையாடல் ஒருவித புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது கீதாவிற்கு. தாழ்வுமனபான்மை நீங்கியது போல் உணர்ந்தாள். "நீங்க எப்படி உணர்ந்தீ்ங்க? சின்ன வயசுலே...you knew you were like this?" கீதாவிற்கு தேவியின் வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமா இருந்தது.

சிரித்தவாறு, "i learnt it the hard way. இந்த மாதிரி எடுத்து சொல்ல ஆளு இல்ல. எந்த மன்றமும் கிடையாது...."

கீதா, "அப்பரம் எப்படி?"

தேவி, "கஷ்டப்பட்டு..... கொஞ்ச அடிப்பட்டு.... நிறைய அழுகை...அவமானம்... வெறுப்பு.... தற்கொலை முயற்சிகூட பண்ணியிருக்கேன்..... " சிரித்தாள்.

கண்கள் ஆச்சிரியத்தில் விரிந்தன கீதாவிற்கு. வாயை விரல்களால் பொத்தியபடி, "ஐயோ! அப்பரம் என்ன ஆச்சு?"

அச்சமயம் தேவியின் கைபேசி அலறியது மறுமுனையில் ரினிஷா. தேவி நடந்தவற்றை கூறினாள் ரினிஷாவிடம்.

ரினிஷா, "oh god, is she ok now? you wanna invite her for dinner at our place tonight. நேரம் ஆச்சு டா."

தேவி, "ok sure. don't worry. we'll be there soon."

பேசிமுடித்தபிறகு தேவி கீதாவை அவள் வீட்டிற்கு அழைத்தாள். தேவியை பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் கீதாவை, "no problem... let's go." என்று சொல்ல வைத்தது. கீதாவின் மனதில் ஓடி கொண்டிருந்த கேள்வியை கேட்டுவிட வேண்டும் என்று துடிதுடித்தாள்.

பைக்கில் ஏறுவதற்கு முன் கீதா, "தேவி....ரினிஷா வந்து....உங்க..." இழுத்தாள்.

தேவி, "we are in a relationship. staying together." தனது helmetடை போட்டுகொண்டாள்.

தொடரும்....


பகுதி 3

பகுதி 4

பகுதி 5

Aug 10, 2009

எனக்கே என்னை தெரியாமல்-1

தேவி தன் வேலையை முடித்துவிட்டு 'அக்னி' மன்றத்திற்கு சென்றாள். வேலை இடத்திலிருந்து 20 நிமிடங்கள் தூரம் தான். பைக் கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தாள். முடி கலைந்திருந்தது. சீப்பை எடுத்து சரியாய் சீவி கொண்டாள். பைக்கை ஸ்டார்ட் செய்து 80km/hr வேகத்தில் ஓட்டினாள். மன்றத்தை அடைந்ததும் அலுவலக அறைக்குள் நுழைந்தாள். அலுவலக ஃபோன் மணி ஒலித்தது. தேவி எடுத்தாள்.

"ஹேலோ இது அக்குனியா??....." மறுமுனையில் இருந்தவன் பீர் அடித்துவிட்டு உளறுகிறான் என்பதை அறிந்து கொண்டாள் தேவி.

பொறுமையாக தேவி, "ஆமா...சொல்லுங்க"

"நாங்க இங்க 10 பசங்க இருக்குறோம்.... ஜாலியா இருக்க பொண்ணுங்க வேணும்... அனுப்ப முடியுமா? என்ன ரேட்டு?" என்று உளறிகொண்டே சிரிக்க, அவன் பின்னாடி இருந்தவர்களும் சேர்ந்து சிரிக்கும் சத்தம் கேட்டது தேவிக்கு. உடனே ஃபோனை வைத்தாள். மறுபடியும் ஃபோன் ஒலித்தது.

"hey you f***ing bitc***..... என்னடி உனக்கு இவ்வளவு கொழுப்பு....வா டி பேசாம?" என்றான் அதே குடிக்காரன்.

பொறுமையை இழந்த நேரத்தில் தேவி ஃபோனில் கத்தலாம் என்று வாயை திறக்கும்போது அங்கு வந்தாள் விம்ஸ். புருவங்கள் சுருங்கி, கோபத்தில் கன்னம் சிவக்க, காட்சியளித்த தேவியிடம் விம்ஸ், "என்ன ஆச்சு?"

ஃபோன் ரிசீவரை கையில் பொத்தியபடி நடந்தவற்றை விம்ஸிடம் கூறினாள். விம்ஸ் உடனே ஃபோனை வாங்கி கொண்டாள், போதையில் உளறியவனின் அட்ரஸை வாங்கிகொண்டாள் நாசுக்காய். அடுத்த நொடி காவலர்களுக்கு ஃபோன் செய்து புகார் செய்தாள்.

"இந்த பொறுக்கி பசங்கள இப்படி தான் டீல் பண்ணனும் தேவி! take it easy man! cool..." என்று தேவியின் தோளில் தட்டினாள்.

"do you want coffee?" காபி dispenser பக்கத்தில் சென்ற விம்ஸ். வேண்டாம் என்பதுபோல் தலை அசைத்தாள் தேவி. சிறிது நேரத்தில் மன்றத்திற்கு 10 பேருக்கு மேல் வந்தனர். அலுவலக conference அறையில் மீட்டிங் ஆரம்பித்தது 645 மணி அளவில். மன்ற தலைவர் ஒரு கோப்பை மேசையில் வைத்தார்.

கோப்பில் அச்சடிக்கப்பட்ட வார்த்தைகள்- Agni Welfare Organisation for Lesbians. அங்கு அறையில் இருந்த அனைவரும் லெஸ்பியன்கள் தேவி உட்பட.

"அக்னி" பாதிக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட லெஸ்பியனுகளுக்காக உருவாக்கப்பட்ட மன்றம். இதில் பல உறுப்பினர்கள் உள்ளனர். இன்று வந்திருந்த 10 பேர் மன்றத்தின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள். பல கஷ்டங்களுக்கு நடவே சிரமப்பட்ட இந்த மன்றத்தை நடத்தி வருகிறார்கள். முழு நேரமாக வேறு வேலைகள் செய்தாலும் பகுதி நேரமாக மன்றத்திற்காக வேலை செய்கிறார்கள்.

மீட்டிங்கில் பலவற்றை பேசி ஆராய்ந்தனர். இந்த மாதம் மன்றத்திற்கு உதவி கேட்டு வந்தவர்களின் எண்ணிக்கை, மன்றத்தை பற்றி எவ்வாறு பொது மக்களிடம் தெரிவிக்கலாம் ஆகியவற்றை பற்றி பேச்சு நடக்கையில் விமஸ் அந்த குடிக்காரன் பிரச்சனையை சொன்னாள். மன்றத்தலைவர்,

"நம்ம ஒரு நல்லது பண்றதுக்காக, ரயில்வேஸ், பஸ், சூப்பர்மார்க்கேட்ல brochures வைக்குறோம்...ஆனா இந்த மாதிரி ஆளுங்க அதுல இருக்குற நம்பர பாத்து...ச்சே..." தலையில் கைவைத்தார்.

“இதுக்கு ஒரு முடிவு கட்ட முடியாதா?” என்றார் ஒருவர்.

“இந்த உலகத்துல கடைசி மனுஷன் இருக்குற வரை அது கஷ்டம்.” புன்னகையித்தார் இன்னொருவர்.

கையில் இருந்த மாத ரீப்போர்ட்டை படித்தார் தலைவர், “இந்த மாதம் உதவிக்கு வந்தவங்க 87 பேர். இவங்கள 42 உறுப்பினரா சேந்துட்டாங்க. இவங்கள 37% வேலை பாக்குறாங்க. 41% படிச்சுகிட்டு இருக்காங்க. 22% பேர் 55 வயதை தாண்டியவங்க."

மீட்டிங் தொடர்ந்தது. மணி 8. விடைபெற்று கொண்டு அனைவரும் வீட்டிற்கு கிளம்பினர்.

போகும் வழியில் விம்ஸ், "தேவி, நாங்கலாம் டினர் சாப்பிட போறோம். join us man!"

தேவி, "இல்ல..... ரினிஷா எனக்காக வேட் பண்ணிக்கிட்டு இருப்பா...i got to go." புன்னகையித்தாள்.

விமஸ், "no problem then. you take care dude. see you soon!"



தனது பைக்கை ஸ்ட்டார்ட் பண்ண போகும்போது ரினிஷாவிடமிருந்து ஒரு ஸ் எம் ஸ், 'dear, get some cheese and a loaf of bread.' குறுந்தகவலை படித்துமுடித்த தேவி தனது பையில் கைபேசியை போட்டாள். சூப்பர்மார்க்கெட்டுக்கு நடையை கட்டினாள். பொருட்களுக்கு காசு கட்டுவதற்காக கியூவில் நின்றபோது ஒன்றை கவனித்தாள் தேவி-'அக்னி' மன்ற தகவல்களை கொண்ட information paperகள் கை துடைக்கவும் பொட்டலம் மடிக்கவும் பயன்படுத்தப்படுவதை. அவளுக்கு கோபம் வந்தது. இருந்தாலும், ஒன்றும் சொல்லவும் முடியவில்லை, ஏதேனும் செய்யவும் முடியவில்லை.



கொஞ்ச நேரம் அதையே கவனித்து கொண்டிருந்தாள். சிறு பிள்ளைகள் அந்த தாட்களை எடுத்து பேப்பர் விமானம் செய்வதை பார்த்தாள். அச்சமயம் ஒரு பெண்மணி, சுமார் 20 வயது இருக்கும் யாரும் கவனிக்காத நேரம் பார்த்து ஒரு பேப்பரை தன் பையில் திணித்தாள். அந்த பெண்மணியின் கண்கள் திருதிருவென்று முழித்தன. தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதிசெய்ய சுற்றும்முற்றும் பார்த்தாள்.

அந்த பெண்மணி ஒரு மூலைக்கு சென்று தகவல் பேப்பரிலிருந்த ஃபோன் நம்பரை தனது கைபேசியில் குறித்துகொண்டாள். தேவி அந்த பெண்மணியின் கண்களை பார்த்தாள். கண்கள் கலங்கியிருந்தன. தேவி அவளை நோக்கி நடந்தாள். திரும்பி நின்றுகொண்டிருந்தவளின் தோளில் கைவைத்தாள் தேவி.....

(பகுதி 2)

பகுதி 3

பகுதி 4

பகுதி 5