Showing posts with label பயணம். Show all posts
Showing posts with label பயணம். Show all posts

Jun 20, 2018

[பயணம்- movieworld, Gold Coast] சூப்பர்மேனை சந்தித்த போது

Movieworld- Gold Coast, Australia. (உல்லாச பூங்கா)

Brisbaneலிருந்து ஒரு மணி நேரத்தில் உல்லாச பூங்காவிற்கு சென்றுவிடலாம். நுழைவு கட்டணம் கொஞ்சம் பதற வைச்சாலும், வாழ்க்கைல ஒரே ஒரு தடவ போற இடம் இதலாம். ஆக, அத பத்தி ரொம்ப யோசிக்காம போயிடனும். இணையத்தில் கட்டணம் பதிவு செஞ்சா, இன்னும் மலிவு, அங்க நேரடியா போய் டிக்கெட் வாங்கினால் கொஞ்சம் அதிகம்.

 


காலையில் 10 மணிக்கு சென்றுவிடலாம். கூட்டம் அதிகம் இருக்காது. அதுவும் பொது விடுமுறை இல்லாமல், சாதாரணமான வார நாள் என்றால் கூட்டம் அவ்வளவா இருக்காது. நுழைஞ்ச உடனே, நீங்க யார இருந்தாலும், டக்குனு சந்தோஷம் ஆயிடுவீங்க. ஒலிக்கப்படும் பிரமாண்ட இசையும், வண்ணமும், ஏகப்பட்ட உணவு பொருளும், ஐஸ்கீரிமும் உங்கள குதுகலம் படுத்தும். 

கொஞ்சம் நேரம் கழித்து, stunt show நடந்தது. கண் முன்னாடி, பறக்கும் வாகனங்களும், தீப்பொறியும் மிரள வைத்து விட்டார்கள். 

street parade ஒரு நிகழ்ச்சி. சாலையில், superhero மற்றும் wonder woman இன்னும் சில கதாபாத்திரங்கள் வந்து சண்டை, நடனம் என்று பல நிகழ்ச்சிகள் நடந்தன. அவற்றையெல்லாம் நின்றுபடியே அல்லது அங்கு அமைக்கப்பட்டிருக்கும் பெஞ்சில் அமர்ந்தபடியே ரசிக்கலாம். இதுல என்ன சுவாரஸ்சியம் என்றால், இந்த கதாபாத்திரங்கள் அனைத்தும் கைக்கு எட்டிய தூரத்தில் பார்க்கலாம்.

முதலில் சூப்பர்மேன் வந்தார். அவருடன் தனியாக படம் எடுத்து கொள்ள, 20டாலர் கொடுத்து அந்த பாக்கியத்தை பெறலாம். ஒரு சுற்று சுற்றி விட்டு, சிறிது நேரம் கழித்து, பேட்மேன் வந்தார்.

என் அம்மா, "ரெண்டு பேரும், அதே ஆளு தான்."

நான்: இல்ல மா! இருக்காது.

அம்மா: இல்ல. ரெண்டும் ஒன்னு தான்.

நான்: எப்படி தெரியும்?

அம்மா: ரெண்டு பேருக்கும்....அதே கண்கள்!

நான்: என்னது அதே கண்ணா? 

அங்க வந்த முக்கால்வாசி, குழந்தைங்க தான். கூட அவங்க பெற்றோர், இல்ல தாத்தா பாட்டி இருந்தாங்க. ஆனா, பெரியவங்க சின்னவங்க என்று வயசு வித்தியாசம் இல்லாம, எல்லாருமே ஆச்சிரியத்துடவும் ஆனந்தத்துடவும் பார்த்தோம், ஒவ்வொரு முறையும் ஒரு சூப்பர்ஹீரோ வந்தபோது.  'எதுக்கு தெரியல, ஆனா, நம்மள காப்பாத்த ஒருத்தர் வந்துட்டார். இவரு இருக்கார் பா அது போதும்," என்ற உணர்வும் அடிப்படை ஏக்கம் கலந்த ஆசை தான், எல்லாருக்கும் சூப்பர் ஹீரோக்களை பிடிக்க காரணமாக இருக்கும் என்று அந்நோடி எனக்கு தோன்றியது. 

                                   

Dec 21, 2011

நிலா அது வானத்து மேலே- (2)

பகுதி 1

பரவாயில்ல நாங்க பஸ்ல போறோம்'னு சொல்லிட்டு கிளம்பி வந்தோம். அச்சமயம் ஒரு பெண் வாகன ஓட்டுநர் (கையில் சிகரெட்) வந்தார். $15க்கு ஓகே சொல்லி ஏறினோம். ஆனால் அவர் main roadலில் போகாமல் சந்துகளில் போனார். ஆள் நடமாட்டமே இல்லை அவ்விடத்தில்....

ஏதோ ஒருவித பயம் மற்ற பெண்களுக்கு. எனக்கு microwave ovenல் உட்கார்ந்து இருப்பது போல் இருந்தேன். அம்புட்டு வெயில்! வாகனத்தில் ஏசி வேற இல்லை! கையில் ஒரு முட்டை இருந்திருந்தால், omeletteஆக மாறி இருக்கும்!

அவர் சந்துகளில் போனதற்கு ஒரு காரணம் இருந்தது. main சாலையில் அதிக traffic என்பதால் அவர் அவ்வாறு செய்தார். அப்போது தான் புரிந்தது- யாரையும் தப்பா நினைக்ககூடாதுன்னு!:))) அவர் எங்களை இறக்கிவிட்டு மீண்டும் இரண்டு மணி நேரத்தில் வருவதாக சொல்லிவிட்டு சென்றார். நாங்கள் நல்லா shopping செய்தோம். ice-lemon tea வாங்கினோம்- சாக்கடை தண்ணிகூட நல்லா இருக்கும்னு அப்போது தான் தோன்றியது!:((

பிறகு, வண்டியில் மீண்டும் கப்பலுக்கு சென்றோம். நான் முதலில் சொன்னதுபோல் கப்பல் உணவை மீண்டும் சுவைத்தோம்! தோழிக்கும் தங்கைக்கும் 'ஐஸ் கீரிம்' man என்று ஒருவர் மீது ஒரு கண்ணு என்று சொல்லியிருந்தேன் அல்லவா- அவருடன் போய் ஃபோட்டோ எடுக்கனும்னு ஒரே அடம் என் தங்கைக்கு! (தூக்கி வளர்த்த துயரம்...)

இந்த மானகெட்ட விளையாட்டுக்கா நான் வரவில்லை என்று சொல்லிவிட்டு சாப்பிட சென்றுவிட்டேன். அதுங்க எப்படியோ போய் ஃபோட்டோ எடுத்து கொண்டனர். ஹாஹா..ஹாஹா...ஆனால், அவர் கண்களை மூடியவாறு எடுத்துவிட்டனர்.

மறுநாள், phuket (thailand) சென்றோம். கடற்கரை ஓரம்! ரொம்ம்ம்ம்ம்ப நல்லா இருந்துச்சு. இந்த வெயில் தவிர இடம் ரொம்ப அருமையா இருந்துச்சு. burger king கடையில் ice-milo வாங்கினோம்- அமர்தம்!! அவ்வளவு இனிப்பா சுவையா இருந்துச்சு. ஆனால், அங்கயும் இந்த 'லொல்லு பசங்க' தொல்லை தாங்கமுடியல்ல. நாங்கள் இந்தியர்கள் என்று தெரியும். ஆக, இந்த கடைக்காரர்கள் (ஆண்கள்) எங்களை பார்த்து, "என்ன சாப்னியா?" (சாப்பிட்டீயா?) என்று கிண்டல் செய்தது சலிப்பை உண்டு பண்ணியது!

இருந்தாலும், 'customer'யை ஈர்க்கும் உத்தி என்று மனதை சமாதானம் செய்து கொண்டு வந்தோம். ஆனால், ஒரு கேள்வி- இதுவே நாங்க ஒரு ஆண் தோழரோடு சென்று இருந்தால், கிண்டல் நடந்து இருக்குமோ??? ஆக, சின்ன பொண்ணுங்கன்னா...கிண்டல் அடிக்கலாமா? என்னமோ போங்க!

ஆனா, என்ன நடந்தாலும் நாங்க சிரித்து கொண்டு எங்கள் கொண்டாடத்தை தொடர்ந்தோம்!

கப்பலில் முக்கால்வாசி நபர்கள் வட இந்தியர்கள் என்பதால் ஒரே ஹிந்தி தான் போங்க! மூன்று நாட்களில் அவ்வளவு இந்தி சொற்களை கற்று கொண்டோன். அறை தொலைக்காட்சியில் zee tv வேற தெரிந்ததா? அதையும் விடவில்லை. ஏதோ ஒரு ஹிந்தி நாடகம்- அந்த ஹீரோயின் microwave ovenல் சில்வர் பாத்திரத்தில் ஒன்றை வைப்பார். அது வெடித்துவிடும். இதை ரெண்டு நாளா காட்டி கொண்டிருந்தான். நாங்கள் எங்களால் முடிந்த அளவு காமெடியும், கலாட்டாவும் அடித்து ரசித்து பார்த்தோம்!

கப்பலில் சென்ற பயணம்- ரொம்ப பிடித்துபோய், வீட்டிற்கு திரும்பவே ஆசை இல்லை. எனக்கு அழுகையே வந்துடுச்சு! வேலையில் ரொம்ப நொந்து போயிருந்த எனக்கு, இது உண்மையாகவே ஒரு ஜாலியான நேரம்!

Dec 17, 2011

நிலா அது வானத்து மேலே- (1)

4d3night cruise tour சென்றுவந்தேன் தோழிகளோடு. வீட்டில் இதுக்கு அனுபதி வாங்குவதே பெரிய விஷயம். எப்படியோ ஓகேன்னு சொன்ன பிறகு, அனுபதி கொடுத்ததற்கே பெரிய பார்ட்டி வச்சு கொண்டாடனும். ஒரு வழியாய் கிளம்பி, சென்ற ஞாயிற்றுகிழமை superstar virgo கப்பலில் சென்றோம்.

நான்கு மணிக்கே உள்ளே சென்றுவிட்டோம். வலது காலை எடுத்து வைத்து சென்றபோது தான் உணர்ந்தேன் கப்பல் உலகம் என்பது வேறு ஒரு உலகம் என்று. அப்படி ஒரு பிரம்மாண்டம். கப்பலில் உள்ளவர்களில் 80% இந்தியர்கள். அதில் 79% honeymoon couples. வட இந்தியர்கள் என்பதால் புதுமண பெண்கள் கையில் வளையல்கள் இருந்தன.

கப்பலில் வேலை பார்க்கும் அனைவரும் அவ்வளவு அழகா இருந்தாங்க- அது பெண்களா இருந்தாலும் சரி ஆண்களா இருந்தாலும் சரி. பொங்கலுக்கே வெடி வெடிப்போம், தீபாவளி வந்தா சும்மாவா. பெயர் தெரியாது, ஆனா, எங்களுக்கு (நான், அக்கா, தங்கை, எனது மற்றும் இரண்டு தோழிகள்) பிடித்தவர்களுக்கு நாங்களே பெயர் வைத்தோம்.

housekeeping வேலை பார்த்தவர்- சீனர். அவருக்கு நாங்கள் வச்ச பெயர் 'சிரிச்ச மச்சான்'. அவர் முகத்தில் எப்போதுமே ஒரு புன்னகை இருக்கும். எங்களது அறையில் இருந்த கழிவறையில் சின்ன பிரச்சனை. எத்தனை முறை சொன்னாலும், சலிப்பு இல்லாமல் எங்களுக்கு உதவினார். அவருடன் ஒரு ஃபோட்டோ எடுத்து கொண்டோம். அவருக்கு அம்புட்டு சந்தோஷம் அதில். இதுவரை யாரும் அப்படி செய்தது இல்லை என நினைக்குறேன்!:)

அப்பரம், தோழி ஒருத்திக்கு அங்கிருந்த chef மீது ஒரு கண்ணு. அவர் ஒரு இரவு எல்லாருக்கும் ஐஸ்கீரிம் கொடுத்து கொண்டிருந்தார்- ஆக, அவருக்கு, 'ஐஸ்கீரிம் man' என பெயர் வைத்தோம்.

சாப்பாடு என்று சொல்லும்போது இதை நான் சொல்லியே ஆகனும். buffet styleல் தினமும் ஆறு வேளை சாப்பாடு- காலை உணவு, காலை தேநீர் டைம், மதிய உணவு, மாலை தேநீர் டைம், இரவு சாப்பாடு, late supper டைம். ஒவ்வொரு வேளையும் கிட்டதட்ட 25 வகை உணவு இருக்கும். சைவம் அசைவம் அனைத்தும் இருக்கும். duck, turkey, lamb இது போன்ற அசைவ உணவும் இருந்தது!!:)

இது தவிர dessertம் உண்டு- பல வகை கேக், பாயாசம். ஆமாங்க, இந்திய உணவும் இருந்தது- ரசம், சாம்பார், நாண், தயிர், அட ஊறுகாய் கூட இருந்தது.... இட்லி கூட இருந்தது அதுவும் சதுரவடிவில்!

கப்பலில் மொத்தம் 13 மாடிகள். பல கேளிக்கை நடவடிக்கைகள். எப்போதுமே கப்பலில் பல இசை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி, ஆடல் பாடல் கொண்டாட்டமாக தான் இருக்கும். நீச்சல் இடம் இருந்தது. இரவில் நாங்கள் 13ஆம் மாடியில் இருந்து, காற்று வாங்குவோம். ஒரு இரவு 'celebrity disco' சென்றோம். ஆனால் நினைத்த அளவு கூட்டம் இல்லை. ஆங்கில பாடல்களும் 'chammak challo' பாடலும் போட்டார்கள்.

ஒரு நாள் மலேசியாவில் இருக்கும் penangல் இறக்கினார்கள். 8 மணி நேரம் கப்பல் அங்கு நிற்கும். ஆசைப்பட்டவர்கள் அவ்வூரை சுற்றி பார்க்கலாம். நாங்களும் சரி சும்மா ஒரு ஷாப்பிங் போயிட்டு வரலாம்னு கிளம்பினோம். இறங்கியவுடன் ஈக்கள்போல் எங்களை சுற்றி வளைத்தனர் அங்கிருந்து வாகன ஓட்டுனர்கள்- ஒரு மணி நேரத்துக்கு எவ்வளவு காசு. அங்கு போகலாம். இந்த மலைய பாக்கலாம்னு ஒரே தொந்தரவு. ஆனால், எங்கள் மனதில் பீதியை கிளப்பியது ஒன்று.

எங்களை பார்த்தவுடன் ஒரு தமிழ் வாகன ஓட்டுனர், "இந்த பொண்ணுங்கள freeயவே ஓட்டிக்கிட்டு போகலாம்' என சொல்ல. என் அக்காவுக்கு கோபம் கொந்தளித்தது. அங்கு நின்று கொண்டிருந்த முக்கால்வாசி வாகன ஓட்டுனர்கள் தமிழர்கள் தான். என்னடா இது இப்படி பேசுறாங்களேன்னு ஒரே வருத்தமா போச்சு.

சரி பேருந்து ஏறி போகலாம்னு பார்த்தா, ஒரு routeம் புரியல. சரி வாகனம் எடுக்கலாம்னு இன்னொரு 'தமிழ் அண்ணன்'கிட்ட போய் கேட்டோம். அவர் $20 ஆகும் என்றார்.
யோவ் யார்கிட்ட. நாங்க பாக்க சின்ன பசங்க. இப்படி ஏமாத்துறதா?- அப்படி சொல்லலாம்னு நினைச்சேன்.
'பரவாயில்ல நாங்க பஸ்ல போறோம்'னு சொல்லிட்டு கிளம்பி வந்தோம். அச்சமயம் ஒரு பெண் வாகன ஓட்டுநர் (கையில் சிகரெட்) வந்தார். $15க்கு ஓகே சொல்லி ஏறினோம். ஆனால் அவர் main roadலில் போகாமல் சந்துகளில் போனார். ஆள் நடமாட்டமே இல்லை அவ்விடத்தில்....

(பகுதி 2)

Dec 15, 2008

விடுமுறை to நியூசிலந்து (2)



துளசி கோபால், ஹாலோ.....!! நான் அங்க சென்றது 5 ஊர்களுக்கு- auckland, christchurch, queenstown, dunedin and rotoura. நீங்க எங்க இருந்தீங்க? தேடி தேடி பார்த்தேன், ஆள காணும்! (அவ்வ்வ்....escape)

சரி முந்திய பகுதியில் மௌரி கலாச்சாரத்தை பத்தி சொல்லி கொண்டிருந்தேன்ல. ஆமாங்கோ ரொம்ப வித்தியாசமான ஒரு கலாச்சாரம். அதுல எனக்கு பிடிச்சது என்னவென்றால் அங்க உள்ளவர்கள் அந்த கலாச்சாரத்தை அவ்வளவு பெருமையாக எண்ணுகிறார்கள். (நம்மில் பலர் பார்த்து பின்பற்ற வேண்டிய விஷயம்:)

அவர்கள் கலாச்சாரத்தில் வணக்கம் சொல்லும்விதம்- இருவரும் வணக்கம் சொல்லவேண்டும் என்றால், இருவரின் மூக்குகளை உரசி கொள்ள வேண்டும். அவர்களுக்கு என்று ஒரு வீர நடனம், பாடல். இப்படி வீரம் நிரம்பிய அவர்களது நடனத்தை ஆடுவதற்கு காரணம், காட்டில் வாழும்போது எதிரிகளை துரத்துவதற்காம்.



ஆகவே தான் இன்றைய நிலையிலும்கூட ஒவ்வொரு rugby போட்டி நடக்கும்முன்பு நியூசிலந்து குழுவினர் தங்களது மௌரி நடனத்தை (haka) ஆடுவார்களாம். ஆம், இந்தியாவிற்கு எப்படி கிரிக்கெட்டோ அப்படி தான் rugby நியூசிலந்துக்கு. அந்நாட்டின் பொருளாதாரத்தையே மாற்றகூடிய வல்லமை கொண்டது அவ்விளையாட்டு.

lord of the rings, narnia போன்ற படங்கள் நியூசிலந்தில் உள்ள மலைபகுதிகளில் எடுத்ததாம். ரொம்ப பிரமிப்பா இருந்துச்சு! sheep shearing farm(agrodome) மற்றும் rabbit shearing இடங்களுக்கு சென்றோம். எப்படி sheep shearing செய்கிறார்கள் என்பதை கண் முன் காட்டினர். அந்த ஆடுகளை மெய்க்க நாய்கள் இருக்கின்றனர். அந்த நாய்கள் ஆடுகளை திடல்களில் மெய்க்க விட்டு திரும்பி கொண்டு வருமாம். அந்த நாய்கள் பாதுகாப்பாக ஆடுகளை கொண்டு வர பல பயற்சிகள் எடுத்துள்ளன. குரைக்காதாம்! ஆனால் கண்களாலே ஆடுகளை மிரட்டுமாம்!!



அங்கு சென்று பார்த்தபிறகு என் மனதில் தோன்றியது “ஆடுகளை/மாடுகளை பார்த்து கொள்வது ஒரு கலை!”. ஆனா நம்ம ஊருல என்ன சொல்றோம்,படிப்பு வரலன்னா ‘மாடு மெய்க்க தான் நீ லைக்கு’. !! :)


பின்னர், mrs jones அவர்களின் பூந்தோட்டத்திற்கும் பழ தோட்டத்திற்கும் சென்றோம். அடேங்கப்பா.... எவ்வளவு பூக்கள்! அங்க போய் வளைச்சு வளைச்சு நானும் அக்காவும், தங்கையும் பல படங்களை எடுத்தோம். jump shot, boys ale ale shot, பூ பக்கத்துல நிக்கிற மாதிரி, பின்னாடி நிக்கிற மாதிரி, அந்த காலத்து பாரதிராஜா படங்களில் வந்த மாதிரி- இப்படி சில பல படங்களை எடுத்து கொண்டோம்.



பிரமாண்டமான இன்னொரு இடம் ‘milford sound' என்ற இடம். நீர்வீழ்ச்சி, மலைகள் என்று இயற்கை அழகு நிரம்பி வழியும் இடம். இந்த இடத்துக்கு செல்ல 5 மணி நேரம் பயணம் செய்ய வேண்டு. காலை உணவு முடித்தவுடனே கிளம்பிவிட்டோம்.

எனக்கு பஸ் பயணம் ஒத்துவராது என்பதை அன்று தான் புரிந்து கொண்டேன். வாந்தி வாந்தியா வர மாதிரி ஒரு உணர்வு. ஆனால் வெளியே வர மாட்டேங்குது! சரி முழிச்சு இருந்தால்தானே இந்த பிரச்சனை, ஆக சட்டென்று தூங்கிவிட்டேன். அதுக்கு அப்பரம் பரவாயில்லை.

இன்னொரு விஷயம். நிறைய நாட்கள், பஸில் தான் அதிக நேரம் பயணம் செய்தோம். தூக்கமா வரும். நானும் என் தங்கையும் ‘பஸில் எப்படி தூங்குவது” அப்படின்னு ஒரு புத்தகம் எழுத போறோம். எங்க அனுபவங்களில், பல varietyயான தூங்கும் techniqueக்களை கண்டுபிடித்துவிட்டோம்ல:)

milford sound இடத்தை அடைந்துவிட்டோம். cruiseலில் சுற்றி பார்க்கலாம். எனக்கு cruiseலில் செல்வது பிடிக்கும். ரொம்ப குளிர் காற்று அடித்தது. ரொம்ப நல்லா இருந்தது!


நியூசிலந்திலில் உள்ளவர்கள் விரும்பி ஈடுபடுவது சாகச விளையாட்டு. அப்படி ஒரு விளையாட்டு தான் jetboat ride. 60km/hr வேகத்தில் போகும் boat. அது 360degree சுற்றும் வேற. இதுக்கு தனியா காசு கட்டனும். NZ$90. milford sound (NZ$225) இடத்துக்கும் தனியா காசு கட்டனும். இரண்டுமே optional tour.
என்பதால். ஏற்கனவே ஏகப்பட்ட செலவு. ஆக நான் போகவில்லை என்றுவிட்டேன்.

jetboat rideக்கு அக்கா, தங்கச்சி மற்ற சுற்றுலா உறுப்பினர்கள் சிலர் சென்றனர். NZ$90 காசுக்கு சிங்கையில் நான் 7 plates of chicken rice அல்லது 8 plates of mutton briyani அல்லது 9 movie tickets வாங்கலாம் என்று மனதில் கணக்கு போட்டு கொண்டிருந்த போது அம்மா என்னிடம் NZ$100 பணத்தை நீட்டி,

“அப்பரம் மேல shopping போக டைம் கொடுப்பாங்களாம். உனக்கு என்ன விருப்பமோ அத வாங்கிக்கோ’ என்றார்.

ஆஹா....!!

இப்படி ஒன்னு நடக்கனும்னு தெரிஞ்சி இருந்தா, அக்காவையும் தங்கச்சியும் போக வேண்டாம்னு சொல்லி NZ$300 collection பண்ணி இருக்கலாமே! அம்மா கொடுத்த NZ$100 சிங்கைக்கு வந்து இங்க பணத்தை மாற்றி இங்கு செலவு பண்ணலாம்னு ப்ளான்.

என் அம்மா என் பொறந்த நாள் அன்னிக்கு பணம் கொடுப்பாங்க. ஆனா மறுநாளே marketல things வாங்கனும், அத வாங்கனும், இத வாங்கனும் சொல்லி பணத்த திருப்பி வாங்கிட்டு போயிடுவாங்க. அந்த மாதிரி இந்த NZ$100 ஆயிவிடுமோன்னு அந்த பணத்தை பத்திரமா வைச்சுருக்கேன் என் கைபையில்.

அக்காவும் தங்கச்சியும் boat ride முடித்துவிட்டு வந்தனர்.

அப்பரம் cadbury chocolate factoryக்கு சென்றோம். எப்படி அதை தயார் செய்கிறார்கள், அதன் வரலாறு பற்றி கூறி factory tourக்கு அழைத்து சென்றனர். ரொம்ப சூப்பரா இருந்துச்சு!! அங்கேயே இருக்கலாம்னு தோணுச்சு. அதில் ஒரு அறை உண்டு- sensory evaluation room. அதில் புதிய சாக்கெலட்களை ருசி பார்ப்பதற்கு ஆட்கள் வருவார்களாம். அது அதன் அவர்கள் முழு நேர வேலையாம்! அந்த வேலைக்கு யாருச்சு போக விரும்புறீங்களா? :)

நியூசிலந்தில் எந்த ஒரு சின்ன town மாதிரி இருந்தாலும், அங்க எப்படியாவது ஒரு north indian உணவகம் இருந்துவிடும்! இந்தியன் உலகம் முழுவதும் இருக்கிறான் என்று நினைக்கையில் பெருமையாக உள்ளது.

நான் பார்த்த இடங்களில் எனக்கு பிடித்த ஊர் -queenstown. சின்ன நகரம் தான். ஆனா குளிர் காற்றும் அந்த மலை சார்ந்த பகுதியும் simply superb! the most romantic place என்றுகூட சொல்லலாம்!:)

வெளியூர் போனாலே souvenirs வாங்க வேண்டும். நெருங்கிய இரண்டு நண்பர்களுக்கு மட்டும் chocolates மற்றும் new zealand cap வாங்கினேன்.

நான் செய்த சாதனை பற்றி சொல்லியே ஆக வேண்டும். dunedin என்ற ஊரில் தான் world's steepest street உண்டு. அது 33 degree அளவில் இருக்கும். அதில் நடக்க வேண்டும். கொஞ்ச கஷ்டமா தான் இருந்துச்சு. சாலையில் இரு பக்கமே வீடுகள். இந்த வீடுகளில் இருப்பவர்கள் எப்படி தான் ஒவ்வொரு நாளும் கீழேயும் மேலேயும் இறங்கிபோறாங்களோ.

அந்த சாலையில் ஏறிமுடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். எனக்கும் ஒன்னு கிடைத்தது.:)

christchurchல் தான் கடைசி நாள் தங்கினோம். ஞாயிற்றுகிழமை என்பதால் தெருக்களில் கூட்டமே இல்லை- ஒரு சில குண்டர் கும்பல்களை தவிர! ஆமாங்கோ! கொஞ்சம் ஒரு மாதிரியா இருந்துச்சு. தண்ணி அடித்துவிட்டு ஒரு கும்பல் எங்களை பார்த்து ஏதோ சொல்லிகொண்டு சென்றனர். உங்க ஊர்ல நீங்க ரவுடின்னா, எங்க ஊருல நாங்களும் பெரிய ரவுடி தான் என்ற முகபாவத்தோடு நடந்து சென்றோம்.

சாலையை கடக்கும்போது பேருந்தில் பஸ் ட்ரைவர் ஒருவர் எங்க அப்பாவை பார்த்து சிரித்தார். அருகில் சென்றுபார்த்த போது தெரிந்தது அவரும் ஒரு தமிழர் என்று!

நல்ல பல நினைவுகளுடன் வீடு திரும்பினோம். சிங்கையிலிருந்து வரும்போது விமானத்தில் இருந்த குறை போகும்போது இல்லை. திரும்பி வந்த விமானத்தில் நிறைய ஆண் flight attendant இருந்தாங்க (அதுவும் அழகா..) ஹாஹாஹா....

Dec 13, 2008

விடுமுறை to நியூசிலந்து(1)



நியூசிலந்தின் செந்தேன் மலரே
தமிழ் மகனின் பொன்னே சிலையே....

அட ச்சே ரிமெக்ஸ் பண்ணி பண்ணி எத எழுதுனாலும் அதுவே வருது..:)

ஆமாங்கோ... நியூசிலந்துக்கு 10 நாள் சுற்றுலா பயணம் சென்றேன் குடும்பத்துடன். டூர் குரூப் ஏற்பாடு மூலம் தான் சென்றோம். எனினும் எனக்கு free and easy tour(சொந்தமாக போவது) போல் செல்வது தான் பிடிக்கும். நாமே நம்ம route ப்ளான் பண்ணி செல்லலாம். சொந்தமா டிரைவ் பண்ணி செல்லலாம். ஜாலியா இருக்கும். ஆனா குடும்பத்தோடு செல்லும்போது சரிபட்டு வராது. அப்பா northல போக சொன்னால், அம்மா இல்ல இல்ல southல route போகும் என்பார், நான் நடுவில் நின்று கொண்டு இல்ல இல்ல eastல தான் போகனும் என்று சொல்வேன். ஆக, இது சரிபட்டு வராது.

இந்த டூர் குருப்ல 34 பேர். 10 குடும்பங்கள் மொத்தம். தன் வயதான பெற்றோருடன் வந்தார் ஒரு பெண்மணி. ரொம்ப friendly type. அப்பரம் இன்னொரு குடும்பம்- ஒரு பொண்ணு. அவருக்கு இரட்டை குழந்தைகள(15 வயசு). இன்னும் இரண்டு பஞ்சாபி குடும்பத்தினர்-அண்ணன் குடும்பமும் தம்பி குடும்பமும். இந்த சகோதரர்களின் கடைசி தம்பி எங்க வீட்டு apartmentலில் தான் இருக்கிறார். பேசும்போது தெரிந்து கொண்டோம். அப்பரம் இன்னொரு சீன குடும்பம்- இரண்டு பெண் குழந்தைகளுடன். குடும்ப தலைவர் படுஅமைதி. நானே கேட்டுவிட்டேன் “ஏன் அங்கிள், நீங்க எப்போதுமே இப்படி தானா?” அவர் அமைதி பிடித்திருந்தது. பிறகு இன்னொரு குடும்பம்- 5 வயது பையனுடன். அவன் வாயை திறந்தால் எட்டூருக்கும் பேசுவான்!! இப்படி பலவித மக்கள்.

டூர் சிறப்பாக சென்றதிற்கு முதல் காரணம் எங்களின் அருமையான சுற்றுலா வழிகாட்டி. ரொம்ப ரொம்ப நல்லவர், ரொம்ப friendly, எல்லாருக்கும் எந்த குறையும் வராத அளவுக்கு பார்த்து கொண்டார்.

சிங்கையிலிருந்து நியூசிலந்துக்கு 10 மணி நேரம் விமான பயணம். விமான டிவியில் சமீபத்தில் வந்த ஹிந்தி படங்கள், தமிழ் படங்கள், korean, arabic இப்படி பல படங்களை பார்த்து 10 மணி நேரத்தை ஓட்டினேன். எங்கள் முதல் சுற்றுலா தடம் auckland. மதிய வேளை என்றதால் சற்று வெயிலாக இருந்தது. ஆனால் சொன்ன அளவு “பயங்கரமா குளிரும்” என்பதுபோல் ஒன்றும் இல்லை. அடடே இவங்கள நம்பி நான் 2 சட்டை போட்டிருந்தேன்.

ஆனா, எங்களது சுற்றுலா லீடர் சொன்னது சரி தான். இரவு நேரங்களில் 12degree celsius. சிங்கையில் 32 degree celsiusல் இருந்த எங்களை ஏதோ fridgeக்குள் வைத்தது போல் உணர்ந்தோம். aucklandல் பல இடங்களுக்கு சென்றோம்.

நியூசிலந்தின் சிறப்பு என்றால், இயற்கை தான்! அடேங்கப்பா எத்தன மலைகள், எத்தன ஏரிகள். எத்தன மலர்கள்... தமிழ் சினிமா பாடல்களின் அபிமான பல இடங்கள். சந்தோஷ் சுப்பரமணியம் படத்தில் வந்த சில பாடல்களை அங்குதான் எடுத்தார்களாம்.

சரி சாப்பாடு விஷயத்துக்கு வருவோம். scrambled eggs, bread toast, chips, sausages, becan, hashbrown, tomatoe இப்படி காலை உணவு! முதல் 3 நாள் நல்லா இருந்துச்சு. ஒரு ‘america america london london' feel நம்மளுக்கு இருந்துச்சு. நாலாவது நாளு நாக்கு செத்து போச்சு. அடக்கம் பண்ண முடியாம அல்லோலப்பட்டு கொண்டிருந்தோம். வீட்டுல இட்லி, தோசை சுட்டு வச்சு சாப்பிட சொல்லி அம்மா கெஞ்சி கேட்கும்போது macdonald'sக்கு போய் சாப்பிட்ட வாய் தானே எனது. எனக்கு நல்லா வேணும் என்று நினைத்து கொண்டு மீதி நாட்களை கஷ்டத்துடன் கழித்தேன்! எதுவுமே நம்ம கிட்ட இருக்கும்போது அதோட அருமைய தெரிஞ்சிக்க மாட்டோம்,

காலை உணவாக இருந்தாலும் சரி
காதலா இருந்தாலும் சரி!
(அவ்வ்வ்வ்...ஐயோ காயு என்ன ஒரு philosophy.பின்னிட்டேள், பிச்சிட்டேள்)

ok back to the new zealand trip. நியூசிலந்தில் சில சிறப்புகள் உண்டு.
tip-top ஐஸ்கீரிம், cadbury chocolates, waterfalls, sheeps, rabbit, milford sound, jetboatting, luge ride,sky diving, sky jump, bungee jumping, lakes. இப்படி நிறைய உண்டு.

குறிப்பா சொல்லபோனால் நியூசிலந்து மக்கள் பெருமையாக எண்ணும் அவர்களது maori கலாச்சாரம். அதை பத்தி அடுத்த பகுதியில் சொல்லுறேன்...

kia Ora ( maori மொழியில் goodbye என்று அர்த்தம்)

அடுத்த பகுதி