பகுதி 2
பகுதி 3
அவள் சொன்னது ஒன்றுமே எனக்கு புரியவில்லை. புருவங்களை உயர்த்தி குழப்பமான முகத்துடன் "what???"
அவள் மறுபடியும், "i said i like you." சிரித்தாள். வெட்கப்பட்டு சிரித்தாள்.
என்னை பிடித்து இருக்கிறது என்று சொல்ல சொல்ல அடிவயிற்றில் சந்தோஷம் பொங்கியது அதே சமயம் மண்டையில் குழப்பங்கள் கபடி ஆடின.
என் சூழ்நிலையை புரிந்து கொண்ட அஞ்சலி,
" நீ என்கிட்ட ஐ லவ் யூ சொன்ன பிறகு ரொம்ப கோபம் வந்துச்சு. ஆனா வீட்டுக்கு போய் யோசிச்சு பாத்தேன். பையன் பரவாயில்லனு தோணுச்சு." சிரித்தாள்.
தொடர்ந்தாள், " என்னைய எவ்வளவு தடவ ஏமாத்தி இருப்ப. அதான் உடனே சொல்லல. but right now I'm really sorry about your situation. கவலைப்படாதே. கண்டிப்பா we shall do something about your job."
இந்த பொண்ணுங்கள புரிஞ்சிக்கவே முடியலை. நான் ரொம்ப சாதாரணமா ஐ லவ் யூனு சொன்னேன். அதுக்கு டென்ஷன் ஆன பொண்ணு இப்ப சீரியஸா வேலை போச்சுனு சொல்லியிருக்கேன் அத போய் இப்படி சாதாரணமா எடுத்துகிறா. இந்த பொண்ணுங்க எப்படி எந்த நேரத்துல எத யோசிப்பாங்கனு தெரிய மாட்டேங்குது. ஒன்னு மட்டும் உண்மை- பொண்ணுங்க இருக்கிறதுனால என்னவோ உலகம் இன்னும் அழியாம அழகா இருக்கு!
எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. மறுபடியும் கேட்டேன்,
"so பிடிச்சு இருக்குனா? கல்யாணம் பண்ணிக்க ஓகேவா?"
அவள் என்னை ஒரு மடையன் என்று நினைத்து இருப்பாள். அவள் புன்னகையித்தபடி, "yes, you idiot!"
"உங்க வீட்டுல ஒத்துப்பாங்களா? மாப்பிள்ளைக்கு வேலை இல்லேனு தெரிஞ்சா கல்யாணத்துல பிரச்சனை வராதா? ஜாதகம் சரியில்ல அது இதுனு காரணம் சொன்னாங்கன்னா. என்ன பண்றது?" படபடப்புடன் நான்.
"கை ஜோசியத்தை நம்பி எதிர்காலத்தை நிர்ணயிக்காதே. கை இல்லாதவனுக்கு எதிர்காலம் உண்டு- அப்படினு எங்கயோ படிச்ச ஞாபகம். எனக்கு இந்த ஜோசியம், ஜாதகம் இதுல எல்லாம் நம்பிக்கை இல்ல. வீட்டுல கண்டிப்பா எதாச்சு சொல்லுவாங்க.ம்ம்ம்... சமாளிக்கனும் அஜய். எப்படியாச்சும் சமாளிக்கனும்!" அவள் பேசியதில் தெரிந்த நம்பிக்கை எனக்கு புத்துணர்ச்சியை தந்தது. என் முகத்தில் தெரிந்த புன்னகையை கண்டு கொண்ட அஞ்சலி,
" so, happy now?"
ஆம் என்பதுபோல் தலையாட்டினேன். நேரம் ஆகிவிட்டதால் அஞ்சலி கிளம்பிவிட்டாள்.
கொஞ்ச நாட்களாக வீட்டில் சரியாக நான் பேசவில்லை. அம்மா என்னிடம் பல முறை கேட்டாலும் நான் பதில் அளிக்காமல் இருந்தேன். இன்று அஞ்சலி ஒரு முடிவு சொன்னபிறகு தான் கொஞ்ச நிம்மதியாக இருந்தது. ஆனால் வேலை போனது, அஞ்சலியிடம் நான் சொன்னவை, அஞ்சலி என்னிடம் சொல்லிய விஷயங்கள் அனைத்தையும் வீட்டில் கொட்டினேன். அம்மாவுக்கு நான் பழைய அஜயாக மாறியதை கண்டு சந்தோஷப்பட்டார்.
இருந்தாலும், வேலை போனதில் அவருக்கு வருத்தம். அப்பாவுக்கும் தான்.
அப்பா, "என்னடா அஜய். இப்படி நடந்து போச்சு. பொண்ணு வீட்டுல இத சொல்லாம இருந்தா தப்பா போயிடும். நம்ம நேர்மையா இருக்குறது தான் நல்லது." ரொம்ப குழப்பத்துடன் காட்சியளித்தார்.
அம்மா, "ஆமா அஜய். நம்ம அவங்கிட்ட சொல்லிடலாம்!"
நான், "இல்லமா, அஞ்சலி கொஞ்ச நாள் வேட் பண்ண சொன்னா... அவ ஒரு வேலை தேடி தரானு சொல்லியிருக்கா. சோ கொஞ்சம் வேட் பண்ணி பாப்போம்...."
இருவருக்கும் வேலை போன விஷயத்தை மறைப்பதில் அவ்வளவாக ஈஷ்டமில்லை இருப்பினும் எனக்காக ஒத்துகொண்டனர். மறுநாள் சனிக்கிழமை அதே காபி ஷாப்பில் நானும் அஞ்சலியும்...
மேசையில் லேப்டாப், பக்கத்தில் நிறைய print-outs. அவளுக்கு தெரிந்த கம்பெனிகளிலிருந்து application forms கொண்டு வந்திருந்தாள். எல்லாவற்றிலும் என் detailsகளை எழுத சொன்னாள். இணையத்தில் சில கம்பெனிகளுக்கும் இமெயில் அனுப்பினாள். கிட்டதட்ட ஒரு 50 கம்பெனிகளுக்கு application போட்டிருப்போம். அஞ்சலியின் ஃபோன் ஒலித்தது.
"ஓ அப்படியா? great great. thank you so much dude." அவள் பேசி முடித்ததும் என் பக்கம் திரும்பினாள்.
"அஜய், happy news. ரஞ்ஜன் என் ஃபிரண்ட். நான் நேத்திக்கு அவன்கிட்ட உன்னைய பத்தி சொன்னேன். அவன் கம்பெனில executive manager post இருக்காம். நல்ல job scope, reasonable salary. அவன் உன்னைய வந்து பாக்க சொல்றான். next week monday 10 am. ok?"
நான் சரி என்றேன். அவள் உடனே மெசேஜ் அனுப்பினாள் ரஞ்ஜனுக்கு.
"anyway, நம்ம இன்னும் ஒரு நாலு இடத்துக்கு application போடுவோம். the more we apply, the higher the probability of getting a job soon." மும்முரமாக தனது லெப்டாப்பில் வேலையை தொடர்ந்தாள். தன்னுடைய சொந்த பிரச்சனை போல் விழுந்து விழுந்து அஞ்சலி வேலை பார்ப்பதை கண்டு எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவளையே கொஞ்ச நேரம் கண்சிமிட்டாமல் பார்த்து கொண்டிருந்தேன்.
"thanks anjali." என்றேன். புன்னகையித்தாள்.
"உன் வீட்டுல தெரியுமா நீ எனக்கு...." என்று நான் சொல்லி முடிப்பதற்குள்.
அஞ்சலி, "ஓ நோ! வீட்டுல எதுவுமே தெரியாது. உனக்கு வேலை போன விஷயம் தெரிஞ்சுதுன்னா அவ்வளவு தான்! கல்யாணம் stop தான். அதுக்கு தான் இன்னும் இரண்டு வாரத்துல நம்ம எப்படியாவது ஒரு வேலைய தேடி கண்டுபிடிக்கனும். அப்பரம் சொல்லிக்கலாம்....மாப்பிள்ளக்கு transfer கிடைச்சுதுனால புது கம்பெனிக்கு போயிட்டாருனு." அவள் பேச பேச அவளது விரல்கள் வேகம் வேகமாக டைப் செய்தன.
girls are multi-taskers. அது நூற்றுக்கு நூறு உண்மை!
"அப்பரம் நீ என்னைய மீட் பண்றது எல்லாம் உன் வீட்டுல...." நான் கேள்வி மேல் கேள்வி கேட்டேன்.
"ஏய் சத்தமா சொல்லாத ப்ளீஸ். என் வீட்டுல எதுவுமே தெரியாது. நான் உன்னைய ஒரே ஒரு தடவ தான் பாத்து இருக்கேன். அதுவும் நம்ம நிச்சயதர்த்தம் முன்னாடி வெளியே போனோமே-இது தான் என் வீட்டுக்கு தெரியும். அதுக்கு அப்பரம் நம்ம மீட் பண்ணது. எதுவுமே தெரியாது. தெரிஞ்சுது!! அப்பரம் தோரணம் ஆயிரம் ஆயிடுவேன் நான்.... இன்னிக்குகூட பாரு ஃபிரண்ட்வோட குழந்தைக்கு காது குத்து அப்படின்னு சொல்லிட்டு தான் வெளியே வந்தேன்." அஞ்சலி பேசியதை கேட்டு எனக்கு சிரிப்பு வந்துச்சு.
" காது குத்துக்கு எதுக்கு லெப்டாப்புன்னு கேட்கலையா?" சிரிப்பை அடக்க முடியவில்லை எனக்கு.
"ஓய், என்ன நக்கலா? i brought my laptop in this big zara bag. பாத்தீயா.... நான் போட்டிருக்கும் சுடிதாருக்கும் கொண்டு வந்த bagக்கும் ஒரு matching இல்லாம இருக்கு. all because of you." செல்ல கோபத்துடன் சலித்து கொண்டாள்.
என்னை சுட்டிகாட்டி, "இந்த match வேணும்னு matching இல்லாம handbag போட்டு வரதுல ஒன்னும் தப்பு இல்ல." என்றேன்.
அவள், "நல்லாவே பேசுற, அஜய்." அவள் கவனம் மறுபடியும் லெப்டாப்பிற்கு சென்றது.
அவள் சுடிதார் என்று சொன்னபிறகு தான், அவள் போட்டிருந்த வெள்ளை சுடிதாரை கவனித்தேன். அவள் மாநிறத்திற்கு வெள்ளை..ம்ம்ம்..அசத்தலா இருந்துச்சு!
அனைத்து வேலைகள் முடிந்துவிட்ட தருவாயில், எனக்கு திடீரென்று ஒரு ஆசை வந்தது.
"அஞ்சலி, படம் பார்க்க போலாமா? if you don't mind...." என்றேன். அவள் என்னை பார்த்து முறைப்பாள் என்று நினைத்தேன். மாறாக, அவள் "ஓ என்ன படம், அஜய்?"
அவளுக்கு ஹிந்தி நடிகர் ஷர்மன் ஜோஷியை ரொம்ப பிடிக்கும் (இந்த தகவலை அவள் ஃபேஸ் புக்கில் ஒரு முறை பார்த்து இருக்கிறேன். வாழ்க ஃபேஸ் புக்!)
அவள் வாயை பிளந்து சந்தோஷத்தில், "ஓ மை காட்! yessss we should go then. " என்றாள்.
(சினிமா தியெட்டரில்)
"actually why do you like sharman joshi?" என்று கேட்டதற்கு நான் என்னமோ அவள் கிட்னியை தானமாக கேட்பதுபோல் சீறி பாய்ந்தாள்.
"what nonsensical question is that? how can you not like sharman? just look at his well-shaped sharp nose...oh my god. நாள் முழுக்க அத தொட்டு பார்த்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு." பக்கத்தில் ஒட்டப்பட்ட அவரது (அவனது) படத்தில் கைவைத்து சொன்னாள். பாப்கார்ன் வாங்க அவள் சென்றாள். பின்னாடி நின்ற நான் சுற்றும்முற்றம் பார்த்தேன். கூட்டம் அவ்வளவாக இல்லை. அஞ்சலியும் என்னை பார்க்கவில்லை. அந்த கேப்பில் என் மூக்கை தொட்டு பார்த்தேன்.
சின்ன புள்ளையிலிருந்து நாண் சாப்பிட்டு இருந்தால் ஒரு வேள மூக்க ஷார்ப்பா வந்து இருக்குமோ என்னவோ என்றது மனசாட்சி! நான் ஏன் இந்த படத்துக்கு கூட்டிகிட்டு போனேன்? காரணம் உண்டு. படம் செம்ம மொக்கை என்று தெரியும். மொக்கை என்பதால் அஞ்சலிக்கு ரொம்ப போர் அடிக்கும், தூக்கம் வரது என்பாள், அப்படியே தோள்ல சாய்ந்து கொள்வாள் என்று எதிர்பார்த்தேன். ஒரு 'touching touching'!
வேலை போச்சு, உனக்கு இந்த நேரத்துல வெட்டியா ரோமேன்ஸ் கேட்குதா என்று நினைக்கலாம். ஆனால், என்னால் control பண்ண முடியல. அஞ்சலி பக்கத்துல இருக்கும்போது மனசு அநியாயத்திற்கு அலைபாயுது.
படம் ஆரம்பித்து 10 நிமிடம் தான் இருக்கும். செம்ம மொக்கை! ஆனால், அஞ்சலி இந்த மொக்கை படத்தையே ரசித்து ரசித்து பார்த்தாள். என் ஆசை எல்லாம் நாணுக்கு போடுகிற பட்டர் மாதிரி கரைஞ்சு போச்சு! அஞ்சலி தோளில் சாய்ந்து கொள்வாள் என்று நினைத்தேன். ஆனால், எனக்கு வந்த தூக்கத்திற்கு இரண்டு சீட் தள்ளி உட்கார்ந்து இருந்த பாட்டி மாடியில் விழுந்துவிடுவேனோ என்ற பயம் வந்துவிட்டது.
படம் முடிந்து வெளியே வந்தோம். அஞ்சலி, "ஓ மை காட், awesome film rite? i just love it!" என்றாள். மாடிப்படியில் இறங்கியபோது அவள் கால் தடுக்கிவிட்டது. கீழே விழாமல் இருக்க, என் கையை பிடிச்சா பாருங்க!!!! அந்த ஒரு 'grip'- சான்ஸே இல்ல! 150 வயலின்கள் இசை ஒரு நேரத்தில் கேட்டது எனக்கு. அப்படி ஒரு ஃவீலிங். கடவுள் தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான். என்னை பொருத்தவரை கடவுள் மாடிபடியில் இருக்கிறார்.
"சாப்பிட போவோமா?' என்றாள்.
"உனக்கு லேட்டா ஆகலையா?" என்றேன்.
"பரவாயில்ல சொல்லிக்கலாம்." என்றாள். என்கூட நேரம் செலவழிப்பது அவளுக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதை அவள் கண்களிலிருந்து வீசிய வெட்கம் கலந்த ஆனந்தம் என் மனம் சுவாசித்தது.
(பகுதி 5)