Showing posts with label சிறப்பு தினம். Show all posts
Showing posts with label சிறப்பு தினம். Show all posts

Feb 14, 2013

இன்னிக்கு ஏதோ காதலர் தினமாம்?

இந்த நாள்- 14 பிப்ரவரி அன்று உலகத்தில் உள்ளவரை 4 வகையில் பிரிக்கலாம்!

1) காதல் காதல் காதல்


தமிழ்ல ஒரு வாக்கியம் சரியா எழுத தெரியாத பயலுக எல்லாம் கவித கவிதையாய் கொட்டி தீர்ப்பான்! ரோஜா பூவுக்கு வாய் இருந்தால், துப்பும்! அம்புட்டு ரோஜா பூக்களை வாங்கி குவிப்பான். காதலன்/காதலி வீட்டுக்கு பூ அனுப்புவாங்க. அவுக வேலை பார்க்கும் ஆபிஸுக்கு பூ அனுப்புவாங்க!!

இப்படி ஒரு நாளில் ஒரு மாசம் சம்பளத்தை செலவு பண்ணுவாங்க!

2) நான் சிங்கம்! நான் single!!


365 நாளும் காதல் இருக்கனும். இன்று மட்டும் கொண்டாடுவது மூட்டாள் தனம் அப்படினு சொல்லும் கட்சி. காதலிப்பவர்களை கிண்டல் பண்ணும் கூட்டம் இது. கடவுள் எனக்காக ஒருத்தரை/ஒருத்தியை பார்த்து வைத்து இருக்கிறார். அவர் ஒரு நாள் என்னை பார்க்க வருவார் அப்படினு வைதேகி காத்திருந்தாள் விஜய்காந்த் மாதிரி உட்கார்ந்து இருப்பவர்கள். தேவையில்லாமல் கிண்டல், கேலி செய்து facebookகளில் அதிக 'லைக்'களை சேர்ப்பவர்கள்.

இன்னிக்கு ''happy thursday" அப்படினு சொல்லி காதலர்களை வெறுப்பேத்துபவர்கள்!

3) காதல் கலாச்சாரத்தை கவுகுது!

 Anti Valentines Day Photo Picture
கலாச்சாரத்தை காப்பாத்தனும். கருப்பான்பூச்சியை காப்பாத்தனும்னு கண்டபடி இந்த தினத்தை எதிர்ப்பவர்கள்!  ஒரு காரணமும் இருக்காது! ஆனால், எதிர்ப்பார்கள்!

பாரதியார் தினம் எந்த நாள் தெரியுமா?
அவர் இறந்த நாள் எந்த நாள் தெரியுமா?


என கேட்டு இளையர்களை மடக்குவதாய் நினைப்பு!!!

பாரதியார் தினம் தெரியாமல் இருக்கலாம்...ஆனால் அவர் சொன்ன 'ஜாதிகள் இல்லையடி பாப்பா'னு காதலிப்போர் இளையர்கள்!

நீங்க- 'என் ஜாதிக்கு ஒன்னுனா, நான் வெட்டுவேன்!' என்கிறீர்கள்!!!

***************************************************************************

அப்பரம் அந்த நான்காவது குரூப்?
அட அது நம்ம தான் (நான் உள்பட)

4) எல்லாரும் அன்பர் தான். இன்று அன்பர தினம் தான்.






காதலிப்போரே, வாழ்க!

single சிங்கமே, all the best!

கலாச்சாரத்தை காப்பாத்துவோரே, ம்ம்ம்...நடத்துங்க!!

கெட்டவங்களோ, நல்லவங்களோ, அனைவரும் அன்பர்கள் தான்! ஏதோ காதலர் தினம் அப்படினு சொல்லி அவர்களை நாம் தனியாக விட வேண்டாம். அன்பர் தினம் என்று அனைவரும் கொண்டாடுவோம்!!

மற்றவர்களை சந்தோஷமா வச்சு இருங்க, அதுவே போதும்! சண்டை வேண்டாம். போர் வேண்டாம். சந்தோஷமா வாழ்வோமே- என்று நினைப்பவர்கள் நாங்கள்!!

****************************************************************************

Jan 28, 2013

முருகா? ஊறுகா? (தைப்பூசம் ஸ்பெஷல்)

தைப்பூசம் திருவிழா சிங்கையிலும் மலேசியாவிலும் ரொம்ப விமர்சையாக கொண்டாடப்படும். இந்த வருஷம் சனிக்கிழமை வந்ததால், யப்பா!!!! கூட்டம் கூட்டம் கூட்டம்!!! ஒரு முருகன் கோயில் இருந்து இன்னொரு கோயிலுக்கு கிட்டதட்ட 8கிலோ மீட்டர் நடக்கனும்.

சனி இரவு 11 மணி அளவில் பால் குடம் தூக்கி சென்றவர்கள் ஏராளம். அக்கா, பக்திமான் என்பதால் பால் குடம் தூக்கி சென்றார். தங்கைக்கு இந்த வருஷம் result வருவதால் அவரும் பால் குடம் தூக்கி சென்றார். நம்ம மட்டும் சும்மா இருந்தால், வீட்டில் சோறு கிடைக்காது என்பதால் நானும் தூக்கி சென்றேன் ஒரு பால் குடத்தை... பால் குஜாவை! அக்கா, தங்கை, அப்பா அனைவரும் தொடங்கும் இடத்தில் இருந்து நடக்க ஆரம்பித்தார்கள். அம்மாவால் அதிக தூரம் நடக்க முடியாது என்பதால் நானும் அவரும் பாதி வழியில் அவர்களுக்காக காத்து கொண்டிருந்தோம். (இதுக்கு தான்..இந்த பில்டப்- பா-னு கேட்காதீங்க!!)

பக்தி-விரதம்-பூஜை-நேர்த்திகடன் - இதில் அவ்வளவு ஈடுபாடு இல்லை. ஆனால், கடவுள் நம்பிக்கை உண்டு. எனக்கு தெரிந்த ஒரே மந்திரம்
"போடா....அந்த ஆண்டவனே நம்ம பக்கம்". நான் கடவுளை வணங்குகிறேன் என்று காட்டி கொள்வதில் அதிகம் ஆர்வம் கிடையாது. இந்த அறக்கருத்துகளை சொன்னால், அரை விழும் என்பதால் 'ஊருடன் ஒத்து' வாழ்ந்தேன் தைப்பூசம் அன்று.

அக்கா, தங்கை, அப்பா நடந்து வரும்போது விடியற்காலை 2 ஆகிவிட்டது. கோயில் அருகே கூட்டநெரிசல் அதிகமானது. ரொம்ப நேரம் காத்து இருந்தோம்!

அப்போது நடந்து சில காமெடிகள்.

1) சரி வேண்டுதல் பெரிசா ஒன்னுமில்ல எனக்கு. இருந்தாலும், கடவுள்கிட்ட நல்ல ஆரோக்கியத்திற்காக வேண்டினேன். ஆனால், 2 மணி நேரத்துக்கு மேல் காத்து கொண்டிருந்தமையால் முதுகு வலியே வந்துவிட்டது!:))

2) கோயில் அருகே வந்தபோது விழா அமைப்பாளர்கள் 'பக்தர்கள் விரைவாக நேர்த்திகடனை செலுத்திவிட்டு போங்க.' என்றபோது பக்கத்தில் நின்றவர்கள்

'அடேங்கப்பா, முதல கோயில்குள்ள விடுங்க சாமி' என்றனர்.

3) 'ஓம் முருகா' என்று ஒருத்தர் ஒலிபெருக்கியில் சொன்ன போது, எங்கள் காதுகளில் 'ஓம் ஊறுகா' என்று கேட்க குபீர் சிரிப்பு வந்துவிட்டது.

4) பக்தர்கள் நடக்கும் பாதையில் ஒரு அறிவிப்பு பலகை- "மது அருந்திவிட்டு செல்ல வேண்டாம். புகை பிடிக்காமல் இருக்கவும்"

ஹாஹாஹா....பக்தி என்ற பெயரில் நீங்கள் அடிக்கும் கூத்துக்கு இது ஒரு பதிலடி!

5) இரண்டு வெள்ளைக்காரர்கள் கூட்டத்தில் மாட்டிகொண்டனர். சும்மா நடந்துவிட்டு கோயிலுக்குள்ள போகலாம்னு நினைச்சு இருப்பாங்க போலும். ஒரு மணி நேரத்துக்கு மேல் நின்றதால், தாங்க முடியாமல் அவர்கள் கூட்டத்தில் மோதி எப்படியோ 'தப்பி' சென்றனர்.

*********************
மனதை கடவுள் என்று நினைச்சு நல்லது பண்ணாலே தினம் தினம் தைப்பூச திருவிழா தான்!!

Jan 3, 2013

நடுவுல கொஞ்சம் 2012 காணும்!!

என்ன ஆச்சு!
2012 calendar வாங்கினேன்.
கிழிச்சேன்.
ஓ..ஓ..ஓ....அப்படி பறந்து போச்சே!!
ஒகே ஒகே ஒகே

*************************************************************
2012 இவ்வளவு சீக்கிரம் பறந்து போகும்னு நினைக்கல! அப்படி 2012 என்ன தான் பண்ணோம்னு யோசிச்சு பார்த்தா...ம்ம்ம்....எதையும் அப்படி ஒன்னும் பெரிசா பண்ணியிருக்க மாட்டே நீ அப்படினு நீங்க சொன்னீங்கன்னா அது தப்பு!

ஐரோப்பா பயணம்


டிசம்பர் மாதம் 13 நாள் சென்ற பயணம்! வாழ்க்கைல மறக்க முடியாத பயணம். அந்த 13 நாட்கள் அப்படினு ஒரு புத்தகமே எழுதலாம்!!! குளிர் காற்று, பனி, சாப்பாடு...ச்சே...இதலாம் திரும்பி வரவே வராது!!

குறும்படம்

சும்மா ஒரு பேச்சுக்கு ஆரம்பிச்சு, கடைசில உண்மையாகவே ஒரு குறும்படத்த எடுத்தோம் நானும் எனது 3 நண்பர்களும். சும்மா ஜாலிக்காக எடுத்த படம் தான். 3 மணி நேரத்தில் எடுத்த படமாக இருந்தாலும், அதுக்கு அப்பரம் நடந்த எடிட்டிங் வேலை இருக்கே!!! யப்பா!!! வேலை செய்யும் இடத்தில் இந்த ஆர்வத்தை காட்டியிருந்தால் இந்நேரம் promotion கிடைச்சு இருக்கும். :(((( சரி விடுங்க அந்த சோக கதை இப்ப வேணாம்.
 (குறும்படம் சீக்கிரம் வெளியிட படும்)


தோழியின் கல்யாணம்+ பார்ட்டி

நெருங்கிய தோழியின் கல்யாணம்! நல்ல படியாய் முடிந்தது! மாலை reception முடிஞ்சு விடிய விடிய ஆடிய ஆட்டம் மறக்கவே முடியாது!!! அதிலும் இன்னொரு தோழன் masters graduation முடித்தவன். அதற்கும் சேர்த்து கொண்டாட்டம்! மறக்க முடியாத ஒரு நாள்!

எந்த கடையில நீ அரிசி வாங்குற?

என் வலைப்பூவை தொடர்ந்து படித்தவர்களுக்கு தெரியும்....3 ஆண்டுகளுக்கு முன்பு தீவிரமாய் 13கிலோ குறைத்தேன். அதுக்கு அப்பரம் வேலைக்கு போனபிறகு 10கிலோ இடை கூடியது!:(((( இந்த 2.5 வருடங்களில் 10கிலோ அதிகரிப்பு!!! ச்சே என்னடா வாழ்க்கை இதுனு நினைச்சு, இப்ப மறுபடியும் தீவிரமாய் 'கோதா'வில் இறங்கிவிட்டேன்.

கடந்த 4 மாதங்களில் 5கிலோ குறைத்துவிட்டேன். தினமும் 3கிலோ மீட்டர் ஓட்டம், இரவு சாப்பாடு அளவை குறைத்துவிட்டேன். நமக்கு புடிச்ச ஜீன்ஸகூட போட முடியாமல் இருக்கும்போது மனசு வலிக்குதே!!! ஆக, இன்னும் 4 கிலோவை குறைத்தால் போதும்!!! so once கோதாவுல இறங்கிட்டோம், நம்ம தாதா தான்!!

இன்று அதற்கு பிள்ளையார் சுழியாய், 5 கிலோ மீட்டர் ஓடினேன் 35 நிமிடங்களில்!!!

#நம்பிக்கை தான் வாழ்க்கை#

எல்லா வருஷமும் நல்ல வருஷம் தான்! ஆனா, அதுல மண்ணு அள்ளி போடுற மாதிரி சில ஆசாமிகள் இருப்பாங்க....அவங்கள சமாளிச்சு, இந்த 2013 வருஷத்தை நல்ல வருஷமாக அமைத்து கொள்ள எல்லாருக்கும் வாழ்த்துகளை சொல்லி கொள்கிறேன்.

Aug 1, 2008

சிங்கையில் தாதியர் தினம்

உலக தாதியர் தினம் மே 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆனால், சிங்கையில் இன்று (ஆக்ஸ்ட் 1ஆம் தேதி) கொண்டாடப்படுவதின் நோக்கம் தாதியர் வளர்ச்சி மன்றம் இன்றைய தினம் தான் 1885ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு முன் தாதியர்கள் அவ்வளவாக கிடையாது. நோயாளிகளை பார்த்து கொள்ள தாதியர்கள் தேவை என்று அறிவிக்கப்பட்டது 1885ஆம் ஆண்டு தான்.



அப்போது இருந்த உள்ளூர் french convent மூலம் நிறைய தாதியர்கள் வேலையில் சேர்ந்தனர். ஆகவே தான் அந்த தினத்தை சிங்கையில் தாதியர் தினமாக கொண்டாடப்படுகிறது. உலகளவில் மே 12ஆம் தேதி கொண்டாடப்படுவதின் காராணம், அன்று தான் florence nightingale அவர்களின் பிறந்த நாளாம்.



இன்று சிங்கையில் வேலை பார்க்கும் அனைத்து தாதியர்களுக்கும் என் வாழ்த்துகள்! நன்றிகள்! என்னுடைய தோழிகள் சிலர் தாதியராக வேலை செய்கின்றனர். அவர்களுக்கு முக்கியமாக என் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தாதி என்று சொன்னவுடன் எனக்கு ஒன்னு ஞாபகத்துக்கு வரும். 'மனதில் உறுதி வேண்டும்' படமும் அப்படத்தில் நடித்த சுஹாசினியும்!! the movie is simply gr8!!! ஒரு பேட்டியில் அப்படத்தின் இயக்குனர் பாலச்சந்தர் சொன்னார் தான் இப்படத்தை எடுத்ததற்கு காரணம் தனக்கு உடல் நலம் மோசமான நிலையில் இருந்தபோது பார்த்து கொண்ட தாதி ஒருவர் தான் இப்படத்துக்கு inspiration என்று.



இவ்வாறு மற்றவர்களின் நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொரு தாதியருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!::))