Jul 28, 2017

இந்த பதிவும் ஓவியாவைப் பற்றி தான்!

இந்த பதிவு முழுக்க வெறும் 'ஓவியா' என்று எழுதி வைத்தால் கூட, படிக்க ஆள் உண்டு. அதுவும் கோடிக்கணக்கில்.  பிக்பாஸ் scripted தானே, இவங்களெல்லாம் பணம் வாங்கிட்டு உள்ள இருக்காங்க, பிக்பாஸ் நிகழ்ச்சி மத்த சமூதாய விஷயங்களை மறக்கடிக்குது, ஓவியா படை, ஓவியா பாடல், ஓவியா சட்டை என எல்லா சர்ச்சகளையும் நிகழ்வுகளையும்  தாண்டிய நிகழ்ச்சியாக தான் திகழ்கிறது பிக்பாஸ். பிடிச்சவாங்க வெறித்தனமா பார்க்குறாங்க. பிடிக்காதவங்களும் இன்னும் ரசிச்சு பார்க்குறாங்க.


ஓவியாவின் ரசிகைகளில் நானும் ஒருத்தி தான்.  ஆனா, நிஜ வாழ்க்கையில் எந்தளவு ஓவியாவாக வாழ முடியும்? facebook, twitter அனைத்திலும் ஓவியாவை தன் வீட்டில் ஒருத்தியாக கருதும் நம்மில் எத்தனை பேர் ஓவியாவை நிஜத்தில் ஆதரிப்பார்கள்?

குடும்பத்தில் ஓவியா

காயத்ரி மாஸ்டரிடம் பேசிகொண்டு இருக்கும்போது அவர் கண்டபடி பேச, ஓவியா டக்கென்று எழுந்து போய்விடுவார். அந்த எபிசோட் முடிந்த கையோடு டிவிட்டர் பக்கம் போனால், டிவிட்டரில் கபாலி ரஜினியை ஒப்பிட்டு வளம்வந்த படங்களைப் பார்க்கும்போது ஆச்சிரியமாக இருந்தது.


இதுவே நிஜவாழ்க்கையில் கணவரின் அம்மா, காயத்ரி மாஸ்டர் போல் பயங்கரமா திட்ட, மனைவி, ஓவியா போல் எழுந்து சென்றால், இந்த கைதட்டலும் பால் அபிஷேகமும் நடக்குமா? நெருப்புடா பாடலை வாசிப்போமா?

பிக்பாஸ் சக்தி, ஓவியா மீது கோபம்கொண்டு அறைய முற்பட்ட போது, தளபதி ரஜினி போல் எதிர்கொண்ட ஓவியா போன்ற பெண்களுக்கு நிஜ வாழ்க்கையில் கிடைக்கும் பேர் தான் என்ன? நிகழ்ச்சியில் காயத்ரி மாஸ்டர் பயன்படுத்தும் 'எச்ச' வார்த்தைகளைவிட மோசமான பெயர்களை பேசுவார்கள் என்பது தான் உண்மை சூழல்.

அங்க அடிச்ச ரத்தம், நமக்கு வந்த வெறும் தக்காளி தொக்கு தான் என்று  நிஜ வாழ்க்கை சூழல் ஏதோ ஒரு வித பயத்தை தான் உண்டாக்குகிறது.

வேலை இடம் ஓவியாக்கள்

ஓவியா போன்ற பாஸ் இருந்தால் செம்மயா இருக்கும். ஏன் என்றால் நியாயமா பேசுவாங்க. நம்ம appraisal வரும்போது, நமக்காக வாதாடி நமக்கு நல்லது நடக்கும் வேண்டும் என்று நினைப்பார்கள். கடைசி வரை நமக்காக போராடுவார்கள். திட்டினாலும், உடனே வந்து சாரி கேட்பார்கள்.

எந்த ஊர்ல பாஸ் வந்து சாரி சொல்றார்   சொல்றான் சொல்லுங்க?

ஆனா இதுவே ஓவியா போன்றோர் நமக்கு கீழே வேலை பார்த்தார். இத பத்தி நண்பர்களிடம் பேசும்போது வெவ்வேறு சிந்தனைகளை முன்வைத்தனர். ஆதாரவா இருப்போமா? இல்ல தலைவலி என்று நினைப்போமா? ஊருடன் ஒத்து வாழ் போன்ற conceptஎல்லாம் சரிபட்டு வரமாட்டாங்க என்ற வகையில் சேர்த்துவிடுவோமா?

அது மட்டும் இல்லாமல், ஓவியா புகைப்பிடிக்கும் அறைக்கு அவ்வபோது செல்வதை காட்டினாலும், உள்ளே புகைப்பிடிக்கும் காட்சிகளை வெளியிட்டது இல்லை இது வரைக்கும். அப்படி செய்து இருந்தால், இதே புரட்சி படை,  ஓவியா கலாச்சார சீர்கேடு பண்ணிட்டாள், கலாச்சாரத்தை காப்பாத்தனும், கருப்பான்பூச்சியை காப்பத்தனும்னு வெடிச்சிருக்க வாய்ப்பு உண்டு.
ஒருவர் அவராகவே இருக்க விடுகிறோமா என்ற கேள்வியை முதலில் நாம் நம் மனசாட்சிக்குள் கேட்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு உருவாகியுள்ளது. ஏன் என்றால், நம்ம வாய், பிக்பாஸ் நாய் மாதிரி. அடுத்தவன் நிம்மதியா தூங்கினால், குரைத்துகொண்டே இருக்கும்.

நான் எந்த அளவுக்கு ஓவியா?


ஒரு பத்து பன்னிரெண்டு வருஷத்துக்கு முன்னாடி 'TRIGGERவேல் வீரவேல்' னு எல்லாத்துக்கும் பொங்கிய ஓவியாவாக தான் இருந்தேன். கருத்து முன்வைக்காமல் போனதில்லை- வீடு, குடும்பம், தனக்கென்று சுதந்திரம் தரப்படாதபோதெல்லாம்.

'எல்லாத்தையும் பார்த்தாச்சு. அடிப்பட்டு அடிப்பட்டு தான் புரியும்' என்னும் ஓவியா பழமொழி போல், இப்போது அடங்காத காளை ஒன்று அடிமாடாக போகிறேன். பொறுமையா போகனும், பெரிய பருப்புகளுக்கெல்லாம் மரியாதை கொடுக்கனும் என்ற சூழ்நிலையில் சிக்கிய பிறகு வேறு வழியில்லை.

அதனால் எனவோ, ஓவியா திரையில் அடிடா பார்க்கலாம் என்று குமுறும்போது, அதிக அளவில் ரசிக்க முடிகிறது. என்னையே அந்த காலத்துல பார்த்த மாதிரி ஒரு உணர்வு.

*************

ஓவியாவாக வாழ்ந்து, கடைசில கணேஷாக மாறிவிட்ட கதை தான் என் கதை.


Jul 16, 2017

பிக் பாஸ் ஆரம்பிச்சதுலேந்து வாழ்க்கை எப்படி மாறி போச்சு....

விவேக் காமெடி ஒன்னு இருக்கும். ஒரு பொண்ணு வந்து இன்னும் 10 second தான் இருக்கு. இன்னும் 5 second தான் இருக்குனு சொல்லும். அதுக்கு வெறுப்பாகிய விவேக் 'என்ன டி second கணக்கு' சொல்றனு கோபம் அடைவார். அந்த மாதிரி, கமல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் ஒரு வாரத்துக்கு முன்னாடி countdown ஆரம்பிச்சார்.

தொடக்கத்தில், நானும் என்ன பெரிய நிகழ்ச்சி. ஒரு கூட்டம் வீட்டில் இருப்பதை எப்படி தினமும் பார்க்கறதுனு சலிச்சுகிட்டேன். ஆனா, இப்போ 3 வாரம் முடிஞ்சிருக்கு. 
சூரியன் படத்துல கவுண்டர் சொன்ன மாதிரி, சும்மா இந்த ஃபோன எடுத்தால நச் நச் நச்சுனு ஒரே தொல்லை மாதிரி, fbயே தொறந்தாலே பிக்பாஸு தான். சரி அப்படி என்ன தான் இருக்குனு பார்க்க ஆரம்பிச்சா, தக்காளி நம்மளேயே கடைசில அரசியல்வாதி ஆக்கிட்டாங்கய்யா!வேலையிடத்தில் பார்க்கும் பல பிம்பிலிக்கா பிலாப்பிய இந்த நிகழ்ச்சியில் காட்டுவது ஒரு காரணம். இது scripted இல்லையா என்பதை தாண்டி, இது ஒரு 'twisted social experiment' என்று வகைப்படுத்தலாம். என்ன பெரிய experiment என்று நானும் நினைத்தேன். 

அப்பரம் தான் புரிந்தது, நம் சொந்த குடும்பத்தோட டீவி, ரேடியோ, wifi, internet, laptop இது எதுவுமே இல்லாமல் இருந்தால் ஒரு வேளை அடித்து கொண்டும் சண்டை போட்டு கொண்டும் இருக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. இதலாம் இருக்கும்போதே, பல சண்டைகள் வருது! ஒரு வகையில் நம்ம உசுரை காக்கும் குலசாமி technology!

படம், IPL, WWE போன்றவை எப்படியோ அதே மாதிரி தான் பிக்பாஸும். ஒரு பொழுதுபோக்கும் கொஞ்சம் வாழ்க்கை உண்மையும் கலந்த கலவை. அது என்ன வாழ்க்கை உண்மை?நீ நீயா இரு! ஓவியா மாதிரி! எத்தனையோ நேரத்துல நாம் நாமாக இருக்க முடியாமல் தவித்து இருக்கிறோம் ஆனா திரையில் ஒருத்தர் அப்படி வலுவாக இருக்கும்போது, நம்மை அறியாமலேயே ஒரு ஈர்ப்பு வந்துவிடுகிறது. அது ஓவியாக இல்லாமல் வேறு யாராக இருந்தாலும் சரி.

கணேஷ் மாதிரி நம்ம பாஸும் பக்குவமா எடுத்து சொன்னால், எவ்வளவு நல்லா இருக்கும்னு ஏங்கிய தருணங்களும் உண்டு. 

அப்பரம் பரணி பிரச்சனையெல்லாம், வேலையிடத்திலும் வாழ்க்கையிலும் நடக்காததா? இப்படி பிக்பாஸ் வாழ்க்கை நிகழ்வுகளோடு சம்மந்தம்படுத்தி பார்க்கும்போது, இன்னும் சுவாரஸ்சியமா போகுது.
இதுவரைக்கும் நடந்த episodeல, ஓவியா, சிநேகன், நமிதா உட்கார்ந்து குடும்பம், காதல் கதை, கவிதை பத்தி பேசியது தான் ரொம்ப ஆத்மாத்தமா இருந்துச்சு.  

அப்பரம் மீம்ஸ் போடுபவர்கள்- சும்மாவே வெடி வெடிப்பாங்க. தீபாவளி வந்தா சும்மாவா விடுவாங்க! ஆக மொத்தத்தில், பார்வையாளர்களுக்கு எல்லாம் பக்கமும் entertainment guaranteed! இப்ப வேற gst அது இதுன்னு தியேட்டர் பக்கம் போக முடியாத வருத்தத்தை பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் ஏதோ ஒரு வகையில் பூர்த்தி செய்ய பார்க்கின்றன. 

**************************
என்னுடைய சில மீம்ஸ். நம்மளும் கோதாவில் இறங்கிட்டோம்ல!