Showing posts with label தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள். Show all posts
Showing posts with label தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள். Show all posts

Oct 8, 2017

தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்- 30

For Maathevan-
கண்டவனையெல்லாம்
interview எடுத்து

காண்டாக்குற

கன்னங்குழி சிரிப்புல
Cool ஆகுற.

எடை கூடியும் அழகா தெரியுற
புள்ளத்தாச்சி பொண்ணு
போல
உன் எடை கூடியும்
அம்சமா இருக்குற.

கருப்பு சட்டை
வெள்ளை வேட்டில
"கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா"
முத்துகுமார் வரிகள
ஞாபகம்படுத்துற,
கஜினி சூர்யா போல
என் உலகத்த
மறக்கடிக்குற.

நீ சொல்லிய Movie review
பலவற்றில எனக்கு
உடன்பாடு இல்ல
இருந்தாலும் ரசிச்சு
பாத்து இருக்கேன்
படிக்காத மாணவன்
கிறுக்கி தள்ளிய தேர்வு
பதிலகளை திருத்தும்
ஆசிரியர் போல.

நீ பேசும் தமிழுக்கு
என்னை அடிமையாக்கியவனே,
30 வயசுல
Semi-retiredஆன
என் வயிற்று பட்டாம்பூச்சிகளுக்கு
CPR கொடுத்தவனே!

படம் முடிந்து
Generalஆ
Exitடை தேடும்
General Audience போல
நானும் தேடுகிறேன்
இந்த
ஆலாதி Admirationக்கு
ஒரு பெயரை.

Sep 7, 2014

தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்-29



இவர் யார்னு தெரியலையா? அட நல்லா பாருங்க!

காளிதாஸ் ஜெய்ராம் (நடிகர் ஜெய்ராமின் மகன்)

கண்கள் ஆயிரம் பேசுது சொல்ல வைக்கும் கண்கள் இவருக்கு!  அதவிட கொஞ்சம் நல்லாவே மிமிக்ரி செய்ய தெரிஞ்ச பையன் என்பதால் இன்றைய 'சைட்' இவர்!

'ஒரு பக்க கதை' என்ற தமிழ் படத்தில் நடிக்க போவதாக தகவல். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் படத்தின் இயக்குனர் கைவண்ணத்தில் காளிதாஸும் தமிழ் சினிமாவின் ஒரு பக்கமாக ஆக போகிறார்.

இவருக்காக நான் எழுதிய கவித கவித....

நீ காளிதாஸா?
இல்ல
என்னை
காலியாக்கும் தாஸா?






Jul 14, 2014

தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்- 28 (உலக கிண்ணம் ஸ்பேஷல்)

எல்லாருமே அழகான ஆட்டக்காரர்களை ரசித்து கொண்டிருந்த வேளையில், யாராச்சும் ஆட்டம் நடுவே ஓடிகொண்டிருந்த காற்பந்து நடுவர்களை 'சைட்' அடித்தீர்களா?

ஆம், என்றால்....
மச்சி, நீ என் நண்பண்டா!!

"விளையாட்டு வீரர்கள் எத்தனையோ பேர் இருக்கும்போது, நான் ஏன் நடுவர்களை பார்த்தேன்," 
அப்படினு விண்ணை தாண்டி வருவாயா கார்த்திக் ஜெசிய பார்த்து கேட்ட கேள்விய நானே எனக்குள்ள கேட்டுகிட்டேன்.

போட்டி போடும் ரெண்டு அணிகள் பந்தை சுற்றி ஓடறதுள்ள ஒரு நியாயம் இருக்கு. ஆனா, பாவம் மவராசன்-கள்! இவங்க ஏன் ஓடனும்?

அதனால தான், இவங்க மேல தனி மரியாதையும் பின்னர் 'அதுவும்'.

3) ben williams- australia

இவர் 'இவன் சிரிச்சா போச்சு' type. சிரித்த முகம் கொண்டவங்கள எப்படி
சைட் அடிக்காம இருக்க முடியும்??


சிறப்பு அம்சம்: புன்சிரிப்பு


2) sandro ricci- brazil


 'பார்த்துகிட்ட இருக்காலம்' type இவர். கடவுள் செதுக்கி இருக்கார்!

சிறப்பு அம்சம்: கண்














1) nicola rizzoli- italy


  

எட்டாவது அதிசயத்தை பாருங்கோ!

சிறப்பு அம்சம்: முகம்


இவங்க எல்லாரையும் ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுவேன். 
இவங்களவிட இன்னொரு விஷயத்த ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுவேன்.
கோதாவரி, வீட்டுக்கு நடுவே கோட்ட போடு என்று விசு போல், கோடு கிழிக்கும் நடுவர்களின் ஸ்டைலை ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுவேன்!!

  


May 24, 2014

தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்-27

ipl seasonல இந்த போஸ்ட் போடாம இருக்க முடியுமா!

1) ஜேடேஜா (சென்னை சூப்பர் கிங்ஸ்)

அந்த முறுக்கு மீசை தாங்கோ!




2) ஷீக்கர் டவான் (சன் ரைசர்ஸ்)

அதே அதே மீசை....

Feb 26, 2014

தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்-26

1) சமீபத்தில் 'highway' ஹிந்தி படம் பார்த்தேன். படம் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. அதுக்கு ஒரு காரணம் ரண்டிப் ஹூடா!


     
அப்படி ஒரு நடிப்பை வழங்கி இருந்தார் ரண்டிப் ஹூடா! அந்த அழுவுற காட்சியலாம்.....யப்பா!! ஓடி போய் திரைக்குள்ள புகுந்து ஆறுதல் சொல்லன்னும்னு இருந்துச்சு!! கிட்டதட்ட ஒரு கெட்டவன் கதாபாத்திரம்....ஆனாலும் பிடிச்சு இருந்துச்சு.

சிறப்பு அம்சம்: வில்லத்தனமான முகத்தில் ஏதோ ஒரு அப்பாவித்தனம் கண்களில்.

அப்பரம், இவரின் முந்தைய புகைப்படங்களை பார்த்தேன். அட, எப்படி இவ்வளவு நாள் நம்ம கண்ணுல்ல படாம இருந்தார்னு தோணுச்சு:))




Jun 4, 2013

தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்-25

#ஒரு குவாட்டர் சொல்லு மச்சி...ஐயோ........நம்பர் 25 சொன்னேன் #

வெள்ளி விழா கொண்டாட்டம் காண்கிறது இந்த தொடர்.

1) விஜய் சேதுபதியின் ரசிகையாகிவிட்டேன். தொடர் வெற்றிகள். பஞ்ச் டயலாக் பேசாமல், குத்தாட்டம் போடாமல் ஒரு ஹீரோ!

சிறப்பு அம்சம்: ஹீரோவாக தன்னை காட்டிகொள்ளாமல் நடிப்பது.

சிலரை பிடிக்க அவர்களது வெளிதோற்றம் முக்கியமில்லை. புதுசா ஒரு விஷயத்தை செய்யும்போதே, ஒருவரின் மீது ஒரு ஈர்ப்பு வருமே....that same ஈர்ப்பு தான் விஜய் சேதுபதி மீது! புதுசு புதுசாய் அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் அவரை சைட் அடிக்க வைத்தது.


மற்றும் அவரின் புன்னகை இன்னொரு ப்ளஸ்!

2) அடுத்த ஹீரோ நிவின். நேரம் படத்தில் நடித்தவர்.



இவருக்கு லேசான தாடி தான் அழகு. மற்றபடி படத்தை பார்க்கவில்லை இன்னும். சில பாடல்களை பார்த்தேன். ம்ம்ம்....மனுஷன் பின்னியிருக்காரு!


Apr 21, 2013

தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்-24



சித்தார்த்....இவர் சித்தார்த்...........





சாரி, இதுக்கு மேல பேச்சு வரல:))) கொஞ்சம் பொறுங்க....:))))


வயசு 34. 34???!!?? வருஷம் போக போக இவர் இன்னும் இளமையா போய்கிட்டு இருக்காரு! இவர் ரொம்ப நாள் சினிமால இருக்காரே, ஏன் திடீரென்னு 'சைட்' என்பீர்கள்.சமீபத்தில் 'உதயம் nh4' படம் trailer பார்த்ததினால் வந்தது!!

அடுத்து....



ரவி ராம்பால். இப்போது நடக்கும் ஐபில் ஆட்டங்களை அவ்வபோது பார்த்து கொண்டு இருக்கிறேன். அதில் ரொம்ப கவர்ந்தவர் ரவி ராம்பால். அதாவது சிலரை பார்த்தவுடனே 'அட' என்று சொல்ல வைக்கும். அப்படிப்பட்டவர் தான் இந்த ரவி ராம்பால்!! 

அடுத்து....



ஜெடேஜா. பிடித்த அம்சம்- திறமை. கடந்த சில ஆட்டங்களில் இவரின் அபார வெற்றி இவர் பக்கம் ஈர்த்துள்ளது. மற்றபடி பார்க்க போனால்..ம்ம்... இப்படி trimmed hair and beard தான் இவருக்கு அழகு!! 

Feb 12, 2013

தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்-23





சிலர் படுத்தும்பாடு நம்மை பைத்தியமாக்கும்
சிலர் பாடும் பாட்டு நம்மை பைத்தியமாக்கும்!

இவர் இரண்டாவது ரகம்- பெயர் அபே ( கடல் படத்திலிருந்து மூங்கில் தோட்டம் மூளிக வாசம் பாடலை பாடியவர்)

இன்று வரை 10000000000 தடவ இந்த பாடலை கேட்டு இருப்பேன். இவர் குரலுக்காக! பிடிச்ச அம்சம்- குரல்!

****************************************************************



இவர் youtube videoல் 'காதல் சடுகுடு' பாடலை 'unplugged version' என்று ஒரு வகையில் பாடியிருக்கிறார். அவ்வபோது பாடலில் கொஞ்ச spelling mistakeவோட பாடினாலும் (குழந்தையை குலுந்தை என்றார்)



இருந்தாலும்............ சைட் அடிக்க தோணுது. அது அவரின் 'music tatoo''க்காக தான்!!! இவர் பெயர் சத்யா!!




******************************************************************


இவர் பெயர் 'review raja'' கனடாவில் வாழும் வெள்ளைக்காரர். இவர் தமிழ் படங்களை ரசித்து பார்ப்பவர். தமிழ் சினிமா நிறைய தெரியும். இவர் விமர்சனம் செய்யும் பாணி சூப்பர்!!! இவர் முதலில் பார்த்த தமிழ் படம்- பில்லா. அன்று முதல் இவர் தமிழ் பட ரசிகர் ஆகிவிட்டார். இவர் பேசும் விதம் அதைவிட சூப்பர்!!!