Showing posts with label விஜய். Show all posts
Showing posts with label விஜய். Show all posts

Jan 15, 2017

பைரவா- எனக்கும் ஒரு கெட்ட பழக்கம் இருக்கு

அந்த காலத்துல கொத்தடிமைகளா வச்சு வேலை வாங்கி துன்புறத்தப்பட்ட தான் கூலி வேலை செஞ்சாங்க நிறைய பேர் . அது ரொம்பலாம் மாறல இன்னைக்கும். ஆபிஸுக்கு போய் பார்த்தா, நம்மள எப்படிலாம் டிசைன் டிசைனா டார்ச்சர் பண்ண முடியுமா அப்படி 'செஞ்சி' தான் வீட்டுக்கே அனுப்புறான். இப்படி தான் என்னை போன்ற பல கொடி மக்கள் வேலைக்கு போயிட்டு இருக்காங்க.

அப்பவும் சரி இப்பவும் சரி, நாங்க நிம்மதி தேடும் ஒரு சில விஷயங்களில் படம் பார்த்தும் ஒன்னு. ரெண்டு மணி நேரம் உலகத்தை மறந்து, சந்தோஷமா இருக்கனும். அந்த சந்தோஷம் என்பது வெறும் நாலு பாட்டு, கிரிக்கெட் மட்டை சண்டை, சைக்கிலில் பறந்தால் வந்திடும்னு நினைச்சா அது மிக பெரிய தப்பு. துரோகம்.

ரசிகர்களுக்காக தான் படம் பண்ணுறேன்- சொல்லும்  பாணியே முதல தப்பு. யார் ரசிகன்? உன் 100அடி கட்-அவுட்டுக்கு மாலை போட்டு, பால் அமிஷேகம் பண்ணி, நீ முதல் காட்சியில் slow motionல பறக்கும்போதோ, குதிக்கும்போதோ, பாயும்போதோ கத்துறானே அவனா?

அவன் நீ சேர்த்து வச்சுருக்கும் தொண்டன். அவ்வளவுதான்.

நான் ரசிகன். ரசிகன் வேற தொண்டன் வேற. நீ, ரசிகனுக்கு எப்போதுமே துரோகம் தான் பண்ணிக்கிட்டு இருக்கே.

சமீபத்தில் இயக்குனர் பார்த்திபன் ஒரு கருத்த ஆணித்தரமா சொல்லியிருந்தார் - "இங்க படம் பார்க்கும் கூட்டம் வேற, படத்தை தயாரிக்கும் கூட்டம் வேற."

ரெண்டு பேருமே எதிர்ப்பார்ப்பது வேறு. தயாரிப்பாளனுக்கு மட்டும் படம் பண்ணா, இப்படி தான் இருக்கும்,தலைவா.

வாழ்க்கை ஒரு வட்டம்னு சொன்ன நீயே அந்த வட்டத்துக்குள்ள சிக்கி கஷ்டப்படுற, எங்களையும் சேர்த்து கஷ்டப்படுத்துற. typewriter கால பழைய கதை, யூகிக்க கூடிய திரைக்கதை, வலுவற்ற பாட்டு, அதையும் தாண்டி ஒரு விக்கு. இது தான் பைரவா!

மரண மாஸ் கதை தான் தனக்கு பலம்.

முப்பது வருஷமா கோலம் போட்டவங்க கூட எந்திரிச்சு போயிட்டாங்க, ஆனா இன்னும் அதே சைக்கிள்ல வர? இது மரண மாஸா?


கதை- ஆவூனா, மக்கள காப்பத்துறேன். ஊர காப்பத்துறேனு சொன்ன காலமெல்லாம் இருக்கட்டும் தலைவா. காப்பத்தியது எல்லாம் போதும். இப்போ உன் திறமை என்ன? இப்ப உள்ள காலகட்டதுக்கு படம் பண்ண ஏன் இவ்வளவு தயக்கம்? மக்களுக்கு படம் பண்ண வேண்டாம், அந்த மக்களில் ஒருவனாய் இருந்தால், என்ன பண்ணவ? அது மட்டும் போதும் என் போன்ற ரசிகனுக்கு.

பலம்- உன் பலமே உன் பலவீனமா போச்சு.

பைரவா படம் எனக்கு சுத்தமா பிடிக்காததற்கு காரணம் இயல்புதன்மை அற்ற ஒரு ஓட்டம். அனைத்து காட்சிகளுமே செட்-க்குள்ளே நடக்குது, சென்னையாக இருந்தாலும் சரி, திருநெல்வேலியாக இருந்தாலும் சரி. அதிலும் ஒரு பைக் காட்சி. ரேமோ படத்திலிருந்து டாக்டராக இருக்கும் கீர்த்தி சுரேஷ் பின்னாடி உட்கார்ந்து போகும் காட்சி. அதுகூட வெளிபுற காட்சியாக அமைக்க முடியாத ஒரு சூழல். உன்னைய வச்சு வெளிபுற காட்சி எடுக்க முடியாத ஒரு உயரத்தில் நீ இருக்க, தரையில் நடுக்கும் உண்மை நிலை உன் கண்ணுக்கு தெரியல.


பல பேட்டிகளில் விஜய் சட்டைய பத்தி பேச்சு. புள்ளி வச்சு சட்டையாம்?

விஜய் சூப்பரா காசை வச்சு கையில் வித்தை காட்டுறாரு- இது தான் நீ கத்துகிட்ட மொத்த வித்தையும் இறக்கும் விதமா?

"சிறப்பு...மிக சிறப்பு" 

அப்படி என்ன மாதிரி தான் படத்துல நடிக்கனும்?

1) துருவங்கள் பதினாறு- செம்ம படம் தலைவா!! உனக்கு பிடிச்ச போலீஸ் கதாபாத்திரம் தான். நிதானமா, திரைக்கதை அவ்வளவு புத்திசாலித்தனமா இருக்கும். ஆர்ப்பாட்டம் இல்லாத ஒரு கதையில் நீ தோன்ற வேணும்.  ஆனா தலைவா, இதலயும் போய் ரைம்ஸ் சொல்வேனு அடம்பிடிக்க கூடாது.


2) காதலும் கடந்து போகும்- உனக்கே உரிய காமெடி ரோல். ரொம்ப ரொம்ப சதாரணமான கதை. ஆனா, உனக்குள் இருக்கும் நடிகன் நிச்சயமா அனைவருக்கும் பிடித்திருக்கும். 

3) கொடி- ரெட்டை வேடத்தில் கலக்கியிருக்கலாம். இதுவும் கிராமத்தை காப்பத்தும் கதை தான். ஆனா, நிறைய சுவாரஸ்சியம் கலந்த கதை. தம்பியாகவும் அண்ணனாகவும் நடித்து கொடியை உச்சத்தில பறக்கவிட்டு இருக்கலாம்.

4) 24- அறிவியில் சார்ந்த கதை. குழந்தைகளுக்காக ஆட்டம் ஆடும் நீ, இதுல அறிவுபூர்வமா நிறைய விஷயங்களை உன்னை ரசிக்கும் குழந்தைகளுக்காக செய்து இருக்கலாம். 'புலி' குழந்தைகளுக்கான படம் இல்ல.

இப்படி ஏகப்பட்ட படங்களில் உன் அவதாரத்தை பார்க்க ஆவலா இருக்கேன்.


சமீபத்தில், தோழிகளுடன் பேசி கொண்டிருக்கும்போது உன் பேச்சு வந்துச்சு.

நான்: விஜய் பழைய மாதிரி படங்கள நடிக்கனும். you know...like ok kanmani!

தோழி: என்ன விளையாடுறீயா? living together relationshipல விஜ்யா?


இன்னோரு தோழி: கண்டிப்பா முடியாது! அதலாம் முடியாது.

நான்: டுல்கர் சல்மான் ரோல் பத்தி பேசுல. பிரகாஷ் ராஜ் ரோல நடிக்கலாம்னு சொல்றேன். 

ஆச்சிரியத்தில் வாய்பிளந்து தோழிகளுக்கு மயக்கம் வந்தது.



பைரவா படத்துல நீ , 'நிறைய பேர்கிட்ட இல்லாத ஒரு கெட்ட்ட்ட்ட பழக்கம் என் கிட்ட இருக்கு!"

உன் உண்மை ரசிகையாய் எனக்கும் ஒரு கெட்ட பழக்கம் இருக்கு-

"இந்த மாதிரி படத்துல எப்படி விஜய்'னு இந்த உலகத்தையே ஆச்சிரியத்தில் முழ்கடிக்க வைக்கும் படத்தில் நீ நடிச்சுருவேனு நம்பிக்கையோட வாழ்றது"

Apr 19, 2016

தெறியும் fanனும்- விஜயும் ஷாருக்கும்.

ஒரே வார இறுதியில் இரண்டு பெரிய படங்கள்! தெறி படம் டிக்கெட் விலை, வரலாறு காணாத அதிகபட்ச தொகை- $18 (சிங்கையில்). இதுவரை எந்த திரைப்படத்துக்கு இவ்வளவு விலை இல்லை. தெறியும் fanனும் சேர்த்து, மொத்த செலவு மட்டும் $30, கோக், நொறுக்கு தீனி செலவு வேற. இனி அடுத்த ரெண்டு வாரத்துக்கு கஞ்சி தான் எனக்கு!
-------------------------------------------

தெறி,fan படங்களுக்கு இடையே சில பல வித்தியாசங்களையும் ஒற்றுமைகளையும் கண்டு அறிந்தேன்.


1) fan, பாலிவுட் பாட்ஷா நடித்த படம். தெறி, பாட்ஷா படத்தை நினைவூட்டும் படம்.

2) ரெண்டுமே 2.5 மணி நேரம் ஓட. எனக்கு தான் மூன்று நாட்கள் திரையரங்கிலே வாழ்ந்த உணர்வு ஏற்பட்டது.
ஒரு திரைப்படம் 2 மணி நேரத்துக்கு மேலே போனால், எனக்கு நினைவுக்கு வருவது இந்த சின்ன பையனின் குரல் தான்....

(0.55-1.00)- "tarantino எல்லாம் பார்த்தால், படம் தாம்பரம் தாண்டாது? பரவாயில்லையா?



3) காருக்கு எதுக்கு அச்சாணி?




தெறிக்கு எதுக்கு ஏமி?




இந்த கதாபாத்திரத்த நம்ம வடிவுக்கரசிக்கிட்ட கொடுத்து இருந்தாலும், பின்னி பெடல் எடுத்து இருப்பாங்க!

தெறி படத்துக்கு ஏமி தேவையில்லை என்றால், fan படத்தில் ஒரு கதாநாயகி இருந்திருந்தால் நல்லா இருந்திருக்குமோ-னு தோணுச்சு.

4) ஒரு படத்தில் பாடல்களே இல்லை. இன்னொரு படத்தில், சூப்பர் ஹிட்  பாடல்கள் உண்டு. (வேறு படங்களின் சூப்பர் ஹிட் பாடல்கள்)

"சுந்தரி கண்ணால் ஒரு செய்தி"

"நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்....."

"என்னடி ராக்கம்மா"

"அலைபாயுதே கண்ணா" 


5) கலரும் கால்வாயும்




தெறி படத்தில் கலர் எல்லாம் தெறிக்க விட்டு இருக்காங்க. தனது குருநாதர் ஷங்கர் போலவே அட்லியும், பாடல் காட்சிகளில், பெயர் வைக்காத கலரைகூட அள்ளி பூசிவிட்டு இருக்கிறார். ஷங்கர் போல் அளவாய் அழகாய் பயன்படுத்தி இருக்கலாம்.



"ஏய் இங்க பூசு. ஏய் அங்க  பூசு, " என்று கவுண்டமணியின் குரல் தான் எனக்கு கேட்டது.

கலர் கதற கதற தெறித்தது என்றால், fanனில் கால்வாயில் பறந்து பறந்து அடிக்கும் காட்சிகள் கண்ணை கட்டின. அதுவும் Croatia நாட்டில். அந்நாடு எங்கப்பா இருக்கு?

6) "எனக்கு இன்னொரு பெயர் இருக்கு" என்று சொல்லாத ஒரு காட்சி தெறியில் இடம்பெற, " சொல்லுங்க சொல்லுங்க...நீங்க bombayலே என்னாவ இருந்தீங்க?" என்பது தான் தெறியுன் கதை.

ஒரு நடிகனை கடவுளாய் நினைக்கும் ஒரு ரசிகன் மும்பைக்கு செல்வது தான் fan திரைப்பட்டத்தின் கதை.

7) தெறி படத்தில் சில கதை சறுக்கல்கள் இருந்தாலும், ரசிக்க வைத்த விஷயங்கள்- விஜய், குழந்தை நைனிக்கா, விஜய்-சமந்தா காட்சிகள்.

குழந்தை நைனிக்காவின் அட்டகாசங்கள் அனைத்தும் தூள் கிளப்புது.
விஜய்-சமந்தா காதல் காட்சிகள், பழைய காதல் இளவரசன் விஜயை நினைவூட்டுகிறது.


விஜய் இந்த வயதிலும் செம்ம கியூட்-டா, இளமை துள்ளலோடு மிளிர்கிறார்.

ஷாருக் போலவே.

ரசிகனாக நடிக்கும் ஷாருக், அப்படியே 25 வயது இளைஞன் போல் வளம் வருகிறார். இதுவரை அவர் படங்களில் காட்டாத ஒரு நடிப்பை இப்படத்தில் பார்க்கலாம்.


Mar 15, 2013

என்னது பாலா அடிச்சாரா?

பரதேசி! (யோவ்..உங்கள திட்டலையா? படத்த பெயர சொன்னேன்)

பரதேசி படத்தின் teaser ஒன்று வெளியாகி, அதில் நடிப்பவர்களை போட்டு அடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.


 

இதற்கு பலவித எதிர்ப்புகள்! முக்கியமா இந்த டிவிட்டர் பக்கமா போனால்...சக நடிகர்கள்/இயக்குனர்கள் காட்டிய எதிர்ப்புகள்:

 Actor : Siddharth"A video of a director hitting his actors in the name of reality is going viral.Can we please have one of actors beating the hell out of him?"

 Director : Balaji Mohan"Paradesi 'reality' teaser sets a bad example to young future filmmakers who consider Bala sir as an idol. This isnt the way to make films."

 Actor-producer : Udhayanidhi Stalin"I decided not 2 watch the reality muvi! I shud b building temples for directors Rajesh S.R.Prabhakaran sir!"

எனக்கு சிரிப்பு தான் வந்தது இவர்களின் எதிர்ப்புகளை பார்த்து! பாலாவுக்கு தெரியாதா- இது விளம்பர யுத்தி என்று?

இதுக்கு தானே ஆசைப்பாட்டாய் குமாரா? என்பதுபோல் எதிர்வினை விளம்பர தானே இன்றைய 'விஸ்வரூப' வெற்றியை நிர்ணயிக்கின்றது!!  தப்போ சரியோ? படம் நல்லாயிருக்குதுனு நிறைய பேர் சொல்றாங்க! இயக்குனர் பாலாவின் ரசிகை நான் என்று சொல்ல முடியாது. வித்தியாசமான படங்களை கொடுத்து இருக்கிறார்! படம் ஓடினால் சரி! ஆனால், இவரிடம் பிடிக்காத விஷயம்- அழகானவர்களை அழுக்காய் அலங்காரம் செய்வது!

http://filmy365.com/tamil/files/2012/11/Atharva-02.jpg             http://moviegalleri.net/wp-content/gallery/paradesi-movie-stills/bala_in_paradesi_movie_stills_adharvaa_murali_6dba4ba.jpg

அதர்வா எவ்வளவு அழகு!! ச்சே போங்க பாஸ்...மனசே சரியில்லை! அடுத்து, விஜய் இவரிடம் படம் பண்ண போவதாய் செய்தி!!! தல!!!!!!!!!! இது நமக்கு தேவையா தல? நம்மகிட்ட இருக்கும் ஒரே அம்சம்- அந்த அழகான சிரிப்பு தான்! பார்த்து சுதார்ச்சிக்கோ தல!
             
                           https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUGlBeZ6AfqWZ0fsOwfe9sfFBFOExgjnq0vPMy81C7_qDPsvTQgEu8cV3UsTZOhRM9pNKFnTQeYEysjSzwv_kiFqFtt26GBXJ627g43WbE7sjFuhyphenhyphenwupHamYYypxHlJy-B_x6BK-Q5mBzV/s1600/smile.jpg


சரி பாலா அடிச்சதுக்கே இப்படினா? சின்ன வயசுல, நம்ம அப்பாக்கள் நம்மள தூக்கிபோட்டு மிதிச்சு அடி இடி மாதிரி விழுந்த கதையை reality teaser போட்டால், பூகம்பமே கிளம்புமா பாஸ்?? உஷ்ஷ்ஷ்ஷ....யப்பா!!!

Jun 21, 2009

இந்த மானக்கெட்ட பொழப்பு தேவையா?

விஜய் டீவி அவார்ட்ஸ் நிகழ்ச்சிய பார்த்தபிறகு....சாரி சாரி, அந்த சூர்யா family function நிகழ்ச்சியை பார்த்தபிறகு எனக்கு தோன்றியது தான் இப்பதிவின் தலைப்பு!

உளறல்கள்:

அது எப்படி, தமிழ் சினிமாக்காரர்கள் உளறுவதில் இப்படி கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கமல் முதல் மனோரமா வரை எல்லாரும் ஏதோ சம்மந்தம் இல்லாமல் பேசியது சிப்பா இருந்துச்சு! அதுவும் சிவாகுமார் பேசியது நகைச்சுவையிலும் நகைச்சுவை!! அண்ணன் பையனுக்காக கமல் தான் சூர்யாவுக்காக விருதை விட்டுகொடுத்தது என்று கூறுகையில்......... என்னால முடியல்ல!!!

மடத்தனம்:

காமெடி என்ற பெயரில் பார்த்திபன் சொன்னது. ஐயோ...... மடத்தனத்தின் மன்னன் அவரே! "அவார்ட்ஸ் முத்தம் மாதிரி. கொடுக்கும்போதும் சந்தோஷம் வாங்கும்போதும் சந்தோஷம்...." அதுக்கு அப்பரம் அவார்ட்ட சிநேகாவிடம் கொடுத்தது....யப்பா நான் இதுக்கு மேலேயும் எதுவும் சொல்லல....அப்பரம் ஏதாச்சு சென்சார் போர்ட் பிரச்சனை வந்திட போது!

எரிச்சல்ஸ்:

டிடி வந்தவர்களிடம் அவர்கள் அணிந்திருந்த உடைகளை எங்கே வாங்கினீர்கள் என்று கேட்டது சலிப்பை தந்தது. எரிச்சலாக இருந்தது. ஆனால், சிலர் போட்டு வந்த உடைகள், அப்படியே தூங்கி எந்திரிச்சு வந்த மாதிரியே இருந்துச்சு!! (வெங்கட் பிரபு, பிரேம் ஜி.....தூங்கிட்டீங்களா?)

சின்னப்புள்ளத்தனம்:

கௌதம் மேனன் ஹாரிஸிடம் விருதை கொடுத்துவிட்டு மேடையை விட்டு விழுந்து அடிச்சு பின்னால் ஓடியது....ஹாஹா..... அதுவும் கோபி அவரை வலுக்கட்டாயமாக கேள்வி கேட்டு மடக்கியது..... ஹாஹா......

அடுத்த அரசியல் தலைவர்:
விருது பெற்றால் சரி, காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொள்ளலாம். விருது பெற்றவரிடம் ஏன் யா விழுவுற? விஜய் கமலிடம் விருதை கொடுத்துவிட்டு காலில் விழுந்தார். விஜய் அரசியலுக்கு போக போகிறார் என்பதை நிருபித்துவிட்டார். அதுவும் மைக்கை பிடித்து அவ்வளவு நேரம் விஜய் பேசியது வியப்பாக இருந்துச்சு.

குடும்ப நிகழ்ச்சி:

என்னை மிகவும் ஆத்திரம் அடைய செய்தது சூர்யாவின் செயல் தான். ஆசிர்வாதம் வாங்கி கொள்வது வேறு, ஒருத்தன் காலில் விழுவது வேறு! சூர்யா சார், ஏன் இப்படி உணர்ச்சிவசப்பட்டீங்க? இதுக்கு முன்னாடி எத்தனையோ விருதுகளை பெற்றபோது, இப்படி தான் குடும்பத்தையே மேடைக்கு அழைச்சீங்களா?இல்லை இப்படி தான் யோசிக்காமல் காலில் விழுந்தீங்களா? நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபி செய்த கூத்து ஒரு காரணம்! தேவையில்லாமல் சூர்யாவின் குடும்பத்தினரை மேடைக்கு வர சொன்னது, ஒரு பரபரப்பை ஏற்படுத்துவதற்காக என்பது அப்பட்டமாக தெரிந்தது.

இப்படி ஒரு பொழப்பு தேவையா?

எங்களை முட்டாளாக்கிய விதம்:

ஏ ஆர் ரகுமான் வரவில்லை. ஆனால் அவருக்கு விருது கொடுத்தது போல் காட்டினீர்கள். சிம்ரன் best supporting actress விருது கிடைத்தது. அவர் வரவில்லை என்பதால் இவ்விருது கொடுக்கப்படாது என்று கோபி கூறினார். என்னடா நிகழ்ச்சி பண்ணுறீங்க? ஒரு standard procedure வேண்டமா?

பாம்பே ஜெய்ஸ்ரீ வரவில்லை. ஆனால், அவர் சார்பா விருதை திருமதி ஹாரிஸ் ஜெய்ராஜ் வாங்கி கொண்டார்.

????? என்னங்கடா நிகழ்ச்சி இது?
கமல் கமல் கமல்:

இந்த நிகழ்ச்சியை பொருட்செலவு இல்லாமல் செய்து இருக்கலாம். கமலின் வீட்டின் பூங்காவில் இந்நிகழ்ச்சியை simpleஆ முடித்து இருக்கலாம்! ரசிகர் வாக்குகள், நாக்குகள், மூக்குகள் என்று எங்களை ஏமாற்றுவதை, நிறுத்தவேண்டும்.

வருத்தம்:

அபியும் நானும் ஒரு விருதுகூட பெறாதது!

மெகா வருத்தம்:

ஏகன் படத்துக்கு எந்த விருதும் கிடைக்காதது!(ஹிஹிஹி...)

போங்கடா நீங்களும் உங்க அவார்ட் ஷோவும்!