Jan 15, 2017

பைரவா- எனக்கும் ஒரு கெட்ட பழக்கம் இருக்கு

அந்த காலத்துல கொத்தடிமைகளா வச்சு வேலை வாங்கி துன்புறத்தப்பட்ட தான் கூலி வேலை செஞ்சாங்க நிறைய பேர் . அது ரொம்பலாம் மாறல இன்னைக்கும். ஆபிஸுக்கு போய் பார்த்தா, நம்மள எப்படிலாம் டிசைன் டிசைனா டார்ச்சர் பண்ண முடியுமா அப்படி 'செஞ்சி' தான் வீட்டுக்கே அனுப்புறான். இப்படி தான் என்னை போன்ற பல கொடி மக்கள் வேலைக்கு போயிட்டு இருக்காங்க.

அப்பவும் சரி இப்பவும் சரி, நாங்க நிம்மதி தேடும் ஒரு சில விஷயங்களில் படம் பார்த்தும் ஒன்னு. ரெண்டு மணி நேரம் உலகத்தை மறந்து, சந்தோஷமா இருக்கனும். அந்த சந்தோஷம் என்பது வெறும் நாலு பாட்டு, கிரிக்கெட் மட்டை சண்டை, சைக்கிலில் பறந்தால் வந்திடும்னு நினைச்சா அது மிக பெரிய தப்பு. துரோகம்.

ரசிகர்களுக்காக தான் படம் பண்ணுறேன்- சொல்லும்  பாணியே முதல தப்பு. யார் ரசிகன்? உன் 100அடி கட்-அவுட்டுக்கு மாலை போட்டு, பால் அமிஷேகம் பண்ணி, நீ முதல் காட்சியில் slow motionல பறக்கும்போதோ, குதிக்கும்போதோ, பாயும்போதோ கத்துறானே அவனா?

அவன் நீ சேர்த்து வச்சுருக்கும் தொண்டன். அவ்வளவுதான்.

நான் ரசிகன். ரசிகன் வேற தொண்டன் வேற. நீ, ரசிகனுக்கு எப்போதுமே துரோகம் தான் பண்ணிக்கிட்டு இருக்கே.

சமீபத்தில் இயக்குனர் பார்த்திபன் ஒரு கருத்த ஆணித்தரமா சொல்லியிருந்தார் - "இங்க படம் பார்க்கும் கூட்டம் வேற, படத்தை தயாரிக்கும் கூட்டம் வேற."

ரெண்டு பேருமே எதிர்ப்பார்ப்பது வேறு. தயாரிப்பாளனுக்கு மட்டும் படம் பண்ணா, இப்படி தான் இருக்கும்,தலைவா.

வாழ்க்கை ஒரு வட்டம்னு சொன்ன நீயே அந்த வட்டத்துக்குள்ள சிக்கி கஷ்டப்படுற, எங்களையும் சேர்த்து கஷ்டப்படுத்துற. typewriter கால பழைய கதை, யூகிக்க கூடிய திரைக்கதை, வலுவற்ற பாட்டு, அதையும் தாண்டி ஒரு விக்கு. இது தான் பைரவா!

மரண மாஸ் கதை தான் தனக்கு பலம்.

முப்பது வருஷமா கோலம் போட்டவங்க கூட எந்திரிச்சு போயிட்டாங்க, ஆனா இன்னும் அதே சைக்கிள்ல வர? இது மரண மாஸா?


கதை- ஆவூனா, மக்கள காப்பத்துறேன். ஊர காப்பத்துறேனு சொன்ன காலமெல்லாம் இருக்கட்டும் தலைவா. காப்பத்தியது எல்லாம் போதும். இப்போ உன் திறமை என்ன? இப்ப உள்ள காலகட்டதுக்கு படம் பண்ண ஏன் இவ்வளவு தயக்கம்? மக்களுக்கு படம் பண்ண வேண்டாம், அந்த மக்களில் ஒருவனாய் இருந்தால், என்ன பண்ணவ? அது மட்டும் போதும் என் போன்ற ரசிகனுக்கு.

பலம்- உன் பலமே உன் பலவீனமா போச்சு.

பைரவா படம் எனக்கு சுத்தமா பிடிக்காததற்கு காரணம் இயல்புதன்மை அற்ற ஒரு ஓட்டம். அனைத்து காட்சிகளுமே செட்-க்குள்ளே நடக்குது, சென்னையாக இருந்தாலும் சரி, திருநெல்வேலியாக இருந்தாலும் சரி. அதிலும் ஒரு பைக் காட்சி. ரேமோ படத்திலிருந்து டாக்டராக இருக்கும் கீர்த்தி சுரேஷ் பின்னாடி உட்கார்ந்து போகும் காட்சி. அதுகூட வெளிபுற காட்சியாக அமைக்க முடியாத ஒரு சூழல். உன்னைய வச்சு வெளிபுற காட்சி எடுக்க முடியாத ஒரு உயரத்தில் நீ இருக்க, தரையில் நடுக்கும் உண்மை நிலை உன் கண்ணுக்கு தெரியல.


பல பேட்டிகளில் விஜய் சட்டைய பத்தி பேச்சு. புள்ளி வச்சு சட்டையாம்?

விஜய் சூப்பரா காசை வச்சு கையில் வித்தை காட்டுறாரு- இது தான் நீ கத்துகிட்ட மொத்த வித்தையும் இறக்கும் விதமா?

"சிறப்பு...மிக சிறப்பு" 

அப்படி என்ன மாதிரி தான் படத்துல நடிக்கனும்?

1) துருவங்கள் பதினாறு- செம்ம படம் தலைவா!! உனக்கு பிடிச்ச போலீஸ் கதாபாத்திரம் தான். நிதானமா, திரைக்கதை அவ்வளவு புத்திசாலித்தனமா இருக்கும். ஆர்ப்பாட்டம் இல்லாத ஒரு கதையில் நீ தோன்ற வேணும்.  ஆனா தலைவா, இதலயும் போய் ரைம்ஸ் சொல்வேனு அடம்பிடிக்க கூடாது.


2) காதலும் கடந்து போகும்- உனக்கே உரிய காமெடி ரோல். ரொம்ப ரொம்ப சதாரணமான கதை. ஆனா, உனக்குள் இருக்கும் நடிகன் நிச்சயமா அனைவருக்கும் பிடித்திருக்கும். 

3) கொடி- ரெட்டை வேடத்தில் கலக்கியிருக்கலாம். இதுவும் கிராமத்தை காப்பத்தும் கதை தான். ஆனா, நிறைய சுவாரஸ்சியம் கலந்த கதை. தம்பியாகவும் அண்ணனாகவும் நடித்து கொடியை உச்சத்தில பறக்கவிட்டு இருக்கலாம்.

4) 24- அறிவியில் சார்ந்த கதை. குழந்தைகளுக்காக ஆட்டம் ஆடும் நீ, இதுல அறிவுபூர்வமா நிறைய விஷயங்களை உன்னை ரசிக்கும் குழந்தைகளுக்காக செய்து இருக்கலாம். 'புலி' குழந்தைகளுக்கான படம் இல்ல.

இப்படி ஏகப்பட்ட படங்களில் உன் அவதாரத்தை பார்க்க ஆவலா இருக்கேன்.


சமீபத்தில், தோழிகளுடன் பேசி கொண்டிருக்கும்போது உன் பேச்சு வந்துச்சு.

நான்: விஜய் பழைய மாதிரி படங்கள நடிக்கனும். you know...like ok kanmani!

தோழி: என்ன விளையாடுறீயா? living together relationshipல விஜ்யா?


இன்னோரு தோழி: கண்டிப்பா முடியாது! அதலாம் முடியாது.

நான்: டுல்கர் சல்மான் ரோல் பத்தி பேசுல. பிரகாஷ் ராஜ் ரோல நடிக்கலாம்னு சொல்றேன். 

ஆச்சிரியத்தில் வாய்பிளந்து தோழிகளுக்கு மயக்கம் வந்தது.



பைரவா படத்துல நீ , 'நிறைய பேர்கிட்ட இல்லாத ஒரு கெட்ட்ட்ட்ட பழக்கம் என் கிட்ட இருக்கு!"

உன் உண்மை ரசிகையாய் எனக்கும் ஒரு கெட்ட பழக்கம் இருக்கு-

"இந்த மாதிரி படத்துல எப்படி விஜய்'னு இந்த உலகத்தையே ஆச்சிரியத்தில் முழ்கடிக்க வைக்கும் படத்தில் நீ நடிச்சுருவேனு நம்பிக்கையோட வாழ்றது"

Jan 1, 2017

துருவங்கள் பதினாறு- 2017 படைக்க வருது வரலாறு

துருவங்கள் பதினாறு. இப்படி  தரமான படங்களை மட்டும் தமிழ் சினிமா 2017ல் கொடுக்க முன்வந்தால், யாரலையும் அடிச்சுக்க முடியாது நம்மை! நல்ல சினிமாவை பார்க்க துடிக்கும் அனைவருக்கும், துருவங்கள் 16 ஒரு புத்தாண்டு பரிசு தான் போங்க!



துருவங்கள் 16- என்னய்யா இப்படி கலக்கி இருக்கான் பையன் என்று வாய் பிளந்தேன் நான். இயக்குனர்- கார்த்திக் நரேன். இப்போது தான் 22 வயதாம். படம் ஆரம்பிக்கும் போது 21 வயது. அப்போ நினைத்து பாருங்க, இக்கதைய யோசிச்சு இருக்கும்போது 20 வயதுகூட முழுசா ஆகி இருக்காது. இருந்தும், இக்கதைய யோசிச்சு திரைக்கதையை பிரமாதமாய் அமைத்ததற்கு, கார்த்திக் நரேன் அவர்களே, hats off bro!!

ஒரு கொலை, இல்ல இல்ல இரண்டு கொலைகள் நடக்கின்றன ஒரே நாளில் கிட்டதட்ட ஒரே இடத்தில்- கொலையை யார் பண்ணியிருப்பா? இதற்கு காரணம் என்ன? இது தான் கதை. இந்த மாதிரி கதையெல்லாம் ஜெய் சங்கர் காலம் முதல் நாம் பார்த்து பழகி இருந்தாலும், து.16 தனியா தனித்து கம்பீரமாய் நிற்கிறது.

முடிவு எனக்கு அவ்வளவு திருப்தியாக இல்லாவிட்டாலும், படம் ஆரம்பித்த முதல் காட்சியிலிருந்து கடைசி வரைக்கும், என்னை நகர விடாமல் செய்தன- காட்சியமைப்பு, நடிப்பு, பிண்ணனி இசை.

non-linear narrative- கதை கேட்ட ரகுமானே, முழு படத்தை பார்த்தபிறகு தான் அவருக்கே படம் புரிந்ததாம். ஆனாலும், இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும். படம் பார்ப்பவர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக 'chronological order'ல் சம்பவங்களை கூறுவார் காவல் அதிகாரி ஒருவர் ஒரு காட்சியில். ரொம்பவே ரசித்தேன். "உலக சினிமா என்று நான் எந்த ஒரு வெங்காயத்தை எடுத்தாலும், அதை நீ பார்த்தே ஆகனும்." என வீராப்பு பேசும் இயக்குனர்கள் நிறைந்த சினிமாவில், ரசிகனையும் அரவணைத்து அவனுக்கு புரியும்படி காட்சிகள் வைத்தது, மிக சிறப்பு.

ஒரு இடத்தில், காவல அதிகாரி சாட்சி ஒருவரை காவல் நிலையத்திற்குள் அழைத்து செல்வார். அப்போது அழைத்து செல்லும்போது, அந்த அதிகாரி அங்கு சுத்தம் செய்து கொண்டிருக்கும் ஒருத்தியிடம், "பின்னாடி போய் கிளின் பண்ணுங்க. இலையெல்லாம் நிறைய கிடக்குது" என்பார். சொல்லிகொண்டே சாட்சியை உள்ளே அழைத்து போவார். ரொம்பவே யதார்த்தமான வசனம், கதை போக்கு. இயல்பு நிலைக்கு அப்படியே ஒட்டிய ஒரு ஓட்டம். இப்படி நிறைய காட்சிகள், "backdrop movements and characters"; நிரம்பி இருக்கும். 


ரகுமான் கதாபாத்திரத்தில் எத்தனையோ நடிகர்கள் பண்ணியிருக்கலாம். ஆனா, ரகுமான் மாதிரி வராது. விசாரணை நடக்கும் ஒரு வீட்டில். வாகனத்தில் என்ன இருக்கு என்று கான்ஸ்டபல் ஒருவரை பார்க்க சொல்வார். ஆனால், கான்ஸ்டபல் வண்டி பூட்டி இருக்கு என்பார். அதற்கு, ரகுமான், "அப்படியா?" என்று கூறியபடி வாகனத்தில் கதவை திறப்பார். "அதான் திறந்துகிடக்குதே" என்பதை முகபாவத்தில் காட்டுவார் பாருங்க.....செம்ம செம்ம செம்ம ஜீ!! 

படத்தில் எனக்கு பிடித்த என்னொரு விஷயம்- பிண்ணனி இசை. டமால் டுமீல் என்று இசையை இறைச்சலாய் அமையும் இந்த மாதிரி காவல் அதிகாரி கதைகள். பீரை மோராய் குடிக்கும் அதிகாரிகள், சிங்கம், புலி, சிறுத்தை, பல்லி, ஓனாய் போன்ற சத்தங்களும் நிறைந்தால் தான் ஒரு போலீஸ் கதை வெற்றி பெரும் என்ற காலம் போய் இப்படி ரொம்ப சாந்தமான நீரோட்டத்துடன் ஒரு போலீஸ் கதை!! இசை தனியாக இல்லாமல், திரைக்கதையை 'அலேக்கா' தூக்கி கொண்டு போய் இருக்கிறது. 


கிட்டதட்ட 2 மணி நேரத்திற்குள் ஒரு நாவல் படித்த, அதுவும் ஒரு நல்ல சுவாரஸ்சியமான நாவல் படித்த திருப்தி!! 

இயக்குனர் பல இடங்களில் கதை சொல்லி இருக்காராம். ஆனால், தயாரிப்பாளர் தயாராக இல்லையாம். ஆக, தனது அப்பாவுக்கு ஃபோன் போட்டு சொல்லியிருக்காராம். அவரும் நமே படத்தை எடுப்போம் என்று நம்பிக்கை கொடுத்து இருக்கிறார்! அப்படி எடுக்கப்பட்ட படம் தான் 'துருவங்கள் 16'.

எங்க வூட்டுல எல்லாம் படம் டிக்கேட் எடுக்கவே உதவி செய்ய மாட்டாங்க! கார்த்திக், உங்களுக்கு நல்ல support system அமைந்திருக்கு! விடாமல், இது போன்ற நல்ல படங்களை மட்டும் தாங்க, bro!! 


துருவங்கள் 16- கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்.