Dec 26, 2013

என்றென்றும் dhoom பிரியாணி இன் கல்யாண சமையல்ஒரு மாதம் விடுமுறை முடிந்து நாளை வேலைக்கு போக வேண்டும் என்று நினைத்தாலே துக்கம் தொண்டையை அடைக்கிறது.

பரவாயில்ல விடுங்க!! என் சோகம் என்னோடு போகட்டும்!

1) கல்யாண சமையல் சாதம்.

இரண்டு மணி நேரத்தில் சொல்ல வந்த கதையை ஓரளவுக்கு வித்தியாசமாய் சொல்லியிருக்கிறார்கள்.

கப் சூப்பர், காபி சுமார் ரகம் தான் இந்த படம். கடைசியில் பீச் கல்யாணம், அப்பரம் நடுவே சறுக்கிய திரைக்கதை சுமார். ஆனால் சில நச் வசனங்களும், நடிகர்களின் தேர்வும், கதையும் வித்தியாசம்.

2) பிரியாணி.

யப்பா கார்த்தி!!!!!!!! கீழே விழுமா நல்ல படியாய் சுதாரிச்சுகிட்டு மேலே வந்துட்ட! வெரி குட்!! ஜாலியாய் போக படத்தில் வெங்கட்குரிய பாணியில் டிவிஸ்ட் கலந்த படம். வெங்கட் படம் என்பதால் அந்த டிவிஸ்ட்டே யூகிக்க முடிந்தது ஓரளவுக்கு.

இருந்தாலும், திரைக்கதை சுவாரஸிசயமாக போனது.
இருந்தாலும், இந்த கடைசி 20 நிமிடங்களுக்கும் டிவிஸ்ட்டை 'narration'  வழியே ரசிகர்களுக்கு சொல்வதை அடுத்த படத்தில் மாத்திக்கலாம்! visualலாய் காட்டினால் நல்லா இருக்கும்!

3) dhoom 3என்னத்த சொல்ல? first day first show போய் பார்த்தேன்....
என்ன உண்மையில் நடந்தது என்றால்....

எடிட்டர்: டைரக்ட்டர் சார், படத்த எப்படி கட் பண்ணனும்?

இயக்குனர்: அமீர் பறக்குது. பைக் பறக்குது. பணம் பறக்குது. கத்ரீனா பறக்குது. அமிஷேக் பறக்குது. உதேய் சோப்ரா பறக்குது.

எடிட்டர்: சார் எல்லாத்தையும் சேர்த்தால் ஒரு மணி நேரம் தான் படம் போகும். நீங்க மூன்று மணி நேரம்னு சொன்னீங்க?

இயக்குனர்: ம்ம்ம்...எல்லாத்தையும் slow motionல போடு.

*dhoom machle dhoom machle*

4) என்றென்றும் புன்னகை

பார்த்த படங்களிலே எனக்கு பிடிச்ச படம். trailerல் காட்டிய சில காட்சிகளும் வசனங்களும் படத்தில் இல்லை. ரொம்ப நாளைக்கு அப்பரம் ரொம்ப அடிக்கி வாசித்து இருக்காரு சந்தானம். கதை புதுசு இல்ல. ஆனா காட்டிய விதம் ரசிக்கும்படி இருந்துச்சு. சில காமெடி வசனங்களும், இயல்பாய் வந்த வசனங்களும் அழகாய் இருந்துச்சு.

பசங்க அடிக்கடி 'கல்யாணம் பண்ணாதே' என்று சொல்லும்போது எல்லாம் பாவமாய் இருந்துச்சு:)))
இயக்குனர் மீது கோபம் எனக்கு,

அநியாயத்துக்கு திரிஷாவை அழகாய்
காட்டிவிட்டு
ஆண்ட்ரியாவுக்கு மொக்கை சீன் கொடுத்தமைக்கு!
Dec 24, 2013

2013 ஒரு அலசல்- துவைத்து காய போடலாம்!

2013 எப்படி போனுச்சு இவ்வுலகில்.....
அது சத்தியமா தெரியாது.

ஆனா என் 2013 எப்படி போனுச்சுன்னா....இப்படி தான்!ரொம்ப நொந்த நிலைமை தான்! வேலை, வேலை வேலை.... ஷ்ஷ்ஷ்ப்பா!!!
வேலையை விட்டு விடலாம் என்று பார்த்தால், 'வாழ்க்கைல சோறு ரொம்ப முக்கியம்' என்பதால் முடியவில்லை! இருக்கும் விலைவாசிக்கு, பரதேசியாக இருக்க முடியாது பாருங்க.

வலைப்பூ பக்கமும் அதிகம் வர முடியவில்லை. காரணம் வேலை என்று ஒரு புரமாக இருந்தாலும். இந்த facebook, twitter, whatsapp ஆகியவை ரொம்ப ஊடுறுவி விட்டது வாழ்க்கையில். இவை விட்டு விலகி மறுபடியும் வலைப்பூ பக்கத்தில் நிறைய எழுத வேண்டும் என்பதே 2014 ஆண்டின் ஆசை.

கிட்டதட்ட twitter  பக்கம் போகவில்லை கடந்த 2 வாரமாய். கைபேசியில் இருந்து twitter applicationயை தூக்கிவிட்டேன். facebookயை அதே போல் செய்தேன். ஆனா, மறுபடியும் பதிவு இரக்கம் செய்துவிட்டேன். ப்ச்.. சரி விட்டு புடிப்போம்.facebook பக்கம் மூலம் செய்திகள் தெரிந்தாலும், வர வர மத்தவங்க வாய் சும்மா இருப்பதில்லை. ஏதாச்சு அவங்க போட, அதுக்கு நம்ம பதில் சொல்ல....ஷ்ஷ்ஷ்ப்பாபா முடியல!

அப்பரம் whatsapp வந்த பிறகு, நல்ல தூங்க முடியவில்லை!!

ஆக 2014 ஆண்டில் நல்ல உறக்கம் வேண்டும் என்பதால், ஒரு முடிவு எடுத்துள்ளேன்.

வலைப்பூ பக்கத்தில் கடந்த சில பதிவுகள் எல்லாம் வெறும் சினிமா பத்தி தான். சுத்த ஃபோர் அடித்துவிட்டது. ஆக, அறிவுபூர்வமாக....

ஹிஹிஹிஹிஹிஹாஹாஹா...ஐயோ மச்சி, அறிவுபூர்வமாக என்றவுடன் எனக்கே சிரிப்பு தாங்கல! சரி சரி, எனக்கு அதலாம் வராது. எனக்கு வருவதை எழுத முற்படுகிறேன்.

ஆனா, இந்த facebook பக்கம் மட்டும் போக மாட்டேன்....

அப்பரம்....

கொஞ்சம் wait...கைபேசில ஏதோ facebook notification வந்து இருக்கு.

Dec 22, 2013

எனக்கு பிடித்த குறும்படம்-1

பிரியாணி எப்படி எல்லாருக்கும் சாப்பிட பிடிக்குமோ, அதே போல் இந்த 3 குறும்படங்கள் எனக்கு பிடித்திருந்தது.


1) அகவிழி

அழகான தமிழ் பெயர் கொண்ட ஒரு குறும்படம். என்னது ஆங்கில படம் போல் கொஞ்சம் புரியாம கதை போகுதே என்று நினைக்கலாம். இருந்தாலும் பார்ப்பவர்களின் மூளைக்கு வேலை கொடுக்கும் படம் என்பதால் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது.


2) சரியா தவறா

முந்தைய படத்தில் இருக்கும் அதிகபடியான technical விஷயங்கள் இல்லாமல், ரொம்ப சாதாரண முறையில் எடுத்த ஒரு ரசிக்கும் படியான குறும்படம். நகைச்சுவையும் படத்தில் நடித்தவர்களின் நடிப்பும் சபாஷ்!!! குட்டி பையன் கலக்கிட்டான் போங்க!!!


3) crosstalk

படம் என்றால் பார்க்கனும். ஆனா, இது கேட்கும் படம்!!! visuals இல்லாமல் ஒரு படம். வசனங்களும், voice modulationலயும் கலக்கி இருக்காங்க!!!!Nov 27, 2013

எனக்கு பிடித்த குறும்படம்-2

சமீபத்தில் இந்த 'fantasy genre' படங்களை பற்றி நிறைய பேச்சு! குறைந்த பொருட்செலவில் அருமையான குறும்படங்கள்.


1) காதல் கதை + அருமையான இசை கொண்ட 'inbox'2) angel vs devil - நச் என்று தெரிக்கும் வசனங்களும் இயல்பாய் நடிக்கும் நடிகர்களின் படைப்பு 'அந்த நேரம் அந்தி நேரம்'3) மூஞ்சி முகர

நகைச்சுவை கலந்த கலக்கலான படம்


Nov 4, 2013

தீபாவளி bites

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்!
சனிக்கிழமை வந்ததால் ஒன்னும் புதுசா தெரியல! வார நாட்களில் ஒரு லீவு நாள் போனது தான் மிச்சம்.

டிவிட்டரில் படித்த ஒரு வரி: வயதாக வயதாக தீபாவளி சுவாரஸ்சியம் குறைந்து கொண்டே போகிறது. 

உண்மை தான் போலும்.

அம்மாச்சியின் அண்ணன் (தாத்தா) வீட்டிற்கு சென்றோம். அவர் சொன்னது இன்னும் காதில் ரீங்காரமிட்டு கொண்டிருக்கிறது. - "ஒவ்வொரு வருஷமும் எனக்கு bonus தான்." 
அவருக்கு வயது 84.

புதுசா திருமணம் ஆனால் தான் 'தல' தீபாவளி. மத்தபடி எங்களுக்கு எல்லாம் வருஷமுமே 'வயிறு' தீபாவளி தான்!

தோசை
இட்லி
குடல் கறி
பிரியாணி
மட்டன் கறி
கோழி குருமா
முறுக்கு
கேக்
கேசரி

யப்பா, இன்னொரு extra வயிறு வேணும்பா சாமி!!

தீபாவளி நிகழ்ச்சிகள் சிலவற்றை பார்க்க நேரிட்டது. ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சுட்ட கதை, தலைவா (சிங்கை தொலைக்காட்சியில்) என்று புதிதாய் வெளியிட்ட படங்களை பார்க்கும்போது கமல்ஹாசனின் கனவு நினைவாக்கிடுமோ என்று தோன்றுகிறது.

facebookல் சுட்டது:

அண்ணனை கொன்னவங்களைப் பழி வாங்குனா அது “பாண்டியநாடு “

நண்பனைக் கொன்னவங்களைப் பழி வாங்குனா அது ”ஆரம்பம்"
ஆடியன்சை பழிவாங்கினா அது “ஆல் இன் ஆல் அழகுராஜா "
என்ன மாமா, மறுபடியுமா?? :(((


சரி நம்ம கதைக்கு வருவோம்! 'love stop' குறும்படத்திற்கு (http://www.youtube.com/watch?v=3H8B4wCe_u4)

அப்பரம் அடுத்த படம் ரெடி.

first look!


Oct 8, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியே, இதற்குதானே ஆசைப்பட்டாய்!

1) இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமரா!

ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லியிருந்தேன் என நினைக்குறேன்-  விஜய் சேதுபதி என்ன பண்ணாலும் அழகா தெரியுது! இது கண்டிப்பா சாமி கொடுத்த வரம்! பட்டைய கிளப்பியிருக்காரு மவராசன்!
நாயகி கோலம் போடும் காட்சியில் அவர் 'அய்யூ அய்யூயோ அய்யூயோயோ!' என்று நாயகியை பார்த்து சொல்லும் காட்சியில் 100 மார்க் வாங்கிட்டாரு ஹீரோ!

ஜாலியாக போகும் கதையில் கொஞ்சம் கருத்து. மற்ற நடிகர்களும்
சுப்பரமணியபுரம் படத்தில் நடித்த நாயகியின் அக்கா...இந்த படத்தில் அவருக்கு கொடுத்த.....

இன்னாது? ரெண்டும் ஒரு பொண்ணு தானா! ஐயோ சாரி பா!

அனைவருமே அருமையாக நடித்து இருக்கிறார்கள். ரோபா ஷங்கர், பசுபதி, பாஸ்கர் போன்றோர் படத்தின் தூண்கள் எனலாம்!

படத்தில் இருக்கும் ரெண்டு பாடல்களுக்கு நான் அடிமை - prayer song மற்றும் என் வூட்டுல பாடல்கள்! தொடர்ந்து repeat modeல இருக்கு! அதில் ஆடிய விஜய் சேதுபதியாக இருக்கட்டும், ஆட வைத்த ராஜசுந்தரமாக இருக்கட்டும் ரசிக்கும் வண்ணம் தங்களது வேலையை செய்து இருக்காங்க. அதிலும் 'என் வூட்டுல' பாடலில் குறிப்பாக ஒரு காட்சியில் குறுக்கே போகும் நடன இயக்குனர்களைப் பார்த்து சேதுபதி "என்னவாம் இவனுக்களுக்கு" என்று சொல்வது எல்லாம் சேதுபதியின் cuteness அளவை அதிகரித்துள்ளது.


மொத்தத்தில் ஒரு ஜாலியான படம் பார்த்த சந்தோஷம்.

2) ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

எனக்கு படம் சுத்தமா பிடிக்கல!

ஒரு மண்ணும் இல்லாத கதை தான் உனக்கு பிடிக்குது. சினிமா என்பது சும்மா ஜாலி இல்ல. காமெடி மட்டும் படம் இல்ல. இந்த படம் எப்படி film makingல உருகி எடுத்து இருக்கிறார் தெரியுமா? இந்த திரைக்கதை என்ன மாதிரி pattern தெரியுமா? அந்த shotல அந்த ஓடிவரும்போது...
அப்படி எல்லாம் எண்ணெயில் வழுக்கி விழுந்த கடுகு போல் வெடிக்காதீங்க!

மிஷ்கின் படங்களில் போலீஸ் ரோல் ஒன்னு இருக்கும். நிறைய ஓட்டம். அப்பரம் ராத்திரி effect. நடிப்பு சொல்லி தருவதால், அனைத்து கதாபாத்திரங்களும் அவரை போலவே ஓடுவதும், கண்களை விரிப்பதும் என்று  எனக்கு என்னமோ மிஷ்கினை தான் எல்லாம் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார் என தோன்றுகிறது.
பாடல்களே இல்லை. ஒரு விதத்தில் நல்லது தான்!

இளையராஜாவின் பின்னணி இசை நல்லா இருந்துச்சு. but அப்பப்போ அஞ்சலி படம் பார்த்த மாதிரி ஒரு effect!!

சமீபத்தில் மிருகங்கள் தலைப்பில் வந்த படம் எதுவுமே எனக்கு பிடிக்கல..ம்ம்ம்...

ஓநாயும் ஆட்டுகுட்டியும்
சிங்கம்
குட்டி புலி
பட்டத்து யானை
தங்கமீன்கள்


என்னது தங்கமீன்கள் பிடிக்கலையா????
பஞ்சாயத்த கூட்றா!!!!
இயக்குனர் ராம்ம கூப்றா!!!

Sep 28, 2013

நயன்தாராவின் brother ஆர்யா!


ராஜா ராணி படம் பார்க்க தூண்டிய நிறைய விஷயங்களில் ஒன்று இயக்குனர். முதல் பட இயக்குனர் என்றாலும் அவர் பேட்டிகளில் காட்டிய நம்பிக்கை. அட, இந்த சின்ன வயசுல....
என்று மால்குடி சுபா போல் பாராட்ட வச்சது.
படம் பார்த்தேன் நேற்று.

கலர் படம்! இது கலர்ஃல்லான படம்!

பிடித்த விஷயங்கள்


1) படத்தில் வந்த வீடுகள். நயன் ஆர்யா வீடாகா இருந்தாலும் சரி, சத்தியராஜ் வீடாகா இருந்தாலும் சரி, ஆர்யாவின் பாஸ் வீடாகா இருந்தாலும் சரி, அவ்வளாவு அழகு!!

கலை இயக்குனரே, சபாஷ்!!

2) படத்தில் செம்ம அழகா தெரிந்தவர் சத்தியராஜ். அப்பாவாக நடித்து, கலக்கிவிட்டார்! அழகிலும் சரி நடிப்பிலும் சரி ஒரு படி மேலே சென்றுவிட்டார்.

நயன் காதல் தோல்வி அடைந்தவுடன், நயன் அழுவும் காட்சியில், சத்தியராஜ், "நீ அழதே, எனக்கும் அழகை வரது." என்று சொல்லும்போது டாப் கிளாஸ் நடிப்பு இருவருமே!


3) சில cute and sharp வசனங்கள்.

4) நயன் நயன் நயன்!!!! இந்த இரண்டு வருடத்தில் எங்கோ சென்று நடிப்பு பயிற்சி எடுத்து இருக்கிறாரோ என்ற சந்தேகம் வந்துவிட்டது. அப்படி ஒரு அழகான நடிப்பு.

5) நயன் தனது அப்பாவை 'டார்லிங் டார்லிங்' என்று அழைக்கும்போது....

6) ஜீவியின் பிண்ணனி இசை! அற்புதம்! பாடல்களில் கொஞ்சம் 'வடை போச்சே' தான்.

இவ்வளவு அழகான கூட்டத்தை வைத்துகொண்டு, கதையில் இன்னும் அழுத்தத்தை கொடுத்திருக்கலாமோ என தோன்றுகிறது. அப்பரம், ஆரம்பித்திலிருந்தே ஏன் நயன் ஆர்யா மோதி கொள்கிறார்கள்? அதற்கு என்ன காரணம்? புரியல. உட்கார்ந்து பேசி இருக்கலாமே!

அடிக்கடி வரும் மருத்துவமனை காட்சிகள்- பிடிக்கவில்லை!

அப்பரம் அடிக்கடி 'brother brother''னு சொல்வது..ம்ம்ம்....

மொத்தத்தில், நான்கு ஐந்து படம் பார்த்த ஃலிங் வருது! ஒரு முறை பார்க்கலாம்!

Aug 24, 2013

ராஜா ராணி கவிதைகள்!

 
கொடுக்கவா?
என்று இனி
கேட்காதே!
வெட்கத்தில்
வேண்டாம் என
சொல்லி
சொதுப்பிவிடுவேனோ
என்ற பயம்
எனக்கு!
 

 
தெரிந்து எடுத்தால்
திருட்டு!
தெரியாமல் எடுத்தால்
ம்ம்ம்...
காதலோ?
 


 
தேவையில்லாத சண்டை போட்டு
ஒரு வாரம் மௌனமாக இருந்து
திடீரென்று ஒரு நாள்
உன் கன்னத்தில் முத்தம் வைத்து
உன் தோளில் சாய்ந்து
'சாரி' கேட்க,
எதிர்பார்க்காத நீ,
வெட்கப்படனும்!
 


Aug 6, 2013

ஆயிரத்தில் ஒருவன் பார்க்க வா! இரண்டாம் உலகம் பார்க்க வா!

இரண்டாம் உலகம் trailerரை அனைவரும் பார்த்து இருப்பீங்க. பாடல்களை இன்னும் நான் கேட்கவில்லை.

செல்வராகவன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவருக்குள் இருந்த ஆதங்கத்தையும் கோபத்தையும் ரொம்ப தைரியமாக சொல்லியிருந்தார். ரொம்ப தைரியம் வேண்டும் அவ்வாறு பேச. அந்த தைரியசாலி 'இரண்டாம் உலகம்' போன்ற படத்தை எடுத்ததில் ஆச்சிரியமில்லை.


ஆனால் எனக்கு சில கேள்விகள். அவரின் கோபம் நியாயமானதாக இருந்தாலும் சிலவற்றை ஒரு ரசிகராய் ஏற்ற கொள்ள முடியவில்லை.

1) ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கே தமிழ் subtitle போடுங்க என்று சொல்பவர்கள் நம் மக்கள் என்றார் அந்த பேட்டியில்.

புரியலையே பாஸ்! தூய தமிழில் வந்த பழைய காலத்து படங்களையெல்லாம் நாங்கள் பார்த்து ரசிக்கவில்லையா? கை தட்டவில்லையா? புரியும் தமிழில் படம் எடுத்தால் நாங்கள் ரசிப்போமே, பாஸ்!

2) ஆயிரத்தில் ஒருவன் படத்தின் தோல்வி.

அரிவாளை கொண்டு, tata sumo tyreயை கிழிக்கும் காவிய காட்சிகளை இன்னும் எடுத்துகொண்டிருக்கும் பலபேரில், நீங்கள் வித்தியாசமானவர் தான்!

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மேல் வைத்திருந்த எதிர்பார்ப்பு என் ஒரு வாரம் உணவுக்கு தடையாய் போனது. படத்துக்கு குடும்பத்தோடு சென்று என் அம்மாவிடம் நல்லா வாங்கி கட்டி கொண்டது தான் மிச்சம். இந்த படத்துக்கு கூட்டிகிட்டு போன உனக்கு ஒரு வாரம் சோறு கிடையாது என்று என் அம்மா திட்டியது இன்னும் நினைவில் இருக்கிறது.

எது பண்பாடு? எது கலாச்சாரம்? எதை காட்ட சில (அருவருப்பான) காட்சிகளை வைத்தீர்கள்?

இரண்டாம் உலகம் பாடல் வெளியீட்டு விழாவில் வைரமுத்து சொன்னது தான் நினைவுக்கு வருகிறது

"செல்வராகவன் படங்களில் வெற்றிப்படம்,
தோல்விப்படம் என்று எதுவும் இல்லை.
புரிந்துகொள்ளப்பட்ட படம்,
புரிந்துகொள்ளப்படாத படம் என்றுதான் உண்டு"


ஒரு சாதாரண ரசிகையாய், எனக்கு புரியும் விதம் படம் பார்க்க ஆசைப்படுகிறேன். சில சமயங்களில், செல்வா ரொம்ப வேகமாய் செல்கிறாரோ என்றும் தோன்றும்.

செல்வா
நீ கண்ணாடி
போட்ட கமல்
அல்லவா?


உலக சினிமா எடுக்கனும். அப்போ தான் நம்ம தரம் உயரம். உங்க ஆசை, விருப்பம் எல்லாமே புரியது. தரம் உயர, புரியாத சினிமா எடுக்க தேவையில்லை, உலகம் நம்மை பார்த்து வியக்கும் சினிமா எடுத்தாலே போதும்.

'children of heaven' என்ற iranian/persian படம் பல விருதுகளை பெற்றது.  அண்ணன் தங்கை இருவர்களுக்கு இடையே நடக்கும் ஒரு சின்ன போராட்டம். கதை அவ்வளவு தான்! எந்த கிராஃபிக்ஸும் பயன்படுத்தவில்லை. புரிந்ததே, பாஸ்!

3) ஓ.....ஹாலிவுட் படங்களை மட்டும் ரசிச்சு பாக்குறீங்க?

அவதார் படம் எத்தன பேருக்கு புரிந்ததுனு கேட்டு பாருங்க!! நம்மில் பல பேர் இங்கிலேஷ் படத்துக்கு போயிட்டு வந்தேன் என்று கூறி பெருமிதம் அடைபவர்கள் தான் அதிகம்!

கிராஃபிக்ஸ் பயன்படுத்த வேண்டாம்னு சொல்லல. ரசிக்கும் வண்ணம் பயன்படுத்துங்க!


'இரண்டாம் உலகம்' படத்தின் trailerரை பார்த்துவிட்டு எனக்கு கொஞ்சம் பயமா தான் இருக்கு. சில காட்சிகள் ஆயிரத்தில் ஒருவன் படத்தை நினைவூட்டியது. எனினும், வெற்றி பெற வாழ்த்துகள் செல்வா!!  

தேர்வுக்கு முதல் நாள் படித்து 90 மார்க் வாங்கும் மாணவர்கள் நிறைந்த கூட்டத்தில் தினந்தோறும் கஷ்டப்பட்டு படித்து, தேர்வில் ஒரு மார்க்-கில் தோல்வி பெறும் மாணவனின் அவஸ்தையைவிட அதை பார்க்கும் ஆசிரியரின் வலி அதிகம்!

 உங்க படங்கள் புரிந்து கொள்ளாமல் போன போது, அந்த 'ஆசிரியரின் வலி' என் போன்ற பல ரசிகர்களுக்கு இருந்தது.காதல் கொண்டேன், 7g rainbow colony படங்கள் வந்தபோ
முதல் ஆளா, முதல் டிக்கெட் வாங்கினவன் எல்லாம் நம்ம
பயலுக தான்!
இப்போ  அதையெல்லாம் விட்டுபுட்டு
ஆயிரத்தில் ஒருவன் பார்க்க வா
இரண்டாம் உலகம் பார்க்க வா-னா
எப்படி வருவான்?

அவன் மெதுவாத்தான் வருவான்!
மெதுவாத்தான் வருவான்!

Aug 2, 2013

சிங்கமும் மரியானும்

ஓநாயும் நரியும், முயலும் ஆமையும் போன்ற நீதி கதைகள் எவ்வளவு சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறது. ரசிக்க முடிகிறது. இப்போது வரும் படங்கள் ஏன் அப்படி புரிந்து கொள்ள முடியவில்லை. இல்ல நமக்கு தான் அறிவும் ரசிக்கும் தன்மை போதவில்லையே.

சிங்கம் 2

1) சிங்கம் 1 கடைசி காட்சியில், விஜய்குமார் "இது யாருக்கும் தெரியவேண்டாம். வேணும்னா உங்க மனைவிகிட்ட மட்டும் சொல்லுங்க" என்பார்.

அப்போ ஏன் சிங்கம் 2ல கல்யாணம் ஆகாத மாதிரி காட்டனும்? சிங்கம் 2 படத்திலும் கல்யாணம் ஆகவில்லை. அப்போ சிங்கம் 3 வரபோகுதா?

:(((((((((((((((((((((((((((((((((

2) யம்மா அஞ்சலி, குயிலிகிட்ட கொஞ்சம் பயிற்சி எடுத்துகொண்டு அந்த கப்பலில் ஆடியிருக்கலாம். எனக்கு என்னமோ குயிலியை தவிர வேறு யாரும் கப்பலில் ஆடினாலும் பிடிக்கவில்லை:)))))

3) பள்ளி மாணவியாக ஹன்சிகா....ம்ம்ம்... (சரி நான் ஒன்னும் சொல்லல. அப்பரம் சிம்பு ரசிகர்கள் கோபத்திற்கும் ஆளாகிடுவேன்!)

 
               

4) இப்ப வர படங்களில் வில்லன்கள் ஹீரோவைவிட அழகா தெரியனும். இது தெரியாதா ஹரி சார்?? (முருகதாஸ் சாரிடம் கேட்டு பாருங்க)

****************************************************************************

மரியான்

1) தனுஷ் கடத்தப்பட்ட நிலையில் தீவிரவாதிகளால் துன்புறத்தப்படுவார். அப்போது, இந்தியா அதிகாரிகளிடம் ஃபோன் செய்து பணம் கேட்குமாறு தீவிரவாதிகள் சொல்வார்கள். அப்போது தனுஷ், பார்வதிக்கு ஃபோன் செய்து பேசுவார். அந்த காட்சி, சூப்பர்!!!

2) சிறுத்தைகள் பக்கத்தில் சுற்றி கொண்டிருக்கும் தனுஷின் நடிப்பி டாப்! (நான் சிறுத்தை, அலேக்ஸ் பாண்டியன் படங்கள் பார்க்கும்போது அப்படி தான் இருந்தது)

3) மேலே சொல்லப்பட்ட இரண்டு காட்சிகள் தவிர, வேறு ஒன்றும் இப்படத்தில் என்னைக் கவரவில்லை.
4) என்னதான் அழகான ஹீரோயின், ஏ ஆர் ராஹ்மான், தேசிய விருது பெற்ற தனுஷ், வெள்ளக்கார ஒளிப்பதிவாளர் இருந்தாலும், திரைக்கதையின் வேகம் முக்கியம்.

5) அப்பரம்  ஏ ஆர் சார்,  i think you got தண்ணீரில் கண்டம். இன்னும் கொஞ்சம் நாளைக்கு கடல் சம்மந்தப்பட்ட படங்களை தவிர்க்குமாறு சிவகாமி கம்பியூட்டர் சொல்லது!
******************************************************************************

இரண்டு படங்களிலும் எனக்கு பிடிக்காத ஒரு விஷயம்! ஹீரோ ஹீரோயினை அறையும் காட்சி.

மது அருந்தினால், புகை பிடித்தால், கீழே "இது ஆபத்தானது" என்று போடுவதுபோல் அறையும் காட்சிகள் வந்தால்,

"இது அபத்தமானது" என்று போட வேண்டும்.

அடித்தால் தான் கெத்து என்று பலர் நினைக்கும்போது, படங்களும் அதற்கு எண்ணெய் ஊற்றவேண்டாம்.

Jul 22, 2013

ஜஸ்ட் சும்மா(22/7/13)

சனிக்கிழமை காலையில எழுந்திருச்சு டிவிட்டர் பக்கமா போனா....

'அடி ஆத்தாதாதாதா!' னு காந்திமதி மாதிரி கதறி கத்தனும்னு தோணிச்சு!


******************************************************************************

சிங்கம் 2 படம் இன்னும் பார்க்கல! ஆனா, பார்த்து ஆகனும். அப்ப தானே போஸ்ட் ஏதாச்சு எழுதலாம்!

மரியான் படமும் இன்னும் பார்க்கல. எங்கோ படித்தது. சிங்கம் 2 மூணாவது ஷோ ஓடுது, இன்னும் முதல் ஷோ மரியான் முடியல!

:(((((((((((((((((((

*****************************************************************************

சமீபத்தில் பார்த்து அசந்து வியந்து பெருமைப்பட்ட ஒரு நடன குழு

*****************************************************************************

சமீபத்தில் பார்த்து ரசித்து கொண்டிருக்கும் ஜோடி
விஜ்ய் டிவி 'ஆபிஸ்' நாடகத்திலும் வரும் விஷ்ணு- லட்சுமி ஜோடி!
செம்ம pair!! ஒவ்வொரு வசனமும் இயல்பாய் சிரிப்பாய் இருக்கிறது!

(4.52- 8.30)*****************************************************************************
மொத்தத்தில் வேலைகீல பாக்குறீயா இல்லையா அப்படினு கேட்பவர்களுக்கு,

நான் 'தீயா வேலை பார்க்கல"

தீயில் வேலை பார்க்குறேன்!!!

*****************************************************************************

Jun 24, 2013

ஜஸ்ட் சும்மா(24/6/13)வில் Raajhnaa

படம் பார்த்தாச்சு! ராஞ்ஜனா படத்தில் வந்த Aaja aaja dil ke gaaon பாடலை கேட்ட முதல், தினமும் அப்பாடலை ஒரு முறையாவது கேட்பதுண்டு. அந்த பாடலுக்கு அடிமையாகிவிட்டேன். பாடல்கள் நல்லா இருந்தாலும், குறைந்தபட்ச எதிர்பார்ப்புடன் தான் படம் பார்க்க போனேன்.

இப்ப வர எல்லாம் படத்துக்கும் எதிர்பார்ப்பு இல்லாமல் தான் போகிறேன்.

எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தால், வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்னு ஒரு மகான் சொல்லியிருக்காரு!

ஆக, படம் எப்படி இருந்துச்சு?

நம்ம வீட்டு புள்ள முதன் முதலாக வெளியூர் போக போது என்றால் குடும்பமே ஏர்போட் சென்று வழி அனுப்பி வச்சு பெருமைபடுமே, அந்த மாதிரி தான் உணர்ந்தேன் தனுஷ இப்படத்தில் பார்க்கும்போது.  தனுஷ் நடித்த படங்களின் ரசிகை இல்லை. இருந்தாலும், ஏதோ ஒருவித பெருமை!

இப்படத்தில் 'ஏன்' நடித்தார் என்று தெரிந்துகொள்ள நீங்களே படத்தைப் பாருங்க.... (ம்ம்ம்.... டிவிடி வரட்டும்) அவருக்கு பிடித்த 3 பகுதிகள்- பள்ளி பருவம், வாலிப பருவம், அதுக்கு அப்பரம் பொறுப்பான பையன்.

சின்ன வயதில் காதல்,  துரத்தி துரத்தி காதல், அப்பரம் தோல்வி, ஹீரோயின் பிடிக்கவில்லை என்று சொல்ல, அப்பரம் கதை எங்கோ போய்....அரசியலை தொட்டு நிக்குது!

இசை- பரவாயில்ல

நடிப்பு- தனுஷ். பல தமிழ் படங்களில் பார்த்த நடிப்பு தான். ஹிந்திக்கு புதிதாய் தெரியும். ஹிந்தி ரொம்ப நல்லா பேசியிருக்கார்!

சோனம் கபூர் பரவாயில்ல. பள்ளி பருவ காலத்தில் அவர் தோன்றும்போது தனுஷுக்கு பெரியம்மா மாதிரி இருந்தார். மேக்-கப் இல்லாமல் நடித்து இருக்கிறார். வாரிசுகளின் பெண்பிள்ளைகள் நடிக்கும்போது இது தான் பிரச்சனை. எனக்கு என்னமோ அவங்க அப்பா மாறுவேஷம் போட்டு நடிப்பதுபோல் தெரியும். (போடா போடி பார்க்கும்போது, தனிப்பட்ட முறையில் சிரித்தேன். )

நடிகைகளைப் பெற்ற நடிகர்களுக்கே தெரியும்
அது ஏன் காமெடி என்று!


தனுஷின் நண்பன் நடிப்பு அபாரம்! அபே டியோல் ஒகே நடிப்பு.

பனாரஸ் அழகிய காட்சிகள்.

பிடிக்காத விஷயங்கள்

1) 89774 முறை அறை கொடுக்கும் காட்சிகள்
2) தனுஷுக்கு தோழியாய் வருபவரை தேவையில்லாமல் அடித்து விளையாடும் காட்சிகள்.
3) கையை அறுத்து கொள்ளும் காட்சி
4) திடீர் திடீர்னு சோனம் கபூர் கதையைவிட்டு காணாமல் போய்விடுகிறார். அது ஏன்?
5) அரசியலை புகுத்தியது.


இந்த படத்தில் shahid kapoor நடிக்க வேண்டியதாக இருந்ததாம். அப்படினு ஒரு செய்தி படிச்சேன். அப்படி இருந்திருந்தால், கொஞ்சம் காசு மிச்சமாயிருக்கும். தனுஷ் என்னதான் பண்ணியிருக்கார் என்பதை பார்க்க தான் படத்தையே பார்த்தேன். நிறைய பேர் அதுக்கு தான் போய் இருப்பாங்கனு நினைக்குறேன்.

படத்தில் தெரிந்த தனுஷ்- சோனம் chemistryவிட அவங்க promotionகளில் தெறிக்கும் chemistry தான் பார்க்க நல்லா இருக்கு. ம்ம்ம்...பேசமா promotionகள மட்டும் பார்த்து இருக்கலாமோ!


*****************************************************

தற்போது முணுமுணுத்து கொண்டிருக்கும் பாடல். புது ஹிந்தி படம் 'சென்னை எக்ஸ்ப்ரஸ்' படத்தில் வரும் 1,2,3,4 get on the dance floor!


*****************************************************

லீவு முடிச்சு வேலைக்கு போக வேண்டும் என்று நினைத்தாலே துக்கம் தொண்டையை அடைக்குது!

:(((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((

******************************************************

இன்று ரசித்து பார்த்த ஒரு simple short film. ஒரு சிறுகதை படித்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு உணர்வை தந்தது இப்படம்!

முக்கியா கடைசி காட்சி- ரசிகர்கள் ரசனை மிக்கவர்கள். அவர்களே அவர்களுக்கு பிடித்த முடிவை அமைத்து கொள்ளட்டும் என்று சொல்லும் ஒரு படம்!


Jun 19, 2013

காதல் கவ்வும் (பகுதி 2)- சிறுகதை

பகுதி 1

காலை மணி 10 ஆனது. வாசல் கேட்-டை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் அஷ்வின். மாடியில் நின்று கொண்டிருந்தாள் அனிதா. அவன் வருவதை பார்த்தாள். ஆனால், ஒன்றும் அலட்டி கொள்ளாமல் அப்படியே நின்றாள்.

அஷ்வின் நேராக மாடிக்கு சென்றான். சாக்லெட் மில்க் ஷேக் குடித்தவாறு கைபேசியில் பேஸ்புக் பார்த்து கொண்டிருந்தாள். அனிதா அருகே வந்து நின்றாள் அஷ்வின். ஒன்றும் கேட்காமல் இருந்தாள் அனிதா. சிறிது நேரம் கழித்து, அஷ்வின்,

"ஐ எம் சாரி, அனிதா." என்றான். நடந்து வேறு பக்கமாய் சென்றாள் அனிதா. அவளை பின் தொடர்ந்தவன் மறுபடியும் அவள் பக்கத்தில நின்றான் அஷ்வின்.

"ஐ எம் ரியலி சாரி, மா. இனிமே இப்படி செய்ய மாட்டேன்." என்றான்.

"என்ன திடீரெனு ஞானம்?" என்றாள் அவள். பார்வை கைபேசியில் இருந்தது.

அவள் இடுப்பை அணைக்க, அவனது வலது கை சென்றது. அதை கவனித்தாள் அனிதா. தலை குனிந்து கைபேசியை பார்த்து கொண்டிருந்தவள், தலை நிமிர்ந்து அஷ்வினை பார்த்து முறைத்தாள்.

"ஒகே ஒகே. சாரி சாரி.... ஞானம் எல்லாம் ஒன்னுமில்ல" என்று சமாளித்தான்.


*************************************************************
இரவு மணி 11 ஆனது.

அஷ்வின் தனது நண்பன் ரமேஷிடம் நடந்ததை தொலைபேசியில் சொன்னான்.ரமேஷின் மனைவி,திவ்யா, வேலை விஷயமாக வெளியூர் சென்று இருப்பதால், தனது வீட்டிற்கு வர சொன்னான் ரமேஷ்.

அஷ்வின், "மச்சான்...நான் செம்ம டென்ஷன்ல இருக்கேன் டா..." என்றான் ரமேஷின் வீட்டு சோபாவில் உட்கார்ந்தவாறு. உட்கார்ந்தவன், சற்று சோபாவில் கைவைத்து பார்த்தான்.

"டேய்....ஏன் டா சோபா ஈரமா இருக்கு?" என்றான் அஷ்வின்.

தரையில் உட்கார்ந்திருந்த ரமேஷ் சோபா மேசையில் chips பாக்கேட்களை திறந்தபடி, " அதுவா? towelல அங்கே போட்டேன் டா...அதான்... நீ தள்ளி உட்காரு மச்சான்!"

தனது கால்சட்டை ஈரமாக போனதை சுட்டி காட்டி, "டேய்! ஈரமா போச்சு டா! நான் என்ன பண்ண?" என்றான் அஷ்வின்.

ரமேஷ், "ஐயீயே...ஏன் டா என் பொண்டாட்டி மாதிரியே எதுக்கு எடுத்தாலும் கத்துற?" என்று சிரித்தவன், "டேய் மச்சான், என் ரூம்ல போய் வேற shorts மாத்திக்கோ.

அறைக்கு சென்ற அஷ்வின் மறுபடியும் கத்தினான். வாயில் chipsகளை போட்டவாறு, ரமேஷ் அறைக்கு சென்றான். "என்ன மச்சான் உன் பிரச்சன?"

மெத்தையில் மலை போல் குவிந்துகிடந்த துணிகளை சுட்டிகாட்டிய அஷ்வின், "டேய் என்ன டா இது?"

ரமேஷ், "ஓ இதுக்கு தான் சத்தம் போட்டீயா? cupboard சுத்தம் செய்ய சொன்னா திவ்யா. போன வாரம் எடுத்து வெளியே போட்டேன். இன்னும் செய்யலடா."
ரமேஷ் அந்த 'மலை'யிலிருந்து ஒரு புது shorts எடுத்து அஷ்வின் கையில் திணித்தான்.

அஷ்வின், "இதலாம் எப்ப டா உள்ள எடுத்து வைக்க போற?"

ரமேஷ், "86 வருஷம் கொடுத்தாலும். பொண்டாட்டி வரத்துக்கு ஒரு நாள் முன்னாடி தான் சுத்தம் செய்யுவோம்!!! உனக்கு தெரியாதா மச்சான்?" என்றபடி ஒரு chips பாக்-கேட்-டை முடித்தான்.

ஹாலுக்கு மறுபடியும் வந்தனர். "உனக்கு சோடா மிக்ஸ் பண்ணனுமா வேண்டாமா?" கேட்டான் ரமேஷ். ஏதோ யோசனையில் இருந்தான் அஷ்வின்.
அஷ்வினின் தோளை தட்டினான் ரமேஷ்.

ரமேஷ், "டேய், சோடா வேணுமா?"

இருவரும் பேசி கொண்டே தங்களது கடமைகளை தொடங்கினர். ரமேஷ், "உன் சோகம் எனக்கு புரியது மச்சான். திவ்யாவும் அப்படி தான். இந்த ரெண்டு வாரமா நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா!! ச்சே... எனக்கு அழுகையா வருது மச்சான்!"

இரண்டாவது chips பாக்-கேட் திறக்கப்பட்டது.

அஷ்வின், "திவ்யாவுமா? she was our very good collegemate, மச்சான்."

ரமேஷ், "எல்லாமே friendஆ இருக்கும்வர தான். கல்யாணம் நடந்தா...அவ்வளவு தான். அத பண்ணு. இத பண்ணு. அத செய்யாத. இத செய்யாத. ஏன் bill கட்டல்ல? காய்கறி வாங்கிட்டு வா. electrician கூப்பிட்டு. சித்தி பொண்ணுக்கு காது குத்து function.........ஐயோ ராமா!!" என்றவன் இரண்டாவது பாட்டில்லை திறந்தான்.

அஷ்வின், "ஏன் டா அப்படி?"

ரமேஷ், "திவ்யாவா இருந்தாலும் சரி, திரிஷாவா இருந்தாலும் சரி. கல்யாணத்துக்கு அப்பரம் பொறுப்பு வரும்னு எதிர்ப்பார்ப்பாங்க!! தக்காளி, அது தான் தமிழ்லே நமக்கு பிடிக்காத வார்த்தையாச்சே!!!."

மூன்றாவது chips பாக்-கேட் திறக்கப்பட்டது.

பேசி கொண்டு இருக்கையில், அஷ்வின், "டேய் ரொம்ப சூடா இருக்குது ஹால். ஹால் ஏ.சி switch on பண்ணுடா. "

ரமேஷ், "repair டா...."

அஷ்வின், "அப்பரம் ஏன் டா electricianஎ கூப்பிடல?"

ரமேஷ், "டேய்!! பொண்டாட்டி வைரஸ் உனக்கு வந்துருச்சுனு நினைக்குறேன்! ரொம்ப கேள்வி கேட்காத!!" என்றவன் மூன்றாவது பாட்டில்லை திறந்தான்.

போதை தலைக்கு ஏறியது ரமேஷ்க்கு.

அஷ்வின், "are you ok?"

ரமேஷ், "ஐ மிஸ் திவ்யா!!ச்சே... எனக்கு அழுகையா வருது மச்சான்!"  என கத்த ஆரம்பித்தான். அவனை சமாளிக்க முயன்றான் அஷ்வின்.

அஷ்வின், "ரெண்டு வாரம் சந்தோஷம். பொண்டாட்டி வைரஸ் அப்படி இப்படினு சொன்னே!"

ரமேஷ், "ohh izz it? நானா? நானா?" என்று சந்தரமுகி ஜோதிகா போல் நடித்தான். ரமேஷுக்கு ரொம்ப முத்தி போய்விட்டதால், அஷ்வின் அவனை அறைக்கு அழைத்து செல்ல முற்பட்டான்.

ரமேஷ், "உனக்கு ஒரு உண்மை தெரியுமா, அஷ்வின்?"

அஷ்வின், "என்ன?"

ரமேஷ், "இந்த ரெண்டு வாரம் ரொம்ப கஷ்டமா இருக்கு. i really miss her da. i really love her."

அஷ்வின், "சரி ஒகே ரைட்டு. நீ கீழே விழுமா நடந்து வா" என்றபடி ரமேஷின் கையை பிடித்து கொண்டு அறைக்கு சென்றான்.

மேலும் 'உளறினான்' ரமேஷ், " கோபம் ரொம்ப வரும் அவளுக்கு. ஆனா ராத்திரி அப்படியே நாய்க்குட்டி மாதிரி வந்து நெஞ்சுல சாஞ்சி பா!! சாரி கேட்பா. அவ என்னோட முதல் பாப்பா.... சரியா பா?"

அஷ்வின் ஒரு வழியாய் அவனை அறை படுக்கையில் 'போட்டான்'.

ஹாலுக்கு வந்து சோபாவில் இவனும் விழுந்தான். யோசித்தான். ரொம்ப யோசித்தான்.

************************************************************************

"சொந்தமாவே யோசிச்சு. நான் செஞ்ஜது தப்பு-னு தோணிச்சு..." என்று பதில் சொன்னான் அஷ்வின்.

"நீ சொந்தமா யோசிச்சே?? சரி நம்பிட்டோம்...." நக்கல் அடித்தாள் அனிதா, அவனைப் பார்த்து.

தொடர்ந்தாள் அனிதா, "சொந்த புத்தி இருக்கறவன் தான் செத்து போக போறேனு சொல்வானா....என்னையும் செத்து போ-னு சொன்னே?" முகத்தை சுவர் பக்கம் திரும்பினாள் அனிதா.

"சேர்ந்து சாகலாம்னு ஒரு ஐடியா...அதான் திரும்பி வந்தேன்." புன்னகையித்தான் அஷ்வின்.

புன்னகை கலந்த செல்ல கோபத்துடன் அவனை முறைத்தாள் அனிதா.

அஷ்வின், "புன்னகை மன்னன் படம் பார்த்தீயா? அந்த மாதிரி. i am kamal. you are rekha."

அனிதா, "அப்ப கூட....நான் செத்து போய்டுவேன். நீ பொழைச்சுகிட்டு ஒரு ரேவதிகூட டான்ஸ் ஆடலாம்னு ஐடியா!"

காமெடியாய் பேசினோம் என நினைத்து புன்னகையித்த அஷ்வின், அவள் சொன்னதை கேட்டு சிலையாய் நின்றான். அவனது முகத்தில் தெரிந்த ஆச்சிரிய ரேகைகளை கண்டு வாய்விட்டு சிரித்தாள் அனிதா.

அனிதா, "லூசு...காலங்காத்தால...சாவு...அது இது-னு... நீ போய் தூங்கு. உன் கண்ண பாத்தாவே தெரியுது. ராத்திரி முழுக்க தூங்கலனு."

அஷ்வின், "நான் தூங்கறது இருக்கட்டும். நீ ரொம்ப சோகத்துல இருந்திருக்க போல..."

அனிதா, "உனக்கு எப்படி தெரியும்?"

அஷ்வின், "சோகத்துல இருக்கும்போது தான் சாக்லெட் மில் ஷேக் எல்லாம் குடிப்பாங்களா?"

விளையாட்டாய் சோகமாய் முகத்தை வைத்தவாறு, "ஆமா பா, ரொம்ப சோகம். அதான் சாக்லெட் மில் ஷேக்!"

அஷ்வின், "எனக்கும் வேணும்."

அனிதா, "அடடே முடிஞ்சு போச்சு. சரி கீழே வா செஞ்சு தரேன்." என்றவள் கீழே கிளம்பு முற்பட்டாள். அவள் கையை பிடித்து இழுத்து, சுவரோடு சாய்த்தான் அஷ்வின்.

அஷ்வின், "உன் உதட்டுக்கு மேல கொஞ்சம் இருக்கு. அது போதும் எனக்கு...."

காதல் கவ்வும்!!

*முற்றும்*

Jun 18, 2013

451வது பதிவு மற்றும் தில்லு முல்லு கொடுத்த அதிர்ச்சி!

முதலில் எல்லாருக்கும் பெரிய நன்றி! கடந்த 8 வருடங்களாய் இந்த வலைப்பூவில் எழுதி வருகிறேன். இது எனது 451வது பதிவு! ஆதரவு தந்த அனைவருக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி! இப்போது தான் ஆரம்ப கால பதிவுகளை சற்று புரட்டி பார்த்தேன்!!

ப்ப்ப்ப்பா!!! என சொல்ல வைத்தது. ஆரம்பகால பதிவு சிலவற்றை என்னாலேயே படிக்க முடியல இப்போ!  நீங்களெல்லாம் படித்து, ஊக்குவித்து நல்லபடியாய் கருத்து சொல்லி, இந்த அளவுக்கு வளர்த்துவிட்டு இருக்கீங்க! உங்க தைரியத்திற்கும் பொறுமைக்கும் மிக பெரிய நன்றி!

இன்னும் நிறைய எழுதனும்னு ஆசை. அதுக்கு எதிரியாய் வேலை என்ற விஷயம் இருந்தாலும், முடிந்தவரை எழுதுகிறேன்!

இன்னொரு முறை எல்லாருக்கும் நன்றி.

*******************************************************************************

தில்லு முல்லு படத்தை ரொம்ப குறைந்த எதிர்பார்ப்புடன் தான் பார்க்க சென்றேன். அந்த கொஞ்சம் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் அதிர்ச்சி கொடுத்துவிட்டது.

இன்றைய சூழலில் தில்லு முல்லு படத்தை ரீமேக் செய்ய என்ன அவசியம்? பழைய தில்லு முல்லு கேசட் எல்லாம் அழிந்துவிட போகுதா என்ன?

புதுசா படத்தை எடுத்தா, அதை மட்டும் பார்த்து கருத்து சொல்லனும். compare எல்லாம் பண்ணகூடாது என்று மனதை ஒருநிலை படுத்தி படத்தை பார்த்தாலும், பழைய படத்துடன் ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியவில்லை.

காட்சிக்கு காட்சி ஒரு லிங் இல்லாமல் போகுது. முக்கியமான சில காட்சிகளை வைத்தே தீர வேண்டும் என்பதால் வலுகட்டாயமாய் திணித்த காட்சிகள் போல் தெரிந்தது. அப்பரம், அகில உலக நாயகன் சிவா....ம்ம்ம்.... ஒன்னும் சொல்றதுக்கு இல்ல!

இசை..ம்ம்ம்... ஒன்னும் சொல்றதுக்கு இல்ல.

பிரகாஷ்ராஜ்...வசூல்ராஜா படத்தில் இருப்பது போல் இருந்தார்...பரவாயில்ல...

சந்தானம் வந்தாலே கொஞ்ச 'பகீர்' என்று தோணுகிறது....அடுத்த என்ன மொக்கை அல்லது முகம் சுளிக்கும் வசனத்தை பேச போகிறாரோ என்று...இந்த படத்தில்...தேவையில்லாது கதாபாத்திரம்..


மொத்தத்தில் உப்பு திண்ணால் தண்ணீர் குடித்து ஆக வேண்டும் என்பதுபோல், இந்த தில்லு முல்லு படத்தை பார்த்தால், பழை தில்லு முல்லு படத்தை பார்த்தே தீர வேண்டும்.

ஆக, பழைய தில்லு முல்லு படம் மீண்டும் ஒருமுறை வெற்றி வாகை சூடியுள்ளது!

Jun 12, 2013

காதல் கவ்வும்(பகுதி 1)- சிறுகதை

 நகை கடையில் ஷாபிங் முடிந்து காரில் வந்தார்கள் அஷ்வினும் அனிதாவும்.  காரில் ஒலித்து கொண்டிருந்தது

செப்டெம்பர் மாதம் செப்டெம்பர் மாதம் வாழ்வின் துன்பத்தை தொலைத்து விட்டோம் 
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம் வாழ்வின் இன்பத்தை தொலைத்து விட்டோம்

என்ற அலைபாயுதே பாடல். சத்தத்தின் அளவை, அஷ்வின் அதிகரித்தான். முறைத்தாள் அனிதா. பாடல் தொடர்ந்தது.

காதல் என்பது இனிக்கும் விருந்து கல்யாணம் என்பது வேப்பங்கொழுந்து ஏ கண்ணே........

சேர்ந்தபடி பாடலை முணுமுணுத்தான் அஷ்வின். அவன் வேண்டுமென்றே பாடினான். அது அறிந்த அனிதா, " ரேடியோவ கொஞ்சம் off பண்ணுறீயா?"

அவள் சொன்னது காதில் விழுந்தும் கேட்காததுபோல் இருந்தான் அஷ்வின். பாடலை முணுமுணுத்த அஷ்வின், இப்போது சத்தமாக பாட ஆரம்பித்தான்.

துன்பம் தொலைந்தது எப்போ...காதல் பிறந்ததே அப்போ
இன்பம் தொலைந்தது எப்போ...கல்யாணம் முடிந்ததே அப்போ


என்று ஒலித்தபோது, அஷ்வினும் "அப்போ!!!!!!!!!!!!" என பாடினான்   கத்தினான்.

"இப்ப மட்டும் வாய தொற! கடையில ரேவதி ஆண்ட்டி familyய பாத்தோமே. யாருகிட்டயும் பேசாம எதுக்கு டா இருந்த? I felt so awkard and embarrassed." என்றாள் அனிதா.

traffic junctionல் சிவப்பு லைட் வர, கார் நின்றது. அஷ்வின், " அந்த குடும்பத்தையே பிடிக்காது. அதுக்கு அப்பரமும் ஏன் வாய தொறக்கல. பல்லு விளக்கலனு கேட்டா நான் என்ன பண்ண முடியும்?"

அனிதா, "இப்ப மட்டும் வாய் கிழிய பேசு. வந்தவங்க எல்லாரும் கேட்டாங்க. அஷ்வின் ஏன் இப்படி இருக்காரு-னு? பதில் சொல்ல முடியல."

அஷ்வின், "சொல்ல வேண்டியது தானே. என் புருஷன் மூட் அவுட்ல இருக்கானு."

அனிதா, "இப்ப உனக்கு என்ன மூட் அவுட்?"

கார் முன்னாடி இன்னொரு கார் வேகமாய் புகுந்து செல்ல, கோபத்துடன் ஹார்னை அழ்த்தி, "ச்சே!" என்றான். அனிதாவின் கேள்விக்கு பதில் அளித்தான்,

"இன்னிக்கு தங்கம் வாங்கீயே ஆகனுமா? நான் வேலை முடிஞ்சு எவ்வளவு tired-a இருக்கேன் தெரியுமா? உன்னைய நகை கடைல விட்டுட்டு ஒரு மணி நேரமா பார்க்கிங் கிடைக்காம அலைஞ்சேன்! எனக்கு எப்படி இருக்கும்?"

அனிதா, " இன்னிக்கு தங்கம் வாங்கினா, நல்லதாம்."
  
ளை பார்த்து முறைத்துவிட்டு பேசாமல் ருந்தான் அஷ்வின்.   வீட்டை வந்து அடைந்தும், காரை விட்டு வேமாய் வெளியேறினாள் னிதா. இருரும் மின் தூக்கியில் நுழைந்னர்.

6 ஆம் நம்ரை அழ்த்திடி,  
ஷ்வின் "பெண்கள் இல்லாமல் ஆண்களுக் காறுதல் கிடைக்காது. பெண்களே உலகில் இல்லையென்றால். ஆறுதலே தேவை இருக்காது" என்று மறுபடியும் அலைபாயுதே பட பாடலைப் பாடினான். 

கோபம் கொண்ட அனிதா, "stop singing that song!" என்றாள். 6ஆம் மாடியில் மின் தூக்கி கதவு திறந்தது. விறுவிறு என்று நடந்து வீட்டிற்குள் சென்றாள். வீட்டிற்குள் புகுந்த அஷ்வின் களைப்புடன் சோபாவில் விழுந்தான். தொலைக்காட்சியில், நேற்று முன் தினம் நடந்த கிரிக்கேட் மறு ஒளிப்பரப்பு ஆட்டத்தை பார்த்தான்.

ஆடையை மாற்றிவிட்டு அறை வெளியே வந்த அனிதா, அவன் கிரிக்கேட் ஆட்டத்தை பார்ப்பதை கண்டு, "இப்ப உனக்கு tiredஆ இருக்காத!"

அஷ்வின், "உன்கிட்ட, இன்னிக்கு தங்கம் வாங்கினா நல்லது-னு சொன்னவன் தான் என்கிட்டயும் சொன்னான்..."

புரியாமல் முழித்த அனிதா, " யாரு? என்ன சொன்னான்?"

அஷ்வின், "இன்னிக்கு கிரிக்கேட் பார்த்தால் நல்லதாம்."

அனிதா "stop irritating me ashwin!" என்றபடி சமையலறைக்குள் புகுந்தாள். கொஞ்ச நேரம் கழித்து அனிதா மீண்டும் சத்தம் போட்டாள்.

"அஷ்வின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்!!" என கத்தினாள். என்னமோ ஏதோ ஆகிவிட்டது என ஓடினான் சமையலறைக்கு.
பதற்றத்துடன் அஷ்வின், "என்ன மா ஆச்சு?"

கோபத்துடன் நின்று கொண்டிருந்தாள் அனிதா குளிர்பதன பெட்டி அருகில்.
"என்ன இது?" என்றாள் அனிதா, குளிர்பதன பெட்டிக்குள் இருக்கும் 2 பாத்திரங்களை பார்த்து.

"இதுக்கு தான் கத்தினீயா? நான் என்னமோ-னு பயந்துட்டேன் தெரியுமா? உனக்கு அறிவு இல்ல!!" என்று சீறினான் அஷ்வின்.

"உனக்கு இருக்கானு கேட்குறேன்." என்றபடி அந்த 2 பாத்திரங்களை எடுத்து அவன் கையில் வைத்து திறந்து காட்டினாள்.

ஒரு பாத்திரத்தில் அரை இட்லியும் இன்னொரு பாத்திரத்தில் கொஞ்சம் சட்னியும் இருந்தன. "காலைல சாப்பிட்டு முடிச்சீயே....இத ரெண்டும் முழுசா சாப்பிட்டு கழுவி வைப்பாங்களா? இல்ல fridgeல வைப்பாங்களா?" என்று அதட்டினாள் அனிதா.

என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தான் அஷ்வின். "காலைல நிறைய சாப்பிட முடியல." என்று சொல்லிகொண்டே ஹாலுக்கு நழுவ பார்த்தான். அவளுக்கு இன்னும் கோபம் வந்தது, "I am talking to you, ashwin."

எரிச்சல் அடைந்த அஷ்வின், "இது ஒரு சின்ன விஷயம். இதுக்கு ஏன் சண்டை போடுற?" மறுபடியும் சோபாவில் அமர்ந்தான் கத்தியவாறு.

சமையலறையிலிருந்து ஹாலுக்கு வந்த அனிதா, "இது சின்ன விஷயம் இல்ல அஷ்வின். where is your responsibility?"

தொலைக்காட்சியில் இருந்த பார்வையை, அவள் மேல் திருப்பிய அஷ்வின், "இட்லிய வச்சா என் responsibilityய judge பண்ணுவ?" தொலைக்காட்சி சத்த அளவை கூட்டினான்.

இதற்குள் மேல் அவனிடம் சொல்லி புரிய வைக்க முடியாது என்று நினைத்தவள் வருத்தத்துடன் தலையை ஆட்டிவிட்டு அவளது வேலையை பார்க்க சென்றாள். அஷ்வினும் கண்டுகொள்ளாமல் தப்பித்தோம் பிழைத்தோம் என்று கிரிக்கேட் பார்க்க தொடங்கினான்.

சிறிது நேரம் கழித்து, மீண்டும் ஒரு சத்தம்! அனிதா studyroomல் நின்று கொண்டு கத்தினாள்.

"oh my god, what's wrong with you anita?" என்றபடி அறைக்குள் சென்றான் அஷ்வின். கைகளை கட்டி நின்று கொண்டிருந்தாள் அனிதா.

"இப்ப என்ன ஆச்சு உனக்கு?" என்றான் அஷ்வின்.

அனிதா, "ஏன் அஷ்வின், ஈர towelல chairலே போட்டு போற? எப்படி காயும்? chair வீணா போகாதா?"

பதில் ஏதும் சொல்லாமல், வெடுகென்று துண்டை எடுத்து கொண்டு வெளியே காய போட சென்றான். தொலைக்காட்சியை நிம்மதியாக பார்க்க முடியவில்லையே என்ற எரிச்சல் அஷ்வினுக்கு இருந்தது.

அனிதா சோபாவில் அமர, அவன் தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தான். சோபா மேசையில் சில கடிதங்களை தூக்கி வீசினாள். புருவங்கள் சுருங்கின அஷ்வினுக்கு.

"எதுக்கு இப்ப இத இங்க தூக்கி போடுற?"

"electricity bill, credit card bill, car loan. போன மாசமே உன்ன, இதலாம் கட்ட சொன்னேன். ஏன் இன்னும் கட்டாம வச்சுருக்க?"

எரிச்சலும் கோபமும் பொங்க அஷ்வின், "just stop it anita. don't treat me like a slave. நான் ஒன்னும் நாய் இல்ல. நீ சொல்றதெல்லாம் கேட்க."

அனிதா, "அப்பரம் இதலாம் யாரு போய் கட்டுவா? உன்னால போக முடியலனா, atleast சொல்லியிருக்கலாமே?"

அஷ்வின், "வந்ததுலேந்து நானும் பாக்குறேன். அத பண்ணு. இத பண்ணு. அத செய்யாதே. இத செய்யாதே. நிம்மதியா இருக்க முடியுதா இந்த வீட்டுல. உன்னால...." என்று அஷ்வின் தனது அறைக்கு சென்று சட்டையை மாற்றிவிட்டு, வீட்டை வீட்டு வெளியே சென்றான்.

அப்போது அனிதா, "இப்ப இந்த ராத்திரி நேரத்துல எங்க போற?"

அஷ்வின், "சாக போறேன். முடிஞ்சா நீயும் செத்து தொல...." என கூச்சல்போட்டு விட்டு, வீட்டின் கதவை படார் என்று சாத்தினான்.

(பகுதி 2)

Jun 8, 2013

short films ஆளுங்க தான் பெரிய தலவலி சார்!

முந்தைய பகுதிகள்


தயாரிப்பாளர் குறும்படங்களை பார்த்து கொண்டிருந்தார் youtubeல். அந்த நேரம், இயக்குனர் பாரதிகௌதம் அறைக்குள் நுழைந்தார்.

த: என்னய்யா பாரதி! ரொம்ப நாளாச்சு! உன்னோட படம் சூப்பர் hitனு கேள்விப்பட்டேன்.

இ: வணக்கம் சார்! ஒரு நாளுக்கு மேல ஓடினாலே அது hit படம்தான் சார்!!

த:உன் படம் ஒரு நாளுக்கு மேல ஓடிருச்சா? அப்பரம் உன்னைய கையில பிடிக்க முடியாது...

இ: ஐயோ போங்க சார்! என்னைய ரொம்ப புகழாதீங்க. நீங்க என்ன சார்! திருட்டு டிவிடி பார்த்துகிட்டு இருக்கீங்க.

த: திருட்டு டிவிடியா?? யோவ்! இதலாம் short films! youtube பக்கமெல்லாம் போரதில்லையா?

இ: திருட்டு டிவிடி ஆளுங்கவிட இந்த short films ஆளுங்க தான் பெரிய தலவலி சார்!

த: தலவலியா? ஏன்டா?

இ: நாங்கெல்லாம் கஷ்டப்பட்டு 10 வருஷமா உழைச்சு. assistantடா வேலை பார்த்து அதுக்கு அப்பரம் தான் படம் பண்ணுறோம். இதங்க சும்மா ஒரு கேமிராவ வச்சுகிட்டு youtubeல release பண்ணிடுதுங்க! அதயெல்லாம் பார்த்துட்டு ஆஹா ஓஹோனு வேற பாராட்டு! அப்பரம் 10 வருஷமா உழைச்ச எங்களுக்கு என்ன மரியாதை சார்??

த: என்னய்யா? புகையுற வாசம் வருது! ஹாஹாஹா...உனக்கு ஏய்யா பொறாமை? நல்ல கதையா இருந்தா சொல்லு, நம்ம படம் பண்ணுவோம்!

இ: அதுக்கு தான் சார் வந்துருக்கேன்!

த: படம் பெயர் என்ன?

இ: குட்டி கரடி

த: அப்பிபுடுவேன் அப்பி! எதுக்கு என்னைய திட்டுற?

இ: ஐயோ சார்! படம் பெயர் 'குட்டி கரடி'

த: ஹீரோ சிம்புவா?

இ: இல்ல சார்! நம்ம சசிகுமார்.

த: சரி கதைய சொல்லு.

இ: ஒரு ஊர்ல நாலு பேரு. அவங்க நாலு பேரும் ரொம்ப நல்ல friends. ஆனா...

த: அதுல ஒருத்தன் 2nd halfல கெட்டவனா மாறுவான். சசிகுமார்கிட்ட சண்டை போடுவான். "நண்பனோட கத்தி பேசினாலும், நம்ம கத்தி பேசகூடாது!" அப்படினு ஒரு பஞ்ச் வசனம். இதானே உன் கதை?

இ: சார்!!!!!! எனக்கு முன்னால யாரு சார் என் கதை உங்ககிட்ட சொன்னது? சார், உண்மைய சொல்லுங்க! இல்ல...என் கதைய நீங்களே திருட்டிட்டீங்களா?

த: யோவ்! இந்த கதைய வேற திருடுவாங்களா? எல்லாம் பார்த்த கதை தானே!

இ: இதுல ஒரு வித்தியாசம் இருக்கு.

த: என்ன வித்தியாசம்? படத்துல லட்சுமி மேனன் இல்லையா?

இ: லட்சுமி மேனன் இல்லாம ஒரு கதையா? போங்க சார்! அதுக்கு நான் பிச்சையெடுக்க போலாம்!

த: உன்னைய வச்சு படம் பண்ணா, நான் தான் பிச்சையெடுக்க போகனும்.

இ: சார்!!! என்ன சார் நீங்க! வித்தியாசத்த கேளுங்க!

த: சொல்லு.

இ: ஊரு சுத்துற சசிகுமாருக்கு அம்மாவ நடிக்க போறது லட்சுமி மேனன்!

த: (இதயம் வெடிக்கும் சத்தம்! நெஞ்சை பிடித்து கொண்டார்)

இ: சார்!!!

த: உன்னைய என்ன பண்ணா  சரியாகும்??

இ: சார்! முழுசா கேளுங்க. சசிகுமாருக்கு ரெண்டு ரோல். அப்பா சசிகுமாருக்கு ஜோடி லட்சுமி மேனன். நல்லா இருக்கும் சார்!!

த: சரி இந்த படத்துக்கு budget?

இ: தெரியல சார். கதை 2nd halfல south africa போகுது. சோ....கிட்டதட்ட 30 கோடி ஆகும் சார். போன படம் எனக்கு ஹிட் சார்! அதனால இந்த படத்துக்கு என் சம்பளம் கொஞ்சம் அதிகமாகும்!

த: எதுக்கு கதை south africa போகுது?

இ: ஹீரோ ஒரு போலிஸா training எடுக்க போறாரு. கதைய நல்லா கேளுங்க. ஹீரோவுக்கு ஒரு கெட்ட friend இருப்பாரு. ரெண்டு பேருக்குமே சண்டை வரும். அந்த கெட்ட ஃபரண்ட் கடத்தல் கும்பல இருப்பாரு. அவர காப்பாத்தவும் நட்பை காப்பாத்தவும்,ஹீரோ ஒரு போலிஸா மாறுவாரு.

த: (மேசையில் இருக்கும் தண்ணீரை அருந்துகிறார்)

இ: படத்தோட highlight இந்த ஒரு வசனம் தான் சார்! அங்க உள்ள south africa கும்பல்கிட்ட ஹீரோ ஒரு பஞ்ச் விடுவார். வசனத்த கேளுங்க சார்....

south africa கும்பல்: why did you commme here?
hero:  I know Friendship is Friendship because my friendship is not a TITANIC SHIP!!

சார்! எழுதி வச்சுங்க சார்! இந்த வசனத்தக்கு விசில் பறக்கும் சார்!!!

த: எனக்கு மண்டை வெடிக்குற மாறி இருக்கு. அருவாள், சத்தம், ரத்தம், south africa இதலாம் இல்லாம ஒரு கதை சொல்லுய்யா!

இ: அருவா இல்லாம ஒரு கதையா? நான் ஒன்னும் அந்த fortu slim பசங்க இல்ல சார்!!

த: fortu slim பசங்களா? ஹாஹா..யோவ்! அது short filmsயா!!

இ: அருவாள் தூக்கினா தான் தமிழ் சினிமாவுல நிலைச்சு நிக்க முடியும்! நீங்களே யோசிச்சு பாருங்க....
தளபதி ரஜினி
தேவர் மகன் கமல்
திருப்பாச்சி விஜய்
ரெட் அஜித்
புதுபேட்டை தனுஷ்
சிலம்பாட்டம் சிம்பு
சாமி விக்ரம்
இவங்க எல்லாருமே அருவாள் தூக்கினதுனால தான் இத்தன காலமா இருக்காங்க!!

த: சரி விடு! ரொம்ப emotional ஆகாத! simpleலா ஒரு கதை.

இ: (யோசித்தார் இயக்குனர். ரொம்ப யோசித்தார்...) சார் எனக்கு ஒரு ஐடியா. என்னைய விட என் மனைவி தான் ரொம்ப நல்லா சமைப்பாங்க.

த: என்னது????

இ: ஐயோ சாரி சார். உணர்ச்சிவசப்பட்டுடேன். என்னைய விடு என் மனைவி தான் ரொம்ப நல்லா கதை சொல்லுவாங்க.

த: அப்படியா? சொல்லவே இல்ல. ஃபோன போடு தங்கச்சிக்கு.

இ: (ஃபோன் போட்டு தயாரிப்பாளரிடம் கொடுக்கிறார்)

த: ஹாலோ தங்கச்சி! எப்படி இருக்க?

பாரதி கௌதம் மனைவி(ம): ஹாலோ அண்ணா! நான் நல்லா இருக்கேன். நீங்க?

த: ஏதோ போயிகிட்டு இருக்கு. பாரதி, உன்கிட்ட கதை இருக்குனு சொன்னான். கதைய கொஞ்சம் ஒன் லைன் மட்டும் சொல்லேன்.

ம: படம் பெயர் 'நாலு'

த: நாலு??? நம்பர் நாலு?

ம: ஆமா அண்ணா!

த: எதுக்கு நாலு?
ம: கடைசியா நம்ம சுடுகாடுக்கு தூக்கிட்டு போக, எத்தன பேரு தேவை?

த: நாலு.

ம: வீட்டுக்கு லேட்டா வந்தா, அம்மா எத்தன பேர் கேவலமா பேசுவாங்கனு சொல்லி திட்டுவாங்க?

த: நாலு.

ம: மூன்றுக்கு அப்பரம்?

த: நாலு.


ம: இப்ப தெரியுதா அண்ணா, 'நாலு' ரொம்ப முக்கியமான நம்பர்னு.

த: (கதிகலங்கி போனார்) யம்மா தங்கச்சி....ஆ..ஆ...நான் கொஞ்ச நேரம் கழிச்சு ஃபோன் பண்ணுறேன். (ஃபோனை கீழே வைத்தார்.)

இ: என்ன சார்? என் மனைவி கதை புடிச்சு இருந்துச்சா?

த: யோவ்! உன் குடும்பமே இப்படி தானா?

இ: சார் கலைகுடும்பம் சார்!

த: கொலை குடும்பம்-னு சொல்லு!

இ: சார் விடுங்க சார்!!! எந்த producerருமே இல்லேனா நாங்களே ஒரு படத்த எடுக்கலாம்னு இருக்கோம்.

த: அப்படியா? படம் பெயரு?

இ: திருமதி இங்கிலீஷ்!

த: (மறுபடியும் இதயம் வெடித்தது!!!!)

*முற்றும்*

Jun 4, 2013

தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்-25

#ஒரு குவாட்டர் சொல்லு மச்சி...ஐயோ........நம்பர் 25 சொன்னேன் #

வெள்ளி விழா கொண்டாட்டம் காண்கிறது இந்த தொடர்.

1) விஜய் சேதுபதியின் ரசிகையாகிவிட்டேன். தொடர் வெற்றிகள். பஞ்ச் டயலாக் பேசாமல், குத்தாட்டம் போடாமல் ஒரு ஹீரோ!

சிறப்பு அம்சம்: ஹீரோவாக தன்னை காட்டிகொள்ளாமல் நடிப்பது.

சிலரை பிடிக்க அவர்களது வெளிதோற்றம் முக்கியமில்லை. புதுசா ஒரு விஷயத்தை செய்யும்போதே, ஒருவரின் மீது ஒரு ஈர்ப்பு வருமே....that same ஈர்ப்பு தான் விஜய் சேதுபதி மீது! புதுசு புதுசாய் அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் அவரை சைட் அடிக்க வைத்தது.


மற்றும் அவரின் புன்னகை இன்னொரு ப்ளஸ்!

2) அடுத்த ஹீரோ நிவின். நேரம் படத்தில் நடித்தவர்.இவருக்கு லேசான தாடி தான் அழகு. மற்றபடி படத்தை பார்க்கவில்லை இன்னும். சில பாடல்களை பார்த்தேன். ம்ம்ம்....மனுஷன் பின்னியிருக்காரு!


Jun 3, 2013

சூது கவ்வும், ரன்பீர், தீபிகா புது படம்!

அருவாள் தேவையில்லை. tata sumo தேவையில்லை. தாடி வைத்த ஹீரோவாக இருந்தாலும் எரிச்சலை உண்டாக்கவில்லை. ஒரு ஐட்டம் நம்பர் ஆனால் சிரிக்க வைக்கும் ஐட்டம் நம்பர்.

அருவாள் தேவையில்லை (கடத்தல்காரர்களுக்கு தேவை ஐந்து rules)
tata sumo தேவையில்லை (ஒரு ஓட்டை வண்டி போதும்)
தாடி வைத்த ஹீரோ (விஜய் சேதுபதி)
நகைச்சுவை ஐட்டம் நம்பர் (காசு பணம் மணி மணி பாடல்)

சூது கவ்வும்- மக்களின் மனதை கவ்வியுள்ளது!

ரொம்ப புதுமையான ஒரு நகைச்சுவை படம்! ஹீரோ கண்களுக்கு மட்டும் தெரியும் ஹீரோயின், படத்தின் ஹீரோவுக்கு 40 வயது என்று சின்ன சின்ன விஷயங்கள் தான் படத்தை புதிதாய் காட்டியுள்ளது. நடித்த அனைவரும் டாப்! முக்கியமா விஜய் சேதுபதி!

ஒரு சின்ன கதை. எல்லாருக்கும் புரியும் கதை. ரசிக்க வைக்கும் திரைக்கதையும் வசனங்களும் இருந்தால் போதும் ஒரு நல்ல படத்தை எடுக்கலாம் என்று மறுபடியும் குறும்பட இயக்குனர்கள் நிரப்பித்து காட்டிவிட்டார்கள்! குறும்பட இயக்குனர்கள் மீது இருக்கும் மரியாரை இப்போது பல மடங்கு ஏறியுள்ளது! வாழ்த்துகள் இயக்குனரே!

2) yeh deewani hai jaawani

ரொம்ப நாளாக, நான் எதிர்பார்த்து கொண்டிருந்த படம்! எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த படம்! ரன்பீரும் தீபிகாவும் எப்படி சேர்ந்தார்கள் மறுபடியும்???...அட படத்துல சொல்லல! :))))))))))))))))


சரி கதைக்கு வருவோம். காதல் கதை தான்! இதுல என்ன புதுசு இருக்கு? ஒன்னும் இல்ல. அப்பரம் எப்படி நல்லா இருக்கு? என்று கேட்பவர்களுக்கு....

போய் படத்தை பார்த்துதான் அந்த அனுபவத்தை பெற்று கொள்ள முடியும்.

ரன்பீரும் தீபிகாவும் இணைந்து நடிக்கும் காதல் காட்சிகள் ஒவ்வொன்றும் செம்ம செம்ம செம்ம!!! தீபிகாவின் நடிப்பு கிளாஸ்! ரன்பீர் flirt செய்யும்போது அடிக்கும் வசனங்கள் அனைத்தும் டாப்!கூட நடித்தவர்களும் அருமை!

madhuri dixit ஆட்டம் பலம். அந்த பாடலில் ரன்பீர் ரொம்பவே ரசித்து ஆடியிருக்கிறார். ஒவ்வொரு frameலில் அது தெரிகிறது.

படத்தை இன்னும் கொஞ்சம் trim பண்ணியிருக்கலாம்!! மற்றபடி ஒரு feel-good படம். 29 வயதே ஆன இயக்குனரின் இரண்டாவது படைப்பு இது (முதல் படம் wake up sid) நல்ல முன்னேற்றம். ஆங்காங்கே தயாரிப்பளார் கரண் ஜோகரின் மேஜிக் தெரிந்தது! எல்லாமே பிடித்து இருந்தது!

கண்டிப்பாக பார்த்து ரசிக்கலாம்!

ஆமா...இந்த ரன்பீரும் தீபிகாவும் எப்படி சேர்ந்தார்கள்? அட படத்துல சொல்லல பா!:))))))))))))))))))


May 15, 2013

மூன்று பேர் மூன்று காதல்களின் எதிர்நீச்சல்!

எதிர்நீச்சல் மற்றும் மூன்று பேர்.......ஐயோ...அந்த படத்தை தான் பார்த்தேன்!

1) எதிர்நீச்சல்


எதிர்பார்த்த மாதிரி படம் ஆஹா ஓஹோனு எனக்கு தோணல. இரட்டை வசனம்இல்லாத (பெயரை வச்சு வந்த காமெடி எல்லாம்?)....ம்ம்ம்...... குத்து பாடல்கள் இல்லாத(தனுஷும் நயனும் ஆடியது எல்லாம்??)...ம்ம்ம்....  சரி ஒரு முறை பார்க்கலாம். குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் படமாய் அமையாவிட்டாலும் சிவ கார்த்திகேயனின் கல்லாபெட்டியில் சில்லறை குலுங்கி குலுங்கி விழ வைத்த படம்.

முதல் பாதி ஒரு கதை போலவும். இரண்டாம் பாதி வேறு கதை போலவும் இருப்பதால், அவ்வளவாய் ரசிக முடியவில்லை. இருந்தாலும், marathonக்கு பயிற்சி எடுக்கும் சில காட்சிகள் எல்லாம் சுவாரஸியமாய் இருந்துச்சு:)

2) மூன்று பேர் மூன்று காதல்

ஹாஹாஹாஹாஹாஹா....ஐயோ குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்த படம்! ஐயோ முடியலங்க!

அர்ஜுன் தாத்தா,
சேரன் பெரியப்பா
விமல் மாமா

சேர்ந்து நடித்த மூன்று பேர் முதியோர் காதல் படம் சூப்பர்!!! 

விமல் 'chartered accountant' (நான் எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சேனு தோணிச்சு)
சேரன் cambridgeல் படித்த வாலிபன் அதுவும் PHD முடித்தவன் (வேலையை நிறுத்திட்டு ஏங்காச்சு பூ விக்க போகலாம்னு தோணிச்சு)
 அப்பரம் நம்ம கிச்சா அப்பளம் அர்ஜுன் நீச்சல் சொல்லி கொடுப்பவர். இது கொஞ்சம் பரவாயில்ல!

விமலும் சத்தியனும் அடிக்கடி 'ஒரு chartered accountant' ஆன நம்ம.... என கூறும்போது குபீர் சிரிப்பு தான் வந்துச்சு!

அர்ஜுன், காதல் காட்சிகளில் எல்லாம், ஐயோ ராமா (கவுண்டமணி பாணியில் படிக்கவும்) என்ற உணர்வை தருகிறார்.

கமல், ரஜினி கூட தான் காதல் காட்சிகளில் நடிக்குறாங்க. அவங்கள எல்லாம் நீ ஒன்னும் சொல்றது இல்ல. அப்படினு நீங்க கேட்கலாம். என்ன தான் அவங்க வயசுக்கு அது கொஞ்சம் ஒரு மாதிரியாய் இருந்தாலும், திரையில் பார்க்கும்போது அழகாய் காட்டிவிடுகிறார்கள் இயக்குனர்கள்!           
(பானு இதற்கு முன்னால்,           இப்போது)

மூன்று ஹீரோயின்கள் வேற! பானு தவிர மற்ற இருவரும், கடைசி பஸ புடிச்சு ஊருக்கு போயிடலாம்! அதிலும் விமலின் ஜோடி....ஆஹா ஆஹா...விமலுக்கு ஏற்ற ஜோடி. விமலும் இந்த புள்ளயும் 'நான் நடிக்க மாட்டேன். நீங்க வேணும்னா நடிச்சுங்கோ' என்று அடம்பிடித்து இருக்கிறார்கள். அது ஒவ்வொரு காட்சியிலும் வந்த என்னை ப்ளார் ப்ளார்னு அறைந்துவிட்டு போனது.

தப்பு செய்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கனும் என்ற கருத்து எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. இயக்குனர், இதை மட்டும் மையமாய் வைத்து பின்னி பெடல் எடுத்து இருக்கலாமே!

இயக்குனரின் மகன் 'ஸ்டாப் தி பாட்டு' என்ற பாடலுக்கு ஆடுகிறார்.
அழகாய் சிரிக்கிறார்,
அழகாய் இருக்கிறார்,
அழகாய் பார்க்கிறார்.ஆனால், முகத்தில் எந்த ஒரு பாவனையும் இல்லாமல் ஆடுகிறார். (விடுங்க பாஸ், அந்த காலத்துல விஜய்க்கும் ஆட வராதாம்!)  நல்லா ஆட கத்துங்க சார்! அப்ப தான் பெரிய ஹீரோவா வர முடியும்! (ம்ம்ம்...விஜய் சேதுபதி ஒரு பாட்டுக்கு கூட ஆடலயே, எப்படி பெரிய ஹீரோவானாரு?? ம்ம்ம்...)

அப்ப  இந்த படமும் அவுட்டா? என்று கேட்பவர்களுக்கு. குடும்பத்தோடு அல்லது நண்பர்களோடு சேர்ந்து உட்கார்த்து கமெண்ட் அடித்து படம் பார்க்க வேண்டுமா?- இதுவே சிறந்த படம்!

*************************************************************

எனக்கு சிரிக்கனும்- 'திருமதி தமிழ்' பாக்கனும்னு ஆசையா இருக்கு!!!

Apr 21, 2013

தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்-24சித்தார்த்....இவர் சித்தார்த்...........

சாரி, இதுக்கு மேல பேச்சு வரல:))) கொஞ்சம் பொறுங்க....:))))


வயசு 34. 34???!!?? வருஷம் போக போக இவர் இன்னும் இளமையா போய்கிட்டு இருக்காரு! இவர் ரொம்ப நாள் சினிமால இருக்காரே, ஏன் திடீரென்னு 'சைட்' என்பீர்கள்.சமீபத்தில் 'உதயம் nh4' படம் trailer பார்த்ததினால் வந்தது!!

அடுத்து....ரவி ராம்பால். இப்போது நடக்கும் ஐபில் ஆட்டங்களை அவ்வபோது பார்த்து கொண்டு இருக்கிறேன். அதில் ரொம்ப கவர்ந்தவர் ரவி ராம்பால். அதாவது சிலரை பார்த்தவுடனே 'அட' என்று சொல்ல வைக்கும். அப்படிப்பட்டவர் தான் இந்த ரவி ராம்பால்!! 

அடுத்து....ஜெடேஜா. பிடித்த அம்சம்- திறமை. கடந்த சில ஆட்டங்களில் இவரின் அபார வெற்றி இவர் பக்கம் ஈர்த்துள்ளது. மற்றபடி பார்க்க போனால்..ம்ம்... இப்படி trimmed hair and beard தான் இவருக்கு அழகு!! 

Apr 8, 2013

சென்னையில் ஒரு கேடி பில்லாவும் பரதேசியும்.

இந்த வார இறுதி நாட்களில், 3 படங்கள்.

1) சென்னையில் ஒரு நாள்

ஏற்கனவே வந்த மலையாள படத்தை பார்த்துவிட்டதால், இந்த படம் அவ்வளவு புதிதாக தெரியவில்லை. அந்த படத்தில் இருந்த ஒரு சில 'மேஜிக்' இதில் இல்லை.

இருந்தாலும், சில காட்சிகள் ரொம்பவே நல்லா இருந்துச்சு. அதிலும் அந்த கார், பெரிய லாரி மோதி கொள்ளாமல் பயங்கரமாய் சர்சர் என்று வாகனம் போன காட்சிகள் எல்லாம் சூப்பர்! நடித்த அனைவருமே ரொம்ப நல்ல செய்து இருந்தாங்க.

தமிழ் டாக்கிஸ் யூடியுப் விமர்சனம் சொன்னதுபோல், "சேரன் நடிக்குறார்னு பயந்து படத்த பாக்காம போயிடாதீங்க. அவர் ரொம்ப நல்லா நடித்து இருந்தார்."

இதே மாதிரி நல்ல கதாபாத்திரங்களில் நடிங்க சார்! உங்கள எல்லாருக்கும் பிடிக்கும்.

2) கேடி பில்லா கிள்ளாடி ரங்கா- சூப்பர் ஹிட் படம் என்றார்கள்! 

படத்தை பார்த்துவிட்டு, 'இது ஒன்னும் அவ்வளவு பெரிய காமெடி இல்ல' என்று தான் தோன்றியது. ஒரு கட்டத்தில் செம கடுப்பாய் வந்தது. சிரிப்பே வராமல் எவ்வளவு நேரம் தான் நானும் 'இந்தா காமெடி வந்துடும். அந்தா காமெடி வந்துடும்'னு எதிர்பார்க்குறது?

சும்மா ஃபேஸ்புக் பக்கங்களின் தலைப்பின் சாயலில் காமெடி டயலாக் சொன்னால், சிரிப்பு வருமா?

இதை காமெடி படம் என்றால், உள்ளத்தை அளித்தா போன்ற படத்தை எல்லாம் என்ன சொல்வீங்க!!!???

the convent boy விமல் அவர்களே, நடிப்பு வந்தால் அதை கொஞ்சமாவது எடுத்து பாக்கெட்-ல போட்டுக்குங்க. தூர தூக்கி போடாதீங்க.

சிவா கார்த்திகேயா, பெண்களை கிண்டல் பண்ணி சுண்டல் சாப்பிடும் இந்த கதாபாத்திரம் உனக்கு இனிமேல் வேண்டாம்ய்யா!!! இப்படி பேசினால் தான், கை தட்டல் கிடைக்கும்னு நிறைய பேர் சொல்லுவாங்க. கை தட்டல் வாங்க, வேற நல்ல வழியெல்லாம் இருக்குது தல!

சூரி, சந்தானத்துக்கு வந்த நிலை உங்களுக்கு வர வாய்ப்பு இருக்கு. டபுள் மீனிங் வசனம் பேசினால் அடுத்த 'சந்தானம்' நீங்க தான் பாஸ்!!

இயக்குனரே,................. சரி விடுங்க. இந்த அரையாண்டு பரிட்சைல என்னை பொருத்தவரை பாஸ் ஆகல. அடுத்த முழு ஆண்டு பரிட்சைலவாது நல்லா வர முயற்சி பண்ணுங்க.

அப்பரம் யுவன பத்தி சொல்ல மறந்துட்டேனே!!! சரி அது மறந்ததாகவே இருக்கட்டும்.

3) பரதேசி.

முதலில் இப்படத்தை பார்க்க அவ்வளவு ஆர்வம் இல்லை. அவரின் 'நான் கடவுள்' படம் கொடுத்த 'பயம்'. நம்ம வாழ்க்கையே கொஞ்சம் பரதேசி நிலைமைல தான் போயிகிட்டு இருக்கு. அதுல இந்த படத்த வேற பாக்கனுமா-னு யோசித்தேன். படத்தை பார்த்தேன். அட, பரவாயில்ல கொஞ்ச நல்லா தான் இருக்கு.

நிறைய காட்சிகளில், நாம் நமது வாழ்க்கையில் நடப்பவற்றை பார்க்க முடிந்தது.

கஷ்டப்பட்டு படிச்சு, பட்டம் வாங்கி, வேலைக்கு போகும்போது தெரிவதில்லை நாமும் நவீன பரதேசிகள் என்று.

அடிமையாக்கப்படுவோம்
வீட்டை மறந்து
சில நேரங்களில்
அனாதையாக்கப்படுவோம்.

 என்ன தான் உடல் நலம் சரியில்லை என்றாலும் வேலைக்கு போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட நாட்கள் எல்லாம் உண்டு. மருந்து செலவுக்கும் முதலாளிக்கும் பயந்து தன்ஷிகா கொஞ்சம் கொஞ்சமாய் சாகும் காட்சியில் உணர்ந்தேன் நானும் ஒரு 'பரதேசி' என்று.

தன்மானத்தை புதைத்தோம்
வருமானத்திற்காக!

இந்த மாதிரி படம் முழுவதும் இன்றைய சூழலுக்கு ஒற்றுமை இருந்தது. கடைசியில் அதர்வா, வேதிகாவை பார்த்து, "இந்த நரகத்துக்கள்ள விழுந்துட்டியே?" என்று வாய்விட்டு அழும் காட்சி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திங்கட்கிழமையை நினைச்சு நாம் அழுவதைபோலவே இருந்ததுச்சு.

நடிப்பு என்ற வகையில் எல்லாருமே நல்லா செய்து இருந்தாங்க. அதர்வாவின் பிச்சுபோட்ட பரோட்டா தமிழ் தான் ஆங்காங்கே தலை தூக்கியது. இருந்தாலும், நல்லாவே நடித்து இருந்தார்.

Mar 18, 2013

கவுண்டமணிக்கு ''happy birthdey dey dey to you'

இன்று கவுண்டமணியின் பிறந்தநாள். என்னை பொருத்தவரை 'the king of comedy' என்று சொல்வேன். நான் சின்ன வயதில் தொலைக்காட்சியில் படம் பார்க்கும்போது, பெயர் போடும் வேளையில் நான் பார்ப்பது ஒன்றே ஒன்று தான் - 'கவுண்டமணி செந்தில்' பெயரை தான்!

அப்படி இல்லை என்றால், அந்த படத்தை பார்க்கும் ஆர்வம் குறையும். அப்படி பெயர் இருந்தால், ரொம்ப குஷியாகிவிடுவேன். அவ்வளவு பிடிக்கும் கவுண்டமணியை (செந்திலும் சேர்ந்து) இப்போது கூட எனது வலைப்பூ பதிவு எழுதும்போது, அவரின் வசனங்கள் தான் பெரிய inspiration!!!

http://www.sparkthemagazine.com/wp-content/uploads/2012/05/petromax-opt.jpg

நண்பர்களிடம் பேசும்போது கூட அவரின் தாக்கம் நிறைய வரும் பேச்சில்!! அவரின்...

1) petrolmax lighta தான் வேணுமா?

2) ஆமா ஆமா.. நாங்க தான் நாங்க தான்!!

3) இப்பலாம் படிப்பு எந்த ரேஞ்சுல இருக்கு தெரியுமா?


4) நம்ம ஒன்னு கேட்டா, நம்மள அசர வைக்குற மாதிரி ஒரு பதில் 

சொல்வாரு பாரு....அது இங்க புரியாது வீட்டுக்கு போனா தான் புரியும்!!

5) ஒட்டுற வேளையா ஒழுங்கா பாருடானா, உட்கார்ந்து ஓட்டை போட்டு கொண்டு வந்திருக்கான்!!

6) yes, I am rajashekar!!

7) என்னது? வடுகபட்டி ராமசாமி செத்து போயிட்டாரா??

போன்ற வசனங்கள் எல்லாம் பேசும்போது பயன்படுத்துவோம் சூழ்நிலைக்கு ஏற்ப!!


 http://starmusiq.com/movieimages/Ullathai-Allitha_B.jpg

உள்ளத்தை அள்ளித்தா படம் எத்தன முறை பார்த்து இருக்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை!! சோகமாக இருக்கும்போது அவரின் காமெடி வீடியோக்களை youtubeல் பார்த்து உற்சாகம் அடைவேன்!

அப்படிப்பட்ட ஒருவரின் பிறந்தநாள் இன்று!!!

கவுண்டரே, happy birthdey dey dey to you!!!!

Mar 15, 2013

என்னது பாலா அடிச்சாரா?

பரதேசி! (யோவ்..உங்கள திட்டலையா? படத்த பெயர சொன்னேன்)

பரதேசி படத்தின் teaser ஒன்று வெளியாகி, அதில் நடிப்பவர்களை போட்டு அடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.


 

இதற்கு பலவித எதிர்ப்புகள்! முக்கியமா இந்த டிவிட்டர் பக்கமா போனால்...சக நடிகர்கள்/இயக்குனர்கள் காட்டிய எதிர்ப்புகள்:

 Actor : Siddharth"A video of a director hitting his actors in the name of reality is going viral.Can we please have one of actors beating the hell out of him?"

 Director : Balaji Mohan"Paradesi 'reality' teaser sets a bad example to young future filmmakers who consider Bala sir as an idol. This isnt the way to make films."

 Actor-producer : Udhayanidhi Stalin"I decided not 2 watch the reality muvi! I shud b building temples for directors Rajesh S.R.Prabhakaran sir!"

எனக்கு சிரிப்பு தான் வந்தது இவர்களின் எதிர்ப்புகளை பார்த்து! பாலாவுக்கு தெரியாதா- இது விளம்பர யுத்தி என்று?

இதுக்கு தானே ஆசைப்பாட்டாய் குமாரா? என்பதுபோல் எதிர்வினை விளம்பர தானே இன்றைய 'விஸ்வரூப' வெற்றியை நிர்ணயிக்கின்றது!!  தப்போ சரியோ? படம் நல்லாயிருக்குதுனு நிறைய பேர் சொல்றாங்க! இயக்குனர் பாலாவின் ரசிகை நான் என்று சொல்ல முடியாது. வித்தியாசமான படங்களை கொடுத்து இருக்கிறார்! படம் ஓடினால் சரி! ஆனால், இவரிடம் பிடிக்காத விஷயம்- அழகானவர்களை அழுக்காய் அலங்காரம் செய்வது!

http://filmy365.com/tamil/files/2012/11/Atharva-02.jpg             http://moviegalleri.net/wp-content/gallery/paradesi-movie-stills/bala_in_paradesi_movie_stills_adharvaa_murali_6dba4ba.jpg

அதர்வா எவ்வளவு அழகு!! ச்சே போங்க பாஸ்...மனசே சரியில்லை! அடுத்து, விஜய் இவரிடம் படம் பண்ண போவதாய் செய்தி!!! தல!!!!!!!!!! இது நமக்கு தேவையா தல? நம்மகிட்ட இருக்கும் ஒரே அம்சம்- அந்த அழகான சிரிப்பு தான்! பார்த்து சுதார்ச்சிக்கோ தல!
             
                           http://4.bp.blogspot.com/-668rZcgckv8/UG3DNbJ7FPI/AAAAAAAACYU/FNJlAJ5SCgs/s1600/smile.jpg


சரி பாலா அடிச்சதுக்கே இப்படினா? சின்ன வயசுல, நம்ம அப்பாக்கள் நம்மள தூக்கிபோட்டு மிதிச்சு அடி இடி மாதிரி விழுந்த கதையை reality teaser போட்டால், பூகம்பமே கிளம்புமா பாஸ்?? உஷ்ஷ்ஷ்ஷ....யப்பா!!!

Mar 14, 2013

office- அப்பளம்னா எப்படி இருக்கனும்?

என்னைய மாதிரி ஒரு sales executive இது தான் அப்பளம்னா எப்படி வியாபாரம் ஆகும்? அப்பளம்னா எப்படி இருக்கனும்? கும்பலா, பொன்நிறமா, சும்மா வின்ன்ன்ன்ன்னு ஒரு பொடுப்போட இருக்க வேண்டாம்!- கவுண்டர் அப்பளம் விக்கும் காமெடியை பார்த்தபிறகு, எனக்கு ஆபிஸ் விஷயங்கள் ஞாபகத்திற்கு வந்துவிட்டது.

http://sphotos-a.xx.fbcdn.net/hphotos-snc6/205376_317819421640663_1052643186_n.jpg

ஆபிஸ் போன பிறகு தான் 'விடுகதையா இந்த வாழ்க்கை' என்று ரஜினி ரத்த கறையோடு போகும் வலி புரிந்தது. கொடுமைகள் ஒருபுரம் நடந்தாலும், அதிலும் சில காமெடிகள் நடக்கும்.

மீட்டிங் என்னும் காமெடி கொடுமை: கோபம் வர மாதிரி காமெடி செய்வதில் ஆபிஸ் ஆட்களை அடித்து கொள்ள ஆள் இல்லை! வீட்டிற்கு போகும் நேரத்தில் மீட்டிங். வாழ்க்கைக்கு ஒரு நாளும் தேவையில்லாத விஷயத்தை பத்தி பேச ஒரு மீட்டிங்.
http://i.ytimg.com/vi/0nlTPkSC8gI/2.jpg
பட்ட பெயர் வைக்கும் காமெடிகள். மண்டையன், வழுக்க மண்டையன், 'சின்ன வீடு', பைத்தியக்காரி, ' 7 ஸ்டார் கிங்' போன்றவை என் ஆபிஸில் நாங்க வைத்து கொள்ளும் 'code word' பட்ட பெயர்கள்.  ஆபிஸ் security officer ஒருத்தர் இருக்கிறார். அவருக்கு இந்த பெரிய ஆபிசர்களின் நற்பெயரை வாங்க வேண்டும் என்பதற்காக என்ன வேண்டும் என்றாலும் செய்வார். ஒரு நாள், ஏதோ, சாதாரண விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள். அதை வளைத்து வளைத்து ஃபோட்டோ எடுத்து அனைவருக்கும்,"these photos are for your memorial." என்று அனுப்பிவிட்டார். அன்று முதல் இவர் காமெடி தான் ஒரு வாரம் ஓடியது.

பெரிய ஆபிசர் ஒருத்தர் இருக்கிறார். அவர் மூச்சுக்கு மூணூறு தடவ 'chief security officer' என்ற வார்த்தையை பயன்படுத்தி விட்டு தான் அடுத்த வாக்கியத்தை தொடருவார்! ஐப்பா கேட்டு கேட்டு....ரீலு அந்துபோச்சு டா சாமி!

இன்று காலையில் விஜய் டிவியின் புதிய தொடரை பார்த்துவிட்டு, இந்த போஸ்ட் எழுதவேண்டும் என்று தோன்றியது.


அடுத்த போஸ்ட்...ம்ம்.... தற்போது சைட் அடிக்கப்பட்டுகொண்டிருப்பவர்களுக்கு நிறைய வாய்ப்பு இருக்குனு நினைக்குறேன்!!

Mar 13, 2013

நீ தானே என் appetiser!

'கூகல் கூகல் பண்ணி பாத்தேன் உலகத்திலே' என்று பாடல் தொலைக்காட்சியில் ஓடியது. அந்த பாடலை முணுமுணுத்தபடியே வருண் ஹால் மேசைக்கு வந்தான். தண்ணீர் குவளையில் தண்ணீர் முடிந்துவிட்டதால் சமையலறையில் இருக்கும் குளிர்சாதன பெட்டியை நோக்கி நடந்தான். அதிலிருந்து தண்ணீர் நிரப்பினான் குவளையில்.

நித்யா  ரொம்ப கஷ்டப்பட்டு பூரிகட்டையை உருட்டிகொண்டிருந்தாள். இரண்டு நிமிடங்கள் அவளையே பார்த்தான் வருண். கட்டிய கூந்தலில் இருந்து நெற்றியில் கலைந்து விழுந்த முடி, புதிதாய் சின்னதாய் கன்னத்தில் முளைத்த முக பரு, மின்னிய அவளது உதடுகள், உடம்போடு ஒட்டிய சட்டை- அனைத்தையும் ரசித்தான்.

புன்னகையித்து கொண்டே அவள் அருகே சென்ற வருண், "நித்யா, எனக்கு ஒரு கவிதை தோணுது, சொல்லவா?"

அவனை கண்டு கொள்ளாமல் பூரிகட்டை மேல் கவனத்தை செலுத்தியிருந்த நித்யா, "என்ன சொல்லு?" என்றபடி பூரி மாவை எடுத்தாள்.

வருண், " இது வரை பார்த்ததில்லை
                    ஒரு கட்டை
                    இன்னொரு கட்டையை
                     உருட்டுவதை!
"

சொல்லிவிட்டு புன்னகையித்தான்.

முறைத்தாள் நித்யா. "பூரி வேணுமா? அடி வேணுமா?"

மெதுவாய், அவளை இடுப்போடு அணைத்தபடி வருண், "வேற options இல்லையா மா?"

நித்யா, "விடு வருண்.... நான் ரொம்ப டென்ஷன்ல இருக்கேன்." என்றபடி அவனை தள்ளிவிட்டு, நெற்றியில் விழுந்த முடியை விரல்களால் காதுமடல் பின்னால் சொருகினாள். மீண்டும் சமையலை தொடர்ந்தாள்.

வருண் அவள் பின்னாலிருந்து கட்டிபிடித்து, அவளது தோள்பட்டையில் தாடையை வைத்தவாறு, "ஏன் மா டென்ஷன்?"

"சரியா வர மாட்டேங்குது. பூரி மாவ சரியா தான் பிசைஞேன். ஆனா...ப்ச்ச்..." பெருமூச்சு விட்டாள் நித்யா.

வருண், "it's ok ma. நான் பூரி கேட்டேனா?"

நித்யா, "உனக்கு செய்றேனு யாரு சொன்னா? எனக்கு இன்னிக்கு பூரி சாப்பிடனும்னு ஆசையா இருந்துச்சு. அதான் செய்றேன்!" விடாமுயற்சியை கைவிடவில்லை அவள்.

"சரி. நான் help பண்றேன்" என்ற வருண் பூரிமாவை பிசைய ஆரம்பித்தான்.

ஓரக்கண்ணால் பார்த்த நித்யா, "என்ன பண்றே?"

வருண், "பூரிமாவ பிசையுறேன் டார்லிங்" என்றான்.

நித்யா, "அது என் விரலு."

வருண் சிரித்தபடி, "ஓ...சாரி மா. ரெண்டுமே ரொம்ப softaa இருந்துச்சா. அதான் குழம்பிட்டேன்."

நித்யா, "என்னைய விடு" என்று மறுபடியும் பின்னாடி தள்ளிவிட்டாள்.

தொடர்ந்தாள், "disturb பண்ணாம மரியாதையா போயிடு, எனக்கு கோபம் வரதுக்குள்ள." 

வருண், "அப்பரம் நான் என்ன செய்ய?"

நித்யா, "போய், டீவி பாரு. அதான் ஆயிரத்து எட்டு channel இருக்கே!"

வருண், "நான் பாக்கனும்னு நினைக்குற channel கிச்சன்ல இருக்கே!" என்றான் கண் சிமிட்டியவாறு.

நித்யாவுக்கு சிரிப்பு வந்தது. இருந்தாலும் நித்யா, "வருண், மொக்கை ஜோக் அடிக்காம, பேசாம போயிடு!"

வருண், "ஐ...யாருகிட்ட!! மனசுக்குள்ள புடிச்சுருக்கு. ஆனா வெளியே தான் சிரிக்க மாட்டேங்கற"

நித்யா, "பிடிக்கல. போ டா" என்று தொடர்ந்து 'மாவே மாவே பூரி போடு' என்று மாவுடன் மன்றாடி கொண்டிருந்தாள். சுட்ட பூரி, கல் போல் இருந்ததால் மேலும் கோபமாக இருந்தாள் நித்யா.  அவள் இன்னொரு பூரியை சுட்டாள். ஆனால் அதுவும் சரியாக வரவில்லை. வருண் அவளை பார்ப்பதை பார்த்து, நித்யா, "என்ன?" என்று அவளது இடுப்பில் கைவைத்து முறைத்தாள்.

புன்னகையுடன் வருண், " இன்னொரு கவிதை தோணுது?"

நித்யா, "எங்க அந்த பூரி கட்ட" என்று சொல்ல வருண் அலறி அடித்து கொண்டு ஹாலுக்கு ஓடினான்.

சிறிது நேரம் கழித்து ஹாலுக்கு வந்த நித்யா சோபாவில் விழுந்தாள் களைப்புடன்.
"சிக்சர்!!!!!!!!!!!" என்று கத்தினான் வருண் தொலைக்காட்சியில் ஓடிகொண்டிருந்த கிரிக்கெட் ஆட்டத்தை பார்த்து. 

நித்யா, "வருண்...." என்றபோது, அவனது கைபேசி ஒலி எழுப்பியது.

வருண் கைபேசியில், "டேய்! சொல்லுடா. ஆமா...பாத்துகிட்டு இருக்கேன். சூப்பர் சிக்சர்! இந்த தடவ நம்ம தான் ஜெயிக்கிறோம்......" என்று பேசிகொண்டிருந்தவனை பார்த்து முறைத்து கொண்டிருந்தாள் நித்யா. அதை கவனித்த வருண் வேண்டுமென்றே அதிக நேரம் பேசினான்.

பேசி முடித்த வருண், தொடர்ந்து தொலைக்காட்சி பார்த்தான். அவன்  பேசாமல் இருந்தது நித்யாவுக்கு எரிச்சலை உண்டாக்கியது. உடனே, ரிமோட்-டை எடுத்து தொலைக்காட்சி பெட்டியை off செய்தாள்.

வருண், "நித்யா, என்ன பண்ணுற?" என்றவன் மறுபடியும் தொலைக்காட்சியை on செய்தான்.

தொடர்ந்தான் வருண், "உனக்கு வேணும்னா வேற channel பாரு. அதுக்கு ஏன் off பண்ணுற?"

நித்யா, அவனை முறைத்தவாறு, "நான் பாக்கனும்னு நினைக்குற channel என்னைய பாக்க மாட்டேங்குதே!" என்றாள். வருணுக்கு புருவங்கள் ஆச்சிரியத்தில் விரிந்தன.

"ஓ....பாத்துட்டா போச்சு" என்றவன் அவள் அருகே நகர்ந்து உட்கார்ந்தான்.

அவன் மீசையில் ஏதோ ஒட்டியிருக்க, அதை துடைத்தபடி நித்யா, "sorry pa, இன்னொரு நாளைக்கு பூரி செஞ்சு தரேன்."

வருண், "பரவாயில்ல விடு."

நித்யா, "டின்னருக்கு என்னடா பண்றது?"

வருண், "நான் ஆர்டர் பண்ணிட்டேன்..."

நித்யா, "எப்போ?"

வருண், "நீ கிச்சன்குள்ள போராடிகிட்டு இருந்தீயே...அப்பவே!"

கண்களால் சிரித்த நித்யா, அவனது கன்னம் அருகே செல்ல, வருண் தடுத்தான்.

"ஹாலோ! nothing doing. என்னோட கவிதைய பிடிக்கலனு சொன்னீயே! கண்டிப்பா பெரிய punishment இருக்கு." என்றான் வருண்.

புரியாதவளாய் நித்யா, "என்ன punishment?" என்றாள்.

அவள் காது அருகே சென்று ஏதோ அவன் சொல்ல, "ச்சீ..bad boy!" என்று அவனை தள்ளிவிட்டாள் நித்யா.

"இப்ப...நோ..."

"நோ... எனக்கு வேணும்..."

என்று பேசிகொண்டிருக்கும் வேளையில் வீட்டு அழைப்பு மணி ஒலித்தது.

"சாப்பாடு வந்துட்டு. யப்பா escape!!" என்றவளிடம், வருண்,

"நீ தான் appetiser. அதுக்கு அப்பரம் தான் சாப்பாடு."

"உலறாம போய் கதவ திற..." என்றாள் நித்யா புன்னகையித்தபடி.

கதவை திறந்தவுடன் இரண்டு சிறுவர்கள் வேகமாய் ஓடி வந்து தொலைக்காட்சி முன்னாடி உட்கார்ந்து கொண்டனர்.

சாப்பாடு கொண்டு வந்தவர், "சார் address தெரியாம வந்தேன். அந்த பசங்க தான் அழைச்சுகிட்டு வந்தாங்க..."

சின்ன பையன், "வருண் அங்கிள், எங்க தெருவுல கரண்டு போச்சு. நான் இங்க மேட்ச் பாத்துகிறேன். என்ன ஆர்டர் பண்ணீங்க? french fries வாசம் அடிக்குது....இங்க கொண்டு வாங்க...."

*முற்றும்*