Showing posts with label கவுண்டமணி. Show all posts
Showing posts with label கவுண்டமணி. Show all posts

Jun 22, 2016

எனக்கு இன்னொரு பேரு இருக்கு- எங்களுக்கு நிறைய வேலை இருக்கு!


  எனக்கு இன்னொரு பேரு இருக்கு- தீஞ்சு போன தீபாவளி முறுக்கு



இப்படினு தான் டைட்டில் வைக்கலாம்னு இருந்தேன். தேவையில்லாம எதுக்கு தீபாவளி முறுக்கு பத்தி எழுதிகிட்டு. அப்பரம் முறுக்கு சாப்பிடும்போதெல்லாம் இந்த படம் ஞாபகம் வரும். கூடவே டென்ஷன் வரும்!

இந்த பதிவு, இப்படத்தின் விமர்சனம் இல்ல.  ஓரு மூணே மூணு கேள்வி நறுக்குனு கேட்டுட்டு ஓடி போய்டுறேன்.

இந்த விளம்பரம் நமக்கு தேவையா?




(4.32-4.44)

ஜீவி- என்னோட ஸ்கீரின் ஏஜ் பாத்தீங்கனா, நிறைய ஹீரோயின்ஸ்கூட செட் ஆகாது. எப்போதுமே அவங்களாம் 
ஏஜ்-டாவே இருப்பாங்க.



அட பாவி! ஜீவி! இந்த விளம்பரம் நமக்கு தேவையா? என்ன ஏஜ்-டா இருப்பாங்க!?

என்ன ஆவங்களாம் முதியோர் கல்விக்கா போய்கிட்டு இருக்காங்க?
படத்துல ஜீவிய "மார்டன் பாகுபலி", "அவர் லேவலே வேற"னு சொன்ன பில்டப்-ப விட இந்த இண்டர்வீயுல சொன்னது தான் தாங்க முடியல.

எங்கோ ஒரு பத்திரிக்கையில் இவரை "அடுத்த பாண்டியராஜ்"னு வர எழுதிஇருந்தாங்க!

ஐயோ ராமா! 


பெட்ரமாஸ் லைட்-டே தான் வேணுமா?

(15.48)

இயக்குனர்: இது கண்டிப்பா குழந்தைகளோடு பார்க்க கூடிய படம் தான்

பெண்களை  "post paid"  "pre paid" என்று வர்ணிக்கும் வசனங்களை எல்லாம் ஒன்னாவது பாட புத்தகத்துல சேர்த்துடலாமா?

எல்லா படத்துலயும் தான் டபுள் மீனிங் இருக்கு, இந்த படத்த தப்பா சொல்லாத என்று ஆவேசப்படும் "வெர்ஜின் பசங்களின் தலைவன் ஜீவி" ரசிகர் மன்ற உறுப்பினர்களே, மத்தவங்க யாரும் குழந்தைகளோடு வந்து படத்த பாருங்க-னு பில்டப் பண்ணலேயா, ராசா!

இப்படத்திலும் "வெரிஜின்.. வெரிஜின்" வசனம் இருக்கு!


ஜாப்பான்-ல ஜாக்கிசான் கூப்பிட்டாங்க, அமெரிக்காவுல மைக்கல் ஜாக்சன் கூப்பிட்டாங்களா?

சரி விடுங்க! இத எல்லாத்தையும்கூட மன்னிச்சுடுறேன். "ஜீவி 40 செகண்ட்டுக்கு ஒரு குத்தாட்டாம் போட்டு இருக்காரு பாருங்க.....தெறி பேபி" என்று டிவிட்டரில் படித்துவிட்டு, படத்தில் ஆடிய நடனத்தையும் பார்க்கும்போது, "டேய்!! இதலாம் உனக்கு அடுக்குமா டா!" என்று வாய்விட்டு கத்த வேணும் என்று இருந்தது.








எனக்கு இன்னொரு பேரு இருக்கு-னு ஒன்னு திரியுதுனு அந்த பக்கம் போய் பார்த்தா....

என் பேரே "முத்தின கத்திரிக்காய்" தான்-னு இன்னோன்னு திரியுது!

இது ஆவரது இல்ல!
இது ஆவரது இல்ல!

Mar 18, 2013

கவுண்டமணிக்கு ''happy birthdey dey dey to you'

இன்று கவுண்டமணியின் பிறந்தநாள். என்னை பொருத்தவரை 'the king of comedy' என்று சொல்வேன். நான் சின்ன வயதில் தொலைக்காட்சியில் படம் பார்க்கும்போது, பெயர் போடும் வேளையில் நான் பார்ப்பது ஒன்றே ஒன்று தான் - 'கவுண்டமணி செந்தில்' பெயரை தான்!

அப்படி இல்லை என்றால், அந்த படத்தை பார்க்கும் ஆர்வம் குறையும். அப்படி பெயர் இருந்தால், ரொம்ப குஷியாகிவிடுவேன். அவ்வளவு பிடிக்கும் கவுண்டமணியை (செந்திலும் சேர்ந்து) இப்போது கூட எனது வலைப்பூ பதிவு எழுதும்போது, அவரின் வசனங்கள் தான் பெரிய inspiration!!!

http://www.sparkthemagazine.com/wp-content/uploads/2012/05/petromax-opt.jpg

நண்பர்களிடம் பேசும்போது கூட அவரின் தாக்கம் நிறைய வரும் பேச்சில்!! அவரின்...

1) petrolmax lighta தான் வேணுமா?

2) ஆமா ஆமா.. நாங்க தான் நாங்க தான்!!

3) இப்பலாம் படிப்பு எந்த ரேஞ்சுல இருக்கு தெரியுமா?


4) நம்ம ஒன்னு கேட்டா, நம்மள அசர வைக்குற மாதிரி ஒரு பதில் 

சொல்வாரு பாரு....அது இங்க புரியாது வீட்டுக்கு போனா தான் புரியும்!!

5) ஒட்டுற வேளையா ஒழுங்கா பாருடானா, உட்கார்ந்து ஓட்டை போட்டு கொண்டு வந்திருக்கான்!!

6) yes, I am rajashekar!!

7) என்னது? வடுகபட்டி ராமசாமி செத்து போயிட்டாரா??

போன்ற வசனங்கள் எல்லாம் பேசும்போது பயன்படுத்துவோம் சூழ்நிலைக்கு ஏற்ப!!


 http://starmusiq.com/movieimages/Ullathai-Allitha_B.jpg

உள்ளத்தை அள்ளித்தா படம் எத்தன முறை பார்த்து இருக்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை!! சோகமாக இருக்கும்போது அவரின் காமெடி வீடியோக்களை youtubeல் பார்த்து உற்சாகம் அடைவேன்!

அப்படிப்பட்ட ஒருவரின் பிறந்தநாள் இன்று!!!

கவுண்டரே, happy birthdey dey dey to you!!!!