Showing posts with label குறும்படம். Show all posts
Showing posts with label குறும்படம். Show all posts

Dec 30, 2015

Romantic Suspense Tamil Short Film- கண நேர நினைவுகள்




இது நான் இயக்கிய மூன்றாவது குறும்படம். உங்களது விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்த்து.....

Dec 15, 2015

அடுத்த குறும்படத்தின் புதிய பாடல்!

நாங்கள் எடுத்த குறும்படம், கண நேர நினைவுகள்.

அப்படத்தில் வரும் பாடல் இதோ!!


உங்களது ஆதரவையும் கருத்துகளையும் எதிர்பார்த்து......

அடுத்த குறும்படம்- கண நேர நினைவுகள்

நான் குறும்படங்கள் எடுக்க ஆரம்பித்து கிட்டதட்ட 3 வருஷம் ஆச்சு. இந்த 3 வருடங்களில் 3 படங்கள். கதைகள் அனைத்தும் நான் பல வருடங்களுக்கு முன்பு எழுதியவை. கதைகளை நான் இவ்வலைப்பூவில் வெளியிடுவேன். அப்போது எல்லாம் தெரியாது, கதை படமாக மாறும் என்று.

எப்படி படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை வந்தது?

youtube, வந்த பிறகு வந்த ஆசை தான். பிறகு, பல குறும்படங்கள் பார்த்தபின்ன ஆசை அதிகமாச்சு. ஆசை யாரை விட்டது என்பது போல நானும் கேமிராவை தூக்கினேன் முதல் படத்துக்கு.

முதல் படம்- லவ் ஸ்டாப்
https://www.youtube.com/watch?v=tq1qEreJmps

பிறகு, இரண்டாவது படம்- காதல் கவ்வும்
https://www.youtube.com/watch?v=YERvbQJhlKI


இவ்விரண்டு படங்களும் ரொம்ப குறைவான பொருட்செலவில் தயாரிக்கப்பட்டவை. சொன்ன போனால், சாப்பாடு கூட படத்தில் நடித்தவர்கள் தான் எனக்கு வாங்கி கொடுத்தார்கள். ஹிஹிஹி....

ஆனால், மூன்றாவது படம் வேற மாதிரி இன்னும் அழகாய் இருக்க வேண்டும் என நினைத்தேன். படத்தில் பாடல் கூட உண்டு. நண்பர்கள் மூலமாகவும் அவர்களுக்கு தெரிந்தவர்கள் மூலமாக, இசையமைப்பாளர், பாடகி, பாடலாசிரியர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் என்ற ஒவ்வொரு துறையில் புதிய நபர்களுடன் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது.

பாடல் இயற்றிய அனுபவே தனி. இரண்டு மணி நேரத்தில் பாடலை முடித்தோம். சொற்கள் இசையில் அமர, அது புதிய வடிவமாய் உருவம் பெறும் போது, செம்ம போங்க! அந்த உணர்வே தனி!!

இரண்டே நாட்களில் படத்தை முடித்தோம். படம் எடுக்கும் அனுபவம் வேற level boss!! செம்ம ஜாலியாக போனது!! ஒரு frame எப்படி அமைப்பது என்று ஒளிப்பதிவாளர் சொல்லும்போது, எனக்கே அதிசயமாய் இருந்தது.

முதல் இரண்டு படங்களுக்கு, நானே ஒளிப்பதிவு செய்தேன். ஆனால், இந்த அளவுக்கு யோசித்து செய்யவில்லை.



இப்படத்திற்கு, பொருட்செலவு இருந்தது. அழகாய் படம் தெரிய, lights மற்றும் prime lens பயன்படுத்தினோம்.

ஒவ்வொரு முறையும் வேறு இடத்தில் scene மாறும் போது, ஒளிப்பதிவாளரும் அவர் தோழனும் லைட்களை மாற்ற வேண்டும்.

அப்போது புரிந்தது, இவ்வளவுவுவுவுவு கஷ்டம் படம் எடுப்பது என்று!!!





உழைப்பு, சந்தோஷம், சிரிப்பு என கலந்த கலவாய் இருந்தது படம் எடுத்த இரண்டு நாட்களும்.


இதோ கண நேர நினைவுகள் படத்தின் போஸ்டர்.

Feb 26, 2014

காதல் கவ்வும் success meet!

ஓடாத படத்துக்கு எல்லாம் success meet  வைக்குறாங்க!
இதுக்கு இருக்க கூடாதா?

ஹிஹிஹி!! முதலில் 'காதல் கவ்வும்' குறும்படத்தை பார்த்த அனைவருக்கும் நன்றிகள் கொடிகள்! facebook, twitter, youtube வழி படத்தை பார்த்தும் கருத்து சொல்லியும் ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி!



படம் பார்த்த ஒரு சில பேர் ஒரு படி மேலாக சென்று விமர்சனம் செய்து இருக்கிறார்கள்.

http://theguruproject.wordpress.com/2014/02/19/short-film-kadhal-kavvum-by-gayathiri/

ஆக, மறுபடியும் அனைவருக்கும் ஒரு மிகப் பெரிய நன்றி!!!:)))

Feb 4, 2014

காதல் கவ்வும்- குறும்படம் trailer

எத்தன படத்த நான் கிண்டல் பண்ணியிருப்பேன்.
இப்ப எனக்கு-னு வரும்போது கொஞ்சம் ஜர்க் வாங்குது!

இதன் பிண்ணனியை சொல்லியே ஆக வேண்டும்! சாதாரண windows movie makerல் செய்த முதல் படம் தான், love stop.



WMV தவர்த்து வேறு தெரியாது. ஆனால், இரண்டாவது குறும்படம் எடுக்கும்போது, கொஞ்சம் technicalலா நல்லா செய்யனும்-னு ஆசை. ஆக, சொந்தமாகவே trail and error முறையில் கற்று கொண்டது தான் pinncale studio editing software.

சட்டியில் இருந்தால் தான்....something something  வரும். ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இசை, நடிப்பு....என்று படம் எடுப்பது பெரிய விஷயம்!!! editing பண்ணும்போது தான் புரிந்தது இக்கடலில் நம்ம மகுடி மகுடி மகுடி என்று சும்மா பாடிக்கிட்டு போயிட முடியாது- னு!

எங்கள் யாருக்குமே எதுவும் தெரியாமல் எடுத்த படம் தான் - காதல் கவ்வும்!

feb 13th 2014 காத்திருங்கள்!!!
 


Jan 17, 2014

பொங்கல் ரிலீஸ்- ஜில்லா, வீரம்....அப்பரம்..... காதல் கவ்வும்

புது வருடத்தின் முதல் பதிவு.



எங்களுக்கு தெரிந்தவற்றை எழுதி,எடுத்த குறும்படம் தான் இந்த காதல் கவ்வும்!

teaser இதோ!!!!



Dec 22, 2013

எனக்கு பிடித்த குறும்படம்-1

பிரியாணி எப்படி எல்லாருக்கும் சாப்பிட பிடிக்குமோ, அதே போல் இந்த 3 குறும்படங்கள் எனக்கு பிடித்திருந்தது.


1) அகவிழி

அழகான தமிழ் பெயர் கொண்ட ஒரு குறும்படம். என்னது ஆங்கில படம் போல் கொஞ்சம் புரியாம கதை போகுதே என்று நினைக்கலாம். இருந்தாலும் பார்ப்பவர்களின் மூளைக்கு வேலை கொடுக்கும் படம் என்பதால் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது.


2) சரியா தவறா

முந்தைய படத்தில் இருக்கும் அதிகபடியான technical விஷயங்கள் இல்லாமல், ரொம்ப சாதாரண முறையில் எடுத்த ஒரு ரசிக்கும் படியான குறும்படம். நகைச்சுவையும் படத்தில் நடித்தவர்களின் நடிப்பும் சபாஷ்!!! குட்டி பையன் கலக்கிட்டான் போங்க!!!


3) crosstalk

படம் என்றால் பார்க்கனும். ஆனா, இது கேட்கும் படம்!!! visuals இல்லாமல் ஒரு படம். வசனங்களும், voice modulationலயும் கலக்கி இருக்காங்க!!!!



Nov 27, 2013

எனக்கு பிடித்த குறும்படம்-2

சமீபத்தில் இந்த 'fantasy genre' படங்களை பற்றி நிறைய பேச்சு! குறைந்த பொருட்செலவில் அருமையான குறும்படங்கள்.


1) காதல் கதை + அருமையான இசை கொண்ட 'inbox'



2) angel vs devil - நச் என்று தெரிக்கும் வசனங்களும் இயல்பாய் நடிக்கும் நடிகர்களின் படைப்பு 'அந்த நேரம் அந்தி நேரம்'



3) மூஞ்சி முகர

நகைச்சுவை கலந்த கலக்கலான படம்