Jun 21, 2018

மயிர் தான் பொண்ணுக்கு அழகா?



முடி, கூந்தல், மயிர்- எப்படி 'தலைமுடிக்கான'  சொல் எக்கசக்கமா இருக்குதோ, அதே மாதிரி ஒரு காலத்துல நமக்கும் எக்கசக்கமா முடி இருந்திருக்கும். வேலைக்கு போற வயசு வரைக்கும் முடிய பத்தி அவ்வளவு கவலைப்பட்டு இருக்க மாட்டோம். ஆனா, வேலை, பணம், உடல் ஆரோக்கியம், இப்படி  நமக்கு தெரியாமலேயே நம்ம ஒரு 'சமூக விரோதி' வந்து தாக்கிட்டு போயிடும்.

ஒரு படத்துல, செந்தில் சொல்வாரே, " இந்த இடம் தான் thrillingஆன இடம். மனச தேத்திக்குங்க. பயந்துடாதீங்க'' அந்த மாதிரி, 30 வயசுக்குள்ளயே பாத்தா, நம்மள பதற வைக்குற மாதிரி, நமக்கு முடி கொட்டும் பிரச்சனை வந்திடும். குறிப்பா, இது பெண்களுக்கு நடக்கும்போது தான், இன்னும் அதிர்ச்சி ஆவங்க.

2017. வருஷம் ஆரம்பிச்சு கொஞ்ச நாள்ல இத கவனிச்சேன். கண்ணாடி முன்னாடி நின்னு, முடி சீவும்போது, தலையில சில இடம் காலியா போவத. சரி, இப்படிக்கா சீவி பாத்தா, இன்னும் மோசமா போகுது. அப்போ தான் மனசு 'பகிர்'னு இருந்துச்சு. நமக்கு சொட்டை விழுந்திடுச்சா?

மெத்தையில உட்கார்ந்து என்ன டா நடக்குதுனு யோசிச்சா, கண்ணுல கண்ணீர் வருதே தவிர யோசிக்க முடியல. நமக்கு உடல பிரச்சனை வந்தா என்ன பண்ணுவோம்?

அதே தான்.

நானும் அந்த முட்டாள்தனத்த பண்ணினேன். கூகல் பக்கம் போனேன்.  கூகல போய், hair fall அப்படினு ஆரம்பிச்சு, அது எங்க எங்க போய், கடைசில ஒரு முடிவுக்கு வருவோமே அதுக்கு தான் நானும் வந்து சேர்ந்தேன்- உனக்கு தீரத ஒரு நோய் இருக்கு, காயு! அப்படினு எனக்கு நானே self-diagnosis பண்ணிகிட்டேன்.

அதுக்கு அப்பரம், ரெண்டு வாரம் கண்ணாடி முன்னாடி நின்னு அழுவேன். ராத்திரி தூங்கும்போது, ஒரு extra அரை மணி நேரம் அழுவேன். ரெண்டு வாரம் கழிச்சு, கண்ணாடி முன்னாடி நின்ன போது, அந்த ரெண்டு கேள்வி தோணுச்சு.

"சொட்டையா இருக்கறதுனால, என்ன பிரச்சனை? யாருக்கு பிரச்சனை?"

ரொம்ப நேரம் யோசிச்ச பிறகு, பதில்- ஒன்னுமே இல்ல.

அப்பரம் எதுக்கு நான் இவ்வளவு feel ஆனேனு தெரியல.

மயிர் தான் பொண்ணுக்கு அழகா?

முதல் விஷயம்- ஏன் முடி கொட்டுது? ஏன் சொட்டையா போகுது?

மன உளைச்சல், உடல் ஆரோக்கியம். இது தான் மூல காரணம். இத control பண்ண முடியுமா?

overnightல முடியாட்டிகூட ஓரளவுக்கு முடியும். அதுக்கு ஏதாச்சு முயற்சி பண்ணலாம்.

அப்பரம், chef தாமோதிரன் கடாய் மாதிரி, நம்ம தலையில கருவேப்பில, வெளக்கெண்ண, அந்த தூள் இந்த தூள்னு மண்டைய மசாலா அரைக்குற மிஷின் மாதிரி ஆக்கிடுவோம் ஒரு ஏக்கத்துல, எப்படியாச்சும் முடி வளர்ந்திடாதானு.

நானும் கொஞ்ச நாள், கருவேப்பில மேட்டர் முயற்சி பண்ணி பாத்தேன். ஒரு 0.5% improve ஆகி இருக்கும். அப்பகூட மனசு ஏத்துக்காது! மறுபடியும் சோகமா ஆயிடும். அப்பரம் வேற எதையாச்சும் தேட தோணும். Dermatologist போய் பாத்தேன். அவர் ஒரு spray கொடுத்தார். அத சில மாசம் try பண்ணி பாத்தேன். இன்னொரு 0.2% improve ஆகி இருக்கும்.

இத முழுசா சரி பண்ண முடியாது- அது தான் உண்மை. அந்த உண்மைய ஏத்துக்கனும்.  மனசு ஏத்துக்க கொஞ்சம் நாள் ஆகும்.



ஆனா, இது பிரச்சனை கிடையாது. முதல 'முடி கொட்டும் பிரச்சனை'னு எழுதி இருப்பேன். அதுவே தப்பு தான். இதுல என்ன பிரச்சனை இருக்கு?


பொண்ணுக்கு முடி தான் அழகு, ஆறடி கூந்தல் பெண் அப்படி இப்படினு வர்ணிச்சு வச்சதுனால, நமக்கு முடி இல்லனே வந்தவுடனே ஒரு மாதிரியா ஆயிடுறோம்.

நமக்கு எது ஒன்னு இல்லையோ, அத குறையாவே பாக்க கத்து கொடுத்து கெடுத்து வச்சு இருக்கு, இந்த சமுதாயம்.

படிப்பு இல்லையா?- ஐயோ பாவம்.
வேலை இல்லையா?- ஐயோ பாவம்.
வீடு இல்லையா?- ஐயோ பாவம்.
கார் இல்லையா?- ஐயோ பாவம்
கல்யாணம் ஆகலயா?- ஐயோ பாவம்.
புள்ள இல்லையா- ஐயோ பாவம்
முடி இல்லையா?- ஐயோ பாவம்.

ஆனா, ஒரே ஒரு விஷயத்துக்கு தான் நம்ம பாவம் பாக்குறது இல்ல.

மூளை இல்லதாவன் கிட்ட.
இப்படி மூள இல்லாதவன் தான் வந்து எவனாச்சு உங்க தலைமுடிய பாத்து, "ஐயோ என்ன சொட்ட விழுது" னு கேட்பான். அப்படி கேட்டா,

கபாலி ரஜினி மாதிரி கால் மேல கால் போட்டு,

"ஆமாண்டா, எனக்கு முடி இருந்துச்சு. இப்ப இல்ல. உனக்கு என்ன டா பிரச்சனை"னு சொல்லி பாருங்க,

அந்து கெத்தே தனி கெத்து தான்.



உங்க அழகு, உங்க மனசுலயும், தைரியத்தலயும் தான் இருக்குது.

மத்தது எல்லாம், வெறும் மயிர் தான்!

Jun 20, 2018

[பயணம்- movieworld, Gold Coast] சூப்பர்மேனை சந்தித்த போது

Movieworld- Gold Coast, Australia. (உல்லாச பூங்கா)

Brisbaneலிருந்து ஒரு மணி நேரத்தில் உல்லாச பூங்காவிற்கு சென்றுவிடலாம். நுழைவு கட்டணம் கொஞ்சம் பதற வைச்சாலும், வாழ்க்கைல ஒரே ஒரு தடவ போற இடம் இதலாம். ஆக, அத பத்தி ரொம்ப யோசிக்காம போயிடனும். இணையத்தில் கட்டணம் பதிவு செஞ்சா, இன்னும் மலிவு, அங்க நேரடியா போய் டிக்கெட் வாங்கினால் கொஞ்சம் அதிகம்.

 


காலையில் 10 மணிக்கு சென்றுவிடலாம். கூட்டம் அதிகம் இருக்காது. அதுவும் பொது விடுமுறை இல்லாமல், சாதாரணமான வார நாள் என்றால் கூட்டம் அவ்வளவா இருக்காது. நுழைஞ்ச உடனே, நீங்க யார இருந்தாலும், டக்குனு சந்தோஷம் ஆயிடுவீங்க. ஒலிக்கப்படும் பிரமாண்ட இசையும், வண்ணமும், ஏகப்பட்ட உணவு பொருளும், ஐஸ்கீரிமும் உங்கள குதுகலம் படுத்தும். 

கொஞ்சம் நேரம் கழித்து, stunt show நடந்தது. கண் முன்னாடி, பறக்கும் வாகனங்களும், தீப்பொறியும் மிரள வைத்து விட்டார்கள். 

street parade ஒரு நிகழ்ச்சி. சாலையில், superhero மற்றும் wonder woman இன்னும் சில கதாபாத்திரங்கள் வந்து சண்டை, நடனம் என்று பல நிகழ்ச்சிகள் நடந்தன. அவற்றையெல்லாம் நின்றுபடியே அல்லது அங்கு அமைக்கப்பட்டிருக்கும் பெஞ்சில் அமர்ந்தபடியே ரசிக்கலாம். இதுல என்ன சுவாரஸ்சியம் என்றால், இந்த கதாபாத்திரங்கள் அனைத்தும் கைக்கு எட்டிய தூரத்தில் பார்க்கலாம்.

முதலில் சூப்பர்மேன் வந்தார். அவருடன் தனியாக படம் எடுத்து கொள்ள, 20டாலர் கொடுத்து அந்த பாக்கியத்தை பெறலாம். ஒரு சுற்று சுற்றி விட்டு, சிறிது நேரம் கழித்து, பேட்மேன் வந்தார்.

என் அம்மா, "ரெண்டு பேரும், அதே ஆளு தான்."

நான்: இல்ல மா! இருக்காது.

அம்மா: இல்ல. ரெண்டும் ஒன்னு தான்.

நான்: எப்படி தெரியும்?

அம்மா: ரெண்டு பேருக்கும்....அதே கண்கள்!

நான்: என்னது அதே கண்ணா? 

அங்க வந்த முக்கால்வாசி, குழந்தைங்க தான். கூட அவங்க பெற்றோர், இல்ல தாத்தா பாட்டி இருந்தாங்க. ஆனா, பெரியவங்க சின்னவங்க என்று வயசு வித்தியாசம் இல்லாம, எல்லாருமே ஆச்சிரியத்துடவும் ஆனந்தத்துடவும் பார்த்தோம், ஒவ்வொரு முறையும் ஒரு சூப்பர்ஹீரோ வந்தபோது.  'எதுக்கு தெரியல, ஆனா, நம்மள காப்பாத்த ஒருத்தர் வந்துட்டார். இவரு இருக்கார் பா அது போதும்," என்ற உணர்வும் அடிப்படை ஏக்கம் கலந்த ஆசை தான், எல்லாருக்கும் சூப்பர் ஹீரோக்களை பிடிக்க காரணமாக இருக்கும் என்று அந்நோடி எனக்கு தோன்றியது.