எனக்கு இன்னொரு பேரு இருக்கு- தீஞ்சு போன தீபாவளி முறுக்கு
இப்படினு தான் டைட்டில் வைக்கலாம்னு இருந்தேன். தேவையில்லாம எதுக்கு தீபாவளி முறுக்கு பத்தி எழுதிகிட்டு. அப்பரம் முறுக்கு சாப்பிடும்போதெல்லாம் இந்த படம் ஞாபகம் வரும். கூடவே டென்ஷன் வரும்!
இந்த பதிவு, இப்படத்தின் விமர்சனம் இல்ல. ஓரு மூணே மூணு கேள்வி நறுக்குனு கேட்டுட்டு ஓடி போய்டுறேன்.
இந்த விளம்பரம் நமக்கு தேவையா?
(4.32-4.44)
ஜீவி- என்னோட ஸ்கீரின் ஏஜ் பாத்தீங்கனா, நிறைய ஹீரோயின்ஸ்கூட செட் ஆகாது. எப்போதுமே அவங்களாம்
ஏஜ்-டாவே இருப்பாங்க.
அட பாவி! ஜீவி! இந்த விளம்பரம் நமக்கு தேவையா? என்ன ஏஜ்-டா இருப்பாங்க!?
என்ன ஆவங்களாம் முதியோர் கல்விக்கா போய்கிட்டு இருக்காங்க?
படத்துல ஜீவிய "மார்டன் பாகுபலி", "அவர் லேவலே வேற"னு சொன்ன பில்டப்-ப விட இந்த இண்டர்வீயுல சொன்னது தான் தாங்க முடியல.
எங்கோ ஒரு பத்திரிக்கையில் இவரை "அடுத்த பாண்டியராஜ்"னு வர எழுதிஇருந்தாங்க!
ஐயோ ராமா!
(15.48)
இயக்குனர்: இது கண்டிப்பா குழந்தைகளோடு பார்க்க கூடிய படம் தான்
பெண்களை "post paid" "pre paid" என்று வர்ணிக்கும் வசனங்களை எல்லாம் ஒன்னாவது பாட புத்தகத்துல சேர்த்துடலாமா?
எல்லா படத்துலயும் தான் டபுள் மீனிங் இருக்கு, இந்த படத்த தப்பா சொல்லாத என்று ஆவேசப்படும் "வெர்ஜின் பசங்களின் தலைவன் ஜீவி" ரசிகர் மன்ற உறுப்பினர்களே, மத்தவங்க யாரும் குழந்தைகளோடு வந்து படத்த பாருங்க-னு பில்டப் பண்ணலேயா, ராசா!
இப்படத்திலும் "வெரிஜின்.. வெரிஜின்" வசனம் இருக்கு!
ஜாப்பான்-ல ஜாக்கிசான் கூப்பிட்டாங்க, அமெரிக்காவுல மைக்கல் ஜாக்சன் கூப்பிட்டாங்களா?
சரி விடுங்க! இத எல்லாத்தையும்கூட மன்னிச்சுடுறேன். "ஜீவி 40 செகண்ட்டுக்கு ஒரு குத்தாட்டாம் போட்டு இருக்காரு பாருங்க.....தெறி பேபி" என்று டிவிட்டரில் படித்துவிட்டு, படத்தில் ஆடிய நடனத்தையும் பார்க்கும்போது, "டேய்!! இதலாம் உனக்கு அடுக்குமா டா!" என்று வாய்விட்டு கத்த வேணும் என்று இருந்தது.
எனக்கு இன்னொரு பேரு இருக்கு-னு ஒன்னு திரியுதுனு அந்த பக்கம் போய் பார்த்தா....
என் பேரே "முத்தின கத்திரிக்காய்" தான்-னு இன்னோன்னு திரியுது!
இது ஆவரது இல்ல!
இது ஆவரது இல்ல!