Showing posts with label சமுதாயம். Show all posts
Showing posts with label சமுதாயம். Show all posts

Sep 26, 2016

PINK, தொடரி- இரண்டு படம், இரண்டு வித சாபகேடு.

ஒரே வாரத்தில் ரெண்டு படங்கள். இரண்டுமே ஏதோ ஒரு வகையில் சாபகேடுகள்.

பிங்- சமுதாயத்தின் சாபகேடு

தொடரி- நமக்கு தான்,நமக்கு தான்!

**************************************************

இந்த வருடத்தின் மிகச்சிறந்த ஹிந்தி படம் 'பிங்' என்று சொல்லலாம். இப்போது சமுதாயத்தில் நடந்து கொண்டிருக்கும் பெண்களுக்கு எதிரான சாபகேட்டை அப்படியே சித்தரித்த விதம்- எழுத்தாளர் ritesh shah.

வேலைக்கு போகும் மூன்று இளம்பெண்கள் டில்லியில், தனியாக வீடு எடுத்து தங்குகிறார்கள்- "ஐயோ, தனியாவா?"
Image result for pink film hindi
என்று  பலரின் மனதில் அச்சத்தை உண்டாக்கும் விதத்தில் தான் தற்போது நம்ம இந்தியா இருக்கிறது. இது யார் விட்ட சாபகேடோ? இல்ல யார் வளர்த்துவிட்ட சாபகேடோ?

பெண்கள் வெளியே சென்றது குற்றம்.

தெரியாத ஆண்களோடு சென்றது குற்றம்.

அங்கே ஒன்றாக இரவு உணவு சாப்பிட சென்றது குற்றம்.

இப்படி குற்றங்களை பெண்களின் மீது சுமத்திய பின் அவர்களுக்கு என்ன ஆகிறது என்பதை, ஒவ்வொரு காட்சியில், நாமே நம்மை அரைந்து கொள்ளும்படி இருந்தது படம்.

இதலாம் நாம் தினமும் செய்தியில் படித்தாலும், திரைப்படமாக பார்க்கும்போது, ஏற்படும் ஒரு பயம் கலந்த கலவரம் நமக்குள் புகுந்து கொள்வது தான் படத்தின் மிகப்பெரிய பலம், மிகப்பெரிய வெற்றி.

பெண்களுக்கு எதிரான குற்றம், சொல்ல முடியாத வலியை தருவது ஒரு பக்கம் என்றால், அதை எதிர்த்து போராடி, சட்டபடியாக ஜெயிப்பது அதைவிட வலி மிகுந்தது என்பதை 'பிங்' படத்தில் வரும் கோர்ட் காட்சிகள் சிறந்த உதாரணம். வசனங்கள் சாட்டையடியாக நம் மேல் விழுகிறது. இதை, மிக அழகாக எடுத்து சென்ற திரைக்கதை தான் முக்கிய ஹீரோ.
Image result for taapsee pannu pink

தாப்சி:

'அடி வெள்ளாவி வெச்சுத்தான்
வெளுத்தாங்களா உன்ன
வெய்யிலுக்கு காட்டாம
வளத்தாங்களா' - 

வெறும் பாடல்வரிகளுக்கு மட்டும் தாப்சியை பயன்படுத்திய தமிழ் சினிமாவிலிருந்து, வந்த ஒரு திறமைசாலி தான் என்பதை நிருபித்து இருக்கிறார். மிகவும் பெருமையாக இருந்தது அவரின் நடிப்பை பார்க்கும்போது.

அமிதாப்:

தியெட்டரில் 4வது வரிசையில் தான் உட்கார்ந்து தான் படத்தை பார்த்தேன். அங்கிருந்து ஸ்கீரினுக்குள் குதித்து, அமிதாப்-பை கட்டி அணைக்க வேண்டும் என இருந்தது. நடிகராக இல்லாமல், ஒரு நம்பிக்கையாக ஜொலித்தார். இந்த கேடுகெட்ட உலகத்தில், இப்படி யாராவது ஒருத்தர் நமக்காக இருப்பார் என்பதை நடிப்பு மூலம் காட்டியதற்கு, கொடி நன்றிகள்.


'இந்த virgin பையன் சாபம் உன்ன சும்மா விடாதுடி' என்று கேவலமாக மார்தட்டி கொண்டிருக்கும் ஹீரோக்கள் நிறைந்த தமிழ் சினிமாவிலிருந்து எவ்வளவு தூரம் ஹிந்தி சினிமா பக்குவப்பட்டிருக்கிறது என்பதற்கு ஒரு சான்று இதோ 'பிங்' படத்தில். ரொம்ப முக்கியமான காட்சி.

அமிதாப்: are you a virgin?

தாப்சி: *முழிப்பார்*

அமிதாப்:  answer me yes or no. don't shake your head. 


பார்ப்பவர்களின் மனதில் எந்த ஒரு சலனமும் ஏற்படாத வகையில் அமைந்த வசனம்!

படத்தில் வந்த கோர்ட் காட்சிகள் அனைத்தும் ஒரே டேக் தானாம். 6 கேமிராக்களை வைத்து படமாக்கப்பட்டதாம். அமிதாப், ஒவ்வொரு காட்சிக்கும் 2 அல்லது 3 மணி நேரம் ஒத்திகை பார்ப்பவர். ஆனால், தாப்சி அப்படி இல்லை. இயல்பாக உணர்வுகள் வர வேண்டும் என்பதற்காக இந்த ஒத்திகையும் இல்லாமல், பேசிய வசனம் தான் மேற்கோள் காட்டிய காட்சி. அமிதாப் கேள்விக்கு, தாப்சி இயல்பாய் பயந்து முழிக்க, அமிதாப் குரலை உயர்த்தி பேசிய வசனம் தான் அது. இது எதுவுமே எழுதப்படவில்லை. தானாக பேசிய வசனம்.



'பிங்' படத்திற்காக எழுதுப்பட்ட கிளைமேக்ஸ் வேறு. தங்களது எதிராக எல்லாம் ஆதாரங்களும் இருப்பதால், கேஸ்சை தோற்றதாக தான் முதலில் இருந்ததாம். ஆனால், மக்களுக்கு நம்பிக்கையும் தைரியமும் இருக்க வேண்டும் என்பதற்காக, மாற்றியமைக்கப்பட்டது கிளைமேக்ஸ்.

எனக்கு இரண்டுமே பிடித்திருக்கும். ஆக மொத்தத்தில், 'பிங்' போன்ற படங்கள் தான் குடும்பங்கள் கொண்டாட வேண்டிய வெற்றி படங்கள்.

*************************************************************

தொடரி- சினிமாவின் சாபகேடு

ஒன்னு, ரெண்டு நல்ல தமிழ் படங்கள் வரும். யப்பா, தமிழ் சினிமா வேற ரேஞ்சுல போய்கிட்டு இருக்கு என்று சந்தோஷப்பட்டு முடிப்பதற்கு, 'தொடரி' போன்ற படங்கள் வந்து அந்த சந்தோஷத்தை தரமட்டம் ஆகிடும்.

தமிழ் படங்களில் நாயகிகளை 'லூசு'த்தனமாக காட்டுகிறார்கள் என்று குற்றச்சாட்டை இப்படத்தில் மீண்டும் நிருப்பித்து இருப்பது ஒரு வருத்தம் என்றாலும், பிரபு சாலமன் படத்திலா இப்படி என்பது தான் மிகப்பெரிய அதிர்ச்சி.

ரயில் எதை நோக்கி போகிறது என்பதைகூட யூகித்துவிடலாம், ஆனால் கதை எந்த பக்கம் போகிறது என்பது அறியாமலேயே நாமும் தள்ளாடி போகிறோம்.

ஊடகங்களை கிண்டல் செய்தது சரி. ஏதோ ஒரு வகையில் காமெடி என்று வைத்து கொள்ளலாம். அது என்ன 'மலையாள திமிர்' என்று அப்பட்டமாக சொன்னதெல்லாம் எந்த வகையில் சரி, பிரபு சேட்டா?

கதைக்கும் திரைக்கதைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பிரபு சாலமான, கிளைமேக்ஸ் நேரத்தில் ரயில் மேல பாட்டு வைத்தார்? இது யார்விட்ட சாபகேடு, சேட்டா?

குழந்தைகளாலும் ரசிக்க முடியாத கிராபிக்ஸ் காட்சிகள் கொண்ட 'தொடரி' படம் பார்த்து என்னாலயும் எந்த வகையில் ரசிக்க முடியவில்லை.

Sep 19, 2015

உங்க அம்மா யாருடைய "பிட்டு படம்"?



"உங்க அம்மா, யாருடைய பிட்டு படம்?" என நீங்க நினைக்குறீங்க. அம்மாவும், பெண் என்பதால்....அம்மாவைப் பார்த்து இப்பாடலை பாடுவீங்களா?

என்ன நீ இப்படி அசிங்கமா கேட்குற என்று குமுறும் பலருக்கு, இதோ இதன் உண்மை காரணம்.

இந்த பதிவு எழுத முக்கியமான காரணம் இளம் சூராவளி, குட்டி தளபதி, புரட்சி சின்ன தளபதி, மக்களின் செல்ல பிள்ளை, கன்னி பெண்களின் கனவு கணவா, VIRGIN பசங்களின் ஓபாமா! - ஜீ.வி

படம், பாடல், வசனங்கள் என கொடுத்ததை எல்லாம் அள்ளி பருகி, துப்ப வேண்டும் என்று தோன்றுகிறது. இதுக்கு தான் ஏற்கனவே "A" சான்றிதழ் கொடுத்துங்களே அப்பரம் என்ன சத்தம்?
இதலாம் சும்மா ஒரு ஜாலிக்காக தான் என்று இதை உதாசினப்படுத்த என்னால் முடியவில்லை. காரணம்...காரணங்கள் உண்டு.

1) "A" படங்கள் என்பது ஒரு குறிப்பட்ட வயது பசங்களுக்கு பெண்களுக்கு என்று இருந்தாலும், பெண்களை கேவலப்படுத்தி, அசங்கிபடுத்தி வசனங்களை எடுக்க வேண்டுமா?

2) ஓ delhi belly, AMerican pie படங்கள் எல்லாம் பாக்குறீங்க? தமிழ்ல எடுத்தா என்ன?

யோவ்! இப்படங்களில் பெண்களை கேவலப்படுத்தி பேசவில்லை. பொது விஷயங்களையும் பிரச்சனைகளையும் கொஞ்சம் தைரியமாக சொல்வதே bold movies . திரிஷா இல்லேனா நயன்தாரா- இப்படத்தில் என்ன பொது பிரச்சனை இருந்துச்சு??

3) "நீ எனக்கு பிட்டு படம்?" பாடல்.

ஜீவி பிரகாஷ் மட்டும் குறை கூற முடியாது. இயக்குனர், தயாரிப்பாளர், பாடல் எழுதியவர்- யாருக்குமே இது அபத்தமா தெரியல்லையா? ஒரு தவறை எல்லாரும் சேர்ந்து செய்தால் அது எப்படி சரியாகும்?

டீ கடைகளிலும், டிவியிலும், ரேடியோவிலும், விழாக்களிலும் பாடலை கேட்கும்போது எப்படி இருக்க போகுது?




4)      Displaying FullSizeRender.jpg


அம்மா, பாட்டி, சித்தி, பெரியம்மா, தங்கச்சி, அக்கா எல்லாரும் டைனோசர் காலத்துல இருந்தவங்க இல்ல. அப்போ இவங்களும்.......

(கோபம் வரமாதிரி காமெடி பண்ணிய இயக்குனருக்கு, ஒரு டைனோசர் பொம்மை அனுப்பவும்)

***************************************************

சரி இம்புட்டு கோபம் பிட்டு....ச்சீ கோபம் பட்டு என்ன ஆக போகுது?

சிங்கை தமிழ் வானொலி நிலையத்தில் ஒலிப்பரபாகும் பாடல்களை சென்சார் செய்துவிட்டு தான் ஒலிப்பரப்ப படும்.

அப்படி சென்சார் செய்யப்பட்ட சில பாடல்கள்

1)
கண்டாங்கி கண்டாங்கி
கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும்
கஞ்சா வச்ச கண்ணு

2) why this kolaveri di...
hand la glass
glass la scotch
eyes-u full-aa tear-u


3) சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல
ஹே பத்து நாளா சரக்கடிச்சேன் போதையே இல்ல
உலகம் புரிஞ்சு டிரவ்ஸர் கிழிஞ்சு
இனி வைச்சிக்கிட என் கிட்ட தான் ஒன்னும் இல்ல (2)

(cancel செய்த வார்த்தைகள் வானொலியில் ஒலிப்பரப்ப மாட்டார்கள்)

*********************************************
இப்படி சென்சார் செய்யப்பட்டால் திருந்திடுமா இளைஞர் சமுதாயம்?

கண்டிப்பா இல்ல தான். தேவர் மகன் சிவாஜி சொன்னதுபோல் "இது என்ன பெருமையா? கடமை!"

நமக்கு ஒரு பொறுப்பு இருக்கு. இது நம்ம கடமை. இம்மாதிரியான கொச்சை பாடல்களை தடுக்க முடியாவிட்டாலும், இது தப்பு என்று சொல்ல நாம் அனைவரும் ஏதேனும் ஒன்னு செய்ய வேண்டும்- ஊடகங்களுக்கு அதில் அதிக பொறுப்பு இருக்கு.

இந்த பதிவும் ஏதோ ஒரு வகையில் அப்பொறுப்பை செய்து விட முயல்கிறது.

இந்த மாதிரியான பாடல்களால் ஏற்பட்ட பாதிப்பு எப்ப தெரியும் தெரியுமா?


சூப்பர் சிங்கரில் சின்ன குழந்தைகள் "நீ எனக்கு பிட்டு படம் டி...." என பாட,

அதற்கு வெட்கமில்லாமல் பெற்றோர்கள் ஆட,

அதை கேட்டுவிட்டு நடுவர்கள்... "பிட்டு....அந்த டு...landing note இன்னும் emotionalஆ பாடனும் கண்ணா?" என்று சொல்வார்கள் தெரியுமா                                                                                                              அன்று புரியும் நமக்கு.

Apr 28, 2015

கண்ண தொறக்கனும் சாமி.......

சமீபத்தில் கோயிலுக்கு சென்றபோது நான் பார்த்த சில விஷயங்கள் ரொம்ப நெருடலா இருந்துச்சு. இப்படி தான் நம்ம சாமி கும்பிடுறோமா என யோசிக்கும்போது சிரிப்பா இருக்கு!



1) சாமி கும்பிடாதே, பிச்சை எடு!நான் சின்ன வயதில் (ரெண்டு, மூணு வயதில்), மெழுகுவத்தி எரிவதை பார்த்தால், உடனே கை கூப்பி 'சாமி கும்பிடுறேன்' என கண்களை மூடி கொள்வேன். உண்மையிலேயே சாமியிடம் எப்படி கும்பிடுவது, என்ன செய்ய வேண்டும் என பெற்றோர்கள் அவர்களது பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கிறார்களா என தெரிவதில்லை.

சில நேரங்களில், பெற்றோர்களுக்கே உண்மையான வழிபாடு முறைகள் தெரிவதில்லை. 


போன வாரம், கோயிலுக்கு சென்றபோது நான் பார்த்த ஒரு சம்பவம். ஒரு அம்மா, தனது பிள்ளையிடம் (அவனுக்கு கிட்டதட்ட 11 அல்லது 12 வயது இருக்கும்)..."சரியா கும்பிடு" என்றார். 

பிள்ளை: எப்படி மா கும்பிடுறது?

அம்மா: நான் நல்லா இருக்கனும். பரிட்சையில நல்லா செய்யனும். நல்லா மார்க் வாங்கனும். அடுத்த வருஷம் நல்ல ஸ்கூலுக்கு போகனும்-னு கும்பிடு டா!


நமது பிள்ளைகளிடம் ஏன் பிச்சை எடுக்க கத்து கொடுக்குறோம்?? 


2) இது நம்ம ஏரியா, உள்ள வராதே!

இத பத்தி ஏற்கனவே ஒரு தடவ சொல்லி இருக்கேனு நினைக்குறேன். கோயில்களில் ஏன் 'tourists are not allowed beyond this point" என்ற அறிவிப்பு பலுகை இருக்குனு தெரியல. போன வாரம் சென்ற கோயிலில் இல்லை. ஆனா, சில கோயில் வாசலிலே இருக்கு. சில கோயிலில் சாமி சிலை வரைக்கும் போகலாமா அதுக்கு அப்பரம் போக கூடாதாம்.


நம்ம தானே 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' னு பெருமையா மார்தட்டி கொள்கிறோம்.
எம்மதமும் சம்மதம் என்றும் நம்ம தானே சொல்லிகிட்டு இருக்கோம். அப்பரம் ஏன் இந்த பாகுபாடு.
உன் தண்ணி என் தண்ணி, உன் காற்று என் காற்று, உன் சாமி என் சாமி-னு சொல்லி ஏன் இந்த பிரிவினை?? எனக்கு புரியல.


- "ஓ அவங்க சுத்தமா குளிச்சிட்டு வந்து இருக்காங்களானு தெரியாது... அதனால உள்ள விட முடியாது?" அப்படினு ஒரு ஐயர் என்னிடம் பதில் சொன்னார்.  (வழிபடும் போகும் இந்துக்கள் அனைவரும் குளிச்சுட்டு வந்தாங்கனு உங்களால சொல்ல முடியுமா?)-


"ஓ....அவங்க கால் தெரியுற மாதிரி காற்சட்டை போட்டு வருவாங்க...." (நம்ம பொண்ணுக்கு முழு முதுகு தெரியுற மாதிரி சேலை அணிந்து வந்தால் தப்பு இல்ல??)

- "ஓ....அவங்க கண்டபடி புகைப்படம் எடுப்பாங்க." (யோவ், நம்ம ஆளுங்க, முழு படமே ரிலிஸ் பண்ணற அளவுக்கு கைபேசியில் வீடியோ எடுக்கலாம்....அது தப்பு இல்ல??)




3) முடி இல்ல, முடிவு எடுத்தேன். 

ரெண்டு  பக்தர்கள். 55 வயது ஆண்ட்டிஸ். தனது மகளின் திருமண பற்றி 'அனுமான்' சாமி பக்கத்துல நின்னு பேசிகிட்டு இருந்தாங்க.....இருந்துச்சுங்க!



ஆண்ட்டி 1: என் பொண்ணுக்கு மாப்பிள்ள பார்த்தோம்.

ஆண்ட்டி 2: from?

ஆண்ட்டி 1: பையன் கனடாவுல இருக்கான் (குரலில் சற்று பெருமை)

ஆண்ட்டி 2: முடிவு ஆச்சா?

ஆண்ட்டி 1: no, we rejected it.

ஆண்ட்டி 2: oh no. why?

ஆண்ட்டி 1: பையனுக்கு முடி இல்ல.

********************************************************************************
 கண்ண தொறக்கனும் சாமி இவங்க எல்லாரும் ஏன் இப்படி இருக்காங்க???
நல்ல புத்தியை கொடு சாமி. கண்ண சீக்கிரம் தொறங்க சாமி! 

Mar 2, 2013

கல்யாணமெல்லாம் இப்ப என்ன ரேஞ்ல போய்கிட்டு இருக்கு தெரியுமா?



 

படிப்பெல்லாம் இப்ப என்ன ரேஞ்ல போய்கிட்டு இருக்கு தெரியுமா? என்று கவுண்டர் சொன்னது தான் ஞாபகத்திற்கு வருது?

ஏன்? என்று நீங்கள் கேட்பது புரியது!

ஒரு காலத்தில் 21வது பிறந்தநாள் கொண்டாட்டம் சீசன் இருந்துச்சு. இப்ப அவ அவ வயசாகி கல்யாணம் சீசன் வந்துருச்சு!! யப்பா சாமி!!! எம்புட்டு செலவு?

கல்யாணமெல்லாம் இப்ப என்ன ரேஞ்ல போய்கிட்டு இருக்கு தெரியுமா?

ஒவ்வொரு கல்யாணத்திற்கு சென்று மொய் பணம் ஈயாய் போனது தான் மிச்சம்! அந்த காலத்தில் கல்யாண விழா ஒரு தடவையோடு முடிந்துவிடும்.

இப்போது,

1)நிச்சயதார்த்தம்
2)bacherolette party
3)சங்கீத்
4)வளையல் விழா

5)கல்யாணம்
6)reception

சில நேரங்களில் யாருக்கு கல்யாணம், இது என்ன function என்ன நடக்குது எங்க போறோம், அப்படினு யோசிச்சு குழம்பி போன சமயம் எல்லாம் உண்டு.

"உனக்கு என்ன வந்துச்சு. அவங்களுக்கு பணம் இருக்கு. செலவு பண்றாங்க?" என்று நீங்கள் கேட்பது புரியது. பல் இருப்பவன் பக்கோடா சாப்பிடட்டும்! பக்கத்துல நிக்குறவனை ஏன் வாங்கி தர சொல்றீங்க?

சமீபத்தில் ஒரு தோழி (நெருங்கிய தோழி அல்ல) கல்யாணத்துக்கு கூப்பிட்டாள்..இல்ல அது receptionனு நினைக்குறேன்...wait wait..அதுவா..ம்ம்... சரி ஏதோ ஒன்னு! அதுக்கு கூப்பிட்டால், போக முடியவில்லை. அதற்கு பெரிய சண்டை! அட பாவிகளா! என்ன கொடுமையா இது!

இந்த facebook பல விஷயங்களில் உதவியாக இருந்தாலும், சில நேரங்களில் பெரும் தொல்லையாக உள்ளது. 'event' என்று ஒன்றை ஆரம்பித்து அவர்கள் பட்டியலில் இருக்கும் 2034 பேரையும் கூப்பிடுவார்கள். சும்மா என்றோ ஒரு முறை 'ஹாய்' சொன்னவர்களெல்லாம் கூப்பிட்டால், என்ன பா நியாயம் இது! சரி, அவர்களை ஏன் நீ 'friend'ஆக சேர்த்துகிட்ட, அப்படினு கேட்குறீங்களா?

சரி தான் சரி தான்! என்னைய உதைக்கனும்!:((



வீட்டில் கச்சிதமாய் கொண்டாடும் பழக்கம் இருந்தாலும் பரவாயில்ல!! ஆ..ஊனா...ஹோட்டல்! மாளிகை! இப்போதைய trend- கப்பலில் கொண்டாடுவது! சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்தேன். அதில் சங்கீத் விழா கொண்டாடப்பட்டது (இது வடஇந்திய கலாச்சாரம், எப்போது நம்ம கடன் வாங்கி கொண்டோம்னு தெரியல)

அந்த விழாவில் மாப்பிள்ளை வீட்டார் 'flashmob' செய்தார்கள். அதவாது திடீரென்று நின்னு ஆடுவார்கள். பார்க்கும்போது எனக்கு 'குபீர்' சிரிப்பு தான் வந்துச்சு. நீங்க, சந்தோஷமா செய்யுங்க! தப்பில்ல. ஆனால், ஆடம்பர செலவை குறைத்து கொண்டால் நல்லா இருக்கும். அதற்கு பதில், ஏழைகளுக்கு உதவலாமே....(ஓ அது, நடிகர் நடிகைகள் பிறந்த நாள் அன்று செய்வாங்களா?)
http://farm4.static.flickr.com/3257/3140568438_b0628505e0.jpg?v=0
அப்பரம் அந்த நிகழ்ச்சில பேசிய பாட்டி சொன்னது, "மாப்பிள்ளையும் பொண்ணும் சந்தோஷமா இருக்கனும். ஆசைக்கு ஒன்னு. ஆஸ்திக்கு ஒன்னு பெத்துக்கனும். ஏனா...என்ன தான் இருந்தாலும், பையன் வேணும். அப்ப தான் சொத்து விட்டு போகாது..." என்றார்.

ஹாஹாஹாஹாஹா.... பாட்டி போங்க பாட்டி! கோபம் வர மாதிரி காமெடி பண்ணாதீங்க!!

Feb 19, 2013

"நான் இப்ப என்ன செய்ய?"- தம்பி மாதவனின் தங்கச்சி

நம்ம சமுதாயத்துல......ஐயோ அது பெரிய வார்த்தையோ?
சரி விடுங்க...
நம்மில் பல பேர் இன்னும் தேவையற்ற விழாக்களை கொண்டாடுகிறோம்.

அதில் ஒன்று தான் - இந்த 'மஞ்சள் நீராட்டு விழா'. ஐயோ இன்னுமா இந்த உலகம் இப்படிலாம் பண்ணுதுனு நினைக்கும்போது....
Madhavan

"நான் இப்ப என்ன செய்ய?"

இது கலாச்சாரம்னு நிறைய பேர் நினைக்குறாங்க. இல்லேனு சொன்னா, அடி இடி மாதிரி வருது!! இது போன்ற வழக்கங்கள் அந்த காலம் பழக்கம். அதை இப்ப வரைக்கும் தொடர தேவையில்ல. போன வாரம், இப்படிப்பட்ட ஒரு விழாவுக்கு போக நேர்ந்தது. எனக்கு இதில் சுத்தமாக ஆர்வமில்லை. கோபம் தான் வந்தது. சென்ற எனக்கு ரொம்ப முக்கியமான பொறுப்பு வேற- பொண்ணு தோளில் வைக்கப்பட்டிருக்கும் 'அடையை' கீழே விழாமல் பாத்துக்கனும்!! what a great insult!!! பாவம் அந்த சின்ன புள்ள, என்ன நடக்குது-னுகூட புரியல!:((

என்னமோ போங்க!! நம்ம பல விஷயங்களில் முன்னேறியுள்ளோம் என்று சொன்னாலும் இது போன்ற நேரங்களில் அறிவில்லாதவர்களாய் நடந்து கொள்கிறோம் என நினைக்கும்போது...

"நான் இப்ப என்ன செய்ய?"

*************************************************************************

இந்த விஷ்வரூபம் காய்ச்சல் குறையவில்லை. வீட்டுக்கு வருபவர்களுக்கு கிடைத்துள்ளது மிக பெரிய 'நீயா நானா' தலைப்பு- விஷ்வரூபம் படம் நல்லா இருக்கா இல்லையா என்பது தான்.  கருத்தை சொன்னால், அது எப்படி நீ அப்படி சொல்ல முடியும்! இது ஒரு காவியம், செதுக்கிய ஓவியம். உலக சினிமா அப்படி இப்படினு சொல்றாங்க!!

அடுத்து கடல் படம் பற்றி பேச்சு வந்துச்சு.
 என் reaction.... "YES, YES, THANK YOU!"



கடைசில என்னையும் அரசியல்வாதி ஆகிட்டாங்களே, "நான் இப்ப என்ன செய்ய?"
******************************************************************************

அடுத்த வார சனிக்கிழமைல 'மீட்டிங்' இருக்குதாம்!! சனிக்கிழமையையே அசிங்கப்படுத்துறாங்களே,

"நான் இப்ப என்ன செய்ய?"

******************************************************************************