Showing posts with label தொடர்கதை. Show all posts
Showing posts with label தொடர்கதை. Show all posts

Dec 26, 2017

திரி- 2 (தொடர்கதை)


Coffee-vending machineல், இருக்கும் QR code ஒன்றை ஸ்கேன் செய்தான் சீலன் தனது கைபேசியிலுள்ள application மூலம். machineல் உள்ளே இருந்த காபி குவளைகள் பளிச்சென்று மின்னியது. தனக்கு ஒரு latte குவளையும், காபி மிஷினில் சாய்ந்தபடி நின்று கொண்டிருந்த யுவிக்கு ஒரு cappacino குவளையும் ஆர்டர் செய்ய பொத்தான்களை அழுத்த அவனது விரல்கள் முற்பட்டபோது, சீலனின் கையை தடுத்து, யுவி, “எனக்கு வேணாம். I will just share your latte.” என்றான்.

‘confirm’ ஆர்டர் பொத்தானை அழுத்துவதற்கு முன், யுவி, 25% sugar என்பதை அழுத்திவிட்டு சீலன் முகத்தைப் பார்த்து, “you’re getting old, pappu”
யுவி சொன்ன உண்மையை ஆமோதித்தவாறு, புன்னகையித்தான் ‘பப்பு’.

சூடான காபியை நுகர்ந்தபடியே சீலன், “ammamma embarrasses me all the time. எத்தன தடவ சொன்னாலும் கேட்க மாட்டேங்கறாங்க.” காபி குவளையை உதட்டில் வைத்து கொஞ்சம் குடித்துவிட்டு, யுவியிடம் குவளையை நீட்டினான். 

“இப்ப யாரு?”

“ஏதோ அபியாம்.”


குவளையை வாங்கி கொண்ட யுவி, சீலனின் மீசையில் லேசாய் படர்ந்த காபி சொட்டுக்களை துடைத்தவாறு, “அம்மம்மாகிட்ட சொல்லு, அபி வேணாம். யுவி போதும்னு.”

சின்னதாய் புன்னகையுடன் சீலன், “I wish it was that easy.”


கைபேசியில் குறுந்தகவலுக்கு பதில் அளித்தபடி காபி மிஷினை நோக்கி நடந்தவந்த ஜெகன், சீலனைப் பார்த்து ஆச்சிரியமாய், “ஹேய் சீலன், எப்படி இருக்கீங்க?”

“ஐ எம் குட். நீங்க ஜெகன்?”

“always fantastic.”

பக்கத்திலிருந்த யுவியை ஜெகனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான் சீலன். ஜெகனும் ஒரு காபியை வாங்கி கொண்டான். காற்பந்து, புது வருடம், கார் விலை ஆகியவற்றை பேசி கொண்டிருந்தனர் மூவரும். சீலன் முகத்தைக் கவனித்த ஜெகன்,

“you look dull. என்ன? பாட்டி… torture தாங்க முடியலயா?”

“பாட்டி சொன்னாங்களா?”

“சீலன், you are old enough to take your own decisions. உங்க மனசுக்கு என்ன தோணுதோ அத செய்ங்க, ரொம்பலாம் யோசிக்க கூடாது..” என்று சொல்லிவிட்டு ஜெகன் வாய்விட்டு சிரித்தான்.

சிரித்து கொண்டே ஜெகன், “hey why not both of you come join me tonight at dollar room. செம்மயா இருக்கும் பார்ட்டி இன்னிக்கு.” என்று சொல்லிவிட்டு கண் சிமிட்டி, “special party. You know what I mean, right?” 

பதில் புன்னகை வீசிய சீலன் வேண்டாம் என்று நாசுக்காய் சொன்னான்.

மறுபடியும் ‘mark boi’யிடமிருந்து அலைபேசி வர, கிளம்பினான் ஜெகன்.

காபியை உறுஞ்சி குடித்தான் யுவி. மழை வர அறிகுறிகளை காட்டிய வானம் கொஞ்சமாய் இருண்டது. சுற்றியிருந்த மரங்களிலிருந்த இலைகள் வீணையை மீட்டிய விரல்கள்போல் விளையாடி அசைய, குளிர் காற்று சீலனின் முகத்தில் வீச, 10-வினாடி நிம்மதியையும் அதே நேரத்தில் ஒருவித சஞ்சலத்தையும் தந்தது.
பெருமூச்சு விட்ட சீலன், “எல்லாத்தையும் சொல்லிடலாம் ஆனா….”

காபி குவளையை சீலனிடம் நீட்டிய யுவி, “அப்பரம் என்ன?”

“it’s going to hurt everyone.”

“இப்ப மட்டும் என்ன?”

முழித்தான் சீலன்.

“மத்தவங்க கஷ்டப்பட கூடாதுனு நீ உனையே கஷ்டப்படுத்திகிட்டு இருக்க, பப்பு. What is the worse that can happen?”

“இல்ல விடு யுவி. இத பத்தி நிறைய பேசியாச்சு. அப்பரம் கடைசில சண்டை தான் வரும்.”
“you are not true to yourself. And I am equally confused. என் நிலமல யோசிச்சு பாரு. What am I suppose to do?”

“எவ்வளவு வருஷம் ஆனாலும் வேட் பண்ணலாம்னு சொன்ன?”

மௌனம் பேசியது. மௌனம் மட்டுமே பேசியது. குடித்து முடித்துவிட்ட காபி குவளையை தூக்கி ஏறிந்தான் சீலன். வலது கட்டவிரலால் தனது இடது கைரேகை ஒவ்வொன்றாய் வருடி கொண்டிருந்தான் சீலன்.

“யுவி, நான் வெளியே வேட் பண்றேன். அம்மம்மா வந்தாங்கனா, கார்கிட்ட அழைச்சுட்டு வந்துரு.”

“why are you running away from the problem?”

யுவி அவ்வாறு கூறியதும், மனதில் எரிமலை வெடித்ததுபோல் இருந்தது. புருவங்களை சுருக்கி, சீலன் ஒரு குழப்ப பார்வை விட்டான். முறைத்தான். அவ்விடத்தைவிட்டு வேகமாய் நடந்தான். 


கோயிலிருந்து 300மீட்டர் தூரத்திலுள்ள ஒரு பஸ் டாப். காலியான இருக்கை இரண்டு இருந்தன. அதில் ஒன்றில் அமர்ந்து, தன் கோபத்தை தணிக்க கண்களை இறுக்க மூடி கொண்டு வாய் வழியாய் சுவாசத்தை உள் இழுத்தான்.

பின்தொடர்ந்த யுவி, “see, this is you. Always running away from the problem.”

 வேகமாய் நடந்து வந்த காரணத்தால் அவனுக்கு நெஞ்சு படபடக்க ஆரம்பித்தது என நினைத்து கொண்ட சீலனுக்கு உண்மையாகவே anxiety attack வந்தது. தனக்குள் என்ன நடக்கிறது என்று புரிந்தும் புரியாலும் மூச்சை இழுத்து பிடித்தான்.

யுவி, “கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடி, நம்ம Canada போய் settle ஆகலாம்னு சொன்னே. அப்பரம்… வேணாம்ணு சொன்னேன்.” பேருந்து நிறத்து இடத்தில் கத்தினான். அவ்வழியே சென்ற ஒரு சீன கிழவி அவர்களை ஒரு மாதிரியாய் பார்த்தார்.

யோகா வகுப்பில் சொல்லி கொடுத்ததை அறைகுறையாக செய்ய தொடங்கினான் சீலன். யுவி கத்துவது கொஞ்சம் கேட்டது. மண்டையில் ஏதோ அலைகள் கல்லை இடிப்பதுபோல் உணர்ந்தான். இந்த மாதிரி நிறைய முறை anxiety attack வந்திருக்கிறது. அப்போதும் இதே மாதிரி ஏதேதோ செய்து மனதை ஒரு நிலைப்படுத்த முயற்சி செய்வான்.

“அப்பர்ம்…. இல்ல இங்க இருப்போம்….35 வயசு ஆன பிறகு ஒரு வீடு வாங்கலாம். ஒன்னா இருக்கலாம்னு சொன்னேன். இப்போ… back to square one.”

கண்களை திறந்தான். இருண்ட வானம் அப்படியே இருந்தது. தலை இன்னும் சுற்றி கொண்டிருந்தது. லேசாக வேர்வை. கட்டைவிரல் நடுங்கியது. தண்ணீர் குடித்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது. யுவி பையில் ஏதேனும் இருக்குமா என யுவியிடம், “யுவி, do you have water?”

யுவி காதில் எதுவும் விழவில்லை.

“சீலன், உனக்கு உங்க அப்பா அம்மா அம்மம்மா எல்லாரும் முக்கியம். But not me….”

இரு கரங்களாலும் தலையை பிடித்தவாறு கீழே குனிந்தான். வாந்தி வருவதுபோல் இருந்தாலும் சமாளித்து கொண்டான். மறுபடியும் யுவியிடம்,
“ யுவி, தண்ணி இருக்கா?”

யுவி எந்த பதிலும் சொல்லவில்லை.

யுவியை விட்டு விட்டு மெதுவாய் கார் நிறுத்திய இடத்திற்கு நடந்தான் சீலன். வாகன பின்புறத்தை பிடித்தவாறு நின்றுகொண்டிருந்தார் பாட்டி. பாட்டியை கண்டவுடன் இன்னும் மின்னல்வேகத்தில் கால் அடி வைத்தான் அவன் மயக்கதில் துடித்தாலும். கார் கதவை திறந்தவாறு, “அம்மம்மா, கோயிலுக்குள்ளயே வேட் பண்ண வேண்டியது தானே?”

“எங்க யுவி?”

“அவன் mrtல போறேனு சொல்லிட்டான்.”

“ஏண்டா கொஞ்சம் வேட் பண்ணி நமக்குகூட வந்துருக்கலாம்ல.”

கார் ஏசியை போட்டுவிட்டு, தண்ணீர் பாட்டிலிருந்து தண்ணீரை மடமடவென்று குடித்து முடித்தான். கைபேசியை chargeல் ஏற்றிவிட்டு, reverse gearயை மாற்றினான். வாகனம் பின்னாடி நகர, பாட்டி, “சீலா, அபி அம்மாகிட்ட பேசினே. கிறிஸ்துமஸ் லீவு அன்னிக்கு அபி free தான். நீ போய் பாத்து பேசுறீயா? நல்ல பொண்ணுடா.”

கைபேசி குறுந்தகவல் ஒலி எழுப்பியது. ஸ்கீரினை unlock செய்தபோது, ஒரு whatsapp செய்தி தெரிந்தது. யுவியிடமிருந்து,

“I don’t think this is working out. Again. Bye.”

தகவலை படித்துவிட்டு கைபேசியை chargeல் வைத்துவிட்டு, reverse gearலிருந்து ‘Drive’ gearக்கு மாற்றிவிட்டு, காரை வேகமாய் செலுத்தினான்.


*முற்றும்*

Dec 21, 2017

திரி -1 (தொடர்கதை)

வெள்ளை நிற சுவருக்கு பின்னால் செருப்பு வைக்கும் இடத்தில் மழைநீர் தேங்கி கிடந்ததது. அதனால் கோயில் வாசலிலே பல செருப்புகள் குவிந்து கிடந்தன. அங்கு ஒரு அறிவிப்பு பலகை 'இங்கே காலணிகளை வைக்க கூடாது'. அப்பலகையில் இன்னும் சில பிராத்தனை குறிப்புகள் இருந்தன- கோயிலில் யாரும் காலில் விழ கூடாது. கைபேசி சத்தம் கூடாது. காலணிகளை அணிந்து உள்ளே நுழைய கூடாது.

வியாழக்கிழமை காலை நேரம். கூட்டம் அவ்வளவாக இல்லை. ஆரஞ்சு வேட்டி யூனிவோமில் மூவர் அடங்கிய துப்பரவு குழு, இரவு முழுதும் எரிந்து தீர்ந்துபோன நெய் விளக்குகளையும் எள்ளு விளக்குகளையும் அகற்றி குப்பை தொட்டியில் போட்டு கொண்டிருந்தனர். கோயிலுக்கு பின்னால் சிறப்பு பூஜைக்காக வைக்கபட்டிருந்த மணல் சாக்குகள், உதிர்ந்து கிடந்த ரோஜா பூக்கள், மஞ்சள் கொத்துகள், பால் பாக்கெட் அட்டைகள், சாம்பிராணி டப்பா, பல வண்ண சேலைகள் அனைத்தையும் வேக வேகமாய் அப்புறப்படுத்தினர்.

கோயிலில் இருக்கும் சாமி சிலைகளைவிட அதிகமான எண்ணிக்கையில் கிடந்த சிவப்பு நிற நாற்காலிகள் கோயில் நுழைவு கதவுக்கு பின்னால் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதிலிருந்து 4 நாற்காலிகளை எடுத்து, விநாயகர் சிலைக்கு முன்னால் போட்டு உட்கார்ந்தனர் சில பாட்டிமார்கள். குருபெயர்ச்சிக்கு கொடுத்த முக்கியத்துவத்தை உடற்பயிற்சிக்கு கொடுத்திருந்தால், பளிங்கு தரையில் அமர்ந்திருக்கலாம்.

சாமி சிலை ஓரமாய் நின்று பேசிகொண்டிருந்தனர் பூசாரி இருவர். அவர்கள் கால்களில் விழுந்து வணங்கினர் ஒரு பெண்மணியும் அவரின் பதின்ம வயது மகளும் . விழுந்து எழுந்த பெண்மணி அர்ச்சனை சீட்டை பூசாரியிடம் நீட்டினார். பூசாரி, "ஹா...jasvin kaur...welcome welcome. good morning." அவரும் புன்னகையித்தபடி அர்ச்சனை சீட்டை வாங்கி மடித்து வைத்து கொண்டார்.
கோயிலை சுற்றி வந்த சீலன், பாட்டி கூட்டத்துக்கு அருகே சென்றான். அவன் பாட்டியிடம்,

அம்மம்மா, உங்களுக்கு வேற எதாச்சும் வேணுமா? பொங்கல் வச்சு இருக்காங்கனு நினைக்குறேன். நான் எடுத்துட்டு வரவா?"
பாட்டி ஆச்சிரியமாக, “அதுக்குள்ள சாமி கும்ட்டீயா?”

“எல்லாரும் நல்லா இருக்கனும். 3 words. இத சொல்ல எவ்வளவு நேரம் ஆகும்?”

“சீக்கிரம் கல்யாணம் ஆகனும்னு வேண்டிக்கோ,” என்று கூறிய பாட்டி ஒரு புகைப்படத்தை சீலன் கையில் திணித்தார்.

"சீலா, இந்த photo பாரு. அழகா இருக்காளே? பெர் அபி. 25 வயசு தான். உனக்கு ஒகே வா?"

"ப்ச்…..அம்மம்மா, don't do this to me." சற்று வெறுப்படைந்த சீலன் அப்புகைப்படத்தை பாட்டியிடமே திரும்பி கொடுத்தான். கூட்டம் நடுவே நாற்காலியில் உட்கார்ந்து இருந்த பாட்டியின் தோழி, சீலனின் கையை பிடித்து கொண்டார்.

சீலனின் கையை விடாமல், அப்பாட்டி, "உனக்கு வயசு 34 ஆச்சு. your ammama wants to see you get married. you don't do this to her anymore." என்று கண்டிப்புடன் கூற, இன்னொரு சிறுவயது பெண் புகைப்படத்தை எடுத்து கூட்டத்தில் உள்ள அனைவரும் தெரியுமாறு நீட்டினார். பாட்டிகள் அனைவரும், தங்களது உறவினர்களுக்குள் சந்தோஷமாக இருக்கும் கல்யாணம் ஆகாதவரிகளின் photo அல்லது ஜாதக விபரங்களை சேகரித்து ஒருத்தருக்கு ஒருத்தர் இப்படி பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தனர். தீவிரவாத ஒருங்கிணைப்புபோல் செயல்படும் இவர்களின் குறிக்கோள், அவர்கள் சுடுகாட்டை சுத்தி பார்ப்பதற்குள், யாருக்காவது சுயம்வரத்தை  செய்து வைத்துவிட வேண்டும் என்பதே.

தனது பாட்டியை கோயிலுக்கு அழைத்து வரவேண்டிய சூழல் ஏற்படும்போதெல்லாம் சீலனுக்கு இதே கதி தான்.

"ammama, I am going to get coffee." என்று சொல்லிவிட்டு தற்காலிகமாக தப்பித்து சென்றான் coffee vending machine அருகே.

அர்ச்சனை சீட்டு ஒன்றை வாங்கி கொண்டு கோயிலுக்குள் நுழைந்தார் வெள்ள வேட்டி பச்சை சட்டையுடன் ஜெகன்.

"வணக்கம் ஜெகன் சார். happy birthday." என்றார் பூசாரி.
வலது கையை மட்டும் சற்று தூக்கி  லேசாக அசைத்துவிட்டு ஜெகன் இரு கைகளையும் கூப்பி கண்களை மூடி சாமி கும்பிட, பூசாரி அர்ச்சனை செய்ய ஆரம்பித்தார். பக்தர்களுக்கு தீர்த்தமும் திருனீரும் கொடுக்கப்பட்டன. பூசாரி, ஜெகன் உள்ளங்கையில் தீர்த்தத்தை ஊற்றினார்.

 அப்போது ஜெகன்,
"வாசல இத்தன செருப்பு கிடக்கு. அப்பரம் எதுக்கு board வச்சுருக்கோம். get the workers to clear them." என்று சற்று கண்டிப்புடன்  ஜெகன் கூற, அதற்கு,

பூசாரி, "அப்படியா? த்தோ எடுக்க சொல்லிடுறேன்." என்றவர் விறுவிறு என்று ஓடி சென்றார் சுத்தம் செய்யும் குழுவிடம் சொல்ல

கோயில் வளாகத்தை சுற்றி வந்த ஜெகன் சிறுகுழந்தையுடன் வந்த பக்தன் ஒருவரிடம், "bro, கோயிலுக்குள்ள shoe போட்டு வரகூடாது. உங்க பொண்ணு காலுல இருக்குற shoe…... அடுத்த தடவ வரும்போது…கொஞ்சம் பாத்துக்குங்க bro"

அப்பக்தன் ஆச்சிரியம் அடைய, "what!!"

மீண்டும் அப்பக்தன்,"குழந்த, bro. ஒரு வயசு தான் ஆகுது. " தூக்கி இடுப்பில் வைத்திருந்த குழந்தையை காட்டி பதில் பேசினான்.

"bro, குழந்தையா இருந்தாலும் நம்ம வீட்டுல இருக்குற சாமி ரூம்க்கு செருப்பு போட்டு போக விடவோமா? அந்த மாதிரி தான் இதுவும்….”

"What nonsense is this? I am going to complain...."

ஜெகன், "sure sir. போய் சொல்லுங்க," என்று சொல்லிவிட்டு புருவங்களை உயர்த்தி, நமட்டு சிரிப்பு சிரித்தான்.

அதற்குள் அங்க வந்த அப்பக்தனின் மனைவி, " just remove the shoes. don't start a fight at the temple?" குழந்தையின் காலணிகளை அவிழ்த்து பையில் போட்டார் மனைவி.

பாட்டிகள் கூட்டம் இன்னும் கலையாமல் மும்முரமாக பேசி கொண்டிருக்க,
ஜெகன் அவ்வழியே சென்றான்.

"hello young ladies. how is everyone today?"  என்றவன் அமர்ந்திருந்த சீலனின் பாட்டியை கட்டி பிடித்தான். எழ முடியாமல் உட்கார்ந்தபடியே சீலனின் பாட்டியும் அவனை கட்டி தழுவினார். மற்ற பாட்டிகளும் அவனுக்கு கை கொடுத்து வணக்கங்களை கூறினர்.

சீலனின் பாட்டி, "என்ன வியாழக்கிழம காலையிலே கோயில் பக்கம்?"
"nothing much, aunty. it's my birthday today and...." என்று முடிப்பதற்கு அனைத்து பாட்டிகளும் அவனது கைகளை குலுக்கி வாழ்த்து சொல்ல துடித்தனர்.

சீலனின் பாட்டி, “அப்பரம் என்ன celebration இன்னிக்கு? நிஷா எங்க?”

" அவங்க Melbourne போய் இருக்காங்க work விஷயமா."

பாட்டி கூட்டத்திலிருந்து ஒருவர், "ஜெகன், உனக்கு மிஸ்டர் அருண் ராஜ் தெரியுமா?"
அவனும் தலையையாட்டி, “ermm…. He has a daughter right? you need her info. Am I right?

வாய் பிளந்து குஷியாக சிரித்த பாட்டி, “இதுக்கு தான் ஜெகன் வேணும்கிறது. கப்புனு புடிச்சுகிட்டான் பாருங்க!” மற்றவர்களிடம் அவன் புகழ் பாடினார்.
அதற்கு ஜெகன் அப்பாட்டியின் வலது தோள்பட்டையோடு வாரி அணைத்தபடி, "anything for you aunty!”

 ஜெகனின் கன்னங்களை தடவி, அவனது கையை பிடித்து கொண்டு நன்றி கூறினார் அப்பாட்டி. ஜெகனின் கைபேசி அலறியது. குறுந்தகவல் வந்த காரணத்தால், அவன், “ok ladies. See you soon.” என்றவன் அவ்விடத்தைவிட்டு விலகினான்.

இரண்டு whatsapp செய்திகள் வந்தன.
From Darling Wife:
Baby, happy birthday! Love you…Muahhh. just reached Melbourne. Going to the hotel now. Will call you later. Missing you already baby.

From Mark Boi:
Boss, Tonight at Dollar Room.
Thai girl. 3k for 2 hours. High Demand. Reply asap.

முதல் குறுந்தகவலுக்கு ‘love you’ என்றும்
இரண்டாவது குறுந்தகவலுக்கு ‘love it’ என்றும் பதில் அனுப்பிவிட்டு coffee-vending machine பக்கம் நடந்தான்.


Jul 11, 2012

daddy mummy வீட்டில் இல்ல(series 3)- பகுதி 9


பகுதி 8

வீட்டை பார்த்ததும் நால்வருக்கும் ஒன்றுமே புரியவில்லை. வீடே திருவிழா போல் இருந்தது. இரண்டு லாரி சொந்தக்காரர்கள் வீட்டிற்குள் இருந்தனர். வெளியே வந்த விஜியின் சித்தி,

"விஜி, வந்துட்டீயா? குட் குட். சரி get ready. அக்கா உனக்கு ஒரு சூப்பர் ரெட் சாரி எடுத்து வச்சு இருக்காங்க! சீக்கிரம் கட்டிக்கோ!" என்று சொல்லிவிட்டு, நின்று கொண்டிருந்த van driverரிடம் பணம் கொடுத்தார். உள்ளே நுழைந்த சித்தி, விஜியின் தோழிகளை பார்த்து,

"girls, நீங்களும் வாங்க!"

கலா, "எங்க?"

சித்தி, "பொண்ணு பார்க்குற function நடக்க போகுது." என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.

*******************************************************
விஜி அன்று சொன்ன plan எல்லாருக்கும் ஞாபகம் வந்தது.

விஜி, "shhhhhhhhhhhh....." அனைவரையும் அமைதியாக இருக்க சொல்லி, தனது  ஐடியாவை கொட்டினாள்.

சுதா, "என்ன ப்ளான்?"

விஜி, "நம்ம எதுக்கு probability படிக்கிறோம்?"

கலா, "அது தெரிஞ்சு இருந்தா எப்பவோ உருப்புட்டு இருப்பேனே?"

விஜி, "what is the probability of him saying yes?"

மற்றவர்கள் முழித்தனர். சசி பதில் அளித்தாள், "1"

விஜி, "yes."

மறுபடியும் அதே கேள்வியுடன் விஜி, "what is the probability of him saying no?"

சுதா, "அதே 1"

விஜி, "yes. so maths படி பார்க்க போனால், நம்ம ஏன் பயப்படனும்? அவனே வேணாம்னு சொல்றதுக்கு chance நிறைய இருக்கு. and என் வீட்டுல ஜாதகம் அது இதுனு நிறைய பார்ப்பாங்க. so ஒவ்வொரு proposalலா பாத்து ஓகே சொல்றதுக்குள்ள...விடிஞ்சிடும்..."

சசி, "அப்பரம்?"

கலா, "விடிஞ்சா...பல்லு விளக்கி மூஞ்சி கழுவு."

சசி, "அட ச்சே!"


விஜி, "and அதே சமயம்....அவனுக்கு பிடிக்காத மாதிரி நடந்துக்கனும். ஆனா நல்ல புள்ள மாதிரி இருக்கனும்"

கலா, "கிட்டதட்ட நம்ம சசி மாதிரி சொல்லு."

சசி கலாவின் காலை மிதித்தாள். 

************************************************************************************************

வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த கலா,

"இப்ப என்ன பண்ண போற? அடுத்த வாரம் அவன வெளியே கூப்பிட்டு பேசலாம்னு இருந்த. இப்ப....உன் வீட்டுலேயே.... this is going very dangerous." 

சுதா, "எனக்கு தலையே சுத்து-து."

சசி, "நீ maths. probability. ok சொல்ல மாட்டேன். அப்படி இப்படினு சொன்ன? ஆனால், போற போக்க பாத்தால், இன்னிக்கே நிச்சயதார்த்தம் முடிஞ்சு நாளைக்கே கல்யாணம் ஆயிடும் போல இருக்கே!"


கலா, "அப்ப உனக்கு நாளைக்கு first nightஆ டி?" என்று அப்பாவியாய் முகத்தை வைத்து கொண்டு கேட்க, சசியும் சுதாவும் சிரித்தனர்.

விஜிக்கு சிரிப்பும் கோபமும் கலந்து வந்தது. 

கலா, "ஒகே கூல் கூல்.... விஜி நீ போய் ரெடியாகு." விஜியின் சித்தி வந்து உடனே அவளை அழைத்து கொண்டு சென்றாள். 

சசி, "நான் இப்படியே ஓடி போயிடுறேன். என்னால இந்த கொடுமையலாம் பாத்துகிட்டு இருக்க முடியாது!" என்றாள்.

சுதா, "அட பாவி, நீயெல்லாம் ஒரு friendaa?"

கலா, "என்ன நடக்குமோ அது கண்டிப்பா நடக்கும்?", சந்திரமுகி படத்தில் 'ரா'ரா' பாட்டுக்கு முன்னாடி வரும் ரஜினி, பிரபுவுக்கு ஆறுதல் சொல்வதுபோல் கலா சோகத்தை கொட்டினாள்.

வீடு முழுவதும் சொந்தக்காரர்கள் 'நான் ஈ' போல் பறந்துகொண்டிருந்தனர் ஒவ்வொருவரும் தனது வேலையை பார்த்தபடி. சினிமாவில் வருவதுபோல், ஒரு சின்ன குழந்தை ஓடி வந்து,

"மாப்பிள்ள வந்துட்டாரு!" என்று கத்தியபடி வீட்டை நோக்கி ஓடியது. 'தெய்வீக' முகத்துடன் மாப்பிள்ளை வந்து இறங்கினார். விஜியின் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக கிணற்றில் விழுவதை தடுக்க முடியாமல் கலா, சசி, சுதா நின்று கொண்டிருந்தனர். விஜியின் அறைக்குள் ஓடினர்.  கலா உடனே அந்த அறைக்குள் இருந்த கழிவறைக்கு சென்று அதனை நோட்டமிட்டாள்.

விஜி, "என்ன டி பண்ணுற?"

கலா, "நீ படமெல்லாம் பார்த்தது இல்ல? toilet வழியா பொண்ணு தப்பிச்சு போறத?"

விஜி, "அடி பாவி!"

கலா, "இத தவிர வேற வழி தெரியுல!"

சசி, "லூசு மாதிரி பண்ணாத."

கலா, "விஜி லூசாகாம இருக்க, நான் இப்ப லூசுத்தனம் பண்ணியே ஆகனும்!" என்றதும் சுதா சிரித்தாள்.

விஜி, "ஐயோ கடவுளே!! stop confusing me. how's he?"

கலா, "அவர் ஆயிரத்தில் ஒருவராகவே இருக்கட்டும். இது நமக்கு வேண்டாம் டி. வேணாம் மச்சான் வேணாம்...." என்று பாடலை பாடினாள். அப்போது விஜியின் சித்தி அறைக்குள் நுழைந்து,

"வா விஜி. உன்ன கூப்பிடுறாங்க." 
விஜிக்கு போகவும் மனமில்லை. போகாமல் வேறு எப்படி தப்பிக்கலாம் என்றும் தெரியவில்லை. 

சசி, "வா நாமும் போவோம்." சுதா சசியை தடுத்தாள்.

கலா, "சசி, உனக்கு மனசுல ரோஜா படம் மதுபாலானு நினைப்பா??"

மூவரும் மாடியிலிருந்து எட்டி பார்க்க, விஜி கீழே சென்றாள். 

சசி, "காபி கொண்டு போகல நம்ம விஜி???"

சுதா, "ஏய் நீ என்ன இது படம்னு நினைச்சீயா?"

சசி, "படம் இல்லையா?"

கலா, "இல்ல, பாடம். சும்மா இரு! என்ன நடக்குதுனு மட்டும் வேடிக்கை பாரு."

சசி, "பாட்டு பாட சொல்லுவாங்களா?"

கலா, "இல்ல, கூட்டு வைக்க சொல்லுவாங்க!" சிரித்தாள் சுதா.

மாப்பிள்ளைக்கு சூர்யா என்று நினைப்பு. முதல் மூன்று பட்டன்களை போடவில்லை. அதை பார்த்த கலா, 

"ஓ...சட்டை மேல எவ்வளவோ பட்டன்ஸ்...." என வடிவேலு பாணியில் சொல்லி கிண்டல் அடித்தாள். கூட்ட நெரிசல் சத்தத்திலும், இவர்களின் சிரிப்பு சத்தம் கேட்க, விஜி மேலே ஒரு பார்வை வீசி முறைத்தாள்.

விஜியின் பாட்டி, "எல்லாருக்கும் சம்மதம் தானே?" என கேட்க, விஜி மறுபடியும் மேலே பார்த்தாள். மூவரும் அதற்குள் மேலே பார்த்து 'கடவுள் விட்ட வழி' என்று காட்டினர்.

மாப்பிள்ளையின் மாமா, "ரெண்டு பேரும்...கொஞ்சம் தனியா பேசிக்க சொல்லுங்க. இந்த காலத்து பிள்ளைங்களுக்கு நம்ம freedom கொடுக்கனும் பாருங்க...." என்று சொல்லிவிட்டு பெரிய சிரிப்பு சிரித்தார். வாழ்க்கையில் இது தான் பெரிய காமெடி என்பதுபோல் அக்கூட்டமே சிரித்தது.

சுதா, "இது தான் அவங்க ஊர்ல freedom ஆ?"

கலா, "அப்பரம் காந்தி தாத்தா கஷ்டப்பட்டு வாங்கினாரே..அதுக்கு பேரு என்ன?"

சசி, "அவங்க இப்ப எங்க போய் பேசுவாங்க?"

கலா, " 97 வருஷ தமிழ் சினிமா வரலாற்றில் இந்த மாதிரி சீன் எங்க வைப்பாங்க? மொட்ட மாடில தான்"

சசி, "இது படம் இல்லனு சொன்ன?"

கலா, "வாழ்க்கை தான் சினிமா, சினிமா தான் வாழ்க்கை."

சசி, "பசி மயக்கத்துல நீ உலறுர!"

மொட்ட மாடியில், மூவரும் தூணுக்கு பின்னால் ஒளிந்திருக்க, விஜியும் மாப்பிள்ளையும் டீ கடையில் 'பன்னு' வாங்கி திண்பதுபோல் எதிர் எதிரே நின்று கொண்டிருந்தனர். 

ஒளிந்திருந்த சுதா, "இன்னிக்குள்ள பேசிடுவாங்களா?"

கலா, "ம்ம்...according to medical institute of american society.....இன்னும் 48 மணி நேரம் கழிச்சு தான் எதுவானாலும் சொல்ல முடியும்." என்று நக்கல் செய்ய, சுதாவும் சசியும் சிரித்தனர்.

விஜி, "எங்க வேலை பாக்குறீங்க?" என்றாள் தயக்கத்துடன்.

தூணுக்கு பின்னால் நின்ற கலா, "அத தெரிஞ்சு நீ என்ன பண்ண போற?" அமைதியாய் இவர்களுக்குள் மட்டும் பேசிகொண்டனர்.

மாப்பிள்ளை, " inforile software company..." புன்னகைக்க முயற்சி செய்தாலும், புன்னகை வரவில்லை. அப்போது மாப்பிள்ளையின் கைபேசி ரிங்டோன் அடித்தது, "கண்ணழகா, காலழகா...."

சுதா, "ஓ...இவுக மூனு பட ஹீரோ தனுஷ் நினைப்பா?"

கலா, " பலான படத்துல வர பக்கத்துவீட்டுக்காரன் மாதிரி இருக்கான்...இவன் ஹீரோவா?"

சசி சற்று முழித்தாள், "ஆமா..நீ எப்போ அந்த மாதிரி படத்த பாத்த?"

கலா, "அட த்தூ...போஸ்டர பாத்தேன்.."

கைபேசியில் பேசிவிட்டு மாப்பிள்ளை விஜியிடம், "எனக்கு இது first time...."

கலா, "எங்களுக்கும் மட்டும் இது 150வது episodeஆ என்ன?"

விஜி, "ம்ம்..." என்றாள் பவ்வியமாய்.

கலா, " சாட்டை எடுத்து சாத்துவாள்னு பாத்தா...சாவித்திரி மாதிரி சாஞ்சிகிட்டு இருக்கா?"

சசி, "உனக்கு எல்லாமே கிண்டல் தான். அவ இடத்துல நீ நின்னு பாரு, அப்பரம் தெரியும்?"

கலா, "என்ன தெரியும்?....பக்கத்து portionல துணி காய போடுறதா?"

சுதா, "ஐயோ ராமா... கொஞ்ச நேரம் சும்மா இருங்க ரெண்டு பேரும்!"

மாப்பிள்ளை, " கல்யாணத்துக்கு அப்பரம் நீ வேலைக்கு எல்லாம் போக தேவையில்ல..."

சுதா, "அட பாவமே, அவ இன்னும் படிச்சே முடிக்கலையே?"

கலா, "மனசளவில் அவ இன்னும் ரெண்டாவது தான் படிக்குறா மிஸ்டர் மாப்பிள்ளை" 

மாப்பிள்ளை, "அப்பரம்...நான் கீழே போய் என்ன சொல்ல?"

கலா, "மொட்ட மாடில நிறைய வத்தல் காய வைக்கலாம்னு போய் சொல்லு."

விஜி, "எனக்கு தெரியல."

மாப்பிள்ளை, "தெரியலனா...என்ன அர்த்தம்?" என்று கொஞ்சம் அதட்டினான். சற்று திடுகிட்டு போனாள் விஜி.

கலா, "நான் அடிச்ச தாங்க மாட்டே...நாலு மாசம் தூங்க மாட்டே..." என்று சத்தமில்லாமல் பாடினாள்.

சுதா, "என்னய்யா இவன்...இப்பவே மிரட்டுறான்?"

மாப்பிள்ளை விறுவிறுவென்று கீழே போனான். அவன் போனபிறகு மூவரும் விஜி அருகே சென்றனர். விஜி அழ ஆரம்பித்தாள். 

விஜி, "நான் நினைச்ச ப்ளான் படி ஒன்னுமே பண்ணல!! i hate myself! i feel so disgusted. this saree...this arrangement...all this stupid nonsense...i hate it! i hate it!" என கத்தினாள். மூவரும் அவளுக்கு ஆறுதல் சொன்னாலும் அவள் கேட்பதுபோல் இல்லை. விஜியின் சித்தி மொட்டை மாடிக்கு வந்தார். 

சித்தி, "விஜி...girls...happy news. மாப்பிள்ள ஓகே சொல்லிட்டார். கீழே எல்லாருக்கும் சந்தோஷம். so happy for you" என்று சொல்லிவிட்டு கட்டி அணைத்துவிட்டு சென்றார்.  கலா, மொட்டை மாடியிலிருந்து கீழே எட்டி பார்த்தாள்.

கலா, "இங்கேந்து குதிச்சுடு விஜி."

விஜி, "என் விருப்பத்த யாரும் கேட்க மாட்டாங்களா?" 

சுதா, "we are indian girls. we are fated."

கலா, "ஹாஹா...இப்ப ஏன் எல்லாரும் அமீர் கான் showல வர மாதிரி பேசுறீங்க? relax...கண்டிப்பா நல்லது நடக்கும்."

விஜி, "கருமாதி தான் நடக்கும்." என்றாள் எரிச்சலுடன்.

சுதா, " விஜி...அப்படிலாம் சொல்லாத."

நால்வரும் கீழே சென்றனர். 

வாழ்க்கையில் ஃபோன் மாற்றலாம். ஆனா, அந்த ஃபோனே வாழ்க்கையை மாற்றினால்....

வீட்டு ஃபோன் ரொம்ப நேரம் அலற, யாரும் கவனிக்கவில்லை அதனை. விஜியின் பாட்டி அதனை எடுத்து பேசினார்.

"ஐயோ அப்பா!!!!!!!!!!!!" என்று அலறி கொண்டு மயங்கி கீழே விழுந்துவிட்டார். எல்லாருக்கும் அதிர்ச்சி. என்ன நடந்தது என்று யாருக்கும் புரியவில்லை. விஜி ஃபோனை எடுத்து பேசிவிட்டு, அனைவரையும் பார்த்து,

"கொள்ளு தாத்தா செத்துபோயிட்டாரு!" என்று சொல்லி முடிப்பதற்குள், அனைவரும் ஒப்பாரி வைக்க ஆரம்பித்துவிட்டனர்! திருவிழா போல இருந்த வீடு,  முற்றிலும் மாறியது ஒரு நொடியில். மாப்பிள்ளை வீட்டார் உடனே கிளம்பிவிட்டனர். விஜி சோகத்தை அடக்க முடியாமல் அவளது அறைக்குள் ஓடினாள். பின்னாடியே மூவரும் சென்றனர். அறை கதவை சாத்திய மறு வினாடியே விஜி, 

"செத்தாண்டா சேகர்!" என்று சொல்லிவிட்டு வாய்விட்டு கைகொட்டி சிரித்தாள். 

சசி, "என்ன டி இப்படி சொல்ற?"

விஜி, "ஆமா டி. இனி ஒரு வருஷத்து கல்யாணம் எதுவுமே நடக்க வாய்ப்பில்ல. and இந்த மாப்பிள்ள வந்த சகுனம் இப்படி ஆச்சுனு.. இந்த proposal will be rejected!!!!!!!!!! and i am the happiest girl in the world!!" என்று படி 'ஒத்த சொல்லால' பாடலை போட்டு ஆட ஆரம்பித்தாள்.  கூடவே அனைவரும் சேர்ந்து ஆடினர். மெத்தையில் கிடந்த போர்வையை எடுத்து இடுப்பில் மடித்தவாறு, போர்வை நுனியை வாயில் கடித்தவாறு கலா தனுஷ் போலவே ஆடினாள்.

 சுதா, "இதலாம் தப்பு இல்லையா?"

ஆடி கொண்டிருந்த கலா, "ஒருத்தன் செத்தால் தான் இன்னொருத்தனுக்கு வாழ்வு" என்றுவிட்டு நாக்கை மடித்து கொண்டு ஆட்டத்தை தொடர்ந்தாள். 

*முற்றும்*

Jun 12, 2012

daddy mummy வீட்டில் இல்ல(series 3)- பகுதி 8


பகுதி 7


விஜியின் அம்மா அனுப்பிய மாப்பிள்ளை படத்தை பார்த்தனர் அனைவரும். கலா கத்தினாள் அதிர்ச்சியால். பயந்துபோய் ஓடி வந்த கலாவின் அம்மா, அறை கதவை திறந்துகொண்டு பதறிபோய் நின்றார், "என்ன கலா ஆச்சு?"

இவ்வாறு reaction கொடுப்பாள் என்று தெரியாத மற்ற மூவருக்கும் என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தனர். கலா, "ஓ...ஒன்னுமில்ல மா...சும்மா தான் கத்தினேன்." 

கலாவின் அம்மா, "அடி பாவி! நான் பயந்து போயிட்டேன். கீழே விழுந்துட்டேனு நினைச்சேன்." என்று சொல்லிகொண்டே அறையை விட்டு வெளியே சென்றார்.

கலா, "oh my godட் விஜி!! இது ஆவறத்துக்கு இல்ல!!! என்ன மச்சி, உன் வீட்டுல அநியாயம் பண்றாங்க. பார்த்த எனக்கே இப்படினா.....ஐயோ விஜி! உன்னைய நினைச்சா எனக்கு கவலையா இருக்கு! இந்த முகம் தெய்வீக முகமா??? " என மாப்பிள்ளை படத்தை பார்த்து கொதித்து எழுந்தாள். அதை கேட்டதும் விஜிக்கு இன்னும் சோகம் அதிகரிக்க, கண்கள் குளமாகின.

சசி சமாதானப்படுத்துகிறேன் என்று, " விஜி, என்னிக்கு இருந்தாலும், you wanna settle down right? so..why not? and looks வச்சு ஒருத்தர பத்தி தப்பா பேசகூடாது." என்று வெறுப்பேத்தினாள் கலாவை.  மேலும் தொடர்ந்தாள், "நம்ம யாரும் இங்க ஒன்னும் ashiwarya அழகு இல்ல. so.... ஒருத்தர இப்படிலாம் கிண்டல் பண்ணகூடாது டி."

"ashiwaryaயாவே இப்ப அழகு இல்ல..." என நகைச்சுவை பேசுவதாக சொல்லி அவள் மட்டும் சிரித்தாள். மற்ற யாருக்கும் சிரிப்பு வரவில்லை. same side கோல் போடுவதுபோல் பேசினாள் சசி.

கலா, "ஹாலோ ஹாலோ...இங்க யாரும் ஹாருக்கானையோ சல்மான் கானையோ கேட்கல. beauty is a subjective term. அதுவும் எங்களுக்கு தெரியும். விஜி விஷயமே வேற." என்று சசியை அடிக்காமல் அடித்து சொன்னாள்.

சுதா, "சரியா சொன்னே கலா. ஏய் லூசு சசி, that's not the issue here. marriage is a huge committment and விஜி வீட்டுல பண்றது ரொம்ப தப்பு. viji is still young.." சசிக்கு புரியும்படி சொன்னாள். சசி அமைதியாக இருந்தாள்.

கலா, "இந்த சித்தார்த் வந்ததுலேந்து நீ ஒரு மார்கமா தான் இருக்க. உனக்கு தனியா ஒரு treatment பார்த்தே ஆகவேண்டும். விஜி பிரச்சனை முடிஞ்சவுடனே உனக்கு தான் அடுத்த ஆபிரேஷன் 'ரெட்' பண்ணியாகனும்." சசியின் தலையில் கொட்டினாள்.

"idiot!" என்றபடி சசி, தலையணையை எடுத்து கலா மீது வீசினாள். ஒரு முடிவுக்கு வரமுடியாமல் அனைவரும் திண்டாடியபோது, திடீரென்று விஜி கண்களை துடைத்து கொண்டு,

"ஒகே. i have decided. i am going to say yes."

மற்றவர்கள் அதிர்ச்சியில் உரைந்தனர்.

விஜி, "முள்ள முள்ளால தான் எடுக்க முடியும்."

கலா, "but பல்ல பல்லால எடுக்க முடியாது!! இந்த பிரச்சனைக்கு முள்ளு strategy எல்லாம் work out ஆகாது மச்சி!"

விஜி, "shhhhhhhhhhhh....." அனைவரையும் அமைதியாக இருக்க சொல்லி, தனது  ஐடியாவை கொட்டினாள்.

***************************************************************

காலேஜ் கடைசி வகுப்பு முடிந்து அனைவரும் வகுப்பைவிட்டு வெளியேறினர்.

"நேத்திக்கு உன் வீட்டுல yes சொல்லிட்டு எங்களுக்கு sms அனுப்புற வரைக்கும் எங்களுக்கு தூக்கமே வரல...." பையை எடுத்து கொண்டபடி சுதா.

விஜி புது உற்சாகத்துடன், " கடைசில என்னையும் அரசியல்வாதி ஆகிடாங்களே!!" என சொல்ல, அனைவரும் சிரித்தனர்.

சசி, "அடுத்த step என்ன?" என்று விஜியை பார்த்து கேட்டு கொண்டே, நால்வரும் ground floorக்கு செல்லும்போது,

"இங்க தான் அந்த steps வரும். இப்படியே அந்த walkway போட்டுடலாம்" என்று ஒருத்தர் கல்லூரி முதல்வரிடம் பேசி கொண்டு இருந்தார்.

முதல்வர், "ok good. thanks mr siddarth. வேலைய சீக்கிரமா முடிங்க" என்று கூறிவிட்டு சென்றார். நால்வரும் முதல்வருக்கு 'good evening' சொன்னார்கள்.

சித்தார்த்துக்கு சசியை பார்த்தவுடன் அதிர்ச்சி. சசியும் எதிர்பார்க்கவில்லை.
சசி, அன்று நடந்ததை பற்றி பேசாமல், "hey siddarth என்ன இந்த பக்கம்?"

அவனும், "உங்க காலேஜ் building extension பத்தி பேச வந்தேன். எங்க கம்பெனி தான் இந்த contractட்ட எடுத்து இருக்கோம்."

சசி, "hey anyway, this is கலா, சுதா and விஜி." என்று அறிமுகப்படுத்தினாள். அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல் இருவரும் முழிக்க, கலா

"அப்பரம் சித்தார்த் வாழ்க்கையலாம் எப்படி போகுது?" என்றாள் கொஞ்சம் கிண்டலாய்.

"nice" ஒற்றை வார்த்தையில் பதில்.

"come let's go for some coffee..." என்று சுதா, அவனையும் அழைத்தாள்.

"இல்ல பரவாயில்ல...நீங்க போங்க. i got some work." என்று சொல்லிவிட்டு சசியை பார்த்து ஒரு சின்ன புன்னகையை வீசிவிட்டு சென்றான்.

விஜி, "ஏய் போய் பேச வேண்டியது தானே!! you guys are not in talking terms?" என்று கூறி முடிக்க, கலா

"இப்ப பாரு. சசிக்கு ஒரு ஃபோன் call வரும். carparkகிட்ட வர சொல்வான்..ஐ மின் சொல்வாரு அவரு!" என்று  காலால் கோலம் போட்டு நக்கல் செய்தாள்.

*********************************************************

சசிக்காக காத்திருந்தான் சித்தார்த். அவளை பார்த்ததும், அவனுக்கு கொஞ்சம் சந்தோஷம். அவள் அவனை நோக்கி நடந்து வந்தாள்.

"எப்படி இருக்க?" என்றான்.

"நான் எத்தன தடவ உனக்கு ஃபோன் பண்றது?" என்றாள் சசி.

"சாரி...ஏதோ கோபத்துல..."

சசி எதுவும் பேசாமல் கையை கட்டி கொண்டு கார்பார்க்கில் வேறு யாரும் இருக்கிறார்களா என்று பார்த்து கொண்டிருந்தாள்.

"i love you!! no மட்டும் சொல்லிடாத. என்னால தாங்க முடியாது." என்ற கெஞ்சலை கேட்டு சிரிக்க ஆரம்பித்தாள் சசி. சசி அன்று என்ன சொல்ல வந்தாள் என்பதை விலாவரியாக சொல்லி முடித்தாள். கேட்டபிறகு, அவனும் சிரித்தான்,

"ஓ மை காட். இத தான் சொல்ல வந்தீயா? oh how stupid I am..."

சசி, "yes you are!"

சித்தார்த் அவள் அருகே நகர்ந்து சென்று அவள் கையை பிடிக்க முயன்றபோது,

சசி, "ஏய் என்ன பண்ணுற? i don't like all this." என்று விலகி சென்றாள்.

"hey sorry sorry. cool cool...."அவனும் சற்று பயந்துபோய் தள்ளி சென்றான்.

சசி, "friends வேட் பண்ணுறாங்க..."

சித்தார்த், "yes yes sure. carry on. thanks for coming. விஜிக்கு ஏதாச்சும் உதவி வேணும்னா சொல்லு. சேர்ந்து help பண்ணுவோம்." புன்னகையித்தான். சசி நடந்து போனாள். பின்னாடியிலிருந்து ஒரு முறை சித்தார்த், "சசி ஐ லவ் யூ!" என கத்தினான். அவள் தனது வெட்கத்தை மறைத்தாள், மூக்கு கண்ணாடியை சரிசெய்வது போல்.

*****************************************************

காத்திருந்த கலா, "என்ன சசி, முடி கலைஞ்சு இருக்கு. உதடு வீங்கி இருக்கு...என்ன ஒரே ஜல்சாவா?"

சசி, "காலேஜ் compoundல் கன்னி பெண் கொலை-னு நாளைக்கு நியூஸ்ல வரும் பரவாயில்லையா?"

இவ்வாறு பேசி கொண்டே நால்வரும் தெருவில் நடந்து போய் கொண்டிருந்தனர். விஜியின் தெருவை அடைந்ததும், அத்தெருவில் விளையாடி கொண்டிருந்த ஒரு சின்ன பையன்

"என்ன அக்கா? இவ்வளவு lateஆ போறீங்க?" என்றான். அவன் சொன்ன பிறகு நால்வரும் வேகமாய் நடந்து விஜியின் வீட்டை அடைந்தனர்.

*தொடரும்*