விஷ்ணு சமையல் அறையிலிருந்து தான் சமைத்த உணவுகளை ஹாலில் இருக்கும் மேசையில் வைத்தான். மதியம் 2 ஆகியது. உடல் நலமில்லாத அமுதா அப்போது தான் எழுந்து வந்தாள். ஹாலில் விஷ்ணுவை பார்த்தவுடன்,
"ஹாலோ மிஸ்ட்டர்? யாரு நீ?" என்றபடி சோபாவில் மெல்ல உட்கார்ந்தாள்.
புன்னகையித்தபடி விஷ்ணு, " தலவலி போச்சா? " என்றான்.
"தலவலினு யாரு சொன்னா?" என்றாள் அமுதா.
"இல்ல மா...உனக்கு அடிக்கடி தலவலிக்குமே! உடம்பு சரியிலேனு சொன்னீயே...அதான்...." என இழுத்தான்.
"anyway, you have not answered my question. யாரு நீ-னு கேட்டேன்?" என கூறிவிட்டு அமுதா செய்தித்தாளை புரட்டினாள். மேசையை ஒரு முறை துடைத்துவிட்டு, சோபாவில் அவள் அருகே உட்கார்ந்தான் விஷ்ணு.
"என்ன கோபமா?"
"i don't like to talk to strangers." என்றாள் அமுதா அவனின் முகத்தை பார்த்து.
"நான் stranger ah? உன்ன தொடாம தாலி கட்டின ரொம்ப innocent husbandயா நான்!!" என்று சொல்லிவிட்டு வாய்விட்டு சிரித்தான். அவள் முறைத்துவிட்டு பேசாமல் இருந்தாள்.
விஷ்ணு, " ஜோக் கேட்டால் சிரிக்கனும். முறைக்க கூடாது."
அமுதா, "இன்னிக்கு ஆபிஸ் போகாம இங்க இருக்க?"
விஷ்ணு, "லீவு போட்டேன்."
அமுதா, "எதுக்கு?"
விஷ்ணு, " மேனெஜர்கிட்ட... ஆபிஸ் விஷயமா 3 நாள் வெளியூர் போயிருக்கேன் சார். வூட்டுல பொண்டாட்டிக்குகூட சொல்லாம போயிட்டேன். அவள சமாதானப்படுத்த atleast ஒரு வாரம் வேணும்னு தான் கேட்டேன். அந்த bulb-u தலையன் ரெண்டு நாள் தான் கொடுத்தான். so இன்னிக்கும் நாளைக்கும் உன்கூட தான்!"
அமுதா, "பரவாயில்ல நீ போ. உனக்கு முதல் பொண்டாட்டி உன் ஆபிஸ் தானே."
விஷ்ணு, "ஹாஹாஹா... அத கட்டிக்குறேன். உன்னைய வச்சுக்குறேன்!"
அமுதா, "shut up!"
விஷ்ணு அவள் மடியில் இருந்த கையை பிடித்து, "jokes apart...I'm really sorry. இனி இப்படி நடக்காது.... really sorry." என்றான்.
அமுதா, "இந்த sorryய எவன் கண்டுபுடிச்சான்? அவன முதல உதைக்கனும்!" கோபத்துடன் கையை விடுக்கென்று எடுத்தாள். சமையல் அறைக்கு சென்று juice போடலாம் என்று சென்றபோது, மேசையில் இருந்த flaskலிருந்து orange juiceயை அவளுக்கு எடுத்து கொடுத்தான் விஷ்ணு.
"உனக்கு இந்த பிங் கலர் coffee mug தானே ரொம்ப பிடிக்கும்..." என்று பேச்சை மாற்ற முற்பட்டான். அவன் கொடுத்த ஜூஸை வாங்கி கொண்டு அவனை கண்டுகொள்ளாமல் balconyக்கு சென்றாள். மத்திய வேளையில் குளிர் காற்று இதமாய் வீசியது. மேகங்கள் மழையை தாங்கிபிடித்து கொண்டிருந்தன. வானத்தின் நிறம் அழகாய் தெரிய, coffee mugடன் நின்று கொண்டிருந்த அமுதாவை தனது கைபேசியில் படம் எடுத்து கொண்டான்.
புகைப்படத்தை பார்த்த விஷ்ணு, "ப்ச்....என் பொண்டாட்டி அழகு டா!" என்று புகை படத்துக்கு முத்தம் கொடுத்தான். வேண்டுமென்றே அமுதாவை வேறுபேத்தினான்.
அவன் செயலை கண்ட, அமுதா, "stop it, விஷ்ணு."
"ஓய்! உனக்கு என்ன வந்துச்சு? என் பொண்டாட்டிய நான் கிஸ் பண்றேன். இது என் பிறப்புரிமை. யாரும் ஒன்னும் கேட்க முடியாது!" என்றுவிட்டு இன்னொரு முறை முத்தமிட்டான் புகைப்படத்திற்கு.
அமுதா juice அருந்தியபடியே, "பைத்தியமா வாழலாம்...ஆனா..." ஒரு வினாடி அவனைப் பார்த்து,
"ஆனா...பைத்தியத்தோட வாழ முடியாது!" என்றாள்.
சிரித்தவன், "சரி atleast சாப்பிட்ட பிறகாவது சண்ட போடலாம் டா. பசிக்குது பா எனக்கு! ப்ளீஸ்....வா சாப்பிடலாம்." என்று கெஞ்சினான்.
"நீ சாப்பிடு. எனக்கு பசிக்கல."
"அது எப்படி முடியும்? நான் செஞ்சத நானே சாப்பிட்டு சாவ சொல்றீயா?" என்று சொன்னதை கேட்டு, அமுதா,
"உனக்கு நல்லதே பேச வராதா?"
விஷ்ணு, "நல்லது தானே? பேசிட்டா போச்சு...." என்றவன் அவள் அருகே சென்று அவள் கன்னங்களை கைகளால் தாங்கியவாறு,
"I love you." என்றான்.
அதற்கு அமுதா, "இதுக்கு நீ, முன்னாடி சொன்னதே better!"
வாய்விட்டு சிரித்தவன், "அட போ மா!! உன்னைய இந்த காலத்துக்கு சமாதானப்படுத்த முடியாது... நீ சாப்பிடலனா நானும் சாப்பிடல. எல்லாத்தையும் எடுத்து fridgeல வச்சுடுறேன்." என்றான். fridgeல் எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு அறைக்கு சென்றான். அலமாரியில் தினமும் செய்யவேண்டிய வீட்டுவேலைகளின் பட்டியல் இருந்தது. அதை பார்த்துவிட்டு விஷ்ணு, மெத்தை உரைகளை மாற்றினான்.
அவன் வேலை செய்து கொண்டிருந்ததை அறை கதவு அருகே கைகட்டி நின்று பார்த்து கொண்டிருந்த அமுதா, "விஷ்...."
விஷ்ணு, "என்ன?" என்றபடி தலையணை உரைகளை கழட்டினான். அவன் பக்கத்தில் சென்று அவனது கையை பிடித்தாள் அமுதா.
"ஒரு அழகான பையன் கைய புடிச்சு இழுக்குறீயே, பஞ்சாயத்த கூட்டவா?" என்றான் விஷ்ணு.
புன்னகையித்து கொண்டு அமுதா, அவனை இறுக்க அணைத்து கொண்டாள். மழை சாரல் பொழிந்தது. குளிர் காற்று வேகமாய் வீச, இன்னும் இறுக்கி கொண்டாள் விஷ்ணுவை. அவன் நெஞ்சில் முகம் சாய்த்தாள். சற்று தலை தூக்கினாள் அமுதா, அவள் உதடுகள் அவனது கழுத்தை எட்டி பார்த்தன.
"இச்" வைத்தாள் கழுத்தில்.
"ஓ....மேடம் என்ன திடீர்னு மாறிட்டாங்க?"
வெட்கம் கலந்த புன்னகையுடன் அமுதா, "உன்கிட்ட ஒன்னு சொல்லனும்?"
தொடர்ந்தாள் அமுதா, "டாக்டர பாத்தேன் நேத்திக்கு. நிறைய tablets கொடுத்தாங்க..ம்ம்...and.... நமக்கு பாப்பா பொறக்க போகுது!" என்று சொன்னவுடன் மீண்டும் அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள்.
ஆச்சிரியம் அடைந்த விஷ்ணு, அமுதாவை பக்கத்தில் இருந்த மெத்தையில் உட்கார வைத்தான்.
"டாக்டர் வேற என்ன சொன்னாங்க?" அவனது கண்களில் ஒருவித படபடப்பு தெரிந்தது.
"டேய்...are you ok?? உனக்கு சந்தோஷமில்லயா?" என்றாள் அமுதா.
"ஐயோ அப்படி இல்லமா...திடீரெனு சொல்லிட்டீயா...எனக்கு என்னமோ..அப்படியே உலகமே....ஒரு மாதிரியா போச்சு...சாரி மா..எப்படி react பண்றதுனு தெரியல...சாரி சாரி..."
புன்னகையுடன் அமுதா, அவனது தாடையை பிடித்து, "நீ அப்பா ஆக போற?"
விஷ்ணு, "அப்ப இனிமேல....ஜோக்-கெல்லாம் அடிக்க முடியாதுல..."
அமுதா, "ஹாஹாஹா...டேய்... என்ன டா ஆச்சு உனக்கு?"
விஷ்ணு, "தெரியலங்க..."
அமுதா, "என்னது? ங்கவா?"
விஷ்ணு, "அம்மா ஆக போறீங்க..அதான்...மரியாத!"
அமுதா, "oh my god! you're so cute, I tell you." என்று புன்னகையுடன் அவன் முடியை கோதிவிட்டாள்.
விஷ்ணு உற்சாகத்துடன், " இது அன்னிக்கு...... "
அமுதா புருவங்களை சுருக்கி, "என்ன அன்னிக்கு?"
விஷ்ணு, " அன்னிக்கு உன் ப்ரண்ட் birthday party முடிஞ்சு..... late night வந்தோமே.. இது birthday party night baby தானே!!"
அமுதா, "ச்சி போடா!"
*முற்றும்*