Aug 24, 2013

ராஜா ராணி கவிதைகள்!

 
கொடுக்கவா?
என்று இனி
கேட்காதே!
வெட்கத்தில்
வேண்டாம் என
சொல்லி
சொதுப்பிவிடுவேனோ
என்ற பயம்
எனக்கு!
 

 
தெரிந்து எடுத்தால்
திருட்டு!
தெரியாமல் எடுத்தால்
ம்ம்ம்...
காதலோ?
 


 
தேவையில்லாத சண்டை போட்டு
ஒரு வாரம் மௌனமாக இருந்து
திடீரென்று ஒரு நாள்
உன் கன்னத்தில் முத்தம் வைத்து
உன் தோளில் சாய்ந்து
'சாரி' கேட்க,
எதிர்பார்க்காத நீ,
வெட்கப்படனும்!
 


Aug 6, 2013

ஆயிரத்தில் ஒருவன் பார்க்க வா! இரண்டாம் உலகம் பார்க்க வா!

இரண்டாம் உலகம் trailerரை அனைவரும் பார்த்து இருப்பீங்க. பாடல்களை இன்னும் நான் கேட்கவில்லை.

செல்வராகவன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவருக்குள் இருந்த ஆதங்கத்தையும் கோபத்தையும் ரொம்ப தைரியமாக சொல்லியிருந்தார். ரொம்ப தைரியம் வேண்டும் அவ்வாறு பேச. அந்த தைரியசாலி 'இரண்டாம் உலகம்' போன்ற படத்தை எடுத்ததில் ஆச்சிரியமில்லை.


ஆனால் எனக்கு சில கேள்விகள். அவரின் கோபம் நியாயமானதாக இருந்தாலும் சிலவற்றை ஒரு ரசிகராய் ஏற்ற கொள்ள முடியவில்லை.

1) ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கே தமிழ் subtitle போடுங்க என்று சொல்பவர்கள் நம் மக்கள் என்றார் அந்த பேட்டியில்.

புரியலையே பாஸ்! தூய தமிழில் வந்த பழைய காலத்து படங்களையெல்லாம் நாங்கள் பார்த்து ரசிக்கவில்லையா? கை தட்டவில்லையா? புரியும் தமிழில் படம் எடுத்தால் நாங்கள் ரசிப்போமே, பாஸ்!

2) ஆயிரத்தில் ஒருவன் படத்தின் தோல்வி.

அரிவாளை கொண்டு, tata sumo tyreயை கிழிக்கும் காவிய காட்சிகளை இன்னும் எடுத்துகொண்டிருக்கும் பலபேரில், நீங்கள் வித்தியாசமானவர் தான்!

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மேல் வைத்திருந்த எதிர்பார்ப்பு என் ஒரு வாரம் உணவுக்கு தடையாய் போனது. படத்துக்கு குடும்பத்தோடு சென்று என் அம்மாவிடம் நல்லா வாங்கி கட்டி கொண்டது தான் மிச்சம். இந்த படத்துக்கு கூட்டிகிட்டு போன உனக்கு ஒரு வாரம் சோறு கிடையாது என்று என் அம்மா திட்டியது இன்னும் நினைவில் இருக்கிறது.

எது பண்பாடு? எது கலாச்சாரம்? எதை காட்ட சில (அருவருப்பான) காட்சிகளை வைத்தீர்கள்?

இரண்டாம் உலகம் பாடல் வெளியீட்டு விழாவில் வைரமுத்து சொன்னது தான் நினைவுக்கு வருகிறது

"செல்வராகவன் படங்களில் வெற்றிப்படம்,
தோல்விப்படம் என்று எதுவும் இல்லை.
புரிந்துகொள்ளப்பட்ட படம்,
புரிந்துகொள்ளப்படாத படம் என்றுதான் உண்டு"


ஒரு சாதாரண ரசிகையாய், எனக்கு புரியும் விதம் படம் பார்க்க ஆசைப்படுகிறேன். சில சமயங்களில், செல்வா ரொம்ப வேகமாய் செல்கிறாரோ என்றும் தோன்றும்.

செல்வா
நீ கண்ணாடி
போட்ட கமல்
அல்லவா?


உலக சினிமா எடுக்கனும். அப்போ தான் நம்ம தரம் உயரம். உங்க ஆசை, விருப்பம் எல்லாமே புரியது. தரம் உயர, புரியாத சினிமா எடுக்க தேவையில்லை, உலகம் நம்மை பார்த்து வியக்கும் சினிமா எடுத்தாலே போதும்.

'children of heaven' என்ற iranian/persian படம் பல விருதுகளை பெற்றது.  அண்ணன் தங்கை இருவர்களுக்கு இடையே நடக்கும் ஒரு சின்ன போராட்டம். கதை அவ்வளவு தான்! எந்த கிராஃபிக்ஸும் பயன்படுத்தவில்லை. புரிந்ததே, பாஸ்!

3) ஓ.....ஹாலிவுட் படங்களை மட்டும் ரசிச்சு பாக்குறீங்க?

அவதார் படம் எத்தன பேருக்கு புரிந்ததுனு கேட்டு பாருங்க!! நம்மில் பல பேர் இங்கிலேஷ் படத்துக்கு போயிட்டு வந்தேன் என்று கூறி பெருமிதம் அடைபவர்கள் தான் அதிகம்!

கிராஃபிக்ஸ் பயன்படுத்த வேண்டாம்னு சொல்லல. ரசிக்கும் வண்ணம் பயன்படுத்துங்க!


'இரண்டாம் உலகம்' படத்தின் trailerரை பார்த்துவிட்டு எனக்கு கொஞ்சம் பயமா தான் இருக்கு. சில காட்சிகள் ஆயிரத்தில் ஒருவன் படத்தை நினைவூட்டியது. எனினும், வெற்றி பெற வாழ்த்துகள் செல்வா!!  

தேர்வுக்கு முதல் நாள் படித்து 90 மார்க் வாங்கும் மாணவர்கள் நிறைந்த கூட்டத்தில் தினந்தோறும் கஷ்டப்பட்டு படித்து, தேர்வில் ஒரு மார்க்-கில் தோல்வி பெறும் மாணவனின் அவஸ்தையைவிட அதை பார்க்கும் ஆசிரியரின் வலி அதிகம்!

 உங்க படங்கள் புரிந்து கொள்ளாமல் போன போது, அந்த 'ஆசிரியரின் வலி' என் போன்ற பல ரசிகர்களுக்கு இருந்தது.காதல் கொண்டேன், 7g rainbow colony படங்கள் வந்தபோ
முதல் ஆளா, முதல் டிக்கெட் வாங்கினவன் எல்லாம் நம்ம
பயலுக தான்!
இப்போ  அதையெல்லாம் விட்டுபுட்டு
ஆயிரத்தில் ஒருவன் பார்க்க வா
இரண்டாம் உலகம் பார்க்க வா-னா
எப்படி வருவான்?

அவன் மெதுவாத்தான் வருவான்!
மெதுவாத்தான் வருவான்!

Aug 2, 2013

சிங்கமும் மரியானும்

ஓநாயும் நரியும், முயலும் ஆமையும் போன்ற நீதி கதைகள் எவ்வளவு சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறது. ரசிக்க முடிகிறது. இப்போது வரும் படங்கள் ஏன் அப்படி புரிந்து கொள்ள முடியவில்லை. இல்ல நமக்கு தான் அறிவும் ரசிக்கும் தன்மை போதவில்லையே.

சிங்கம் 2

1) சிங்கம் 1 கடைசி காட்சியில், விஜய்குமார் "இது யாருக்கும் தெரியவேண்டாம். வேணும்னா உங்க மனைவிகிட்ட மட்டும் சொல்லுங்க" என்பார்.

அப்போ ஏன் சிங்கம் 2ல கல்யாணம் ஆகாத மாதிரி காட்டனும்? சிங்கம் 2 படத்திலும் கல்யாணம் ஆகவில்லை. அப்போ சிங்கம் 3 வரபோகுதா?

:(((((((((((((((((((((((((((((((((

2) யம்மா அஞ்சலி, குயிலிகிட்ட கொஞ்சம் பயிற்சி எடுத்துகொண்டு அந்த கப்பலில் ஆடியிருக்கலாம். எனக்கு என்னமோ குயிலியை தவிர வேறு யாரும் கப்பலில் ஆடினாலும் பிடிக்கவில்லை:)))))

3) பள்ளி மாணவியாக ஹன்சிகா....ம்ம்ம்... (சரி நான் ஒன்னும் சொல்லல. அப்பரம் சிம்பு ரசிகர்கள் கோபத்திற்கும் ஆளாகிடுவேன்!)

 
               

4) இப்ப வர படங்களில் வில்லன்கள் ஹீரோவைவிட அழகா தெரியனும். இது தெரியாதா ஹரி சார்?? (முருகதாஸ் சாரிடம் கேட்டு பாருங்க)

****************************************************************************

மரியான்

1) தனுஷ் கடத்தப்பட்ட நிலையில் தீவிரவாதிகளால் துன்புறத்தப்படுவார். அப்போது, இந்தியா அதிகாரிகளிடம் ஃபோன் செய்து பணம் கேட்குமாறு தீவிரவாதிகள் சொல்வார்கள். அப்போது தனுஷ், பார்வதிக்கு ஃபோன் செய்து பேசுவார். அந்த காட்சி, சூப்பர்!!!

2) சிறுத்தைகள் பக்கத்தில் சுற்றி கொண்டிருக்கும் தனுஷின் நடிப்பி டாப்! (நான் சிறுத்தை, அலேக்ஸ் பாண்டியன் படங்கள் பார்க்கும்போது அப்படி தான் இருந்தது)

3) மேலே சொல்லப்பட்ட இரண்டு காட்சிகள் தவிர, வேறு ஒன்றும் இப்படத்தில் என்னைக் கவரவில்லை.
4) என்னதான் அழகான ஹீரோயின், ஏ ஆர் ராஹ்மான், தேசிய விருது பெற்ற தனுஷ், வெள்ளக்கார ஒளிப்பதிவாளர் இருந்தாலும், திரைக்கதையின் வேகம் முக்கியம்.

5) அப்பரம்  ஏ ஆர் சார்,  i think you got தண்ணீரில் கண்டம். இன்னும் கொஞ்சம் நாளைக்கு கடல் சம்மந்தப்பட்ட படங்களை தவிர்க்குமாறு சிவகாமி கம்பியூட்டர் சொல்லது!
******************************************************************************

இரண்டு படங்களிலும் எனக்கு பிடிக்காத ஒரு விஷயம்! ஹீரோ ஹீரோயினை அறையும் காட்சி.

மது அருந்தினால், புகை பிடித்தால், கீழே "இது ஆபத்தானது" என்று போடுவதுபோல் அறையும் காட்சிகள் வந்தால்,

"இது அபத்தமானது" என்று போட வேண்டும்.

அடித்தால் தான் கெத்து என்று பலர் நினைக்கும்போது, படங்களும் அதற்கு எண்ணெய் ஊற்றவேண்டாம்.