Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Oct 19, 2011

ஓடி போலாமா? ஓடி போலாமா?

உங்க காதலன்கூடவோ அல்லது காதலிகூடவோ ஓடி போகும் டிப்ஸை எதிர்பார்த்து இந்த போஸ்ட்டுக்கு வந்தீங்க என்றால் ஐ எம் வெரி சாரி....

நான் சொல்ல வந்தது வேலை இடத்திலிருந்து எப்படி வீட்டிற்கு சீக்கிரமாய் ஓடி போவதைப் பற்றி! பொதுவா வேலை இல்லை என்றால் மூன்று மணிக்கே சென்றுவிடலாம்! அது வரைக்கும் என்னால் கால் ஆட்டிக் கொண்டு இருக்க முடியாது. ஆக, முடிவு எடுத்தேன் ஒரு மணிக்கே எப்படியாச்சு ஓடி போவது என்று!

பாஸ் கேட் அருகில் நின்று கொண்டிருந்தார். நானும் அவரை கடந்து சென்றேன். அவர் புன்னகையித்தார். நானும் பதில் புன்னகை வீசினேன். ஆனால், அவர் ஒன்றும் சொல்லவில்லை! எப்படி????? ஏன்????

கையில் ஒரு பையும் இல்லாமல் சென்றால் எப்படி சந்தேகம் வரும்? :)))))))) ஆமாங்க, முதல் நாளே தேவையானவற்றை ஆபிஸில் வைத்துவிட்டேன். நான் எடுத்து சென்றது- பஸ் கார்ட், செலவுக்கு பத்து வெள்ளி நோட், atm card ஒரு pant pocketல். இன்னொரு pant pocketல் ஐடி கார்ட், ஃபோன்+earpiece.

கைவீசு யம்மா கைவீசு என்று சந்தோஷமாக பாஸ்-ஸை கடந்து செல்லும்போது வந்த மகிழ்ச்சி இருக்குதே!!!! உலக கோப்பையை ஒரே வருடத்தில் ரெண்டு தடவ தூக்கின மாதிரி ஒரு சந்தோஷம்.

ஆனா, desk பக்கம் வந்து பாத்தாங்கன்னா, மாட்டிக்க மாட்டீயா?

அதுக்கும் கைவசம் technique இருக்கே. அப்படியே வேலை செய்து கொண்டிருக்கும் தோரணையில் சில documentகளை மேசையில் பரப்பி வைத்துவிட்டேன். ஒரு சைட்ல black pen, red pen வேற. குவளையில் தண்ணீர் இருக்கும். நம்ம எல்லாம் யாரு? art director தோட்டா தரணிக்கே எப்படி கோடு போடனும்னு சொல்லி கொடுத்த ஆளுங்களாச்சே!

:))))))))))))))))))))))))))))))))))))))

இதை எங்கோ படித்தேன் - ஞாயிற்றுக்கிழமை அன்று திங்கட்கிழமை பற்றி நினைத்தால் எரிச்சல் வந்தால், நீ செய்யும் வேலை உனக்கு உகந்தது அல்ல!

எவன் எழுதிய வாசகம்னு தெரியல...ஆனால் திருவாசகம்!! உண்மையிலும் உண்மை! பிடிக்காத வேலையிலிருந்து எப்படி வெளியேறுவது??? :((((

Jul 10, 2011

வெள்ளிக்கிழமை என்பது...




வேலைக்கு போன பிறகு தான் புரியது 'வெள்ளிக்கிழமை' மீது இருக்கும் காதல்! ஐயோ எப்ப டா வார இறுதி வரும்னு 'வைதேகி காத்திருந்தாள்' விஜய்காந்த் மாதிரி காத்து இருப்பேன். அதுவும் சரியா, என்னைய(மற்ற பலரையும்) வெறுப்பேத்தும் வகையில் வெள்ளிக்கிழை மதியம் மீட்டிங் வைப்பார் பாஸ்! மதியம் ஆரம்பித்து மூன்று மணி நேரம் கதிகலங்க பேசுவார் பேசுவார் பேசிகொண்டே இருப்பார்.

மீட்டிங் பேசப்படும் எந்த ஒரு விஷயம் எனக்கும் என் வாழ்க்கையிலும் எந்த ஒரு நன்மையையும் கொடுக்கபோவதில்லை. இருந்தாலும் உட்கார்ந்து கேட்கனும். சில நேரத்தில் கொடுமையாய் கொடூரமாய் இருக்கும். போன மீட்டிங் போது பேசியதை மறுபடியும் பேசுவதற்கு ஒரு மீட்டிங். 'போட்டு தள்ளிடலாம்'னு வரும்!! வெள்ளிக்கிழமை அன்று இப்படி அறுத்தால்?? உச்சி முதல் பாதம் வரை வலிக்கும்! மனசு ரெம்ம்ம்ம்ம்ம்ப வலிக்கும்

அப்பரம் மீட்டிங் முடிஞ்சு கேபினுக்குள் வந்து உட்கார்ந்து ஒரு பெருமூச்சு விடுவோம் பாருங்க, மேசையில் இருக்கும் பேப்பர் எல்லாம் பறக்கும்! எங்க மறுபடியும் கூப்பிடுவாரோனு பயந்து அவசர அவசரமாய் மடிகணினியை எடுத்து drawerவில் வைத்துவிட்டு, மேசையில் கிடக்கும் walletயையும் phoneயையும் எடுத்து பையில் போட்டுகொண்டு சீனியர் ஆபிசர் கண்ணில் படாமல் விறுவிறு என்று ஓடி போய் பேருந்து நிறுத்தும் இடத்தில் நின்றால் வரும் சந்தோஷம் இருக்குதே- யப்பா!!!!!!!!!!! கோச்சிகிட்டு போன boyfriend (அல்லது உங்க girlfriend) கிட்ட வந்து நம்மள பார்த்து smile பண்ற மாதிரி இருக்கும்.

வெள்ளிக்கிழமையே, ஐ லவ் யூ!! வேலைக்கு போன பிறகு, உன் அருமை புரியுது!

(ஞாயிற்றுகிழமை இரவு என்பது பிடிக்காத மாமியர் வீட்டுக்கு வர மாதிரி!! மறுநாள் திங்கள் ஆச்சே!!!!!!:(((((((((((

Mar 11, 2010

வேலை என்பது ஒரு கெட்ட வார்த்தை

வேலை என்பது ஒரு கெட்ட வார்த்தை! அத கொஞ்ச நாளுக்கு முன்னாடி தான் புரிஞ்சுகிட்டேன். 10 வாரம் work attachmentல இருக்கேன். கண்ணு முழி பிதுங்குது டா சாமி! தினமும் 12 மணி நேரமாவது வேலை இடத்தில். இரவு 7 மணிக்கு வீட்டுக்கு வந்தபிறகு, குளிச்சுட்டு, சாப்பிட்டு 8 மணிக்கெல்லாம் தூக்கம். அதிகாலை 1 மணிக்கு எழுந்தரிச்சு, முடிக்க வேண்டிய வேலையை முடிப்பேன். அந்த plan இந்த plan அப்படினு 1008 plan இருக்கு! அத செய்யனும், அப்பரம் மீட்டிங் preparation. அதற்குள் காலை 6 மணி ஆகிவிடும். குளித்துவிட்டு, வேலைக்கு கிளம்ப வேண்டியது.

இது தான் கடந்த 3 வாரமா நான் பண்ணிகிட்டு இருக்கும் நாய் பிழப்பு! முடியல என்பது ரொம்ப சின்ன வார்த்தை. அதையும் தாண்டி ஒரு வார்த்தை இருந்தால் சொல்லுங்கப்பா!!

வேலை என்பதை கண்டுபிடித்தவனை நான் தீவிரமா கண்டுபிடித்து கொண்டிருக்கிறேன்.

கஷ்டப்பட்டு செய்யாதீங்க, இஷ்டப்பட்டு வேலையை செய்யுங்க அப்படினு மட்டும் யாரும் சொல்லாதீங்க!! (நான் காண்டா மிருகமா ஆயிடுவேன்)

ஆனால் ஒரு சின்ன சந்தோஷம்- அடுத்த வாரம் லீவு! ஆண்டவன் ஒரு கதவை முடினால், ஒரு சின்ன ஜன்னலையாவது திறந்து வைப்பான்! வேலை கஷ்டமா இருந்தாலும், இந்த ஒரு வாரம் லீவு வரபிரசாதம்!

May 15, 2009

biggest loser-எந்த கடையில நான் அரிசி வாங்கினேன்?-3

உடற்பயிற்சியுடன் டையட்டும் முக்கியம். மூன்று இட்லிகள் சாப்பிடும் நேரத்தில் இரண்டை சாப்பிட ஆரம்பித்தேன். இப்படி பாதி அளவு சாப்பாட்டை குறைத்தேன். ஆரம்ப காலங்களில் கஷ்டமாக தான் இருந்துச்சு. chocolates, pepsi, coke, ice cream, biscuits, snacks, முறுக்கு, மற்ற பலகாரங்களை முற்றிலும் தவிர்த்தேன். அந்த நேரங்களில் தான் வீட்டில் உள்ளவர்கள் kfc, macdonald's, pizza, burger இப்படி ஏதாச்சு வாங்கி வருவார்கள். ஆனால், எதையும் தொட மாட்டேன். சில சமயங்களில் ஏக்கம் வரும்.

இவர்கள் வாங்கி கொண்டு வரும் நேரம் குறிப்பா இரவு நேரங்களில் தான் இருக்கும். ஏக்கத்தை தவிர்ப்பதற்கே நான் இரவு 7 மணிக்கெல்லாம் தூங்கிவிடுவேன். முழித்து இருந்தால், அவற்றை சாப்பிட்டு விடுவேனோ என்ற பயம். இரவு நேரங்களில் சாதம் சாப்பிடுவதை முற்றிலுமாக கைவிட்டேன். நாம் அதிகபடியாக சாதம் சாப்பிடுவதே நம் உடல் பருமனாக இருக்க காரணம். இரவு நேரங்களில், பழங்கள் அல்லது சப்பாத்தி என்று உணவு பழக்கம் மாறியது. சாப்பிடும்போது பாதி வயிறு நிரம்பும் வரை தான் சாப்பிட வேண்டும்.

பின்னர், aerobics, hip hop வகுப்புகளுக்கு சென்றேன். பயிற்சிவிப்பாளர் ஆடும்போது அது ஹிப்-ஹாப், அதே ஸ்டப்புகளை நம்ம போடும்போது, ஏதோ டப்பாங்குத்து மாதிரி இருக்கும். ஆமா.. சரியா ஆடி நம்ம என்ன உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சிக்கா போக போறோம். கை கால்களை அசைத்து, வேர்வை வெளியாகி, caloriesகளை குறைப்பதே எனது நோக்கம்.

இப்படி செய்ய, 9 மாதங்களில் 66 கிலோவில் இருந்த நான் 53 கிலோவிற்கு வந்தேன். பெரிய பெரிய சாதனை. பார்த்தவர்கள் நிறைய பேர், ரொம்ப இளைச்சுட்டே என்று சொல்லும்போது என்னுள் எழுந்த பெருமிதம் வானளவு!
காலேஜில் நிறைய பேர், "ஏய் என்னடி... செஞ்சே...you look good...you lost so much of weight.." என்று பாராட்டினர்.

போட முடியாத சட்டைகள் பல அதற்கு அப்பரமும் போட முடியவில்லை.
காரணம்?
அவை இப்போது பெரியாதாய் இருந்தன.ஹாஹாஹா.... நிறைய உடைகளை alter செய்து தான் போட்டுகொண்டேன்.

வீட்டில் ஒரு digital weighing machine வாங்கினேன். அதில் தினமும் காலையில் எடை பார்த்தபிறகு தான் மறுவேலை நடக்கும்.

எனக்கு ஒரு ஆசை, பேராசைகூட வைத்து கொள்ளலாம். 53 கிலோவில் இருக்கும் நான், 50க்கு வர வேண்டும் என்பதே! எல்லாரும் 50 கேஜி தாஜ்மகால்ன்னு சொல்றாங்களே, அப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்பதே ஒரு முறை உணர்ந்து பார்க்க வேண்டும்.

சிரமம் எடையை குறைப்பது என்றால் அதைவிட சிரமம் 53விலே maintain செய்வது.

பரிட்சையில் தோல்வி அடைந்தவன் வெற்றி பெற்றுவிடுவான் அடுத்த முறை. ஆனால் இந்த 99 மார்க் வாங்கினவன் 100 மார்க் எடுக்க ரொம்ப ரொம்ப கஷ்டப்படுவான். இந்த நிலைமையில் தான் நான் இருக்கிறேன். 9 மாதங்களில் 53க்கு வந்த நான், 53லிருந்து 50க்கு வர ரொம்ப கஷ்டமாக இருக்கு!:)

May 14, 2009

biggest loser- எந்த கடையில நான் அரிசி வாங்கினேன் - 2

பகுதி 1

நீச்சல் வகுப்பில் நானும் இன்னொரு சீன பெண் தான். அவங்க சீனியர். பல வித ஸ்டைல்கள் தெரியும். நான் beginner. பயிற்சிவிப்பாளர் வந்தார். புகைப்பிடிப்பவர். புகை நாற்றம் வயிற்றை பிரட்டியது. வாந்தி வருவது போல் இருந்தாலும் கட்டுபடுத்தி கொண்டேன். முதல் வகுப்பு என்பதால் ரொம்ம்ப பேசினார். lecture அடித்தார்.

'பொதுவா இந்தியர்களுக்கு நீச்சல் வராது." என்றார். முறைத்தேன்.

"இல்ல இல்ல...அவர்கள் ஓடுவதில் தான் experts" என்று சமாளித்தார்.

பக்கத்தில் 2, 3 வயது குழந்தைகள் சுலபமாக நீந்துவதை பார்த்து பொறாமை வந்தது. சின்ன வயதிலேயே நீச்சல் கற்று இருக்கலாமே என்ற ஏக்கம். அப்போது வசதி இல்லை, பெற்றோர்கள் அழைத்து செல்வதற்கு நேரம் இல்லை.

முதல் வகுப்பு முடிந்தது. எப்படி float செய்வது என்பதை கற்றேன். ஒவ்வொரு செவ்வாய்கிழமை தான் வகுப்பு. இருந்தாலும், அடுத்த செவ்வாய் வருவதற்கு முன்னாலே மூன்று அல்லது நான்கு முறை நானாகவே நீச்சல் குளத்திற்கு சென்று பயிற்சி செய்தேன். அதன் காரணமாக மூன்றாவது வகுப்பிலேயே முதன் முதலாக 50 மீட்டர் நீந்தினேன் எந்த இடத்திலும் நிறுத்தாமல்! வாழ்க்கையில் நான் செய்த ஒருசில சாதனைகளில் இதுவும் ஒன்று. மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

"நீ ரொம்ப வேகமா கத்துக்கிற" என்றார் பயிற்சிவிப்பாளர்.

நான்காவது வகுப்பு முடிந்த பிறகு, வகுப்பிற்கு போவதை நிறுத்திவிட்டேன். நீச்சல் தெரிந்தவுடன் நானாகவே சென்று 10 laps அல்லது 20 laps(கிட்டதட்ட 1 km) நீந்தினேன்.உடல் எடையை குறைப்பதற்காக இந்த முயற்சி. நீச்சல் செய்தால் thigh fats குறையும்.

இப்படி ஒரு பக்கம் சென்றது.

வீட்டின் கீழ் தாளத்தில் உடற்பயிற்சி செய்ய சின்ன இடம் இருக்கிறது. காலை நேரங்களில் சென்று skipping செய்தேன். 100 முறை ஸ்கிப் செய்துவிட்டு 13 மாடி ஏறுவேன். மறுபடியும் கீழே வந்து இன்னொரு 100 முறை ஸ்கிப் செய்வேன். மறுபடியும் மாடி ஏறுவேன். இப்படி 5 முறை செய்வேன். வேர்த்து கொட்டும். கால்களிலுள்ள தசைகள் வலிக்கும். உயிர் போவது போல் இருக்கும்.

ஆனால், என் மனதில் இருந்தது ஒன்றே ஒன்று தான் - உடம்பை குறைக்க வேண்டும்!

உடம்பை குறைப்பது என்பது....
it is not a struggle in the body. it is the battle between the heart and the mind!

இது போதாது என்று, ஜிம்மிற்கு போக ஆரம்பித்தேன். முதன் முதலாக ஜிம் போகும்போது கொஞ்சம் கூச்சமாக இருந்தது. அங்கே உள்ளவர்கள் நம்மை பார்ப்பார்களோ, என்ன நினைப்பார்களோ என்று பல சிந்தனைகள். அங்கு சென்று பார்த்தபிறகு ஒரு புதிய தன்னம்பிக்கை.

வயது 40, 50 இருக்கும் பெண்கள் அவ்வளவு சுறுசுறுப்பாக பயிற்சி செய்வதை பார்த்து எனக்கு பெருமையாக இருந்தது. அவர்களை பார்த்து நிறைய கற்றுகொண்டேன்.

முதன் முதலாக ஆரம்பித்த போது threadmill 10 நிமிடங்கள் நடக்கவே ரொம்ப கஷ்டமாக இருக்கும். stamina பத்தாது! பத்தி நிமிடங்கள் நடந்தவுடன் உட்கார்ந்து கொள்வேன். இப்படி பயிற்சி செய்து என்னிக்கு நம்ம உடம்ப குறைப்பது என்ற சோகம்! சில சமயங்களில் சோர்ந்து நொந்து போயிவிடுவேன். ஆனால், ஏதோ ஒன்று மனதில் சொல்லும்-உன்னால் முடியும் என்று!

staminaவை முன்னேற்றி கொண்டாலே போதும்! அதற்கு தொடர்ந்து ஜிம்-மிற்கு சென்றேன்.
threadmillலில் 20 நிமிடங்கள் நடக்க ஆரம்பித்து, பிறகு ஓட ஆரம்பித்தேன்.
mini-weights தூக்கினேன்.
cycling machineலில் 25 நிமிடங்கள் பயிற்சி செய்தேன்.

ஒவ்வொரு முறையும் நான் அன்று ஜிம்மில் என்ன செய்தேன், எவ்வளவு calories குறைத்தேன் என்பதை டைரியில் எழுதினேன். 100 caloriesலில் ஆரம்பித்து, உச்சகட்டமாக 1200 calories வரையிலும் சென்றுள்ளேன். அதாவது ஒரு நாளில் 1200 calories குறைப்பது என்பது கிட்டதட்ட மூன்று மணி நேர உழைப்பு!

அங்குள்ள weighing machineலில் எடையை பார்த்தபோது, ஒவ்வொரு வாரமும் குறைந்து கொண்டே வந்தது. சந்தோஷம் தாங்க முடியவில்லை. கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே....

என் சூழ்நிலைக்கு ஒத்துவராத பொன்மொழி!

பயிற்சி செய்தால் மட்டும் போதாது, சாப்பாட்டின் அளவையும் குறைக்க வேண்டும்...

ஆனால்...

(தொடரும்)

May 13, 2009

biggest loser- எந்த கடையில நான் அரிசி வாங்கினேன்?-1

biggest loser நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்தபோது, பழைய நினைவுகள் என்னை தீண்டின.

2007 மே மாதம்.

காலேஜ் முதலாம் ஆண்டு முடியும் வேளை. காலேஜ் வாழ்க்கையில் settle ஆக ரொம்ப கஷ்டப்பட்டேன். படிப்பு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. நிறைய தேர்வு, assignment. பள்ளி நண்பர்களிடம் பேச கூட நேரம் இல்லை. வெளியே போகவில்லை. கிட்டதட்ட பைத்தியம்போல் இருந்த காலம். அதிகபடியான மன உளைச்சலால் நிறைய சாப்பிட ஆரம்பித்தேன். அதன் விளைவு. obesity பிரச்சனை! என் உயரத்திற்கு நான் 49-52.9 கிலோக்குள் தான் இருக்க வேண்டும். ஆனால் 66 கிலோ இடையில் இருந்தேன். மருத்தவர் எச்சரித்தார், "நீங்க இப்படியே போய்கிட்டு இருந்தீங்கன்னா, சின்ன வயசுலே diabetics, heart problem வர வாய்ப்பு இருக்கு."

அப்போதுகூட நான் அதை சீரியஸாக எடுத்துகொள்ளவில்லை. அதற்கு அப்பரம் நடந்த இரண்டு சம்பவங்கள்.

1) என் மாமா மகள், வயது 5 தான் இருக்கும். அவர்கள் வீட்டில் ஃபோட்டா எடுத்தோம் ஒருநாள். ஃபோட்டாவில் நான், அக்கா, அவள். ஃபோட்டாவை பார்த்து அவள் என்னிடம் சொன்னாள், "நீங்க ஏன் இவ்வளவு பெரிசா இருக்கீங்க? ஃபோட்டா முழுசா நீங்க தான்..." என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.
எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவள்கூட சேர்ந்து சிரிப்பதா. இல்ல, ஒரு சின்ன புள்ள நம்மள பாத்து சொல்லிட்டேன்னு அழுவதான்னு ஒன்னும் புரியல்ல....மனசுக்குள் ஒரு மணி அடித்தது.

2) இன்னொரு முறை, நானும் என் அப்பாவும் மின்தூக்கிக்காக காத்திருந்தபோது, அவர் என்னை பார்த்து ஒன்று சொன்னார். (ரொம்ப மோசமான கமெண்ட்...அதை இங்கே சொல்ல முடியாது.) என்னடா இது இவர் இப்படி நம்மை பார்த்து சொல்லிட்டாரேன்னு அன்று இரவு முழுசும் ஒரே கவலை. நம்ம என்ன அப்படி குண்டாவா இருக்கிறோம் என்று மனம் நொந்து போனது.

கண்ணாடியில் பார்த்தேன். உண்மை சுட்டது! என்னிடம் ஒரு பத்து சட்டைகள் இருந்தால், அதில் இரண்டு மட்டுமே போட முடியும். அந்த அளவுக்கு நிலைமை இருந்தது. உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தேன். ஒரு முடிவு எடுத்தேன். உடல் இடை குறைக்கும் ஒரு நிறுவனத்திற்கு சென்றேன். அங்கே ஒரு கணிசமான தொகையை செலுத்தி, இயந்திரங்கள் உதவியால் beltகளை வயிற்று பகுதி, கால் பகுதியில் சுற்றி வைப்பார்கள்.

அரை மணி நேரத்திற்கு அவை உடம்போடு ஒட்டி இருக்கும். ஆனால், அதிலிருந்து சூடு வரும். அந்த சூட்டினால் உடல் இடை குறையுமாம்! நானும் நம்பி போனேன். சொல்ல முடியாத வலி! அரை மணி நேரம் முடியும் முன்னே கத்திவிட்டேன். என்னை விட்டுவிடும்படி சொல்லி கிளம்பிவிட்டேன். அதுக்கு அப்பரம் நடக்கவே முடியல.

வாத்துக்கு piles வந்தா எப்படி நடக்குமோ, அப்படி நடந்தேன். கட்டடத்தின் கீழ் தளத்தில் உட்கார்ந்து ஒரு மணி நேரம் அழுது இருப்பேன். சூட்டினால் ஏற்பட்ட வலி, உடல் பருமனாக இருக்கிறேனே என்ற வலி, மற்றவர்கள் கிண்டல் செய்கிறார்களே என்ற வலி, நமக்கு பிடித்த ஆடைகளை போட முடியவில்லையே என்ற வலி, இந்த சின்ன வயசுல ஏன் எனக்கு இந்த கஷ்டம் என்ற வலி....என்று வலிகளின் பட்டியல் நீண்டு கொண்டே சென்றது.

அழுது முடித்தேன். இந்த இடத்திற்கு மீண்டும் வந்தால் என்னை உயிரோடு சமாதிகட்டிவிடுவார்கள். பணத்தை கட்டிவிட்டோம், அப்பணம் பழனி உண்டியலில் போட்டதாக நினைத்து கொண்டேன். ஆக, சொந்த முயற்சியில் இறங்கினேன். அம்மா என்னை நீச்சல் வகுப்பில் சேர்த்துவிட்டார்.

நீச்சல் வகுப்பில்.....

(பகுதி 2)

ஜஸ்ட் சும்மா(13/5/09)

காலேஜ் இருக்கும்போது, அம்புட்டு வேலை இருக்கும். ஆனா எழுதுறதுக்கு 1008 விஷயங்கள் தோணும். இப்போ லீவு தானே.. ஆனா இந்த (மர)மண்டையில ஒரு மண்ணும் தோண மாட்டேங்குது... அது ஏன்னு தெரியல.... லீவுல தான் நிறைய எழுதுறதுக்கு நேரம் கிடைக்கும்.ஆனா ஒன்னுமே எழுத தோணல...எழுத வரல...அதான் இப்படி ஜஸ்ட் சும்மா....

ஆனந்த தாண்டவம் படத்தில் இடம்பெற்ற கனா காண்கிறேன் பாடலை ஒரு நாளைக்கு 10 தடவைக்கு மேல கேட்குறேன். சமீப காலத்தில் வந்த பாடல்களில் என்னை கவர்ந்த ஒரு பாடல் இதுவே!! பாடல் வரிகள் ரொம்ம்ப நல்லா இருக்கும்.
-------------------------------------------------------------------------------------------

biggest loser என்ற அமெரிக்கா நிகழ்ச்சி ஒன்று, அதை தினமும் பார்த்து கொண்டு வருகிறேன். இந்த நிகழ்ச்சி குண்டா இருப்பவர்கள் 15 வாரங்களில் எப்படி தங்களது இடையை குறைக்கிறார்கள் என்பதை பற்றி. ஒவ்வொரு ஆளும் எடுக்கும் முயற்சியை பார்க்கும்போது ரொம்ம்ப வியப்பா இருக்கும். என்னையே நான் பார்த்த மாதிரி ஒரு உணர்வு... ஏன் என்றால் ஒரு காலத்தில் நானும் குண்டா இருந்து, நிறைய கஷ்டப்பட்டு 13 கிலோ குறைத்தேன். அந்த 'இரத்த கண்ணீர்' கதையை விரைவில் எழுதுகிறேன்:(
----------------------------------------------------------------------------------------

1988 ஆம் ஆண்டு சச்சின் 10வது வகுப்பு தேர்வில் தோல்வி. ஆனால் 2008 பத்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் முதல் பாடமே சச்சினை பற்றி தான்! முயற்சியே பலம்- இப்படி ஒரு குறுந்தகவல் வந்தது. அன்றே சச்சின்- ஒரு சுனாமியின் சரித்திரம் என்னும் புத்தகத்தை இரவல் வாங்கி படித்தேன். ஓ மை காட்ட்ட்ட்ட்ட்ட்ட், சச்சின் இஸ் சிம்பிலி சூப்ப்ப்ப்ப்ப்ர்ப்ப்!! எத்தன சங்கடங்கள், சோதனைகள், சாதனைகள், கஷ்டங்கள், கேப்டனாக தோல்வி, சக விளையாட்டர்களின் பொறாமை, பகைமை, கிரிக்கெட் வாரியம் செய்தவை.... அவரின் வாழ்க்கையை படம்பிடித்து காட்டியது அப்புத்தகம். அதை படித்தவுடன் ஏதோ ஒரு புத்துணர்ச்சி!!
-------------------------------------------------------------------------------------

நேற்று சன் டிவில காதல் படத்த போட்டான். நானும் அக்காவும் பார்த்து கொண்டிருந்தோம். சந்தியாவின் வண்டி கோளாறு ஆனவுடன் பரத் கடைக்கு எடுத்து செல்வார்கள். அப்போது சந்தியாவின் தோழி, "வண்டிய நீங்க தான் பாக்கனுமா? வண்டி ஆசைப்படுது." என்பாள். ஆனால் நேற்று 'வண்டி ஆசைப்படுது' என்ற ஷாட்டை கட் செய்துவிட்டான்.
நான் உடனே, "அக்கா, ஒரு டயலாக்க கட் பண்ணிட்டான் பாவி பய."

அக்கா ஒரு மாதிரியாய் என்னை பார்த்து, "ஆமா.. நீ எத்தன தடவ இந்த படத்த பாத்துருக்க... இவ்வளவு கரெக்ட்டா சொல்றே."

நான் அசட்டு சிரிப்பு சிரித்தேன்:)
---------------------------------------------------------------------------------------
பசங்க படத்தை பார்க்கனும்னு ரொம்ப ஆர்வமா இருக்கு. ஆனா எங்க ஊர்ல இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. ஆன்லைனிலும் தேடி பார்த்தேன். ஒன்றும் சரியா கிடைக்கவில்லை.:(
---------------------------------------------------------------------------------------

குறிப்பு: அவியல், குவியல் அப்படின்னு சீனியர்கள் எழுதுகிறார்கள். நானும் இப்பதிவுக்கு பொரியல் என்று தலைப்பு வைக்கலாம்னு இருந்தேன். ஆனால் அப்படி வைத்தால், சீனியர்களை கிண்டல் செய்வதுபோல் இருப்பதாக மக்கள் நினைக்கலாம். ஆகவே தான் தலைப்பை மாற்றினேன்:)

Apr 5, 2009

அயன் படத்துக்கு அப்பரம் நடந்த கதை

நேற்று அயன் படத்தை பார்த்தேன். அதுக்கு விமர்சனம் போட்ட பிறகு, தமிழ்மணத்தில் 'சூடனா இடுகைகள்' பகுதியிலும் தமிலீஷ்.காமில் popular பதிவில் இந்த திரைவிமர்சன பதிவு வந்தது ரொம்ம ஆச்சிரியமா இருந்துச்சு. 4 வருஷமா எழுதுறேன், ஒரு தடவகூட எந்த பதிவும் இப்படி வந்தது இல்ல. ஆனா, நேத்திக்கு... ஹாஹா... நன்றி கே வி ஆனந்து சாரே!!

அயன் படம் பார்த்துவிட்டு நடந்த ஒரு சம்பவம். செம்ம காமெடியா போச்சு. படம் பார்த்து கொண்டிருந்தபோது, எங்கள் பக்கத்தில் ஒரு சீன பெண்மணி உட்கார்ந்து இருந்தார். எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்னடா இவங்க, தியெட்டர் மாறி வந்துட்டாங்களான்னு நினைத்தோம். ஹிந்தி படங்களுக்கு மற்ற மொழி மக்கள் வருவார்கள், அப்படங்களுக்கு ஆங்கில subtitle இருக்கும். தமிழ் படங்களுக்கு அப்படி இருக்காது. ஆனா, ரொம்ப நேரம் கவனித்தோம் அவரை. அவரும் ரசித்து பார்த்து கொண்டிருந்தார். சில பாடல்களும் முடிந்தபிறகு, கைதட்டினார் வேற.

இடைவேளையின் போது,அவரிடம் கேட்டோம் உங்களுக்கு ஏதாச்சு புரியுதா. அவர் ஆங்கிலத்தில் சொன்னார், "எனக்கு இந்திய படங்களை பார்க்க புடிக்கும். சூர்யாவ பிடிக்கும். பின்னாடி ஒருத்தர் உட்கார்ந்து இருக்காரே,அவர் சூர்யாவா?"

நாங்கள் பின்னாடி திரும்பி பார்த்தோம், ஒருத்தர் உட்கார்ந்திருந்தார், வழக்கை தலை.. பார்ப்பதற்கு பொன்னம்பலம் மாதிரி இருந்தார். ஹாஹா... இவரை போய்... ஐயோ ஐயோ.. படம் முடிந்து அந்த சீன பெண்மணி தைரியமாக பின்னாடி திரும்பி 'பொன்னம்பலத்திடம்' கேட்டார், "நீங்க தானே படத்துல நடிச்சவங்க?"

எங்களுக்கு நெஞ்சு வெடிச்சுடுச்சு. 'பொன்னம்பலம்' பக்கத்தில் இருந்த அவரின் girlfriend/wife(யாருன்னு சரியா தெரியல்ல...) விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார். எங்களுக்கு சிரிப்பு தாங்க முடியல. கொஞ்ச நேரம் இருந்திருந்தால், அந்த சீன பெண்மணி என் அக்காவை பார்த்து,

"நீங்க தானே தமன்னா?" என்று கேட்டு இருப்பார். அக்கா(தமன்னாவின் தீவிர ரசிகர்)வும் ஆமா ஆமா என்று தலையாட்டி இருந்திருப்பார்!!!

நான்: ஆனா, அக்கா கொஞ்ச மாநிறமாச்சே....

என் தோழி: அக்கா சொல்லும் 'நான் வெள்ளையா தான் இருந்தேன்.. .சிங்கப்பூர் வெயில இப்படி மாறிட்டேன்னு' பீலா வுடும்!

ஹாஹாஹா.....

Apr 1, 2009

முட்டாள்கள் தினம்- எங்களுக்கு தீபாவளி மாதிரில!

முட்டாள்கள் தினம் வந்தாலே, யாரையாவது முட்டாளாக்க வேண்டும் என்று மனம் துடிக்கும்(அவ்வ்வ்வ்வ்வ்...) சென்ற ஆண்டு தொடங்கிய இந்த 'வியாதி' இந்த ஆண்டு வரை நீடிக்கிறது. சென்ற ஆண்டு ஒரே கதையை வைத்து 4 நண்பர்களை ஏமாற்றினேன். (இதலாம் ஒரு பொழப்பா அப்படின்னு நீங்க சொல்றது என் காதுல விழுந்தாலும்... விழாத மாதிரி இருந்துகிறேன்)


எத்தனையோ கதை எழுதுறோம்(ஓ... நீ எழுதுவதற்கு பெயர் கதையா.. சரி ரைட்டு), நமக்காக ஒரு கதைய அவிழ்த்துவிடுவோமே என்று ஆரம்பித்தேன். ஏப்ரல் 1ஆம் தேதி அன்று நிறைய பேர் உஷாராக இருப்பதால், ஒரு வாரத்திற்கு முன்பே என் வேட்டையை ஆரம்பித்துவிட்டேன். இப்போது எல்லாம் ஏப்ரல் 1ஆம் தேதி அன்று யாருமே ஃபோனைகூட எடுப்பதில்லை! ஹிஹி.... சரி நம்ம கதைக்கு வருவோம். இந்த வருடம் target அப்பாவி 5 நண்பர்கள்.


1) தோழனிடம் ஒரு வாரத்திற்கு முன் பேசி கொண்டிருந்தபோது, அவன் என்னை கிண்டல் செய்து பேசிய போது நான் சொன்னேன், " ஏய் இப்படி பேசாதே...என் bf கேட்டாருன்னா தப்பா நினைப்பார்." என்று பொய் சொன்னேன். அவன் அதிர்ச்சியாய், "என்னது bf? எப்போ இதலாம் நடந்துச்சு?" என்று ஆரம்பித்தவனிடம் ஒரு மெகா மகா பொய் கதையை கூறினேன். கொஞ்ச நாள்கள் கழித்து, bf என்னிடம் சண்டை போட்டதாகவும், நாங்க பிரிந்துவிட்டோம் என்பதாகவும் சொன்னேன். ஒரு வாரம் ஓடிய கதை, இன்று தான் உண்மையை போட்டு உடைத்து, இந்த உலகில் நீயும் ஒரு முட்டாள் தான் என்று மகுடம் சூடி பாராட்டினேன். :) பையன் கோபத்துல கொந்தளிச்சுகிட்டு இருக்கான்!!


2) வூட்டுல மாப்பிள்ள பாக்குறாங்கன்னு இன்னொரு கதை, இது சிட்னியில் படிக்கும் என் பள்ளி தோழிக்கு இமெயில் மூலம் அனுப்பினேன். பொண்ணு பயந்து, மிரண்டு போய், அட்வைஸ் மேல் அட்வைஸ் அனுப்பி அதன் பாச மழையை பொழிந்துவிட்டது. என்ன தான் சொல்லுங்க... நமக்கு ஒரு கஷ்டம் வந்தா... இந்த பாசக்கார புள்ளைங்க ரொம்ம்ப தவிச்சுடுறாங்கப்பா!! எப்படி ஓடியது என்பதை காண இங்க செல்லலாம்! இமெயில் கலாட்டா

பிறகு, அவளிடம் உண்மையை போட்டு உடைத்து, எனது இரண்டாவது சதத்தை அடித்தேன்.


3) இது மூன்றாவது பந்து, கண்டிப்பாக hatrick அடித்துவிட வேண்டும் என்று தோன்றியது. ஆக, மேல் சொன்ன இரண்டாவது கதையை குறுந்தகவல் மூலம் அனுப்பினேன் ஒரு தோழியிடம்.அவளும் ஓரளவுக்கு ஏமாந்துவிட்டாள்.


4) குறந்தகவல், இமெயில்....ஒகே. யாரு யாரோ கண்டுபிடித்ததை பயன்படுத்தினாயே, ஏன் நான் கண்டுபிடித்ததை பயன்படுத்தவில்லை என்று alexander grahambell கேட்டுவிடகூடாது பாருங்க. ஆக, நேற்று என் கல்லூரி தோழியிடம் ஃபோன் செய்து , "என் ஆண்ட்டி ஒருத்தர் ஒரு film production company வச்சு இருக்காங்க. அவங்க ஒரு குறும்படம் எடுக்க போறாங்க. உன்னைய நியூ இயிர் பார்ட்டில பாத்தாங்க. உன் ஃபோட்டா காட்டுனாங்க. நான் சொன்னே இந்த பொண்ணு என் தோழி தானு. என்னைய உன்கிட்ட பேசி பாக்க சொன்னாங்க. அதுல உன்னைய நடிக்க கூப்பிடுறாங்க. அந்த படம் ஒரு இளையர பத்தி.' என்றேன். பொண்ணு ரொம்ப fitness conscious. ஒல்லியா இருப்பா. அதனால நான் சொன்னேன் ," இந்த படத்துக்காக நீ ஒரு 20 கிலோ வேட் போடனும்." என்றதும் ஆச்சிரியத்தின் உச்சிக்கு போய்விட்டாள்.

அதுக்கு அப்பரம் உண்மை தெரிந்தபிறகு, என்னை பாராட்டிய ஒரே ஜீவன் இவள் தான். சிரித்து கொண்டே அவள், "உனக்கு எப்படி இப்படிலாம் தோணுது. very innovative idea."

5) இன்னொரு கல்லூரி தோழியிடம் assignment due date நாளைக்கு என்றதும் பதறிவிட்டாள். அவள் எனக்கு பாராட்டு விழா எடுக்க போவதாக சொல்லியிருக்கிறாள். ஹிஹி...

ஆமா... எல்லாரையும் ஏமாற்றுகிறோமே. நம்மை ஏன் யாருமே ஏமாற்றுவதில்லை?? :)))

Mar 24, 2009

பொறுமை

காரில், தினமும் காலையில் அம்மாவை அவர் வேலை இடத்தில் விடுவேன். அதற்கு அப்பரம் தான் கல்லூரிக்கு செல்வேன். நேற்று வழக்கம்போல் சென்று கொண்டிருந்தபோது, ஒரு கார் எந்த ஒரு indicatorரையும் போடாமல் திடீரென்று என் கார் சென்று கொண்டிருந்த laneக்குள் நுழைந்தது. ஒரு நொடி கவனமாக இல்லை என்றால், இரு வண்டியும் சுக்குநூறாகி இருக்கும்.

வந்த கோபத்தில், 20 வினாடிகள் தொடர்ந்து 'horn' அடித்தேன். ஒரே சத்தம்! பக்கத்து தடத்தில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டுனர்கள் எல்லாம் பயந்துவிட்டனர். பக்கத்தில் அமர்ந்திருந்த என் அம்மா, "பொறுமையா போ. ஹார்ன் அடிக்காதே."

நான்: நான் பொறுமையா போனுமா? முன்னாடி போறானே அவன்கிட்ட போய் சொல்லுங்க.

அம்மா: சரி விடு.... ஏதோ பழமொழி சொல்வாங்களே...என்ன அது...ஆஆ...நாய் குரைச்சா திருப்பி குரைக்ககூடாது....

நான்: நாய் குரைச்சா பரவாயில்ல? கடிச்சா? நம்மள கடிக்க வந்தா....?

அம்மாவிடமிருந்து பதில் இல்லை.

நான்: சொல்லுங்கம்மா....கடிக்க வந்தா என்ன பண்ணுவீங்க?

அம்மா: கம்ப எடுத்துகிட்டு போய் அடிக்க போவேன்.

நான்: ஹாஹா...அப்ப மட்டும் பொறுமை தேவையில்லையா?

அம்மா என்னை பார்த்து முறைத்தார். "இந்த புள்ளக்கிட்ட பேசி வெல்ல முடியாது!" என்பதே அவரின் முறைப்புக்கு அர்த்தம் :) ஹிஹிஹி....

Dec 31, 2008

சந்தோஷமா இருந்துச்சுப்பா....

சென்ற சனிக்கிழமை நெருங்கிய தோழியின் பிறந்தநாள். ஒரு மாசத்துக்கு முன்பே ஃபோன் செய்திருந்தாள்.


தோழி: ஏய் காயு, 27th அன்னிக்கு ஒரு mini bthday celebration வச்சுருக்கேன். வந்துடு தெரியுமா. அப்பரம் ஒரு small request. நீ எதாச்சு performance போடனும்.


நான்: performanceஆ??? என்ன செய்யனும்?


தோழி: ஏதாச்சு பண்ணு.

நான்: ஏதாச்சுன்னு, கோழி பிரியாணி எப்படி செய்யனும்னு காட்டவா?


தோழி: ஆண்டவா!! இந்த புள்ளைக்கு நல்ல புத்திய குடு!


நான்: சரி சரி, அதலாம் இப்ப stockல இல்ல....



தோழி: டேய், உன் கவிதைய ஒன்னு வாசி. super performanceaa இருக்கும்!



அவள் சொன்னது முதல் எனக்கு வயிறு கலக்கல்ஸ் ஆரம்பித்துவிட்டது. எழுத சொன்னால் எழுதிவிடுவேன். ஆனா அதை பல பேர் முன்னிலையில் படித்து காட்டுவது எல்லாம் வாழ்க்கையில் செய்யாத ஒன்று. சரி முயற்சி செஞ்சு பார்ப்போம் என்று கிளம்பினேன் 27th அன்று. முதல் நிகழ்ச்சியே என்னுடையது தான். அதற்கு பிறகு தான் மத்த நண்பர்களின் பாடல், ஆடல்.


குரல் சற்று தயக்கத்துடனும், கைகால் ஒருவித படபடப்புடனும் மைக்கை பிடித்தேன். 50 மக்களின் பார்வைபட தொடங்கினேன்,



அழகான கவிதை ஒன்று
எழுத சொன்னால்
எழுதியிருப்பேன்
அழுகுக்கு ஒரு கவிதை
எழுத சொன்னால்
என்ன எழுதுவேன்?


உன்னை பற்றி எழுத தமிழில்
வார்த்தைகள் பஞ்சம்
எனினும் இயற்றுகிறேன்
என்னால் இயன்ற கொஞ்சம்.



சூர்யா ஜோதிகாவுக்கு
நீ எத்தனையாவது
ரசிகை என்று
எனக்கு தெரியாது
ஆனால்
உன்னுடைய முதல் ரசிகை
நான்!


நான் தூளாக துவண்டிருந்தபோது
எனக்கு தூணாக துணையாயிருந்தாய்
இந்த தேவதையை உலகிற்கு அனுப்பிய
இறைவனுக்கு
பல கோடி நன்றிகள்



வள்ளுவன் இருந்திருந்தால்
உன்னை பார்த்தபிறகு
1330 குறட்களையும் உதறிவிட்டு
உன்னை பற்றியே பல லட்சம்
குறட்களை எழுதியிருப்பான்


கம்பன் இருந்திருந்தால்
உன்னை கண்ட பிறகு
பல்லாயிரம் காவியங்களை
படைத்திருப்பான்.


அவர்கள் பாவம் செய்தவர்கள்
உன்னை பற்றி எழுதமுடியவில்லை.
நான் புண்ணியம் செய்தவள்
இங்கு உன்னை பற்றி மட்டுமே
எழுதுகிறேன்.



நண்பர்கள் டாப் 10 வரிசையில் இனி
உனக்கும் எனக்கும் மட்டுமே
முதல் இடம்!
நட்பின் ஆஸ்கார் விருது உனக்கே
உனக்கு!



தளபதி ரஜினி மம்மூட்டி
நட்புக்காக விஜயகுமார் சரத்குமார்
காதல் தேசம் அப்பாஸ் வினித்
பட்டியல் ஆர்யா பரத்,
இப்படி நட்புக்காக வாழ்ந்தவர்கள்
வரிசையில்
உன் பெயரையும்
என் பெயரையும்
சேர்த்து கொள்வோம்!


அம்மா அடித்தால் வலிக்கும்
அப்பா அடித்தால் வலிக்கும்
அண்ணன் அடித்தாலும் வலிக்கும்
‘சைட்’ அடித்தால் வலிக்காது
என்ற தாரக மந்திரத்தை
எனக்கு கற்றுகொடுத்த
குருவே,
நீ வாழ்க!
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

சொல்லிமுடிப்பதற்குள் எல்லாரும் கைதட்டி விசில் எல்லாம் அடிச்சாங்கப்பா! தோழியின் அம்மா ஓடி வந்து கட்டிபிடித்து பாராட்டி தள்ளிட்டாங்க! வாழ்க்கையில என் கவிதைக்கு இப்படி ஒரு நேரடி பாராட்டு கிடைத்தது இதுவே முதல் முறை. வலைஉலகில் மட்டுமே திரிந்து கொண்டிருந்த என் கவிதைக்கு இந்த பாராட்டுகளுக்கு என்னை பிரமிக்க வைத்தது!

Dec 17, 2008

6 வயதில் ’கண்கள் இரண்டால்’....

நேத்திக்கு keyboard வகுப்புக்கு போயிட்டு வந்து ரொம்ப demotivated ஆயிட்டேன். நான் ரொம்ப slow learner தான். ஒத்துக்கிறேன். டீச்சர் உனக்கு "ரிதமே வராது” அப்படின்னு சொல்லிட்டு கிளம்பிபோயிட்டாங்க. music pieces எல்லாமே முன்னாலே கத்துகிட்டு வந்து அப்பரம் அவங்கிட்ட வாசிக்கனுமாம். அதுக்கு எதுக்கு டீச்சர்!

சரி அவங்க ஏதோ கோபத்துல பேசிட்டாங்கன்னு நானும் வீட்டுக்கு கிளம்பிவந்து விட்டேன். நான் எனக்கே inspiration தேடி கொள்வது youtube வீடியோக்களை பார்த்து தான்!

அந்த 6 வயசு பாலாஜி வாசிப்பை பார்த்து, எனக்குள்

“ச்சே....நீ கத்துக்கு வேண்டியது நிறைய இருக்கு. இந்த ஜன்மத்துக்குள்ள grade 8 வாங்கி ஒரு கலக்கு கலக்குற!” என்றது மனசு.:)

Dec 11, 2008

all day jolly day

அம்மா அப்பா ஊருக்கு போனால்...

அகக அகக....

என்ன ஒரு சொர்க்கம்!! அம்மா அப்பா ஊருக்கு சென்று இருப்பதால் அடுத்த 10 நாளுக்கு தினம் தினம் “where is the party tonight?" தான். சென்ற வருடம் இவ்வாறு நடந்தது. வீட்டில் ஒரு குட்டி gathering. all gals' party. இதுல என்ன விசேஷம்ன்னா.. இவங்க ஊருக்கு போனால், உலகத்திலேயே சந்தோஷம்படுவது எங்க குரூப் பசங்க தான். அன்னிக்கு தான் ஸ் எம் ஸ் பண்ணேன் தோழிக்கு

நான்: hey my parents are gg for a 10-day trip to india.

தோழி: wen?

நான்: thursday

தோழி: சரி, வெள்ளிக்கிழமை காலையில பெட்டி படுக்கையோட வந்துடுறேன்..

Oct 28, 2008

2 சூர்யா, 1 விஷால், 1 நயன்ஸ்

2 சூர்யா, 1 விஷால், 1 நயன்தாரா தீபாவளி cards அனுப்பினேன் நண்பர்களுக்கு.... நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் வாழ்த்து அட்டை. மத்த பயல்களுக்கு ஸ் எம் ஸ் தான்! தீபாவளி நல்லா போச்சு...பக்கத்து வீட்டு சீன வீட்டாருக்கு தீபாவளி பலகாரம்...கூடவே அவங்களும் எனக்கும் அக்காவுக்கும் தங்கச்சிக்கும் பணம் வச்சு கொடுத்தாங்க.



மதிய வேளையில் அக்கா தோழி வீடு, இன்னொரு 2 family friend வீட்டுக்கும் போய் collection! மொத்தமா சூப்பர் collection. தீபாவளி அன்னிக்கு ரீலிஸ் ஆகும் படங்களுக்கு collection ஆகுதோ இல்லையோ... எங்களுக்கு செம்ம collection!



ஒவ்வொரு வீட்டிலும் செம்ம வெட்டு வெட்டு...சாப்பாட சொன்னேங்க....

2 சுத்து பெருத்து போன மாதிரி இருக்கு. :)

கிடைத்த காச வச்சு தீபாவளி படம்- ஏகன் பாக்க போனோம்.....ஐயோ ஐயோ....அத பத்தி அப்பரம் சொல்றேன்.



எனிவேஸ், அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

Jul 29, 2008

அடுப்பூதும் பெண்களுக்கு கிரிக்கெட் எதுக்கு?


நான் கிரிக்கெட் விளையாடுறேனுங்கோ!!!!!!!!!!!!!!!!!


ஒரு மாதமா training போயிகிட்டு இருக்கேன். ரொம்ப நாளா ஒரு குழுவுல சேர்ந்து கிரிக்கெட் விளையாடனும்னு ஆசை! ஆறாவது படிக்கும்போதே, என் மாமா இந்த விளையாட்டை பத்தி என்கிட்ட சொன்னார். அன்று முதல் இந்த விளையாட்டின் மீது அவ்வளவு ஆசை! badminton/shuttle cock விளையாடும்போது, அதை வைத்து கிரிக்கெட் விளையாடி பார்ப்பேன் சரியான பேட் இல்லாமல்.

அதுக்கு அப்பரம் 9வது படிக்கும்போது, காற்பந்து விளையாட மோகம் ஏற்பட்டது. டேவிட் பெக்கம் மீது பயங்கர craze. அப்போது காற்பந்து உலக கோப்பை நடந்தது, bend it like beckham படம் வெளியானது. இப்படி போக, பள்ளியில் எங்க வகுப்பு மாணவிகள் அனைவரும் பள்ளி முடிந்து காற்பந்து விளையாட தொடங்கினோம். அப்போது
சிங்கை பெண்கள் காற்பந்து அணியில் சேர வாய்ப்பு கிடைக்க, என் வகுப்பு மாணவிகள் 5,6 பேர் கிளம்பினோம். கொஞ்ச நாள் தான் போக முடிந்தது. அதுக்கு மேல் தொடர வேண்டாம், படிப்பு கெட்டு போகும் என்று பெற்றோர்கள் நினைக்க, அதை விட்டுவிட்டேன்.

இப்போது, சிங்கை பெண்கள் கிரிக்கெட் அணியில் சேர்ந்து ஆடும் ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது.கடந்த ஒரு மாதமா training போய்கிட்டு இருக்கேன்.ரொம்ம்ம்பபப சூப்பரா போகுது. அங்கு வந்து பாக்கனுமே, நம்ம இந்திய பெண்கள் எல்லாம் என்னமா அருமையா விளையாடுறாங்க.

முதல் நாள் அங்கு சென்று பிரமித்துபோனேன். பெண்களுக்குள் இப்படிப்பட்ட அற்புதமான திறமையா என்று நினைத்து பெருமைப்பட்டேன். off spinner நான். ஆக அதுக்கு ஏற்றாற்போல் சில பயிற்சிகளை பயிற்சிவிப்பாளர் சொல்லி கொடுத்தார். சக விளையாட்டாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை இருக்கு.


லட்சுமி என்று ஒருவர் இருக்கிறார். இங்கு சிங்கையில் கொஞ்ச காலமாக வேலை பார்த்துவருகிறார்.இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட் அணியில் இருந்தவராம். சூப்பர்ர்ர்ர் spin bowler. ரொம்ப நல்ல நுனக்கமான விஷயங்களை அறிந்தவர். எங்களுக்கு சொல்லி கொடுக்கும் விதமும் நல்லா இருக்கும். angela என்பவர் ஒருவர் இருக்கிறார். இவர் part time lecturer. இரண்டு குழந்தைகளுக்கு அம்மா! பார்த்தால் அப்படி தெரியாது. ஏதோ காலேஜ் இரண்டாம் ஆண்டு படிக்கும் பொண்ணு மாதிரி இருப்பாங்க. அப்பரம் 14 வயது பொண்ணு, தனம், ரொம்ம்ம்பப innocent. ஆனா fast bowling போடுவா பாருங்க... பயங்கர வேகத்தில் போடுவாள்!

கிரிக்கெட் விளையாடுவது ஒரு பக்கம் இருக்க, நிதானமாக விளையாடும் ஆற்றல் வேண்டும். அதைவிட கிட்டதட்ட 20 ஓவர்களுக்கு fielding செய்யும் உடல்வலிமை தேவை. அதற்கு fitness level அதிகமாக இருக்கவேண்டும். இப்படி பல விஷயங்களை கற்று கொண்டு வருகிறேன். நிறைய சர்வதேச அளவில் பெண்கள் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளில் நடக்கின்றன (நிறைய பேருக்கு இது தெரிவது இல்ல)மலேசியாவில், தாய்லாந்தில், சீனாவில் என பல போட்டிகள் நடைபெறுகின்றன.

நானும் நாளைக்கே ஒரு போட்டியில கலந்துகிட்டு hatrick எடுத்து, woman of the match ஜெயிச்சு, டீவி, பேப்பர்ல நம்ம போட்டோ வந்து, 10 பேரு autograph வாங்கும் நிலை வரும். அப்பரம்.. என் பேரும் வரலாற்றுல இடம்பெற வேண்டாமா!

இருந்தாலும்,அம்மாவுக்கு இதுல அவ்வளவா உடன்பாடு இல்ல! training இரண்டு நாள். டைம வேஸ்ட் பண்ணுறே என்றார்கள். காலேஜ், படிப்பு கெட்டுபோயிடும் என்கிறார்கள். "நம்ம இந்திய பிள்ளைகளுக்கு படிப்பையும், விளையாட்டையும் balance பண்ண தெரியாது. விளையாட்டுன்னு போனா, படிப்புல கவனம் இல்லாம போயிடுங்க" என்றார். ம்ம்ம்ம்... என்னத்த சொல்ல,அடுப்பூதும் பெண்களுக்கு கிரிக்கெட் எதுக்கு? என்று நினைக்கிறார்கள் என்னவோ.

Jul 20, 2008

weekend கொண்டாட்டம்

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஓயாத வருடம் இது என்றே சொல்லலாம். இந்த பிறந்தநாள் பரிசு வாங்கியே நான் நொந்து போயிட்டேன்... தோழிகளுக்கு என்றால், watch, doll, book இப்படி எதாச்சு கொடுக்கலாம்... தோழர்களுக்கு என்றால் wallet, shirt, tie இப்படி கொடுக்கலாம். இந்த வருடம் ஆரம்பித்தது முதல் பிறந்த நாள் பரிசு வாங்கி வாங்கி, எனக்கே கொஞ்சம் bore அடிச்சுபோச்சு!:)

நேத்திக்கு பள்ளி தோழன் வினோத் பிறந்தநாள். பள்ளி மாணவ தலைவனாக இருந்தவன். அதே வருடம் நான் பள்ளி மாணவ துணை தலைவியாக இருந்தே. நல்ல பையன்... இவனுக்கு கொஞ்சம் தமிழ் தடுமாறி தான் வரும்.. அதவச்சு செமையா கிண்டல் செய்த காலமெல்லாம் உண்டு. தமிழ் வகுப்புல முன்னாடி உட்கார்ந்து இருப்பான்.. அப்படியிருந்தும், நல்லா தூங்குவான் வகுப்பில். அதுக்கு அப்பரம் +1 படிக்க வேற பள்ளிக்கு போயிட்டான். ஆனாலும், எங்கள் பள்ளி குரூப் நண்பர்கள் மாதம் ஒரு முறை மீட் பண்ணுவோம்...

போன திங்கட்கிழமை ஃபோன் செய்தான்...

வினோத்: ஏய் காயத்ரி, நான் வினோத் பேசுறேன்.

நான்: சொல்லு, எப்படி இருக்க?

வினோத்: ஐ எம் குட். by the way..என் birthday party celebration வீட்ல வச்சிருக்கேன் வர saturday. can u make it?

நான்: saturday...முடியாதுனு நினைக்குறேன்...anyway i confirm with u by friday.

வினோத்: அதுக்கு முன்னாடியே சொல்லிடு. ஏன்னா i am goin to order food.

நான்: அப்படியா? which resturant?

வினோத்: sakunthala's food palace.

நான்: really!!! ok நான் வரேன்...

அந்த கடையிலிருந்து சாப்பாடு என்றால்.. எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனாலேயே சென்றேன். இரவு 7 மணிக்கெல்லாம் சென்றுவிட்டேன். நான் ரொம்ப லேட்டா போயிருப்பேன் என்று பாத்தா... அங்க நான் தான் முதல் ஆளு!! என்னப்பா வினோத் யாரையும் காணும்? என்றேன்.

வந்துகிட்டு இருப்பாங்க என்றான். பொதுவா, வீடுகளில் வைக்கும் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தான் எனக்கு பிடிக்கும். feel at home என்ற ஃவீலிங் கிடைக்கும். நான் என் சொந்த வீடு மாதிரி டீவிய ஆன் செய்து விஜய் டீவியில் இசை குடும்ப பார்த்து கொண்டே, வினோத் அப்பா அம்மாவிடம் அளவளாவி கொண்டிருந்தேன்.

கொஞ்ச நேரத்தில், என்னுடைய மற்ற பள்ளி தோழிகளும்/தோழர்களும் வந்துவிட்டனர். அப்படியே அரட்டை அடித்து கொண்டிருந்தோம். அப்ப, ஒரு பொண்ணு வந்துச்சு. வினோத் +1 பள்ளியில் படித்த பொண்ணாம். அதுக்கு முன்னாடி நாங்க யாரும் பார்த்தது இல்ல. வினோத் அவளை எங்களிடம் அறிமுகம் படுத்தினான்.

வினோத்: hi guys, she is my(என்றவரைக்கும் சத்தமாக இருந்தது அவன் குரல்..)
my girlfriend(மெல்லிய குரலில் யாருக்கும் கேட்காதவாறு சொன்னான்..)

புரிந்துகொண்டோம்! ஹாஹா...

நான்: அது மட்டும் ஏண்டா censor பண்ணி சொல்லுறே!

நாங்கள் கிண்டலடித்து சிரித்தோம். பையனுக்கு ஒரே வெட்கம்! :)))) அவன் பெற்றோர்களுக்கு ஓரளவுக்கு தெரியுமாம்!:)

வந்த வேலையை கவனிக்க சென்றோம். கோழி, மீன், மட்டன், பிரியாணி, பாயாசம்... என்று ஒரு வெட்டு வெட்டினோம். இரண்டு மூன்று ரவுண்டு... வயிறு வாயிலிருந்தே ஆரம்பித்தது! அம்புட்டு சாப்பிட்டோம். இத்தனையும் சாப்பிட்டு, நான் கேட்டேன் "கொஞ்சம் தயிர் கிடைக்குமா". தோழன் ஒருவன் என்னை முறைத்து பார்த்தான்.

ஆண்ட்டி எனக்காக ஸ்பெஷலா கொண்டுவந்தாங்க. அப்பரம் ஐஸ்கீரிம் கேட்டேன். அதையும் முழுங்கிவிட்டு நடக்க முடியாமல், உருண்டு கொண்டு வீடு திரும்பினேன்.

Jun 28, 2008

நான் நானாக இல்ல

என்னமோ தெரியல கொஞ்சம் நாளா ஒரு மாதிரியாவே இருக்கு. concentration சிதறி போகுது. இன்னிக்கு ரொம்ப மோசமா போச்சு. keyboard lesson போகும்போது எப்போதுமே கொஞ்சம் குஷியா தான் இருப்பேன்.. ஆனா இன்னிக்கு ரொம்ப டல்லா இருந்தேன். லேட்டாக போயிட்டேன். வாசிக்க ஆரம்பித்தேன்!

rythm தாறுமாறா போச்சு! tempoவ follow பண்ண முடியல... வாசிக்கவே வரல்ல.. ரொம்ப ஒரு மாதிரியா போச்சு! போன வாரம் பயிற்சி செய்த பாடலை மறுபடியும் வாசித்தால், சரியாகவே notations பாத்து வாசிக்க முடியல! ச்சே!! ஏதோ ஆச்சு எனக்கு! :((

Jun 24, 2008

'அவன்' இன்றி ஓர் அணுவும் அசையாது.

தினமும் காலேஜுக்கு கார் டிரைவ் பண்ணிட்டு தான் போவேன். இன்னிக்கு அப்பாவுக்கு கார் தேவைப்பட்டதால், அவர் காலையிலேயே கார் எடுத்துகிட்டு சென்றுவிட்டார். நேற்று இரவே கேட்டார்,"உனக்கு ஓகே தானே, இல்ல.." என்றார்.



நோ! நான் தான் பெரியவங்க கிழிச்ச 'கோடு'டை தாண்டாத பிள்ளையாச்சே. ஆக நான், "it's ok. u take it." அப்படி என்றேன். இருந்தாலும் மனசுக்குள் கஷ்டமா இருந்துச்சு. ஒரு நாள் கார் ஓட்டவில்லை என்றால், ஏதோ பைத்தியம் பிடித்தவள் போல் இருப்பேன். ஏனா, i luv my car to the core! அவனுக்கு (காரை தான் சொல்றேன்.) நான் இட்ட செல்ல பெயர் "sweetheart".



என் நண்பர்கள் கார் எப்படி இருக்கு என்று கேட்பதைவிட "உன் darling எப்படி இருக்காருன்னு' தான் கேட்பாங்க! ஒரு நாள், என் தோழி வீட்டுக்கு சென்று இருந்தேன். தோழி அவள் அம்மாவிடம், "காயத்ரி, அவளோட darlingக கூட்டிகிட்டு வருது." என்று சொல்லியிருந்தாள்.



ஆண்ட்டிக்கு தெரியாது காரை தான் டார்லிங் என்கிறோம்னு. வீட்டுக்குள் சென்றுவுடன், "உன் darling எங்கே" என்றார் ஆண்ட்டி.



நான், " கீழே கார்பார்க்ல இருக்குது" என்றேன்.



ஆண்ட்டி உடனே, "ஐயோ, ஏன்? மேலே வர சொல்லவேண்டியது தானே" என்றார். அப்ப ஆரம்பிச்ச சிரிப்பு ஒரு மணி நேரத்துக்கு ஓயவே இல்ல.



சரி இன்னிக்கு கதைக்கு வருவோம். டார்லிங்க அப்பா எடுத்து சென்றுவிட்டதால், நான் பஸில் கிளம்பினேன். இரண்டு வருஷத்துக்கு முன்னாடி தான் டார்லிங் வந்துடுச்சு. அதுக்கு முன்னாடி எல்லாம் பஸ், train தான்!



காலையில் 6.25 பஸில் ஏறினேன்! எனக்கு பஸிலோ அல்லது trainல் போக பிடிப்பதற்கு ஒரே காரணம், நல்லா 'சைட்' அடிக்கலாம். ஆனா, எனக்குன்ன ஒன்னுமே கண்ணுல படாது. எல்லாம் ஒன்னாவது இரண்டாவது படிக்குற பசங்களா பஸுல ஏறி என்னைய செம்ம காண்டாக்குவாங்க!!



'போர்' அடித்த வகுப்புகளை ஒரு வழியா முடித்துவிட்டு வீடு திரும்ப பஸ் ஏற வந்தேன். அவ்வளவு கூட்டமா இருந்துச்சு! சரி இந்த பஸுல ஏற முடியாது. பசி வேற எனக்கு... ஆக நடக்க ஆரம்பித்தேன். 40 நிமிடங்களில் வீடு வந்து சேர்ந்தேன்.



அப்ப தான் என் காரை ரொம்ம்ம்ம்ம்பபப 'மிஸ்' பண்ணேன். absence makes the heart grow fonder என்ற ஆங்கில பழமொழி ஒன்று இருக்கு. அதாவது, ஒருத்தரை பிரிந்து இருக்கும்போது தான் அவர் மீது இன்னும் ஆசை அதிகரிக்குமாம்! அப்படி போச்சு என் மனநிலைமை!



ஆக, என் வீட்டுக்காரர்... ச்சி ஐ மின் என் வீட்டுக் 'கார்' இல்லாமல் என்னால் செயல்பட முடியாது. அவன் இன்றி ஓர் அனுவும் அசையாது!



(குறிப்பு: இந்த பதிவுக்கு 'இரண்டாவது நாள்..யப்பாடா' என்று தலைப்பு கொடுக்கலாம்னு தான் நினைச்சேன். ஆனா, என்னால் தர்மடி வாங்க முடியாது என்பதால் இந்த தலைப்பு)



முதல் நாள்.. யப்பாடா



என் டார்லிங் நினைத்து எழுதிய கவிதை(கொஞ்சம் மொக்கையாக இருக்கும்.:)

Jun 23, 2008

முதல் நாள்..யப்பாடா

இன்னிக்கு முதல் நாள், கல்லூரியின் மூன்றாவது வருடம். நேத்திக்கு ராத்திரி சரியாவே தூங்க முடியல. ஏன்னு தெரியல. கைப்பேசியில் alarm clock நேரத்தை காலை 5.15 வைத்தேன். விடிய காலை 2.15 எழுந்து ரா பிச்சைக்காரன் மாதிரி உட்கார்ந்து கொண்டேன். தூக்கமும் வரல...

மதியம் 2 மணி எப்படா வரும்? காலேஜ் விட்டு எப்படா வீடு செல்வோம் என்று இருந்துச்சு.

சரி வகுப்பு வெளியே எதாச்சு கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கான்னு பார்த்தேன்.. எந்த பசங்களையும் காணும்! தூங்கிவிட்டேன்.

(இது எல்லாம் ஒரு பதிவான்னு கேட்காதீங்க. நான் நல்ல தான் இருந்தேன். எப்ப படிப்பு ஆரம்பிச்சாங்களோ, இப்படி ஆகிட்டேன்! எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன்....அவ்வ்வ்வ்)

Jun 21, 2008

அம்மா, நான் schoolக்கு போகல...

இரண்டு மாசம் லீவு முடிஞ்சு திங்கள் கிழமை காலேஜ் ஆரம்பிக்க போகுது. ஐயோ மறுபடியும் காலேஜ் ஆரம்பிக்க போகுதேனு நினைச்சாவே, எனக்கு அழுகாச்சியா வருது. (இந்த வயசுல போய்.. ச்சி..உனக்கு அசிங்கமா இல்ல அப்படினு நீங்க சொல்றது என் காதுல கேட்குதுங்க..)

இருந்தாலும் என்ன பண்ண... அம்புட்டு assignments, projects, weekly tests, surprise quizzes, exams மறுபடியும் வர போகுதுன்னு நினைச்சா, எனக்கு கொஞ்சம் ஒரு மாதிரியாவே இருக்கு!! இந்த ஒன்னாவது படிக்கற பசங்க, 'நான் ஸ்கூலுக்கு போகலனு" சொல்றது போல என் மனமும் அடம்பிடிக்கிறது. பரவாயில்ல... சமாளித்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கு.

இந்த லீவுல நான் 4 புதிய விஷயங்களை கத்துக்கனும்னு ஆசைப்பட்டேன். அதுல இரண்டு விஷயம் ஓரளவுக்கு நல்லாவே வந்துட்டு.

1) musical keyboard கத்துக்கனும்னு நினைச்சேன். இப்ப 6 lessons போயிட்டேன். எனக்கு திடீரென்னு ஆசை வந்தது ar rehman பேட்டிய பாத்த பிறகுதான். தமிழ் புத்தாண்டு அன்று 'காபி வித் அனு' நிகழ்ச்சியில் பேசிய போது பாத்தேன். ரொம்ப inspirational போச்சு!! உடனே முடிவு பண்ணேன். பக்கத்துல உள்ள musical schoolல இப்ப keyboard கத்துகிறேன். 6 lesson போனபிறகு, ஏதோ ஏ ஆர் ரகுமானுக்கே நம்ம தான் குரு மாதிரி ஒரு ஃபீல்.(ஹிஹி.. இந்த build-upக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல...)

உருப்படியா கத்துக்கிட்ட முதல் விஷயம் இது. தினமும் வீட்டிலும் பயிற்சி செய்வேன்.


2) இரண்டாவதா hip-hop dance கத்துகிட்டேன். ( நிறைய பேரு விழுந்து விழுந்து சிரிக்குற சத்தம் எனக்கு கேட்குது...hoi!!)

ரொம்ப நாளா எங்க பாட்டி சொல்வாங்க, மாவு ஆட்ட கத்துக்கோன்னு. அவங்க சொல்றத நான் இப்ப செய்றேன். நான் hip-hop டான்ஸ் ஆடுறது மாவு ஆட்டுற மாதிரியே இருக்கும். நமக்கு கையும் காலும் ஒரே நேரத்தில் coordination வராது. நான் போய் டான்ஸ் ஆடிட்டாலும்....ம்ஹும்... ஏதோ கையும் காலையும் குளிர்ஜொரம் வந்த மாதிரி அசைச்சுகிட்டு வந்துடுவேன்.

சும்மா டைம் பாஸுக்காக போனேன். அவ்வளவுதான்!

3) சமைக்க கத்துக்கிட்டேன்.(இல்ல இல்ல.. அப்படி ஆசைப்பட்டேன்.)

அம்மா அடிக்கடி சொல்வாங்க "சமையல் கத்துக்கோ, சமையல் கத்துக்கோ! போற இடத்துல இதுகூட சொல்லி தரலியானு என்னை தான் சொல்வாங்க...".

என்னது போற இடமா?? அப்படின்னா? என்று நான் கேட்பேன்( பதில் தெரிந்திருந்தும்..ஹிஹி..) அம்மா பதில் சொல்லமாட்டாங்க... அதுக்கு எல்லாம் இன்னும் நிறைய வருஷம்ம்ம்ம்ம் இருக்கு. இருந்தாலும் டைம் பாஸுக்காக சமையலறைக்குள்ளே புகுந்து என் வேட்டையை ஆரம்பித்தேன்..

முதல் நாளே mutton fry, ரசம்! சாப்பிட்டோம்! அதுக்கு அப்பரம் எனக்கு 4 நாள் mouth ulcer வந்துட்டு! உணவினால் வந்த பிரச்சனையா? இல்ல..சும்மா coincidenceஆ நடந்ததானு தெரியல.. அதுக்கு அப்பரமும் நான் என் வேட்டையை நிறுத்தல. புறப்பட்டாள் காயத்ரி கோழி குழம்பு செய்ய. ஓரளவுக்கு நல்லா வந்துச்சு. இப்படி இரண்டே நாள் தான் சமைத்தேன். ஆனா, ரொம்ப bore அடித்துவிட்டது. நிறுத்திவிட்டேன்.

4) ஹிந்தி மொழி கத்துக்க நினைத்தேன். நிறைய ஹிந்தி படம் பார்த்தேன் (with english subtitles) ஹீரோக்களை ரசித்து பார்த்தேனே தவிர ஹிந்தி கற்று கொள்ள முடியவில்லை.

இப்படி ஏதோ என் லீவு 'லீவு' எடுத்து கொண்டது!! அவ்வ்வ்.... இந்த பதிவ எழுதும்போதுகூட என் மனம் "i don't wanna go college." என்கிறது.