Dec 30, 2015

Romantic Suspense Tamil Short Film- கண நேர நினைவுகள்
இது நான் இயக்கிய மூன்றாவது குறும்படம். உங்களது விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்த்து.....

Dec 24, 2015

பசங்க 2 விம்ரசனம்- இந்த வருடத்தின்.....

இனி இந்த வருடத்தில் வேறு எந்த படங்களையும் பார்க்க கூடாது-னு முடிவு எடுத்துட்டேன். ஏனா இந்த வருடத்தின் சிறந்த படத்தை பார்த்து விட்டேன்.

பசங்க 2.

குழந்தைகள் நடித்து, பெற்றோர்களுக்கும் பெரியவர்களுக்கும் பாடம் கற்று கொடுக்கும் படம் இது. அறிவுரை கூறும் படமாக இருந்திருக்கலாம். ஆனால், இயக்குனர் பாண்டிராஜ் அந்த அபத்தத்தை செய்யாமல் அனைவரும் ரசிக்கும்படி படத்தை தந்துள்ளார். குழந்தைகள் நடிப்பாக இருக்கட்டும், சூர்யா, அமலா பால் நடிப்பாக இருக்கட்டும், கட்சிதமாக உள்ளது படத்துக்கு.

படத்தின் வண்ணம் இக்கதைக்கு இன்னொரு பலம். எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது, வசனங்கள் தான்.

1) குழந்தை ஒன்று கேட்கும், tamil mediumக்கும் english mediumக்கும் என்ன வித்தியாசம்.

"தமிழ் மிடியத்துல படிச்சவன் தமிழ்ல கெட்ட வார்த்தை பேசுவான்.
இங்கிலீஷ் மிடியத்துல படிச்சவன் இங்கிலீஷ்ல கெட்ட வார்த்தை பேசுவான்."

2) குழந்தையை பள்ளியில் சேர்க்கும்போது அது கதை ஒன்று சொல்லும். தலைமையாசிரியர் சிரிப்பார், ஆனால் பெற்றோர்கள் சிரிக்க மாட்டார்கள்.

அதற்கு தலைமையாசிரியர்: ஏன் நீங்க சிரிக்க மாட்டேங்கிறீங்க?"

குழந்தை: நான் பேசினா, அவங்களுக்கு சிரிப்பு வராது. வெறுப்பு தான் வரும்.

3) 70கிலோ உள்ளவங்க 17கிலோ உள்ள குழந்தைய அடிக்கறது எவ்வளவு பெரிய வன்முறை

இப்படி நச்- என்ற வசனங்கள் படம் முழுக்க உண்டு.

இப்படத்தில் நடித்த குழந்தைகளை பாராட்டாமல் இருக்க முடியாது. ஆண் குழந்தை நட்சித்தரம் நகைச்சுவையில் கலக்கி இருக்கிறார். குறிப்பா, தன் அப்பாவிடம் "வீட்லேந்து கிளம்பும்போது, சாவி இருக்கா. பர்ஸு இருக்கானு செக் பண்றீயே? எப்பாவாச்சு  மூளை இருக்கா-னு செக் பண்ணி இருக்கீயாப்பா?" என்று சொல்லும் போது சிரிப்பு வெடி சத்தம் அரங்கம் முழுதும் ஒலிக்கிறது.

பெண் குழந்தை நட்சித்தரம் மேடை ஏறி கதை சொல்லும்போது, கண் கலங்காதவர் யாரும் இருக்க முடியாது.

இப்படி காட்சிக்கு காட்சிக்கு படம் சுவாரஸ்சியம்.

2015 வருடத்தை சந்தோஷமாய் நிறைவு பெற, இப்படத்தை கண்டிப்பாக பார்க்கவும். மன நிறைவு, சந்தோஷமும் தரகூடிய தரமான படம்.

நன்றி பாண்டிராஜ், சூர்யா!

Dec 19, 2015

தங்கமகன் நல்லா இருக்கு! thanks to ஷாருக் ஜி!

dilwale படம் பார்த்துட்டு நீங்க, புலி படம் பாருங்க, புலி படம் சூப்பர்-னு சொல்வீங்க.

dilwale படம் பார்த்துட்டு நீங்க, சுறா படம் பாருங்க! அட என்னமே செதுக்கி இருக்காரு அப்படினு சொல்வீங்க!

அப்படி தான் ஆசையோடு போனேன் dilwale படம் பார்க்க! அதுக்கு அப்பரம் என் மேலயே எனக்கு கோபம். கோபம் தணிக்க தான் தங்கமகன் பார்க்க சென்றேன். அப்பரம் தான் கொஞ்சம் சமாதானம் அடைந்தேன். 


தங்கமகன் படத்தில் பிடித்தவை:
+ ஏமிக்கும் தனுஷ்க்கும் உள்ள கெமிஸ்ட்ரி.

+சமந்தாவுக்கும் தனுஷ்க்கும் உள்ள மகா மெகா கெமிஸ்ட்ரி (படம் பார்த்த அனைவருக்கும் தனுஷ் மேல லைட்டா பொறாமை வந்திருக்கும். பல் இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறா-னு நம்ம ஒதுங்கி போக வேண்டியது தான்)


+ சமந்தா தனுஷ் நடித்த சில காதல் காட்சிகளில் அமுதம் போல் வழிந்த விரசம் இல்லாத காதல்.

+கே ஸ் ரவிகுமார்!! சார்!! பின்னிட்டீங்க! இப்போது உங்களுக்கு பொற்காலம் நடிப்பதில்! இதையே தொடர்ந்து செய்யலாம்! இயக்குனர்கள் நடித்தால் பார்க்க சாயிக்காது என்பதை உடைத்து விட்டீர்கள்!

+ புதிய முகம் ஆதித் அருண் (குறும்படங்கள் பலவற்றில் நடித்து இருக்கிறார். காதலில் சொதப்புவது எப்படி குறும்படத்தின் ஹீரோ இவர் தான்). இவரது நடிப்பும் அருமை. 

+பாடல்களும் அது படத்தில் வரும் இடங்களும் ரொம்ப பொருத்தமா இருக்கு.

+முக்கியமா எனக்கு பிடிச்சது. படத்தில் நீளம். இரண்டு மணி நேரம் இரண்டு நிமிடங்கள் தான்.

+ஆண்ட்ரியாவின் குரல், ஏமிக்கு கச்சிதமாய் பொருந்திய வண்ணம்.

+சமந்தாவும் பிரமாதமாய் அவரே அவருக்கு செய்த டப்பிங். குறிப்பா, தனஷை பார்த்து "யப்பா யப்பா...ஐயோ ஐயோ...ம்ம்ம்...லவ் யூ லவ் யூ!" என சொல்லும் போது....

என் மனதில் தோன்றியது "இந்த நடிப்ப இத்தன நாளா எங்கம்மா ஒலிச்சு வச்சு இருந்த?" 

*******************************

ஆக இது இன்னொரு VIPஆ?

அப்படியும் இல்லை.

- முதல் பாதியில், காதல், இளமை என்று திரைக்கதை ஜாலியாக இருந்தாலும், வலு இல்லாமல் இருந்தது. இரண்டாம் பாதி கதைக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை. ஆக, ஏதோ இரண்டு கதைகளை பார்த்த எண்ணம் தோன்றுகிறது. 

- வில்லன் இருந்தாலும் இல்லாத மாதிரி இருக்கு. 

- தனஷ் ஏற்கனவே நடித்த '3' படத்தின் சாயல் நிறைய தெரிந்தது. 

- பஞ்ச் டயலாக் என்ற பெயரில் சில நீளமான வசனங்கள் நல்லா இல்லை.

- ராதிகாவின் நடிப்புக்கு தீனி போடவில்லை என்று தோன்றுகிறது. அவரை இன்னும் நல்லா பயன்படுத்தி இருந்திருக்கலாம்.

- சதீஷின் காமெடி பெரிய பலம் சேர்க்கவில்லை.


தங்கமகன்:

வைரமகன் என்று இல்லாமல் இருந்தாலும், ஓரளவுக்கு வெள்ளிமகன் இடத்தை பிடித்துவிட்டான்! 

Dec 15, 2015

அடுத்த குறும்படத்தின் புதிய பாடல்!

நாங்கள் எடுத்த குறும்படம், கண நேர நினைவுகள்.

அப்படத்தில் வரும் பாடல் இதோ!!


உங்களது ஆதரவையும் கருத்துகளையும் எதிர்பார்த்து......

அடுத்த குறும்படம்- கண நேர நினைவுகள்

நான் குறும்படங்கள் எடுக்க ஆரம்பித்து கிட்டதட்ட 3 வருஷம் ஆச்சு. இந்த 3 வருடங்களில் 3 படங்கள். கதைகள் அனைத்தும் நான் பல வருடங்களுக்கு முன்பு எழுதியவை. கதைகளை நான் இவ்வலைப்பூவில் வெளியிடுவேன். அப்போது எல்லாம் தெரியாது, கதை படமாக மாறும் என்று.

எப்படி படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை வந்தது?

youtube, வந்த பிறகு வந்த ஆசை தான். பிறகு, பல குறும்படங்கள் பார்த்தபின்ன ஆசை அதிகமாச்சு. ஆசை யாரை விட்டது என்பது போல நானும் கேமிராவை தூக்கினேன் முதல் படத்துக்கு.

முதல் படம்- லவ் ஸ்டாப்
https://www.youtube.com/watch?v=tq1qEreJmps

பிறகு, இரண்டாவது படம்- காதல் கவ்வும்
https://www.youtube.com/watch?v=YERvbQJhlKI


இவ்விரண்டு படங்களும் ரொம்ப குறைவான பொருட்செலவில் தயாரிக்கப்பட்டவை. சொன்ன போனால், சாப்பாடு கூட படத்தில் நடித்தவர்கள் தான் எனக்கு வாங்கி கொடுத்தார்கள். ஹிஹிஹி....

ஆனால், மூன்றாவது படம் வேற மாதிரி இன்னும் அழகாய் இருக்க வேண்டும் என நினைத்தேன். படத்தில் பாடல் கூட உண்டு. நண்பர்கள் மூலமாகவும் அவர்களுக்கு தெரிந்தவர்கள் மூலமாக, இசையமைப்பாளர், பாடகி, பாடலாசிரியர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் என்ற ஒவ்வொரு துறையில் புதிய நபர்களுடன் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது.

பாடல் இயற்றிய அனுபவே தனி. இரண்டு மணி நேரத்தில் பாடலை முடித்தோம். சொற்கள் இசையில் அமர, அது புதிய வடிவமாய் உருவம் பெறும் போது, செம்ம போங்க! அந்த உணர்வே தனி!!

இரண்டே நாட்களில் படத்தை முடித்தோம். படம் எடுக்கும் அனுபவம் வேற level boss!! செம்ம ஜாலியாக போனது!! ஒரு frame எப்படி அமைப்பது என்று ஒளிப்பதிவாளர் சொல்லும்போது, எனக்கே அதிசயமாய் இருந்தது.

முதல் இரண்டு படங்களுக்கு, நானே ஒளிப்பதிவு செய்தேன். ஆனால், இந்த அளவுக்கு யோசித்து செய்யவில்லை.இப்படத்திற்கு, பொருட்செலவு இருந்தது. அழகாய் படம் தெரிய, lights மற்றும் prime lens பயன்படுத்தினோம்.

ஒவ்வொரு முறையும் வேறு இடத்தில் scene மாறும் போது, ஒளிப்பதிவாளரும் அவர் தோழனும் லைட்களை மாற்ற வேண்டும்.

அப்போது புரிந்தது, இவ்வளவுவுவுவுவு கஷ்டம் படம் எடுப்பது என்று!!!

உழைப்பு, சந்தோஷம், சிரிப்பு என கலந்த கலவாய் இருந்தது படம் எடுத்த இரண்டு நாட்களும்.


இதோ கண நேர நினைவுகள் படத்தின் போஸ்டர்.

Dec 11, 2015

ஏ ஆர் ரகுமான் செய்யாததை அனிருத் செய்துட்டானே?

சமீபத்தில் வந்த ஏ ஆர் ரகுமான் இசை அமைத்த படங்களில் ஒரு பாடலோ அல்லது இரண்டு பாடல்கள் மட்டும் தான் பிடிக்கும்.

ஒகே கண்மணி படத்தில் வந்த மெண்ட்டல் மனதில்,
மரியான் படத்தில் வந்த எங்க போன ராசா,
கடல் படத்தில் வந்த மூங்கில் தோட்டம்,

என ஒவ்வொரு படத்தில் சில பாடல்கள் தான் பிடிக்கும். அனைத்து பாடல்களும் கவரும் வண்ணம் இருக்காது. இருந்தாலும் ஏ ஆர் ரகுமான் இசையை ஆவலுடன் எதிர்பார்ப்பேன்.

ஆனா, இதுல என்ன ஆச்சுன்னா....

இந்த அனிருத் இசையில் வந்த தங்கமகன் பாடல்களை கேட்டேன்.
அட, அனைத்து 4 பாடல்களும் சூப்பர் ஹிட் வகையா இருக்குது பா!! 

1)நீ  டக்குனா பார்த்தா, திக்குனா ஆகும்

விறுவிறுப்பான பாடல். அநேகமாக தனுஷ் எமி ஜேக்சனை பார்த்தவுடன் வரும் பாடல் என நினைக்குறேன். பாடல் வரிகள் ரொம்ப இயல்பாய் இருக்குது. கண்டிப்பா, சூப்பர் சிங்கர் போட்டியில் உஷா உதுப் இப்பாடலை ஒரு முறையாவது பாடுவார். ஆட தெரியாத அங்கிள்ஸ் ஆண்ட்டிஸ் எல்லாம் ஆடுவார்கள். 

2) ஓ....ஓ...ஓ 

அடியே அடியே என தனுஷ் பாடும் போது ரசிக்கும் வண்ணம் இருக்கிறது. பாடல் காட்சி அமைப்பும் ரொம்ப கலராக இருக்கும் என நினைக்கிறேன். "ஓ...ஓ...ஓ" என்று பாடும்போதும் சரி, பாடகி நிகிதா காந்தி பாடிய விதமும் சரி பாடலுக்கு பெரிய பலம்.

3) ஜோடி நிலவு

அனிருத் பாடல் 'கனவே கனவே' பாடலை நினைவுப்படுத்தும், இளையராஜாவின் 'நீ பார்த்த பார்வைக்கு நன்றி' பாடலை நினைவுப்படுத்தும். இரண்டும் கலந்த கலவை இது! இருந்தாலும், தனஷின் குரலில் இப்பாடல் கேட்க இதமாய் இருக்கிறது. பாடகி ஸ்வேதா மோகன் குரலும் கட்சிதமாய் பொருந்தி இருக்கிறது. 

பிடித்த வரிகள் 

"காயம் மறைந்து போகும்,
உந்தன் காதல் பழகி போகும்
மண்ணி விழுந்த பூவும்
இன்று காற்றில் பறக்க கூடும்"

இந்த தனுஷ் நல்லா தான்-யா எழுத ஆரம்பிச்சுட்டான்!

4) என்ன சொல்ல

நல்ல வேளை இது பெண் பாடும் வகையில் இருக்கு. இல்லை என்றால் தனஷே இதுக்கு பாடியிருக்கும். மெதுவாய் ஆரம்பிக்கும் பாடல், பின்ன நல்ல தாளத்துடன் போக, கண் முன்னாடி சமந்தா வந்து போகுது. 

சமீபத்தில் வந்த trailer இந்த படத்தையும் பாடல் காட்சிகளையும் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டி இருக்கிறது. 

குறிப்பாய் சமந்தா "love you love you...."என்று சொல்லும் விதம் செம்ம போங்க!

இத்தனை எதிர்பார்ப்புகளுடன் படத்திற்காக காத்திருப்போம்!! 

Dec 10, 2015

இந்த மாதிரி பேரிடர் நடந்து இருக்கு, எத பத்தி எழுதுறது?

ஒரு வார காலமாக பேஸ்புக் பக்கமெல்லாம் பேரிடர் நடந்த செய்திகளும், படங்களும் வந்த வண்ணம் இருக்கிறது.

மனம் அழுதது. நிறையவே பதறியது.சிங்கை என் தாய்நாடாக இருந்தாலும், சென்னையில் சில வருடங்கள் இருந்திருக்கிறேன். அந்த நினைவுகளை அசை போட்ட படி இருக்க, பேரிடர் செய்திகள் பல சமயம் நெஞ்சை உலுக்கியது.

நமக்கு தெரிந்த செய்திகள் இது என்றால், தெரியாமல் போன செய்திகள் எத்தனையோ! கெட்டதிலும், ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது என்றால், அது சென்னைவாசிகளின் மனங்களைப் பற்றி இவ்வுலகத்திற்கு தெரியவந்தது தான்.

எல்லாம் நல்லதுக்கே என்று சாதாரணமாக சொல்லி முடிப்பதா இப்பதிவை என்று தெரியவில்லை. ஆனால்,சென்னையில் இருப்பவர்கள் பல அசாதாரணமான மக்கள் என்பதால் அவ்வாறே முடித்து கொள்கிறேன்.

நான் பேஸ்புக்கில் பார்த்து, பகிர்ந்து கொண்ட சில படங்கள், இதோ:
Sep 19, 2015

உங்க அம்மா யாருடைய "பிட்டு படம்"?"உங்க அம்மா, யாருடைய பிட்டு படம்?" என நீங்க நினைக்குறீங்க. அம்மாவும், பெண் என்பதால்....அம்மாவைப் பார்த்து இப்பாடலை பாடுவீங்களா?

என்ன நீ இப்படி அசிங்கமா கேட்குற என்று குமுறும் பலருக்கு, இதோ இதன் உண்மை காரணம்.

இந்த பதிவு எழுத முக்கியமான காரணம் இளம் சூராவளி, குட்டி தளபதி, புரட்சி சின்ன தளபதி, மக்களின் செல்ல பிள்ளை, கன்னி பெண்களின் கனவு கணவா, VIRGIN பசங்களின் ஓபாமா! - ஜீ.வி

படம், பாடல், வசனங்கள் என கொடுத்ததை எல்லாம் அள்ளி பருகி, துப்ப வேண்டும் என்று தோன்றுகிறது. இதுக்கு தான் ஏற்கனவே "A" சான்றிதழ் கொடுத்துங்களே அப்பரம் என்ன சத்தம்?
இதலாம் சும்மா ஒரு ஜாலிக்காக தான் என்று இதை உதாசினப்படுத்த என்னால் முடியவில்லை. காரணம்...காரணங்கள் உண்டு.

1) "A" படங்கள் என்பது ஒரு குறிப்பட்ட வயது பசங்களுக்கு பெண்களுக்கு என்று இருந்தாலும், பெண்களை கேவலப்படுத்தி, அசங்கிபடுத்தி வசனங்களை எடுக்க வேண்டுமா?

2) ஓ delhi belly, AMerican pie படங்கள் எல்லாம் பாக்குறீங்க? தமிழ்ல எடுத்தா என்ன?

யோவ்! இப்படங்களில் பெண்களை கேவலப்படுத்தி பேசவில்லை. பொது விஷயங்களையும் பிரச்சனைகளையும் கொஞ்சம் தைரியமாக சொல்வதே bold movies . திரிஷா இல்லேனா நயன்தாரா- இப்படத்தில் என்ன பொது பிரச்சனை இருந்துச்சு??

3) "நீ எனக்கு பிட்டு படம்?" பாடல்.

ஜீவி பிரகாஷ் மட்டும் குறை கூற முடியாது. இயக்குனர், தயாரிப்பாளர், பாடல் எழுதியவர்- யாருக்குமே இது அபத்தமா தெரியல்லையா? ஒரு தவறை எல்லாரும் சேர்ந்து செய்தால் அது எப்படி சரியாகும்?

டீ கடைகளிலும், டிவியிலும், ரேடியோவிலும், விழாக்களிலும் பாடலை கேட்கும்போது எப்படி இருக்க போகுது?
4)      Displaying FullSizeRender.jpg


அம்மா, பாட்டி, சித்தி, பெரியம்மா, தங்கச்சி, அக்கா எல்லாரும் டைனோசர் காலத்துல இருந்தவங்க இல்ல. அப்போ இவங்களும்.......

(கோபம் வரமாதிரி காமெடி பண்ணிய இயக்குனருக்கு, ஒரு டைனோசர் பொம்மை அனுப்பவும்)

***************************************************

சரி இம்புட்டு கோபம் பிட்டு....ச்சீ கோபம் பட்டு என்ன ஆக போகுது?

சிங்கை தமிழ் வானொலி நிலையத்தில் ஒலிப்பரபாகும் பாடல்களை சென்சார் செய்துவிட்டு தான் ஒலிப்பரப்ப படும்.

அப்படி சென்சார் செய்யப்பட்ட சில பாடல்கள்

1)
கண்டாங்கி கண்டாங்கி
கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும்
கஞ்சா வச்ச கண்ணு

2) why this kolaveri di...
hand la glass
glass la scotch
eyes-u full-aa tear-u


3) சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல
ஹே பத்து நாளா சரக்கடிச்சேன் போதையே இல்ல
உலகம் புரிஞ்சு டிரவ்ஸர் கிழிஞ்சு
இனி வைச்சிக்கிட என் கிட்ட தான் ஒன்னும் இல்ல (2)

(cancel செய்த வார்த்தைகள் வானொலியில் ஒலிப்பரப்ப மாட்டார்கள்)

*********************************************
இப்படி சென்சார் செய்யப்பட்டால் திருந்திடுமா இளைஞர் சமுதாயம்?

கண்டிப்பா இல்ல தான். தேவர் மகன் சிவாஜி சொன்னதுபோல் "இது என்ன பெருமையா? கடமை!"

நமக்கு ஒரு பொறுப்பு இருக்கு. இது நம்ம கடமை. இம்மாதிரியான கொச்சை பாடல்களை தடுக்க முடியாவிட்டாலும், இது தப்பு என்று சொல்ல நாம் அனைவரும் ஏதேனும் ஒன்னு செய்ய வேண்டும்- ஊடகங்களுக்கு அதில் அதிக பொறுப்பு இருக்கு.

இந்த பதிவும் ஏதோ ஒரு வகையில் அப்பொறுப்பை செய்து விட முயல்கிறது.

இந்த மாதிரியான பாடல்களால் ஏற்பட்ட பாதிப்பு எப்ப தெரியும் தெரியுமா?


சூப்பர் சிங்கரில் சின்ன குழந்தைகள் "நீ எனக்கு பிட்டு படம் டி...." என பாட,

அதற்கு வெட்கமில்லாமல் பெற்றோர்கள் ஆட,

அதை கேட்டுவிட்டு நடுவர்கள்... "பிட்டு....அந்த டு...landing note இன்னும் emotionalஆ பாடனும் கண்ணா?" என்று சொல்வார்கள் தெரியுமா                                                                                                              அன்று புரியும் நமக்கு.

Jul 13, 2015

பாகுபலியும் காக்கா முட்டையும்இரண்டு படங்கள்.
ஒன்று 250 கோடிகளில் உருவாக்கப்பட்டது.
இன்னொறு வெறு 2 கோடியில்.

ஆனால் இரண்டுமே தமிழ் சினிமாவை அடுத்த இடத்துக்கு கொண்டு போய் உள்ளன. தமிழ் சினிமா ரசிகையாய், எவ்வளவு பெருமையாக இருக்கு என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை.


காக்கா முட்டை- ரெண்டு பசங்க பிட்சா சாப்பிட ஆசைப்படும் கதை.

பாகுபலி- பழிவாங்கும் கதை.
ஒற்றை வரி கதையை எப்படி இப்படி பிரமாண்டமாய் எடுத்து இருக்காங்க! இரண்டுமே ஒரு வகையில் பிரமாண்டம் தான்.

காட்சி அமைப்பும் சரி, வசனங்களும் சரி அருமையிலும் அருமை. ரெண்டு படங்களையும் பார்த்து ரசித்து விட்டு தோன்றிய சிந்தனை....

 "ஒரு படத்துக்கு ரொம்ப முக்கியம் திரைக்கதையும் நடிகர் நடிகைகளும் தான்."

காக்கா முட்டை: அந்த ரெண்டு பசங்களும்.... யப்பா!!! அவர்களின் அம்மாவாக நடித்தவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

பாகுபலி: யார் நடிப்பை பற்றி நான் பாராட்டி எழுதுவது? ஒவ்வொரு நடிகை நடிகரும் வெளுத்து வாங்கி இருக்காங்க! ரொம்ப நாளைக்கு அப்பரம் ஒரு படத்தில் நடித்தவர்களின் ரசிகையாய் மாறிவிட்டேன்.

இரண்டு படங்களிலும் பிடித்த இன்னொரு விஷயம்: தமிழ்.

இரண்டு தமிழுமே அழகு தான்!!

இரண்டு படங்களையும் இந்தியர்கள் அல்லாத வேறு இனத்தவர்கள் பார்த்து ரசித்து செல்வதை பார்க்கும்போது, ஆனந்த கண்ணீரை தவிர்க்க முடியவில்லை.


இது போன்று இன்னும் நிறைய படங்கள் வர வேண்டும் என சொல்ல மனசு வருவில்லை. இது போதும் எனக்கு! இந்த சந்தோஷம் அப்படியே மனதில் நீண்ட நாள் இருக்கட்டும்!!


Jun 3, 2015

500th post!!

இது என்னுடைய 500வது பதிவு!!

அடேங்கப்பா!!! என நானே வியந்து பார்க்கிறேன். இந்த வலைப்பூவில் எழுத ஆரம்பித்து 10 வருடங்கள் ஆயிற்று. சும்மா கிறுக்கி எழுதிய கவிதைகளை ஒன்றாக சேர்த்து வைக்கலாம் என ஆரம்பித்த வலைப்பக்கம், இப்போது பல கதைகளையும், பல கட்டுரைகளையும், கவிதைகளையும், திரைவிம்ரசனம், பற்ற பல லொள்ளுகளையும் தாங்கி நிற்கிறது.

ஆதரவு தந்து, ரசித்து படித்து, தொடர்ந்து ஊக்குவித்து கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி.

'you must love yourself' என்று ஆங்கிலத்தில் ஒரு வாசகம் உண்டு. அதனை முழுமையாக அனுபவித்த இடம் இந்த வலைப்பக்கம்! என்னையே நான் ரசித்து வருகிறேன் என் எழுத்துகள் மூலம்.

10 வருடங்களை புரட்டி பார்க்கும்போது, எழுத்திலும் சிந்தனையிலும் கொஞ்சம் முன்னேற்றம் தெரிகிறது என்றால், அதற்கு ஒரே காரணம் நீங்க தான்!!! நன்றி!!

சரி இத்தன வருஷம் எழுதி இருக்கோமே, சிறந்த பதிவுகளுக்கு, அவார்ட் கொடுக்கலாம்னு நினைக்குறேன். இப்பதான் அவார்ட் ஷோ நடத்தறது சர்வ சாதாரணமா போச்சே.....ஹிஹிஹி....

எனக்கு பிடித்த தொடர்கதை: டாடி மம்மி வீட்டில் இல்ல (series 1)
http://enpoems.blogspot.sg/2009/04/daddy-mummy-1_13.html

மக்களுக்கு பிடித்த தொடர்கதை: விண்ணை தாண்டி வந்தாளே
http://enpoems.blogspot.sg/2010/03/1.html

நான் எழுதியதில் ரசித்தது: short films ஆளுங்க தான் பெரிய தலவலி சார்!

http://enpoems.blogspot.sg/2013/06/short-films.htmlபாராட்டும் திட்டும் பெற்ற விமர்சனம்: கௌதம் மேனன் படம் செய்வது எப்படி?- சமையல் குறிப்பு


500 பதிவுகளில், எனக்கு பிடித்த சிலவற்றுக்கு இந்த அவார்ட்!! 

தொடர்ந்து படிங்க!!! ஆதரவு தாங்க!!

May 20, 2015

36 வரிகளில் 36 வயதினிலே....

1) படம் பார்த்துவிட்டு, என் மனதில் ஓடிய, உதித்த சிந்தனைகள் இவை.

2) மலையாளம் படமான 'how old are you?' படத்தை 10 நிமிடங்களுக்கு மேல் பார்க்க முடியவில்லை.

3) காரணம்- ரொம்ப மெதுவான காட்சி ஓட்டம் எனக்கு அவ்வளவா பிடிக்கல.

4) சரி, ஜோ என்ன தான் பண்ணியிருக்காங்க இந்த படத்துல-னு, படம் பார்க்க போனேன்.

5) சும்மா, சொல்ல கூடாது.

6) ஜோ, we missed you lots!!

7) படத்தின் பலமே ஜோ தான்.

8) வசனங்கள் இன்னொரு பலம்.

9) ஆனா, கதையில் இன்னும் ஆழம் தேவையோ என நினைக்கவைத்தது இப்படம்.

10) நடிகைகள் நிறைய பேர், சினிமாவுக்கு திருப்பி வரும்போது, இப்போன்ற படங்களில் நடிப்பது வாடிக்கை ஆகிவிட்டது.

11) ஸ்ரீதேவி, ஜோ போன்றவர்களின் படங்களில் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக படம் எடுத்தாலும், அதில் என்னமோ ஒரு நெருடல் இருக்கிறது.

12) 'நான் யார் என்று இந்த உலகத்துக்கு காட்டனும்' என மன போக்கில் தான் படம் போகுது.

13) படத்தில் பார்த்தால், கணவன் கிண்டல் பண்ணுவான், மகள் கிண்டல் செய்யும், சுற்றி உள்ளவர்கள் கிண்டல் பண்ணுவார்கள்.

14) இரண்டாம் பாதியில், இதை எல்லாம் உடைத்து எரிந்து விட்டு, ஒன்றை சாதிப்பார்கள்.

15) இது தவறு இல்லை.

16) என்றாலும், ஒரு குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவதாக தான் எனக்கு தெரிகிறது.

17) you don't have to prove yourself to anyone. you have to prove only yourself. என கருத்தை இங்கு யாருமே அதிகமாக யோசிக்கவில்லை என்று தான் தோன்றுகிறது.

18) உதாரணம், queen என்ற ஹிந்தி படம்.

19) ஸ்ரீதேவியோ, ஜோவோ- இது போன்ற படத்தில் நடிப்பார்களா?

20) அப்படியே நடித்தாலும், நம்மில் பலர், 'ஒ....அவங்க எப்படி இந்த மாதிரி படத்துல நடிக்குறது?'

21) அது தப்பு, கலாச்சாரம், குடும்பத்துக்கு எதிரான ஒன்று என சொல்லியே மட்டம் தட்டிவிடுவார்கள்.

22) இதை தான் நான் சொல்ல வருகிறேன்.

23) நான் யார் என்று மற்றவர்களுக்கு காட்டும் கதையில் நல்ல விஷயங்கள் இருந்தாலும், அதில் எதோ ஒரு குறைபாடு உண்டு,

24) 'அப்போ என்ன, இந்த மாதிரி படங்கள் பெண்களை மையப்படுத்தி வரகூடாதா?' என சிலர் நினைப்பீர்கள்.

25) அப்படியில்ல, இப்போன்ற படங்கள் முன்னோடியாக இருக்கட்டும்.

26) ஆனா, இனி வரும் படங்கள் இதே பாணியில் வந்துவிடுமோ என்ற ஒரு அச்சம்.

27) 'நான் என் மனைவிய சாதிக்க விட்டு இருக்கேன்," என்று மார்தட்டி கொள்ளுபவர்கள் பலரின் ஆழ்மனதிலும் இன்னும் 'நான் சுதந்திரம் தருகிறேன்' என்று அதே வட்டத்துக்கு தான் பயணிப்பதாக தெரிகிறது.

28) இங்கு யாரும் யாருக்கும் சுதந்திரம் தர தேவையில்லை.

29) 'என் கணவன் எல்லாம் வீட்டு வேலையை செய்வார்' என்று பல பெண்கள் பெருமைகொள்ளும் அதே மனப்பான்மையும் போகவேண்டும்.

30) கல்யாணத்துக்கு பிறகு வேலைக்கு போவது அல்லது சாதிப்பதும், வீட்டு வேலை பார்ப்பதும் அனைத்தும் இயல்பான ஒன்றாக மாற வேண்டும்.

31) அதனை எப்போது இயல்பான ஒன்றாக பார்க்கிறோமோ, அப்போது ஏற்றதாழ்வு, படத்தில் காட்டிய பிரச்சனை அனைத்தும் இல்லாமல் போகும்.

32) சரி, மறுபடியும் கதைக்கு வருவோம்.

33) ரகுமானின் நடிப்பு நல்லா இருந்துச்சு.

34) ஜோவை மறுபடியும் பார்க்க அவ்வளவு அழகா இருந்துச்சு.

35) தொடர்ந்து நடிங்க அப்படி எல்லாம் சொல்ல மாட்டேன்.

36) சாதிக்க விரும்பும் பெண்கள் போல், எதை செய்ய விரும்புகிறீர்களோ, அதை செய்யுங்கள்! வாழ்த்துகள்!


Apr 28, 2015

கண்ண தொறக்கனும் சாமி.......

சமீபத்தில் கோயிலுக்கு சென்றபோது நான் பார்த்த சில விஷயங்கள் ரொம்ப நெருடலா இருந்துச்சு. இப்படி தான் நம்ம சாமி கும்பிடுறோமா என யோசிக்கும்போது சிரிப்பா இருக்கு!1) சாமி கும்பிடாதே, பிச்சை எடு!நான் சின்ன வயதில் (ரெண்டு, மூணு வயதில்), மெழுகுவத்தி எரிவதை பார்த்தால், உடனே கை கூப்பி 'சாமி கும்பிடுறேன்' என கண்களை மூடி கொள்வேன். உண்மையிலேயே சாமியிடம் எப்படி கும்பிடுவது, என்ன செய்ய வேண்டும் என பெற்றோர்கள் அவர்களது பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கிறார்களா என தெரிவதில்லை.

சில நேரங்களில், பெற்றோர்களுக்கே உண்மையான வழிபாடு முறைகள் தெரிவதில்லை. 


போன வாரம், கோயிலுக்கு சென்றபோது நான் பார்த்த ஒரு சம்பவம். ஒரு அம்மா, தனது பிள்ளையிடம் (அவனுக்கு கிட்டதட்ட 11 அல்லது 12 வயது இருக்கும்)..."சரியா கும்பிடு" என்றார். 

பிள்ளை: எப்படி மா கும்பிடுறது?

அம்மா: நான் நல்லா இருக்கனும். பரிட்சையில நல்லா செய்யனும். நல்லா மார்க் வாங்கனும். அடுத்த வருஷம் நல்ல ஸ்கூலுக்கு போகனும்-னு கும்பிடு டா!


நமது பிள்ளைகளிடம் ஏன் பிச்சை எடுக்க கத்து கொடுக்குறோம்?? 


2) இது நம்ம ஏரியா, உள்ள வராதே!

இத பத்தி ஏற்கனவே ஒரு தடவ சொல்லி இருக்கேனு நினைக்குறேன். கோயில்களில் ஏன் 'tourists are not allowed beyond this point" என்ற அறிவிப்பு பலுகை இருக்குனு தெரியல. போன வாரம் சென்ற கோயிலில் இல்லை. ஆனா, சில கோயில் வாசலிலே இருக்கு. சில கோயிலில் சாமி சிலை வரைக்கும் போகலாமா அதுக்கு அப்பரம் போக கூடாதாம்.


நம்ம தானே 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' னு பெருமையா மார்தட்டி கொள்கிறோம்.
எம்மதமும் சம்மதம் என்றும் நம்ம தானே சொல்லிகிட்டு இருக்கோம். அப்பரம் ஏன் இந்த பாகுபாடு.
உன் தண்ணி என் தண்ணி, உன் காற்று என் காற்று, உன் சாமி என் சாமி-னு சொல்லி ஏன் இந்த பிரிவினை?? எனக்கு புரியல.


- "ஓ அவங்க சுத்தமா குளிச்சிட்டு வந்து இருக்காங்களானு தெரியாது... அதனால உள்ள விட முடியாது?" அப்படினு ஒரு ஐயர் என்னிடம் பதில் சொன்னார்.  (வழிபடும் போகும் இந்துக்கள் அனைவரும் குளிச்சுட்டு வந்தாங்கனு உங்களால சொல்ல முடியுமா?)-


"ஓ....அவங்க கால் தெரியுற மாதிரி காற்சட்டை போட்டு வருவாங்க...." (நம்ம பொண்ணுக்கு முழு முதுகு தெரியுற மாதிரி சேலை அணிந்து வந்தால் தப்பு இல்ல??)

- "ஓ....அவங்க கண்டபடி புகைப்படம் எடுப்பாங்க." (யோவ், நம்ம ஆளுங்க, முழு படமே ரிலிஸ் பண்ணற அளவுக்கு கைபேசியில் வீடியோ எடுக்கலாம்....அது தப்பு இல்ல??)
3) முடி இல்ல, முடிவு எடுத்தேன். 

ரெண்டு  பக்தர்கள். 55 வயது ஆண்ட்டிஸ். தனது மகளின் திருமண பற்றி 'அனுமான்' சாமி பக்கத்துல நின்னு பேசிகிட்டு இருந்தாங்க.....இருந்துச்சுங்க!ஆண்ட்டி 1: என் பொண்ணுக்கு மாப்பிள்ள பார்த்தோம்.

ஆண்ட்டி 2: from?

ஆண்ட்டி 1: பையன் கனடாவுல இருக்கான் (குரலில் சற்று பெருமை)

ஆண்ட்டி 2: முடிவு ஆச்சா?

ஆண்ட்டி 1: no, we rejected it.

ஆண்ட்டி 2: oh no. why?

ஆண்ட்டி 1: பையனுக்கு முடி இல்ல.

********************************************************************************
 கண்ண தொறக்கனும் சாமி இவங்க எல்லாரும் ஏன் இப்படி இருக்காங்க???
நல்ல புத்தியை கொடு சாமி. கண்ண சீக்கிரம் தொறங்க சாமி! 

Apr 13, 2015

சுஹாசினி பேச்சும், பாலு தேவர் மூச்சும்

சுஹாசினி சமீபத்தில் செய்தியாளர்கள் முன்னாடி பேசிய பேச்சு, எனக்கு பாலு தேவர் காட்சியை கண் முன் கொண்டு வந்தது.


அந்த சின்ன பையன் கேள்வி கேட்டதை போல்,
மவுசுங்கறது நீங்க கையில பிடிச்சது.
விமர்சனங்கறது நீங்க படிச்சு வாங்கின பட்டமா?? என்று அறைந்தார்.

விமர்சனம் எழுத என்ன தகுதி எனக்கு, என்று நானே ஒரு மூலையில் உட்கார்ந்து மூளையை கசக்கி யோசித்தேன்.


1) மணிரத்னம் படத்தை அவர் promo செய்தாரோ இல்லையோ இணையம் வழி நாங்க அதிகமாகவே promo செய்து இருப்போம். (கடல், ராவணன் படங்கள் உட்பட)

2) இன்றைக்குகூட மணிரத்னம் படத்தை டிவியில் போட்டால், மத்த எல்லாம் வேலையையும் அப்படியே போட்ட படி விட்டுவிட்டு, முழு படத்தையும் உட்கார்ந்து பார்ப்போம். தளபதி, அஞ்சலி, நாயகன், ரோஜா படங்கள் சில உதாரணம்

3) இன்றுகூட காலையில் தினமும் கேட்கும் சில பாடல்களில், 'ராசாத்தி...' (திருடா திருடி) மற்றும் காதல் சடுகுடு (அலைபாயுதே) சில.

4) எத்தனையோ தோல்வி படங்கள் கொடுத்த பிறகும், இப்ப உள்ள பசங்க குறும்படம் எடுப்பதாக இருந்தால்கூட... "ஹேய் மச்சான், நம்ம மணிரத்னம் மாதிரி படம் எடுக்கணும்'னு சொல்லும் அளவுக்கு உயர்த்தி வைத்தவர்களில் சிலர் இந்த மவுசு பிடிக்க தெரிந்தவர்கள் தான்.


so.... புரிந்ததா kanmani?

Apr 11, 2015

எனக்கென்ன யாருமில்லையே!- காதல் தோல்வி கவிதை

மழை காலத்தில்
'ஐ மிஸ் யூ' மெசெஜ்கள்
குவியும் அவள் கைபேசியில்
இப்போது வெறும் மழை சாரல்
மட்டும் பட்டு பட்டு போனது!
கைகோர்த்து தோள் சாய்ந்து
படம் பார்த்த நினைவுகளெல்லாம்
திரையரங்கு தரையில் கிடக்கும்
பாப்கான் போல சிதறி போனது!
மனம்
மண்ணுக்குள் புதைந்த
கல்லறையாக
கண்ட காதல்
மண்ணில்
விழுந்த சில்லறையாக
வாழ்கிறாள் தாடி இல்லா
பெண் தேவதாஸாக!

ஜஸ்ட் சும்மா (11/4/15)

சமீபத்தில் பார்த்த ஒரு படத்தின் போஸ்டர். சிரிப்பு தாங்கல. என்னய்யா தலைப்பு இது??வெத்து வேட்டு!!! ஹாஹாஹா....... தமிழ் இனி மெல்ல 'பொழைச்சுக்கும்'

*******************************************************************

ஒகே கண்மணி பாடல்களை கேட்டு ஆஹா ஓஹோ-னு பாராட்டுகிறார்கள். ஆனால், எனக்கு என்னமோ தல இப்ப வர பாடல்களில் நிறைய இந்த கம்பியூட்டர் இசையை புகுத்தி...ம்ச்....என்னமோ போங்க!

மனசுல பச்சக்கு-னு பதியில்ல.

ஆனால், டிரெய்லர் பார்த்த பிறகு அதே பழைய அலைபாயுதே உணர்வு. ஏப்ரல் 17க்காக காத்திருப்போம்.
***********************************************************************
தீபிகா படுகோன் நடித்த பெண்கள் உரிமை விளம்பர படம் 'வெத்து வேட்டு' ரகமாக இருந்தாலும், அவர் 'மன சோர்வு' சம்பந்தப்பட்ட நேர்காணல் ஒன்று பார்த்தேன். அவரே மன நிம்மதி இல்லாமல் ஒரு வருஷம் கஷ்டப்பட்டேன் என்றபோது, ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது. அவர் சொல்லும் பல கருத்துகள் நாமே பல நேரங்களில் அனுபவித்து இருக்கோம். நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களோ அப்படி இருந்தால், சும்மா,..." cheer up" என்று சொல்லி உதாசினம் படுத்தாதீங்க!!! சரியான சிகிச்சை பெறுங்க!

Jan 22, 2015

success meet of Ai- ஏன் this soi soi??

2 நாளுக்கு முன்னாடி ரிலிஸ் ஆன 'Ai- ஏன் this soi soi?' திரைவிமர்சனம் கிட்டதட்ட ஒரு மில்லியன் ஹிட்ஸ் வாங்கி இருக்கு!!! இந்தியா, துபாய், சிங்கப்பூர், மலேசியா, லண்டன், அமெரிக்கா, மொரிஸ்சியஸ் ஆகிய நாடுகளில் அதிக வரவேற்பு பெற்றதால், உடனே ஒரு success meetக்கு ஏற்பாடு செய்தோம்.....

விஷால்: ம்ம்...எல்லாருக்கும் வணக்கம். பத்திரிக்கை நண்பர்களுக்கு வணக்கம். ம்ம்ம்... Ai- ஏன் this soi soi? ரொம்ப பெரிய ஹிட். எல்லா இடத்திலும்,மக்கள் வரவேற்பு இருக்கு. ஆனா ரிலிஸ் ஆன அதே நாள்ல காரைக்குடில இதோட திருட்டு விசிடி வந்திருச்சி. நான் போய் கேட்டபோ....அவனுக்கே தெரியல அவன் செய்ற தப்புனு. இத நான் வன்மையா கண்டிக்கிறேன். நம்ம எல்லாரும் ஒன்னா நின்னு இத தடுக்கனும்.
KS RAVIKUMAR: இதலாம் ஒரு விமர்சனமானு கிண்டல் பண்றவங்கெல்லாம் இதே விமர்சனம் இங்கிலிஷ்லையோ ஹாலிவுட்லையோ வந்தா கைதட்டி ரசிக்குறீங்க!! முதல் லைன்-க்கு அப்பரம் விமர்சனமே முடிஞ்சிட்டு! அதுக்கு அப்பரம் கிளம்பி போ!! don't see the review. எந்திரிச்சு போ!

ஹிப் ஆப் தமிழா ஆதி: மேடைல இருக்குற அனைவருக்கும் வணக்கம். விஷால் அண்ணாவுக்கு வணக்கம்! Ai- ஏன் this soi soi?' படிச்சேன். செம்ம மாஸ்! சூப்பரா வந்திருக்கு! எப்படி பாராட்டனும் தெரில.... 
ஒரு ராப்-பாவே 
பாடிடுறேன்.....ஏய்நானுஉன்ஹிப்ஆப்தமிழாசூப்பர்போஸ்ட்இது
ஏய்புள்ளபுள்ளஇந்தவிமர்சனம்குள்ளகுள்ள
எதும்தப்பேஇல்லஇல்ல 

சூர்யா: ரவிகுமார் சார்க்கு வணக்கம். மத்த எல்லாருக்கும் வணக்கம். பத்திரிக்கை நண்பர்களுக்கு வணக்கம். தயாரிப்பாளர்களுக்கு வணக்கம். இயக்குனர்க்கு வணக்கம். இங்க வந்து இருக்கு எல்லாருக்கும் வணக்கம்.
இத நான் சொல்லியே ஆகனும். எழுதுறது ரொம்ப பெரிய பெரிய விஷயம். இது இன்னும் பெரிசு பெரிசு வளரனும். அப்பா அடிக்கடி சொல்வாரு. வீட்டுல தம்பி இருக்கான். வீட்டுல ஜோவும் அடிக்கடி சொல்லும். வீட்டுல தியா, தேவ் ரொம்ப ரொம்ப அழகா விளையாடுவாங்க.

(அருகே நின்ற நான் அவர் காது அருகே...."சூர்யா..... முடிஞ்ச...இத விமர்சனம் படிச்சத பத்தி....")

இத நான் சொல்லியே ஆகனும். படிப்பு ரொம்ப முக்கியம். அகரம் ஆரம்பிச்சதே அதுக்கு தான். அகரம் ரொம்ப அழகான விஷயங்கள் பண்ணிகிட்டு இருக்கு. ஒரு கோடி குழந்தைகள......

(நான்: சார் இருக்கட்டும் சார்!! இந்த விமர்சனம் படிச்சீங்களா இல்லையா?)

காயத்ரி....அவங்க படிப்பு செலவு முழுசும் அகரம் ஏத்துக்கும்!!!

(நான்: சார் நான் படிச்சு முடிச்சு 10 வருஷம் ஆயிச்சு சார்!!!)


Jan 19, 2015

Ai- ஏன் this soi soi....?

லிங்கா படம் பார்க்கல மக்கா! கேட்ட விம்ரசனங்களும், பார்த்தவர்களின் பலவீனமான உடல் நிலையும் பார்த்து நான் தப்பித்து கொண்டேன் என்று நினைத்த போது 'விடாது கருப்பு' போல் என்னை தாக்கிய படம் தான் 'ஐ'.

இப்பலாம் படம் நல்லா இருக்குனு சொல்ல முடியல, நல்லா இல்லேன்னு சொல்ல முடியல. நம்மலே போட்டு தாக்குறாங்கப்பா!! ஏன் இந்த வீண் வம்புனு நினைச்சுகிட்டு போக முடியல!! கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம்  புகை புடிச்சு அழிச்சு, தண்ணி குடிச்சு அழிச்சு வீண் போகும்போது வரும் அதே வலி தான், படம் பார்த்து வீண் அடிக்கும் போது வருகிறது.


இந்தியா- 120 rs ( 1.94 usd)
சிங்கப்பூர்  - S$18 (14.40 usd)
  லண்டன் - 22 pounds (33.34 usd)
 மலேசியா - 17 Rm (4.76 usd)

லண்டன் அடுத்த வரிசையில், அதிக பணம் செலுத்தி படம் பார்த்த என்னை போன்றவர்களுக்கு படம் பற்றி பேச உரிமை இருப்பதால், இத நான் சொல்லியே ஆகனும்....

கப்பு- சூப்பர்
காபி- ரொம்ப சுமார்

யூகிக்க கூடிய கதையவா இவ்வளவு நாளு யோசிச்சீங்க சார்?? அது என்ன சார், ஆஊனு கும்பிபாகம், கம்பிகுபாம், அப்படினு ஆரம்பிச்சுட்டுறீங்க!! நிறைய பார்த்தாச்சு சார்!!! விடுங்க....

 நானே கவலைய மறக்க படம் பார்க்க வந்தா, ஆபிஸ் மூஞ்சிங்கள ஞபாகம் படுத்துற ஒரு பாடல் வேற இதுல. ஏன் சார் ஏன்???

பாடல்கள் கேட்டு ரசித்து அளவுக்கு காட்சியமைப்பும் சரி, படத்தின் பிண்ணனி இசையும் சரி, மறுபடியும் சொய் சொய் தான் போங்க!!!

இதுகூட பரவாயில்ல, காமெடி என்ற பெயரில் திருநங்கைகளை கிண்டல் அடித்ததை தான் ஏற்று கொள்ளமுடியவில்லை. நான் கூட நினைச்சேன், இப்ப கிண்டல் பண்ணிட்டு அதுக்கு அப்பரம் கதையில் ஏதாச்சு வலுவான மெசெஜ் சொல்வாங்கனு நம்பி உட்கார்ந்து இருந்த எனக்கு மறுபடியும் சொய்...சொய் தான்!!

சந்தானம் இருந்ததால் இப்படி தைரியமா வசனம் வைக்கலாம்னு நினைச்சீங்களோ என்னவோனு தெரியல!

உடல் குறைத்து உடல் ஏத்தி நடிப்பது ரொம்ப கஷ்டம். அது தான் சொன்னேன் கப்பு- சூப்பர்

அதுக்கள்ள இருந்த காபி- ரொம்ப சுமார்!

விக்ரம் இனி இந்த 2, 3 வருஷம் படம் எல்லாம் பண்ணாதிங்க! 6 மாசத்துக்குள்ள படம் முடிக்கிற மாதிரி பண்ணுங்க (ஐயோ...அதே தான் ரஜினி லிங்காவுக்கு பண்ணாரு...) ம்ம்ம்...கட்டத்துரைக்களுக்கு எல்லாம் கட்டம் சரியில்லையோ!!!
**************************************************************

முதல் நாள் காலையில் படம் பார்க்க போய் 2 நாள் கழிச்சு தான் வெளியே வந்த மாதிரி ஒரு உணர்வு! தலைப்பு மட்டும் தான் சுருக்கி வச்சியிருக்கீங்க, அதே மாதிரி படத்தின் நீளத்தை கொஞ்சம் அப்படியே செய்து இருக்கலாம்!!

Jan 1, 2015

ஜஸ்ட் சும்மா (1/1/15)

 
தூணை ஓடி போய் கட்டிபிடிக்கும் சிவாஜி போல தான், நானும் என் ப்ளாக்கை கட்டிபிடிக்க வேண்டும் என தோன்றுகிறது. கிட்டதட்ட 2 மாசம் ஆச்சு, இந்த பக்கம் வந்து!!

தினமும் எழுத துடிக்கும் எனக்கு ஏன் பழைய மாதிரி எழுத வர மாட்டேங்குது ஆராய்ச்சி பண்ணி பார்த்தேன். மூன்று காரணங்கள் கண்டுபிடிச்சேன்.

காரணம் 1) பேஸ் புக்
காரணம் 2) பேஸ் புக்
காரணம் 3) பேஸ் புக்

தக்காளி, பேஸ் புக் விட்டு வந்துடுலாம்னு பார்த்தா, கத்திய ஒரு தடவ எடுத்துட்டோம் அத தூக்கி போட முடியாது. வேலு நாய்க்கர் மாதிரி அதேலேய அழிஞ்சிடுவோம். அப்படி, பேஸ் புக் எங் ப்ளாக் எழுதும் பழக்கத்தை அழிச்சுடுமோனு ஒரு சின்ன பயம் இருக்கு!!

இருந்தாலும், எழுதுவேன்!!

******************************************************************************

புது வருடம் அன்று ஒன்றை செய்தால், தொடர்ந்து அந்த ஆண்டில் அப்பழக்கம் தொடரும் என்று பெரியவங்க சொல்லி இருக்காங்க!! ஆக, இன்று நல்ல கோழி பிரியாணி அடித்து, நிம்மதியான தூக்கம் போட்டு, உடற்பயிற்சி செய்து, ப்ளாக் எழுதி இருக்கேன்.

பார்ப்போம்..... பெரியவங்க சொல்வது சரியா இல்லையானு!

**********************************************************************

பீகே- படம் பார்த்தேன்! எனக்கு ரொம்ப பிடித்த படம். வாய்ப்பு இருந்தால், இப்படி ஒரு படத்தை எடுக்க வேண்டும், வீட்டில் உள்ளவர்கள் என்னை வெளியே தூக்கி போட்டாலும் பரவாயில்ல. ஹிஹிஹி.....

*************************************************************

இந்த ஹிப் ஆப் தமிழா செம்ம பாட்டு போடுறாருப்பா!!