Nov 24, 2008

அடியே கொல்லுதே...என்னடா பொது இடத்துல
முத்தம் கொடுக்குறேன்னு
சொல்லுறே
ச்சீ...போடா

ஏய்
என் இதழ்களும்
உன் கன்னங்களும்
எனக்கு மட்டுமே சொந்தம்!

Nov 6, 2008

சும்மா அரட்டை 2

கைப்பேசி ஒலித்தது. எடுத்தேன்....

நண்பன்: ஏ, எப்படி இருக்கே? ஒரு ஃபோன காணும். லெட்டர காணும். ஸ் எம் ஸ காணும்...இருக்கீயா? இல்லையா?

நான்: ஹாய் i am fine. how r u? sorry was busy for quite some time. என்ன திடீரென்னு?
நண்பன்: ஒன்னுமில்ல. சும்மா தான்... சரி நாளைக்கு நீ freeya?

நான்: நாளைக்கா? no. am not. y?

நண்பன்: சரி சனிக்கிழம?

நான்: டேய், எனக்கு exam pa... ஏன் கேட்குற?

நண்பன்: ஒன்னுமில்ல.. உன்னைய barber கடைக்கு கூட்டிகிட்டு போனும்!

நான்: என்னையவா? எதுக்கு?

நண்பன்: ஒபாமா ஜெயிச்சாருன்னா, உனக்கு மொட்ட போட்டு, நாக்குல வேல் குத்தனும்னு வேண்டியிருந்தேன். அதுக்கு தான்.

நான்: ஹாஹாஹா...லூசு லூசு! இதலாம் நிறைவேறாத வேண்டுதல். அப்பரம்... வாழ்க்கை என்ன சொல்லுது? wen are ur exams?

நண்பன்: இந்த வாரம் தான் பரிட்சை நடக்குது. அன்னிக்கு monday, throat பத்தி ஒரு exam. கேள்விக்கு கேட்டவனையே அலரி அடிச்சுகிட்டு ஓடுற அளவுக்கு என் பதில எழுதிவச்சேன். பதில் படிக்கறவனுக்கும் புரியாது, எழுதின எனக்கும் புரியாத அளவுக்கு பரிட்சைய செஞ்சுகிட்டு வரேன்.

நான்: ஹாஹா.. நீயெல்லாம் எப்படி medicine முடிச்சு, டாக்டரா வந்து...யப்பா... உஸ்ஸ்ஸ்....முடியாதுடா சாமி!

நண்பன்: ஹாஹா.... anywayz wanted to ask u. are u gg for நகுல்'s party?

நான்: நோ, எனக்கு exams. நான் போகல்ல...நீ?

நண்பன்: நானும் போக போறது இல்ல. நம்ம ரவீனுக்கும் பரிட்சை தான். ஆனா அவன் போறானாம். சும்மா 1 hr இருந்துட்டு வந்துடுவானாம். இதலாம் நடக்குற காரியமா?

நான்: நம்ம ஆளுங்கல நம்பி 1 hr வாக்குலாம் கொடுக்க முடியாது.... போனா...4, 5 மணி நேரமாவது wasteஆ போயிடும்.....

நண்பன்: சரியா சொன்னே போ.... 6 மணிக்கு மீட் பண்ண சொன்னா, 7 மணிக்கு தான் வந்து சேருங்க.... நடக்குற காரியம் இல்ல. u heard abt the farewell party in our school for our current batch? are u gg for that?

நான்: ஆமா நான் போறேன். அது 24th தானே... அதுக்குள்ள பரிட்சையலாம் முடிஞ்சுடும். நீ வா..

நண்பன்: இல்ல லா... நான் வரல.... அங்க யாரையும் தெரியாது....

நான்: நான் மட்டும் என்ன தெரிஞ்சுகிட்டா போறேன்... அங்க சூப்பரா சாப்பாடு இருக்கும். நல்ல ஒரு வெட்டு வெட்டிட்டு, அப்படியே ஒரு வாரத்துக்கும் pack பண்ணிட்டு வந்துட வேண்டியது தான்.

நண்பன்:ஹாஹா...நீ திருந்தவே மாட்டே....

நான்: நான் திருந்திட்டா, அடுத்த நிமிஷமே உலகம் அழிஞ்சு போயிடும்...

நண்பன்: ஹாஹா...எப்படி லா இப்படியலாம்? அப்பரம் உன் காதல் வாழ்கையலாம் எப்படி போகுது?

நான்: என்னது? காதல் வாழ்க்கையா? எனக்கு தெரியாம... அப்படி ஒன்னு நடக்குதா....நீ வேற...

நண்பன்: ஆமா லா...இந்த year ஒரு april fool shock கொடுத்து ஏமாத்தினீயே...எப்படி மறக்க முடியும்?

நான்: ஏ, சாரி சாரி. அது சும்மா தான் பா.

நண்பன்: hey ச்சி... i was just kidding too. சரி, நீ போய் நல்லா படி. all the best 4 exams. உனக்கு எப்போ exams முடியுது?

நான்:14th nov. உனக்கு?

நண்பன்:21st nov...நமக்கு exams முடிஞ்ச பிறகு, நீ, ரவீன், நான்....நம்ம எல்லாரும்... அஞ்சப்பர்க்கு சாப்பிட போவோம்...

நான்: அஞ்சப்பரா!!! ஒகே ஒகே, நான் இப்பவே ரெடி.

நண்பன்: ஹாஹா...ஒகே காயத்ரி, u take care and all the best 4 exams.thanks for the comedy time. ஹாஹ...

நான்: u too. gd nitez.

Nov 4, 2008

அஜித்துக்கு பிடிச்ச ஸ் எம் ஸ்

அஜித்து எப்போதுமே இந்த ஸ்எம்ஸை delete செய்யாமல் வைத்து இருக்கிறாராம். ஒரு வேளை ஷாலினி அனுப்பிவச்ச ஏதேனும் ஒரு ஸ்எம்ஸா என்று பார்த்தால் அது இல்லையாம். அவரது நண்பர் அனுப்பிவைத்த ஒரு குறுந்தகவல்

"எந்த துன்பங்கள் வந்தாலும் எந்த தடைகள் வந்தாலும் நான் கவலைப்படுவதில்லை. ஏன் என்றால் நான் நூறு முறை ஜெயித்தவன் இல்லை. ஆயிரம் முறை தோற்றவன்"

தன் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் இருப்பதால் இதை அழிக்காமல் தன் கைபேசியில் வைத்துள்ளார் தல!

இதை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நண்பர்களுக்கு அனுப்பினேன்! :)

"No matter what type of sorrows hit us hard, do not feel discouraged. We r mentally and physically strong. Not bcos we have met success 100 times, bcos we have struggled thru failures a 1000 times"

Nov 3, 2008

தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்(1)...பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம். இது பறவைகளுக்கு மட்டும் இல்ல, பசங்களுக்கும் தான்! தற்போது நான் பார்த்து ரசிக்கும் ஒருத்தர் தான், விஜய் டிவி நாடகம் 'காக்கி'யில் நடிக்கும் ராகவன் கதாபாத்திரத்தில் வருபவர். பெயருக்கு ஏற்ற உருவம், உயரம், அழகு(ஐயோ.. நான் வெட்கப்படலேங்க...) எல்லாம் இருக்கு அவருக்கு. ராகவனை பாத்தா, எனக்கு சத்யம் விஷால் தான் ஞாபகத்துக்கு வருது. ராகவன் வருவதாலேயே இந்த நாடகத்தை பார்க்கிறேன், ரசிக்கிறேன் (சைட் அடிக்கிறேன்)

(நடுவில் இருப்பவர்)

அன்னிக்கு தோழியோட பேசிகிட்ட இருந்தபோது, அவ சொன்னா "ஜோடி நம்பர் ஒன் michael ரொம்ப handsome di"

நான் உடனே "i think sampath looks gr8 too"

அவ என்னைய பாத்து ஒரு மாதிரியா கேவலமா லுக் விட்டாள்.


உண்மையிலேயே சொல்றேன், சம்பத் வயதுக்கு அவர் அழகு தான். என்னவோ தெரியல...அவர்கிட்ட ஒரு magnetic attraction இருக்கு. நான் நினைக்குறேன், அவர் சிரிப்பும்(killer smile) மீசையும் தான்!

ஒரு நேரத்துல இரண்டு பேரா? ஆமாங்க அப்பரம் ஆண்டவன் எதுக்கு இரண்டு கண்களை கொடுத்தார்....ஹிஹி..

இன்றைய நிலவரப்படி இவர்கள். இந்த நிலை நாளைக்கோ அல்லது ஒரு வாரம் கழித்தோ, அல்லது அடுத்த மாதமே மாறலாம்...


காத்திருப்போம்!

தானாக வாங்கி கொண்ட ஆப்பு!