Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Feb 22, 2016

தள்ளி போகாதே!


காதல் ஒரு முரண்பாடு.
2 அந்நியர்கள் காதலில் விழுவது,
ஒரு முரண்பாடு.
காதலுக்கு கண் இல்லை
உன்னை பார்த்த முதல்
மனதில் அலைபாயும்
தொல்லை.

ஒரு மந்திர புன்னகை
உன்னை பார்க்கும் போதெல்லாம்
வயிற்றில் பட்டாம்பூச்சிகள்.
இந்த விசித்திரமான உணர்வு.
நான் உன்னை பற்றி எழுத உட்கார்ந்தேன்.
 என் மனதில் ஒரு ப்ளாஷ் மின்னல்.

மற்ற  ஜோடி போன்ற, முதல் 4 ஆண்டுகள்
ஆனந்த பூங்காற்று.
பின்னர் புயல் போல் பிரிவு.
வேலை என் வாழ்க்கையில் ஆதிக்கம் செய்ய.
உன்னோடு நேரம் செலவழிக்க இயலவில்லை.
உன் நினைவுகளெல்லாம் ஒரு கானல் நீர் போல் தோன்றியது!
வடுக்கள் இருந்த போதிலும்
நீ அழகு டா.
தளும்புகள் இருந்தாலும்
நீ அழகன் டா!


நான் நம்பிக்கை இழந்து போது
நீ இருந்தாய் என் கண்ணீருக்கு கைகுட்டையாய்.

உண்மையான காதல் என்ன,
 எனக்கு காட்டினாய்.
என் இதயம் நொறுங்கிய போது,
உன் மௌனம்
என் தாலாட்டு. 
என் குமறல்களை
ரசித்தாய்
அமைதியாய் கேட்டு.

இன்னும் அந்த துரதிருஷ்டவசமான இரவு, நினைவில்.
உன் மூச்சு நின்று போது,
உனக்கு ஒரு அங்குலம்கூட நகர முடியவில்லை.
என் இதயம் துடிப்பது நின்றது.
நான் மீண்டும் உன்னை பார்க்க  மாட்டேன் நினைத்தேன்.
 நீ அந்த இரவை வென்றாய்.
மறுபடியும் வந்தாய்.


என்னை தினமும் வீட்டுக்கு
அழைத்து சென்றாய்
இன்று என்னை தனியே
விட்டு செல்கிறாய்!
சந்தனமாய் இருந்த நீ
இன்று
சாம்பலாய் போனாய்!
 என்றென்றும் என் நினைவில்.

காதலித்த கார்,
காதலித்து பார்!

**********************************************************************************

சிங்கப்பூரில் ஒரு காரை 10 வருடங்கள் தான் வைத்து இருக்க முடியும். அதற்கு அப்பரம் ஒப்படைக்க வேண்டும் கார் நிறுவனரிடம். அவங்க இயந்திரம் படத்தில் ரோபோ ரஜினி போல்
அண்ணாமலை படத்தில் வரும் மனோரமா வீடு போல்
நொறுக்கி தள்ளிவிடுவார்கள்.

ஒரு காரின் ஆயுள் காலம் 10 வருடம்.
2006ல் வாங்கிய கார், இப்போது இல்லை என்று நினைக்கும்போது......

Dec 31, 2008

சந்தோஷமா இருந்துச்சுப்பா....

சென்ற சனிக்கிழமை நெருங்கிய தோழியின் பிறந்தநாள். ஒரு மாசத்துக்கு முன்பே ஃபோன் செய்திருந்தாள்.


தோழி: ஏய் காயு, 27th அன்னிக்கு ஒரு mini bthday celebration வச்சுருக்கேன். வந்துடு தெரியுமா. அப்பரம் ஒரு small request. நீ எதாச்சு performance போடனும்.


நான்: performanceஆ??? என்ன செய்யனும்?


தோழி: ஏதாச்சு பண்ணு.

நான்: ஏதாச்சுன்னு, கோழி பிரியாணி எப்படி செய்யனும்னு காட்டவா?


தோழி: ஆண்டவா!! இந்த புள்ளைக்கு நல்ல புத்திய குடு!


நான்: சரி சரி, அதலாம் இப்ப stockல இல்ல....



தோழி: டேய், உன் கவிதைய ஒன்னு வாசி. super performanceaa இருக்கும்!



அவள் சொன்னது முதல் எனக்கு வயிறு கலக்கல்ஸ் ஆரம்பித்துவிட்டது. எழுத சொன்னால் எழுதிவிடுவேன். ஆனா அதை பல பேர் முன்னிலையில் படித்து காட்டுவது எல்லாம் வாழ்க்கையில் செய்யாத ஒன்று. சரி முயற்சி செஞ்சு பார்ப்போம் என்று கிளம்பினேன் 27th அன்று. முதல் நிகழ்ச்சியே என்னுடையது தான். அதற்கு பிறகு தான் மத்த நண்பர்களின் பாடல், ஆடல்.


குரல் சற்று தயக்கத்துடனும், கைகால் ஒருவித படபடப்புடனும் மைக்கை பிடித்தேன். 50 மக்களின் பார்வைபட தொடங்கினேன்,



அழகான கவிதை ஒன்று
எழுத சொன்னால்
எழுதியிருப்பேன்
அழுகுக்கு ஒரு கவிதை
எழுத சொன்னால்
என்ன எழுதுவேன்?


உன்னை பற்றி எழுத தமிழில்
வார்த்தைகள் பஞ்சம்
எனினும் இயற்றுகிறேன்
என்னால் இயன்ற கொஞ்சம்.



சூர்யா ஜோதிகாவுக்கு
நீ எத்தனையாவது
ரசிகை என்று
எனக்கு தெரியாது
ஆனால்
உன்னுடைய முதல் ரசிகை
நான்!


நான் தூளாக துவண்டிருந்தபோது
எனக்கு தூணாக துணையாயிருந்தாய்
இந்த தேவதையை உலகிற்கு அனுப்பிய
இறைவனுக்கு
பல கோடி நன்றிகள்



வள்ளுவன் இருந்திருந்தால்
உன்னை பார்த்தபிறகு
1330 குறட்களையும் உதறிவிட்டு
உன்னை பற்றியே பல லட்சம்
குறட்களை எழுதியிருப்பான்


கம்பன் இருந்திருந்தால்
உன்னை கண்ட பிறகு
பல்லாயிரம் காவியங்களை
படைத்திருப்பான்.


அவர்கள் பாவம் செய்தவர்கள்
உன்னை பற்றி எழுதமுடியவில்லை.
நான் புண்ணியம் செய்தவள்
இங்கு உன்னை பற்றி மட்டுமே
எழுதுகிறேன்.



நண்பர்கள் டாப் 10 வரிசையில் இனி
உனக்கும் எனக்கும் மட்டுமே
முதல் இடம்!
நட்பின் ஆஸ்கார் விருது உனக்கே
உனக்கு!



தளபதி ரஜினி மம்மூட்டி
நட்புக்காக விஜயகுமார் சரத்குமார்
காதல் தேசம் அப்பாஸ் வினித்
பட்டியல் ஆர்யா பரத்,
இப்படி நட்புக்காக வாழ்ந்தவர்கள்
வரிசையில்
உன் பெயரையும்
என் பெயரையும்
சேர்த்து கொள்வோம்!


அம்மா அடித்தால் வலிக்கும்
அப்பா அடித்தால் வலிக்கும்
அண்ணன் அடித்தாலும் வலிக்கும்
‘சைட்’ அடித்தால் வலிக்காது
என்ற தாரக மந்திரத்தை
எனக்கு கற்றுகொடுத்த
குருவே,
நீ வாழ்க!
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

சொல்லிமுடிப்பதற்குள் எல்லாரும் கைதட்டி விசில் எல்லாம் அடிச்சாங்கப்பா! தோழியின் அம்மா ஓடி வந்து கட்டிபிடித்து பாராட்டி தள்ளிட்டாங்க! வாழ்க்கையில என் கவிதைக்கு இப்படி ஒரு நேரடி பாராட்டு கிடைத்தது இதுவே முதல் முறை. வலைஉலகில் மட்டுமே திரிந்து கொண்டிருந்த என் கவிதைக்கு இந்த பாராட்டுகளுக்கு என்னை பிரமிக்க வைத்தது!

Jun 25, 2008

எதிர்நீச்சல்

நீச்சல் குளத்தில்
தள்ளினாய்
நீச்சல் தெரியாதவன்
எப்படியாவது
நீச்சலடித்து கற்று கொள்வான்!
நீச்சல் பிடிக்காதவன்
என்ன செய்வான்?
மூழ்கி தானே போவான்.
புரிந்து கொள்ளமாட்டீர்களா?

வேலை பிடிக்கவில்லை என்றான்
"நல்ல வேலையில் இருக்கிற
உனக்கு, என்ன கேடு வந்துச்சு?"
என்றீர்கள்!
பிடிக்கவில்லை என்றேனே
ஏன் எனக்கு பிடிக்கவில்லை
என்று கேட்க
ஒரு ஜீவன் இல்லையே!

பிடிக்காத இடத்தில்
உதட்டில் சிரிப்பு
உள்ளத்தில் தவிப்பு!

கோபம் வருகிறதே
கோபத்தை வெளிப்படையாக
காட்டமுடியவில்லை என்று
அழுகை வருகிறதே.

கண்ணீரை துடைக்க
என் கைகுட்டைகூட
வர மறுக்கிறது
மடியில் சாய்ந்து
அழ ஒரு ஆளில்லை
என் மனச்சாட்சிக்கு
ஒரு மடி இல்லை!

Jun 17, 2008

சொல்ல மறந்த க(வி)தை

மறைக்கமுடியாத சோகத்தை
மறைத்துவைத்தது ஏனோ?
புரிந்துகொள்ளாத
சொந்தங்களை
பிரிந்து நிற்பது
சரி தானோ?


மற்றவன் சொல்படி
வாழ்க்கை வாழ்ந்து
முடிந்துபோகையில்
உன்
சொந்த வாழ்க்கை
உன்னைப் பார்த்து
"என்னை ஏன் வாழ மறந்தாய்?"
என்று கேட்கையில்
மற்றவன் இருக்கமாட்டான்.
தோற்றவனாய் நீ
நிற்பாய்!


போலியாய் வாழ்ந்தாய்!
உன் தன்மானம்
தினம் தினம்
தற்கொலை
செய்துகொண்டது.

ஆறுதல் கூற
ஆளில்லை
அழுத புரள
நேரமில்லை!

காலம் தான்
மருந்தாம்!
மருந்து காயத்தை
குணப்படுத்தும்
வலியை குணப்படுத்துமா?

May 12, 2008

எனக்காக..

கால் நடக்க முடியாத என்னை
காலையில் எழுப்பி
குளிக்க வைத்து
காலை உணவு ஊட்டிவிட்டு
என்னுடன் பேசிகொண்டே

சமையல் வேலைகளை பார்த்து
என் பேர குழந்தைகளை
பள்ளிக்கு அனுப்பிவைக்கிறாள்
மதியம் 2 மணி நேரம் என்னை
உறங்கவைத்து

மாலையில் ஒரு மணி நேரம்
வீட்டு அருகே இருக்கும்
பூங்காவில் நடை பயிற்சி செய்ய
சக்கரநாற்காலியில் என்னை
அழைத்து செல்கிறாள்.

நான் சிந்திவிடும் உணவை
சுத்தம் செய்து
முகம் சுழிக்காமல்
என்னை கவனித்து கொள்கிறாள்
நான் பெறாத மகள்-
என் வீட்டு பணிப்பெண்!

Apr 22, 2008

நம்மில் ஒருவன்



வாழ்க்கை

வாழ்வதற்கா?

பிழைப்பதற்கா?






பிடிக்காத படிப்பு

விருப்பமில்லாத வேலை

புரியாத அதிகாரிகள்

மதிக்காத உறவுகள்

புரிந்துகொள்ளாத காதலி

தொடமுடியாத வெற்றிகள்

பெறமுடியாத செல்வங்கள்

அடையமுடியாத ஆசைகள்






நினைத்து பார்த்தான்






கடைசியில் மிஞ்சியது

யாருக்கும் தெரியாமல்

அழுத அழுகையும்

அழுகை நனைத்த

தலையணையும்!






வாழ்க்கை

வாழ்வதற்கா?

பிழைப்பதற்கா?

Jan 3, 2008

பையன் டூஷனுக்கு போய் இருக்கான்-கவிதை

பையன்
அறை முழுவதும்
புத்தகங்கள்-உலக அரசியல்
விண்வெளி, வேதியல்,இயற்பியல்
ஆங்கில இலக்கியம்!
திருக்குறள் புத்தகமும்
இருந்தது
ஆங்கிலம் மொழிபெயர்ப்புடன்!

ஏசர் மடிக்கணினி
நட்சத்திரங்களை பார்க்கும்
தொழில்நுட்ப பைனோர்க்கியுலஸ்
ஜன்னல் பக்கத்தில்.
அறை சுவர் முழுவதும்
அறிவியல் கண்டுபிடிப்பு
கணக்கு வரிசை
சுவரொட்டிகள்

இரவு பத்து மணி ஆகியும்
பையன் வரவில்லை.
கணக்கு டூஷன்
அறிவியல் டூஷன்
நீச்சல் வகுப்பு
வைலீன் வகுப்பு
முடித்து
பத்து முப்பதுக்கு வந்தான்
LKG படிக்க போகும்
என் மூன்று வயது
சித்தி பையன்!

Dec 11, 2007

வூட்டுல சொல்லிட்டு வந்துட்டிய்யா?


மாற்றம் கண்டுள்ளது
பல விஷயங்களில்
மாற்றம் காணவேண்டிய
சில விஷயங்களில்
கண்டுகொள்ளாமல்
இருக்கிறது
சிங்கார சென்னை!
சில வருடங்களில்
எத்தனையோ வளர்ச்சி
மெய்சிலிர்க்க வைக்கும்
அடுக்குமாடி கடை அங்காடிகள்
சென்னைக்குள் ஒரு
நியூ யோர்க் பார்த்தேன்
சென்னைக்குள் ஒரு
ஹாங் காங் பார்த்தேன்!

வசதிகள் பெருகிவிட்டன
சினிமா டிக்கேட் முதல்
சாப்பிடும் பிட்சா வரை
'door delivery'!


பணத்தை தண்ணீர் போல செலவு
செய்யும் ஒரு கூட்டம்
தண்ணீர்க்குகூட வசதியில்லாத
இன்னோரு கூட்டம்
மின்சாரம் சரிவர இல்லாத
இடங்களில்
எதற்காக
கம்பீரமாக நிற்கின்றன
ரசிகர் மன்றங்களின் பலகைகள்?

வீட்டுக்கு வீடு வாசப்படி
இருக்கிறதோ இல்லையோ
தெருவுக்கு தெரு 'டாஸ்மார்க்'!
மோட்டார் சைக்கில்
பாதுகாப்பு தலைகவசம்
தலையில் தானே அணிய வேண்டும்
அதை சும்மா பின்னாடி
வைப்பது ஏனோ?
சட்டம் தன் கடமையை 'செய்தது'
மரத்தின் நிழலடியில் இதையல்லாம்
கண்டுகொள்ளாத
காவலர்கள் ரூபத்தில்....

பள்ளிக்கு செல்லும் வயதில்
பணிக்கு செல்லாதே
ரொம்ப பிடித்த வாசகம்!
பெண்ணின் திருமண வயது 21-வாசகம்
போட்டிருக்கும் ஆட்டோவில்
நான் ஏறவே இல்லை!!
எத்தனையோ வாசகங்கள் இருந்தபோதிலும்
எனக்கு சிரிப்பை வரவழைத்தது
தினமும் சாலையில் செல்லும்போது
மூன்று முறையாவது கேட்டுவிடும்
'வூட்டுல சொல்லிட்டு வந்துட்டிய்யா?'



Nov 21, 2007

எவண்டா அது!??


எனக்கு அப்படியே டென்ஷன் ஏறுதுங்க. இன்னிக்கு நடந்த கணக்கு பரிட்சையினால. பொதுவா பரிட்சை என்றால் டென்ஷன் தான்! அதுலயும் இது ரொம்ப ரொம்ப கஷ்டமான module. நரம்பு எல்லாம் நடன ஆடிட்டு நேத்திக்கு ராத்திரி. தூங்க முடியல... படிக்கவும் முடியல. ராத்திரி ஒரு மணி வரைக்கும் படிச்சேன். படிச்சது எல்லாம் மறந்து போன மாதிரியே ஒரு பீலிங். சரி ஒரு ப்ரேக் எடுத்துக்கலானு நினைச்சு, பாட்டு கேட்டா... அதே பாட்டு தான் மனசுல ஓடிக்கிட்டே இருந்துச்சு!! சரி மறுபடியும் வந்து படிக்கலாம்னு பார்த்தா... mind அப்படியே சூடாச்சு!! it was really killing me!! அப்பரம் இன்னிக்கு மதியம் பரிட்சை. ஆனா காலையில 4 மணிக்கு எல்லாம் தூக்கம் ஓடி போச்சு!!


அப்பரம், சாப்பிட முடியல. என்னடா இது... இதான் முதல் தடவ பரிட்சை எழுது போன பொண்ணு மாதிரி பேசுதுனு நினைக்கிறீங்க தானே... எத்தனையோ தடவ பரிட்சை வருது.. ஆனா இரண்டு நாளா செம்ம torture!!! ஏண்டா பரிட்சை எல்லாம் வைக்கிறாங்க? அப்படினு தோனுச்சு!! பரிட்சைய கண்டுபிடிச்சவனை செருப்பால அடிக்குனு என்று என் தோழி ஒருத்தி புலம்பிகிட்டு இருந்தா.. புண்பட்ட நெஞ்சை புகைவிட்டு ஆத்துனும், அப்படினு பல 'அறிஞர்கள்' சொல்லி இருக்காங்க... அது போல கஷ்டப்படுற மனச கவிதை எழுதி ஆத்தணும்...


எவண்டா அது?


பரிட்சை என்ன

பசங்களுக்கு கிடைத்த சாபமா?

இல்ல கடவுள்

எங்க மேல காட்டுற கோபமா?

தூங்க முடியல

சாப்பிட முடியல

சிரிக்க முடியல

அழுவகூட முடியல

காதல் அறிகுறியானு பார்த்த

கண்ராவி இது பரிட்சையின்

அறிகுறிகள்!!


பரிட்சை எழுதும்போது

பக்கத்துல பக்கம் பக்கமா

எழுதுறவன பார்த்தா

டென்ஷன்.

பரிட்சை முடிஞ்சு

உடனே எல்லாம் பதில்களையும்

பகிர்ந்து கொள்றவன பார்த்தா

டென்ஷன்.

இரண்டே இரண்டு மார்க்

கோட்டைவிட்டவன்

வருத்தப்படுறத பார்த்தா

மெகா டென்ஷன்!

இப்படி மென்ஷன் பண்ண

முடியாத டென்ஷன்!

இத பார்த்து மனசு

குமறியது,

"பரிட்சைய கண்டுபிடிச்சவன்,

எவண்டா அது?"


Jun 2, 2007

காலத்தால் அழியாத கோலங்கள்

தள்ளி தள்ளி போட்ட
புள்ளிகளை
ஒன்றாய்
இணைக்கும் கோலம்!
எங்கேயோ இருந்த
புள்ளிகளாய் நாம்,
நம்மை இணைத்தது
கல்லூரி நட்பு என்னும்
கோலம்!

காலை முதல்
மாலை வரை
அழகாக ஜோலித்த நாம்
தண்ணீரால் அழிக்கப்பட்டபோது
சேர்ந்தே கரைந்தது
நாம் சிந்திய கண்ணீர்!
கல்லூரி வாழ்க்கை முடிந்தபின்
சேர்ந்தே மறைந்தது எல்லாமே!

காலம் என்னும் ஆயுதம்
உங்களிடம் பேச
ஒரு நிமிடத்தைகூட விட்டுவைக்காமல்
சுட்டுவிட்டது!

இன்று அழிக்கப்பட்டாலும்
நாளை காலை
கோலங்கள் போடப்படும்
இன்று பிரிந்தாலும்
நாளை என்னும் நம்பிக்கையுடன்
காலத்தால் அழியாத கோலங்களாய் நாம்!

Dec 25, 2006

கல்யாண வாழ்த்துகள்

கல்யாண வாழ்த்துகள்

நிலவு நண்பனுக்கு
இன்று ஒரு நிலவுதோழி கிடைக்கபோகும்
பொன் நாள்

வசந்தத்தின் வாசலில்
நின்று இனி
வரவேற்கும் வருங்காலம்
தன்னால்...

உங்கள் கனவுகளுக்கு
ஓர் அர்த்தம் பிறக்கபோகிறது
என்று சொன்னால்..

அது மிகையில்லை
என்ற பதில் வந்துவிடும்
உங்கள் கண்ணால்...

நேரடியாக வந்து வாழ்த்த
முடியவில்லை
என்னால்...

இருப்பினும் இந்த வாழ்த்துகளை
சமர்ப்பிக்கிறேன்
உங்கள் முன்னால்..


பிரியமுடன்
தமிழ்மாங்கனி

Dec 24, 2006

தொடரும் காதல்

துபாய் மாப்பிள்ளை
சிங்கப்பூர் மாப்பிள்ளை
லண்டன் மாப்பிள்ளை
என்ற பட்டியலில்
எனக்கு வந்ததோ ஒரு
ஜப்பான் மாப்பிள்ளை

பார்த்தவுடனே மனசுக்குள்
அலை பாயுதல்!
அழகிய நிறம்
வசீகரிக்கும் தோற்றம்
அதனாலேயே
ஏற்பட்டது உள்ளத்தில்
ஒரு மாற்றம்.


பிகு:- இந்த கவிதை நான் எனது toyota carக்கு சமர்ப்பிக்கிறேன். haha

மழை

வந்துவிடு வந்துவிடு
இன்றே வந்துவிடு
என்னோடு விளையாட
வெப்பத்தை வேட்டையாட
குழந்தைகள் கொண்டாட
வந்துவிடு


உன்னைக் கண்டு ஆகிவிட்டன
பல நாட்கள்
நீ எங்கே என கேட்கின்றனர்
பல ஆட்கள்


உன் முகவரியை மறுபடியும் காட்டிவிடு
கேட்கும் மக்களின் வாயைப் பூட்டிவிடு
நீ வரவே மாட்டாய் என்ற எண்ணத்தை ஓட்டிவிடு
உன் புன்னகையை இந்தப் பூமியில் கொட்டிவிடு


உன் அமைதியான அம்மா வானவிலோடு
உன் முரட்டு அண்ணன் மின்னலோடு
உன் கண்டிப்பான அப்பா இடியோடு
வந்துவிடு வந்துவிடு
இன்றே வந்துவிடு
எங்களுக்கு இன்பத்தைக் கொடுத்துவிடு!!

கவிதை என்றால்?

காலை நேரத்தில் தரையில்
போடும் கோலங்களும் கவிதை
மாலை நேரத்தில் மறையும்
சூரியனும் கவிதை
இரவு நேரத்தில் வானில்
பூக்கும் நட்சத்திரங்களும் கவிதை


காதலில் முளைக்கும் விதையும் கவிதை
கடலில் கிடைக்கும் முத்தும் கவிதை


மனித பார்வையில்
எது அழகாக தென்படுகிறதோ
அதை அழகு மொழியில்
தேன் பாட வைப்பதே
கவிதை!!

happy new year

புது வருடத்தை நோக்கினேன்
தோழன் அனுப்பிய
நோக்கியா செல்போன்
குறுந்தகவல் வழி..


குறும்புத்தனமாக வாழ்ந்த
வாழ்க்கைக்கு ஒரு முட்டுக்கட்டை
குறிக்கோளுடன் எடுத்து
வைக்கப் போகிறேன் ஒவ்வொரு படிக்கட்டை


எனது அலட்சியங்கள்
இறந்தன போன வருடத்தில்
எனது இலட்சியங்கள்
பிறந்தன புது வருடத்தில்


கல்வியின் அடுத்த அத்தியாயத்தில்
வெற்றி பெற புறப்பட்டுவிட்டேன்
சாதிக்க முடியுமா என சிந்தித்தேன்
சிந்தினையில் விழந்தது இந்த கவி தேன்..

ஏக்கம்

நான்கு வயது பிள்ளையை
முன்னால் நடக்கவிட்டு
அதன் மூன்று வயது தம்பியை
பக்கத்தில் நடக்கவிட்டு
கைகுழந்தையை கையில் தூக்கிக் கொண்டு
வயிற்றில் இன்னொரு குழந்தையைச் சுமந்து
சென்றவளைப் பார்த்து
மனவேதனை அடைந்தது
திருமணமாகி ஏழு வருடங்களாகியும்
குழந்தை பிறக்காத ஒருத்திக்கு!

பெண்

தரையில் போட்ட
கோலத்தை ரசித்தாள்
அன்றைய பெண்
திரையில் போடும்
' கோலங்களை' ரசிக்கிறாள்
இன்றைய பெண்!

வெயில்

வீட்டைவிட்டு வெளியே வந்தேன்
காரணமில்லாமல்
பின் தொடர்ந்தது.
சரி போகட்டும் என விட்டுவிட்டேன்.

ஒரு நொடிகூட ஓய்வு எடுக்காமல்
என்னையே குறிவைத்தது.
நானும் பலியானேன்
மற்றவர்களோடு சேர்ந்து!


தப்பிக்க ஏதேதோ
செய்தோம்!
ஒன்றும் முடியவில்லை


எங்களை சுட்டு
எரித்தது
ஆகாயத்தின் துப்பாக்கி- "வெயில்"

எண்ணங்கள்

பலமுறை வேண்டி கொண்டேனே!
என் பிராத்தனைக்குப் பலன்
இவ்வளவுதானா?
நினைத்தது நடக்கவில்லை
நடந்ததை கனவில்கூட
நினைத்துப் பார்க்கவில்லை


இது எதை சோதிக்கிறது?
மனிதனின் அறிவை அல்ல
அவனுடைய அகத்தை..
எதுவாக இருந்தாலும்
ஏற்றுக் கொள்ளும் மனம் படைத்தவன்தான்
உண்மையான வெற்றியாளன்!


தோல்விகூட தொலைவில் நிற்கும் வெற்றிதான்!
கடந்துவந்த பாதை சோதனை காலம்
கடக்கபோகும் பாதை சாதனை காலம்
இன்று வீழ்ந்தவர்கள்
நாளை "வின்னர்கள்"!
அது மட்டும் நிச்சயம்


படித்தவன் வாங்கும் பட்டமும் காகிதம்தான்
படிக்காதவன் விடும் பட்டமும் காகிதம்தான்
காகிதம் நம்மை
நிர்ணயிக்கப் போவதில்லை
நீ யார்? என்ற கேள்விக்கு
உன் மனமே பதில்!


நான் சொல்லும் அனைத்தும் உண்மை
ஏன் என்றால்
ஜெயிச்சவன் சொல்லும் கருத்தைவிட
தோற்றவன் சொல்லும் கருத்தில்தான்
ஆழமான அர்த்தம் உண்டு
அது கல்வியாக இருந்தாலும் சரி
காதலாக இருந்தாலும் சரி!!