Mar 18, 2013

கவுண்டமணிக்கு ''happy birthdey dey dey to you'

இன்று கவுண்டமணியின் பிறந்தநாள். என்னை பொருத்தவரை 'the king of comedy' என்று சொல்வேன். நான் சின்ன வயதில் தொலைக்காட்சியில் படம் பார்க்கும்போது, பெயர் போடும் வேளையில் நான் பார்ப்பது ஒன்றே ஒன்று தான் - 'கவுண்டமணி செந்தில்' பெயரை தான்!

அப்படி இல்லை என்றால், அந்த படத்தை பார்க்கும் ஆர்வம் குறையும். அப்படி பெயர் இருந்தால், ரொம்ப குஷியாகிவிடுவேன். அவ்வளவு பிடிக்கும் கவுண்டமணியை (செந்திலும் சேர்ந்து) இப்போது கூட எனது வலைப்பூ பதிவு எழுதும்போது, அவரின் வசனங்கள் தான் பெரிய inspiration!!!

http://www.sparkthemagazine.com/wp-content/uploads/2012/05/petromax-opt.jpg

நண்பர்களிடம் பேசும்போது கூட அவரின் தாக்கம் நிறைய வரும் பேச்சில்!! அவரின்...

1) petrolmax lighta தான் வேணுமா?

2) ஆமா ஆமா.. நாங்க தான் நாங்க தான்!!

3) இப்பலாம் படிப்பு எந்த ரேஞ்சுல இருக்கு தெரியுமா?


4) நம்ம ஒன்னு கேட்டா, நம்மள அசர வைக்குற மாதிரி ஒரு பதில் 

சொல்வாரு பாரு....அது இங்க புரியாது வீட்டுக்கு போனா தான் புரியும்!!

5) ஒட்டுற வேளையா ஒழுங்கா பாருடானா, உட்கார்ந்து ஓட்டை போட்டு கொண்டு வந்திருக்கான்!!

6) yes, I am rajashekar!!

7) என்னது? வடுகபட்டி ராமசாமி செத்து போயிட்டாரா??

போன்ற வசனங்கள் எல்லாம் பேசும்போது பயன்படுத்துவோம் சூழ்நிலைக்கு ஏற்ப!!


 http://starmusiq.com/movieimages/Ullathai-Allitha_B.jpg

உள்ளத்தை அள்ளித்தா படம் எத்தன முறை பார்த்து இருக்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை!! சோகமாக இருக்கும்போது அவரின் காமெடி வீடியோக்களை youtubeல் பார்த்து உற்சாகம் அடைவேன்!

அப்படிப்பட்ட ஒருவரின் பிறந்தநாள் இன்று!!!

கவுண்டரே, happy birthdey dey dey to you!!!!

Mar 15, 2013

என்னது பாலா அடிச்சாரா?

பரதேசி! (யோவ்..உங்கள திட்டலையா? படத்த பெயர சொன்னேன்)

பரதேசி படத்தின் teaser ஒன்று வெளியாகி, அதில் நடிப்பவர்களை போட்டு அடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.


 

இதற்கு பலவித எதிர்ப்புகள்! முக்கியமா இந்த டிவிட்டர் பக்கமா போனால்...சக நடிகர்கள்/இயக்குனர்கள் காட்டிய எதிர்ப்புகள்:

 Actor : Siddharth"A video of a director hitting his actors in the name of reality is going viral.Can we please have one of actors beating the hell out of him?"

 Director : Balaji Mohan"Paradesi 'reality' teaser sets a bad example to young future filmmakers who consider Bala sir as an idol. This isnt the way to make films."

 Actor-producer : Udhayanidhi Stalin"I decided not 2 watch the reality muvi! I shud b building temples for directors Rajesh S.R.Prabhakaran sir!"

எனக்கு சிரிப்பு தான் வந்தது இவர்களின் எதிர்ப்புகளை பார்த்து! பாலாவுக்கு தெரியாதா- இது விளம்பர யுத்தி என்று?

இதுக்கு தானே ஆசைப்பாட்டாய் குமாரா? என்பதுபோல் எதிர்வினை விளம்பர தானே இன்றைய 'விஸ்வரூப' வெற்றியை நிர்ணயிக்கின்றது!!  தப்போ சரியோ? படம் நல்லாயிருக்குதுனு நிறைய பேர் சொல்றாங்க! இயக்குனர் பாலாவின் ரசிகை நான் என்று சொல்ல முடியாது. வித்தியாசமான படங்களை கொடுத்து இருக்கிறார்! படம் ஓடினால் சரி! ஆனால், இவரிடம் பிடிக்காத விஷயம்- அழகானவர்களை அழுக்காய் அலங்காரம் செய்வது!

http://filmy365.com/tamil/files/2012/11/Atharva-02.jpg             http://moviegalleri.net/wp-content/gallery/paradesi-movie-stills/bala_in_paradesi_movie_stills_adharvaa_murali_6dba4ba.jpg

அதர்வா எவ்வளவு அழகு!! ச்சே போங்க பாஸ்...மனசே சரியில்லை! அடுத்து, விஜய் இவரிடம் படம் பண்ண போவதாய் செய்தி!!! தல!!!!!!!!!! இது நமக்கு தேவையா தல? நம்மகிட்ட இருக்கும் ஒரே அம்சம்- அந்த அழகான சிரிப்பு தான்! பார்த்து சுதார்ச்சிக்கோ தல!
             
                           http://4.bp.blogspot.com/-668rZcgckv8/UG3DNbJ7FPI/AAAAAAAACYU/FNJlAJ5SCgs/s1600/smile.jpg


சரி பாலா அடிச்சதுக்கே இப்படினா? சின்ன வயசுல, நம்ம அப்பாக்கள் நம்மள தூக்கிபோட்டு மிதிச்சு அடி இடி மாதிரி விழுந்த கதையை reality teaser போட்டால், பூகம்பமே கிளம்புமா பாஸ்?? உஷ்ஷ்ஷ்ஷ....யப்பா!!!

Mar 14, 2013

office- அப்பளம்னா எப்படி இருக்கனும்?

என்னைய மாதிரி ஒரு sales executive இது தான் அப்பளம்னா எப்படி வியாபாரம் ஆகும்? அப்பளம்னா எப்படி இருக்கனும்? கும்பலா, பொன்நிறமா, சும்மா வின்ன்ன்ன்ன்னு ஒரு பொடுப்போட இருக்க வேண்டாம்!- கவுண்டர் அப்பளம் விக்கும் காமெடியை பார்த்தபிறகு, எனக்கு ஆபிஸ் விஷயங்கள் ஞாபகத்திற்கு வந்துவிட்டது.

http://sphotos-a.xx.fbcdn.net/hphotos-snc6/205376_317819421640663_1052643186_n.jpg

ஆபிஸ் போன பிறகு தான் 'விடுகதையா இந்த வாழ்க்கை' என்று ரஜினி ரத்த கறையோடு போகும் வலி புரிந்தது. கொடுமைகள் ஒருபுரம் நடந்தாலும், அதிலும் சில காமெடிகள் நடக்கும்.

மீட்டிங் என்னும் காமெடி கொடுமை: கோபம் வர மாதிரி காமெடி செய்வதில் ஆபிஸ் ஆட்களை அடித்து கொள்ள ஆள் இல்லை! வீட்டிற்கு போகும் நேரத்தில் மீட்டிங். வாழ்க்கைக்கு ஒரு நாளும் தேவையில்லாத விஷயத்தை பத்தி பேச ஒரு மீட்டிங்.
http://i.ytimg.com/vi/0nlTPkSC8gI/2.jpg
பட்ட பெயர் வைக்கும் காமெடிகள். மண்டையன், வழுக்க மண்டையன், 'சின்ன வீடு', பைத்தியக்காரி, ' 7 ஸ்டார் கிங்' போன்றவை என் ஆபிஸில் நாங்க வைத்து கொள்ளும் 'code word' பட்ட பெயர்கள்.  ஆபிஸ் security officer ஒருத்தர் இருக்கிறார். அவருக்கு இந்த பெரிய ஆபிசர்களின் நற்பெயரை வாங்க வேண்டும் என்பதற்காக என்ன வேண்டும் என்றாலும் செய்வார். ஒரு நாள், ஏதோ, சாதாரண விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள். அதை வளைத்து வளைத்து ஃபோட்டோ எடுத்து அனைவருக்கும்,"these photos are for your memorial." என்று அனுப்பிவிட்டார். அன்று முதல் இவர் காமெடி தான் ஒரு வாரம் ஓடியது.

பெரிய ஆபிசர் ஒருத்தர் இருக்கிறார். அவர் மூச்சுக்கு மூணூறு தடவ 'chief security officer' என்ற வார்த்தையை பயன்படுத்தி விட்டு தான் அடுத்த வாக்கியத்தை தொடருவார்! ஐப்பா கேட்டு கேட்டு....ரீலு அந்துபோச்சு டா சாமி!

இன்று காலையில் விஜய் டிவியின் புதிய தொடரை பார்த்துவிட்டு, இந்த போஸ்ட் எழுதவேண்டும் என்று தோன்றியது.


அடுத்த போஸ்ட்...ம்ம்.... தற்போது சைட் அடிக்கப்பட்டுகொண்டிருப்பவர்களுக்கு நிறைய வாய்ப்பு இருக்குனு நினைக்குறேன்!!

Mar 13, 2013

நீ தானே என் appetiser!

'கூகல் கூகல் பண்ணி பாத்தேன் உலகத்திலே' என்று பாடல் தொலைக்காட்சியில் ஓடியது. அந்த பாடலை முணுமுணுத்தபடியே வருண் ஹால் மேசைக்கு வந்தான். தண்ணீர் குவளையில் தண்ணீர் முடிந்துவிட்டதால் சமையலறையில் இருக்கும் குளிர்சாதன பெட்டியை நோக்கி நடந்தான். அதிலிருந்து தண்ணீர் நிரப்பினான் குவளையில்.

நித்யா  ரொம்ப கஷ்டப்பட்டு பூரிகட்டையை உருட்டிகொண்டிருந்தாள். இரண்டு நிமிடங்கள் அவளையே பார்த்தான் வருண். கட்டிய கூந்தலில் இருந்து நெற்றியில் கலைந்து விழுந்த முடி, புதிதாய் சின்னதாய் கன்னத்தில் முளைத்த முக பரு, மின்னிய அவளது உதடுகள், உடம்போடு ஒட்டிய சட்டை- அனைத்தையும் ரசித்தான்.

புன்னகையித்து கொண்டே அவள் அருகே சென்ற வருண், "நித்யா, எனக்கு ஒரு கவிதை தோணுது, சொல்லவா?"

அவனை கண்டு கொள்ளாமல் பூரிகட்டை மேல் கவனத்தை செலுத்தியிருந்த நித்யா, "என்ன சொல்லு?" என்றபடி பூரி மாவை எடுத்தாள்.

வருண், " இது வரை பார்த்ததில்லை
                    ஒரு கட்டை
                    இன்னொரு கட்டையை
                     உருட்டுவதை!
"

சொல்லிவிட்டு புன்னகையித்தான்.

முறைத்தாள் நித்யா. "பூரி வேணுமா? அடி வேணுமா?"

மெதுவாய், அவளை இடுப்போடு அணைத்தபடி வருண், "வேற options இல்லையா மா?"

நித்யா, "விடு வருண்.... நான் ரொம்ப டென்ஷன்ல இருக்கேன்." என்றபடி அவனை தள்ளிவிட்டு, நெற்றியில் விழுந்த முடியை விரல்களால் காதுமடல் பின்னால் சொருகினாள். மீண்டும் சமையலை தொடர்ந்தாள்.

வருண் அவள் பின்னாலிருந்து கட்டிபிடித்து, அவளது தோள்பட்டையில் தாடையை வைத்தவாறு, "ஏன் மா டென்ஷன்?"

"சரியா வர மாட்டேங்குது. பூரி மாவ சரியா தான் பிசைஞேன். ஆனா...ப்ச்ச்..." பெருமூச்சு விட்டாள் நித்யா.

வருண், "it's ok ma. நான் பூரி கேட்டேனா?"

நித்யா, "உனக்கு செய்றேனு யாரு சொன்னா? எனக்கு இன்னிக்கு பூரி சாப்பிடனும்னு ஆசையா இருந்துச்சு. அதான் செய்றேன்!" விடாமுயற்சியை கைவிடவில்லை அவள்.

"சரி. நான் help பண்றேன்" என்ற வருண் பூரிமாவை பிசைய ஆரம்பித்தான்.

ஓரக்கண்ணால் பார்த்த நித்யா, "என்ன பண்றே?"

வருண், "பூரிமாவ பிசையுறேன் டார்லிங்" என்றான்.

நித்யா, "அது என் விரலு."

வருண் சிரித்தபடி, "ஓ...சாரி மா. ரெண்டுமே ரொம்ப softaa இருந்துச்சா. அதான் குழம்பிட்டேன்."

நித்யா, "என்னைய விடு" என்று மறுபடியும் பின்னாடி தள்ளிவிட்டாள்.

தொடர்ந்தாள், "disturb பண்ணாம மரியாதையா போயிடு, எனக்கு கோபம் வரதுக்குள்ள." 

வருண், "அப்பரம் நான் என்ன செய்ய?"

நித்யா, "போய், டீவி பாரு. அதான் ஆயிரத்து எட்டு channel இருக்கே!"

வருண், "நான் பாக்கனும்னு நினைக்குற channel கிச்சன்ல இருக்கே!" என்றான் கண் சிமிட்டியவாறு.

நித்யாவுக்கு சிரிப்பு வந்தது. இருந்தாலும் நித்யா, "வருண், மொக்கை ஜோக் அடிக்காம, பேசாம போயிடு!"

வருண், "ஐ...யாருகிட்ட!! மனசுக்குள்ள புடிச்சுருக்கு. ஆனா வெளியே தான் சிரிக்க மாட்டேங்கற"

நித்யா, "பிடிக்கல. போ டா" என்று தொடர்ந்து 'மாவே மாவே பூரி போடு' என்று மாவுடன் மன்றாடி கொண்டிருந்தாள். சுட்ட பூரி, கல் போல் இருந்ததால் மேலும் கோபமாக இருந்தாள் நித்யா.  அவள் இன்னொரு பூரியை சுட்டாள். ஆனால் அதுவும் சரியாக வரவில்லை. வருண் அவளை பார்ப்பதை பார்த்து, நித்யா, "என்ன?" என்று அவளது இடுப்பில் கைவைத்து முறைத்தாள்.

புன்னகையுடன் வருண், " இன்னொரு கவிதை தோணுது?"

நித்யா, "எங்க அந்த பூரி கட்ட" என்று சொல்ல வருண் அலறி அடித்து கொண்டு ஹாலுக்கு ஓடினான்.

சிறிது நேரம் கழித்து ஹாலுக்கு வந்த நித்யா சோபாவில் விழுந்தாள் களைப்புடன்.
"சிக்சர்!!!!!!!!!!!" என்று கத்தினான் வருண் தொலைக்காட்சியில் ஓடிகொண்டிருந்த கிரிக்கெட் ஆட்டத்தை பார்த்து. 

நித்யா, "வருண்...." என்றபோது, அவனது கைபேசி ஒலி எழுப்பியது.

வருண் கைபேசியில், "டேய்! சொல்லுடா. ஆமா...பாத்துகிட்டு இருக்கேன். சூப்பர் சிக்சர்! இந்த தடவ நம்ம தான் ஜெயிக்கிறோம்......" என்று பேசிகொண்டிருந்தவனை பார்த்து முறைத்து கொண்டிருந்தாள் நித்யா. அதை கவனித்த வருண் வேண்டுமென்றே அதிக நேரம் பேசினான்.

பேசி முடித்த வருண், தொடர்ந்து தொலைக்காட்சி பார்த்தான். அவன்  பேசாமல் இருந்தது நித்யாவுக்கு எரிச்சலை உண்டாக்கியது. உடனே, ரிமோட்-டை எடுத்து தொலைக்காட்சி பெட்டியை off செய்தாள்.

வருண், "நித்யா, என்ன பண்ணுற?" என்றவன் மறுபடியும் தொலைக்காட்சியை on செய்தான்.

தொடர்ந்தான் வருண், "உனக்கு வேணும்னா வேற channel பாரு. அதுக்கு ஏன் off பண்ணுற?"

நித்யா, அவனை முறைத்தவாறு, "நான் பாக்கனும்னு நினைக்குற channel என்னைய பாக்க மாட்டேங்குதே!" என்றாள். வருணுக்கு புருவங்கள் ஆச்சிரியத்தில் விரிந்தன.

"ஓ....பாத்துட்டா போச்சு" என்றவன் அவள் அருகே நகர்ந்து உட்கார்ந்தான்.

அவன் மீசையில் ஏதோ ஒட்டியிருக்க, அதை துடைத்தபடி நித்யா, "sorry pa, இன்னொரு நாளைக்கு பூரி செஞ்சு தரேன்."

வருண், "பரவாயில்ல விடு."

நித்யா, "டின்னருக்கு என்னடா பண்றது?"

வருண், "நான் ஆர்டர் பண்ணிட்டேன்..."

நித்யா, "எப்போ?"

வருண், "நீ கிச்சன்குள்ள போராடிகிட்டு இருந்தீயே...அப்பவே!"

கண்களால் சிரித்த நித்யா, அவனது கன்னம் அருகே செல்ல, வருண் தடுத்தான்.

"ஹாலோ! nothing doing. என்னோட கவிதைய பிடிக்கலனு சொன்னீயே! கண்டிப்பா பெரிய punishment இருக்கு." என்றான் வருண்.

புரியாதவளாய் நித்யா, "என்ன punishment?" என்றாள்.

அவள் காது அருகே சென்று ஏதோ அவன் சொல்ல, "ச்சீ..bad boy!" என்று அவனை தள்ளிவிட்டாள் நித்யா.

"இப்ப...நோ..."

"நோ... எனக்கு வேணும்..."

என்று பேசிகொண்டிருக்கும் வேளையில் வீட்டு அழைப்பு மணி ஒலித்தது.

"சாப்பாடு வந்துட்டு. யப்பா escape!!" என்றவளிடம், வருண்,

"நீ தான் appetiser. அதுக்கு அப்பரம் தான் சாப்பாடு."

"உலறாம போய் கதவ திற..." என்றாள் நித்யா புன்னகையித்தபடி.

கதவை திறந்தவுடன் இரண்டு சிறுவர்கள் வேகமாய் ஓடி வந்து தொலைக்காட்சி முன்னாடி உட்கார்ந்து கொண்டனர்.

சாப்பாடு கொண்டு வந்தவர், "சார் address தெரியாம வந்தேன். அந்த பசங்க தான் அழைச்சுகிட்டு வந்தாங்க..."

சின்ன பையன், "வருண் அங்கிள், எங்க தெருவுல கரண்டு போச்சு. நான் இங்க மேட்ச் பாத்துகிறேன். என்ன ஆர்டர் பண்ணீங்க? french fries வாசம் அடிக்குது....இங்க கொண்டு வாங்க...."

*முற்றும்*

Mar 2, 2013

கல்யாணமெல்லாம் இப்ப என்ன ரேஞ்ல போய்கிட்டு இருக்கு தெரியுமா? 

படிப்பெல்லாம் இப்ப என்ன ரேஞ்ல போய்கிட்டு இருக்கு தெரியுமா? என்று கவுண்டர் சொன்னது தான் ஞாபகத்திற்கு வருது?

ஏன்? என்று நீங்கள் கேட்பது புரியது!

ஒரு காலத்தில் 21வது பிறந்தநாள் கொண்டாட்டம் சீசன் இருந்துச்சு. இப்ப அவ அவ வயசாகி கல்யாணம் சீசன் வந்துருச்சு!! யப்பா சாமி!!! எம்புட்டு செலவு?

கல்யாணமெல்லாம் இப்ப என்ன ரேஞ்ல போய்கிட்டு இருக்கு தெரியுமா?

ஒவ்வொரு கல்யாணத்திற்கு சென்று மொய் பணம் ஈயாய் போனது தான் மிச்சம்! அந்த காலத்தில் கல்யாண விழா ஒரு தடவையோடு முடிந்துவிடும்.

இப்போது,

1)நிச்சயதார்த்தம்
2)bacherolette party
3)சங்கீத்
4)வளையல் விழா

5)கல்யாணம்
6)reception

சில நேரங்களில் யாருக்கு கல்யாணம், இது என்ன function என்ன நடக்குது எங்க போறோம், அப்படினு யோசிச்சு குழம்பி போன சமயம் எல்லாம் உண்டு.

"உனக்கு என்ன வந்துச்சு. அவங்களுக்கு பணம் இருக்கு. செலவு பண்றாங்க?" என்று நீங்கள் கேட்பது புரியது. பல் இருப்பவன் பக்கோடா சாப்பிடட்டும்! பக்கத்துல நிக்குறவனை ஏன் வாங்கி தர சொல்றீங்க?

சமீபத்தில் ஒரு தோழி (நெருங்கிய தோழி அல்ல) கல்யாணத்துக்கு கூப்பிட்டாள்..இல்ல அது receptionனு நினைக்குறேன்...wait wait..அதுவா..ம்ம்... சரி ஏதோ ஒன்னு! அதுக்கு கூப்பிட்டால், போக முடியவில்லை. அதற்கு பெரிய சண்டை! அட பாவிகளா! என்ன கொடுமையா இது!

இந்த facebook பல விஷயங்களில் உதவியாக இருந்தாலும், சில நேரங்களில் பெரும் தொல்லையாக உள்ளது. 'event' என்று ஒன்றை ஆரம்பித்து அவர்கள் பட்டியலில் இருக்கும் 2034 பேரையும் கூப்பிடுவார்கள். சும்மா என்றோ ஒரு முறை 'ஹாய்' சொன்னவர்களெல்லாம் கூப்பிட்டால், என்ன பா நியாயம் இது! சரி, அவர்களை ஏன் நீ 'friend'ஆக சேர்த்துகிட்ட, அப்படினு கேட்குறீங்களா?

சரி தான் சரி தான்! என்னைய உதைக்கனும்!:((வீட்டில் கச்சிதமாய் கொண்டாடும் பழக்கம் இருந்தாலும் பரவாயில்ல!! ஆ..ஊனா...ஹோட்டல்! மாளிகை! இப்போதைய trend- கப்பலில் கொண்டாடுவது! சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்தேன். அதில் சங்கீத் விழா கொண்டாடப்பட்டது (இது வடஇந்திய கலாச்சாரம், எப்போது நம்ம கடன் வாங்கி கொண்டோம்னு தெரியல)

அந்த விழாவில் மாப்பிள்ளை வீட்டார் 'flashmob' செய்தார்கள். அதவாது திடீரென்று நின்னு ஆடுவார்கள். பார்க்கும்போது எனக்கு 'குபீர்' சிரிப்பு தான் வந்துச்சு. நீங்க, சந்தோஷமா செய்யுங்க! தப்பில்ல. ஆனால், ஆடம்பர செலவை குறைத்து கொண்டால் நல்லா இருக்கும். அதற்கு பதில், ஏழைகளுக்கு உதவலாமே....(ஓ அது, நடிகர் நடிகைகள் பிறந்த நாள் அன்று செய்வாங்களா?)
http://farm4.static.flickr.com/3257/3140568438_b0628505e0.jpg?v=0
அப்பரம் அந்த நிகழ்ச்சில பேசிய பாட்டி சொன்னது, "மாப்பிள்ளையும் பொண்ணும் சந்தோஷமா இருக்கனும். ஆசைக்கு ஒன்னு. ஆஸ்திக்கு ஒன்னு பெத்துக்கனும். ஏனா...என்ன தான் இருந்தாலும், பையன் வேணும். அப்ப தான் சொத்து விட்டு போகாது..." என்றார்.

ஹாஹாஹாஹாஹா.... பாட்டி போங்க பாட்டி! கோபம் வர மாதிரி காமெடி பண்ணாதீங்க!!