Jul 31, 2008

அட கிறுக்கா.... நான் உனக்காக பிறந்தவள்டா!நாம் காரில் செல்வதும்
நான் சுடிதார் அணிவதும்
ஒன்று என்றாய்-
இரண்டுமே சைவம்!


நாம் பைக்கில் செல்வதும்
நான் சேலை அணிவதும்
ஒன்று என்றாய்-
இரண்டுமே அசைவம்!
இதை அறிந்து, இனி
வெள்ளிக்கிழைகளிலும்
அசைவம் கேட்கிறாயே,
குறும்புக்காரா!


வயிற்று பசிக்கு
விரலால்
உணவு ஊட்டிவிட்டாய்.
உதட்டு பசிக்கு
உதட்டால் ஊட்டிவிடுவாயா?


புகைப்பிடிப்பவர்களை கண்டாலே
புகையும் எனக்கு
உன்னை முதன் முதலாக
பார்த்தபோது
நீ பிடித்துகொண்டிருந்த
சிகரெட்டையும் சேர்த்து
ரசித்தேன்
உன்னை!
உன்னை பார்த்தாலே
வெட்கத்தால்
கண்கள் மூடிகொள்கின்றன.
கண்கள் மூடினாலும்
என் வெட்கத்தை
அதிகப்படுத்தும்
உன் நினைவுகளை
நான் எப்படி சமாளிக்க?'நான் எழுதிய கவிதைகளில்
எது ரொம்ப பிடிக்கும்'
என்று கேட்டாய்.
எழுதிய கவிதைகளைவிட
எழுதியவனை
ரொம்ப பிடிக்கும்!ஆபிஸ் வேலையாக
வெளியூர் செல்லவேண்டும்
என்று சொல்லும்போதெல்லாம்
என் மனமும்
உன் மீது
நான் வைத்திருக்கும் காதலும்
நம் தலையணைகளை
நனைத்துவிடுகின்றன
அவை சிந்தும் கண்ணீர்
துளிகளால்....

குசேலன் பாடல்களை பார்க்கலாம்!

இங்கே கிளிக் செய்து, பாடல்களை பாக்கவும்.

http://www.kuselan55.com/song.html

Jul 30, 2008

எனக்கு பிடித்த anchors!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை படைக்கும் சிலரின் பாணி ரொம்ப வித்தியாசமா இருக்கும். அடிக்கடி தொலைக்காட்சி பார்க்கும் நமக்கு நிறைய தொகுப்பாளிகளை பிடிக்கும்...அப்படி எனக்கு பிடித்தவர்கள்.


கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி, நான் ஐந்தாவது படிச்சுகிட்டு இருந்தேன்(இதுவரைக்கும் அத தானே படிச்சுருக்கே, என்று மொக்கை போடாமல், சொல்வதை கேளுங்க...) அப்ப தான் சன் டீவியில 'இளமை புதுமை' என்ற நிகழ்ச்சிய ஆரம்பிச்சாங்க. அப்ப இருந்த anchor நம்ம ஸ்வர்ணமால்யா. ரொம்ம்ம்ம்பபப பிடிக்கும் அந்த பத்தாவது வயதில். சனிக்கிழமை ஒரு மணி ஆனாலே, நான் குஷியாகிவிடுவேன். ஏன்னா ஸ்வர்ணமால்யா டீவில வருவாங்கன்னு. காமெடியா பேசுவாங்க. ரசிச்சு ரசிச்சு, சிரிச்சு சிரிச்சு பார்ப்பேன்.அப்பரம் அவங்களுக்கு கல்யாணம் ஆகி, அமெரிக்கா போக போறாங்க என்று தெரிந்ததும் ரொம்ப கவலையா போச்சு(அந்த வயதில் என் கவலைய பாத்தீங்களா). சரி இனி இந்த நிகழ்ச்சிய பாக்ககூடாதுன்னு முடிவு செய்தேன். ஆனா, தேவதை போல வந்தாங்க நம்ம அர்ச்சனா.... அதே 'இளமை புதுமை' நிகழ்ச்சிய நடத்த.பிறகு, ஒரே 'அர்ச்சனா' craze தான்! ஏதோ நம்ம தோழி மாதிரி ஒரு ஃபீலிங் ஏற்படும் அவங்கள பாக்கும்போதெல்லாம். இந்த டைமிங் counter அடிப்பாங்க பாருங்க... ரொம்ம்ப சூப்பர்ர்ர் இருக்கும். காமெடி டைம் நிகழ்ச்சியும் செய்தாங்க. கொஞ்ச நாளல, இவங்களுக்கும் கல்யாணம் நடந்துவிட்டது. அர்ச்சனாவின் காலேஜ் தோழனின் அண்ணன் மீது காதல் ஏற்பட்டு, கல்யாணம் செய்து கொண்டனர். பெயர் வினித். pilotஆக வேலை பாக்குறார். இப்ப அழகான குழந்தை சாராவுக்கு பெற்றோர்களாக சந்தோஷமாக இருக்கிறார்கள்.

சரி நமக்கு பிடிச்சவங்க எல்லாம் கல்யாணம் பண்ணிகிட்டு போயிடுறாங்கன்னு நினைச்சுகிட்டு இருந்துட்டேன். அதுக்கு அப்பரம் யாரும் அவ்வளவா impress பண்ணல்ல.

ஒரு வருஷத்துக்கு முன்னாடி தான் சிங்கையில், விஜய் டீவி வந்தது. மறுபடியும் craze தொடங்கியது நீயா நானா கோபி நாத் மேல். அட நான் மட்டும் இல்லங்க.. இங்க இருக்கும் நிறைய இளம் பெண்களுக்கு அவரை ரொம்ம்பப பிடிக்கும்! கோபி நாத் பத்தி சொல்லவே தேவையில்லை... அவர் பேசும்விதமே அவருக்கு அடையாளம், அழகு!

DD- ஜோடி நம்பர் ஒன் தொகுப்பாளி. இவர நினைச்சாலே எனக்கு சிரிப்பு வந்துடும். நல்ல நிகழ்ச்சிய வழிநடத்துவார். நல்ல கலாய்ப்பார் மத்தவங்கள. ஆக, இவர் பாணியும் பிடிக்கும்.


விஜய் ஆனந்த்- இவர் ரொம்ம்ம்பப cuteங்க! பாவனாவை ஒரு தடவ பேட்டி எடுத்தார். என்னமா கலாய்த்து இருப்பார் பாவனாவை... அன்று முதல் இவரையும் பிடிக்க ஆரம்பித்துவிட்டது.(அதாவது இவர் மத்தவங்கள பேட்டி எடுக்கும் விதத்தை சொன்னேங்க...)

Jul 29, 2008

அடுப்பூதும் பெண்களுக்கு கிரிக்கெட் எதுக்கு?


நான் கிரிக்கெட் விளையாடுறேனுங்கோ!!!!!!!!!!!!!!!!!


ஒரு மாதமா training போயிகிட்டு இருக்கேன். ரொம்ப நாளா ஒரு குழுவுல சேர்ந்து கிரிக்கெட் விளையாடனும்னு ஆசை! ஆறாவது படிக்கும்போதே, என் மாமா இந்த விளையாட்டை பத்தி என்கிட்ட சொன்னார். அன்று முதல் இந்த விளையாட்டின் மீது அவ்வளவு ஆசை! badminton/shuttle cock விளையாடும்போது, அதை வைத்து கிரிக்கெட் விளையாடி பார்ப்பேன் சரியான பேட் இல்லாமல்.

அதுக்கு அப்பரம் 9வது படிக்கும்போது, காற்பந்து விளையாட மோகம் ஏற்பட்டது. டேவிட் பெக்கம் மீது பயங்கர craze. அப்போது காற்பந்து உலக கோப்பை நடந்தது, bend it like beckham படம் வெளியானது. இப்படி போக, பள்ளியில் எங்க வகுப்பு மாணவிகள் அனைவரும் பள்ளி முடிந்து காற்பந்து விளையாட தொடங்கினோம். அப்போது
சிங்கை பெண்கள் காற்பந்து அணியில் சேர வாய்ப்பு கிடைக்க, என் வகுப்பு மாணவிகள் 5,6 பேர் கிளம்பினோம். கொஞ்ச நாள் தான் போக முடிந்தது. அதுக்கு மேல் தொடர வேண்டாம், படிப்பு கெட்டு போகும் என்று பெற்றோர்கள் நினைக்க, அதை விட்டுவிட்டேன்.

இப்போது, சிங்கை பெண்கள் கிரிக்கெட் அணியில் சேர்ந்து ஆடும் ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது.கடந்த ஒரு மாதமா training போய்கிட்டு இருக்கேன்.ரொம்ம்ம்பபப சூப்பரா போகுது. அங்கு வந்து பாக்கனுமே, நம்ம இந்திய பெண்கள் எல்லாம் என்னமா அருமையா விளையாடுறாங்க.

முதல் நாள் அங்கு சென்று பிரமித்துபோனேன். பெண்களுக்குள் இப்படிப்பட்ட அற்புதமான திறமையா என்று நினைத்து பெருமைப்பட்டேன். off spinner நான். ஆக அதுக்கு ஏற்றாற்போல் சில பயிற்சிகளை பயிற்சிவிப்பாளர் சொல்லி கொடுத்தார். சக விளையாட்டாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை இருக்கு.


லட்சுமி என்று ஒருவர் இருக்கிறார். இங்கு சிங்கையில் கொஞ்ச காலமாக வேலை பார்த்துவருகிறார்.இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட் அணியில் இருந்தவராம். சூப்பர்ர்ர்ர் spin bowler. ரொம்ப நல்ல நுனக்கமான விஷயங்களை அறிந்தவர். எங்களுக்கு சொல்லி கொடுக்கும் விதமும் நல்லா இருக்கும். angela என்பவர் ஒருவர் இருக்கிறார். இவர் part time lecturer. இரண்டு குழந்தைகளுக்கு அம்மா! பார்த்தால் அப்படி தெரியாது. ஏதோ காலேஜ் இரண்டாம் ஆண்டு படிக்கும் பொண்ணு மாதிரி இருப்பாங்க. அப்பரம் 14 வயது பொண்ணு, தனம், ரொம்ம்ம்பப innocent. ஆனா fast bowling போடுவா பாருங்க... பயங்கர வேகத்தில் போடுவாள்!

கிரிக்கெட் விளையாடுவது ஒரு பக்கம் இருக்க, நிதானமாக விளையாடும் ஆற்றல் வேண்டும். அதைவிட கிட்டதட்ட 20 ஓவர்களுக்கு fielding செய்யும் உடல்வலிமை தேவை. அதற்கு fitness level அதிகமாக இருக்கவேண்டும். இப்படி பல விஷயங்களை கற்று கொண்டு வருகிறேன். நிறைய சர்வதேச அளவில் பெண்கள் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளில் நடக்கின்றன (நிறைய பேருக்கு இது தெரிவது இல்ல)மலேசியாவில், தாய்லாந்தில், சீனாவில் என பல போட்டிகள் நடைபெறுகின்றன.

நானும் நாளைக்கே ஒரு போட்டியில கலந்துகிட்டு hatrick எடுத்து, woman of the match ஜெயிச்சு, டீவி, பேப்பர்ல நம்ம போட்டோ வந்து, 10 பேரு autograph வாங்கும் நிலை வரும். அப்பரம்.. என் பேரும் வரலாற்றுல இடம்பெற வேண்டாமா!

இருந்தாலும்,அம்மாவுக்கு இதுல அவ்வளவா உடன்பாடு இல்ல! training இரண்டு நாள். டைம வேஸ்ட் பண்ணுறே என்றார்கள். காலேஜ், படிப்பு கெட்டுபோயிடும் என்கிறார்கள். "நம்ம இந்திய பிள்ளைகளுக்கு படிப்பையும், விளையாட்டையும் balance பண்ண தெரியாது. விளையாட்டுன்னு போனா, படிப்புல கவனம் இல்லாம போயிடுங்க" என்றார். ம்ம்ம்ம்... என்னத்த சொல்ல,அடுப்பூதும் பெண்களுக்கு கிரிக்கெட் எதுக்கு? என்று நினைக்கிறார்கள் என்னவோ.

Jul 22, 2008

மை ஃபிரண்டுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

மை ஃபிரண்ட் அக்காவுக்கு வாழ்த்துகள் சொல்லிக்கிறேன்! இணைய நண்பர்களில், ரொம்ப நல்ல தோழி. மற்றவர்களுக்கு உற்சாகம் தந்து ஊக்கமுட்டுவதில் இவருக்கு நிகர் இவரே! ஆயில்யன் சொன்ன மாதிரி இவர் வலையுலகில் ஒரு சூப்ப்பர் ஸ்டார் தான்! ஒரு சின்ன திருத்தம்... இவர் நம்ம லேடி சூப்பர்ர் ஸ்டார்! இந்த விசேஷமான நாளில் உங்களுக்கு வாழ்த்துகள் சொல்வதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி! அடுத்து,

"மை ஃபிரண்டு அக்காவுக்கு, என் கல்யாண வாழ்த்துகள்" என்று எங்களை சொல்லவைக்கனும்! ஓகேவா அக்கா! சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க (ஐயோடா..வெட்கத்த பாரு)

மாப்பிள்ள இப்படி இருந்தா போதும் தானே?

Jul 20, 2008

அடங்க மாட்டீயா நீ- என் 150வது பதிவு

"ஏய், அடங்க மாட்டீயா நீ!" என்றது என் உள்மனம் உற்சாகத்திலும் சந்தோஷத்திலும். இது என் 150வது பதிவு!! என்னமோ பெரிய சாதனை செய்துவிட்டதாக நான் பெருமிதத்தில் தத்தளிக்க, என் மனம் என்னை அடக்கியது! :)) இது அவ்வளவு பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம் பலருக்கு. ஆனால், என்னை பொறுத்தவரை நான் வாழ்க்கையில் உருப்படியாக செய்து மிக சில விஷயங்களில் இதுவும் ஒன்று!

சற்று வரலாற்றை புரட்டி பார்த்தால்(சரி முறைக்காதீங்க.... ), நான் எப்படி இந்த வலைப்பூ உலகிற்குள் வந்தேன்? என்று எனக்கே சற்று வியப்பாகத்தான் உள்ளது. முதன்முதலில் என் தோழி (australiaவில் படித்து கொண்டிருக்கிறாள்..) 4 வருஷத்துக்கு முன்னாடி இருக்கும்....

MSN chatல் பேசி கொண்டிருக்கையில் ப்ளாக் பற்றி சொன்னாள். என்னையும் எழுத சொன்னாள்.

எனக்கு அதில் விருப்பம் இல்ல. என்னத்த எழுதி அத மத்தவங்க படிச்சு.. என்று நான் ஆர்வம் காட்டவில்லை. அப்பரம் அவள் ரொம்பவே கட்டாயப்படுத்தி எழுத சொன்னதால், ஒரு வலைப்பூவை ஆரம்பித்தேன் ஆங்கிலத்தில். எப்பவாவது ஒரு முறை எழுதுவேன். பிறகு, ஒரு நாள் முற்றிலுமாக மூடிவிட்டேன். எழுதுவதை நிறுத்திவிட்டேன்.

மறுபடியும் அவள் ஆரம்பித்தாள். அப்போது நான் +2 முடித்த காலக்கட்டம். அந்த வருஷத்தில் ரொம்ப பெரிய வேதனைகள், சோகங்கள். என் மனத்திற்கு ஒரு வடிகால் தேவைப்பட்டது.. டைரி எழுத ஆரம்பித்தேன். அதையே வலைப்பூவில் எழுதினேன் ஆங்கிலத்தில். அதன் பிறகுதான் வலைப்பூவை ரசிக்க ஆரம்பித்தேன்.

ப்ரியன் நட்பு கிடைத்தது. அதுவரைக்கும் தமிழ் இணைய உலகம் பற்றி தெரியாது.அவர் மூலம் அன்புடன் குழுமத்தில் அறிமுகமானேன். அப்பரம் பல தமிழ் இணையதளங்கள், தமிழ் வலைப்பூக்களை படிக்க ஆரம்பித்தேன். என் சிந்தனை விரிவடைந்தது.


நம்ம ஏன் தமிழ் வலைப்பூ ஒன்றை ஆரம்பிக்ககூடாது என்று என் மனம் கேட்டது. சரி எழுதி பார்ப்போம் என்று தொடர்ந்தேன். அங்க ஆரம்பித்த பயணம் இதுவரைக்கும் நீடித்து இருக்கு. இதன் இடையில் எத்தனையோ முகம் தெரியாத நட்புகள், பாசத்தை காட்டும் அண்ணன்கள், அக்கறை கொண்ட அக்காக்கள், என்னைய கிண்டலடித்து உற்சாகம் ஊட்டும் சித்தப்பாக்கள்... என்று எனக்கென்று ஒரு இணையகுடும்பம்/நண்பர்கள் இன்றைய அளவில் இருக்கிறார்கள் என்று நினைக்கையில் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.

ப்ளாக் எழுத தூண்டிய தோழிக்கும், தமிழ் இணைய உலகிற்கு அறிமுகம் செய்துவைத்த ப்ரியனுக்கும், அன்புடன் குழுமத்திற்கும் நான் ரொம்பவே நன்றிகடன் பட்டிருக்கிறேன்!! :)) உங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி!!

என் வலைப்பூவை படிக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள்! நான் எழுதுவதை ரசித்து என்னை ப.பா சங்கத்தில் சேர்த்த மை ஃபிரண்ட்க்கு என் நன்றிகள்!


இப்போ சமீபத்தில் புதுசா ஜோக்ஸ்களுக்காகவென்றே ஒரு வலைப்பூ ஆரம்பித்து உள்ளேன். இப்படி ஒவ்வொரு முன்னேற்றித்திருக்கும் தூணாக நின்றவர்களுக்கு கோடி நன்றிகள்!::)

முக்கியமா என் பள்ளி, கல்லூரி நண்பர்களுக்கு என் நன்றிகள்! நான் கிறுக்கிய கவிதைகளை புத்தகமா போடுறேண்டி என்று சபதம் எடுத்து கொண்டு திரியும் ஒரு பள்ளி தோழி இருக்கிறாள், அவளுக்கும் என் நன்றிகள். இத்தனை இருந்தாலும்... ஏதோ ஒரு சின்ன வருத்தம்.


நான் எழுதுவது என் வீட்டில் யாருக்கும் தெரியாது. இன்றைய அளவிலும்கூட chatting, blogging, orkut என்பது கெட்ட விஷயங்களாகவே நினைத்து கொண்டிருக்கையில் நான் எழுதுவதை பலமுறை சொல்லமுற்பட்டு பயத்தால் சொல்லாமலேயே இருந்துவிட்டேன். கவிதை/கதை எழுதுவதுகூட தெரியாது. :((

அப்பரம் பொண்ணு காதல் கவிதை எழுதுறான்னு தெரிஞ்சு அவங்க என்ன ஃபீல் பண்ணுவாங்க... எப்போ சொல்வேன் என்று தெரியவில்லை. ஒரு வேளை 40 வருடம் கழித்து

"டேய் பசங்களா இங்க வாங்க... this is ur grandma's blog" என்று என் பேரன் பேத்திகளிடம் சொல்வேனோ என்னவோ!:))

------------------------------------------

சரி இருக்கட்டும். நடப்பதே நடக்கட்டும்!:)

150 போஸ்ட்களில் எனக்கு பிடித்த 7 போஸ்ட்கள் :

1) மாமோய்-குட்டி கிறுக்கல்கள்


2) ஜில்லுனு ஒரு காதல்


3) நான் நியூட்டனா புத்தனா?


4) நான் எழுதியதில் எனக்கு பிடித்த கதை- அத்தை மகன் சிவா

5) என்னை கொள்ளையடித்த கள்வனே

6) பச்சை தண்ணி வித் பறக்கும் குருவி விஜய்

7) தேனீர் வித் வைரமுத்து

weekend கொண்டாட்டம்

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஓயாத வருடம் இது என்றே சொல்லலாம். இந்த பிறந்தநாள் பரிசு வாங்கியே நான் நொந்து போயிட்டேன்... தோழிகளுக்கு என்றால், watch, doll, book இப்படி எதாச்சு கொடுக்கலாம்... தோழர்களுக்கு என்றால் wallet, shirt, tie இப்படி கொடுக்கலாம். இந்த வருடம் ஆரம்பித்தது முதல் பிறந்த நாள் பரிசு வாங்கி வாங்கி, எனக்கே கொஞ்சம் bore அடிச்சுபோச்சு!:)

நேத்திக்கு பள்ளி தோழன் வினோத் பிறந்தநாள். பள்ளி மாணவ தலைவனாக இருந்தவன். அதே வருடம் நான் பள்ளி மாணவ துணை தலைவியாக இருந்தே. நல்ல பையன்... இவனுக்கு கொஞ்சம் தமிழ் தடுமாறி தான் வரும்.. அதவச்சு செமையா கிண்டல் செய்த காலமெல்லாம் உண்டு. தமிழ் வகுப்புல முன்னாடி உட்கார்ந்து இருப்பான்.. அப்படியிருந்தும், நல்லா தூங்குவான் வகுப்பில். அதுக்கு அப்பரம் +1 படிக்க வேற பள்ளிக்கு போயிட்டான். ஆனாலும், எங்கள் பள்ளி குரூப் நண்பர்கள் மாதம் ஒரு முறை மீட் பண்ணுவோம்...

போன திங்கட்கிழமை ஃபோன் செய்தான்...

வினோத்: ஏய் காயத்ரி, நான் வினோத் பேசுறேன்.

நான்: சொல்லு, எப்படி இருக்க?

வினோத்: ஐ எம் குட். by the way..என் birthday party celebration வீட்ல வச்சிருக்கேன் வர saturday. can u make it?

நான்: saturday...முடியாதுனு நினைக்குறேன்...anyway i confirm with u by friday.

வினோத்: அதுக்கு முன்னாடியே சொல்லிடு. ஏன்னா i am goin to order food.

நான்: அப்படியா? which resturant?

வினோத்: sakunthala's food palace.

நான்: really!!! ok நான் வரேன்...

அந்த கடையிலிருந்து சாப்பாடு என்றால்.. எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனாலேயே சென்றேன். இரவு 7 மணிக்கெல்லாம் சென்றுவிட்டேன். நான் ரொம்ப லேட்டா போயிருப்பேன் என்று பாத்தா... அங்க நான் தான் முதல் ஆளு!! என்னப்பா வினோத் யாரையும் காணும்? என்றேன்.

வந்துகிட்டு இருப்பாங்க என்றான். பொதுவா, வீடுகளில் வைக்கும் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தான் எனக்கு பிடிக்கும். feel at home என்ற ஃவீலிங் கிடைக்கும். நான் என் சொந்த வீடு மாதிரி டீவிய ஆன் செய்து விஜய் டீவியில் இசை குடும்ப பார்த்து கொண்டே, வினோத் அப்பா அம்மாவிடம் அளவளாவி கொண்டிருந்தேன்.

கொஞ்ச நேரத்தில், என்னுடைய மற்ற பள்ளி தோழிகளும்/தோழர்களும் வந்துவிட்டனர். அப்படியே அரட்டை அடித்து கொண்டிருந்தோம். அப்ப, ஒரு பொண்ணு வந்துச்சு. வினோத் +1 பள்ளியில் படித்த பொண்ணாம். அதுக்கு முன்னாடி நாங்க யாரும் பார்த்தது இல்ல. வினோத் அவளை எங்களிடம் அறிமுகம் படுத்தினான்.

வினோத்: hi guys, she is my(என்றவரைக்கும் சத்தமாக இருந்தது அவன் குரல்..)
my girlfriend(மெல்லிய குரலில் யாருக்கும் கேட்காதவாறு சொன்னான்..)

புரிந்துகொண்டோம்! ஹாஹா...

நான்: அது மட்டும் ஏண்டா censor பண்ணி சொல்லுறே!

நாங்கள் கிண்டலடித்து சிரித்தோம். பையனுக்கு ஒரே வெட்கம்! :)))) அவன் பெற்றோர்களுக்கு ஓரளவுக்கு தெரியுமாம்!:)

வந்த வேலையை கவனிக்க சென்றோம். கோழி, மீன், மட்டன், பிரியாணி, பாயாசம்... என்று ஒரு வெட்டு வெட்டினோம். இரண்டு மூன்று ரவுண்டு... வயிறு வாயிலிருந்தே ஆரம்பித்தது! அம்புட்டு சாப்பிட்டோம். இத்தனையும் சாப்பிட்டு, நான் கேட்டேன் "கொஞ்சம் தயிர் கிடைக்குமா". தோழன் ஒருவன் என்னை முறைத்து பார்த்தான்.

ஆண்ட்டி எனக்காக ஸ்பெஷலா கொண்டுவந்தாங்க. அப்பரம் ஐஸ்கீரிம் கேட்டேன். அதையும் முழுங்கிவிட்டு நடக்க முடியாமல், உருண்டு கொண்டு வீடு திரும்பினேன்.

Jul 14, 2008

இது நம்ம விஷாலா?

(படங்கள்: www.indiaglitz.com)
இதலாம் கெட்ட வார்த்தையா?

இப்பலாம் ஜாலிக்காககூட ஒருசில வார்த்தையா பேசமுடியல... அட அத ஏங்க தமிழ்ல இரண்டு வார்த்தைகூட பேசமுடியல(ரொம்ப யோசிச்சு யோசிச்சு பேச வேண்டியதா இருக்கு... எப்படி பேசினாலும் அதுல ஒரு double meaning இருக்கு என்கிறார்கள்? என்ன கொடுமை சார் இது?

ஆப்பு- இது ஒரு கெட்ட வார்த்தையா?? காமெடிக்காக சொல்வதை சீரியஸா எடுத்துகிட்டா என்ன செய்வது?

கடுப்பாக்குற- இதுவும் ஒரு கெட்ட வார்த்தை? வெறுப்பேற்றினான் என்பதற்கு இன்னொரு வார்த்தை தான் கடுப்பாக்குறான். இது எப்படி கெட்ட வார்த்தையாக நினைக்க முடியும்? இந்த வார்த்தைய சொன்னதற்கு 'அசிங்கமா பேசாத' என்று நல்ல பூஜை விழுந்தது!!!:(

பிடுங்குதல்- களை பிடுங்கினார். அன்னிக்கு செய்தித்தாள் படிக்கும்போது, விவாசயத்தை பற்றி ஒரு செய்தி. அதில் களை பிடுங்குதல் பற்றி இருந்தது. வாய்விட்டு படித்தேன். 'அந்த' வார்த்தையை படித்தபோது, ஒரு மாதிரி பார்த்தார்கள்.:(

ஆட்டுதல்- மாவு ஆட்டினான்.

தலைமுடிக்கு பழமையான தமிழ் சொல் ஒன்று இருக்கு- மயிர். இங்க பாருங்க இதை படிக்கும்போதுகூட எத்தனை பேரு முகம் சுழிப்பார்களோ! இன்றைக்கும் என் தாத்தா தலைமுடி என்று சொல்லமாட்டார். 'அந்த' வார்த்தையை தான் பயன்படுத்துவார். உண்மையான தமிழ் சொல் தானே அது!

words have become vulgarised by us! பிறக்கும்போதே, இது கெட்ட வார்த்தை இது நல்ல வார்த்தை என்று பிரிக்கபடவில்லை. நாம் தான் அதை கெட்ட வார்த்தையாக்கி கொண்டிருக்கிறோம். சரி எவனோ ஒருவன் அதை கெட்ட வார்த்தையாக்க, அந்த வார்த்தைய சொன்னால் அது அசிங்கம் என்று நினைத்து நாமும் அதற்கு துணை போகிறோம். இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும்! இல்லை என்றால், எல்லாம் வார்த்தைகளுக்கும் இதே கதி தான்!

அப்பரம், தமிழே பேசமுடியாமல் போகிவிடும்!

Jul 11, 2008

சம்பளம் எப்படி வந்துச்சு?

சம்பா என்றால் அரிசி
அளம் என்றால் உப்பு. முந்தைய காலத்தில் மக்கள் அரிசி மற்றும் உப்புக்காக தான் வேலை செய்தார்கள். ஆகவே தான் அதற்கு பெயர் சம்பளம் என்று வந்தது.

ம்ம்ம்... ஆஹா இன்னிக்கு யாராய்யா அரிசிக்கும் உப்புக்கும் வேலை பாக்க போறா?
அவ்வ்வ்...:))

(இது, விஜய் டீவியின் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியை பார்த்தபிறகு வந்த பாதிப்பு இல்லங்க...):)

Jul 7, 2008

அவருக்கு என்ன பரிசு கொடுக்கலாம்?

காதலனுக்கு/கணவரோக்கு பரிசு வாங்கி கொடுக்கலாம் என்று நினைத்து கொண்டிருக்கும் பெண்களுக்கு ஒரு சில டிப்ஸ்...

'Do's

- அவருக்கு பிடித்த டிவிடி படங்களை சிலவற்றை வாங்கி அதை ஒரு அழகான boxல் போட்டு கொடுக்கலாம். (ஆண்களுக்கு gadgets என்றால் ரொம்ப பிடிக்கும்..)

- leather stuff. leather சம்மந்தப்பட்டது பொருட்களை வாங்கலாம். leather wallet என்று ஏகப்பட்டவை உள்ளன. (leather makes man feel 'macho' :)
- சாக்லெட்! (அட அவங்களுக்கு பிடிக்குமா? என்று நீங்க நினைக்கலாம்) இந்த ஒரு பைசா சாக்லெட்டை சொல்லவில்லை. ஸ்பெஷல் சாக்லெட் விற்கும் சில கடைகள் உள்ளன. அப்படி ஒன்றை வாங்கி கொடுக்கலாம் (valentine's spl, wedding anniversay spl போன்றவைக்கு தனிப்பட்ட சாக்லெட் உண்டு)


- spa. ஏதேனும் ஒரு spa இடத்திற்கு அழைத்து சென்று அவங்களுக்கு பிடித்த spa message செய்ய ஏற்பாடு செய்யலாம்.(swedish spa, jaccuzi என்று பல உண்டு)

Dont's (இவற்றை கனவிலும்கூட செய்துவிட வேண்டாம்)

- socks. பரிசாக கொடுக்க இதைவிட வேறு ஒரு காமெடியான பொருள் உலகில் இல்லை

-candles. இதை வைத்து ஆண்களுக்கு என்ன செய்ய முடியும்? (சொல்ல போனால், அதை வைத்து என்ன செய்யலாம் என்பதுகூட சிலருக்கு தெரியாது.)

- deodorants. (தப்பா நினைச்சிப்பாங்க)

-கழுத்து சங்கிலியில் உங்க படத்தை போட்டு கொடுப்பது. (அதான் நீங்களே அவர்கூட இருக்கீங்களே.. அப்பரம் எதுக்கு அது வேற)

Jul 1, 2008

விளையாட்டாய் என் ஆடைக்குள்ளே நீ வேண்டும்...

ஆண் கவிதை ஒன்று
பெண் கவிதைக்கு
ஒரு கவிதை
எழுதுகிறது!
மூன்றாம் உலகப்போருக்கு
தயார்
என்கின்றன
உன் உதடுகளும்
என் கன்னங்களும்.

உன் விரல்கள்

என்னை வருடியது போதும்!

employment exchangeல்

காத்திருக்கும்

இளைஞனைப் போல்

பாவமாய் நிற்கும்

உன் இதழ்களுக்கு

அந்த வேலையை

கொடுத்துவிடு, பிளீஸ்!


விரல்கள் விட்டுசென்ற
விரல்தடங்களை
மெதுவாய் கடந்து
செல்கின்றன
உன் உதட்டு ரேகைகள்!


செடியில் கண்டேன்
ரோஜா பூவுக்கு கீழ்
முட்களை
உன்னிடத்தில் உணர்ந்தேன்
முட்களுக்கு கீழ்
ரோஜா பூக்களை!
உன் மீசையையும்
உதடுகளையும் தான்
சொல்கிறேன்!

போகாதே நண்பா!

இன்று காலையில் நண்பன் லீவுக்காக துபாய் சென்றுவிட்டான். அவன் தந்தை அங்க வேலை பார்க்கிறார். நண்பனும் அவன் அம்மாவும் இன்று காலையில் சென்றனர். மூன்று வாரம் அங்க இருப்பான். நேத்திக்கு ஃபோன் பண்ணி, "happy holidays. happy journey." என்று சொன்னேன். கொஞ்சம் சோகமா போயிட்டேன். என்னோட best fren, best pal, என்கூட பிறக்காத தம்பி என்றே சொல்லலாம்.

எனக்கு தம்பி இல்லையே என்று நான் எண்ணியதுண்டு. ஆனா, +1 படிக்க போனபிறகு, அந்த குறையை தீர்த்து வைத்தவன். ரொம்ப நல்லவன்! அவனை எனக்கு +1 முதல் தெரியும். ஒன்றை நான் அடிக்கடி சொல்வேன் - எனக்கு தமிழில் ஆர்வம் வந்ததற்கு காரணமே தோழன் தான். ஒரு நாள் பள்ளிக்கு அவன் எழுதிய சில தமிழ் கவிதைகளை கொண்டு வந்து கொடுத்தான். படித்து பார்த்து பிரமித்துவிட்டேன். சீரியஸான விஷயங்களை காமெடியாக எழுதியிருந்தான் அழகு தமிழில். அட நம்ம நண்பனா, கவிஞன் என்று ஆச்சிரியப்பட்டேன். நம்மகூடவே சும்மா அரட்டை அடிச்சு சுத்தி திரிஞ்சுகிட்டு இருந்தவனுக்குள்ள இப்படி ஒரு திறமையா என்று வியந்துவிட்டேன்.

அப்போது அவன் சொன்னான் "ஏன் நீயும் எதாச்சு எழுது, உனக்கும் நல்லா வரும்." என்று சொன்னதால், நான் போய் அன்றிரவே ஏதோ ஒன்று எழுதினேன். அப்படி ஆரம்பித்தது என் முதல் கவிதையும் எனக்குள் இருந்த தமிழும். எனக்கு குரு அவன் தான்!

அதுக்கு அப்பரம் எத்தனையோ சமயங்களில் எனக்கு ஊக்கம் கொடுத்திருக்கிறான்.. செம்ம ஜாலியான ஆளு. இரண்டு நாளைக்கு ஒரு தடவ ஃபோன் பண்ணி பேசுவான். சொல்ல போனால் என்னோட energy booster அவன் தான்! அப்படி ஒரு தோழனை மூன்று வாரம் பார்க்க முடியாது என்று நினைக்கையில் கொஞ்சம் கஷ்டமா இருக்கு... ம்ம்ம்...