ஆடுகளம், சிறுத்தை, அமீர் கானின் 'dhobi ghat' படங்களை போன வாரம் பார்த்தேன். முதல் இரண்டு படங்கள் என்னை ஏமாற்றிவிட்டது. தனுஷ்...ம்ம்ம்...ஒன்னு சொல்றதுக்கு இல்ல. ஆடுகளத்தின் பாடல்கள் அழகு. ஆனா, படம் எனக்கு பிடிக்கல. சிறுத்தை- ஐயோ எப்ப கார்த்தி சார், தெலுங்கு படம் ஹீரோவா ஆனீங்க?
என்னை பொருத்தவரை ஒரு படம்னு என்னை தாக்கனும்(ஏதோ ஒரு வகையில்) அப்படியே மனச திருப்பி போடனும் (விண்ணைத்தாண்டி வருவாயா படத்துல சிம்பு சொல்றது மாதிரி) entertainment படங்களாக இருக்க வேண்டும் அல்லது ரொம்ப ரொம்ப யதார்த்தமான படங்களாக இருக்க வேண்டும்- இந்த ரெண்டு வகையும் இல்லாம ஏதோ புளிச்ச மாவுல தோசை சுடுற caseலாம் எனக்கு பிடிக்காது!
ரொம்ப ரொம்ப யதார்த்தம்- அந்த வகை படம் தான் டோபி கார்ட். படம் பிடித்ததற்கு பல காரணங்கள் உண்டு. முதல் காரணம்- பெண் இயக்குனர். அமீர் கானின் மனைவி இயக்கிய முதல் படம். இரண்டாவது காரணம்- அமீர் கான். என்னமா நடிக்கிறார். மூன்றாவது காரணம்- இந்த மாதிரி படங்கள் எடுக்க ஒரு தைரியம் வேண்டும், அந்த தைரியம் பிடிச்சு இருக்கு!
__________________________________________________________
அடுத்த வாரம் சீனா புத்தாண்டு விடுமுறை. நினைச்சு பார்க்கும்போதே, சொர்க்கம் தெரியுது:)))))
வேலைக்கு போகும் போது எல்லாம், முதல்வன் படத்துல அர்ஜுன் சொல்றது தான் ஞாபகத்திற்கு வருது. "கடைசில என்னையும் ஒரு அரசியல்வாதியா ஆகிட்டாங்களே!" அப்படி தான் என் நிலைமையும்...கடைசில என்னையும் இந்த பெரியவங்க மாதிரி யோசிக்க வச்சுட்டாங்களே. ஏன் அப்படி சொல்றேனே!! working world is different! நீங்க ஒரு efficient workerனு தெரிஞ்சுட்டா போதும், இருக்குற எல்லா வேலையும் உங்க தலையில கட்ட பார்ப்பாங்க!
அன்னிக்கு மேல் அதிகாரி வந்து ஒரு வேலை கொடுத்தாங்க. 'செய்ய முடியாதுனு' நாசுக்கா சொல்லிட்டேன். :))))))
__________________________________________________________________
தொடர்கதை ஒன்னு ஆரம்பிச்சேன்... அத தொடரனும்!!
__________________________________________________________________
ச்சே....வேலை வேலை வேலை!! நல்ல சைட் அடிக்ககூட நேரமில்லை...உஷ்ஷ்ஷ...யப்பா!!
Jan 29, 2011
Jan 23, 2011
Jan 1, 2011
2011-ம்ம்ம்...இப்படியா போகனும்?
இரண்டு நாட்களுக்கு முன்பு தான் 'மன்மதன் அம்பு' படம் பார்த்தேன். கமல் கமல் தான்! ஒரு நிறைவான படத்தை பார்த்த திருப்தி. ரொம்ப பிடிச்சு இருந்தது.
ஒரு வாரத்துக்கு முன்பு தான் புது கைபேசி வாங்கினேன். நீண்ட நாள் கனவு கைபேசி இது...
ஆனால் புத்தாண்டு அன்று எனக்கு தொண்டை வலி, இரும்பல்....இப்படியா போகனும் புத்தாண்டு. ஃபோன் பண்ணி தோழிகளுக்கு வாழ்த்துகள்கூட சொல்ல முடியாத அளவுக்கு தொண்டவலி
ம்ம்ம்.... சரி இருக்கட்டும்! 2011 எப்படி தான் போக போகுதுனு பார்ப்போம்! :)))
ஒரு வாரத்துக்கு முன்பு தான் புது கைபேசி வாங்கினேன். நீண்ட நாள் கனவு கைபேசி இது...
ஆனால் புத்தாண்டு அன்று எனக்கு தொண்டை வலி, இரும்பல்....இப்படியா போகனும் புத்தாண்டு. ஃபோன் பண்ணி தோழிகளுக்கு வாழ்த்துகள்கூட சொல்ல முடியாத அளவுக்கு தொண்டவலி
ம்ம்ம்.... சரி இருக்கட்டும்! 2011 எப்படி தான் போக போகுதுனு பார்ப்போம்! :)))
Subscribe to:
Posts (Atom)