Jun 28, 2009

ஜஸ்ட் சும்மா(28/6/09)

ரெண்டு மாசம் லீவு முடிஞ்சு போச்சு. நாளைக்கு காலேஜ் மறுபடியும் ஆரம்பிக்க போகுது(என் தலைவலி மருந்து எங்கே?) எனக்கு அழுகாச்சியா வருது! ஐயோ காலேஜ் lectures, assignments.... இத நினைச்சாலே மனம் முதல் வயிறு வரை கலக்குகிறது!:(
-----------------------------------------------------------------------------------------
நான் keyboard 1st grade தேர்வு எழுதினேன். 1st classல் பாஸ் பண்ணிட்டேன். கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. ரொம்ப சந்தோஷமா போச்சு. 74/100 மார்க். ஒரே ஒரு மார்க் வாங்கி இருந்தால், distinction வாங்கியிருக்கலாம்! என் கீபோர்ட் குருவுக்கு நன்றி:)
-----------------------------------------------------------------------------------------

தடை போட யாருமில்ல தொடர்கதை எனக்கு நல்ல அனுபவத்தை கற்று கொடுத்தது. அதாவது காமெடியாக கதையை நகர்த்தி செல்வது ரொம்ம்ம்ம்ம்ம்ப கஷ்டம்! அவசரத்தில் முடித்ததால் எனக்கே முடிவு பிடிக்கவில்லை. இன்னும் நிறைய எழுதியிருக்கலாமோன்னு இருந்துச்சு! ஆனால் சில மாதங்கள் கழித்து கண்டிப்பா சீசன் 3 வரும்! ஹிஹி...:)
---------------------------------------------------------------------------------------

வரும் ஜூலை மாதம், நிறைய படங்கள் வெளிவருபோகின்றன. அவை, அச்சமுண்டு அச்சமுண்டு மற்றும் ஆயிரத்தில் ஒருவன்! ரெண்டுமே பார்க்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்புடன் இருக்கிறேன்.
------------------------------------------------------------------------------------------

Jun 27, 2009

நாடோடிகள்- தார் strong ஆனா ரோடு மேடுபள்ளமா இருக்கு மாமே!

நாடோடிகள்- ரொம்ப எதிர்பார்த்த படம். ஏதோ ஒரு வகையில் என் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாமல் போனது இப்படம்.

நல்ல கதை, நெத்தியடியான கருத்து. நண்பரின் காதலை ஜெயிக்க வைக்க போராடும் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை தந்துள்ள படம். ஆனால், திரைக்கதை ரொம்ப மெதுவாய் சென்று, ஒரு இடத்தில் வேறு எங்கோ சென்று, மறுபடியும் அதே trackல் வந்து, சுத்தி....பிறகு கதையை முடித்து இருக்கிறார்கள். கிட்டதட்ட 3 மணி நேரம். எடிட்டர் சார், கொஞ்சம் வெட்டி இருக்க கூடாதா?

சுந்தர் சி பாபுவின் இசை, ஒரு காத்தாழ கண்ணால அல்லது வாளைமீனுக்கும் போன்ற பாடல்களை தராமல் போனது ஏனோ? பாடல்கள் எதுவுமே மனதில் ஒட்டவில்லை.

நடிப்பு பொருத்தவரை, சசிகுமார் சுப்பரமணிபுரம் படத்தில் வந்தது போலவே தெரிகிறார். உடம்பை இன்னும் கொஞ்சம் ரிலேக்ஸா விடுங்க....நல்லா emote பண்ணி நடிங்க....உங்களுக்கு எத்தன பெண் ரசிகர்கள் தெரியுமா சிங்கையில்? இன்னும் நல்லா செஞ்சா, உருகிவிட தயாராக இருக்காங்க.:) நடனம் சுத்தமாக வரவில்லை சசிக்கு. இருந்தாலும் நல்ல முயற்சி. body language, voice modulation ஆகியவற்றில் கவனம் செலுத்தலாம்!

கல்லூரி படத்தில் நடித்த பரணி இப்படத்தில் இன்னும் அதிகமாய் நடிக்க நல்ல வாய்ப்பு. முடிந்தவரை பயன்படுத்தியிருக்கிறார். சத்தமாக பேசும்போது வார்த்தைகள் சரியாக விளங்கவில்லை. :( கல்லூரியில் நடித்த மாதிரியே இருந்துச்சு.

கஞ்சா கருப்பு காமெடிக்கு உதவி செஞ்சு இருக்கிறார். அவ்வளவு தான்! சொல்லி கொள்ளும் அளவு அப்படி ஒன்னுமில்ல.

என்னை பொருத்தவரை சென்னை 28 விஜய் தான் கதாபாத்திரத்திற்கு தகுந்தாற்போல் நடித்து உள்ளார். ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. நல்ல character artisteஆக வர வாழ்த்துகள்!

படத்தில் வந்த ஹீரோயின்கள்: சசிக்கு வந்த ஜோடிக்கு நல்ல நடிப்பு. அழுவும்போதும், சிரிக்கும்போது, காமெடி செய்யும்போது சிறப்பாய் செய்துள்ளார். சசிக்கு தங்கச்சியாக நடித்த பெண் நிஜமாகவே ஒரு காது கேட்க முடியாதவள்/ வாய் பேச முடியாத பொண்ணு. ஆனால், அவரை பேசி, நடிக்க வைத்துள்ளார் சமுத்தரக்கனி! இந்த இடத்துல உங்கள கண்டிப்பா பாராட்டியே ஆகனும்!

வசனங்கள்- நெத்தியடியான வசனங்கள்!

அரசியல்வாதியாக வரும் நபர் அடிக்கும் லூட்டி ரொம்ப ஜாலியா இருந்துச்சு.
ஒரு காட்சியில் கிணத்தில் குதித்து சாக போகிவிடுவான் சசியின் நண்பன் சரவணன். சசியும் மற்ற நண்பர்களும் சரவணனை மடியில் போட்டு "சரவணா சரவணா" என்று கதறுவார்கள்.

அப்போது அரசியல்வாதி தன் ஆட்களுடன் வந்து சரவணாவை தலைகீழ் நிற்க வைத்து முதுகில் அடித்து அவனை ஒரு குலுக்கு குலுக்கி காப்பாற்றிவிடுவார்கள். அதற்கு அப்பரம் அரசியல்வாதி சொல்வார், "இப்படி பண்ணனும். சும்மா சரவணா சரவணான்னு சொன்னா புழைச்சுடுவானா?"

செம்ம காமெடி பஞ்!

ஆங்காங்கே இயக்குனர் முன்பு எடுத்த அரசி சீரியலின் காட்சிகள் போல் சில தென்பட்டன! :)
கிளைமெக்ஸ் இன்னும் கொஞ்சம் உணர்வுபூர்வமாக இருந்திருக்கலாமோ!

எனிவே,
நாடோடிகள்- தார் ஸ்ட்ராங், ஆனா ரோடு மேடுபள்ளமா இருக்கு மாமே!

Jun 24, 2009

daddy mummy வீட்டில் இல்ல (series 2)- பகுதி 6

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5

"நீங்களாம் பிரச்சனைய பாக்கெட்டுக்குள்ளே வச்சு இருப்பீங்களா? என்ன கொடுமை ஐயப்பா இது!" என்று வானத்தை பார்த்தாள் கலா.

சுதா பரபரப்பாக தேடி கொண்டிருந்தாள் தனது கைபேசியை. "gone! am dead!" என்றாள் சுதா.

"வீட்டுல சங்கு தான் எனக்கு." சுதா சலித்து கொண்டாள்.

"all the best!" என்றாள் விஜி சுதாவை நக்கல் அடிக்க.

"விடு விடு..... அந்த வெத்தல பெட்டி டப்பா மாதிரி இருக்குற ஃபோன் போனா போகுது புதுசா வாங்கிகலாம். " கிண்டல் அடித்தாள் கலா.

"அதுல என் sweetheart surya படமெல்லாம் இருக்குதுய்யா!" சுதா உருகினாள்.

"அடி பாவி.... உங்க அக்கா முதல் மாச சம்பளத்துல வாங்கி கொடுத்த ஃபோன் போச்சேன்னு கவலைப்படாம.....சூர்யா படம் போச்சேன்னு கவலைப்படுற பாத்தீயா? உன்னைய மாதிரி பொண்ணுங்க இருக்குறனால...." என்று கலா வாக்கியத்தை முடிக்க முற்பட்டபோது உடனே சசி,

"மோசமான தமிழ்படம் கூட நல்லா ஓடுது! அது தானே சொல்ல வந்தே. பாஸு பாஸுன்னு build-up கொடுப்பீயே....இந்த டயலாக்க மட்டும் மாத்தவே மாட்டீயா?"

"shut up man! உன்னைய மாதிரி பொண்ணுங்க இருக்குறனால தான் பன்றி காய்ச்சல் வருதுன்னு சொல்ல வந்தேன்...." என்றாள் கலா!

விஜி, "வெரி குட் சமாளிfications!" சிரித்தாள்.

ஒரு வழியாய் வீட்டிற்குச் சென்றனர் அனைவரும். சனிக்கிழமையும் வந்தது. சசிக்கு வெட்கம் கலந்த பயமும் வந்தது. சித்தார்த்தை பார்க்க தயாரானாள். மற்ற மூவரையும் அவள் வீட்டு பக்கத்தில் இருக்கும் பேருந்து நிலையத்தில் சந்தித்தாள். அவர்கள் சசியின் அலங்காரத்தை பார்த்து,

"மருமகளே மருமகளே வா வா...." என்று கிண்டல் அடித்து பாடினர்.

சசி அவர்கள் பாடுவதை பொருட்படுத்தாமல், " கேர்ள்ஸ்...எல்லாம் நல்லா இருக்கா...லிப்ஸ்டிக் ஓகேவா?" என்று கையிலும் கழுத்திலும் போட்டிருந்த அணிகலன்களை தொட்டு பார்த்து சரி செய்து கொண்டாள்.

"நான் பாத்து வளந்த குழந்தை இப்போ என்னையவே சரி பாக்க சொல்லுது?" என்று பாட்டி போல் பெருமூச்சு விட்டாள் கலா.

"என்ன கலா, சசி dating போறான்னு உனக்கு பொறாமையா? is fire burning in your stomach?" சுதா கேட்டாள்.

"ஐயோ இந்த விளையாட்டுக்கு நான் வரலப்பா...எந்த ஆஞ்ஜநயா பக்தையும் dating போக மாட்டாள். அதுவும் இல்லாமல் நான் ரொம்ப decent familyய சேந்து பொண்ணு...இப்படிலாம் பண்ண மாட்டேன்." சிரித்து கொண்டே கலா பதில் சொன்னாள்.

"அப்போ சசி கெட்ட பொண்ணா?" விஜி கேட்டாள்.

"ஐயோ சசி ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்ல பொண்ணு. நாட்டிற்கும் வீட்டிற்கும் இப்படிப்பட்ட பொண்ணு இருந்தா போதும்...கலாச்சாரம் ஓகோன்னு போயிடும்." என்றாள் கலா சிரித்தவாறு.

"ப்ளீஸ் மேன்....சசிய கிண்டல் பண்ணாதீங்க...அப்பரம் குழந்தை அழுதிட போகுது!" சுதா சசிக்கு ஆதரவாய் பேசினாள். பேருந்து வந்தது சசியும் புறப்பட்டு சென்றாள்.

"போறாளே பொண்ணு தாயி...." என்று பாரதிராஜா பட பாடலை பாடிய படி கலாவும் மற்றவர்களும் அவர்கள்தம் வீட்டிற்கு சென்றனர்.

மறுநாள் காலையில் அனைவரும் சுதாவின் வீட்டில் ஆஜரானார்கள். சுதாவின் அறையில் உட்கார்ந்து இருந்தார்கள், ஆனால் சசி மட்டும் இன்னும் வரவில்லை.

"என்ன மேன் இந்த சசி இவ்வளவு லேட் பண்ணுறா? நேத்திக்கு என்ன ஆனுச்சுன்னு கேட்க எவ்வளவு interestingஆ இருக்குறோம்..." கலா கூறினாள்.

"ஆமா ஆமா...பச்சை தண்ணிகூட பல்லுல படாம இருக்குறா கலா, பாவம்!" என்றாள் விஜி.

"ஹலோ எனக்கே வா!" என்றாள் கலா அப்போது சசி சுதாவின் அறைக்குள் நுழைந்தாள்.

"என்ன சசி....ரொம்ப tiredஆ இருக்கே?" என்று 'tired' என்ற வார்த்தையை மட்டும் அழுத்தி கூறினாள் கலா. விஜியும் சுதாவும் சிரித்தனர்.

"shut up you woman!" கத்தினாள் சசி.

"சரி, சொல்லு என்ன ஆச்சு நேத்திக்கு....எப்படி இருந்துச்சு dating!" கேட்டாள் சுதா ஆர்வத்தோடு.

"dating இல்ல. outing!" என்று சுதா சொன்னதை திருத்தினாள் சசி.

சுதா, "ஐயோ அதவிடு....எப்படி பேசினான் சித்தார்த்?"

விஜி, "any touching touching?"

கலா, "no no.... i think they did something something." கைகளை அகல விரித்து சத்தம் போட்டு சிரித்தாள்.

சசிக்கு கோபம் வர, "வாய மூடுங்க டி.... he is a gem. he is such a gentleman. உங்கள மாதிரிலாம் இல்ல. அவரு ரொம்ப decent!"

"ஐயோ எனக்கு நெஞ்சு வலிக்குதே!" என்று வேடிக்கையாய் நெஞ்சில் கை வைத்து சாய்ந்தாள் கலா.

சுதா, "ஓய்.... எங்களையே நீ கலாய்க்கிறீயா?"

கலா, "ஒரு ராத்திரில சசி இப்படி மாறிடுவான்னு கொஞ்சம் கூட நினைக்கல....போங்கய்யா...நான் Afghanistanக்கு migrate ஆகிட போறேன்...இந்த கொடுமையலாம் என்னால தாங்க முடியாது!"

விஜி, "சசி, என்ன பண்ணீங்க நேத்து? billiards விளையாட கத்து கொடுத்தாரா?"

கலா, "இல்ல இல்ல....அவரு இவ்வளவு பெரிய decent உத்தமரு. சசி ஒரு உத்தமி. ரெண்டு பேரும் உலக பொருளாதாரம், தீவிரவாதம், தண்ணீர் பிரச்சனை, ozone layer ஓட்டை விழாம எப்படி காப்பாத்தலாம் அப்படின்னு அறிவுபூர்வமாண விஷயங்கள மட்டும் தான் பேசி இருந்திருப்பாங்க.... அப்படி தானே சசி?"

ஒன்றும் பேசாமல் உட்கார்ந்து இருந்தாள் சசி.

விஜி, "என்ன சசி, ஒன்னுமே சொல்லாம இருக்குற. கலா உன்னைய இப்படி ஓட்டுறா?"

சசி, "இருக்கட்டும் இருக்கட்டும். அடி படுற கல்லு தான் சிற்பமாகும்."

உடனே கலா, "பாத்து டி கர்பமாகிட போது!"

கலாவின் timing comedyயை கேட்டு அனைவரும் சிரித்தனர். சசி பக்கத்தில் இருந்த தலையணையை கலாவின் முகத்தில் அமுக்கினாள் விளையாட்டாய்.

அச்சமயம் சுதாவின் வீட்டு ஃபோன் ஒலி எழுப்பியது. அறையிலிருந்த மேசையில் ஃபோன் இருந்தது. அதை speaker modeல் போட்டாள்.

"ஹாலோ, யாரு பேசுறது?" என்றாள் சுதா.

"ஹாலோ....இந்த moblie no...." என்றவர் காணாமல் போன சுதாவின் கைபேசி எண்களை சொன்னார்.

"ஆமா அது என்னோட ஃபோன் தான். காணாம போச்சு கொஞ்ச நாளைக்கு முன்னாடி....எங்க கிடைச்சது? எப்படி?" தன் கைபேசி மீண்டும் கிடைத்த சந்தோஷத்தில் சுதா. விளையாடி கொண்டிருந்த மற்றவர்கள் தொலைபேசி அருகே வந்தனர்.

"ஓ....இன்னிக்கு படம் பார்க்க போன போது, என் seat கீழே இருந்துச்சு.... i think you dropped it. ஃபோன்ல....home அப்படின்னு ஒரு contact நம்பர் இருந்துச்சு...சோ...அதான் ஃபோன் பண்ணி பாத்தேன். உங்க வீட்டு address சொன்னீங்கன்னா....நான் வந்து கொடுத்துடுறேன்...." என்றார் அவர்.

"ஓ...இல்ல பரவாயில்ல....நான் வந்து வாங்கிகிறேன்..." என்றாள் சுதா.

"இல்லங்க பரவாயில்ல.... நான் வீட்டுக்கு போற வழில வந்து கொடுத்துடுறேன்..." என்றார். முகவரியை கொடுத்தபிறகு அவர்,

"சாரி...உங்க பெயரு?"

"ஐ எம் சுதா. நீங்க?" என்றாள்.

"மை நேம் இஸ் ரவி!" என்றதும் சுதா, "ரவியா????"

கண்ணாடி கடையில் கலா சொன்னது ஞாபகம் வந்தது- ஹாஹா...முதல தடவ மாட்டிகிட்டபோது ஒரு சித்தார்த் நம்ம கதைக்குள்ள வந்தான்...இப்போ எந்த ஜெயம் ரவி வர போறானோ.

அந்த ஞாபகம் வர அனைவரும் சிரித்தனர்.

மறுமுனையில் இருந்த ரவி, "ஹாலோ ஹாலோ....என்ன ஒரே சத்தமா இருக்கு?"

"ஒன்னுமில்ல" என்று சுதா வெட்கப்பட்டாள்.

கலா, "அடே மச்சி, வெட்கப்படுறாளே! மறுபடியும் மறுபடியும் சாச்சுபுட்டான் மச்சான். " என்று சொல்லியபடியே மெத்தையில் விழுந்தாள்.

*முற்றும்*

(இத்துடன் இந்த sequel 2/season 2 முடிச்சுட்டு. ஐயப்பா சாமி...தொடர்கதை எழுதுறது ரொம்ப கஷ்டம்ய்யா! உஷ்ஷ்ஷ்......... ஆபிள் ஜுஸ் ப்ளீஸ்.)

Jun 23, 2009

daddy mummy வீட்டில் இல்ல (series 2)- பகுதி 5

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4

"ஓ...நோ!!" கத்தினாள் சுதா. அவள் சத்தம் போட்டதை கேட்டு விஜியும் கலாவும் தலைதெறிக்க ஓடி வந்தனர். நொறுங்கிய கண்ணாடி துண்டுகளை பார்த்தனர் நால்வரும். என்ன செய்வது என்று தெரியவில்லை. அதன் விலையை பார்த்தனர். சசிக்கு மயக்கம் வந்துவிட்டது.

விஜி, "ஒரு restaurant இருந்தாலும் பரவாயில்ல...காசு இல்லன்னா மாவு ஆட்ட சொல்வாங்க.....இங்க என்னய்யா பண்ண சொல்வாங்க?"

கலா, " இந்த கடை முதலாளி முன்னாடி நின்னு record dance ஆட சொல்வாங்க...எனக்கு வாய்ல நல்லா வருது. இந்த கழுதைங்க கையையும் காலையும் வச்சுகிட்டு சும்மா போக வேண்டியது தானே? ரெண்டு வயசு பிள்ளைங்கன்னு நினைப்பு இதுங்களுக்கு!" என்று சுதாவையும் சசியையும் கிண்டல் அடித்தாள். மற்ற மூவரும் பயத்தால் நடுங்க, கலா மட்டும் எப்போதும் போலவே கூலாக கலயாத்து கொண்டிருந்தாள்.

"ஹாஹா...முதல தடவ மாட்டிகிட்டபோது ஒரு சித்தார்த் நம்ம கதைக்குள்ள வந்தான்...இப்போ எந்த ஜெயம் ரவி வர போறானோ?" என்று சிரித்தாள் கலா.

"be serious கலா...எனக்கு பயமா இருக்கு!" என்று அழுதாள் சசி.

கடையின் நிர்வாகி ஓடி வந்தார். நால்வரையும் பார்த்தார்.

"இந்த கண்ணாடி பீஸ் என்ன விலை தெரியுமா?" என்று நிர்வாகிக்கு கோபம் வந்தது.

"excuse me mr....." என்ற கலா, அவர் சட்டை பையிலிருந்த பெயர் அட்டையை பார்த்து,

"mr kanthaa saamy..." என கந்தசாமி என்னும் பெயரை பிரிட்டீஷ் இளவரசி எவ்வாறு பேசுவாங்களோ அவ்வாறு பேசினாள்.

ஆங்கில கலந்த தமிழில், கலா "எங்க daddy யாரு தெரியுமா? mr chandragopal தெரியுமா?" என்றாள்.

அவள் பேசிய விதமும் விரல்களை நீட்டி பேசிய விதமும் நிர்வாகியை கொஞ்சம் பயத்தால் ஆட வைத்தது.

"மிஸ்டர் சந்திர கோபால்... தெரியாதே?" என்றார்.

"அப்போ நல்லதா போச்சு...." முணுமுணுத்தாள் கலா.

"அவர் எவ்வளவு பெரிய ஆளு தெரியுமா, you damn it!" கண்ணாடி துண்டுகளை மேலும் உதைத்தாள்.

கலாவின் தசாவதாரத்தை கண்டு ரசித்து கொண்டிருந்தனர் மற்ற மூவரும்.

"ஆறு அடி இருப்பாரா?" என்றார் நிர்வாகி.

"ஏய் ஏய்....you....kidding with me? you....." என்று கோபம் வருவதுபோல் நடித்தவள் தனது கைபேசியை எடுத்து ஏதோ ஒரு நம்பருக்கு டயல் செய்தாள். அது ஏதோ ஒரு நாட்டிற்கு connect ஆனது.

"எங்க daddy நினைச்சாருன்னா, இந்த மாதிரி 100 கடை வாங்க முடியும்! mind it!" என்று நிர்வாகியிடம் பேசிவிட்டு கைபேசியை தன் காதில் வைத்தாள்.

"daddy, you know what has happened...." என்றவள் ரொம்ப நேரம் புலம்பி தீர்த்தாள். இதை பார்த்து கொண்டிருந்த நிர்வாகி உண்மை என்று பயந்துவிட்டான். பேசி முடித்தவள் நிர்வாகியிடம் கைபேசியை நீட்டி,

"இந்த மேன்...my dad wants to talk to you."

கைகள் சற்று நடுங்கியவாறு நிர்வாகி, "ஹாலோ சார்....." என்று இழுத்தான்.
உடனே அவன் கலாவிடம்,

"அவர் என்ன சொல்றாருன்னு தெரியல்ல....எந்த ஊர்ல இருக்காரு?"

கலா, "he is talking from dubai."

கலா கைபேசியை பிடுங்கி தன் காதில் மீண்டும் வைத்து பேசினாள், "ok dad...ok..sure..no problem...it is ok dad. i will take care. no no...you need not come here!"

பேசி முடித்தவள் நிர்வாகியிடம், "இங்க பாரு மேன்...என் அப்பாவுக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சு...இங்க உடனே helicopterல வரேன்னு சொன்னாரு. நான் தான் வேண்டாம்னு சொல்லியிருக்கேன். இந்த கண்ணாடி பீசுக்கு நான் pay பண்ணுறேன். do you accept credit card?"

"நோ மேடம். system out of order. so cash only."

"damn it....என்ன கடை வச்சு நடத்துற...." என்றவள் மறுபடியும் கைபேசியை எடுத்து பேசினாள். அப்போது தூரத்தில் இரண்டு துபாய் ஷேக்குகள் கடை வீதியை சுற்றி பார்த்து கொண்டிருந்தனர்.

கலா நிர்வாகியிடம், "பணத்த உடனே கொண்டு வர சொல்லிட்டேன். என் அப்பாவோட assistants தான் அவங்க..." என்றவள் அந்த இரண்டு ஷேக்குகளை பார்த்து கை நீட்டி காட்டினாள்.

"அவங்ககிட்ட பணத்த வாங்கிக்கோ மேன்....." என்றவள் நைஸா நால்வரையும் கூட்டி கொண்டு வெளியே வந்துவிட்டாள். சற்று தூரம் நடந்தவர்கள் பின்னர் ஓட ஆரம்பித்தனர். ரொம்ப தூரம் ஓடினர். கால் வலி ஏற்பட ஒரு juice கடையில் juice வாங்கி கொண்டனர்.

"எனக்கு ஆபிள் ஜுஸ் வேணும்..." என்றாள் சுதா.

"இவ கெட்ட கேட்டுக்கு ஆபிள் ஜுஸா..." என்று கையில் இருந்த பையை கொண்டு சுதாவின் மண்டையில் அடித்தாள்.

"யாரு மேன் துபாய்லேந்து பேசினா...உனக்கு ஆஸ்கார் அவார்ட் கொடுக்கலாம் மச்சி." என்றாள் விஜி.

"யாருக்கு தெரியும்...ஏதோ ஒரு நம்பர்...அது எங்கேயோ போச்சு. arabic language மாதிரி பேசினாங்க....அதான் துபாய்ன்னு சொல்லிட்டேன். வாழ்க துபாய்!" என்றால் கலா ஜுஸை குடித்து கொண்டே.

"thanks கலா! நீ இல்லேன்னா...." என்றாள் சசி.

"கண்டிப்பா record dance தான் ஆடி இருக்கோனும் ...." என்று நக்கல் அடித்தாள் கலா.

மற்றவர்கள் சிரித்து பேசிகொண்டிருந்த வேளை சுதா தனது பையில் ஏதோ ஒன்றை தீவிரமாக தேடி கொண்டிருந்தாள். திடீரென்று கத்த ஆரம்பித்தாள், "oh shit... i lost my handphone!!!"
( பகுதி 6)

Jun 21, 2009

daddy mummy வீட்டில் இல்ல (series 2)- பகுதி 4

பகுதி 1 பகுதி 2 பகுதி 3

கண்ணாடி கடைக்குள் ஒவ்வொருத்தியும் ஒவ்வொரு contact lensயை எடுத்து பார்த்து கொண்டிருந்தாள். சசி, "ஏண்டி இதலாம். இந்த கண்ணாடியே போட்டு போனால் என்ன?"

சுதா, "சும்மா இரு மேன். contact lens gives you a glamorous look."

சசி, "அடியே நான் என்ன நமீதாவுக்கு போட்டியா போக போறேன். எனக்கு என்னமோ, நீங்களாம் என்னைய வச்சு காமெடி பண்ணுற மாதிரியே இருக்கு."

சசி சொன்னதை கலா கேட்டுவிட்டாள். கையிலிருந்தவற்றை போட்டுவிட்டு கலா,

"சரி வாங்க...போவோம். சசியே பாத்துகிட்டும்." என்றவுடன் சசி,

"ஏய் ஏய்...சரி சரி...." என்று பவ்யிமாக பதுங்கி போனாள்.

விஜி சிரித்து கொண்டே," அப்படி வா வழிக்கு."

சசி, "ஐஸ்வர்யா ராய் கண்ணு கலரு பச்சை தானே. பச்சை கலரு லென்ஸ் எடுக்கலாமா?" என்றாள்.அவள் பேசியதை கேட்டு மற்ற மூவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

கலா, "ஒரு படத்துல சத்யராஜ் சொல்வாரு நான் வேணும்னா படிச்சு ஒரு டாக்டராவோ எஞ்ஜினியராவோ ஆகிடுவான்னு. அதுக்கு கவுண்டமணி, அது எப்படி மாப்பிள்ள கொஞ்சம்கூட வெட்கப்படமா பேசிட்டேன்னு. அந்த மாதிரி இருக்கு நீ பேசுறது சசி. அது எப்படி உன்னையும் ஐஸ்வர்யாவையும் compare பண்ணி பேசுற?"

அவர்கள் சசிக்கு ஒரு colourless lensயை தேர்ந்தெடுத்தனர்.

சுதா, "நெக்ஸ்ட் என்ன?"

விஜி, "ஆள் பாதி ஆடை பாதி!"

கலா, "அப்போ சசி பாதி டிரஸோட தான் போகுமா?"

சசி, "அடியே!"

நால்வரும் சாரா பேஷன் கடைக்குள் சென்றனர். சசி மூவரையும் தடுத்து நிறுத்தி ஒரு முக்கியமான கேள்வியை கேட்டாள்,

"ஏய்....நான் இதையெல்லாம் வீட்டுக்கு எடுத்துகிட்டு போனா....ஏன் இப்போ இதையெல்லாம் வாங்கினேன்னு கேட்டாங்ளா என்ன சொல்ல?"

இப்படி ஒரு கேள்வியை கேட்டவுடன் சுதாவும் விஜியும் ஆச்சிரியத்தில் நின்றனர். யாரும் இதை யோசிக்கவில்லையே!

சசிக்கு பயம் கவிகொண்டது, முகத்தில் அச்சம் படர, "என்ன மேன் செய்யுறது?" படபடப்புடன் கேட்டாள்.

கலா, "இந்த கலா இருக்க பயம் ஏன்? நம்ம classல படிக்குறான்ல செந்தில். அவனோட wedding receptionக்கு தான் இந்த புது டிரஸ்ன்னு சொல்லு."

சுதா, "எப்ப டி அவனுக்கு கல்யாணம் ஆனுச்சு?"

கலா, "பொய் மச்சி, பொய்! ஹாஹா...."

விஜி, "நம்ம போதைக்கு மத்தவன் ஊறுகாயா? ம்ம்...நடத்துவோம் நடத்துவோம்!"

கடைக்குள் நின்ற ஒரு பொம்மை போட்டிருந்த உடையை பார்த்து சிரித்து கொண்டிருந்தாள் சுதா. விஜி மற்ற உடைகளை பார்த்து கொண்டிருந்தாள். சுதா,

"இந்த பொம்மை போட்டிருக்கிற டிரஸ் மாதிரி நம்ம சசிக்கு வாங்கி கொடுப்போமா?"

கலா, "அதுக்கு ஏண்டி காசு கொடுத்து வாங்கனும்? சசி குளிச்சிட்டு துண்ட கட்டிகிட்டு அப்படியே போ சொல்லு. ஒரு செலவும் இல்லாமல் போயிடும்!"

பக்கத்தில் நின்று கொண்டிருந்த சசி கலாவின் கையை கிள்ளினாள்.

“first date போகும்போது ரொம்ப revealing clothes போடகூடாது. அதே நேரத்துல இழுத்து போத்திட்டும் போககூடாது. நல்ல பொண்ணு மாதிரி இருக்ககூடாது, அதே நேரத்துல கெட்ட பொண்ணு மாதிரியும் இருக்ககூடாது….” கலா தனக்குள் ஒளிந்திருந்த ஸ் ஜெ சூர்யாவை தட்டி எழுப்பினாள்.

“ஓ மை காட்….என்ன மேன் சொல்ல வர நீ?” சுதாவின் கண்கள் ஆச்சிரியத்தில் விரிந்தன.

“எல்லாம் பசங்க சைக்காலஜி. அவங்க மனசு நல்லா இருந்தாலும். அவங்க கண்ணு அலைபாயும். சோ, அதுக்கு ஏத்த மாதிரி டிரஸ் இருக்கனும்.” கலா விளக்கினாள்.

“எப்படி?” விஜி கேட்டாள். கலா பேசுவது பிடிக்காதவள் போல் சசி மற்ற உடைகளை பார்த்து கொண்டிருந்தாலும், கலா என்ன சொல்கிறாள் என்பதை கூர்ந்து கவனித்தாள்.

“no spaghetti , no tube top! short-sleeve dress will be the best. கொஞ்ச low neckஆ இருந்தா போதும்!” என்று கண்களை சிமிட்டினாள் கலா. காலில் விழாத குறையா சுதா,

“தலிவா, கலக்குற!”

தேவையான பொருட்களை வாங்கி கொண்டனர். சனிக்கிழமை அன்று தான் வாங்கிய புதிய உடையை போட்டு எப்படி இருப்போம் என்று கற்பனையில் மிதந்தாள் சசி. புதிய உடையில் நடந்து போவதுபோல் கற்பனை செய்தாள், பின்னாடி இளையராஜா பின்னனி இசையுடன்.

தன்னை கிண்டல் செய்வார்கள் என்றும் நினைக்காமல் வெகுளித்தனமாய், “ஏய் கேள்ர்ஸ்….இவ்வளவு தானா?” என்றாள். மற்ற மூவரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து கொண்டனர்.

“வேற என்ன வேணும் செல்லம்?” கலா சசியின் தோளில் கை போட்டாள்.

“இந்த waxing, threading….இதெல்லாம் இல்லையா?” சசி தயக்கத்துடன்.

கலா விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள். கலா, “சசி, தேரிட்ட மச்சி!”

ஒரு அழகு நிலையத்திற்குள் சென்றனர். அங்கே நின்று கொண்டிருந்தார் ஒரு ஆண்ட்டி. விஜி, “ஆண்ட்டி, இந்த பொண்ணுக்கு…..” என்று ஆரம்பித்தவள் செய்ய வேண்டிய விஷயங்களை விளக்கினாள்.

“ஒரு குரங்க எப்படி கிளியா மாத்துறீங்கன்னு நான் பாக்குறேன்.” என்றாள் கலா. உள்ளே சென்ற சசி வெளியே வந்தாள் ஒரு மணி நேரம் கழித்து.

மற்ற மூவரும், “வாவ்!!!!” என்றனர்.

“என்னை கொஞ்சம் மாற்றி...” என்று பாட தொடங்கினாள் விஜி சசியை பார்த்து. சசிக்கு கொஞ்சம் வெட்கமாக இருந்தது. ஆனால், எல்லாரும் பூரிப்பு அடையும் விதத்தில் தான் இருப்பதை நினைத்து சந்தோஷம் அடைந்தாள்.

விஜி தொடர்ந்தாள், "இப்படியே போனே, உன் குடும்பத்துக்கே உன்னைய அடையாளம் தெரியாம போயிடும்! ஹாஹா..."

பிறகு, நால்வரும் வீட்டிற்கு கிளம்பலாம் என்று முடிவு எடுத்தபோது, சுதா கத்தினாள்,

"ஏய் பேப்ஸ்..we forget one important thing!!"

என்ன என்பது போல் மற்றவர்கள் சுதாவை பார்த்தனர்.

"make-up items....eyeliner, lipstick...இதெல்லாம் இருக்கா சசி உன்கிட்ட?" என்றாள் சுதா.

"இருக்கு... சின்ன வயசுல fancy dress competitionக்காக வாங்கி வச்சது" என்றாள் சசி.

" ஏன் உங்க பாட்டி சின்ன வயசா இருந்தபோ வாங்கி வச்சதுன்னு சொல்ல வேண்டியது தானே....வா போய் புதுசா வாங்கலாம்!" என்றாள் சுதா.

"வேண்டாம்ய்யா...i can manage with the ones i have at home. if not i can borrow from you guys." பதில் அளித்தாள் சசி.

"இங்க பாரு...இது என்ன பக்கத்து வீட்டில காபி தூள் வாங்குற மாதிரி நினைச்சீயா? nothing doing....வா மேன்..." என்று வலுகட்டாயமாக இழுத்து கொண்டு சென்றாள் சுதா சசியை.

சசி, " ஐயோ ஏண்டி....விடு... நான் வரேன்." என்று உள்ளே நடந்தாள். விஜியும் கலாவும் சாவகாசமாக நடந்து வந்தனர். சுதாவும் சசியும் முதலில் கடைக்குள் சென்றனர். ஆனால் கடையின் நுழைவாயில் சிறியதாக இருந்ததால், இருவரும் ஒருவரை ஒருவர் தள்ளிகொண்டு விளையாடிய படியே நடந்தனர்.

அவர்கள் பக்கத்தில் ஒரு கண்ணாடி பூ தொட்டி இருந்தது 3 அடி உயரத்தில். சுதாவும் சசியும் அதை கவனிக்கவில்லை. சுதாவின் கை அதை லேசாக தான் தொட்டது.

விளையாடிய விளையாட்டு வினையாய் போனது! கண்ணாடி பூ தொட்டி தொப்பென்று விழுந்து நொறுங்கியது.

(பகுதி 5)

இந்த மானக்கெட்ட பொழப்பு தேவையா?

விஜய் டீவி அவார்ட்ஸ் நிகழ்ச்சிய பார்த்தபிறகு....சாரி சாரி, அந்த சூர்யா family function நிகழ்ச்சியை பார்த்தபிறகு எனக்கு தோன்றியது தான் இப்பதிவின் தலைப்பு!

உளறல்கள்:

அது எப்படி, தமிழ் சினிமாக்காரர்கள் உளறுவதில் இப்படி கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கமல் முதல் மனோரமா வரை எல்லாரும் ஏதோ சம்மந்தம் இல்லாமல் பேசியது சிப்பா இருந்துச்சு! அதுவும் சிவாகுமார் பேசியது நகைச்சுவையிலும் நகைச்சுவை!! அண்ணன் பையனுக்காக கமல் தான் சூர்யாவுக்காக விருதை விட்டுகொடுத்தது என்று கூறுகையில்......... என்னால முடியல்ல!!!

மடத்தனம்:

காமெடி என்ற பெயரில் பார்த்திபன் சொன்னது. ஐயோ...... மடத்தனத்தின் மன்னன் அவரே! "அவார்ட்ஸ் முத்தம் மாதிரி. கொடுக்கும்போதும் சந்தோஷம் வாங்கும்போதும் சந்தோஷம்...." அதுக்கு அப்பரம் அவார்ட்ட சிநேகாவிடம் கொடுத்தது....யப்பா நான் இதுக்கு மேலேயும் எதுவும் சொல்லல....அப்பரம் ஏதாச்சு சென்சார் போர்ட் பிரச்சனை வந்திட போது!

எரிச்சல்ஸ்:

டிடி வந்தவர்களிடம் அவர்கள் அணிந்திருந்த உடைகளை எங்கே வாங்கினீர்கள் என்று கேட்டது சலிப்பை தந்தது. எரிச்சலாக இருந்தது. ஆனால், சிலர் போட்டு வந்த உடைகள், அப்படியே தூங்கி எந்திரிச்சு வந்த மாதிரியே இருந்துச்சு!! (வெங்கட் பிரபு, பிரேம் ஜி.....தூங்கிட்டீங்களா?)

சின்னப்புள்ளத்தனம்:

கௌதம் மேனன் ஹாரிஸிடம் விருதை கொடுத்துவிட்டு மேடையை விட்டு விழுந்து அடிச்சு பின்னால் ஓடியது....ஹாஹா..... அதுவும் கோபி அவரை வலுக்கட்டாயமாக கேள்வி கேட்டு மடக்கியது..... ஹாஹா......

அடுத்த அரசியல் தலைவர்:
விருது பெற்றால் சரி, காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொள்ளலாம். விருது பெற்றவரிடம் ஏன் யா விழுவுற? விஜய் கமலிடம் விருதை கொடுத்துவிட்டு காலில் விழுந்தார். விஜய் அரசியலுக்கு போக போகிறார் என்பதை நிருபித்துவிட்டார். அதுவும் மைக்கை பிடித்து அவ்வளவு நேரம் விஜய் பேசியது வியப்பாக இருந்துச்சு.

குடும்ப நிகழ்ச்சி:

என்னை மிகவும் ஆத்திரம் அடைய செய்தது சூர்யாவின் செயல் தான். ஆசிர்வாதம் வாங்கி கொள்வது வேறு, ஒருத்தன் காலில் விழுவது வேறு! சூர்யா சார், ஏன் இப்படி உணர்ச்சிவசப்பட்டீங்க? இதுக்கு முன்னாடி எத்தனையோ விருதுகளை பெற்றபோது, இப்படி தான் குடும்பத்தையே மேடைக்கு அழைச்சீங்களா?இல்லை இப்படி தான் யோசிக்காமல் காலில் விழுந்தீங்களா? நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபி செய்த கூத்து ஒரு காரணம்! தேவையில்லாமல் சூர்யாவின் குடும்பத்தினரை மேடைக்கு வர சொன்னது, ஒரு பரபரப்பை ஏற்படுத்துவதற்காக என்பது அப்பட்டமாக தெரிந்தது.

இப்படி ஒரு பொழப்பு தேவையா?

எங்களை முட்டாளாக்கிய விதம்:

ஏ ஆர் ரகுமான் வரவில்லை. ஆனால் அவருக்கு விருது கொடுத்தது போல் காட்டினீர்கள். சிம்ரன் best supporting actress விருது கிடைத்தது. அவர் வரவில்லை என்பதால் இவ்விருது கொடுக்கப்படாது என்று கோபி கூறினார். என்னடா நிகழ்ச்சி பண்ணுறீங்க? ஒரு standard procedure வேண்டமா?

பாம்பே ஜெய்ஸ்ரீ வரவில்லை. ஆனால், அவர் சார்பா விருதை திருமதி ஹாரிஸ் ஜெய்ராஜ் வாங்கி கொண்டார்.

????? என்னங்கடா நிகழ்ச்சி இது?
கமல் கமல் கமல்:

இந்த நிகழ்ச்சியை பொருட்செலவு இல்லாமல் செய்து இருக்கலாம். கமலின் வீட்டின் பூங்காவில் இந்நிகழ்ச்சியை simpleஆ முடித்து இருக்கலாம்! ரசிகர் வாக்குகள், நாக்குகள், மூக்குகள் என்று எங்களை ஏமாற்றுவதை, நிறுத்தவேண்டும்.

வருத்தம்:

அபியும் நானும் ஒரு விருதுகூட பெறாதது!

மெகா வருத்தம்:

ஏகன் படத்துக்கு எந்த விருதும் கிடைக்காதது!(ஹிஹிஹி...)

போங்கடா நீங்களும் உங்க அவார்ட் ஷோவும்!

Jun 17, 2009

daddy mummy வீட்டில் இல்ல (series 2)- பகுதி 3

பகுதி 1
பகுதி 2

"எப்படி இருக்கே சசி? exams எல்லாம் நல்லா செஞ்சியிருக்கீயா?" என்றான் சித்தார்த். சசி பதிலே பேசவில்லை. என்ன பேசுவது என்று தெரியவில்லை.

"சசி, are you there?"

சசியின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த முப்பெரும் தேவிகள் 'பேசு' என்பதுபோல் சசியிடம் சைகை காட்டினர்.

"ah..yes...yes...how are you?" வார்த்தைகள் மெதுஓட்டம் ஓடின.

"என்ன busyயா? கொஞ்சம் disturbed ah இருக்குற மாதிரி பேசுற? are you alright?" என்றான் சித்தார்த்.

"yes yes alright." இப்போது வார்த்தைகள் marathon ஓடின.

"சும்மா தான் ஃபோன் பண்ணேன்...அப்பரம்...லீவுல என்ன plans?"

பக்கத்திலிருந்து சசியின் தோழிகள், சித்தார்த் என்ன சொல்கிறான் என்பதை கேட்க சசியின் கைபேசி அருகே தங்களது காதுகளை வைத்தனர். இருந்தாலும் ஒன்றும் கேட்கவில்லை அவர்களுக்கு.

"nothing...." சசிக்கு வேர்த்து கொட்ட ஆரம்பித்தது. பேச்சை உடனடியாக முடித்துகொள்ளவேண்டும் என்பதற்காக ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள்.

"no plans ah? அப்போ...free தான் சொல்லுங்க?"

"yes!" யோசிக்காமல் பதிலை செப்பினாள்.

"so நம்ம ரெண்டு பேரும் வெளியே போலாமா?"

நேற்று சாப்பிட்ட சிக்கன் பிரியாணி வாந்தியாய் வெளியே வருவதுபோல் இருந்தது சசிக்கு. கொஞ்சம் மயக்கமும் வந்தது.

"நான் வெளியே ஃபிரண்ட்ஸ்கூட இருக்கேன்...." என்று சொல்லி பேச்சை முடிக்க முற்பட்டாள்.

சித்தார்த், "ஐயோ சாரி சாரி...முன்னாடியே சொல்லியிருக்கலாமே! சாரி....you enjoy. நான் அப்பரம் ஃபோன் பண்ணுறேன்....take care sasi." என்று கூறி முடித்தான்.

கைபேசியை கீழே வைத்த சசி மேசையில் இருந்த தண்ணீரை எடுத்து மளமளவென்று குடித்தாள்.

சுதா, "என்ன சொன்னான்?"

விஜி, "எதுக்கு ஃபோன் பண்ணான்?"

கலா, "ஏன் திடீரென்னு இன்னிக்கு ஃபோன் பண்ணான்?"

கேள்வி மேல் கேள்விகளை கேட்டுனர். சசிக்கு தலை சுற்றியது. ஒரு பாட்டில் தண்ணீரை முடித்தவள், வாயை துடைத்துகொண்டு,

"வெளியே போலாமான்னு கேட்டான்?"

மூவரும், "என்னாது???"

விஜி, "எங்க?"

கலா, "அவங்க குடும்பமும் இவ குடும்பமும் குலதெய்வ கோயிலுக்கு மாவிளக்கு போடறதுக்கு கூப்பிட்டு இருப்பான்.....யாரடி இவ..... ஏய் விஜி, இது கண்டிப்பா அது தான்."

விஜி, "confirmஆ அது தானா?"

கலா, "confirm."

சசிக்கு ஒன்றுமே புரியவில்லை. "என்னய்யா சொல்றீங்க. அவன் outing கூப்பிட்டதுக்கு ஏன் இப்படி என்னைய போட்டு குழப்புறீங்க?"

கலா, "ஏய் ஏய் ஏய்....இந்த டக்கால்ட்டி வேலையெல்லாம் வேணாம் கண்ணு. எல்லாரும் காதுல பூ சுத்துவாங்க...நீ பெரிய ipodட்டே சுத்துற!! கூட்டமா போனா தான் அதுக்கு பெயரு outing. ரெண்டு பேரு மட்டும் போனா அதுக்கு பெயரு dating. dating.dating. dating." என்று dating என்ற வார்த்தையை மூன்று தடவை எதிரோலி போல் சொன்னாள்.

சிரிக்க ஆரம்பித்தனர் சுதாவும் விஜியும். சசி கலாவை பார்த்து முறைத்தாள். தன்னை இதிலிருந்து காப்பாற்றுமாறு தோழிகளிடம் கெஞ்சி கொண்டிருந்தாள். அப்போது சித்தார்த்திடமிருந்து ஒரு குறுந்தகவல்,

சசி, இந்த சனிக்கிழமை போவோமா? evening 5. இடம், உன்னுடைய சாய்ஸ்?:)

இக்குறுந்தகவலை படித்த கலா, "இங்க பாருடி சாய்ஸ் கொடுக்குறாரு? இது பெரிய question paper பாரு? ஹாஹா...."

விஜி, " சும்மா போயிட்டு வா. இதுக்கு என்ன பயம்?"

சசி, "வீட்டுல தெரிஞ்சு கொன்னுடுவாங்க...."

சுதா, "யாருக்கும் தெரியாம போயிட்டு வா...."

கலா, "hey babe, it's very simple. எங்களோட வெளியே வரபோறேன்னு சொல்லிட்டு போயிட்டு வா....enjoy machi...ஆனா ஒன்னு மட்டும் புரியலை...அது எப்படி இந்த மாதிரி நல்ல விஷயங்கெல்லாம் உன்னைய மாதிரி அப்பாவி பொண்ணுங்களுக்கே நடக்குது."

கலா சுதா விஜி ஆகியோர் கைதட்டி சிரித்தனர்.

"அப்ப நான் ஓகே சொல்லிடவா?" அப்பாவியான முகத்துடன் சசி.

"ஓகேன்னு அனுப்பு. எங்க போலாம்னு முடிவு பண்ணி, அதையும் அனுப்பு." சுதா கூறினாள்.

"எங்க போறது?" சசிக்கு ஒரு சரியான இடத்தை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டது.

"i have got an idea. இந்த சினிமா, பீச் எல்லாம் சுத்த போர்! நீங்க ரெண்டு பேரும் billiards விளையாட போங்க. அதுக்கு அப்பரம் டினர் போங்க." கலா தனது கருத்தை முன்வைத்தாள்.

"எனக்கு billiards விளையாட தெரியாதே...." சசி பதில் அளித்தாள்.

"சித்தார்த் கத்து தருவான் டி." என்று விஜி கூற, சுதாவும் கலாவும் சிரித்தனர்.

"அவனுக்கும் தெரியலைன்னா?" சசி கேள்வி கேட்டாள்.

"ரெண்டு பேரும் குச்சிய வச்சு, உப்பு கருவாடு ஊறவச்ச சோறுன்னு டான்ஸ் ஆடுங்க...யாரடி இவ....கண்டிப்பா சித்தார்த்துக்கு தெரிஞ்சு இருக்கும்.... நீ மெசேஜ் போட்டு கேட்டு பாரு. " என்றாள் கலா.

சசி உடனே குறுந்தகவல் அனுப்பினாள் சித்தார்த்திற்கு,
ஹாய் சித்தார்த். சனிக்கிழமை how about playing billiards and dinner?

அதற்கு உடனே பதில் வந்தது,
வாவ், நைஸ் சாய்ஸ்! ஐ லவ் billiards. gr8...see you then. can't wait for saturday.

சுதா, "பையன் ரொம்ப தான் குஷியா இருக்கான்?"

சாப்பிட்டு முடித்தார்கள் நால்வரும். அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தனர்.

விஜி, "ok now let's prepare for sasi's dating....we will do a makeover for her."

சசி, "மேக் ஓவரா?"

கலா, "அதுக்கு ஏண்டி hangover ஆக போற மாதிரி கத்துற....."

முதலில் சசியின் கண்ணாடியை மாற்றுவதற்காக ஒரு கண்ணாடி கடையினுள் நுழைந்தனர்....

(பகுதி 4)

daddy mummy வீட்டில் இல்ல (series 2) - பகுதி 2

பகுதி 1

சசி பட போஸ்ட்டர்களை பார்த்து கொண்டிருந்தாள். விஜி,சுதா, கலா வருவதை பார்க்கவில்லை. ஆனால் இவர்கள் சசியை பார்த்துவிட்டார்கள். மெதுவாக பூனைபோல் சென்று, பயம் காட்டுவதற்காக சசியின் தோள்பட்டையை குலுக்கினர் பின்னாடியிலிருந்து. சசி சற்று பயந்துவிட்டாள்.

கலா சிரித்தவாறு, "யாரோ சொன்னாங்க....இந்த மாதிரி படத்துகெல்லாம் வரமாட்டாங்கன்னு!"

சுதா, "நீ வேற, சசி நேத்திக்கே இங்க வந்திருப்பா. அவ பைய check பண்ணு, toothpaste, brush எல்லாம் வச்சுயிருப்பா...ஹிஹிஹி..."

அவர்கள் கிண்டல் செய்வதை சசியும் ரசித்து சிரித்தாள்.

"ஒகே கேர்ள்ஸ்....சீக்கிரம் டிக்கெட் வாங்குவோம்....படம் ஆரம்பிச்சுட போகுது." விஜி அவசரப்படுத்தினாள். நால்வரும் டிக்கெட்டுகளை வாங்கினர். பாப்கார்ன், கோக், சிப்ஸ் போன்ற நொறுக்கு தீனிகளையும் சேர்த்துவாங்கி கொண்டனர்.
வாரநாட்கள் என்பதால் கூட்டம் அவ்வளவாக இல்லை. பெயர் போட ஆரம்பித்தனர். ஃபிரெஞ்சு படம் என்பதால் ஆங்கிலம் subtitleலுடன் படம் ஆரம்பித்தது.

2 மணி நேரம் படம் முடிந்தபிறகு, வெளியே வந்த நால்வரும் பக்கத்தில் இருந்த KFC கடைக்குள் சென்றனர். பையை மேசையில் வைத்த கலா, "ஐயோ படம் சுத்த போர். waste movie man! இதுக்கு போய் என்னாத்துக்கு m18 rating எல்லாம்?"
விஜியும் ஆம் என்பதுபோல் தலையாட்டினாள்.

"ஆமா கலா, ரொம்ப disappointing, கதையும் இல்ல ஒரு மண்ணும் இல்ல." சுதா தனது கருத்தை தெரிவித்தாள்.

கலா,"இதுக்கு நம்ம ஏதாச்சு தமிழ் படத்துக்கு போய் இருந்தாகூட நல்ல R21 காட்சிகள பாத்து இருக்கலாம்..." விழுந்து விழுந்து சிரித்தாள்.

சசிக்குள் தூங்கி கொண்டிருந்த தமிழச்சி, "ஏய், உனக்கு தமிழ் படம்ன்னா அவ்வளவு கேவலமா போச்சா?" அடுப்பில் வைத்த பால் போல் பொங்கி எழுந்தாள் சசி.

விஜி தனது கைபையிலிருந்து பணத்தை எடுத்து கொண்டு உணவு வாங்க சென்றுவிட்டாள்.

கலா, "ஏய் தோடா இங்க பாரு, பாரதிராஜா பெரியம்மா பொண்ணுக்கு வர கோபத்த...." என்று சசியை இன்னும் சீண்டினாள்.

சசி தொடர்ந்தாள், "நம்மளே நம்ம படத்த பத்தி இப்படி சொன்னா.....it's very bad man. தமிழ் படங்கள சில நல்ல படமும் இருக்கு."

கலா தன் கைபேசியை மேசையில் உருட்டியபடி, "ம்ம்ம்....சுஜாதா சொன்னது சரி தான்!"

இவர்கள் போடும் வாக்குவாதத்தை அமைதியாக கேட்டு கொண்டிருந்த சுதா, "சுஜாதாவா? யாரு அது? என்னா சொன்னாங்க?

"writer sujatha, yea! ஆயுத எழுத்து படத்துல சொன்னாரு.....உன்னைய மாதிரி பொண்ணுங்க இருக்குறதுனால தான் மோசமான தமிழ் படம்கூட நல்லா ஓடுது" என்று கலா சொல்லி கொண்டே சசியை முறைத்து பார்த்தாள்.

சுதா சத்தம் போட்டு சிரித்தாள்.

"உண்மைய தான் சொல்றேன், தமிழ் படத்துல காட்டுற டபுல் மீனிங் விஷயங்க மாதிரி வேற எங்கயும் பாக்க முடியாது...யப்பா....right from scenes to song lyrics...ஐயோ...." கலா தன் வெறுப்பை காட்டினாள்.

கலா ஆள்காட்டி விரலை நீட்டி, "you know what sutha, காமசூத்ராவ எழுதியதே நம்ம தான்..."

கலா இப்படி பேசுவதை கேட்ட விஜி வாயை பிளந்தாள். அவளுக்கு அதிர்ச்சி!
உணவை வாங்கிகொண்டு வந்த விஜி அதற்குள், "நம்ம எப்ப டி அத எழுதுனோம்?"

கலா, "hey loosu. நம்மன்னா நம்ம இல்ல. பொதுவா சொன்னேன். i mean indians. an indian wrote kamasutra. but look at what indian cinema has done.... they have all vulgarised the whole concept of sex."

இதற்கு மேல் பொறுமை இல்லாத விஜி, "kala, just shut up." என்று காதுகளை மூடி கொண்டாள்.

கலா, "இங்க பாருங்க. this is exactly what i meant. இப்படி பேசுறது தப்புன்னு நிறைய பேருக்கு தோணும். அதுக்கு காரணம் இந்த மாதிரி தமிழ் சினிமா.....எல்லாரையும் கெடுத்து வச்சுயிருக்கு. படத்துல சூர்யா சட்டைய கழட்டிபோட்டு வந்தாலோ, இல்ல நமீதா வந்தாலோ பட்டிக்காட்டான் பஞ்சுமுட்டாய பாக்குற மாதிரி பாப்பாங்க விஜி மாதிரி ஆளுங்க....ஆனா என்னைய மாதிரி ஆளுங்க உண்மைய சொன்னா காத பொத்திப்பாங்க....என்ன உலகம்டா இது!"

சசிக்கு கோபம் தலைக்கு ஏற, "ஓய் என்னைய எதுக்கு டி இழுக்குற...நான் என்ன பண்ணேன்?"

சுதா, "ஐயோ ராமா....நிறுத்துங்க. ஏன் கலா, சசிய இப்படி கிண்டல் பண்ணுற?"

கலா, "விரிச்சு போடாத பாயும், சசியை கிண்டல் பண்ணாத வாயும் நல்லா இருந்ததா சரித்தரமே இல்ல!"

"ஹாஹா, தலிவா கலக்குற!" சுதா கலாவின் கையை குலுக்கினாள்.

விஜியும் சிரித்து கொண்டே, "அடியே அழகுகளா, ஸ்டாப் தி சண்டை! சாப்பாடுங்கப்பா, ஆறிபோச்சு..." என்று விஜி சொல்ல, ஒரு burger பொட்டலத்தை கலாவிடம் கொடுத்தாள். அந்நேரம் சசியின் கைபேசி மணி ஒலித்தது. கைபேசியில் காட்டிய நம்பரை பார்த்தாள். புதிய நம்பர் அது.

"ஹாலோ சசி speaking." என்றாள்.

"ஹாலோ சசி, நான் தான் சித்தார்த் பேசுறேன்."

சற்றும் எதிர்பார்க்கவே இல்லை சசி. அதிர்ச்சியில் வாயில் இருந்த burgerயை துப்ப, அந்த சிறுதுண்டு burger கலாவின் முகத்தில் விழுந்தது. கலா துடைத்தவாறு, "லூசா நீ!"

"சித்தார்த்????" என்றாள் சசி புருவங்களை உயர்த்தி.

"சித்தார்த்?????" என்றனர் மற்ற மூவரும் கோரஸாக.

(பகுதி 3)

Jun 16, 2009

கேள்வி கேட்குறது ரொம்ப ஈஸி, பதில் சொல்றது தான் ரொம்ப கஷ்டம்

இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்தவர் srivats. சார், என்னை பழிக்கு பழி வாங்கிவிட்டார்!!:) கீழ்வரும் கேள்விகளுக்கு பதில் சொல்லனுமாம்!

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

இரண்டு மூனு பெயரை சின்ன பேப்பரில் எழுதி போட்டு கடவுள் முன் வைத்தார்களாம். என் அக்கா தான் ஒரு பெயரை எடுத்தாள். அந்த பெயர்-காயத்ரி. அப்பரம் வலைப்பூ ஆரம்பிக்கும்போது, புனைபெயரில் எழுத வேண்டும் என்ற ஆசை(பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் புனைபெயரில் எழுதுவதால் வந்த தாக்கம்...ஹிஹி...) ஆக ரொம்ப யோசிச்சு தமிழ்மாங்கனின்னு வச்சேன்.(மாம்பழம் பிடிக்கும் என்பதால்)

ஆக, எனக்கு 2 பெயருமே ரொம்ப பிடிக்கும். அப்பரம் காயத்ரி என்ற பெயர் பிடித்தமைக்கு இன்னொரு காரணம் சிம்ரன். ஆமாங்க....நான் அகில உலக சிம்ரன் ரசிகர் மன்றத்தின் தலைவர்!! சிம்ரன் நடித்த ஜோடி மற்றும் சேவல் படங்களில் அவரது பெயர் 'காயத்ரி'!!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

நேத்து....

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

பிடிக்கும்.

4. பிடித்த மதிய உணவு என்ன?

கோழி பிரியாணி, கோழி சுக்கா, கோழி வறுவல்....

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

ம்ம்ம்...மனசுக்கு தோணிச்சுன்னா, கண்டிப்பா நண்பரா ஆயிடுவேன்.

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

கழிவறையில் குளிக்க பிடிக்கும்! என்னய்யா கேள்வி இது......

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முகத்தை.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச‌து: ரொம்ப லொள்ளு பேசுவேன். கொஞ்சம் நல்லா எழுதுவேன்.நிறைய கனவுகள் காண்பது
பிடிக்காத‌து: கோபம், too sensitive

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

இந்த கேள்விக்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்!pass!

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

அப்படி யாரும் இல்ல. தனிமை ரொம்ப பிடிக்கும்.

11. இதை எழுதும் போது என்ன வண்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
நீல கலர்.

12. என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

பார்ப‌து : வேற‌ என்ன‌? க‌ணிணிதான் :)
கேட்ப‌து: ஒன்னுமில்ல.

13. வண்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

orange. my favourite colour!!!!!!

14. பிடித்த மணம்?

தமிழ்மணம்(அட்ரா அட்ரா அட்ரா......) ஹாஹா...சரி சரி, பிடித்த மணம்....கோழி குழம்பு வாசம்.

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

கோபி: நிறைய எழுத ஆசைப்படுபவர். நல்ல உற்சாகம் கொடுப்பவர்.::)

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

அவர் ஒரு ஆங்கில கவிதை எழுதினார். simply superbbb!! http://stavirs007.blogspot.com/2009/06/us-that-never-was.html

17. பிடித்த விளையாட்டு?

கிரிக்கெட். we eat, drink, talk,breathe cricket.(not like dhoni) ஆஹா...என்னை அறியாமல் வந்துவிட்டது:)

18. கண்ணாடி அணிபவரா?

perfect eyesight எனக்கு.

19. எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

romantic comedies, thriller, suspense, இந்தி படங்கள் எப்படி இருந்தாலும், பார்த்துவிடுவேன்.

20. கடைசியாகப் பார்த்த படம்?
drag me to hell- வயிறு, கண் எல்லாம் கலங்கிபோச்சு. பேய் படம்ங்க அது! ராத்திரி தூக்கம் வரல!

21. பிடித்த பருவ காலம் எது?

பள்ளி காலம் தான்!

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

self-made man by norah vincent.

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

இல்லை.

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த‌து: சத்தம்.... எப்படிங்க பிடிக்கும்?

பிடிக்காத‌து: போக்குவரத்து சத்தம்

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
new zealand.

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

சுடு தண்ணி சூப்பரா போடுவேன். அப்பரம் என்னய்யா கேள்வி இது...தனித்திறமை...keyboard வாசிப்பேன்...:)

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

ஆண்களின் ஆதிக்கம்

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

ஈகோ தான்!

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

queenstown in new zealand. ஆனால் நீண்ட நாள் கனவு- mumbai and new york செல்ல வேண்டும் என்று!

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

bmw car, three-storey bungalow house with mini theatre, swimming pool and a mini gym. mthly income generated: US$30,000
ஹாஹா...எப்படி?

31. மனைவி/கணவன் இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

நான் இப்ப தான் எல் கே ஜி முடிஞ்சு யூகேஜி போறேன்.:)

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
ஒரு வரியில் சொல்ல முடியாதது தான் வாழ்க்கை

(எப்படி காயத்ரி உனக்கு மட்டும் இப்படிலாம் தோணுது....அட்ரா அட்ரா அட்ரா!! ஹிஹி)

Jun 10, 2009

daddy mummy வீட்டில் இல்ல (series 2)- பகுதி 1

daddy mummy வீட்டில் இல்ல தொடர்கதையை தொடர்ந்து அதன் season 2 வந்துவிட்டது. அதாவது sequel 2. தெளிவாக சொல்லபோனால், 5 பாகங்களை கொண்டது அத்தொடர்கதை. அதன் தொடர்ச்சியாக அடுத்தெடுத்த பாகங்கள் வரும். என்னமோ தெரியல்ல, எனக்கே இந்த 'daddy mummy வீட்டில் இல்ல' கதை ரொம்ப பிடிச்சு போச்சு.(பொதுவா நான் எழுதிய கதைகளை மறுபடியும் நான் படிக்க மாட்டேன்...:)

பிடித்து போனதால், தான் இதை தொடர வேண்டும் என்ற ஆவலும் வந்தது. so sequel 2 gonna start...start musik!

daddy mummy வீட்டில் இல்ல கதையை படிக்க: http://enpoems.blogspot.com/2009/04/daddy-mummy-1_13.html
------------------------------------------------------------------------------------------


"ஏய் நான் இப்போ என்னடி செய்ய?" சசி குழம்பினாள். பாவமாகவும் இருந்தது பார்ப்பதற்கு. சசிக்கு பயமாக இருந்தது. மெத்தையில் விழுந்து புரண்டு சிரித்து கொண்டிருந்த விஜி,

"கவலைப்படாதே சசி, பரிசம் போட்டுட வேண்டியது தான்!" மறுபடியும் சிரிக்க ஆரம்பித்தாள். தன்னை அனைவரும் கிண்டல் செய்கிறார்கள் என்பதை தாங்கி கொள்ள முடியாமல் சசி, "நான் கிளம்புறேன்."

சிரித்து கொண்டிருந்த சுதாவிற்கு சசியின் கோபம் புரிந்தது. "ஏய், என்ன சசி நீ, நாங்க சும்மா சிரிச்சோம்.. இதுக்கு போய் கோச்சிக்கிட்ட....சரி ஃபிரியா விடு! just don't reply him anything for now. exams எல்லாம் முடியட்டும். அப்பரம் இத பத்தி பாத்துக்கலாம்."

சுதா சற்று சீரியஸா பேசியது சசிக்கு ஆறுதலாக இருந்தது. ஆனால், கலா தன் பங்கு கிண்டலை கொட்டினாள். "காதல் வந்தா சொல்லியனுப்பு, உயிரோடு இருந்தால் வருகிறேன்...." என்ற அழகான பாடலை ஆங்கிலம் கலந்த தமிழில் வேண்டுமென்றே பாடி சசியை நக்கல் அடித்தாள்.

ஒரு வாரம் ஓடியது. தேர்வுகளும் முடிந்துவிட்டன. கடைசி தேர்வு முடிந்து அனைவரும் சசி வீட்டிற்கு சென்றனர். அவளது தம்பி ஹாலில் உட்கார்ந்து விடியோ கேம்ஸ் விளையாடி கொண்டு இருந்தான்.சசியின் அம்மா சோபாவில் உட்கார்ந்து ஏதோ கணக்கு வழக்குகளை புரட்டி கொண்டிருந்தாள். சசியும் அவள் தோழிகளும் வீட்டிற்குள் நுழைந்தார்கள்.

சசியின் அம்மா, "வாங்கடியம்மா....என்ன பரிட்சையெல்லாம் pass பண்ணிடுவீங்களா?"

அதற்கு கலா, "என்ன ஆண்ட்டி எங்கள பாத்து இப்படி கேட்டுடீங்க? உங்க பெயர காப்பாத்தீயே தீருவோம். இது சசி மேல சத்தியம்." என்று பக்கத்தில் நின்று கொண்டிருந்த சசியின் தலையில் அடித்தாள். அனைவரும் சிரித்தனர். சிரித்து கொண்டிருந்த சசியின் அம்மாவின் முகம் சற்று மாறியது கையிலிருந்த billலை பார்த்தபிறகு.

அவர், "என்ன சசி, உன் mobile phone பில் ஏன் இவ்வளவு அதிகமா வந்து இருக்கு?"

சசிக்கு பயம் கவி கொண்டது. சசி அம்மா கையில் இருந்த பில்லை வெடுக்கென்று பிடிங்கி அதைப் பார்த்தாள். ஆம், அளவுக்கு அதிகமாக தான் இருந்தது. சசிக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. பொங்கலுக்கே வெடி வெடிக்கும் கலா, தீபாவளி வந்தால் சும்மா இருப்பாளா? சதாரணமாகவே சசியை கிண்டல் செய்யும் கலா, இச்சமயம் சசியின் நிலைமை கண்டு உற்சாகம் அடைந்தாள். கிண்டல் செய்ய தக்க தருணம்!

"அது ஒன்னுமில்ல ஆண்ட்டி....சித்தார்த்....." என்று கலா வாயை திறந்தாள்.

"who siddarth, boys movie hero siddarth?" வீடியோ கேம்ஸ் விளையாடி கொண்டிருந்த தம்பி அவர்களிடம் கேட்டான். கேள்வியை கேட்டுவிட்டு மறுபடியும் விளையாட்டில் மூழ்கிவிட்டான்.

கலா, சசியை இப்படி மாட்டிவிட்டது விஜிக்கும் சுதாவிற்கும் ஆச்சிரியமா இருந்தது. சசிக்கு அதிர்ச்சி. கலா முடிப்பதற்குள் சசி,

"ஒன்னுமில்ல மா, இன்னிக்கு சித்தார்த்தனந்தா சாமிகள பத்தி டீவில போடறத்த பத்தி சொல்லுறா?" சமாளித்தாள்.

"நான் என்ன கேட்குறேன், நீ என்ன சொல்லுற?" அம்மா தன் புருவங்களை சுருக்கினார்.

"இந்த மாசம், exams time. கிளாஸ்மேட்ஸ் நிறைய பேரு doubts கேட்க ஃபோன் பண்ணாங்க, நானும் ஃபோன் பண்ண வேண்டியதா இருந்துச்சு." என்ற உண்மையை சொன்னாள். அம்மாவும் சரி சரி என்று தலையாட்டினார். இருந்தாலும் ஒரு எச்சரிக்கையுடன், "அடுத்த மாசம்...." என்று ஆரம்பிக்கும்போதே சசிக்கு புரிந்துவிட்டது அம்மாவின் ஆர்டர்!

சசியை ஓரளவுக்கு தவிக்கவிட்ட சந்தோஷத்தில் தனக்குள்ளே சிரித்து கொண்டு சசியின் அறைக்கு சென்றாள் மற்ற தோழிகளுடன். அனைவரும் உள்ளே சென்றது. அறையில் இருந்த தம்பியின் கிரிக்கெட் மட்டையை எடுத்து கலாவை அடிக்க சென்றாள், "நான் எப்ப டி சித்தார்த்துக்கு ஃபோன் பண்ணேன்....ஏன் டி இப்படி என்னைய மாட்டிவிட்டே? நாசமா போ! உன் பொய்க்கு அளவே இல்லையா? stupid woman."

கலா சுதா பின்னாடி ஒலிந்துகொண்டாள்.

"ஏய் சரிவிடு, அவ சும்மா சொன்னா....what are we going to do during the holidays?"விஜி கேட்டாள்.

"அதுக்கு நிறைய நாளு இருக்கு. அத அப்பரம் யோசிப்போம். நாளைக்கு நம்ம எல்லாரும் வெளியே போவோம்....படம் பார்க்க." கலா மெத்தையில் புரண்டு கொண்டே.

"என்ன படம்?" சுதா கேட்டாள்.

கலா, "french படம். M18 movie!" நமட்டு சிரிப்பு சிரித்தாள்.

சசி வாயை பிளந்து, "what????????"

கலா, " hey this is no R21. just a matured content movie. கலைப்படம் மச்சி! ஆமா அது சரி, எதுக்கு இவ்வளவு பெரிய reaction உனக்கு. நம்ம எல்லாரும் ஓவர் 18. தப்பு இல்ல."

சசிக்கு கலாவின் ஐடியா பிடிக்கவில்லை, முகத்தை சுளித்து கொண்டு, " நான் வரல."

விஜி சிரித்து கொண்டே, " நீ இப்படி தான் ஆரம்பிப்ப...அப்பரம் கடைசில எப்படி முடியும்னு இந்த உலகத்துக்கே தெரியும்டி. சும்மா வா!"

சுதா, "இந்த மாதிரி படம் எல்லாம் தப்பில்லையா?" முகத்தை அப்பாவித்தனமாக வைத்து கொண்டு.

விஜி, "வந்துட்டாய்யா question paperக்கு பொறந்தவ?"

கலா, "சுதா, இதலாம் தப்பு தான். ஆனா...வைரமுத்து என்ன சொல்லியிருக்காரு. தப்புகள் இல்லையின்னா தத்துவம் பொறக்காதுன்னு சொல்லியிருக்காரு!"

சசி, "உன்கிட்ட சொன்னாராக்கும்?"

சசியின் கேள்வி பிடிக்காமல் அவளை பார்த்து, "ஆமாண்டி, நேத்திக்கு ஸ் எம் ஸ் பண்ணி சொன்னாரு. சரிதான் போடி....யாரு வரீங்களோ, வாங்க. விஜி, நீ வர தானே?"

விஜி எப்போதுமே கலாவின் பக்கம் என்பதால் நான் இல்லாமல் எப்படி என்பதுபோல் ஒரு சிரிப்பை சிரித்தாள்.

மறுநாள் காலையில் எப்படியோ சுதாவை சமாதானப்படுத்தி அழைத்து கொண்டு சென்றார்கள். போகும்வழியில் சுதா, "நான் சசிக்கு ஃபோன் பண்ணி பார்த்தேன், ஆனா அவ எடுக்கல்ல....."

கலா, "அவ தூங்கிகிட்டு இருப்பா மேன்...சரி விடு. அவளுக்கு கொடுத்து வச்சது அவ்வளவு தான்."

திரையரங்கை அடைந்தது மூவருக்கும் அதிர்ச்சி. சசி அங்கே காத்து கொண்டிருந்தாள்........

(பகுதி 2)

Jun 9, 2009

கனா கண்ட காலங்கள்(தொடர் பதிவு)

இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்த வானவில் வீதி கார்த்திக் அவருக்கு ஒரு நன்றி. விடுமுறை நாட்களில் நடந்த சுவாரஸ்சியமான நிகழ்ச்சிகள், விளையாடிய விளையாட்டுகள் பத்தி எழுதவேண்டுமாம். என்னை பொருத்தவரை விடுமுறையில் ஜாலியாக செலவழித்த காலம் நிறைய உண்டு. அது எப்போது என்றால்? ஒவ்வொரு முறையும் பெற்றோர்கள் வெளிநாடு செல்லும்போது தான். ஹாஹாஹா.... அது என்னமோ தெரியலைங்க..... ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாலி,இந்தியா, மலேசியா போன்ற நாடுகளுக்கு சென்று இருந்தாலும்,

"டாடி மம்மீ வீட்டில் இல்ல" காலம் தான் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். உண்மையை சொல்லிட்டேன் அவ்வளவு தான்! அதிகபடியான சுதந்திரம் கிடைக்கும். நாள் முழுவதும் டீவி, கணினி, படங்கள் என்று ஜாலியாக இருக்கலாம். பணம் கொடுத்துவிட்டு போவார்கள். ஆக, எங்க வேண்டும் என்றாலும் போய் நல்லா வாங்கி சாப்பிடலாம்!

குறிப்பா, நண்பர்களோடு வெளியே செல்லலாம் எந்த ஒரு permission வாங்கும் session இல்லாமல்.
------------------------------------------------------------------------------

இந்தியாவிற்கு போன சில பயணங்கள் ஜாலியாக இருந்தது. சின்ன வயதாக இருக்கும்போது ஜாலியாக இருக்கும், ஏன் என்றால் நம்மை அதிகமாய் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். இப்போது போனால் அவ்வளவு தான், நம்ம வயசை தெரிந்த மறுநொடியே வெறுப்பேத்தும் அந்த கேள்வியை கேட்பார்கள். :(

சின்ன வயதாக இருந்தபோது, மாமா மகள், அவள் தம்பி, என் அக்கா, பக்கத்து வீட்டு பசங்களுடன் கில்லி, கிரிக்கேட் ஆடிய காலம் எல்லாம் உண்டு. சில சமயங்களில் கிரிக்கேட் பந்து பக்கத்து வீட்டில் விழுந்துவிடும். அவர்களிடம் கெஞ்சி கூத்தாடி மறுபடியும் பந்தை வாங்குவோம். மறுபடியும் அவ்வாறே நடக்கும். ஒரு சில சமயம் அவர்களுக்கு எரிச்சல் வந்து பந்தை தரமாட்டார்கள். பந்து இல்லாமல் கொட்டாங்குச்சி வச்சு விளையாடுவோம்!:)
------------------------------------------------------------------------------------------

ஒரு முறை அப்பாவின் நண்பர் குடும்பத்தோடு மலேசியா சென்றோம். அப்போது எனக்கு 8 வயது இருக்கும். எங்களது அறைகளில் ஒரு விளையாட்டு விளையாடினோம். பேப்பர்களில் சில விஷயங்களை எழுதுவோம். அதை செய்து காட்ட வேண்டும். நான் எடுத்த பேப்பரில்- "ஆட வேண்டும்" என்று இருந்தது. எனக்கு ரொம்ப ஒரு மாதிரியாய் போச்சு. ரொம்ப கூச்சமா இருந்துச்சு. அடம்பிடித்தேன் ஆட மாட்டேன் என்று. கடைசியில் அனைவரின் கண்களை மூட சொன்னேன்... 5 வினாடி ஆடிய பிறகு உட்கார்ந்து கொண்டு, "நான் ஆடி முடிஞ்சுட்டேன். கண்ண திறங்க." என்றேன்:)
------------------------------------------------------------------------------------------

மற்றபடி விடுமுறைகளில் நிறைய படம் பார்ப்பேன். இந்த விடுமுறையில் கிட்டதட்ட 10த்துக்கு மேற்பட்ட ஹிந்தி படங்களை பார்த்து இருப்பேன்:)
-----------------------------------------------------------------------------------------

இத்தொடர்பதிவுக்கு கோபி, srivats, மற்றும் ரீனா அவர்களை அழைக்கிறேன்....வாங்கோ வாங்கோ வாங்கோ....

ம்ம்ம்....

காலை மணி 6 ஆனது. மாலினி சீக்கிரமாகவே எழுந்துவிட்டாள். குளித்து முடித்துவிட்டு, மாறனுக்கு பிடித்த காலை உணவை தயார் செய்தாள். பூஜை அறையில் சிறிது நேரம் தியானம், ஒரு ஸ்பெஷல் வேண்டுதல். எல்லாவற்றையும் முடித்துவிட்டு, படுக்கை அறைக்குள் சென்றாள். ஆபிஸ் செல்வதற்கு தயாரானாள். மாறனுக்கு பிடித்த வெள்ளை நிற சுடிதார் ஒன்றை அணிந்தாள். கண்ணாடி முன்னாடி நின்று பொட்டு வைக்கும்போது மாறன் இன்னும் உறங்கி கொண்டிருப்பதை கண்டாள்.

அவன் அருகில் அமர்ந்தாள் மாலினி. வெட்கம் கலந்த சந்தோஷம் மாலினியின் உடம்பிலுள்ள நரம்புகளில் ஊடுருவியது. கலைந்திருந்த அவனது முடியை சரி செய்து அவனது காது அருகே, "happy wedding anniversary dear." என கூறலாம் என்று குனிந்தபோது, மாறனின் கைபேசி அலறியது. திடுக்கிட்டு எழுந்தான். மாலினியை கவனிக்கவில்லை.

"ம்ம்ம்...ஒகே. இன்னும் கொஞ்ச நேரத்துல இருப்பேன் ஆபிஸுல..." என்று மாறன் கைபேசியில் பேசிகொண்டே குளியலறைக்கு சென்றான். தன்னை கவனிக்காதது மாலினிக்கு சற்று வருத்தத்தை தந்தது.

மாறன் ரொம்ப ரொம்ப அமைதி. கேட்ட கேள்விக்கு பதில். சத்தமாக சிரிக்ககூட மாட்டான். புன்னகைகூட ஒரு செண்ட்டிமீட்டர் தான். தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவன்.

காலை உணவை மேசையில் எடுத்த வைத்தாள் மாலினி. வேலை காரணமாக தினமும் அவளால் காலை உணவு செய்ய முடியாது. சாப்பிட உட்கார்ந்த மாறன் எதுவும் பேசவில்லை. இன்று ஸ்பெஷலா செஞ்சு இருக்காளே, ஏதேனும் விசேஷமா என்று மாறன் கேட்பான் என்று எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றம். மாறன் அமைதியாக சாப்பிட்டான். அவன் இன்றைய நாளை மறந்துவிட்டான்.

"சாப்பாடு நல்லா இருக்கா மாறன்?"

"ம்ம்ம்.. நைஸ்." செய்தித்தாளை புரட்டினான்.

"இன்னிக்கு வெளியே போவோமா?"

"...."

"மாறன்?...."

"i'll msg u later."

காபியை அருந்திவிட்டு உடனே கிளம்பிவிட்டான். மாலினிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. உண்மையாகவே மறந்துவிட்டானா, இல்லை வேண்டும் என்றே தெரியாததுபோல் நடிக்கிறானா. surprise ஏதேனும் செய்வதற்காகவே இந்த நடிப்பா என்று அவளுக்குள் பல சிந்தனைகள் ஓட, குழாயில் தண்ணீர் ஓடியது. பாத்திரங்களை கழுவினாள். வீட்டின் வாசல் மணி ஒலித்தது. கதவை திறக்க சென்றாள்.

"சாரி...மறந்துட்டேன் மாலினி..." மாறன் வாசலில். மாலினிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.

"என்னோட கார் key..." எடுத்து கொண்டு மறுபடியும் கிளம்பிவிட்டான். மாலினிக்கு ஏமாற்றத்தை தாங்க முடியவில்லை.

இவன் ஏன் இப்படி இருக்கிறான். சிரிச்சு பேச மாட்டேங்குறான்... எப்ப பாத்தாலும் வேலை..வேலை... முக்கியமான நாள்கூட ஞாபகமில்ல...- மனதில் புலம்பல்கள் வெடித்தன.

ஆரம்பித்தில் அவனது அமைதியான சுபாவத்தை ரசித்தவள் இன்று அதை ரசிக்க முடியவில்லை. அவன் பக்கத்தில் இருந்தும், அவன் இல்லாததுபோலவே உணர்கிறாள் மாலினி.

தொலைக்காட்சி பார்க்கும்போது மாலினி, "ஏய், அஜித் இந்த மாதிரி மொக்கையான படத்துல நடிச்சு இருந்திருக்க கூடாது. i think his vaali movie was the best... தப்பான படத்துல நடிச்சு அவரோட மார்க்கெட்ட கெடுத்துக்குறான்..."

மாறன் அஜித்தின் தீவிர ரசிகன் என்றபோதும்கூட, "ம்ம்ம்...this movie is bad." அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை. அவன் அஜித்தை பத்தி ஏதேனும் சொல்ல, அதற்கு தானும் ஏதேனும் சொல்லி, சின்ன சண்டை போட்டு கொள்ளலாம் என்று மாலினிக்கு ஆசை. இருந்தாலும், வாக்கியத்தின் கடைசியில் முற்றுப்புள்ளி வைப்பதுபோல், மாறன் எல்லாவற்றிருக்கும் ஒரு புன்னகை. புன்னகை அழகாய் தெரிந்த காலம் மாறி இன்று அது மாலினிக்கு பெரிதாய் ஏரிச்சலை உண்டாக்கியது சில நேரங்களில்.

"என்ன ஆச்சு மாலினி?" ஆபிஸை வந்து அடைந்ததும் அவள் தோழி வினாவினாள் மாலினியின் முகத்தை கண்டபிறகு.

"nothing...." என்று சொன்னவள் காலையில் நடந்தவற்றை கொட்டினாள் தோழியிடம்.

தோழி," guys are like that! even mine forgets everything. ஆனா, எந்த cricket match என்னிக்குன்னு கேளு? they have it all at their finger tips." தோழியும் சலித்து கொண்டாள். மீண்டும் தொடர்ந்தாள்,

"சரி நீ மாறனுக்கு ஒன்னும் present பண்ணலைய்யா?"

மாறனின் ஆபிஸில், sheela flower shopலிருந்து ஒரு பையன் நின்றுகொண்டிருந்தான். மாறனின் ஆபிஸில் வேலை பார்க்கும் ஒருவர் அந்த பையனிடம்

"நீங்க யார பாக்க வந்தீங்க?"

அந்த பையன் கையில் ஒரு தாளை நீட்டி, "மிஸ்ட்டர் மாறனோட wife mrs malini, இந்த flower bouquetட்ட மாறன் கேபின்ல வைக்க சொன்னாங்க."

மாறனின் மேசையில் பரிசு வைக்கப்பட்டது. ஆனால், மாறன் கேபினில் இல்லை. அன்று காலை ஆபிஸ் வந்ததும் கம்பெனி விஷயமாக headquartersக்கு சென்றுவிட்டான்.

பூக்களில் இருந்த ஒரு வாழ்த்து அட்டையில்-

hello handsome, happy anniversary. இந்த ஒரு வருஷம் போனதே தெரியல்லடா. இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.just love you lots! ஒரே ஒரு சின்ன request. உன்கூட நிறைய டைம் spend பண்ணனும்னு ஆசையா இருக்கு. நீ நிறைய என்கூட பேசனும்னு ஆசையா இருக்கு. இத படிக்கும்போதாவது கொஞ்சம் சிரியேன்! :) இந்த ஒரு வருஷத்துல நான் ஏதாச்சு தப்பா பேசியிருந்தா, really sorry for that! இப்போ எனக்குள்ள இருக்குற உணர்ச்சிகள பத்தி எழுத வார்த்தைகள் இல்ல.:) அவ்வளவு சந்தோஷமா இருக்கேன்.

hugs&kisses

with love,

malini

(இன்னிக்கு சீக்கிரம் வீட்டுக்கு வந்துருடா!:)

பூக்களும் வாழ்த்து அட்டையும் மேசையில் கிடந்தன.

மாலை மணி 6 ஆனது. மாலினி வீடு திரும்பிவிட்டாள். ஆனால், மாறன் இன்னும் வரவில்லை. எந்த வேலையையும் செய்ய மனமில்லாமல் டிவியிலுள்ள எல்லாம் சேனல்களையும் மாற்றி மாற்றி பார்த்து கொண்டிருந்தாள். மாறன் வந்தான் இரவு 9 மணிக்கு. மாலினி உட்கார்ந்து இருப்பதை கவனித்தான். புன்னகையித்தான்.
மாலினி அவனை கண்டு கொள்ளவில்லை. அவனும் எதுவும் பேசவில்லை.

அவனிடம் பேசகூடாது என்று கோபம் இருந்தாலும் அவனிடம் பேசமால் இருக்க முடியவில்லை மாலினிக்கு,

"மாறன், இன்னிக்கு ஆபிஸுல நீ இருந்தியா?"

"இல்லமா, நான் headquartersக்கு போயிட்டேன்."

பரிசை அவன் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை என்பது மாலினி விளங்கியது.

அவனை பார்க்க பிடிக்கமால் திரும்பி படுத்திருந்தாள் மாலினி. நாட்கள், வாரங்கள் ஆயின. அவள் கொடுத்த பரிசை பற்றி கேட்கவில்லை. கேட்க மனமில்லை.

ஒரு சனிக்கிழமையன்று ஏதோ ஒரு சிந்தனையில் மாலினி ஜன்னல் அருகே நின்று யோசித்து கொண்டிருந்தாள். மாறன் பின்னாடியிலிருந்து அவளை அணைத்து, "happy anniversary malini." என்று அவள் இடது காது மடலை அழகாய் உரசினான்.

மாலினிக்கு ஆச்சிரியம்! மறு வினாடி கோபம். இத்தனை வாரங்கள் மனதில் இருந்த ஆதங்கத்தை கொட்டினாள்.

"ஓ...உனக்கு இப்ப தான் ஞாபகம் வந்துச்சா? for your information, நம்ம கல்யாண நாள் பல வாரத்துக்கு முன்னாடியே வந்துட்டு. உனக்கு இப்ப தான் ஞாபகம் வருதா? அது சரி... உனக்கு என்னையே ஞாபகம் இருக்கான்னு தெரியல்ல...."

மாறன் பேசமால் நின்றான்.

தொடர்ந்தாள் மாலினி, "எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா அன்னிக்கு. ச்சே.... உனக்கு நான் முக்கியமில்ல மாறன். உனக்கு எப்போதும் உன் வேலை தான் பெரிசு. i feel like a stranger in this house....." அவளுக்கு அதற்கு மேல் பேச வார்த்தைகள் வரவில்லை. கண்கள் குளமாகின.

மாறன் பேசினான், "நான் கல்யாண நாள்ல மறக்கல்ல... நீ தான் மறந்துட்ட?"

மாலினிக்கு சற்று குழப்பமாக இருந்தது.

மாறன், "உங்க வீட்டுல உள்ளவங்க சொன்னதுனால, இந்த arranged marriageக்கு ஒத்துகிட்ட. ஆனா, எனக்கு தெரியும் ஆரம்பித்துல உனக்கு கொஞ்சம் பயமா இருந்துச்சுன்னு....உண்மைய சொல்ல போனா உனக்கு என்னைய பிடிச்சு இருந்துச்சாகூட தெரியல்ல... but after sometime, u became very comfortable. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. முதல் தடவ என்கிட்ட ஐ லவ் யூன்னு சொன்ன. அந்த நாள்ல நான் மறக்கவே இல்ல மா- 8th june 2008. என்னைய பொருத்தவரைக்கும் அன்றைய நாள்லேந்து தான் நாம்ம உண்மையா வாழ ஆரம்பிச்சோம்.... நீ என்கிட்ட ஐ லவ் யூ சொன்ன நேரம்கூட நல்ல ஞாபகம் இருக்கு. it was at 3.30pm. "

கடிகாரத்தை பார்த்தாள் மணி 3.35pm என்று காட்டியது. அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. கன்னங்களில் கண்ணீர் துளிகள் வழிந்தன ஆனந்தத்தால். மேலும் தொடர்ந்தான் மாறன்,

"அன்னிக்கே பாத்தேன் உன் flower bouquetட்ட. it was really sweet.thanks malini. இன்னிக்கு சொல்லனும்னு தான் இருந்தேன், நீ அதுல சொல்லியிருந்த ஆசைய நிறைவேத்திட்டேன். 5 நிமிஷத்துக்கு மேல பேசியிருப்பேன்ல?" என்றான் அந்த ஒரு செண்ட்டிமீட்டர் புன்னகையுடன்.

மாலினி மாறனை இறுக்கி கட்டிபிடித்து கொண்டாள்.

மாறன், "சாரி மா, என் மேல கோபமா?"

மாலினி, "yes you idiot!" செல்லமாய் அவன் நெஞ்சில் அடித்தாள்.

*முற்றும்*
------------------------------------------------------------------------------------

credits: இக்கதையை எடிட்டு செய்ய உதவியாக இருந்த என் அருமை தம்பி வானவில் வீதி கார்த்திக் அவர்களுக்கு ஒரு நன்றி.

Jun 2, 2009

2 வார்த்தைகளில் கதை எழுதலாமாம்!

சுஜாதா எழுதிய 'சிறு சிறு கதைகள்' என்னும் புத்தகத்தில் படித்தது- 2 வார்த்தைகளில் கதை எழுதலாமாம். அவர் சில உதாரணங்களை கொடுத்து உள்ளார். அவை....

தலைப்பு: கரடி வேஷம் போட்டவனின் கடைசி வார்த்தைகள்
கதை: ஐயோ சுட்டுடாதே!

தலைப்பு:2050ல் குழந்தை
கதை: தங்கச்சின்னா என்னம்மா?

தலைப்பு: வசந்தாவின் கணவன்
கதை: சுசீலாவோடு எப்படி?

சரி படிக்கும்போதே ரொம்ப சுவாரஸ்சியமா இருந்துச்சு. நானும் முயற்சி செய்யலாம்னு...

1) தலைப்பு: மாமியாரின் கோபம்
கதை: பொண்ணு பொறந்திருக்கு!

2) தலைப்பு:காதல் கசக்குதய்யா!
கதை: "இந்தாங்க.... invitation."

3) தலைப்பு: முடிவு
கதை: "மச்சி, ஊத்திகிச்சுடா!"

4)தலைப்பு:கனவுகள்
கதை: வேலை போச்சு!

5) தலைப்பு: திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
கதை: "யாரும்மா இவரு?"

இந்த கடைசி கதை மட்டும் சிலருக்கு புரியாமல் இருக்கும். அது என்ன மேட்டர்ன்னா... பலர் வெளிநாடுகளில் வேலை செய்கிறோம். லீவு நாட்களில் சொந்த ஊருக்கு செல்லும்போது, பிள்ளைகளுக்கு தங்களது அப்பாவையே அடையாளம் காண முடியவில்லை. அந்த அளவுக்கு இருக்கு நிலைமை. அது தான் அந்த கதை! புரிஞ்சுதோ????

ஆத்தா, நான் பாஸ் ஆயிட்டேன்!

நேத்து, என்னுடைய semester results வந்தது. நல்ல தேர்ச்சி. இத்தனை ஆண்டு கல்லூரியில் வாழ்க்கையில் இந்த தடவ தான் கணக்கு(statistics) பாடத்தில் A-வாங்கியுள்ளேன். ரொம்ம்ம்ம்ம்ம்ப சந்தோஷமா இருந்துச்சு! மற்ற பாடங்களில் B+,B+, B

fail ஆகிவிடுவேன் என்று நினைத்த complex analysis பாடத்தில் B+!

அப்பரம் என்ன, கொண்டாட்டம் தான்! அதுவும் தண்ணில!

ஐயோ சாமி...தப்பா நினைச்சுடாதீங்க...தண்ணின்னா...அக்காவுடனும் தோழிகளுடனும் swimming போனோம்னு சொல்ல வந்தேன்:)