Dec 28, 2007

ஓடி போயிட்டா..

'என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு'

என்று செல்போன் ரிங்டோனாக பாடல் ஒலித்தது நிஷாவின் செல்போனில். பாதி தூக்கத்தில் கண் விழிக்க முடியாமல் தன் தலையணை கீழ் கிடந்த கைபேசியை எடுத்து பேசினாள்.

"ஏ செல்லம், நீ இன்னும் என்ன பண்ணுறே? நேத்திக்கு நம்மா plan பண்ணபடி 7 மணிக்கு பஸ் டாப்புல வேட் பண்ண சொன்னியா இல்லையா... உன்ன நம்பிதான் எல்லாத்தையும் பண்ணேன். 715 ஆச்சு... எங்க நீ?" என்றான் பஸ் டாப்பில் நிஷாவிற்கு காத்து கொண்டிருந்த ராகுல். தூக்க கலக்கத்தில் இருந்து சுயநினைவுக்கு வந்த நிஷா வேகமாக படுக்கையிலிருந்து எழுந்தாள். விரிந்துகிடந்த தன் கூந்தலை கட்டிகொண்டே ராகுலிடம் பேசினாள், " ஏய் சாரி பா, கொஞ்சம் தூங்கிட்டேன். நீ நேத்திக்கு plan சொன்னதேலிருந்து எனக்கு தூக்கமே வரல. இது எல்லாம் சரியா வருமா?" என்றாள் சற்று பயத்துடனும் சந்தேக்கத்துடனும்.

ராகுல் சும்மாவே டென்ஷன் பார்ட்டி. கடுப்புடன் " ஆமா நான் மட்டும் என்னவா... தினமுமா இப்படி பண்ணுறேன். ஏதோ நீ சொன்னதுனால நானும் ஓகே சொல்லிட்டேன். உன்னைய மாதிரிதானே நானும். சரி சரி... சிக்கிரம் கிளம்மி வா."நிஷாவுக்கு ஒரு மாதிரியாகவே இருந்தது. தன் அறையின் கதவை திறந்தாள். வீட்டு கதவு, சன்னல் அனைத்தும் மூடியே இருந்தது. யாரும் இன்னும் எழுந்திருக்கவில்லை. நேற்று இரவு வீட்டில் நிஷாவின் அம்மா, அப்பா, தம்பி, வீட்டு வேலைக்காரி அனைவரும் 'காதல்' படம் பார்த்துவிட்டு இரவு 12 மணியளவில் தான் தூங்கினார்கள். நிஷா அவர்களோடு படத்தை பார்க்காமல் தனியே தன் அறையில் ராகுலிடம் தொலைபேசியில் பேசி கொண்டு இருந்தாள்.

கிச்சுனு இருந்தது வீட்டு, காலையில். நிஷாவுற்கு மனதில் படுபடுவென்று அடித்தது. முகத்தை மட்டும் கழுவி கொண்டாள். எதுவும் சாப்பிடவில்லை. சாப்பிடவும் முடியவில்லை. குடும்பத்தார் படுத்திருந்த அறைகளின் கதவுகளை சத்தமின்றி திறந்து லேசாக பார்த்தாள். அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் படுத்து இருந்தனர். தன் கையில் இருந்த கைபேசி முணுமுணுத்தது. ராகுலிடமிருந்து ஒரு மெஸ்சேஜ்- ' ஏய் செல்லம், சாரி பா, கொஞ்சம் டென்ஷனாயிட்டேன். அதான் அப்படி பேசிட்டேன். சாரி! anyway நான் எடுத்துட்டு வர சொன்னத, மறக்காம கொண்டுவா... don't forget... இட் ஸ் வெரி important. those 2 things...' என்று பாதி ஆங்கிலத்திலும் பாதி தமிழிலும் கலந்து கலந்து அனுப்பியிருந்தேன்.

நிஷா அவற்றை எடுத்து கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினாள். ஆனால், சொல்லாமல் போகிறோமே என்ற வருத்தம் நெஞ்சில் பாய்ந்தது. அதனால் நிஷா வீட்டு மேசையில் கிடந்த ஒரு காகிதத்தில் ஏதோ எழுத ஆரம்பித்தாள்.. எழுத்திவிட்டு அங்கே வைத்துவிட்டு சென்றாள். பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த ராகுலை பார்த்துவிட்டாள். அவனை நோக்கியபடி மெல்ல நடந்தாள்... சற்று குழப்பத்துடன்.

"ஏய் செல்லம்... குட் மார்னிங். யூ ஓகே?" என்று வினாவினான் ராகுல், நிஷாவின் வேர்த்து கொட்டிய முகத்தை பார்த்தவுடன். நிஷா தன் முகத்தை துடைத்து கொண்டு 'ஒன்றுமில்லையே' என்றவாரு முகம் பாவம் செய்தாள். இருவரும் பேருந்தில் ஏறினர். இறங்கவேண்டிய இடம் வந்தது. ஒரு பெரிய கட்டடம் தெரிந்தது நிஷாவின் கண்கள் முன். "சரியா வருமா?" என்றாள் நிஷா ராகுலின் கையை பிடித்து.

"ஏய் உனக்கு ஒன்னு தெரியுமா? நம்மல மாதிரி எத்தனையோ பேரு இப்படிதான் செய்வாங்க.. சோ don't worry." என்று ஆறுதல் கூறினான் ராகுல்.

(அப்படியே உங்க கேமிரா கண்களை நிஷா வீட்டிற்கு திருப்புங்க..)

நிஷாவின் அப்பா மேசையில் இருந்த கடிதத்தை படித்துவிட்டு, தன் மனைவியிடம் நீட்டினார், " உன் பொண்ணு நம்மகிட்டு சொல்லாம என்ன பண்ணிட்டா பாரு." கடிதத்தை படித்துவிட்டு நிஷாவின் அம்மா புன்னகையிட்டார். நிஷாவின் கைபேசிக்கு அழைத்தார்.

ராகுல் தான் எடுத்தான். "ஹாலோ ஆண்டி.. எப்படி இருக்கீங்க..." என்றான்.

"ஹாலோ ராகுல், am fine. how about u? ஹாஹா.. நிஷா சீக்கிரம் கிளம்மி போயிட்டா.. நாங்கலாம் இப்பதான் எழுந்திருச்சோம். அதான் நிஷா ஒரு தாள்ல gym போயிருக்கேனு எழுதி இருந்தாள். அத பார்த்து தான் போன் பண்ணேன். ஹாஹா.. ராகுல்.. நான் ரொம்ப நாளாவே சொல்லிகிட்டு இருந்தேன் அவகிட்ட... gym போ... உடம்ப குறையினு... இப்ப தான் புத்தி வந்து போயிருக்கா... சரி அவ ஒன்னும் சாப்பிட்டு இருக்க மாட்டாளே.. எதாச்சு எடுத்துகிட்டு வந்தாளா?" என்றாள் நிஷாவின் அம்மா.

"ஓ.. இல்ல ஆண்டி... வெறு வயத்துல...exercise பண்ணாதான்... அந்த fats எல்லாம் குறையும். நான் அவகிட்டு ஒரு small towelலும் water bottleலும் எடுத்துட்டு வர சொன்னேன். அது போதும் ஆண்டி... " என்றான் ராகுல்.

"ஓ அப்படியா.. சரி நீங்க இரண்டு பேரும் நல்லா gymக்கு போய் உடம்ப குறைச்சா சரி." என்று சிரித்து கொண்டே நிஷாவின் அம்மா சொன்னார். அதுக்கு தானே வந்துருக்கோம் என்பது போல் ராகுலும் சிரித்தான்.

"சரி செல்லம் என்ன பண்ணுது இப்ப... ச்சி i mean நிஷா... உங்க கூட்டாளிங்க செட் பசங்க அவள செல்லம் செல்லம்னு கூப்புட்டு எனக்கும் ஒட்டிகிச்சு. where is நிஷா?" என்று கேள்வியுடன் முடித்தார் அம்மா. அதற்கு ராகுல் சொன்னான்,

"ஆண்டி.. செல்லம்... ஓடிகிட்டு இருக்கா!!"

------------------------முற்றும்-------------------------------

Dec 19, 2007

ஆத்தா.. நான் பாஸாயிட்டேன்!!

ஆத்தா.. நான் pass பண்ணிட்டேன். ஆமாங்க.. இந்த semester முடிவுகள் வெளிவந்துவிட்டது. கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் தேர்வு, டென்ஷன்,இத பத்தி எல்லாம் இங்க பதிவு போட்டேன்.





http://enpoems.blogspot.com/2007/11/blog-post_21.html





இப்ப சாயந்தரம் தான் முடிவுகள் வெளிவந்துச்சு! எதிர்பார்த்ததுவிட நல்லாவே வந்துருக்கு!! யப்பாடா... இப்பதான் பெருமூச்சு விடமுடியுது!

Dec 15, 2007

பில்லா 2007

முதல் நாள் முதல் காட்சி, அஜித் படம்னா சும்மாவா!! அடிச்சு புடிச்சு டிக்கெட் வாங்கிட்டோம்!! ஒரே கூட்டம். வெள்ளிக்கிழமை மதியம் காட்சிக்கு இவ்வளவு கூட்டமா (யாருமே வேலைக்கு போகலைனு நினைக்கிறேன்.) பள்ளி விடுமுறை என்பதால் சின்ன பசங்கதான் வருவாங்க என்று நினைத்தேன். அங்கபோய் பார்த்தா ஒரே அஜித் ரசிகர்கள்!(கொஞ்சம் ரகளை செய்யும் ரசிகர்ள் தான்) ஒரே விசில் சத்தம்..... எங்க அம்மா சும்மாவே டென்ஷன் பார்ட்டி. இந்த சத்தத்துல எங்க அம்மா செம கடுப்புல இருந்தாங்க வேற.

சரி கதை, அதே பழைய பில்லா கதை தான். திரைக்கதை கொஞ்சம் மாற்றம் பெற்று இருந்தது. ஆனால் விறுவிறுப்பு கிடையாது. இரண்டாம் பாதியில் படம் ரொம்ப 'போர்' அடித்து விட்டது. லாஜிக் பல இடங்களில் இடித்தது.

இருந்தாலும் 2007 வருடத்தில் ரொம்பவே எதிர்பார்த்த படம் ஆச்சே!! 'தலை'க்கு ரொம்பவே முக்கியமான படம். தமிழ் சினிமாவில் இப்படி ஒரு 'stylish' படம் வந்ததே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இருந்தது. படம் படு ஸ்டைலாக இருந்தது. இடம், சண்டை காட்சிகள், கார் பந்தயம், போடும் உடைகள் என்று எல்லாம் வடிவிலும் படு ஸ்டைலாக வருகிறார் தல!!
வசனங்களும் பல இடங்களில் கைதட்டல் பெறுகிறது.

"அந்த வேலுக்கு ஆறு தல. நான் ஒரே தல.' என்று சொல்லும்போது என் சித்தி பெண்ணு (12 வயது தான்) கைதட்டுது தட்டுது.... ஒரே குஷியாகிவிட்டது அவளுக்கு! பயங்கர விசில் சத்தம். 'தல'க்கு ரசிகர்கள்விட ரசிகைகள் அதிகமாகும் இந்த படம் மூலம்... அது மட்டும் நிச்சயம்! பாடல்கள் நல்லா இருக்கு! பிண்ண்ணி இசை ரொம்பவே அழகா இருக்கு. யுவன் தன் வேலையை நன்றாகவே செய்துள்ளார்.

பிரபு, ரகுமான்... மற்ற மலேசியா நடிகர்கள் என்று பலரும் நன்றாக நடித்துள்ளனர். ஆனால் சில இடங்களில் பிரபு வரும்போது சிரிப்பு வந்துவிடுகிறது... அவர் சீரியஸா நடித்தால்கூட... என்ன கொடுமை சரவணா இது!!! நயன்தாரா... என்ன இப்படி மெலிஞ்சு போச்சு புள்ள! என்னதான் செய்தாளே, புள்ள படு சிலிமாக வருது... ஆனால் நடிப்புக்கு ஒன்னும் வேலை கிடையாது. நயன் போடும் உடைகள் சகிக்கவில்லை. இதில் கொடுமை, நயன் நீச்சல் உடையில் வேற வரும்... கொடுமை கொடுமை (சிம்பு காதுல.. புகை புகையா வர போகுது சாமியோ!!) நமிதாவும் தேவையில்லை. ஆனால் அதுக்கும் ஒரு பாட்டு, சில வசனங்கள். இது முழுக்க முழுக்க அஜித் படம், ஆகா பெண் கதாபாத்திரங்கள் தேவையில்லை!!

படம் பார்க்க போது படு ஸ்டைலாக இருக்கும், ஆனால் மற்றபடி ஒன்னும் புதிது அல்ல.எங்க அம்மாவுக்கு படம் சுத்தமா பிடிக்கல. ஆனா அவங்க சொன்னது 'இந்த படம் மூலம் இரண்டே இரண்டு நல்ல விஷயம் நடக்கும். கறுப்பு 'கூலிங்' கண்ணாடிகளின் விற்பனை அதிகரிக்கும். அடுத்து, மலேசியாவுக்கு போகும் சுற்று பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.' அது உண்மை தான். ஏனா... மலேசியாவை ரொம்பவே அழகாவே படம் பிடித்து காட்டியுள்ளனர்!!

பில்லா- 'ஓகே' லா

Dec 11, 2007

வூட்டுல சொல்லிட்டு வந்துட்டிய்யா?


மாற்றம் கண்டுள்ளது
பல விஷயங்களில்
மாற்றம் காணவேண்டிய
சில விஷயங்களில்
கண்டுகொள்ளாமல்
இருக்கிறது
சிங்கார சென்னை!
சில வருடங்களில்
எத்தனையோ வளர்ச்சி
மெய்சிலிர்க்க வைக்கும்
அடுக்குமாடி கடை அங்காடிகள்
சென்னைக்குள் ஒரு
நியூ யோர்க் பார்த்தேன்
சென்னைக்குள் ஒரு
ஹாங் காங் பார்த்தேன்!

வசதிகள் பெருகிவிட்டன
சினிமா டிக்கேட் முதல்
சாப்பிடும் பிட்சா வரை
'door delivery'!


பணத்தை தண்ணீர் போல செலவு
செய்யும் ஒரு கூட்டம்
தண்ணீர்க்குகூட வசதியில்லாத
இன்னோரு கூட்டம்
மின்சாரம் சரிவர இல்லாத
இடங்களில்
எதற்காக
கம்பீரமாக நிற்கின்றன
ரசிகர் மன்றங்களின் பலகைகள்?

வீட்டுக்கு வீடு வாசப்படி
இருக்கிறதோ இல்லையோ
தெருவுக்கு தெரு 'டாஸ்மார்க்'!
மோட்டார் சைக்கில்
பாதுகாப்பு தலைகவசம்
தலையில் தானே அணிய வேண்டும்
அதை சும்மா பின்னாடி
வைப்பது ஏனோ?
சட்டம் தன் கடமையை 'செய்தது'
மரத்தின் நிழலடியில் இதையல்லாம்
கண்டுகொள்ளாத
காவலர்கள் ரூபத்தில்....

பள்ளிக்கு செல்லும் வயதில்
பணிக்கு செல்லாதே
ரொம்ப பிடித்த வாசகம்!
பெண்ணின் திருமண வயது 21-வாசகம்
போட்டிருக்கும் ஆட்டோவில்
நான் ஏறவே இல்லை!!
எத்தனையோ வாசகங்கள் இருந்தபோதிலும்
எனக்கு சிரிப்பை வரவழைத்தது
தினமும் சாலையில் செல்லும்போது
மூன்று முறையாவது கேட்டுவிடும்
'வூட்டுல சொல்லிட்டு வந்துட்டிய்யா?'



Nov 24, 2007

என்னா ஆட்டங்கிறீங்க!!!


ஒரு வழியா... விழி பிதிங்கி போய் நேத்திக்கு பரிட்சை எல்லாம் முடிச்சாச்சு!! எனக்கு எப்போதுமே ஒரு பழக்கம் இருக்கு. பரிட்சை முடிஞ்ச அன்றைக்கே எதாச்சு ஜாலியா செஞ்சுடுனும். என் காலேஜில் இந்த வருடம் முதல் ஆண்டு படிக்கும் மாணவர்கள் காலேஜ் விட்டு போகும் சீனியர்களுக்கு கொடுக்கும் farwell partyக்கு என்னை அழைச்சு இருந்தாங்க. (நான் இந்த காலேஜில் மூன்று வருஷத்துக்கு முன்னாடி படிச்சு இருந்தேன். முன்னாள் மாணவி என்ற பெயரில் என்னை சிறப்பு விருந்தினர் என்ற வகையில் அழைச்சாங்க...)

இந்த ஜீனியர்கள் எல்லாம் என்னமா ஏற்பாடு செஞ்சு இருந்தாங்க. மெய் சிலிர்க்க வைத்துவிட்டார்கள். எல்லாமே அவர்களாகவே செய்தார்கள், எந்த ஆசிரியர் துணையும் இன்றி. பாட்டு என்ன, நடனம் என்ன, அதுல இரண்டு பொண்ணுங்க.. ஒரு 4 பாட்டுக்காவுச்சு ஆடி இருப்பாங்க... அப்பரம் ஒரு சைடுல இந்த நிகழ்ச்சியை வீடியோ எடுத்தாங்க.. அப்பரம் அவர்கள் செய்த காலேஜ் போட்டிகளின் சாதனையை powerpoint slide மூலமாக காண்பித்தார்கள். எவ்வளவோ technical விஷயங்கள் பயன்படுத்தி புதுமையா செய்யுதுங்க இந்த காலத்து சின்ன பசங்க. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அப்பரம் அவர்களாகவே எடுத்த ஒரு சிறு காமெடி திரைப்படம் ஒன்று காண்பித்தார்கள். நிக்ழ்ச்சி தொகுப்பாளர்களின் காமெடி கலக்கல்.


பிறகு, சிறு சிறு போட்டிகள். காமெடி போட்டிகள் தான்!! ஒரு பாட்டு போட்டு, அதுக்கு சீனியர்கள் வேறுவிதமாக ஆடனும்!!

முதல போகும் போது, மனசு லேசா இருந்துச்சு! ஆனா, எல்லாத்தையும் பார்த்துவிட்டு, மனசு சந்தோஷத்துல கனத்துபோச்சு!! என் காலேஜ் நாட்களை ஞாபகம் படுத்திவிட்டார்கள்!! எல்லாரும் போலவே என் காலேஜ் நினைவுகளை என்னால் மறக்கவே முடியாது. அடுத்த மாதம் 'கல்லூரி' என்ற படம் வரபோகுது...நான் ரொம்பவே ஆவலாய் எதிர்பார்க்கும் படம்!!

நிகழ்ச்சியின் கடைசியில் dance floor!! ஹாஹா.. நான் சத்தியமா ஆடல. அப்படியே அமைதியா ஒரு ஓரத்தில் உட்கார்ந்து ரசித்து பார்த்தேன். எல்லாருமே அப்படியே ஒரு சூப்பபர்ர்ர்ர்ர்ர்ர் ஆட்டம் போட்டார்கள்!! என்னா ஆட்டங்கிறீங்க!!!

Nov 21, 2007

எவண்டா அது!??


எனக்கு அப்படியே டென்ஷன் ஏறுதுங்க. இன்னிக்கு நடந்த கணக்கு பரிட்சையினால. பொதுவா பரிட்சை என்றால் டென்ஷன் தான்! அதுலயும் இது ரொம்ப ரொம்ப கஷ்டமான module. நரம்பு எல்லாம் நடன ஆடிட்டு நேத்திக்கு ராத்திரி. தூங்க முடியல... படிக்கவும் முடியல. ராத்திரி ஒரு மணி வரைக்கும் படிச்சேன். படிச்சது எல்லாம் மறந்து போன மாதிரியே ஒரு பீலிங். சரி ஒரு ப்ரேக் எடுத்துக்கலானு நினைச்சு, பாட்டு கேட்டா... அதே பாட்டு தான் மனசுல ஓடிக்கிட்டே இருந்துச்சு!! சரி மறுபடியும் வந்து படிக்கலாம்னு பார்த்தா... mind அப்படியே சூடாச்சு!! it was really killing me!! அப்பரம் இன்னிக்கு மதியம் பரிட்சை. ஆனா காலையில 4 மணிக்கு எல்லாம் தூக்கம் ஓடி போச்சு!!


அப்பரம், சாப்பிட முடியல. என்னடா இது... இதான் முதல் தடவ பரிட்சை எழுது போன பொண்ணு மாதிரி பேசுதுனு நினைக்கிறீங்க தானே... எத்தனையோ தடவ பரிட்சை வருது.. ஆனா இரண்டு நாளா செம்ம torture!!! ஏண்டா பரிட்சை எல்லாம் வைக்கிறாங்க? அப்படினு தோனுச்சு!! பரிட்சைய கண்டுபிடிச்சவனை செருப்பால அடிக்குனு என்று என் தோழி ஒருத்தி புலம்பிகிட்டு இருந்தா.. புண்பட்ட நெஞ்சை புகைவிட்டு ஆத்துனும், அப்படினு பல 'அறிஞர்கள்' சொல்லி இருக்காங்க... அது போல கஷ்டப்படுற மனச கவிதை எழுதி ஆத்தணும்...


எவண்டா அது?


பரிட்சை என்ன

பசங்களுக்கு கிடைத்த சாபமா?

இல்ல கடவுள்

எங்க மேல காட்டுற கோபமா?

தூங்க முடியல

சாப்பிட முடியல

சிரிக்க முடியல

அழுவகூட முடியல

காதல் அறிகுறியானு பார்த்த

கண்ராவி இது பரிட்சையின்

அறிகுறிகள்!!


பரிட்சை எழுதும்போது

பக்கத்துல பக்கம் பக்கமா

எழுதுறவன பார்த்தா

டென்ஷன்.

பரிட்சை முடிஞ்சு

உடனே எல்லாம் பதில்களையும்

பகிர்ந்து கொள்றவன பார்த்தா

டென்ஷன்.

இரண்டே இரண்டு மார்க்

கோட்டைவிட்டவன்

வருத்தப்படுறத பார்த்தா

மெகா டென்ஷன்!

இப்படி மென்ஷன் பண்ண

முடியாத டென்ஷன்!

இத பார்த்து மனசு

குமறியது,

"பரிட்சைய கண்டுபிடிச்சவன்,

எவண்டா அது?"


Nov 15, 2007

கொல்றான்! என்னை கொல்றானே!!
















ஹாஹா... என்ன தலைப்பை பார்த்து பயந்துட்டீங்களா? அழகுல கொல்றானு சொன்னேன். தன் அழகிய புன்னகையினால் கொல்றானேனு சொல்ல வந்தேன்.
கொன்ற இடம்: http://www.indiaglitz.com/
கொன்றவர்கள்: அழகிய பெங்களூர் மகன்கள்

Nov 14, 2007

காதல் வெட்டு!


சமையலறையில் உனக்கு

உதவியாய் நானும்

சில வேலைகளை

செய்ய,

காய்கறி வெட்டும்போது

தெரியாமல் கத்தி

லேசாய் என் கட்டைவிரலை

கீற

நீ துடித்துபோய் உடனே

ரத்தம் கொட்டாமல்

உன் வாயால் உருஞ்சி எடுத்தாய்



அட இது தெரிந்திருந்தால்

என் உதட்டில் கீறி

கொண்டிருப்பேனே...

Nov 13, 2007

எனக்கு விஷால் மாதிரி மாப்பிள்ள வேணும்!

" எனக்கு விஷால் மாதிரி மாப்பிள்ள வேணும்?" இந்த டையலாக் இப்ப ரொம்பவே பிரபலம் ஆச்சு. எந்த படத்துல வந்தது என்று யோசிக்கிறீங்களா? எந்த படத்தலையும் வரல. இவ்வரிக்கு சொந்தக்காரி விஜ்ய் தொலைக்காட்சியில் வரும் 'நீயா நானா' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு தாயின் வார்த்தைகள். 'நீயா நானா'வில் பரபரப்புக்கு பஞ்சமே இல்ல. அதுவோட இது போன்ற காமெடிக்கு பஞ்சமே இல்ல.

சென்ற வாரத்தின் தலைப்பு 'திருமணத்தை பற்றி பிள்ளைகளின் கனவுகள் மற்றும் பெற்றோரின் எதிர்ப்பார்ப்புகள்". ஒரு பக்கம் இளையர்கள், இன்னொரு பக்கம் பெற்றோர்கள். இதை பற்றி ஏற்கனவே ஒரு அன்பர் அவரது வலைப்பக்கத்தில் போட்டுவிட்டடர். இருப்பினும் நிகழ்ச்சியை பார்த்தவுடன் 'ஏய், கண்டிப்பா இத பத்தி வலைப்பூவில் போடு' என்று தமிழ்மாங்கனியின் உள்மனசு சொன்னுச்சு!!

வயசுக்கும்( என்னை போன்றவர்கள்:)) இந்த தலைப்புக்கும் கொஞ்சம் தொடர்பு இருப்பதால், ஆர்வமாய் பார்க்க ஆரம்பித்தேன். பெற்றோர்கள் பக்கத்தில் இருந்த ஒரு தாய், எனக்கு நடிகர் விஷால் மாதிரி மருமகன் வேணும் என்று சொன்னது தான் ஆச்சிரியமாகவும் இருந்தது அதே சமயம் செம்ம காமெடியாக இருந்தது. அதற்கு நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் ரசித்து கைதட்டி சிரித்தது அதைவிட அழகாய் இருந்தது! (ஆஹா... தமிழ்மாங்கனி... வழியாதே வழியாதே!!:))

நடிகர் விஷால் மாதிரி மாப்பிள்ள வேணுமாம்!! அட, இத விஷால் கேட்டுச்சுனா எவ்வளவு 'வீல்' பண்ணும்! விஷால் எதிர்காலம் என்னவாகும்?? ஹஹஹா... நகைச்சுவை ஒரு பக்கம் இருக்க... நிகழ்ச்சியில் சொல்லப்பட்ட சில கருத்துகள் என்னை சிந்திக்க வைத்தது. சமுதாயம் இன்னும் சில விஷயங்களில் மாறவில்லை. நிகழ்ச்சியின் வந்தவர்கள் ஒட்டுமொத்த சமுதாயத்தின் குரலாக இருக்காவிட்டாலும், அவர்க்ளின் சிந்தனை சமுதாயத்தை ஓரளவுக்கு பிரதிபலிக்கின்றன என நினைக்கிறேன்.
ஆண்கள் பொதுவாகவே சிவப்பாக இருக்கும் பெண்கள் வேண்டும் என்று சொன்னது.... 'எனக்கு சிநேகா மாதிரி கலருல வேண்டும். எனக்கு பூமிகா மாதிரி பொண்ணு வேண்டும்' என்று சொல்வது சிவப்பு நிறத்துக்கே அதிக மவுசு என்பதை காட்டியது. ஆனால் சில பெண்கள் 'எங்களுக்கு கலர் கொஞ்சம் கம்மியாக இருக்கும் ஆளு தான்' வேண்டும் என்பது ஆச்சிரியமாக இருந்தது.

அதிலும் ஒரு பொண்ணு 'எனக்கு வரும் ஆளுக்கு, கொஞ்சம் ரவுடி லுக் இருக்கணும்' என்று சொல்லியது ரொம்பவே பயங்கரமா இருந்துச்சு. (அப்படினா புதுப்பேட்டை தனஷ், போக்கிரி விஜய், கொக்கி கரண்... இந்தமாதிரி ஆளுங்க... ஓகேவா, பொண்ணு?))

இதை சொன்ன பெண் தான் எனக்கு தாலி, மெட்டி போன்ற விஷயங்களில் ஈடுபாடு இல்லை. கல்யாணத்தில் இதலாம் தேவையில்லை என்றார். தனது கருத்துகளை கொஞ்சம் அதிகமான தைரியத்தோட சொன்னது நல்லா இருந்துச்சு. உண்மையில் 'குடும்பவிளக்கு' காவியத்தில் இது போன்ற சடங்குகள் எதுவும் இல்லாமல் தான் ஒரு கல்யாணம் நடந்ததாக இருக்கு.

இது போன்ற கருத்துகள் தெரிவித்த அந்த பெண் பாரதி கண்ட புதுமை பெண்ணாக இருந்தாலும், இவளை போன்ற ஒரு பெண் உங்க வீட்டுக்கு மருமகளாக வந்தால் ஏற்று கொள்வீங்களா என்று கோபிநாத் கேட்ட கேள்விக்கு பெற்றோர்கள் பக்கத்தில் இருந்து, ' எங்களுக்கு இது மாதிரி மருமகள் வேணாம்' என்று பட்டென்று சொன்னது ரொம்பவே அதிரிச்சியாக இருந்தது. அந்த பொண்ணு மனசு கஷ்டப்பட்டு இருக்குமா இல்லையா? என்று என் மனசு கேட்டது.

என்னவோ....மொத்தத்தில் நல்ல சிந்தனைக்கு தீனி போட்டது இந்நிகழ்ச்சி எனலாம். மற்றபடி பெற்றோர்கள் ஜாதி மதம் மாறி கல்யாணம் செய்வதில் இஷ்டம் இல்லை என்பது, பிள்ளைகள் அவர்கள் கல்யாணத்தை பத்திரிக்கை கூட இல்லாமல் குறுந்தகவல் மூலமோ அல்லது ஈமெயில் மூலமோ கல்யாண செய்தியை அனுப்புவார்கள் என்று சொன்னது புதுமையாக இருந்தது. ஒவ்வொரு கருத்தும் சொல்லும்போது.. நான் அப்படியே ஓரக்கண்ணால் என் பெற்றோர்களை பார்த்தேன். எந்த கருத்துக்கு அவங்க சரி என்கிறார்கள் எந்த கருத்துக்கு சரியில்ல என்கிறார்கள் என்பதை பாத்துவச்சுகிட்டோம்ல!! ஹாஹா... .

ஆனா ஒன்னு... நிகழ்ச்சி நடத்தும் கோபிநாத் மாதிரி ஒரு மாப்பிள்ள, எல்லாம் வீட்டுலையும் இருந்தா நல்லா இருக்கும்.. ஏனா.. பிரச்சனன அவரே ஆரம்பித்து அவரே சுமூகமா முடித்துவைப்பாரு!!

Nov 9, 2007

தீபாவளிக்கு என் வீட்டுக்கு விஜய் வந்தாரு!

pre deepavali என்றால் தீபாவளிக்கு முன்னால் செய்தவை. முறுக்கு சுட்டது, வீடு சுத்தம் செஞ்சது எல்லாம்.post deepavali என்றால் தீபாவளிக்கு மறுநாள் என்னவெல்லாம் செய்கிறோம் என்பது. இப்போ நான் செஞ்சுகிட்டு இருப்பதுகூட postdeepavali நடவடிக்கை தான். அதாவது இதை எழுதுவதை தான் சொன்னேன். தீபாவளி அன்று எங்கவீட்டுல அவ்வளவு பிரமாண்டமாக ஒன்னும் செய்ய மாட்டோம். சாப்பிடுவோம், தொலைக்காட்சி தொடர்ந்து பார்ப்போம்! தீபாவளி அன்றுதான் என்றைக்குமே கிடைக்காத ஒரு தூக்கம் வரும். அதை நல்லா அனுபவிப்போம்.

இந்த வருஷம் தீபாவளியும் அப்படிதான் போனுச்சு. பக்கத்துவீட்டு சீன அண்டைவீட்டாருக்கு பலகாரம் கொடுத்தேன். வருஷம் வருஷம் அவங்க கேட்குற அதே கேள்வி "ஓ.. தீபாவளி உங்களோட new year மாதிரியா?"
அதுக்கு நான் சொல்லும் பதில், "இல்ல... அது வேற இது வேற"
ஒவ்வொரு வருஷமும் நான் சொல்லி சொல்லி அலுத்துபோச்சு. அப்பரம் பலகாரம் கொடுக்கவந்த இடத்துல அவங்ககிட்டு தீபாவளி கதை பத்தி சொல்லிக்கிட்டு இருக்க முடியுமா? அதுவும் அவங்களுக்கு அவ்வளவா ஆங்கிலம் தெரியாதுவேற...

சரி ஒரு வீட்டுல கொடுத்துட்டேன். இன்னொரு வீட்டுக்கு போனேன். இங்கதான் செம காமெடி. இந்த வீட்டு aunty தான் கொஞ்சம் தெரிந்தவங்க. அவரோட கணவர் என்னை பார்த்துஇல்லை. நான் அவங்க வீட்டு கதவை தட்டியதும் அவர் கணவர்தான் திறந்தார். அவர் என்னை பார்த்தார். அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. ரொம்ப குழம்பியவர் போல் தெரிந்தார். நான் கையில் ஒரு பெரிய தாம்பாலத்தில் பலகாரத்தை தூக்கி கொண்டு நின்றேன். "தீபாவளி sweets" என்று சொன்னதும், அவர் நினைத்து கொண்டார் நான் ஸ்வீட் விற்க வந்திருக்கும் salesgirl என்று! அவர் முகத்திலிருந்தே அதை அறிந்து கொண்டேன். "வேண்டாம், இதலாம் நாங்க சாப்பிட மாட்டோம்" என்று அவர் கண்கள் சொல்லியது! என்னால் சிரிப்பு தாங்க முடியவில்லை. சரி சரி அவர் நம்மை துரத்தி அடிப்பதற்கு நான் உடனே ," aunty, எங்க? இன்னிக்கு தீபாவளி. நான் அங்கிட்டு மேல் மாடியில் குடியிருக்கிறோம்? என்று சுருக்க சொன்னேன் ஆங்கிலத்தில். அவருக்கு லேசாக புரிந்திருக்கும் நினைக்கிறேன். நல்ல வேளை aunty வந்துட்டாங்க. அவங்ககிட்டு கொடுத்துவிட்டு நான் ஓரே ஓட்டமா வீட்டுக்கு வந்துட்டேன்.

அப்பரம் தொடர்ந்து தொலைக்காட்சி தான். காலையில் ஆரம்பிச்சு ராத்திரி வரைக்கும் விஜய் எங்கவீட்டுல இருந்தாரு. ஏனா... எல்லாம் நிகழ்ச்சிலையும் அவர் தான். படமும் அவர் படம் தான் (கில்லி). எங்க உள்ளூர் தொலைக்காட்சிலையும் அவர் படம் தான்! அதனால கிட்டுதட்ட விஜய் வீட்டுக்கு வந்த மாதிரி இருந்துச்சு! (கொஞ்சம் bore ஆச்சு.ஹிஹிஹி)

சாய்ங்காலம், அப்படியே தோழி வீட்டுல் கொஞ்சம் கூத்தடிச்சுட்டு, வந்து வீட்டுல தூங்கிட்டேன்...
அம்முட்டுதாங்க!!!

Oct 19, 2007

மாமோய்!!-குட்டி கிறுக்கல்கள்




மாமா,
உன்னை இதைவிட
செல்லமாய் கூப்பிட
இன்னொரு பெயர்
வைக்கவா?
----------*****-----


மாமா மகன்
என்பதால் அதிக
உரிமை எடுத்து கொள்கிறாள்
என்று நினைக்காதே
உண்மையிலே
நான்
உன்னை..

ச்சீ போடா...
---------******---------



விடுமுறை நாட்களில்
உன் வீட்டில்
தங்கியிருக்கும்
அந்த ஒவ்வொரு
நிமிடத்தை பற்றியும்
என் டைரியில்
எழுதும்போது
வார்த்தைகள்கூட வெட்கப்படுகிறதே!
------****-----------------

என் கன்னத்தில் நான்
மயில் இறகால்
வருடியபோது
உன் மீசைக்கு
எவ்வளவு
கோபம் வந்திருக்கும் ?



Oct 13, 2007

தேநீர் With வைரமுத்து- காமெடி special

எல்லாருக்கும் வணக்கமுங்கோ! சும்மா ஒரு மொக்கை பதிவை போடலாமுனுதான் இத எழுதுறேன். நம்ம வாரம்தோறும் பார்க்கும் காபி வித் அனு நிகழ்ச்சியை வைரமுத்து ஏற்று நடத்தினால் எப்படி இருக்கும் என்பதை சற்று காமெடியோட... அதுல ரெண்டு special guests... பாருங்க..
----------------******------------------------------------------

என் இனிய விஜய் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு உங்கள் 'தேநீர் வித் வைரமுத்து' அன்போடும் பாசத்தோடும் பண்போடும் பரிவோடும் நேசத்தோடும் மரியாதையோடும்

காமிராமேன் :- சார் சார்.... போதும் போதும்... அடுத்த லைன்ன சொல்லுங்க... programme one hr தான் சார்!!

வைர: மரியாதையோடும் உங்கள் தேனீர் வித் வைரமுத்து வரவேற்கிறேன். வாரந்தோறும் நம் தமிழ் சினிமா நட்சத்திரங்களை அழைத்து அவர்களுக்கு மகுடம் சூட்டி, கீரிடம் பூட்டி, பொன்மாலை அணிவித்து கௌரவம் படுத்துகிறோம். அவ்வகையில் இன்றும் நமது இனிய பொழுதை சுவையாக்க, நகைச்சுவையாக்க என் இனிய தோழன், என் உயிர் நண்பன், என் அருமை சிநேகிதன் ஒருவர் வீற்றிருக்கிறார். இவரை பற்றி சொல்ல சொற்கள் கிடையாது, வார்த்தைகள் வராது, வாக்கியங்கள் பாக்கியம் செய்திருக்க வேண்டும். நான் பல பாடல்களில் எதுகை மோனையுடன் அழகாய் சொல்வதை, இவர் பல படங்களில் சில நேரங்களில் அபத்தமான அவருக்கு ஏற்ற பாணியில் சொல்லகூடிய வல்லவர், நல்லவர், தமிழ் நாட்டின் சிங்கம், அசிங்கம், நம்ம விஜய டி ராஜேந்திரனை அன்போடு வரவேற்கிறோம்!!

டி ஆர்: ஏய் டண்டனக்கா... டனக்குடக்கா... ஏன்ய்யா நீ என்னை கூப்புடுறத்துக்குல... எவ்வளவு நேரம்ய்யா...

வைர: வாங்க உங்க இருக்கையில் அமருங்கள்!

டி ஆர்: உட்காந்து தாண்டா இருக்கேன்!!

வைர: சுகமா?

டி ஆர்: வெட்ட வெட்ட வளரும் நகம்
காதலில் விழ தேவை முகம்
எனக்கு பிடிச்சுது உன்னோட கவிதை ரகம்
இந்த டி ஆர் எப்போதும் சுகம்!!

வைர: நீங்கள் ஒரு வார்த்தை பதிலுக்கு ஒரு பக்கம் பதில் சொல்கிறீர்களே.. நீங்க சிறு வயதில் பரிச்சையில் ஒரு சொல் பதில் கேள்விகளை எவ்வாறு சமாளித்தீர்கள்?

டி ஆர்: நான் எப்போதும் இப்படிதான். இப்படிதான் எப்போதும். டீச்சர் பண்ணுற டாச்சர் தாங்க முடியாம அவங்கள பழிவாங்க நான் நிறைய பக்கம் எழுதுவேன் பரிச்சையில... அதுவே பழக்கமா போச்சு. இப்போ அதுவே என் மூச்சு.

வைர: அழகாய் பேசுகிறீர்கள் என்று உங்களிடம் யாரேனும் பொய் சொல்லி இருக்கிறார்களா? சொன்னது யார்?

டி ஆர்: நான் மேடையில் பேசும்போது எல்லாருமே அப்படிதான் சொல்லுவாங்க.. அதை பொய்யினு சொல்லுறுவன் கோமாளி
அதை உண்மையினு நம்புறவன் அறிவாளி
இப்படி கேள்வி கேக்குற நீ, ஒரு சன் சன் சன்..**

வைர: அடே நண்பா, நிறுத்து! போதும். என் மானத்தை கப்பல் ஏற்றாதே. நான் வைரத்திற்குள் ஒலிந்திருக்கும் முத்து. முத்துக்குள் ஒலிந்திருக்கும் வைரம். என்னை இப்படி சொல்வது நியாயமா? குறையா? தகுமா?

காமிராமேன்:- சார், prograame முடிஞ்சு என்கூட சேட்டு வீட்டுக்கு வாங்க.. வைரம் முத்துலாம் உங்ககிட்ட இருக்கல.. உங்கள அடுமானம்வச்சு என் அக்கா கல்யாணத்த முடிச்சுரேன் சார்!!

வைர: அட பாவிகளா? ரசனையோடு ஒரு பேச்சுக்கு சொன்னால்... இப்படியா? எனக்கு இப்போது தேவை ஒரு இடைவேளை.

டி ஆர்: நான் சொல்லட்டா??...

வைர: வேண்டாம் தோழா. இடைவேளை என்பது சுருக்கசொல்வது. அதையே நீ ஒரு முழு நீள படம் ஆக்கிவிடுவாய். வேண்டாம். ஏன் இந்த சிறுபிள்ளைதனமான ஆசை.

டி ஆர்: (சும்மா உட்கார்ந்து, சொன்னதுக்கு தலையை 360 degrees ஆட்டிவிட்டு, அந்த amazon காடு முடியை தடவிகிட்டு இருந்தார்...)

வைர: உங்களை இடைவேளைக்கு அப்பரம் மீண்டும் சந்திப்பதில் மிக்க சந்தோஷம் ரசிகர்களே. இது வரைக்கும் நம் கழுத்தை அறத்து கொண்டிருந்தார் டி ஆர்! பார்த்து கை கொட்டி சிரித்த நாம், இனி நமது உயிரை எடுக்க, தொடுக்க,கோர்க்க வருகிறார் அவர் வாரிசு, தானே பட்டம் பறைசாற்றி கொண்டு தமிழ்நாட்டையே கலக்கும் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு!

டி ஆர்: (ஒரே குஷியாகி, மேசையில் தாளம் போட, சிம்பு கருப்பு சட்டை கருப்பு பேண்ட் அணிந்து வர, வைரமுத்து கைத்தட்ட, உள்ளே entry)

சிம்பு: வணக்கம் சார்.( வைரமுத்துவை பார்த்து)

வைர: சார் என்பதற்கு பதிலாக ஐயா என்று அழைத்து இருக்கலாமே?

சிம்பு: சார், ஒரு தமிழ் நிகழ்ச்சியில முடிஞ்சவரைக்கும் ஆங்கில வார்த்தை தான் use பண்ணனும். அப்பதான் நமக்கு பெருமை. என்ன பா நான் சொல்லுறது.

டி ஆர்: சரியா சொல்லுவான் நம்ம சிம்பு
தப்பா சொன்னா பறக்கும் அம்பு
வேண்டாம் டா வம்பு
மொத்ததில் என் மவன் ஒரு சொம்பு!

சிம்பு: அப்பா!!! என்ன நீங்களே.. இப்படி.

டி ஆர்: சாரி சிம்பு, ரொம்ப emotional ஆகி, உளரிட்டேன். வைரமுத்து, இத நீங்க எடிட்டு பண்ண சொல்லிடுங்க...

வைர: இருக்கட்டும் இருக்கட்டும். நீங்க சொன்ன வசனங்களில் இதுதான் அருமை. சிம்பு, நீங்க ஏன் விளக்கமாத்து குச்சிபோல் தலைமுடி வைத்து இருக்கிறீர்கள். உங்கள் குடும்பத்திற்கும் இந்த முடிக்கும் ஏதேனும் பகையோ?

சிம்பு: அப்படிலாம்.. ஒன்னும் இல்ல... சார். நாங்க ஒரு நல்ல முடிவு தான் எடுக்க தெரியாதவங்க. அதனால முடியும் எடுக்க தெரியாதவங்கனு தப்பா நினைக்க வேணாம். இதுலாம் ஒரு ஸ்டைல். உங்கள மாதிரி வெள்ள ஜிப்பா ஆளுங்களுக்கு இதலாம் தெரியாது சார்.

வைர: ஹாஹாஹா... உங்கள் தந்தை போலவே பேச கற்று கொண்டீர். நீர் வாழ்க வளமுடன்!!

(சிம்பு திடீரென்று...)

சிம்பு: ஆமாங்க.. எனக்கு என்ன பிரச்சனையினா நான் மத்துவங்க மாதிரி கிடையாதுங்க. நான் என்ன பண்ணுறது. சிம்பு straight forward தான். திமிரு பிடிச்சவனா... எங்க அப்பா எனக்கு அப்படி சொல்லி தருல... எனக்கு நடிக்க தெரியாதுய்யா!!

(காமிராமேன், வைரமுத்து எல்லாருக்கும் ஒரே shock. சம்மந்தமே இல்லாமல் ஏன் சிம்பு கொச்சிகிட்டு போனும்)

சிம்பு: ரொம்ப நல்லா பேசினாங்க சார். இன்னிக்கு யார் eliminate ஆவ போறானா...சிம்பு!!

(சிம்பு வெளியேறினார். ஒன்னுமே புரியாமல் வைரமுத்து, காமிராமேன் நிற்க.. டி ஆர் மட்டும் சிம்புவை பிடிக்க ஓடினார் இப்படி சொல்லிக்கிட்டே... "டேய் மவனே... அது வேற நிகழ்ச்சிடா. இது வேற நிகழ்ச்சி. எல்லாத்துக்கும் இதையே சொல்லுறீயே!! ஏய் சிம்பு நில்லுடா.. நில்லு!!)

ஹாஹாஹாஹா..... முற்றும்**********---------------

Sep 25, 2007

அத்தை மகன் சிவா (part 1)

சீதாவிற்கு மழை ரொம்ப பிடிக்கும், சின்னசிறு நாய்க்குட்டிகளுடன் விளையாடுவது பிடிக்கும், பாலில் தேன் கலந்து குடிப்பது பிடிக்கும், இரவில் தனிமையாக பாட்டு கேட்பது பிடிக்கும், ஆளில்லாத பேருந்து பிடிக்கும், வானவில் பிடிக்கும், பூக்களின் மீது இருக்கும் பட்டாம்பூச்சி பிடிக்கும், இதை எல்லாம்விட அவளுக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது அவள் அத்தை மகன் சிவா! சிவா என்ற பெயரை கேட்டாலே போதும் சீதாவிற்கு உலகமெல்லாம் ஒரு முறை பறந்துவந்ததுபோல் திரிவாள்.

சீதா சிங்கப்பூரிலே பிறந்து வளர்ந்தவள். அவளின் தந்தையின் தங்கை மகன் தான் சிவா. அத்தை குடும்பம் எல்லாம் திருச்சியில் உள்ளனர். பலமுறை சீதா இந்தியாவிற்கு சென்று வருவதால் அவளுக்கு அந்த ஊரும் அதைவிட சிவாவையும் ரொம்ப பிடித்துவிட்டது. முறை பையன் வேற.. கேட்கவா வேண்டும்! வருடத்திற்கு ஒரு முறை இந்தியா சென்று வருவதை சீதாவின் குடும்பம் ஒரு வழக்கமாக வைத்திருந்தனர். சீதாவிற்கு அப்போது 19 வயது இருக்கும், சிவாவிற்கு 21 வயது!

பல வருடம் பழகி இருந்தபோதிலும், சீதாவிற்கு அவ்வயதிலிருந்துதான் சிவா மீது காதல். இதுவரைக்கும் அவனிடம் சொன்னதில்லை. சிவாவிற்கும் தன் மீது அதே ஆசை உண்டா? என்பதும் தெரியாது. அதற்கு பிறகு சீதா இந்தியா போவதே சிவாவை பார்க்கதான். எப்படியாவது தன் காதலை சொல்லிவிட வேண்டும் என்று நினைக்கும்போது பழாபோன பயம் தடுத்துவிடும். சிங்கப்பூரிலிருந்து சொந்தம் வந்தால்தான் போதுமே...ஊரே திரண்டு வரும். இந்த கூட்ட நேரிசலில் வேற என்னத்த சொல்ல. குல தெய்வ கோயிலுக்கு பேருந்தில் சென்றபோது, வேண்டும் என்றே அவன் இருக்கை அருகே உட்கார்ந்து கொள்வாள். தூங்கி விழுவதுபோல் நடித்து அவன் தோளில் சாய்ந்து கொள்வாள். சிங்கையில் வேறும் ஜீன்ஸ்-டி ஷர்ட் போட்டு திரியும் சீதா இந்தியாவிற்கு போனவுடன் அப்படியே குடும்ப குத்துவிளக்குதான் போங்க! மாமனுக்கு பிடித்த கலரில் தாவணி போட்டு கொள்வதும், சமையலே தெரியாமல் இருந்தாலும் சமையலறையில் போய் அத்தைக்கு உதவி செய்வதும்...அப்பப்பா... சீதாவின் அட்டகாசம் ஒரு ரகளை ஆயிடும்!

இந்த கிறுக்குத்தனத்திற்கு காரணம் சீதா சிவாவின் மீது வைத்திருக்கும் அளவுகடந்த காதலே ஆகும்! சிவா ரொம்ப ரொம்ப அமைதியானவன். பெண்களை அதட்டிகூட பேசமாட்டடன். விரிந்த கண்கள், அதுக்கு ஏற்ற கண்ணாடி. அளவு எடுத்து செய்ததுபோல் மூக்கு. அதுக்கு கீழே கச்சிதமான மீசை. சிரிக்கும்போது அழகாய் வளையும் மேல் உதடு, கன்னத்தில் விழும் குழி! அதைவிட ரொம்ப ரொம்ப கெட்டிக்காரன். அவங்க ஊரிலே +2 தேர்வில் முதல் மாணவன். பொறியியல் படிப்பு படிக்க சென்றான்.

நான்கு வருடங்கள் உருண்டோடின. சிங்கையில் சீதா பிஸ்சி கணிதம் கடைசி ஆண்டு படித்து கொண்டிருந்தாள். சிவா நல்ல தேர்ச்சியுடன் பட்டபடிப்பு முடித்து சிங்கப்பூரில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது.

"ஹலோ மாமா, நான் தான் சிவா பேசுறேன். அங்க ITTA technologies கம்பெனியில் வேலை கிடைச்சுருக்கு மாமா. அடுத்த வாரம் அங்க வரேன். ஒரு வாரத்துக்கு அப்பரம் தான் கம்பெனியில் புதுசா தங்க..இடம் கொடுப்பாங்களாம்... அதனால.. நான் நம்ம வீரபாண்டி அண்ணன் மகன் வீட்டுல கொஞ்ச நாளைக்கு தங்கிகிறேன் மாமா..."என்றான் சிவா சீதாவின் தந்தையிடம்.

அதற்கு அவர், "அப்படியே சிவா, ரொம்ப சந்தோஷம் வேலை கிடைச்சதுல. என்னிக்கு வரேனு சொல்லு. நான் வந்து அழைச்சுகிட்டு போறேன். சரியாப்பா." என்று மனமகிழ்ச்சியுடன் கூறி விவரங்களை பெற்று கொண்டார். இதை கேட்டபடி சோபாவில் செய்திதாளை படித்து கொண்டு இருந்தாள் சீதா. சமையலறையிலிருந்து காபியை குடித்தபடியே வெளியே வந்த சீதாவின் அம்மா கேட்டார் "யாருது?". சீதாவின் தந்தை சிவா கூறியதை சொன்னனர். கேட்டவுடன் சீதாவிற்கு மயக்கமே வந்துவிட்டது. அதற்கு அப்பரம் செய்திதாள் படித்தாளா இல்லை படிப்பதுபோல் நடித்தாளா என்பதை அவள் மனசை கேட்டுதான் சொல்ல வேண்டும்.

சீதாவின் அம்மா, "என்னங்க நீங்க... சிவா போய் மத்தவங்க வீட்டுல தங்கினால் என்ன அர்த்தம். நம்ம வீட்டுலையே தங்க சொல்லுங்க. உங்க தங்கச்சி நமக்கு எத்தனையோ செஞ்சிருக்கா... நாம இதகூட செயலையினா எப்படி... நம்ம சீதாவும் இருக்கா... எதாச்சு உதவி வேணுமுனாகூட சீதா செய்வா.." என்று காபியை குடித்தவாறு கூறினார். இதை கேட்டவுடன் சீதாவுக்குள் ஒரு ஐஸ்பெட்டியை வைத்ததுபோல் குளிர்விட்டு குதுகலமாகினாள். எனினும் எதையும் காட்டி கொள்ளமால் செய்தித்தாளை படித்து கொண்டிருந்தாள். செய்திதாளில் எழுத்துகளா தெரிந்தது.... சிவா முகம் தானே ஆயிரம் முறை வந்துவந்து சென்றது! சீதாவின் தந்தை உடனே சிவாவிற்கு தகவல் சொல்லி தனது வீட்டுலையே தங்குமாறு கேட்டு கொண்டான். சிவா முதலில் வேண்டாம் என்று நினைத்திருந்தான் இருப்பினும் அவர் கேட்டு கொண்டதால் மறுக்க முடியாமல் ஒப்புகொண்டான்.

சீதாவிற்கு தான் கையும் ஓடல காலும் ஓடல. வீட்டை சுத்தம் செய்வதிலிருந்து அலங்காரம் படுத்தும்வரை எல்லாவற்றையும் இழுத்து போட்டு செய்தாள். மாமனுக்கு புதுசு புதுசா சட்டை வாங்கி வைத்தாள், அவருக்கு பிடித்த மாதிரி அவர் அறையை அலங்கரித்துவிட்டாள்.

சிவா காலை 6 மணி விமானத்தில் வந்து இறங்குவதால்... அவள் அதிகாலை 3 மணிக்கே எழுந்துவிட்டாள். அன்று சீதாவின் தந்தைக்கு வேலை இருப்பதால், சீதா தான் சிவாவை அழைத்துகொண்டு வருமாறு சொல்லிவிட்டார்கள். அதுவும் அவளே தனது டோயோட்டா காரில் அழைத்து கொண்டு வரவேண்டும்... அட கரும்பு திண்ண கூலியா! 5 மணிக்கே விமான நிலையத்திற்கு சென்றுவிட்டாள். ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை கடிகாரத்தை பார்த்தபடியே உட்காரவும் முடியாமல் நிற்கவும் முடியாமல் துடித்தாள். விமான நிலையத்தில் ஒரு அறிவிப்பு - " 6 மணிக்கு வரவேண்டிய ஏர் இந்தியா விமானம் சற்று தாமதமாகும்" என்று! ஆஹா... எரிகின்ற நெருப்பில் ஆசிட்டை ஊத்திட்டாங்கய்யா!! விமான நிலையத்தில் மக்கள் இருந்ததால் தப்பித்தோம்... இல்லையென்றால் பத்தரக்காளி ஆட்டமே ஆடி இருப்பாள்!

கொஞ்ச நேரம் கழித்து ஏர் இந்தியா விமானம் வந்து இறங்கியது. பயணிகள் வெளியே வந்துகொண்டிருந்தார்கள். மின்னல் வேகத்தில் சீதாவின் பார்வை அங்கும் இங்கும் ஓடியது தன் மாமனை தேடி....

(நாளை பூக்கும்- தொடரும் என்பதைதான் வித்தியாசமாக சொன்னேன்)

அத்தை மகன் (part 2)

Sep 24, 2007

என் கலா..-சிறுகதை

பொதுவாகவே ரயில் பயணம் என்றாலே சற்று களைப்பாகதான் இருக்கும். உட்கார இடம் கிடைக்காது, நிற்ககூட இடம் இல்லாமல் தள்ளாடி கொண்டு தான் இருக்க வேண்டும். இருந்தாலும் லதாவிற்கு ஏதோ ஒரு சுகம், ரயில் பயணம் என்றாலே! அன்று நடந்த சம்பவம் லதாவை பெரிதும் பாதித்து அவள் தனது டயரியில் நடந்ததை எழுத ஆரம்பித்தாள். இரவு மணி 11, தனது நினைவுகளை பின்னோக்கினாள்.... மதியம் 2 மணி...

-----------***---------------------------------
நான் எப்பொழுதும் அந்த பச்சை நிற இருக்கைகள் இருக்கும் இடத்தில் தான் நிற்பேன். இன்றைக்கும் அங்குதான் நுழைந்தேன். கூட்டம் அதிகம் இல்லாததால், இருக்கைகள் காலியாக இருந்தன. நான் நுழைவுகதவு ஓரமாக இருக்கும் இருக்கையில் அமர்ந்து கையில் வைத்திருந்த 'three-dimensional structure of proteins' நோட்ஸ்சை சும்மா பக்கம் பக்கமாய் புரட்டிக்கொண்டிருந்தேன். அப்போது, ஒரு சிறுமியின் கை என் முட்டியை தொட்டது. நோட்ஸ்சில் இருந்த என் பார்வை சற்று நிமிர்ந்து அச்சிறுமியின் முகத்தின்மேல் பட்டது. அவள் புன்னகையித்தாள். அவளுக்கு ஒரு ஆறு வயதுதான் இருக்கும். அவளின் தாயாரும் அங்கிருந்தார். சிறுமி சற்று சத்தமான குரலில் "நான் இங்க உட்காரனும்." என்றாள் அவள் ஆள்காட்டி விரலை என் இருக்கையின் மீது காட்டி. நானும் சரி குழந்தை தானே என்று நினைத்து அவளை என் இருக்கையில் உட்கார வைத்துவிட்டு எழுந்து நின்றேன். பக்கத்தில் உள்ள கம்பியை பிடித்துபடி சிறுமியை பார்த்து கொண்டே வந்தேன்.

அவள் நடவடிக்கைகள் சற்று வித்தியாசமாகவும் விநோதமாகவும் இருந்தன. தனக்குதானே கைகொட்டி சிரித்தாள். அவள் தலை உருவமும் வழக்கத்திற்கு மாறாக இருந்தது. தன் சட்டையில் உள்ள பட்டன்களை இழுத்து அதை உடைத்து கொண்டிருந்தாள். நான் என் கைகளை நீட்டி அவளை தடுத்தேன். எதிர்பார்க்காத விதமா ஒரு கணம் என் விரல்களை இழுக்கமாக பிடித்து கொண்டு என்னை பார்த்து முறைத்தாள். நான் திடிக்கிட்டேன். மறுவினாடியே சிரித்தாள்! கள்ளகபடமற்ற சிரிப்பு! சிரிக்கையில் அவளுக்கு வாயிலிருந்து எச்சில் ஒழுகியது. அதைகூட அவள் கவனிக்காமல் தன்னை மறந்து சிரித்தாள். அவள் அம்மா வந்துதான் எச்சிலை துடைத்து "ஷுஷு...சத்தம் போடாதே" என்றார்.

எனக்கு தெரியவந்தது அச்சிறுமி மூளை வளர்ச்சி குன்றியவள் என்று. மனசு அக்கணமே சஞ்சலபட்டது. கண்கொட்டாமல் அவளையே பார்த்துகொண்டிருந்தேன். இரண்டு மூன்று ரயில் நிறுத்தங்கள் தாண்டி அவள் பக்கத்திலுள்ள இருக்கை காலியானது. அவள் என்னன பார்த்து கை அசைவால் பக்கத்தில் வந்து உட்காரும்படி கேட்டாள். நான் 'பரவாயில்லை' என்பதுபோல் தலை அசைத்தேன். அவள் மறுபடியும் முறைப்பதுபோல் கெஞ்சினாள். அவள் அம்மாவிடம் திரும்பி "ஆண்டி நீங்க உட்காருங்க.." என்றேன். அதற்கு அவர் "பரவாயில்ல.. அவ உன்னைய தான் கூப்பிடுறா." என்றார் புன்னகையுடன்.

அவள் பக்கத்தில் அமர்ந்துவுடன் அவள் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை பார்க்கவேண்டுமே- அப்படியே 1000 வாட்ஸ் விளக்குகள் ஒன்றாய் வெளிச்சம் காட்டியதுபோல் பிரகாசம்! அவள் காதருகே சென்று " உன் பேரு என்ன?" என்றேன். நான் அவளிடம் பேசியதை கண்டு குதுகலமாகிய அவள் "எ எ..பேரு..." என்று திக்கி திக்கி சொல்ல ஆரம்பித்தவுடன் அடடே பாவம் என்று மனம் வேதனைப்பட்டது. அவள் நிலை தெரியாமல் பேசவைத்து கஷ்டப்படுத்துகிறோமே என்று என் உள்மனம் என்னை லேசாக குத்தியது. ஏதோ ஒரு பேரு சொன்னாள். ஆனால், அவள் சரியாக உச்சரிக்காமல் சொன்னதால் என்னால் பெயரை கண்டுபிடிக்கமுடியவில்லை. அவள் சொன்னதை வைத்து 'கலா' என்று பெயர் போலதான் ஒலித்ததால்,

"கலா?" என்று அமைதியாய் அவள் கண்களை பார்த்து கேட்டேன். அது அவள் பெயர் இல்லை. நான் தவறாக சொன்னதால் என்னை மறுபடியும் ஒரு முறை கோபித்து கொண்டாள்.
பெயரை மறுபடியும் சொல்ல முற்பட்டாள். சொல்லிமுடித்தவுடன் என் முகத்தை பார்த்தாள், அவள் பெயரை நான் சொல்லவுடன் என்ற ஆவலுடன். மீண்டும் தவறாக சொல்லி அவளை காயப்படுத்தவேண்டாம் என்று எண்ணி "ஓ.. ரொம்ப அழகான பெயரு." என்று சொல்லி சமாளித்தேன். அப்போது நான் சொல்லியதை கேட்டு மீண்டும் அந்த முகமலர்ச்சி. இப்படி ஒரு குழந்தையை சந்தோஷபடுத்த முடிகிறதே என்று நினைத்து என் உள்ளம் மகிழ்ச்சியடைந்தது.

அச்சிறுமி அவள் அம்மாவை காட்டி "ராணி!" என்று சத்தமாய் சொன்னாள். இம்முறை எனக்கு விளங்கியதால் நான் "ஓ.. அம்மா பெயரு ராணியா?" என்றுவுடன் என் இரு கைகளையும் அவள் மடியில் வைத்து தடவினாள். என்ன ஒரு ஸ்பரிசம்!! என்னுடலில் ஏதோ ஒன்று ஊடுறவது போல் உணர்வு!! எனக்கு அவளை ரொம்ப பிடித்துவிட்டது. அவளிடம் பேசி கொண்டே இருக்க வேண்டும் என்று என் மனம் பட்டாம்பூச்சிபோல் பறந்தது.

தன் கையில் ஒரு கசங்கியிருந்த tissue paperயை வைத்திருந்தாள். அவளிடம் பேச்சு கொடுக்க வேண்டும் என்பதால் tissue paperயை சுட்டிகாட்டி "அது என்ன?" என்று நான் வினாவினேன் அவளிடம். ரொம்ப நேரம் யோசித்துவிட்டு "என் photo." என்றாள் அதே திக்கு குரலில். நான் ஒரு நிமிடம் ஆடிபோய்விட்டேன். எதற்கு அவள் அப்படி சொல்லவேண்டும்? கசங்கிபோன tissue paper போல்தான் நானும் என்று சொல்லாமல் சொல்கிறாளா? தெரிந்து சொல்கிறாளா? தெரியாமல் சொல்கிறாளா? என்று மனம் புரியாமல் குழம்பியது.

அதற்கு அவள் இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டது. மெதுவாக் இருக்கையில் இருந்து இறங்கி அவள் அம்மா கையை பிடித்து கொண்டாள். என்னை பார்த்து சிரித்து கொண்டே "டாட்டா" காட்டினாள். அவள் போகையில் ஏதோ ஒன்று என்னைவிட்டு போவதுபோல் நான் உணர்ந்தேன். ரொம்ப தூரம் சென்றபிறகும் திரும்பி பார்த்து, கூட்டத்தை தன் கண்களால் விலக்கி பார்வையால் என்னன தேடி கண்டுபிடித்து கைகாட்டியபடியே சென்றாள்.

அவள் சென்றவுடன், என் கண்களில் நீர் முட்ட கண்கள் குளமாகி கண்ணீரால் ஈரமானது என் கன்னங்கள்!! நான் யாருக்காகவும் எதற்காகவும் இப்படி அழதது இல்லை. இன்று ஏன் அழுதேன்? எனக்கே புரியாத புதிராக...
ஏன் கடவுள் இப்படிப்பட்ட குழந்தைகளை படைக்கவேண்டும்? அவள் அம்மாவின் முகத்தில் காண முடிந்தது மறைந்தகிடந்த கவலை. இன்று பார்த்துகொள்ள அவள் அம்மா இருக்கிறாள்.எதிர்காலத்தில் அவளுக்கென யார் இருப்பார்? இப்படி லட்சக்கணக்கான கேள்விகளுடன் மனம் சுழந்தது.
-----------------****--------------------

இப்படி டயரியில் எழுதி கொண்டிருக்க லதா தன் கடைசி வாக்கியத்தை கண்ணீருடன் முடித்தாள்- "அவளுக்கு நான் வைத்த பெயர் கலா. என் கலா எப்போதுமே நல்லா இருக்கணும்!"

அம்முவாகிய நான்-விமர்சனம்

படத்தின் பெயரே எதோ ஒரு கவிதை மாதிரி தான் இருக்கிறது. படமும் வித்தியாசமான முயற்சிதான். இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்த இயக்குனருக்கு தைரியம் உலகளவு இருந்திருக்க வேண்டும்! படத்தின் பலமே பார்த்திபனும் புதுமுக கதாநாயகி பாரதியும் தான்!! அதிகமான கதாபாத்திரங்கள் இல்லை. அதுவே சற்று வித்தியாசமாகதான் இருந்தது, ஒரு நாவல் படிப்பதுபோல் ஒரு உணர்வு.

காட்சிகள் அமைந்த விதம் ரொம்ப மென்மையாக இருந்தது. ஒளிப்பதிவாளருக்கு தான் அந்த பாராட்டு சேரவேண்டும். சரி கதை என்னவென்றால் ஒரு பெண் குழந்தை தனது தந்தையால் ஒரு விபச்சாரியிடம் விற்கப்படுகிறாள். அவள் அங்கே வளர்ந்து அங்கே வாழ்கிறாள். பார்த்திபன் ஒரு எழுத்தாளர். அவர் எழுதும் ஒரு கதைக்காக அங்கே செல்கிறார், பாரதி பிடித்திருந்ததால் அவளை திருமணம் செய்து குடும்ப வாழ்க்கைக்குள் கொண்டு வருகிறான். ஒரு வில்லனால் அவன் படைப்புக்கு விருது கிடைக்காமல் போக, பாரதி அதற்காக என்ன செய்கிறாள்? என்பதை திரைக்கதையாக்கி நமக்கு ஒரு புதுமையான படத்தை தந்துள்ளது தமிழ் சினிமா.

இசையும் வசனமும் இப்படத்திற்கு இன்னொரு பலம். பார்த்திபன் அதிகம் பேசாமல் நடித்தது இன்னொரு பலம். ஒரு விபச்சார இடத்தை ரொம்பவே வித்தியாசமாக காட்டியிருப்பது அருமை! படம் பார்த்தால் தெரியும்... 'அருமை' என்று ஏன் சொல்கிறேன் என்பது புரியும். கல்யாணம் முடிந்து பார்த்திபன் படுக்கையறையை அலங்கரித்து கொண்டு இருப்பான். நாம் தமிழ் சினிமாவில் பார்த்ததுபோல் வழக்கமான(அநாவசியமான) முதலிரவு காட்சியை தான் காட்டபோகிறான் என்றால் அங்க ஒரு வித்தியாசம். பார்த்திபன் பாரதியிடன் சொல்வார் "நீ இன்னிக்கு நிம்மதியா தூங்க போற முதலிரவு. நிம்மதியா படு." என்று சொல்லிவிட்டு இந்த தனிமையான தூக்கத்தை அனுபவி என்று பார்த்திபன் சென்றுவிடுவது அற்புதமான ஒரு சிந்தனை.

இவ்வாறு பல வித்தியாசமான காட்சி இருந்தாலும், குறைகளும் அங்காங்கே உள்ளது. திரைக்கதையின் வேகம் சற்று மெதுவாகவே நகர்கிறது. பார்த்திபன் கதை எழுதுவது விருதுக்காகதான் என்று சொல்வது ஏற்று கொள்ளமுடியாத ஒன்றாக இருக்கிறது. இதுக்கு எல்லாம் மேலாக, இந்த படத்தை குழந்தைகள் கண்டிப்பா பார்க்கமுடியாது. குடும்பத்தோடு கண்டிப்பா பார்க்க இயலாது. எதோ ஒரு சஞ்சலம் ஏற்படுவதுபோல் இருக்கும்.... ஆக இப்படம் வெற்றிபடம் என்பதைவிட நல்ல கலைபடம் என்று கூறலாம்.

நம் சமூகம் இது போன்ற படங்களுக்கு எந்த அளவு ஆதரவு கொடுக்கும் என்று தெரியவில்லை. ஆனால், கண்டிப்பா இப்படத்திற்கு பல வெளிநாடு படவிழாவில் விருது வாங்கும் வாய்ப்பு உள்ளது.

அம்முவாகிய நான் - தனியே படிக்க வேண்டிய டயரி!

தினமும் ஒரு கவிதை

பாசத்துடன் ஒரு பார்வை
நேசத்துடன் ஒரு சிநேகம்
கெஞ்சலுடன் ஒரு சிரிப்பு
கொஞ்சலுடன் ஒரு மறுப்பு
முறைப்புடன் ஒரு முத்தம்
சிணுகலுடன் ஒரு அமைதி
காதலுடன் ஒரு தவிப்பு
இக்கவிதையுடன் நான்
என்னுடன் நீ!

Sep 15, 2007

ஆயிரம் முத்தம்

என் அலுவலக மேசையின் மேலிருக்கும்


உன் புகைப்படத்திற்கு


தினம் ஆயிரம் முத்தங்கள்


கொடுக்கிறேன்



பாசத்துடன் ஒரு பார்வை

நேசத்துடன் ஒரு சிநேகம்

கெஞ்சலுடன் ஒரு சிரிப்பு

கொஞ்சலுடன் ஒரு மறுப்பு

முறைப்புடன் ஒரு முத்தம்

சிணுகலுடன் ஒரு அமைதி

காதலுடன் ஒரு தவிப்பு

இக்கவிதையுடன் நான்

என்னுடன் நீ!

Aug 28, 2007

இயக்குனர் சேரனுக்கும் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்திற்கு ஒரு கேள்வி!

ஆஸ்திரேலியா பல்கலை கழகம் ஒன்று இயக்குனர் சேரன் இயக்கிய 'தவமாய் தவமிருந்து' படத்தை பாடபகுதியில் சேர்த்துள்ளனர். ரொம்ப ரொம்ப சந்தோஷம் பட வேண்டிய விஷயம். ஒவ்வொரு தமிழனுக்கும் இதில் பெருமை உண்டு. கீழே உள்ள துணுக்கு செய்தியை பாருங்கள்:

"தமிழ்க் கலாச்சாரம் இந்தப் படத்தில் சிறப்பாக வெளிக்காட்டப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் என்னைப் பாராட்டினர். ஒவ்வொரு மனிதனுக்கும் இது ஒரு பாடம் என்றும் பாராட்டினர் என்றார் சேரன்."
( http://thatstamil.oneindia.in/specials/cinema/specials/australian-varsity-includes-cheran-film-in-syllabus-070824.html இருந்து எடுக்கப்பட்டது)

ஆனால் இதை பார்த்தவுடன் எனக்கு பகீர் என்றது. இப்படத்தில் சேரனும் பத்மபிரியா கதாபாத்திரங்களும் காதலிப்பார்கள். ஒரு சூழ்நிலையில் வரம்பு மீறி செய்ய கூடாத ஒன்றை செய்துவிடவார்கள். காதலித்தவளை பிறகுதான் கல்யாணம் செய்து கொள்வார் சேரன்! இதுவா அவர்கள் சொல்லும் தமிழ்க் கலாச்சாரம்??

அவர்கள் இப்படத்தை தேர்ந்தெடுக்க மற்ற பல காரணங்கள் இருக்கலாம். அதை நான் தவறு என்று கூறவரவில்லை. இருந்தபோதிலும் என் மனதில் திடிக்கிட்ட ஒரு சிந்தனை இது!

இப்படத்தை வைத்து பாடம் மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்கள் இதிலிருந்து தமிழ் கலாச்சாரத்தின் மீது தவறான எண்ணம் வருமா? வராதா?

எனக்கு தெரியல.... உங்களுக்கு தெரியுமா?
(முடிந்தவரை கருத்துகள் ஏதேனும் இருந்தால் சொல்லுங்க... நானும் தெரிஞ்சுகிறேன்)

Aug 26, 2007

என் மகள் காதலிக்கிறாள்!

21 வயதாகியும் அவள்
எனக்கு இன்னும்
கைபொம்மையோடு
விளையாடும்
கைகுழந்தை தான்!

வீட்டில் இரண்டு தொலைபேசிகள்
இருந்த போதிலும்
ஒரு 'cordless' போன் வேண்டும்
என்று அடம்பிடித்து
வாங்கினாள்.

ஜீன்ஸ் டீ-ஷர்ட்
விரும்பி போடும் அவள்
திடீரென்று சேலை மீது
ஆசை கொண்டாள்.

தொலைக்காட்சியில்
காதல் காட்சிகள் பார்க்கும்போது
சோபா 'குஷன்னை'
இறுக்கிக் கட்டிபிடித்து
கொள்கிறாள்.

சமையல் கற்றுகொள்கிறாள்
வெள்ளிக்கிழமை கோயில் செல்கிறாள்
சுடிதார் கலருக்கு ஏற்ற
வளையல் மாட்டி கொள்கிறாள்

குறுந்தகவல் வந்தால்
அவள் அறைக்கு சென்றுவிடுகிறாள்
அளவோடு சாப்பிடுகிறாள்
தமிழ் கவிதை வாசிக்கிறாள்

இதையெல்லாம் ரொம்ப
நாளாக கவனித்த
என் மனம்
புன்னகையித்தபடி
சொல்லியது
"ம்ம்ம்.. என் மகள் காதலிக்கிறாள்!"



Aug 20, 2007

தொட்டால் பூ மலரும்-விமர்சனம்

"துளியிலே ஆட வந்த வானத்து விண்விளக்கே" என்று சின்ன தம்பியில் சிறு குழந்தையாக வந்தவன் இன்று திரையில் ஆட்டம் போட வந்துவிட்டான். வேறு யாரு இல்லைங்க 'தொட்டால் பூ மலரும்' ஹீரோ சக்தி. சின்ன தம்பி, நடிகன் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவன். இயக்குனர் பி.வாசுவின் மகன் நடித்த படம் தான் 'தொட்டால் பூ மலரும்'.

அட நம்ம பார்த்து வளர்ந்த பையனா இவன் என்று ஆச்சரியம்படுத்தும் அளவுக்கு வளர்ந்துவிட்டான். உண்மையில் MBA படித்த முடித்து சினிமாவில் காலடி வைத்துவிட்டான் தன் அப்பாவின் உதவியால்.. சரி படத்துக்கு வருவோம். பி.வாசு தன் மகனுக்காகவே எடுத்த படம் போல தெரியுது. கதை, திரைக்கதையில் தன் மகனின் திறமைகளை வெளிபடுத்த வேண்டும் என்பதற்காக பல சண்டைகள் என்று திணித்துவிட்டார். இருப்பினும் 'காதலில் வென்றால் மட்டும்போதாது, வாழ்க்கையில் வெல்ல வேண்டும். அப்பதான் வருகின்ற காதலியை நிம்மதியாக வச்சுருக்க முடியும்' என்ற ஒரு வரி கதை தான் இந்த படம். கருத்து நல்லது தான். இருப்பினும் திரைக்கதை ஓட்டத்தை சரி செய்து இருக்கலாம்.

ராஜ்கிரண், நாசர், சுகன்யா, கேஸ் ரவிகுமார் போன்ற பெரிய ஜாம்பவான்கள் பட்டாளம் ஓரளவுக்கு சுவார்ஸ்சியமாக கொண்டு சென்றனர் படத்தை. வடிவேலு காமெடி அவ்வளவு எடுப்படவில்லை. காதல் கதை என்பதால் கதாநாயகிக்கு நடிக்க வாய்ப்பு இருந்தது... இருந்தாலும் எங்க இப்ப வர புள்ளைங்க அத பயன்படுத்துதூங்க...!

ஒரு சில சுவார்ஸ்சியமான காட்சிகள் இருந்தாலும் அவை கதையோடு ஒன்றியதாக அமையவில்லை. எது எப்படி இருந்தாலும்... புது முக கதாநாயகன் சக்திக்கு நல்ல எதிர்காலம் உண்டு. கேமிராவுக்கு முன் ஒரு பதற்றம் இல்லாமல் நடிப்பது, நன்றாக ஆடுவது... என்று ஹீரோவுக்கு இருக்கவேண்டிய பல அம்சங்கள் கொண்டவராக இருக்கிறார் சக்தி. பார்க்க அப்படியே அவங்க அப்பா சாயல். குரல்கூட அப்படியே அவர் மாதிரியே.

படத்தின் பாடல்கள் அருமை! காட்சியமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். சில வசனங்கள் நச்! கடைசி காட்சியில் கேஸ் ரவிகுமாரிடம் பணம் கொடுக்க வேண்டும் சக்தி. அப்ப சக்தி பணத்தை எடுத்து அவரிடம் கொடுக்கபோதும், ரவிகுமார் சொல்லுவார் 'இருக்கட்டும்பா, என் அட்வான்ஸா வச்சுக்கோ" என்பார். ரசித்து பார்த்த ஒரு காட்சி

நம்ம வீட்டு பையன் என்ற வகையில் படத்தை சக்திக்காக ஒரு முறை பார்க்கலாம்.... தியெட்டரில் ரசிக்க முடியாவிட்டாலும். சீடியில் குடும்பத்தோடு பார்க்கலாம்!

தொட்டால் பூ மலரும்-ஒரு சில இடங்களில் மட்டுமே!

Aug 13, 2007

ஜில்லுனு ஒரு காதல்



எனக்கு கருப்பு பிடிக்குமென்று
நீ மீசை வளர்த்தாய்
ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்பதால்
தாடி வளர்க்க ஆரம்பித்தாய்!

ஜன்னல் வெளியே ஒரே மழை
ரொம்ப நேரம் எட்டி பார்த்துவிட்டு
'சூடா' ஏதாச்சு வேண்டுமென்றாய்
'சரி பொறுடா, காபி போட்டு தாறேன்' என்றேன்
என் கையை இழுத்து,
'முத்தம் மட்டும் போதும்' என்றாய்.

குளித்துவிட்டு தலை துடைக்க
துண்டை தேடினாய்.
ரொம்ப நேரமாய் நான் கதவு பக்கத்தில்
நிற்கிறேனே,
தெரியவில்லையா உனக்கு
என் சேலை ஓரமே
நீ தேடும் துண்டு என்பதை!

குளியலறை கம்பியில் போட்டிருந்த
உன் கைகுட்டைப் பார்த்து
அங்கிருந்த கண்ணாடியில் ஒட்டியிருந்த
என் ஸ்டிக்கர் பொட்டுகூட
வெட்கப்பட்டது!

Aug 3, 2007

அஜித்த கவிழ்த்த விஜய்

எல்லாரும் அவங்கவங்க பங்குக்கு தலைய பத்தி பேசிதீர்த்துட்டாங்க. சரி.. அவ்வளவு மோசமாவா இருக்கு படம் கீரிடம்னு சொல்லி... ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்தேன். அப்பரம் தான் தெரிஞ்சுது பெரியவங்க பேச்ச கேட்கலைனா எப்படிப்பட்ட பின்விளைவுகள் எல்லாம் வருமுனு.... உஷ்ஷ்.... தாங்கல சாமி படம்!

கடைசி கிளைமெக்ஸ் மாத்துபோறாய்ங்களாம்....அட படத்தையே வேற மாதிரி எடுத்தா தேவலாம் போல இருக்கு. கிளைமெக்ஸ் காட்சியில் தல அழுவும்போது எப்ப்டி இருந்துச்சு தெரியுமா "நான் ஏன் இப்படிப்பட்ட படங்களையல்லாம் ஒத்துக்கிறேனே" அஜித் 'வீல்' (feel) பண்ணி...அழுவுற மாதிரி இருந்துச்சு. போதாதிற்கு ராஜ்கிரன் சரண்யா.. பெற்றோர்கள் ஜோடி. அட கொடுமைகளா..... எவ்வளவு!! (யப்பா....). இன்னும் எத்தனை தடவ! அஜித் எப்படியாவது ஜெயிச்சுடுனும் நினைக்கும்போதுலாம் இப்படி ஒரு படத்தை கொடுத்து அதுவே அது வாயில் மண்ண வாரி போட்டுகுது. (யம்மா ஷாலினி... சும்மா badminton விளையாட போகாமே...கொஞ்சம் தலைக்கு எடுத்து சொல்லுமா! )

படத்தின் இயக்குனர் பெயர் விஜய். அப்பவே தல உஷாரா இருந்திருக்க கூடாதா... கீரிடம் போடுறேனு இப்படி கவிழ்த்துப்புட்டான்ய்யா விஜய்!!
என்ன கொடுமை சார் இது!

Jul 25, 2007

துள்ளல்-கொடுமைகளை வாரி தந்த வள்ளல்!

துள்ளல்

சிவாஜி படம் அளவுக்கு என்னொரு படம் வருமா என்று நாம் நினைத்து கொண்டிருக்கும் வேளையில் 'என் படம் வந்து ஒரு கலக்கு கலக்கு போகுது' என்று துள்ளல் பட இயக்குனர் வரிந்து கட்டி கொண்டு வந்துவிட்டார். இயக்குனர் பரவின்காந்த் தான் இப்படத்தில் ஹீரோ (அட கொடுமை இங்கேருந்து ஆரம்பம் ஆச்சு...)

இவர் படம் ஓரளவுக்கு நல்ல பொழுது போக்கா அமையும். ரட்சகன், ஜோடி போன்ற படங்கள் ஓரளவுக்கு பார்க்ககூடிய படம் என்பதால் நம்பி போய் இந்த படத்தை பார்த்தேன். மனசு நொந்துபோயிட்டேன் சாமி!! முக்கி முக்கி மூணு மணி நேரம் படத்த பார்த்து ரத்த வாந்தி, மயக்கம், பேதி எல்லாம் ஒரே சமயத்தில் வந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது படத்தை பார்த்து முடித்தவுடன்.

எந்த ஒரு மேக்-கப் போடாமல் ஹீரோ படகிழவனாய் காட்சியளிப்பது இப்படத்தில் ஒரு முக்கிய அம்சம். இப்போது வரும் ஹீரோயின்களுக்கு நடிப்பு வரவே வராது என்பதை தெள்ளதெளிவாக காட்டுகிறது இப்படம். பாடல், இசை, என்று ஒன்றை மனதில் வைக்காமல் வாய்க்கும் கைக்கும் வந்தபடி பாடல்கள் அமைந்தது இப்படத்தின் இன்னொரு அம்சம். விவேக் காமெடி வர வர ரொம்ப தவறான பாதையில் போகிறது என்பதை அழகாய் சுட்டிகாட்டியது இப்படம். கதை, திரைக்கதை என்பதை முற்றிலும் மறந்து சும்மா கேமிராவை தூக்கி கொண்டு எதையோ படம் ஆக்கிவைத்துள்ளனர். இது தமிழ் சினிமாவிற்கு ஒரு சாபகேடு!

விவேக் அடிக்கும் இரட்டை அர்த்த வசனங்கள், ஹீரோ சொல்லும் வசனங்கள் ஸ் ஜே சூர்யாவிற்கே தலைவலியை கொடுக்கும்!
தமிழ்நாட்டிற்கு ஒரு ஸ் ஜே சூர்யா போதாது என்று இப்ப களத்தில் குதித்துவிட்டார் பிரவின்காந்த். குரல்கூட அப்படியே ஸ் ஜே சூர்யா சாயல்! என்ன கொடுமை சார் இது...

ரொம்ப நாளாச்சே ஒரு படம் பார்க்கலாம் என்று தோழி சொன்னதால், வந்த வினை இது. படம் பார்த்த பிறகு, தோழிக்கு அத்திரமும் அழுகையும் சேர்ந்தே வந்தது. அவள் எனக்கு செய்த கொடுமை நான் மன்னித்துவிட்டேன். ஆனால் இப்படி ஒரு படம் எடுத்த இயக்குனரை தமிழ் சினிமா மன்னிக்குமா?

ஒரே கடுகடுப்பில் இருந்த எனக்கும் என் தோழிக்கும் ஒரு தொலைபேசி வந்தது. எங்களது ஒரு நண்பன் அழைத்தான் ," ஏ மச்சி, இன்னிக்கு நான் செம்ம கடுப்புல இருக்கேன். எனக்கே என் மேலே கோபம் கோபமா வருது."
என்னடா இது நாம் தான் இப்படி உள்ளோம் என்றால் அவனுக்குமா என்று நினைத்து கொண்டு " என்ன ஆச்சு.. கூல் கூல்" என்று சொன்னேன்.

அதற்கு அவன் ," ஏ என்னத்த சொல்ல... இன்னிக்கு ஒரு படம் பார்த்தேன். இதுக்கு அப்பரம் என் வாழ்க்கையில் தமிழ் படமே பார்க்க போறது இல்லனு முடிவு பண்ணிட்டேன்."

"என்ன படம்? ஏன்?" என்றேன் நான்.

"இப்பதான் லா, அந்த மன்சூர் அலிகான் அறுவ படம் 'என்னை பார்த்தால் யோகம் வரும்' படத்த பார்த்தேன்.... இனி ஜென்மத்துக்கு தமிழ் படம் இல்ல."


ஹாஹா... அட கொடுமை கொடுமையினு கோயிலுக்கு போனால் அங்க ஒரு கொடுமை தலைய விரிச்சு டப்பாங்குத்து ஆடுது, சாமியோ!!

(துள்ளல்- கொடுமைகளை வாரி தந்த வள்ளல்)

Jul 7, 2007

நீ-நான்

பொறாமை எனக்கு
உன் கைபேசி மீது
தினமும் நான் வாங்கும் முத்தங்களை
அது வாங்கி கொள்கிறது.
முத்தங்கள் அதுக்கு
வெறு சத்தங்கள் மட்டும் எனக்கா?

என்ன தைரியம் உன்
மோதிரத்திற்கு?
24 மணி நேரமும்
உன் விரலையே
கட்டி பிடித்து கொண்டிருக்கிறது.
நான் பிடிக்கும் உன் விரலை
வேறு யாரையும் தொட அனுமதிக்கமாட்டேன்
சொல்லி வை உன் மோதிரத்திற்கு!

கழுத்தில் இருக்கும் உன்
தங்க சங்கிலிக்கு எதிரியே
நான் தான்!
நெஞ்சில் சாய்ந்துகிடக்கும்
அந்த தங்க டாலரின்
ஆயுள் காலத்தை குறைக்க
வந்துவிட்டேன்,
அந்த இடத்தை நான் நிரப்பி....

Jun 2, 2007

காலத்தால் அழியாத கோலங்கள்

தள்ளி தள்ளி போட்ட
புள்ளிகளை
ஒன்றாய்
இணைக்கும் கோலம்!
எங்கேயோ இருந்த
புள்ளிகளாய் நாம்,
நம்மை இணைத்தது
கல்லூரி நட்பு என்னும்
கோலம்!

காலை முதல்
மாலை வரை
அழகாக ஜோலித்த நாம்
தண்ணீரால் அழிக்கப்பட்டபோது
சேர்ந்தே கரைந்தது
நாம் சிந்திய கண்ணீர்!
கல்லூரி வாழ்க்கை முடிந்தபின்
சேர்ந்தே மறைந்தது எல்லாமே!

காலம் என்னும் ஆயுதம்
உங்களிடம் பேச
ஒரு நிமிடத்தைகூட விட்டுவைக்காமல்
சுட்டுவிட்டது!

இன்று அழிக்கப்பட்டாலும்
நாளை காலை
கோலங்கள் போடப்படும்
இன்று பிரிந்தாலும்
நாளை என்னும் நம்பிக்கையுடன்
காலத்தால் அழியாத கோலங்களாய் நாம்!

Apr 19, 2007

கூடல் நகர்-விமர்சனம்

என்னடா இந்த பொண்ணு விமர்சனம் எல்லாம் சொல்ல ஆரம்பிச்சுடுச்சுனு நினைக்க வேண்டாம். வேற எப்படி என்னோட மன கஷ்டத்த கொட்டுறது....:) நானும் இது ஒரு நல்ல படமுனு நம்பி போனேன். இப்படி நம்பவச்சு.... அத என் வாயால எப்படி சொல்றது. சரி சரி... என்ன படம்னு சிக்கிரம் சொல்லு அப்படினு நீங்க சொல்லறது என் காதுல கேட்குது!! அந்த படம்- சீனு ராமசாமி இயக்கிய 'கூடல் நகர்'. படத்தோட பேரு எல்லாம் நல்லாதான் இருக்கு. படம்தான்...ம்ம்ம்.... சொல்றேன்... சொல்றேன்...

பரத் இரட்டை வேடம். காதல் சந்தியா மற்றும் பாவனா. இவர்கள் நடித்த படம்தான் இது. மதுரையை தளமாக கொண்ட படம். அட இயக்குனர்களே, இனி எத்தனை தடவதான் இதே ஊருல படம் எடுப்பீங்க? சரி எடுக்குறீங்களே,,, அத சரியா எடுக்கவேணாம்? கதை.. ஒன்றுமே இல்லை. அண்ணனை கொலை செய்துவிடுவார் வில்லன் (ஏன்னா... வில்லனோட பொண்ணு பாவனா.. பாவனாவை காதல் செய்வார் அண்ணன் பரத்) அண்ணனை கொலை செய்தவரை கொலை பண்ணுவார் தம்பி பரத். தம்பி பரத் சந்தியாவை காதல் செய்யும்! இந்த கதை தமிழ் சினிமா ஆரம்பித்த காலத்திலிருந்தே எடுத்துக்கிட்டு வராங்க. அரைத்த மாவை அரைத்து அரைத்து புளித்து போச்சு!

நடிப்பு என்ற வகையில் பார்த்தால், பரத் நல்லாவே செய்யுறாரு. (தம்பி, உனக்கு நல்ல எதிர்காலம் இருக்குதய்யா!) காதல் சந்தியா, முடிந்த அளவு நல்லா செய்ய முயன்று இருக்கிறார். சொந்த குரலில் பேசி இருக்கிறார் போல. ஏங்கோ படித்தேன் இப்படத்தில் நடித்த சந்தியா பழைய காலத்து சரிதாவை ஞாபகப்படுத்துகிறார் என்று. அப்படி எல்லாம் ஒன்று இல்லை மக்களே!! சரிதா நடிப்புக்கும் சந்தியா இப்படத்தில் நடித்ததற்கும் எவ்வளவு பெரிய வேறுபாடு இருக்கு. சரிதா மாதிரி நடிக்க இன்னும் காலம் பிடிக்கும் சந்தியாவுக்கு!! இதில் பாவம் நம்ம பாவனா!! என்ன நினைச்சு படத்தில் நடிக்க ஒத்துகிட்டாங்கலோ. ஒரு முக்கியத்துவமே இல்லாத கதாபாத்திரம். சும்மா சுடிதாரிலும் நல்ல தாவணியிலும் வந்து போகிறார். வசனம்கூட 2 பக்கத்துக்கு மேல் தாண்டி இருக்காதுனு நினைக்கிறேன். இவருக்கு நடிப்பு சும்மார்தான் (அட நடிச்சாதானே..) இரட்டையர்களுக்கு அம்மா வேடத்தில் இந்து (நாடகங்களில் நடிப்பவர்). இவருக்கும் வயதான அம்மா வேடத்திற்கும் பொருத்தமே இல்லை.

இயக்குனர் ஒரு பேட்டி அளித்து இருந்தார். அதில் அவர் கூறியது "இந்த இரு பெண்களின் கதாபாத்திரம் நான் வாழ்க்கையில் சந்தித்த இரு பெண்களின் கதைதான்". இப்படி ரொம்ப ஓவர் பில்டப் கொடுத்து நம்பி போன எனக்கு வச்சார் பாருங்க ஆப்பு! முதல் பாதி ரொம்ப மெதுவாக நகர்ந்தது திரைக்கதை. இரண்டாம் பகுதியில் எதிர்பார்த்த மாதிரி திரைக்கதை போனதால்.. சுவார்ஸ்சியம் இல்லாமல் போச்சு! மதுரை பாஷையில் பரத் பேசும்போது பருத்திவீரன் கார்த்தி, காதல் பரத் ஆகியவற்றை ஞாபகம்படுத்தியது. விறுவிறுப்பு இல்லாமல் போன கதையினால் தோய்வு அடைந்தது திரைக்கதையும் படத்தை பார்த்துகொண்டிருந்த நானும்!!

பாடல்களும் ஓரளவுக்கு சும்மார். சபாஷ்-முரளி இசை. 'தமிழ் செல்வி' என்ற பாடல் அருமை. இருப்பினும் மற்ற பாடல்கள் 'டக்' ஔட்! பிண்ணனி இசை சிறப்பாக இல்லை. என்னதான் படம் சொதப்பலா இருந்தாலும் ஒரு சில காட்சிகள் என்னை கவர்ந்தது.

* பாவனா தூக்குமாட்டி இறந்துவிடுவார். அப்போது அவரின் மூன்று வயது தம்பி வந்து பார்க்கும். அதுக்கு என்ன நடக்குதுனு தெரியாமல் தூக்கில் தொங்கும் அக்காவை பார்த்து சிரிக்கும். ரொம்பவே யதார்த்தமான காட்சி!

* சந்தியாவை ,தம்பி பரத் பார்த்து ஜொல்லுவிடும்போது சந்தியா சொல்லும் "இந்தேரு, இதுலாம் ஒன்னு வச்சுக்காதே. எற்கனவே, இப்படி செஞ்ச நாலு பேர விலக்கமாத்தால அடிச்சுருக்கேன். வேணுனா போய் கேட்டுபாரு." இப்படி சொல்லும்போது சந்தியாவுக்குள் இருக்கும் அந்த காமெடியன் தெரிந்தது.

இதுபோன்று விரல்விட்டு எண்ணிவிடகூடிய ஒருசில காட்சிகளே உண்டு. நல்ல படம் பார்க்கலாம் என்று நினைத்தால் இப்படத்தை தவிர்ப்பதே சாலசிறந்தது. அப்பாடா, என் மனசு இப்பதான் பாரம் குறைஞ்சு இருக்கு!! வேலை வெட்டி., வெட்டி வேலை இல்லாதவர்களாக நீங்க இருந்தால்மட்டுமே படத்தை போய் பார்த்து 3 மணி நேரம் உங்களின் பொறுமையின் எல்லையை சோதித்து கொள்ளலாம்.(அப்பரம் ஏன் புள்ள, நீ போய் பார்த்தேனு கேட்காதீங்க... அழுதுடுவேன்:)

மொத்தத்தில்
கூடல் நகர்- நல்ல கதை, திரைக்கதை இல்லாமல் நம்மை அலையவிட்ட தேடல் நகர்!

Mar 24, 2007

இந்தியா byebye to உலக கோப்பை 2007!

நேற்று நடந்த போட்டியில் 'அதிரடியாக' தோற்று வீடு கிளம்புகிறது நமது இந்திய சிங்கங்கள்!! ஸ்ரீலங்கா அணி பிரமதமாக ஆடி இந்தியாவை வீழ்த்தி விலாசியது. நான் என்னத்த சொல்ல.... கொஞ்சம் வயத்தெறிச்சலாகவும் கோபமாகவும் இருக்கிறது. இப்படி மோசமா விளையாடுவார்கள் என்று சற்றே நினைக்கவில்லை!

அந்த முதல் ஆட்டக்காரர் உத்தப்பா(இந்திய அணி) 21 வயசுதான் நினைக்கிறேன். அனுபவம் இல்லாதவர்! ரொம்ப அவசரப்பட்டு லாவகமாக பந்தை 'அழகாக' ஸ்ரீலங்கா பந்து வீச்சாளரிடம் கொடுத்து நமக்கு எல்லாம் 'அல்வா' கொடுத்தார். அப்பவே எனக்கு பயம் வந்துவிட்டது. நம்ம ஆளுங்க ஏதோ தப்பு பண்ண போதுங்கனு. தெரியாமல் செய்தால் தப்பு, தெரிந்து செய்தால் திமிரு! இதில் இவர்கள் எந்த வகை என்று தெரியவில்லை.

அப்பரம் கங்குலி, சிறப்பாக ஆரம்பித்தாலும், அவரும் அவசரப்பட்டுவிட்டார். ஸ்ரீலங்காவின் முரளிதரன் அற்புதமாய் பந்தை பிடிக்க கங்குலியும் போய்விட்டார். அப்போது பயம் உச்சிக்கு போய்விட்டது. அடுத்து ஷேவாக், இவர் வந்து சில சிக்ஸர்களையும் பவ்ண்டிரிகளையும் அடிக்க ஆரம்பித்தார். சற்று நம்பிக்கை வந்தது.

அதுக்கு அப்பரம் ஒன்னு நடந்தது பாருங்க. எனக்கு ரத்த கொதிப்பே வந்துட்டு. நம்ம சச்சின் வந்தார். ஆரம்பிக்க போவதற்குமுன் தரையை இரண்டு தட்டு தட்டுனாரு. பேட்டை சரி செஞ்சாரு. சுற்றும் முற்றிலும் பார்த்தாரு. பந்து வீசப்பட்டது. பந்து 'ஸ்டமை' அடிக்க, சச்சின் 'டக்' ஔட்டு ஆகி வெளியேற்றப்பட்டார். இதுக்கு அப்பரம் இருந்த நம்பிக்கை எல்லாம் சுக்குநூறாகி போய்விட்டது.

இதுங்க தேராதுங்கனு முடிவுக்கு வந்துவிட்டேன். ஒன்னு இல்ல... ஒவ்வொரு பந்துக்கும் ஒரு ரன் எடுத்து நிதானமாக விளையாடி இருந்தாலே போதும். இப்ப என்ன பண்ணுறது.மிஞ்சியது அவமானம் தான்!! எல்லாம் போட்டிகளிலும் வெல்வது என்பது கடினம்தான். மற்ற சாதாரண போட்டி என்றால் பரவாயில்ல. இது உலக கிண்ணம் போட்டி! இதுல கண்டிப்பா ஜெயித்தே இருக்கவேண்டும். இந்தியா அணியிடம் திறமை இருக்கு. எத்தனை திறமை இருந்தாலம் அதை சரியான நேரத்தில் பயன்படுத்தி இருக்கவேண்டும்.

பாருங்க, புதிதாக வந்த சில அணிகள் அப்படிதான் விளையாடுறாங்க. பார்ப்பதற்கு அவ்வளவு பெருமையா இருக்கு. நம்ம ஆளுங்க.. எல்லாத்தையும் தொலைத்து நிற்கிறார்கள். சொல்வது சுலபம், செய்வது கடினம். எனக்கும் தெரியும்! ஆனா இப்படிப்பட்ட போட்டிகளில் என்னதான் நடந்தாலும் விளையாட்டில் கவனம் வேண்டும்!!! உலகமே இப்போது இந்திய அணியை பார்த்து கைகொட்டி சிரிக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டார்கள்.

ஆமா நம்ம ஆளுங்க எங்க விளையாட்டு பயிற்சி செய்ய நேரம் இருக்கு. விளம்பர படங்களில் நடிக்கவே நேரம் சரியா இருக்கும் போல. காலையில் பயன்படுத்தும் பல்பொடி முதல் இரவு பயன்படுத்தும் கொசுவத்தி வரை எல்லா விளம்பரங்களில் நம்ம இந்திய அணி வீரர்கள்தான். விளையாடுவதில் விட இதில்தான் ஆர்வம் அதிகம் போல. 1983 ஆம் ஆண்டு நமக்கு பெருமை வந்தது போல இந்த தடவையும் பெருமை சேர்ப்பார்கள் என்று நினைத்தேன். ஆனா, அவர்கள் சேர்த்துகொண்டதோ பல கோடி இந்தியர்களின் வயத்தெறிச்சலை மட்டும்தான்.

இனி இவர்களை பற்றி சொல்ல ஒன்னுமே இல்ல. தனக்காக விளையாடாமல் தன் நாட்டிற்காக விளையாடி இருந்திருந்தாலே போதும். வெற்றி பெற்றிருக்கலாம்! என்னொரு கவ்வாஸ்கர் வருவாரா? இன்னொரு கபில் தேவ் வருவாரா? பதிலாக்காக காத்திருக்க வேண்டும் 2011 ஆம் ஆண்டு அடுத்த உலக கோப்பை வரை.

இதுல ஒரே ஒரு ஆறுதல்... என்னதான் இந்தியாவிற்கு பாகிஸ்தானுக்கும் சண்டை சச்சரவு இருந்தாலும். துன்பத்தில் இரண்டுமே ஒன்னு சேர்ந்துட்டாங்க!

Feb 28, 2007

எப்போதும், ஏன்?

கூட்ட நெரிசல்
எவ்வளவு இருந்தாலும்
கண்கள் அலை பாயும்!

நமக்கு ஏற்ற வயது பையன்களை
விட்டு வைப்பதில்லை நமது பார்வை
காரில் பயணம்
கண்ணாடி வழி
காதல்!

பேருந்தில் பயணம்
பக்கத்து சீட்டில்
காதல்!

இரயிலில் பயணம்
கம்பி பிடித்து
காதல்!

சாலை கடந்து போகையில்
திரும்பி பார்க்க வைக்கும்
காதல்!

நிலைமை

சல்மான் கான்
விவேக் ஒப்ராய்
இதற்கு பின்பு தான்
அமிஷேக் பச்சனே
ஐஸ்வர்யா ராயுக்கு!

முதல் காதல் உடைய
இரண்டாம் காதல் கரைய
முன்றாவது முறைதான் முழு நிலவாய்!
உலக அழகிக்கே இந்நிலைமை
உள்ளூர்வாசி நமக்கு எந்நிலைமையோ?

Feb 18, 2007

தீபாவளி- படவிமர்சனம்

பொங்கலுக்கு வராத தீபாவளி போன வாரம் வந்தது! இந்த படத்துக்கு நிறைய எதிர்பார்ப்பு வச்சுருந்தேன். ம்கூம்.. எல்லாம் புஷ்பவனவெடி மாதிரி புஷ்னு போச்சு!

hero- jayam ravi
heroine- bhavana
director-ezhil
producer- llingusamy
music-yuvan shankar raja

கதையினு பார்த்தா.. மூன்றாம் பிறை கதைய கொஞ்சம் பிச்சி போட்டு colourful dance, youthful actors போன்ற மசாலா கலவைய போட்டு செஞ்ச ஒரு படம். திரைக்கதையில் எந்த ஒரு புதுமையும் இல்லை. சென்னை ராயபுரம் ஏரியாவை மையமா வச்சு கதை எழுதுனாங்களாம். ஆனா, அந்த ராயபுரம் இடத்துக்கு எந்த ஒரு சீனிலையும் முக்கியத்துவம் கொடுத்த மாதிரி தெரியல. இதுல வேற.. இந்த படக்கதையை கேட்டவுடன் ஜெயம் ரவி உடனே ஒகே பண்ணிட்டாறாம்.. வேற எந்த படத்தையும் ஒப்புக் கொள்ளவில்லையாம். (யோவ், ஏன்ய்யா, உனக்கு இந்த அவசர புத்தி... அது சரி, உன் தலைஎழுத்த யாரு மாத்த முடியும்)

படம் ஆரம்பித்தவுடனே, கதை தெரிந்தவிட்டது. 1st half படு போர்! 2nd half கொஞ்ச எதோ பரவாயில்ல. climax எதிர்பார்த்தது போலவே! புதுமை ஒன்னுமே இல்ல. எப்படா படம் முடியுமுனு இருந்துச்சு. தெரியாத்தனமா வந்துடோமேனு ஒரே feeling வேற....

அதவாது.. படம் பார்க்க் வர நாங்களாம் கேனு பயபுள்ளைங்கனு இந்த படம் எடுத்தவன் நினைச்சுரு பாருங்க.. அதான் என்னால தாங்க முடியல. logic இல்லாமலேயே படம் போகுது. அப்பா விஜய்குமாருக்கும், மகன் ரவிக்கும் அந்த ஏரியா மக்களே உயிரை கொடுக்க இருக்காங்க! எதுக்குனே தெரியல...
ரகுவரன் டாக்டரா வராரு! பவானவுக்கு உள்ள வியாதியை விளக்கும்போது.. சிரிப்பு வருது... மூன்று வருஷமா நடந்தது மறந்துடுச்சு.. ஆனா ஞாபகம் திருப்பி வந்தா இப்போ 6 மாசம் நடக்குறது மறந்துடுமாம்!! ( மொத்தில் எப்படி பார்த்தாலும் வியாதி வியாதி தான்... ஐயோ தாங்கல சாமி)

சரி நடிப்பு பொறுத்த அளவில்.. பாவனா பரவாயில்ல.. அழுகும்போது நல்லா நடிக்குது புள்ள! அப்பரம்.. ஒரு டயலாக் சொல்லும் " சரி வாடா, தப்பு பண்ணலாமா?" இந்த இடத்தில் பாவனா அந்த cute and naughty expression கொடுத்து நல்லா நடிச்சு இருந்துச்சு! ஜெயம் ரவி நடிப்பு... சொல்லும்படி ஒன்னுமில்ல. சென்னை தமிழ் பேசுகிறார். ஒரு சமயம் சென்னை தமிழ், மற்ற நேரத்துல.. சதாரண தமிழ் பேசுகிறார். ஒரு சீரோட்டம் இல்லாத டயலாக் delivery! not good! ஆனா ஒரே ஒரு ஆறுதல், (பாவனா கதாபாத்திரம் பெயர் சுசி), ஜெயம் ரவி பாவனாவை "சுசி, சுசி" என்று கூப்பிடும்போது... ரொம்ப அழகா இருக்கு கேட்பதற்கு!

பாடல்கள்... அவ்வளவு பிரமாதமில்ல.. "போகாதே, போகாதே" பாடல் மட்டுமே படம் பார்த்து முடித்துவிட்டு வரும்போது முணுமுணுத்து கொண்டே இருந்தேன். யுவன் பாடிய பாடல். கேட்க ரொம்ப அருமையா இருக்கு. பாடல் வரிகள் அப்படியே ஒரு நல்ல கவிதை மாதிரி இருக்கு. இங்க ஒரு வரி வரும் 'உயிரே, உயிர் போகுதடி"! இந்த வரியை பாடும்போது யுவன் ஒரு feel கொடுத்து இருப்பாரு பாருங்க... உருகிபுட்டேன் நான்!!

மற்றபடி, வில்லன், காமெடி... சிறப்பா இல்ல. லுங்குசாமி தயாரித்த படம். ஆனாலும் இவர் படங்களில் வரும் வில்லன் பாணியே இப்படத்தில் இருக்கு... எனக்கு என்ன புரியலைனா.. படம் வருவதற்கு முன்னாடி, ஒரு செய்தித்தாளில் படித்தேன் இந்த படத்தை பற்றி " இப்படம், இன்னொரு கஜினி மாதிரி இருக்கும்! என்று. (அட பாவிகளா.. இந்த விஷயம் சூர்யா கேட்டா இவ்வளவு பீல் பண்ணுவாரு!! )

உங்களுக்கு எந்த வேல வெட்டி இல்லை என்றால் மட்டுமே இப்படத்தை போய் பாருங்க. நல்ல படம் பார்க்கனும் என்று நினைப்பவங்க, தப்பி தவறிகூட போய்டாதீங்க...இப்படி சொல்லியும் நீங்க போனிங்கனா... அப்பரம் உங்க வாயில நீங்களே acid ஊத்திக்கிறீங்கனு அர்த்தம்.

மொத்ததில் தீபாவளி- தீராத தலைவலி
(பட பேஜாராகீதுப்பா!!)

Feb 14, 2007

பிப்ரவரவி 14

மற்றவர்கள் அனுப்பிய
அன்பர் தின வாழ்த்துகளிடையே
நீ அனுப்பிய காதலர் தின வாழ்த்து
அழகாய் தெரிந்தது
எனது செல்போனில்.
--------------------------------------**-----------------------------------

அது என்ன
இன்றைக்கு மட்டும்
நீயும் நானும்
அதிகமாய் நேசிக்கப்படுகிறோம்
என்றது
ரோஜா பூக்களும்
வாழ்த்து அட்டைகளும்!!
-----------------------------------**-------------------------------------

நீ காதலிப்பவனுடன் வாழ்ந்தால்
பிப்ரவரவி 14 மட்டும்தான் காதலர் தினம்
உன்னை காதலிப்பவனுடன் வாழ்ந்தால்
என்றென்றும் காதல் தினம் தான்!
------------------------------**-----------------------------------------
காகிதத்தில் முத்துமுத்தாய்
நீ எனக்கு எழுதிய
கவிதைகளைவிட
கன்னத்தில்
முத்தமாய் இட்ட
கவிதையே இனிக்கிறது!!
-------------------------------**-----------------------------------------

Jan 29, 2007

போக்கிரி- விமர்சனம்

"இந்த பொங்கலுக்கு செம்ம collection தான்" இப்படினு ஒரு டயலாக் போக்கிரி படத்தில்... உண்மைதான் போங்க! வெளுத்து வாங்கிட்டாரு நம்ம தளபதி. இயக்குனர் பிரபுதேவாவுக்கு இப்படி ஒரு திறமையா என்று முக்கில் விரல் வைக்கும் அளவிற்கு தனது முத்திரையை பதித்துவிட்டார்.

கதைபடி பார்த்தா.. அதே ரவுடி, போலிஸ், பழிவாங்கும் கதை தான்!அரைத்த மாவு தான்! இருந்தாலும் இந்த மாவை புது வடிவில் ஒரு சூப்பர் தோசையாக மாற்றியுள்ளார் இயக்குனர்! இந்த படத்தின் மிக பெரிய plus விஜய், அசின், நெப்போலியன் and பிரகாஷ்ராஜ். நான்கு பேரும் சும்மா பூந்து விளையாடி இருக்கிறார்கள் நடிப்பு களத்தில்.

ஜோதிகாவின் இடத்தை பிடிக்க யாரால முடியும்! குறும்புத்தனமா அதே சமயத்தில் சிரியஸா நடிக்க யாரால முடியும் அப்படினு நம்ம யோசிச்சிகிட்டு இருக்கோம். அதுக்குலாம் பதில் சொல்ல வந்துட்டார் அசின். பாடல் காட்சிகளிலும் சரி, நடிப்பிலும் சரி, நம்ம அசின் இன்னோரு படி மேலே போய் இருக்கிறார்.

நெப்போலியனின் dialogue delivery மிகப்பிரமாதம்! பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் பேசும் காட்சியில் நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறார்! simply superb! அப்பரம் நம்ம பிரகாஷ் ராஜ்... வில்லனாக இருந்தாலும் பல சமயங்கில் நல்ல காமெடி செய்து நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார்.

திரைக்கதையின் விறுவிறுப்பு பாடல் காட்சியில் இருந்தது. ஒவ்வொரு பாடலும் ஒரு வகை. நடன அமைப்பு வித்தியாசம்! பாடல்கள் அனைத்தும் சூப்பர் hit! மணிஷர்மாவிற்கு ஒரு ஓ போட வேண்டும்! விஜயின் ராசியான இசையமைப்பாளராக ஆகிவிட்டார்! பாடல் காட்சியில் புதுமை! கண்டிப்பாக 2007 ஆண்டில் சிறந்த பாடல்களில் ஒன்றாக போக்கிரி பட பாடல் இடம் பிடிக்கும்.
பாடல்களில் வரும் உடைகளிலும் புதுமை!அது என்னமோ தெரியுல்ல.. அசினுக்கும் விஜயிக்கும் மாம்பழத்திற்கும் அப்படி ஒரு ஒற்றுமை! சிவகாசியில் "வடு மாங்க.." சொல்லி பாடிய இவர்கள் இப்படத்தில் "மாம்பழமா மாம்பழம்.. மல்கோவா மாம்பழம்" எனப்பாடி ஆட்டம் போட வைத்துள்ளார்கள்! கூடிய விரைவில் "மாம்பழம்" எனப் படத்தலைப்பு வைத்து நடித்தாலும் ஆச்சிரியம் இல்ல!

விஜய் படம்னா என்ன அப்படி பெரிசா இருக்கும்.. அதே மாதிரிதானே நடிக்குறாரு.. அப்படினு பலர் எண்ணலாம். ஆனால் இந்த படத்தில் அவர் சற்றே வித்தியாசமாக நடித்து இருக்கிறார் என்றே சொல்லவேண்டும். அவர் அவராகவே இருந்து நடித்தது அருமை! அதுவும் அந்த introduction scene..நம்ம ஆளுங்கலாம் எப்படிதான் இப்படி யோசிக்குறாங்கனு தெரியுல்ல.. முன்பு எல்லாம், ஹீரோ வந்தால்.. காலை மட்டும் காட்டுவார்கள், பிண்ணாடி பலத்த காற்று வீசும்.. இல்லை என்றால்.. பூ மேலேந்து விழும். இப்படி போய்கிட்டு இருந்துச்சு.. ஆனா இந்த படத்துல, விஜய் முதல் சீனிலே ரவுடிகளால் துரத்தபடுவார்... அங்க ரோட்டுல இருந்த காய்கறி கூடையை தள்ளிவிட்டுடு வாரு... தளபதி அப்படி மேலே freeze.. காய்கறிகள் அவரு மேலே விழும்... shot freeze..அப்படியே 360 degree angle ஒரு சுற்று... பக்கத்துல உட்கார்ந்து படம் பார்த்த என் சித்தி மகள் ஒரே whistle!! ம்ம்ம்... இப்ப்டி போகுதுங்க..

இந்த படத்தின் இன்னொரு பலம். வசனங்கள்!! punch dialogues too! பல இடங்களில் பளிச் வசனங்கள் திரைக்கதைக்கு மெருகு ஊட்டியுள்ளது.

1) அசின் தன்னை பிடித்திருக்கா என்று விஜயிடம் கேட்க, விஜய் பிடிக்கலை என்பார். அதுக்கு அசின் "பதில் சொல்லாதே.. உண்மைய சொல்லு!" என்பார்.

2) விஜயின் punch dialogue "நான் ஒரு தடவ முடிவு பண்ணிட்டேனா, என் பேச்சை நானே கேட்க மாட்டேன்"

MINUS:-
தமிழ் படம் என்றாலே சில குறைகள் இருக்கதான் செய்யும். அதுக்கு இந்த படம் ஒரு விதிவிலக்கு அல்ல. வடிவேலு காமெடி அவ்வளவாக எடுப்படவில்லை! அசினோடு சுட்டும் விழி சுடரே பாடலுக்கு ஆடி ரசிகர்களை சிரிக்கவைத்ததும் மட்டுமே அவர் அதிகபடியாக செய்து காமெடி! மற்றபடி தொய்வு அடைந்த வடிவேலு காமெடி!

நிறைய ரத்தம். நிறைய வெட்டு குத்து! இதுவே படித்தில் பாதி பகுதியை எடுத்து கொண்டது. இன்னும் கொஞ்சம் family orientated matters இருந்திருந்தாலும் தாய்மார்களுக்கு பிடித்திருக்கும். (ஏன்னா படத்தை பார்த்த எனது சித்தி.. "என்னய்யா ஒரே சண்டையா இருக்கு, பாட்டு மட்டும் இல்லனா, படம் ஒரே போரு அடித்திருக்கும்" என்றார்.)

கிளைமெக்சில் கொஞ்சம் வேறு விதமாகவோ அல்லது ஒரு சின்ன திருப்புத்துடன் முடித்திருக்கலாம். கிளைமெக்ஸ் கொஞ்சம் சப்புனு முடிச்சுட்டான்!


படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த நாங்கள் (அத்தை, சித்தி குடும்பத்தாருடன் நானும்), வீட்டுக்கு பேருந்தில் போவதா அல்லது taxiயில் செல்வதா என்று பேசிகொண்டு இருந்தோம்... சரி பேருந்தில் போகலாம் என்று சிலரும்.. taxiயில் போகலாம் என்று சிலரும் பேசிக் கொண்டு இருந்தார்கள். உடனே நான் " சிக்கிரம் சொல்லுங்க.. நேரம் ஆச்சு. முடிவா என்னதான் சொல்லுறீங்க" என்றேன்.

அதுக்கு என் சித்தி மகன், நான்கு வயது தான் இருக்கும்.. உடனே " நான் ஒரு தடவ முடிவு பண்ணிட்டேனா, என் பேச்சை நானே கேட்க மாட்டேன்." என்றான். ஹாஹாஹா... அங்க நிற்கிறாரு நம்ம தளபதி! இந்த படம் ஜெயித்துவிடும் என்று நினைத்துகொண்டேன்.

மொத்ததில், பொங்கல் படங்களில் தளபதி முன்னிலையில் இருக்கிறார் (பாவம் தல அஜித்)விஜய் ரசிகர்களுக்கு இந்த பொங்கல் போக்கிரி பொங்கல்தான் போங்க...

போக்கிரி- சூப்பர் பொங்கல் விருந்து!

Jan 14, 2007

சரணடைந்தேன்!

சும்மா பார்க்கிறேன் என்று
சூராவளியை ஏற்படுத்தினாய்.
என் வேலையை செய்யவிடாமல்
பார்வையினாலேயே என்னை
உன் பக்கம் இழுத்தாய்!
தொடாமலேயே என் அழகை
அளவெடுத்தாய்.
காதோரம் கவிதை பாடினாய்
கழுத்தோரம் வீணை மீட்டினாய்
எல்லாம் பிடித்தும்
பிடிக்காதவாளாய் நான் நடித்தேன்
ஒரு கணம் என்னை பார்த்து
"ஐ லவ் யூ" என்றாய்!
நடிப்பை தொடர முடியாமல்
உன்னிடம் சரணடைந்தேன் நான்!

Jan 2, 2007

காதல் காதல் காதல்!

முழுங்கி விடும் பார்வையில்
என்னை மூழ்கடித்தாய்
முத்தம் தருகிறேன் என்று
என் மூச்சை நிறத்தினாய்.
வெட்கத்தை வேண்டுமென்றே
வரவழைத்து ஏன்னடா
என்னை இப்படி கொல்கிறாய்?