Jul 14, 2014

தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்- 28 (உலக கிண்ணம் ஸ்பேஷல்)

எல்லாருமே அழகான ஆட்டக்காரர்களை ரசித்து கொண்டிருந்த வேளையில், யாராச்சும் ஆட்டம் நடுவே ஓடிகொண்டிருந்த காற்பந்து நடுவர்களை 'சைட்' அடித்தீர்களா?

ஆம், என்றால்....
மச்சி, நீ என் நண்பண்டா!!

"விளையாட்டு வீரர்கள் எத்தனையோ பேர் இருக்கும்போது, நான் ஏன் நடுவர்களை பார்த்தேன்," 
அப்படினு விண்ணை தாண்டி வருவாயா கார்த்திக் ஜெசிய பார்த்து கேட்ட கேள்விய நானே எனக்குள்ள கேட்டுகிட்டேன்.

போட்டி போடும் ரெண்டு அணிகள் பந்தை சுற்றி ஓடறதுள்ள ஒரு நியாயம் இருக்கு. ஆனா, பாவம் மவராசன்-கள்! இவங்க ஏன் ஓடனும்?

அதனால தான், இவங்க மேல தனி மரியாதையும் பின்னர் 'அதுவும்'.

3) ben williams- australia

இவர் 'இவன் சிரிச்சா போச்சு' type. சிரித்த முகம் கொண்டவங்கள எப்படி
சைட் அடிக்காம இருக்க முடியும்??


சிறப்பு அம்சம்: புன்சிரிப்பு


2) sandro ricci- brazil


 'பார்த்துகிட்ட இருக்காலம்' type இவர். கடவுள் செதுக்கி இருக்கார்!

சிறப்பு அம்சம்: கண்


1) nicola rizzoli- italy


  

எட்டாவது அதிசயத்தை பாருங்கோ!

சிறப்பு அம்சம்: முகம்


இவங்க எல்லாரையும் ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுவேன். 
இவங்களவிட இன்னொரு விஷயத்த ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுவேன்.
கோதாவரி, வீட்டுக்கு நடுவே கோட்ட போடு என்று விசு போல், கோடு கிழிக்கும் நடுவர்களின் ஸ்டைலை ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுவேன்!!

  


Jul 7, 2014

அழுதால், தப்பா மச்சி?
ஆட்டம் ஆரம்பிக்கும்போது, அழுகை
ஆட்டம் நடுவே, அழுகை.
ஆட்டம் முடிக்கும்போது, அழுகை.
தேசிய கீதம் பாடும்போது, அழுகை.

இப்படி அழுதால், எப்படி உலக கிண்ணத்தை ஜெயிக்க முடியும் என பெரிய கேள்வி அம்பு பிரேசில் நாட்டு ஆட்டக்காரர்களின் பாய்ந்து உள்ளது.

நிறத்தனும். எல்லாத்தையும் நிறுத்தனும்-னு சொல்ற மாதிரி இந்த அழுகையையும் நிறுத்த சொல்லுது இவ்வுலகம். எனக்கு என்னமோ இது பெரிய விஷயமா தெரியல.

நீங்களே யோசிச்சு பாருங்க! 22 வயசுல, மிகப் பெரிய பொறுப்பை உங்க தல மேல வச்சா எப்படி இருப்பீங்க? கொஞ்சம்  கூட்டநெரிசலில் நடந்து போனாவே, எனக்கெல்லாம் கை கால் நடுங்கும். அப்படி இருக்கும்போது, சின்ன பசங்கள உலக அரங்கில் இறக்கிவிட்டு, விளையாட சொன்னால், அது மிக பெரிய போராட்டம் தான்.

மன அழுத்தம் தாங்க முடியாமல், அறையில் ஒளிந்து கொண்டு நம்ம அழுதால் தப்பில்லை. ஆனா, எல்லாருக்கும் முன் அவங்க அழுதால் தப்பா, மச்சி?

அழுகை ஒன்னும் கோழைத்தனம் இல்லை.
அழுகை ஒரு வகையான வீரம் தான்!

 நேமார் மீது உள்ள கண்மூடித்தனமான காதலினால், இத சொல்லல. ஜெயிக்க வேண்டும் என பசியால் அழுபவனுக்கு, அந்த அழுகை வீரம் தான்! பிறக்கும்போது அழுகிறோம், இறக்கும்போது அழுகிறோம், இதுக்கு நடுவே கொஞ்சம் அழுகிறோம்- இத தப்பு-னு சொல்ற உலகத்த புரிஞ்சிக்க முடியல.

அழுகை இயற்கையான ஒரு விஷயம். கொஞ்சம் அழுதுட்டு, ஒரு குட்டி தூக்கம் போட்டுட்டு எழுந்து பாருங்க. எல்லாமே சரியா போன மாதிரி இருக்கும். அழுகைக்கு அப்படி ஒரு சக்தி உண்டு. அதனால, இந்த பசங்கள அழ வேண்டாம்-னு சொல்றது, முட்டாள்தனம்!

22 வயசுல உலகமே திரும்பி பார்க்குற அளவுக்கு அவங்க இருக்காங்க! 22 வயசுல, நம்ம எத கிழிச்சோம்-னு பார்த்தா, வூட்டுல உள்ள calendar தேதிய கூட கிழிச்சு இருக்க மாட்டோம்!

சமீபத்தில், பயிற்சியின் போது, பிரேசில் நாட்டை சேர்ந்த ஊனமுற்ற சிறுவன் ஒருவன் எழுதிய கடிதம், ஆட்டக்காரர்கள் அனைவரையும் நெகிழ வைத்தது!

மனித நேயம் இருக்கிறது என்பதற்கு ஒரே சாட்சி- கண்ணீர் தான்.

இந்த அழுகை, தப்பு என்றால்......

இருந்துட்டு போகட்டும்!

Jul 4, 2014

நீயும் நானும் வேலு நாய்க்கர்!

நாயகன் படத்துல ஒரு சூப்பர் சீன் வரும். ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி கமல்ஹாசனை தேடி வந்து சொந்த கதை சோக கதையல்லாம் சொல்வாங்க! அத கேட்டுட்டு கமல் சொல்வார், "சரி இதலாம் ஏன் என் கிட்ட சொல்றீங்க?"

அதுக்கு, பக்கத்துல நிக்கும் ஜனகராஜ், கமல் கையைப் பிடித்து, "நாய்க்கரே, இனி அப்படி தான்" என்பார்.


கிட்டதட்ட நம்ம அனைவரும் ஒரு வகையில் வேலு நாய்க்கர் தான்! என்னிக்கு, இந்த SMARTPHONE நம்மகிட்ட கதை கதையா பேச ஆரம்பிச்சுதோ அன்று முதல் ஒரு மாதிரி ரவுடியா தான் வாழ்ந்துகிட்டு இருக்கிறோம்.

எதையோ தேடி, எதையோ தொலைத்த கதையாக வாழ்க்கை போகுது.

whatsapp messageகளுக்கு அடிமை
இதுல நமக்கு என்ன பெருமை?

இரும்பினால், ஒரு whatsapp group.தும்பினால் ஒரு whatsapp group,

என எதுக்கு எடுத்தாலும், செய்திகளை 24 மணி நேரமும் சொல்லி கொண்டே இருப்பதால், பைத்தியம் போல் இருக்கிறோம்.

இந்த smartphone வைத்து இருப்பது fast food உணவை தினமும் திண்பதுபோல். சுவையாக தெரிவது பின்னர், வாந்தி எடுக்க காரணமாக அமையும்.

மண்டை வலி, குண்டை வலி, தொண்டை வலி வருவது தான் மிச்சம். whatsapp இல்லமால் தொடர்ந்தாற்போல் நாலு நாளைக்கு நிம்மதியா இருக்க முடியல! என்னடா வாழ்க்கை இது!


'உனக்கு என்ன திடீர் அக்கறை?' என்று நீங்க கேட்பது எனக்கு கேட்குது.

'நானே பாதிக்கபட்டேன். நேரடியாக பாதிக்கப்பட்டேன்.'

வேலு நாய்க்கருக்கு கடைசில ஏற்பட்ட நிலைமை நமக்கும் ஏற்பட்டுவிடுமோ-னு ஒரு அச்சம். கையில் நாம் எடுத்தது, நம்மை அழிக்கும் சக்தியாகி விடுமோ-னு பயமா இருக்கு.