Dec 8, 2010

மச்சி, இதுக்கு பெயர் என்ன?-1

காலை மணி 9.

"another boring day. the same office. the same old-looking fellows. I'm bored!" அலுத்து கொண்டாள் சந்தியா.

"same here..." பெருமூச்சுடன் ரம்யா, தனது ஆபிஸ் கேபினில் உள்ள கணினியில் இமெயில் பார்த்தபடியே சந்தியாவுடன் கூறினாள்.

சந்தியா ரம்யாவிடம், " ஏய் where's anjali?"

***
அன்று காலை மணி 5. அஞ்சலி எழுந்தாள். அனைவரும் எழுவதற்கு முன் எழுவது அவள் பழக்கம். அவள் எழுந்துவுடன் செய்யும் முதல் வேலை முருகன் பக்தி பாடல்களை போடுவது. பாடல்களை கேட்டு கொண்டே வீட்டு வேலைகளை செய்து முடித்தாள். வீட்டில் உள்ளவர்களுக்கு காலை உணவு சமைத்து மேசையில் வைத்தாள். தங்கையின் கைசெலவுக்காக சிறிது தொகையை அவளது கை பையில் திணித்துவிட்டு தங்கையை எழுப்பினாள்.

அஞ்சலிக்கு சேலை அணிய தான் பிடிக்கும். பிங் நிற சேலையை அணிந்து கொண்டு ஹாலுக்கு வருகையில் அப்பா எழுந்து வந்தார்.

அப்பா, "என்னமா கிளம்பிட்டீயா?"

அஞ்சலி, " ஆமா பா.... ஏன் பா இவ்வளவு சீக்கிரம் எழுந்திருச்சுட்டீங்க..? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாமே பா?"

அப்பா சிரித்துகொண்டே, "இருக்கட்டும் மா..." என்றவர் செய்தித்தாளை எடுத்தார்.

"நீ சாப்ட்டீயா?" கேட்டார் அப்பா அஞ்சலியிடம்.

பூஜை அறையிலிருந்து அஞ்சலி, "பூஜைய முடிச்சுட்டு வந்திடுறேன் பா!"

அஞ்சலி காலையில் 20 நிமிடங்களாவது பூஜை செய்வாள். சிறு வயதிலிருந்தே அவள் அம்மா கற்றுகொடுத்த பாடம் இது. அஞ்சலியின் அம்மா சமையலறையிலிருந்து சூடான இட்லியை எடுத்து வந்து மேசையில் வைத்தார்.

பூஜை முடித்த அஞ்சலி, " ஏன் மா... நான் எடுத்துட்டு வருவேன்ல...நீங்க ஏன் கஷ்டபடுறீங்க?"

அம்மா புன்னகையித்தபடி, " சரி நீ முதல சாப்பிடு!" என்று அஞ்சலியிடம் கூற, அதற்கு அஞ்சலி,

"இல்ல மா...போன வெள்ளிக்கிழமை கோயிலுக்கு போய் இருந்தப்ப அய்யர் சொன்னார்...அடுத்த 9 வாரத்துக்கு வெள்ளிக்கிழம வெள்ளிக்கிழம விரதம் இருந்தா நல்லதுனு.... நான் ராத்திரி வந்து சாப்பிட்டுக்கிறேன்...நீங்க சாப்பிடுங்க?" என்றபடி லெப்டாப்பை எடுத்து கொண்டு ஆபிஸுக்கு செல்லும்போது மணி 8.

அஞ்சலி வீட்டிலிருந்து ஆபிஸுக்கு போக அரை மணி நேரமாகும். 8.30 மணிக்கே ஆபிஸில் இருந்திருக்க வேண்டும். 11 மணி ஆகியும் அஞ்சலி அங்கு இல்லை.

என்ன நடந்திருக்கும்?
பஸ் விபத்தா?
சாலை மறியலா?
அஞ்சலிக்கு உடல் நலம் சரியில்லையா? (காலையிலிருந்து ஒன்னும் சாப்பிடவில்லையே, அஞ்சலி!)

ஏன் அஞ்சலி ஆபிஸில் இல்லை?

ஏன்னா நம்ம அஞ்சலி இப்படிப்பட்ட அஞ்சலியே இல்லை!! இந்த மாதிரி பொண்ணுங்கள venusலயும் marsலயும் பார்க்கலாம் தவிர earthல பாக்க முடியாதே!

உங்களது கடந்த இரண்டு நிமிடங்களை கொஞ்சம் rewind பண்ணுங்க....
***
சந்தியா ரம்யாவிடம், " ஏய் where's anjali?"

அன்று காலை மணி 8 ஆகியும் அஞ்சலி இன்னும் படுக்கையைவிட்டு எழுந்திருக்கவில்லை. நேற்று தோழியின் 'break up' partyக்கு சென்றுவிட்டு இரவு....அதாவது விடியற்காலை 3 மணிக்கு தான் வீட்டிற்கே வந்து சேர்ந்தாள்.

அஞ்சலியின் அப்பா, " அஞ்சலி....ப்ளீஸ் எழுந்திரி. ஆபிஸுக்கு நேரமாச்சு உனக்கு. தினமும் காலையில உன்னைய எழுப்புறதே என் வேலையா போச்சு!! உங்க அம்மா... நீ இன்னும் எழுந்திரிக்கலையான்னு சத்தம் போட்டுகிட்டு இருக்கா...."

போர்வையை விலக்கியபடி சோம்பல் முறித்த அஞ்சலி, "good morning dad!" அப்பாவை கட்டிபிடித்தாள்.

"சரி சரி... சீக்கிரம் போய் கிளம்பு. உங்க அம்மா அங்க கத்திகிட்டு இருக்கா..." அப்பா அஞ்சலியை அறையை விட்டு அனுப்பினார்.

செய்தித்தாளை புரட்டினார் அப்பா. அவரை பார்த்து சிரித்து கொண்டே அஞ்சலி, "dad, உங்க வயசு பசங்க எல்லாம் இந்த டைம் பீச்ல walking போறாங்க. நீங்க ஏன் சும்மா வீட்டுல இருக்கீங்க?" என்றாள் 'பசங்க' என்ற வார்த்தையை கிண்டலாய் சொல்லிகொண்டே.

சமையலறையிலிருந்து வெளியே வந்த அம்மா, "shut up anjali. is this how you talk to your dad?"

அஞ்சலி, "அப்பாகிட்ட தான் மா இப்படிலாம் பேச முடியும். பக்கத்துவீட்டுக்காரனோட இப்படி பேசுனா.... அவர் பொண்டாட்டி சந்தேகப்பட மாட்டாங்களா?" என்று நக்கல் அடித்தபடி குளிக்க சென்றாள்.

அஞ்சலிக்கு ஜீன்ஸ் ப்ளாக் ஷ்ர்ட்டுதான் பிடிக்கும். அதை அணிந்துவந்தாள். மேசையில் இருந்த bread toastயை ஒரு கடி கடித்தாள்.

அம்மா, "anjali, இன்னிக்கு வெள்ளிக்கிழம. why can't you wear something traditional. punjabi suit or that pink saree that i bought last week?"

அஞ்சலியிடம் யாரோ அவளின் கிட்னியை தானமாக கேட்டதுபோல் அப்படி ஒரு ஷாக் முகத்தில்.

"எப்படி மா...உங்களால இப்படி சொல்ல முடியது? அதுக்கு நீங்க என்னைய நாலு கெட்ட வார்த்தையால திட்டி இருக்கலாம். me, wearing a saree?? no way, mom! என் கல்யாணத்துக்கே நான் ஜீன்ஸ்ல தான் இருப்பேன்!" அஞ்சலி இன்னொரு கடி கடித்தாள் bread toastஐ.

ஷு மாட்டிக்கொண்டிருந்த அஞ்சலியின் தங்கை, " ஓ உனக்கு கல்யாண ஆசை வேற இருக்கா? அம்மா... எப்படியாச்சு இவள எங்கயாவது தள்ளிவிட்டுடுங்க!"

தங்கையின் கைசெலவுக்காக மேசையில் வைத்திருந்த பணத்தை எடுத்தாள் அஞ்சலி.

தங்கை, "அம்மா, இங்க பாருங்கம்மா...இவள...."

அஞ்சலி, "அம்மா பாருங்க என்னைய....ரொம்ப அழகா இருக்கேன்ல!"

தங்கை, "oh shut up anjali! that was soooooooo lame!"

அஞ்சலி, "you loser!!"

அஞ்சலி லெப்டாப்பை எடுக்க அறைக்கு சென்றாள். லெப்டாப்பை எடுத்தபடி, "bye sweethearrrrrrrrrt!" என்று சுவரில் ஒட்டப்பட்ட john abraham படத்திற்கு முத்தம் கொடுத்தாள்.

மணி 10.15. ஆபிஸில் 9 மணிக்கு இருக்க வேண்டும். இப்படிப்பட்ட 'உழைப்பாளிகள்' இருந்தால் நாடு கண்டிப்பா முன்னேறும்.....reverseல!

அஞ்சலி பஸில் ஏறியதும் ஒன்றை கண்டாள்....ஒருவனை கண்டாள்....எட்டாவது அதிசயம் பஸ்ல இருக்கு, மச்சி!

அஞ்சலியின் மனம், "oh my god! he's dammmmmmmn cute!"

பாகம் 2

Dec 1, 2010

எவன் டி உன்ன பெத்தான், கையில் கிடச்சா செத்தான்!

தலைப்பிலுள்ள வார்த்தைகளுக்கு சொந்தக்காரர், நாம் தேடினாலும் கிடைக்காத ஒரு முத்து, உலக எழுதி வாங்க முடியாத சொத்து, சிவப்பு வைரமுத்து, தாடி வைக்காத வாலி, இலக்கணம் பிடிக்காத பா.விஜய், இலக்கியம் அறியாத நா.முத்துக்குமார் (உஷ்ஷ்ஷ்....இதுக்கு மேல என்னால முடியல...)

தலைப்பிலுள்ள வார்த்தைகளுக்கு சொந்தக்கார் உங்கள் சிம்பு! அவர் நடித்து (அப்படின்னு நினைக்குறேன்...) வெளிவரும் படம் 'வானம்'. அந்த படத்தில் இடம்பெற்ற பாடலில் உள்ள வரிதான் இது 'எவன் டி உன்ன பெத்தான், பெத்தான், பெத்தான், கையில கிடச்சா செத்தான் செத்தான் செத்தான்!'

பாடலை கேட்டவுடன், எனக்கு 'குபீர்'னு சிரிப்பு வந்துவிட்டது. பேஸ்புக்கில் இந்த பாடலின் யூடியுப் லிங்கை போட்டேன், அதற்கு நண்பர்கள் கொடுத்த கருத்துகள் அதைவிட காமெடி. சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணா போயிட்டு.

சிம்பு கதைக்கு வருவோம்.....ஏன் பா ராசா, உன்னையெல்லாம் இப்படி எழுத சொல்லி யாரு கத்துகொடுக்கறது?? அப்பாவா?

என்னமோ போ...சிரிப்பு போலீஸ் மாதிரி...சிரிப்பு கவிஞர் மாதிரி தான் நீ எனக்கு தெரியுற! என்ன இருந்தாலும், பாடலின் வெற்றி உறுதி! நானே 100 முறை கேட்டுவிட்டேன்! (சிரிச்சு ரொம்ப நாளாச்சு பா!!!)