'அடடா அட மழை டா அடமழை டா' பாடல் alarmtoneஆக 15வது முறையாக ஒலித்தது. ஷாலினியின் அம்மா ஹாலில் இருந்து கத்தினார், " ஷாலு, காலையிலேந்து எத்தன தடவ..... நீ இப்போ எந்திரிக்க போறீயா இல்லையா?"
ஷாலினி சோம்பல்முறிந்து எழுந்தாள். பாதி தூக்கத்தில் கண்களை முழுவதாய் திறக்காமல் கடிகாரத்தை பார்த்தாள். காலை மணி 6.50. திடுக்கிட்டு போனாள்.
மணி 7.05க்கு எல்லாம் இரயில் இருக்க வேண்டுமே!
அவன் சரியாய் அந்த நேரத்திற்கு தான் வருவான். அறை கதவை தள்ளிவிட்டு வேகமாய் குளியலறைக்கு ஓடினாள் ஷாலினி.
"slow..slow..ஏன் இந்த அவசரம்?" ஷாலினியின் அம்மா கேட்டாள், செய்தித்தாளின் முக்கியமான பக்கத்தை (சினிமா செய்திகள்) பார்த்து கொண்டே.
"I have important work to do at office. I need to be there early." என்று சொல்லி கொண்டே heater switchயை on செய்தாள் ஷாலினி.
"வேலையா? ஹாஹா...நீ என்னிக்கு அது எல்லாம் பாத்து இருக்க?" கிண்டல் அடித்தார் அம்மா.
"மா..please... don't tease me."
காலை உணவுகூட சாப்பிடாமல் சிட்டாய் பறந்தாள் இரயில் நிலையத்திற்கு.
மணி 7.04. அந்த இரயில் compartmentல் அவனைத் தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள். சரியாக காலை 7.05க்கு அவன் எப்போதுமே அதே compartmentல் ஏறுவான் கையில் sports bag வைத்து கொண்டு.
ஆமாங்க, இது ஒரு காதல் கதை. ஆனா ஹீரோ பெயர் கார்த்திக் இல்லை.
******************************
(மூன்று மாதங்களுக்கு முன்பு)
தனது தோழிக்கு iphone whatsapp மூலம் செய்தி அனுப்பினாள்.
தோழி: நிஜமா வா? what's his name?
ஷாலினி: எனக்கு எப்படி தெரியும்? இன்னிக்கு காலையில trainல பாத்தேன். ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப cuteஆ இருந்தான். பெயர் எல்லாம் என்ன மூஞ்சில எழுதியிருப்பானா என்ன?
தோழி: சரி, பையன் எப்படி இருப்பான்?
ஷாலினி: சொல்ல வார்த்த இல்ல...
தோழி: அடங்குடி! தூ...தூ... சொல்லு!
ஷாலினி: curly hair, very tall, smooth complexion, shahid kapoor nose, sharp eyes, great structure and அவன் smile பண்ணுவான் பாரு.... பாத்துகிட்டே இருக்கலாம்னு தோணும்.
தோழி: சரி... இப்ப என்ன பண்ண போற?
ஷாலினி: love தான்.
தோழி: எப்படி?
ஷாலினி: அதலாம் தெரியாது... ஆனா பிடிச்சுருக்கு. இவன் தான் எனக்கு அப்படின்னு தோணுது. அவன் பாத்த முதல் என்னென்னமோ மாற்றம். மழை பிடிச்சுருக்கு. இளையராஜா பாட்டு கேட்க ஆரம்பிச்சுட்டேன். அடிக்கடி எனக்குள்ள நானே சிரிச்சுக்குறேன். உலகமே என்னைய பாக்குற மாதிரி ஒரு feeling. bossகூட நல்லவனா தெரியுறான். அப்போ இது love தானே?
*************************************
முகம் தெரியாமல் ஒரு காதல் கோட்டை மாதிரி, பெயர் தெரியாமல் ஒரு காதல். தினமும், அவன் அதே compartmentல் வருவான். அதே இருக்கையில் அமர்வான். ஷாலினி சரியாக அதே நேரத்தில் செல்வாள். அவன் எதிர் இருக்கையில் அமர்வாள். தினமும் பார்த்து கொள்வதால், அவ்வபோது அவனிடமிருந்து ஒரு சின்ன புன்னகை. அவன் புன்னகையித்துவிட்டான் என்றால், அன்று இரவு தோழிகளுக்கு எல்லாம் party! இப்படி சென்று கொண்டிருந்த ஒரு தலை ராகத்தில் tune change mamu!
அவனுடைய பெயரை கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று இன்று முடிவு எடுத்தாள் ஷாலினி. 7.05க்குள் இரயில் நுழைந்தாள். வழக்கம்போல் அவள் அமரும் இருக்கையில் இருந்தாள். ஆனால், அவன் அங்கு வரவில்லை. அவள் மனதில் ஆயிரம் யோசனைகள்.
இந்த பொண்ணுங்களே இப்படி தான்? ரொம்ப யோசிப்பாங்க. சில நேரங்களில் ரொம்ப ரொம்ப ரொம்ப யோசிப்பாங்க.
ஏன் அவன் வரவில்லை? டைம் ஆச்சு? இரயில் கிளம்பிட போகுது? ஐயோ... என்ன ஆச்சு அவனுக்கு? fever? flu? வேற வேலை இடத்துக்கு போயிட்டானா? ச்சே... நான் அப்பவே அவன்கிட்ட.....
என்று யோசித்தவளின் யோசனைகளுக்கு முற்று புள்ளி வைத்தாற்போல் அவன் இரயிலுக்கு நுழைந்தான். போன உயிர் திருப்பி வந்ததுபோல் இருந்தது. ஆனால்....
அவன் கையில் 4 வயது குழந்தை!
ஷாலினியின் மனம் சுக்கு நூறாகியது! திருப்பி வந்த உயிர் மீண்டும் மாயமாய் மறைந்து சென்றது. நாளை வெளிவர வேண்டிய ரஜினி படம் இனி வரவே வராது என்று கேட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது ஷாலினிக்கு. குழந்தையின் பிச்சு விரல்கள் அவனது நெஞ்சில் அடித்து விளையாடியபோது, விதி விளையாடுவதுபோல் உணர்ந்தாள் ஷாலினி.
அழுகை அழுகையாய் வந்தது ஷாலினிக்கு. ஏதோ ஒரு மயானத்தில் தனியாக நிற்பதுபோல் உணர்ந்தாள். அதிகமாய் யோசிக்கும் ஷாலினிக்கு என்ன யோசிப்பது என கூட தெரியாமல் திண்டாடினாள். தொண்டையில் துக்கம் அடைக்க, கையில் இருந்த iphone whatsapp அலறியது.
தோழி: மச்சி, how? success? what's his name?
ஷாலினி: he's married. அவனுக்கு 4 வயசுல ஒரு குழந்தை இருக்கு.
தோழி: omg!! என்ன கொடும இது!
*************************************
ஷாலினி இறங்கும் அடுத்த இரயில் நிலையத்தில் இறங்கியவன், குழந்தையை அவன் அம்மாவிடம் கொடுத்தான்.
அவனது அம்மா, "சித்தப்பாவுக்கு, bye சொல்லு!"
*முற்றும்*