முன்னாடி எழுதிய பதிவு எப்படியோ காணாமல் போச்சு! இது ஏதோ எதிர்கட்சியின் சதி-னு நினைக்குறேன். ::((((((((((((((((((((
---------------------------------------------------------------------------------------------------------
'கலகலப்பு' படம் பார்த்தேன். சந்தானத்தின் காட்டில் இன்னும் பலத்த மழை தான். முதல் பாதி, கொஞ்சம் மொக்கை என்றாலும், இரண்டாம் பாதி தான் உண்மையான கலகலப்பு!! என்ன இருந்தாலும், 'உள்ளத்தை அள்ளி தா' படம் தான், எங்கள் அண்ணன் 'புரட்சி பொங்கல்' சுந்தர் சி எடுத்த படங்களிலே சூப்பர் படம். அதுக்கு அப்பரம் எல்லாம்....:(((
அது என்ன புரட்சி பொங்கல்-னு நீங்க கேட்குறது புரியுது?? அவர் நடிக்க ஆரம்பித்தவுடன் நாங்க வச்ச பட்டம் 'புரட்சி பொங்கல்'. அதுவும் நமீதாகூட ஆடுவார்ங்க பாருங்க...ச்சே...பொங்கிடும்!!:)))))))))))))
----------------------------------------------------------------------------------------------------------
'டாடி மம்மி வீட்டில் இல்ல' கதையின் 8வது பகுதியை எப்ப போடுவீங்க என்று பல அன்பான கொலை மிரட்டல் எல்லாம் வருது!! சின்ன புள்ளைய இப்படி மிரட்டாதீங்க!!:))) எழுத நேரம் இல்லையே என்று நினைக்கும்போது எரிச்சலாக இருந்தாலும், இன்னும் ஒருசில பேர் அதை தொடர்ந்து படித்து வருகிறார்கள் என்று நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவர்கள் அனைவருக்கும், நன்றி!!!
கூடிய விரைவில் வரும் மற்ற பகுதிகள்!!!
-------------------------------------------------------------------------------------------------------
வர வர இந்த 'பாஸ்' தொல்லை தாங்கல!!! மோசமா போயிகிட்டு இருக்காரு!! என்ன பண்ணாலும் திருப்தி இல்ல அவருக்கு. (ஒரு வேளை முன் ஜென்மத்துல மாமியாரா இருந்திருப்பாரோ!!)
கடவுள்கிட்ட நான் வேண்டிகொள்வது ஒன்னே ஒன்னு தான்.
இந்த மாசம் மட்டும் 7 மீட்டிங் இருக்காம்!!:((((
டியர் சாமி,
அம்மன் படம் climaxல ரம்யா கிருஷ்ணன் எப்படி வந்து ஆடி தனது பக்தையை காப்பாத்துவாங்களோ, அதே மாதிரி மீட்டிங் நேரத்துல நீ வந்து ஆடனும். அப்படி ஆடல.....நான் ஆடிடுவேன்!! முடியல பாருங்க!!!
அன்று 3.30 மணிக்கு முடியவேண்டிய மீட்டிங், 545 அன்று தான் முடிந்தது!!!
சாமி, எல்லாருக்கும் நல்ல புத்தியை கொடுங்க, அதுக்கு முன்னால சிலருக்கு புத்தியை கொடுங்க.
--------------------------------------------------------------------------------------------------------
மல்லிகா ஆரோராவுக்கும் மல்லிகா ஷர்வாட்க்கும் என்ன வித்தியாசம்? ஹிந்தி படம் 'dabbang'ல் ஆடிய பொண்ணு யாரு??
ஒரு கோடி கேள்விங்க, சரியா யோசிச்சு சொல்லுங்க? :))))))))
------------------------------------------------------------------------------------------------------