Dec 21, 2012

தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்-22


இவர தான் இப்போது....
ஓ காட்!!!

இவர் இல்ல






இவர சொன்னோன். காடு மாதிரி தாடி இல்லாத விக்ரம் பிரபுவ சொன்னேன்.


அவர் ஒரு மாதிரியாய் sideல சிரிக்கும்போது செம்ம அழகாக இருக்கும். படத்தில் அப்படிப்பட்ட காட்சி இல்ல. இருந்தாலும், இந்த ஒன்னு ரெண்டு interviewல சிரிச்சு இருக்காரு!

சிறப்பு அம்சம்: புன்னகை

அடுத்தது....

sun music sam. ஐயோ ராமா! அப்படினு நீங்க சத்தம் போடுவது எனக்கு கேட்குது. இருந்தாலும் சொல்லுவேன். ஒரு மணி நேரம் நிகழ்ச்சியில 2 மணி நேரம் விளம்பரம் போட்டாலும், இவர் எப்ப வருவார்னு பார்ப்பதுண்டு.

சிறப்பு அம்சம்- சிரிப்பு மற்றும் கண்கள்


முந்தைய series

Dec 18, 2012

நடுவுல கொஞ்சம், கும்கி, கடல், எதிர்நீச்சல காணும்

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் படத்த பார்த்தேன். எனக்கு சந்தானம் வசனம் தான் ஞாபகத்துக்கு வந்தது- "இது ஒன்னும் அவ்வளவு பெரிய காமெடி இல்ல"""

விழுந்து விழுந்து சிரிக்கும் காமெடி படம் அல்ல. (உள்ளத்தை அள்ளி தா, அவ்வை ஷ்ண்முகி, மகளிர் மட்டும் படங்களை விடவா இது பெரிய காமெடி படம்) அதுக்குனு படம் நல்லா இல்லேனு சொல்லிட கூடாது. ரெண்டாம் பாதியில் வரும் காட்சிகள் கண்டிப்பா சிரிப்பா இருந்ததுச்சு. முதல் பாதி சற்று மெதுவாய் சென்றது. ஏதோ, edit செய்ய படாத குறும்படம் போல் இருந்துச்சு.

எங்கள் அண்ணி ஆண்ட்ரீயா பாடிய பாடலை படத்தில் காட்டாமல் போனது மிக பெரிய வருத்தம் எங்களுக்கு!
- அகில உலக ஆண்ட்ரீயா ரசிகர் மன்றம்


படத்துக்கு ஓவர் build-up தான் தேவையில்லை என்று நினைக்க தோன்றியது (பாவம், அவங்களும் என்ன பண்ணுவாங்க.....marketing strategy) எனக்கு என்னமோ இந்த படத்துக்கு முன்னோடமாய் வந்த இந்த வீடியோ தான் செம்ம காமெடியாய் இருந்துச்சு

*************************************************************

கும்கி படம் கண்களுக்கு குளிர்ச்சி! அந்த மலை பகுதி, அருவி எல்லாம் செம்ம சூப்பர்! அழகா காட்டியிருந்தாங்க! சலிப்பு தட்டாமல் கதையை நகர்த்தியது சிறப்பு. தம்பி ராமய்யா தான் இந்த படத்துக்கு இரண்டாவது ஹீரோனு நினைக்குறேன். அவர் சொல்லும் ஒவ்வொரு வசனமும் முக பாவனையும் காமெடி கலாட்டா தான்!

அப்போ முதல் ஹீரோ யாரு? இமான் தான்!!!!!!!!!! பாடல்கள் எல்லாம் கேட்ட மாதிரி இருந்தாலும். இந்த படத்தில் வரும் locationகளுக்கு ஏற்றாற்போல் பாடல்கள்!

பிரபு பையன் விக்ரம் பிரபு நல்லாவே நடித்து இருந்தார் (அவரை பற்றி மேலும் தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள் பகுதியில் சொல்கிறேன்)
அந்த புள்ள லட்சுமி மேனன் பரவாயில்லாம நடிச்சு இருக்கு.

************************************************************

கடல் மற்றும் எதிர்நீச்சல் பாடல்களை கேட்டேன். ம்ம்ம்...ம்ம்ம்...

கடல் பாடல்களைவிட
எதிர் நீச்சல் பாடல்களை
விரும்புகிறது
இந்த பாழா போன மனசு

#ஆண்ட்ரீயா தொட்ட எதுவும் வெற்றியை தொடாமல் போனதில்ல#

எதிர்நீச்சல் பாடல் கொஞ்சம் புரியும் வண்ணம் இருப்பதால் என்னவோ. புதுசா எதுவும் இல்ல. ஆனா கேட்க நல்லாயிருக்கு. அதிகாமன ஆங்கிலம் கெட்ட வார்த்தைகளை (censor) செய்து இருக்கிறார்கள். இந்த மாதிரி கெட்ட வார்த்தை உபயோகம் தேவையில்ல. அது ஒன்னு தான் மைனஸ்.

கடல் பாடல்கள் ஒரு மாதிரியாய்...ஏதோ மாதிரி இருக்கு. ஏஆர் தீவிர ரசிகை என்றாலும் மனசு 'கடலை' தாண்டி 'எதிர்நீச்சல்' போட வைக்குது!அந்த மகுடி பாடல் பரவாயில்ல. இந்த கருத்தை சொன்னதற்கு, பொங்கி எழுந்த நண்பர்கள்

பாட்டு கேட்க கேட்க தான் புடிக்கும் என்றார்கள்.

சரி பார்ப்போம்....

பாடல்கூட பரவாயில்லனு தோணுது. ஆனா, கடல் teaser என்ற பெயரில் இதை வெளியிட்டதை தான் என்னால் மன்னிக்க முடியாது.  

மக்களை ''tease' பண்ணுறீங்களா? :(((((((((

Dec 17, 2012

கௌதம் மேனன் படம் செய்வது எப்படி?- சமையல் குறிப்பு

கௌதம் மேனன் படம் செய்வது எப்படி?- உங்களுக்கு தெரிய வேண்டிய முதல் விஷயம்- ஆங்கிலம்

1) locations சேர்க்கவும்- பொங்கலுக்கு வெள்ளை அடித்தாற்போல் ஒரு வீடு, மொட்டை மாடி, கேரளா, கரையோரம், bench, KFC, coffee cafe.

2) dialogues போடவும்- நான் அப்படியே காலி, நீ அவ்வளவு அழகு, I hate you, you don't deserve this, நான் இங்க ஏன் வந்தேன் தெரியுமா?, உனக்கு புரியல.

3) characters கிள்ளி போடுங்க- 37 வயதான பள்ளி மாணவர்கள், 47 வயதான காலேஜ் மாணவர்கள், அழகான ஹீரோயின், முகத்தை முழுதாய் shave பண்ணி மைதா மாவு கணக்கில் முகம் கொண்ட ஹீரோ,ஹீரோ கையில் பை, நடுத்தர குடும்பம் (7 காட்சிகளுக்கு அப்பரம் வசதியான பொன்நிறமான குடும்பமாக மாறனும்)

4) scenes கிளறவும்- பார்த்தவுடன் காதல், சண்டை, பிரிவு, மறுபடியும் காதல், சண்டை பிரிவு, காதல் என்ற பெயரில் ஹீரோயின் காலை தொடனும், மூக்கை தொடனும், பைக் அல்லது கார் ஓட்டனும், ஹீரோயினை கேரளா அல்லது வெளிநாடுகளில் தேடனும்.

இதை அனைத்தையும் செய்தால், உங்களுக்கு சுட சுட நீங்களே சூனியம் வைத்து கொள்ளலாம்!

***************************************************

உஷ்ஷ்ஷ்ஷ்!!! யப்பா! முடியல படத்த பார்த்தபிறகு, பக்க விளைவுகள் ஏராளம். நான் கௌதம் மேனனின் பெரிய ரசிகை. அதனால தான் அவர நம்பி, இந்த படத்துக்கு போனேன். ஆனா....ஐயோ சாமி!!!

VTV படத்தை அணு அணுவாய் ரசித்து எடுத்தவரா இப்படி ஒரு அணுகுண்டை கொடுத்து இருக்கிறாரு!! என்னமோ போங்க, உலகம் அழிய போகுதுனு சொன்னது உண்மையா போயிட போகுது.

 காதல் கதை என்ற பெயரில் எதை காட்டினாலும், ரசிப்பாங்கனு நினைச்சு over confidenceல உலறல் தான் இந்த படம்னு நினைக்குறேன்.

சந்தானம் சில காட்சிகளில் இல்லாத குறையை பார்வையாளர்கள் தீர்த்து வைத்தது தான் செம்ம ப்ளஸ் இந்த படத்துக்கு!

***************************************************
 நாங்கள் அடித்த சில கமெண்ட்கள்

1) ஜீவா அண்ணன்: எனக்கு வேலை கிடைச்சுடுச்சு. நல்ல சம்பளம், பெரிய வேலை, சனி ஞாயிறுகூட வேலை பாக்க தேவையில்ல.

நான்: இப்படி தான் எங்களுக்கும் சொன்னாங்க!

2) ஹீரோயின் benchல் உட்கார்ந்தபடி: நான் உன்ன பாக்க வந்தேன். ராதிகாவ பாக்க வந்தேன்.....something something blah blah...பாக்க வந்தேன்.....blah blah....பாக்க வந்தேன்.

நான்: ஐயோ நாங்ககூட தான் நல்ல படத்த தான் பாக்க வந்தோம்!

****************************************************

samantha அழகு. ஆனா, அவங்க குரல் 30 வினாடிக்கு மேல் கேட்க முடியல. ஏதோ hammam சோப் விளம்பர குரல் மாதிரி இருக்கு.

****************************************************

இசை: ஐயோ என்ன பெத்த ராசா, நீங்க மிகப் பெரிய மேதை தான். ஒத்துக்கிறேன். ஆனா, retirement வாங்கிக்கலாமே!! சில பாடல்கள் எல்லாம் தொடர்ந்தாற்போல் 47 நிமிஷத்துக்கு வரது பாருங்க...ஐயோ ரீலு அந்துபோச்சு டா சாமி!

யுவன் குரலில், பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா-னு பாட்டு வரும்போது...

யம்மா!!!!!!!!!! மண்டைக்குள்ள, ஏதோ 10,000 காட்டு யானை ஒரே நேரத்தில் இரும்பின மாதிரி ஒரு உணர்வு அதிர்வு!

*****************************************************

கௌதம் - கிழி கிழி கிழி!!!!!!!!!!!!!!

*****************************************************

இந்த படத்தை பார்க்காதவர்கள், கண்டிப்பா படத்தை பாருங்க! அப்படி பார்த்தால் தான், புரியும் உங்க பாஸ் எவ்வளவு தங்கமான மனுஷன்-னு. நம்ம வாழ்க்கைல வர துன்பம் எல்லாம் ஒன்னுமே இல்லேனு தோணும்.


நீதானே என் பொன்வசந்தம்- (கவுண்டமணி குரலில்) ஆமா ஆமா...நாங்க தான்! நாங்க தான்!

Dec 10, 2012

ஜஸ்ட் சும்மா (10/12/12)

'talaash' படம் பார்த்தேன். நேத்து இரவு படம் பாக்க போனால், இன்னிக்கு மதியம் தான் வெளியே வர முடிஞ்சது. அப்படி ஒரு slow படம். இரண்டு மணி நேரமாக இருந்தாலும், வேகம் ரொம்ப குறைவு. இருந்தாலும், படம் ஓரளவுக்கு பிடித்து இருந்தது. ஒரு முறை பார்க்கலாம். நல்ல கதை, திரைக்கதை ஓட்டத்தை வேகமாக்கி இருந்தால் இன்னொரு 'kahaani' பிறந்திருக்கும்.

படத்தில் பிடித்தது அமீர் தான். அது என்னமோ தெரியல, அவர் எந்த படத்தில் அழுதாலும், மனசு தாங்க மாட்டேங்குது!!:)))))))))))

அமீர் கானுக்கு நீச்சல் தெரியாது இதுவரைக்கும். ஆனால் இந்த படத்துக்காக அவர் கற்று கொண்டாராம்.


********************************************************************************
கொஞ்ச நேரம் முன்னாடி தான் 'நீயா நானா' நிகழ்ச்சியை பார்த்தேன். ஆங்கிலம் பற்றி தலைப்பு.

ஆங்கிலத்தால் நாம் படும் பாடும்
ஆங்கிலத்தை நாம் படுத்தும் பாடும்

ஐயோ ரொம்ப கஷ்டம்!!!

எனக்கு கமல் சொன்னது தான் ஞாபகத்துக்கு வருது

"உங்க வீட்டில் எத்தன ஜன்னல் இருக்கிறதோ அத்தன மொழிகளை கற்று கொள்ளுங்க. வீட்டு நுழைவு வாசலாக மட்டும் தமிழாக வைத்து கொள்ளுங்க"

இது தமிழுக்காக மட்டும் இல்ல. அவங்கவங்க தாய்மொழியை கற்று கொள்ள வேண்டும். (ஆனா, இப்ப கலப்பு திருமண அதிகம் ஏற்படுவதால், இன்னும் சிக்கல். என்னுடன் பணி புரியும் ஒருத்தியின் தந்தை சீனர். அம்மா Philippines நாட்டை சேர்ந்தவர். ஆக, அவளுக்கு ஆங்கிலம் மட்டும் தான் தெரியுமா? பாவமாக இருந்தது கேட்க!)

****************************************************************************

சமீபத்தில் ஒரு 10 நாள் சுற்றுலா போக வாய்ப்பு கிடைத்தது. இத்தாலி, சுவிட்ஸலாந்து மற்றும் france.

கடவுள் 'அழகானவர்களை' படைத்து மொத்தமாய் இத்தாலியை போட்டுவிட்டார் போலும். பெண்கள், ஆண்கள், பெரியவர்கள், சின்னவர், குழந்தை எல்லாருமே அழகா இருக்காங்கப்பா!!!:)))

சுவிட்ஸலாந்தில் பிடித்தது பனி. ஐயோ எனக்கு அழுகையே வந்துடுச்சு. இரண்டு வருடமாய் சம்பாதித்த சம்பளத்தில் சேர்த்து வைத்த பணத்தில் போனதால், ஒரு வித வலி கலந்த சந்தோஷம். ஒவ்வொரு முறையும் பனியை ஜன்னல் வெளியே பார்க்கும்போது, இரவு தூக்காமல் கிடந்த நாட்கள், தன்மானத்தை புதைத்து boss சொல்வதை கேட்ட வார்த்தைகள், கஷ்டப்பட்டு attend பண்ண meeting எல்லாமே ஞாபகத்துக்கு வந்தது. அந்த பனியை பார்த்து கொண்டே ஒரு கப் சூடா hot chocolate குடித்தால் தெரியும் பாருங்க சொர்க்கம்..priceless!!!:)))))))

franceல் ஒரு படம் பார்க்க போனோம். 'the impossible'- சுனாமியில் சிக்கி தவித்த ஒரு குடும்பத்தின் கதை. படம் ஆரம்பித்த 10 நிமிடத்தில் அழ ஆரம்பித்த நான் கடைசி காட்சி வரைக்கும் அழுகையை நிறுத்த முடியவில்லை. என்ன ஒரு நடிப்பு, சம்பவங்கள்...ச்சே...chanceஏ இல்ல. பக்கத்துல இருந்த french guys எல்லாம் அழ, ஒரே சோக பூமியா போச்சு. ஒவ்வொரு காட்சியிலும் மனசு பதறது, கைகால் உதறுது. படம் முடிந்து பார்த்தால், கழுத்தில் போட்டிருந்த scarf நனைச்சு போச்சு.

*********************************************************************************