May 15, 2013

மூன்று பேர் மூன்று காதல்களின் எதிர்நீச்சல்!

எதிர்நீச்சல் மற்றும் மூன்று பேர்.......ஐயோ...அந்த படத்தை தான் பார்த்தேன்!

1) எதிர்நீச்சல்


எதிர்பார்த்த மாதிரி படம் ஆஹா ஓஹோனு எனக்கு தோணல. இரட்டை வசனம்இல்லாத (பெயரை வச்சு வந்த காமெடி எல்லாம்?)....ம்ம்ம்...... குத்து பாடல்கள் இல்லாத(தனுஷும் நயனும் ஆடியது எல்லாம்??)...ம்ம்ம்....  சரி ஒரு முறை பார்க்கலாம். குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் படமாய் அமையாவிட்டாலும் சிவ கார்த்திகேயனின் கல்லாபெட்டியில் சில்லறை குலுங்கி குலுங்கி விழ வைத்த படம்.

முதல் பாதி ஒரு கதை போலவும். இரண்டாம் பாதி வேறு கதை போலவும் இருப்பதால், அவ்வளவாய் ரசிக முடியவில்லை. இருந்தாலும், marathonக்கு பயிற்சி எடுக்கும் சில காட்சிகள் எல்லாம் சுவாரஸியமாய் இருந்துச்சு:)

2) மூன்று பேர் மூன்று காதல்

ஹாஹாஹாஹாஹாஹா....ஐயோ குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்த படம்! ஐயோ முடியலங்க!

அர்ஜுன் தாத்தா,
சேரன் பெரியப்பா
விமல் மாமா

சேர்ந்து நடித்த மூன்று பேர் முதியோர் காதல் படம் சூப்பர்!!! 

விமல் 'chartered accountant' (நான் எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சேனு தோணிச்சு)
சேரன் cambridgeல் படித்த வாலிபன் அதுவும் PHD முடித்தவன் (வேலையை நிறுத்திட்டு ஏங்காச்சு பூ விக்க போகலாம்னு தோணிச்சு)
 அப்பரம் நம்ம கிச்சா அப்பளம் அர்ஜுன் நீச்சல் சொல்லி கொடுப்பவர். இது கொஞ்சம் பரவாயில்ல!

விமலும் சத்தியனும் அடிக்கடி 'ஒரு chartered accountant' ஆன நம்ம.... என கூறும்போது குபீர் சிரிப்பு தான் வந்துச்சு!

அர்ஜுன், காதல் காட்சிகளில் எல்லாம், ஐயோ ராமா (கவுண்டமணி பாணியில் படிக்கவும்) என்ற உணர்வை தருகிறார்.

கமல், ரஜினி கூட தான் காதல் காட்சிகளில் நடிக்குறாங்க. அவங்கள எல்லாம் நீ ஒன்னும் சொல்றது இல்ல. அப்படினு நீங்க கேட்கலாம். என்ன தான் அவங்க வயசுக்கு அது கொஞ்சம் ஒரு மாதிரியாய் இருந்தாலும், திரையில் பார்க்கும்போது அழகாய் காட்டிவிடுகிறார்கள் இயக்குனர்கள்!



           
(பானு இதற்கு முன்னால்,           இப்போது)

மூன்று ஹீரோயின்கள் வேற! பானு தவிர மற்ற இருவரும், கடைசி பஸ புடிச்சு ஊருக்கு போயிடலாம்! அதிலும் விமலின் ஜோடி....ஆஹா ஆஹா...விமலுக்கு ஏற்ற ஜோடி. விமலும் இந்த புள்ளயும் 'நான் நடிக்க மாட்டேன். நீங்க வேணும்னா நடிச்சுங்கோ' என்று அடம்பிடித்து இருக்கிறார்கள். அது ஒவ்வொரு காட்சியிலும் வந்த என்னை ப்ளார் ப்ளார்னு அறைந்துவிட்டு போனது.

தப்பு செய்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கனும் என்ற கருத்து எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. இயக்குனர், இதை மட்டும் மையமாய் வைத்து பின்னி பெடல் எடுத்து இருக்கலாமே!

இயக்குனரின் மகன் 'ஸ்டாப் தி பாட்டு' என்ற பாடலுக்கு ஆடுகிறார்.
அழகாய் சிரிக்கிறார்,
அழகாய் இருக்கிறார்,
அழகாய் பார்க்கிறார்.



ஆனால், முகத்தில் எந்த ஒரு பாவனையும் இல்லாமல் ஆடுகிறார். (விடுங்க பாஸ், அந்த காலத்துல விஜய்க்கும் ஆட வராதாம்!)  நல்லா ஆட கத்துங்க சார்! அப்ப தான் பெரிய ஹீரோவா வர முடியும்! (ம்ம்ம்...விஜய் சேதுபதி ஒரு பாட்டுக்கு கூட ஆடலயே, எப்படி பெரிய ஹீரோவானாரு?? ம்ம்ம்...)

அப்ப  இந்த படமும் அவுட்டா? என்று கேட்பவர்களுக்கு. குடும்பத்தோடு அல்லது நண்பர்களோடு சேர்ந்து உட்கார்த்து கமெண்ட் அடித்து படம் பார்க்க வேண்டுமா?- இதுவே சிறந்த படம்!

*************************************************************

எனக்கு சிரிக்கனும்- 'திருமதி தமிழ்' பாக்கனும்னு ஆசையா இருக்கு!!!