Mar 20, 2014

ஜஸ்ட் சும்மா (20/3/14)

விரும்மாண்டி படம் போல் ஆளாளுக்கு ஒரு கதையை சொல்கிறார்கள் இந்த காணாம போன விமானத்தை பற்றி.

மனஷன் கண்டு பிடித்த மிஷின்-களும்
மிஷினை கண்டு பிடித்த மனஷன்-களும்

இருக்கும்வரை உண்மைகள் புதைக்கப்படும்! 21ஆம் நூற்றாண்டில் இதை கண்டுபிடிக்க இவ்வளவு போராடுகிறோம்! நாம் அனைவரும் ஒன்னுமே இல்லை என்பதை புலப்படுத்துவதாக தான் இதை நான் பார்க்கிறேன்.

உண்மை விரைவில் வெளியே வரும்! பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிச்சயம் ஒரு விடை கிடைக்கும்.

*****************************************************************************

இளையராஜாவின் 1000வது படத்துக்கு இயக்கம் பாலா! (சரி..)
இதில் கரகாட்ட நாயகன் சசிகுமார் (ஐயோ!!....)
நாயகி வரு சரத்குமார் (ஐயோ ஐயோ......)


சரி இந்த படத்திலாவது சொப்பனசுந்தரியை யாரு வச்சு இருந்தாங்கன்னு சொல்லிடுங்க பா????

*****************************************************************************
பாலாவை கலாய்த்து ஒரு பாடல்!! வரிகள் 'வாலு' படத்தில். எழுதியது மதன் கார்க்கி என்று கேள்விபட்டேன்.

ஷங்கர் படம் போலே காதல் பிரமாண்டமா சொல்லட்டா
மணிரத்னம் போலே நான் கொஞ்சம் பேசட்டா
கௌதம் மேனன் போலே இங்கிலீஷ்ல் சொல்லட்டா
பாலா படம் போலே உன்னை பிச்சு திங்கட்டா


@1.51

*****************************************************************************

பாடலில் கோச்சடையன் பத்தியும் வரும்!! ஐயோ கோச்சடையன் என்றதும் எனக்கு ஞாபகம் வருவது..... இது தான்!!



இது தீபிகாவா? இது தீபிகாவா?

தீ குளிப்போம், தோழர்களே!!!!!!!

*********************************************************************************