நான்: டிவில இருந்தபோது பிடித்த சிவகார்த்திகேயன இப்ப படத்துல சுத்தமா பிடிக்கல. அது ஏன்?
தங்கச்சி: இட் ஸ் conspiracy theory!
நான்: அப்படின்னா?
தங்கச்சி: நம்மள மாதிரியே லூசுத்தனமா பேசிகிட்டு இருந்த பய, இப்ப 10 கோடி வாங்குறானே நம்ம இன்னும் வாழ்க்கைல ஒன்னுமே பண்ணாம இப்படியே இருக்கோமே-னு ஆழ்மனசு சொல்றதுக்கு பெயரு தான் conspiracy theory!!
நான்: அவன் மேல எனக்கு என்ன பொறாமை?
தங்கச்சி: பொறாமை இல்ல. பொறாமை வேற இது வேற. பொறாமைங்கறது ஒரே வேலை பார்க்கும் ரெண்டு பேருக்குள்ள வரது. இது அப்படி இல்ல பாரு.
நான்: அதான் கேட்குறேன்? அப்பரம் ஏன்?
தங்கச்சி: மனஷன் புத்தி. மனஷன் மனசு.
நான்: இது தப்பில்லையா??
தங்கச்சி: தப்பு தான்!
நான்: எப்படி இத குணப்படுத்துறது.
தங்கச்சி: தமிழ் படமெல்லாம் பாக்காம இருந்தாவே போதும்!!
*****************************************************************************
மான் கராத்தே- முடியல அண்ணாத்த!!!
எல்லாம் படங்களிலும், தண்ணி அடிப்பதுபோலவும், அதுக்கு ஒரு பாட்டு, வேலை வெட்டி இல்லாம, பொண்ணு பின்னாடி சுத்துறது, சில டபுள் மீனிங் காமெடி வைத்து கொண்டு இந்த படத்த குடும்பத்தோடு வந்து பாருங்க என்பதும்.....
முடியல அண்ணாத்த!
கதை எழுதியவர் முருகதாஸாம்!!
முடியல அண்ணாத்த!!
இந்த படத்துக்கு ஹான்சிகா தான் உயிரோட்டம் என்று எல்லாம் promoக்களில் சொல்வது....
முடியல அண்ணாத்த!
சிவா, ஒரு வட்டத்துக்குள்ள உன்னையே...உங்களயே நீங்கள் பூட்டி வைச்சிக்காதீங்க!!
முடியல அண்ணாத்த!
(படத்தில் எனக்கு பிடித்த ஒரே ஒரு சின்ன விஷயம்....மறுபடியும் தேவா குரலில் ஒரு பாடலை கேட்டது மட்டும் தான்)