Sep 12, 2014

ஜஸ்ட் சும்மா (10/9/14)

விடுமுறை நாட்கள் என்பதால், இணையத்தில் ஏராளமான விஷயங்களை படிக்க நேரம் கிடைத்தது.


என்ன கொடுமை சார் இது என்று சொல்ல வைத்த ஒரு விஷயம் மேற்கொண்ட தளத்தில் இருக்கு.

வீட்டில் இருக்கும் பெண்களை கழுதைக்கு ஒப்பிட்டு ஒரு பாடப்புத்தகத்தில் இருக்குதாம்!

கொடுமை சார்!!

இதை படித்து வளரும் பிள்ளைகளுக்கு என்ன தான் கற்று கொடுக்கிறோம்?

'இனி பாட புத்தகத்தை படிக்க வேண்டாம்' னு சொல்ல தோணுது!

******************************************************************




எங்கள் தலைவி லட்சுமி மேனன் பாடும் பாடல்!

இப்பலாம் யார் பாடுறது வெவஸ்த்தையே இல்லேனு பேசுற உங்க mind-voice கேட்குது.

எங்க தலைவி பத்தி கிண்டல் பண்ணீங்க.....

(ek dho teen jaar ஒத்துகடி பாடலை போட்டு காட்டிடுவேன், சொல்லிட்டேன்!!)

***********************************************************

உலக அமைதிக்கான  படம் ஒன்று சமீபத்தில் பார்த்தேன். இதோ....

Displaying photo.JPG

Sep 10, 2014

டார்லிங் டம்மக்கு!

'உன் இன்மையை உணர்கிறேன்.'

இப்படிக்கு
நீச்சல் குளம் அருகே நிற்கும்
மிஸ்டர் அழகன்


என்று ஒரு சின்ன தாளில் கிறுக்கிவிட்டு, தாளை மடிக்கினான். நீச்சல் குளம் அருகே, பிள்ளைகள் விளையாடி கொண்டிருந்தனர். அவர்களில் ஊதா நிறம் சட்டை போட்டிருந்த குழந்தையை கூப்பிட்டான். அவள் பிஞ்சு கையில், எழுதிய கடிதத்தை மடக்கி ஒரு சாக்லெட்-யும் கொடுத்து, அவள் காதில் ஏதோ சொன்னான்.

அக்குழந்தையும் அவன் சொன்னதை கேட்டது. நீச்சல் குளம் முழுதும் சங்கீத் விழாவிற்காக  அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பலூன்கள் ஏராளமாய் கிடந்தன. கவனமாய் தாண்டிமெதுவாய் நடந்து சென்றது அக்குழந்தை. அழகாய் சென்று மருதாணி போட்டிருந்து கொண்டிருந்தவள் கையை இழுத்தது. அக்குழந்தையை தூக்கி முத்தமிட்டு என்ன என்று கேட்டாள் அமுதா. குழந்தை, கடிதத்தை கொடுத்துவிட்டு சிரித்தது. மறுபடியும் விளையாட ஓடிவிட்டது.


கடிதத்தை பிரித்து படித்தாள் அமுதா. ஆனால், அதனை கண்டு கொள்ளாமல்
தனது தோழிக்கு மருதாணி போடும் வேலையை தொடர்ந்தாள்.

மறுபடியும், இன்னொரு கடிதம் எழுதினான்-

'நான் சிகரெட் பிடிக்க போறேன்.' :))))

இப்படிக்கு
உன் இன்மையை தாங்காத
மிஸ்டர் அழகன்


மறுபடியும் குழந்தையை தூதுவிட்டான். குழந்தைக்கும் இந்த விளையாட்டு பிடித்தவளாய், ஓடி வந்து அமுதாவிடம் கடிதத்தை கொடுத்தது. அவள் பிரித்து படித்தாள். கடிதம் மேல் இருந்த பார்வை அவனை தேடும் பணியில் இறங்கியது.

"எங்க அமு போற?" என்று கையில் மருதாணியுடன் கேட்ட  மணப்பெண்ணிடம்,

அமுதா, "கொஞ்சம் நேரம் வேட் பண்ணு." என்று சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு மெதுவாய் நகர்ந்தாள்.

"ஹாலோ மிஸ்டர் அழகன், என்ன இது?" என்றாள் அமுதா அவன் நிற்கும் இடத்தை கண்டுபிடித்தவுடன். யாருமே இல்லாத ஒதுக்குபுரமான இடம். நிலா வெளிச்சம் மட்டும் ஒளி வீசியது. 'டார்லிங் டம்மக்கு' இசை அரங்கத்தை நிரப்பியது.

புன்னகையித்தபடி நின்று கொண்டிருந்த விஜய், "காதல் கடிதம்."

"கண்றாவி!! அது என்ன இன்மை இன்மை....ஏதோ சின்மயி மாதிரி....." என்றாள் அமுதா, புருவங்களை சுருக்கி. அவள் பேசும்போது ஆடிய தோடும், குலுங்கிய பச்சை வளையல்களையும் கண்கொட்டாமல் பார்த்தான் விஜய்.

"நான் உன் இன்மையை உணர்கிறேன்-னா, i miss youனு அர்த்தம்." என கூறி கொண்டே அவளை நோக்கி நடந்தான்.

வாய்விட்டு சிரித்த அமுதா, "என்ன உனக்கு அதுக்குள்ள இன்மை, சின்மயி?? இங்க தானே இருக்கோம்."

"செம்ம boring di. " எரிச்சலுடன் விஜய் பேசிகொண்டே பின்தலையை சொரிந்தான்.

அமுதா, "this is our best friend's sangeet. how can you say it's boring?"

வேண்டுமென்றே மறுபடியும், விஜய் சற்று சத்தமாய், "boring" என அழுத்தி சொன்னான்.

அருகே சென்று அமுதா, அவனது கையை செல்லமாய் அடித்தபடி, "stop it vijay!"

"உனக்கு தான் indian functionsனா பிடிக்காத. அப்பரம் ஏன் வந்த?" என்றாள் அமுதா, புருவங்களை ஏற்றியவாறு.

இன்னும் பக்கத்தில் வந்த விஜய், "indian functions பிடிக்காது. ஆனா, indian girls பிடிக்கும். especially பச்சை வளையல் போட்டு இருந்தா..." என்றவாறு அமுதாவின் வலது கையை பிடித்து, அவளை சுவரோடு சாய்த்தான்.

"hoi! பொண்ணு கைய பிடிச்சு இழுத்துட்டான்னா, பஞ்சாயத்த கூப்பிடுவா?" புன்னகையித்து கொண்டே சொன்னாள் அமுதா.

ஒரு செண்டிமீட்டர் புன்னகையை பதிலாய் வீசினான் விஜய்.

அமுதா, "அது என்ன? சிகரெட் பிடிக்க போறேன்? சொன்ன promise எல்லாம் மறந்து போச்சா?

விஜய், "ஒரு கவித சொல்லட்டா?
                 smoking hot-aa நீ இருக்கும்போது
                 smoking எனக்கெதுக்கு?"


சொல்லி முடித்துவிட்டு சிரித்தான்.

அமுதா, "அட பாருடா!! fb statusஆ போடு மச்சி. லைக்ஸ் பிச்சிக்கும்!" என அவனது தலைமுடியை கலைத்தாள்.

அவனது சட்டை collarயை சரி செய்தவாறு, "இந்த லெட்டர்லாம் எழுதி இம்சை பண்ணாம, whatsapp me. இப்ப phoneல charge ஏறி இருக்கும்னு நினைக்குறேன்." என்றவுடன் அவ்விடத்தை விட்டு காலி செய்தாள்.

மறுபடியும்,

' ஐ லவ் யூ' என்று ஒரு தாளில் எழுதி, அக்குழந்தையிடம் கொடுத்தான்.

குழந்தை கடிதத்தை வாங்கி கொண்டு,

"அப்பா, i am tired. நீங்களே அம்மாகிட்ட கொடுத்திடுங்கோ" என்றது.


Sep 9, 2014

பாப்கான் காதல்






என் முழுங்கை 
உன் கையை லேசாய் இடித்து
என் விரல் 
உன் உள்ளங்கையோடு
உரசி 
தரப்படும்
பாப்கான்-கள்
அனுபவிக்கும்
சந்தோஷத்தை,
அப்படியே தூங்கி
கொடுக்கப்படும் பாப்கான் பாக்கெட்-டுக்கு
தெரிவதில்லை.



                                                                                   

                                                                                 
                                                                                    cheesecake கொண்டு 


வந்தவரிடம் 
இரண்டு கரண்டிகள்
வேண்டாம்
ஒன்று போதும்
என்று சொல்லிவிட்டு
என்னை பார்த்து
வீசிய புன்னகையை
மறுபடியும்
ரசிப்பதற்காகவே,
ஆர்டர் செய்வேன்
இரண்டு கரண்டிகளோடு 
இன்னொரு cheesecake! 



எனக்கு பிடித்த குறும்படம்- 5


1) ஆசை

எனக்கு ரொம்ப பிடிச்சதே குற்றவாளியாய் நடித்தவரின் நடிப்பு தான். ஒரு பக்க கதையை 5 நிமிடங்களில் படித்து முடித்த மாதிரி ஒரு உணர்வு. பார்த்து ரசியுங்கள்!


2) whatsapp kadhal





நகைச்சுவை குறும்படம். ஹீரோ நண்பனாக நடித்தவர் அருமையாக நடித்து இருக்கிறார். ஒரு வரியில் சொல்லிவிடும் கதை தான், ஆனால், வசனங்களும், காட்சிகளும் மற்றும் எடிட்டரின் கைவண்ணமும் படத்தை ரசிக்க வைத்துள்ளது!

3) இப்படிக்கு





பார்த்த மூன்று படங்களிலே, எனக்கு பிடிச்சது இது தான். கடிதம் எழுதும் பழக்கம் எவ்வளவு அற்புதமானது என்பதை சொல்லும் படம். அது இப்ப கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சுகிட்டு வரத பாத்தா, பயமா இருக்கு. கவலையா இருக்கு.

நேத்து பெய்த மழைல, முளைத்த காளான் மாதிரி இந்த இமெயில்களும் whatsappகளும் கம்பீரமாய் வலம் வருது.

ஆனா, கடிதம், போஸ்ட் ஆபிஸ், போஸ்ட் மேன்- இவங்கலாம் என்றைக்குமே classic!!

படத்தை பார்த்தபிறகு, எனக்கு தோன்றியது இது தான்! நம்ம ஏன் ஒருத்தருக்கு கடிதம் எழுத கூடாதுன்னு?

Displaying image.jpeg


தோழிக்கு கடிதம் எழுதி போட்டுவிட்டேன். கடிதம் எழுதும் சந்தோஷத்தை மறுபடியும் கொடுத்த இக்குறும்படத்துக்கு நன்றி!!

Sep 7, 2014

தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்-29



இவர் யார்னு தெரியலையா? அட நல்லா பாருங்க!

காளிதாஸ் ஜெய்ராம் (நடிகர் ஜெய்ராமின் மகன்)

கண்கள் ஆயிரம் பேசுது சொல்ல வைக்கும் கண்கள் இவருக்கு!  அதவிட கொஞ்சம் நல்லாவே மிமிக்ரி செய்ய தெரிஞ்ச பையன் என்பதால் இன்றைய 'சைட்' இவர்!

'ஒரு பக்க கதை' என்ற தமிழ் படத்தில் நடிக்க போவதாக தகவல். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் படத்தின் இயக்குனர் கைவண்ணத்தில் காளிதாஸும் தமிழ் சினிமாவின் ஒரு பக்கமாக ஆக போகிறார்.

இவருக்காக நான் எழுதிய கவித கவித....

நீ காளிதாஸா?
இல்ல
என்னை
காலியாக்கும் தாஸா?