Oct 28, 2014

happy new year, கத்தி!

ஹாப்பி நியு யர்!

இந்த படம் பார்த்தால், புது வருடம் சந்தோஷம் வருமா-னு தெரியல.
ஆனா ஏண்டா இந்த வருட இப்படி ஒரு படத்த பார்த்தோம்-னு தோணும்.

வசூல் ராஜா படத்துல நாகேஷ் சொல்வாரே, உயிர உருவி எடுத்துட்டு போயிட்டானே!

அந்த மாதிரி ஹாப்பி நியூ யர் படம் பார்க்கும் போது, சிந்திக்கும் மூளையை கொஞ்சம் கொஞ்சம் உருவி எடுத்து வெளியே போட்டு விடும் படம்.

கதையில்லாமல் சுவாரஸ்சியமா போகும் எத்தனையோ படங்களை பார்த்து ரசித்து இருக்கேன். ஆனா, இந்த படம், யப்பா தாங்கல! சரி லாஜிக் தான் இல்ல, நடிப்பு, பாடல்கள், காமெடி இப்படி ஏதாச்சு இருந்தாகூட பரவாயில்ல!!

ம்கூம்....அத பத்தி எல்லாம் நான் யோசிக்கவே மாட்டேன் என அடம்பிடித்து இருக்கிறார் இயக்குனர் ஃவாரா கான் போலும்.




பெயர் பட்டியலில், முதல் பெயர் 'தீபிகா' என்ற போட்டது வரவேற்க தக்கது. ஆனால், அது மட்டும் போதுமா?

துபாய் ரொம்ப அழகாய் இருக்கு. அதை தவிர, வேறு எதுவும் என்னை கவரவில்லை.
     

happy new year  என்பதற்கு பதில்  happy வயிறு showing...அப்படினு தலைப்பு வச்சு இருக்கலாம். ஏனா பாதி நேரம் ஷாருக் கான் வயத்த காட்டுது! அப்பரம் சோனு சூட் வயித்த காட்டுது, மீச்ச நேரம் தீபிகா வயத்த காட்டுது.

படம் பார்த்ததில் ஒரே ஒரு சந்தோஷம்- gold classல் பார்த்து தான்!



அமரும் இருக்கையை படுக்கையாய் மாற்றி கொள்ளலாம். நல்லா தூங்கினேன் பாஸ்!!

******************************************************************

கத்தி

திருநீரை பூசி கொண்டு சாமி சிலை முன் ஆடி பாடும் அறிமுக காட்சி இல்ல.நான் உங்க சித்தப்பா, நீ என் பெரியப்பா என்று தேவையில்லாமல் உறவு முறை வைத்து பாடும் அறிமுக பாடல் இல்ல. முகத்தில் சந்தனத்தை அப்பி கொண்டு பேசும் பஞ் டயலாக் இல்லை. மொத்தத்தில் இது பழைய விஜய் படம் இல்ல. நண்பன், துப்பாக்கி போன்ற ரகத்தில் இது வேற மாதிரி படம். பழைய விஜயை பார்க்காமல் புதுசாய் பார்ப்பது போல் ஒரு விஜய் தெரிகிறார்.

அப்படினா....படம் சூப்பரா என்று கேட்பவர்களுக்கு.....

விஜயை ரசித்த அளவுக்கு என்னால் படத்தை ரசிக்க முடியவில்லை. இந்த வயசிலும் அழகாய் இருக்கிறார். அதைவிட அழகாய் ஆடுகிறார். ரொம்ப நல்லா நடித்து இருக்கிறார். ஆனா, படத்தில் ஒரு வகையில் விறுவிறுப்பு இல்லாதது போல் இருக்கிறது. காரணம், படத்தின் நீளம் என நினைக்கிறேன்.

யப்பா இயக்குனர்களே, போதும்ய்யா இந்த 3 மணி நேரம் படம் எல்லாம்! 2.5 மணி நேரத்துக்குள் கதை சொல்ல பாருங்க!!

பாடல்கள் அருமை. ஆனா, படத்தில் இடம்பெறும் போதும், கதைக்கு வெளியே நிக்குது பாடல்கள். selfie pulla பாடலின் நடனம் பெரிய ஏமாற்றம். horlicks bottleக்கு label சுத்தின மாதிரி, samantha தேவையில்லாம வந்து வந்து போகுது.

கத்தி, இன்னும் நல்லா தீட்டி இருக்கலாம்!