1) படம் பார்த்துவிட்டு, என் மனதில் ஓடிய, உதித்த சிந்தனைகள் இவை.
2) மலையாளம் படமான 'how old are you?' படத்தை 10 நிமிடங்களுக்கு மேல் பார்க்க முடியவில்லை.
3) காரணம்- ரொம்ப மெதுவான காட்சி ஓட்டம் எனக்கு அவ்வளவா பிடிக்கல.
4) சரி, ஜோ என்ன தான் பண்ணியிருக்காங்க இந்த படத்துல-னு, படம் பார்க்க போனேன்.
5) சும்மா, சொல்ல கூடாது.
6) ஜோ, we missed you lots!!
7) படத்தின் பலமே ஜோ தான்.
8) வசனங்கள் இன்னொரு பலம்.
9) ஆனா, கதையில் இன்னும் ஆழம் தேவையோ என நினைக்கவைத்தது இப்படம்.
10) நடிகைகள் நிறைய பேர், சினிமாவுக்கு திருப்பி வரும்போது, இப்போன்ற படங்களில் நடிப்பது வாடிக்கை ஆகிவிட்டது.
11) ஸ்ரீதேவி, ஜோ போன்றவர்களின் படங்களில் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக படம் எடுத்தாலும், அதில் என்னமோ ஒரு நெருடல் இருக்கிறது.
12) 'நான் யார் என்று இந்த உலகத்துக்கு காட்டனும்' என மன போக்கில் தான் படம் போகுது.
13) படத்தில் பார்த்தால், கணவன் கிண்டல் பண்ணுவான், மகள் கிண்டல் செய்யும், சுற்றி உள்ளவர்கள் கிண்டல் பண்ணுவார்கள்.
14) இரண்டாம் பாதியில், இதை எல்லாம் உடைத்து எரிந்து விட்டு, ஒன்றை சாதிப்பார்கள்.
15) இது தவறு இல்லை.
16) என்றாலும், ஒரு குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவதாக தான் எனக்கு தெரிகிறது.
17) you don't have to prove yourself to anyone. you have to prove only yourself. என கருத்தை இங்கு யாருமே அதிகமாக யோசிக்கவில்லை என்று தான் தோன்றுகிறது.
18) உதாரணம், queen என்ற ஹிந்தி படம்.
19) ஸ்ரீதேவியோ, ஜோவோ- இது போன்ற படத்தில் நடிப்பார்களா?
20) அப்படியே நடித்தாலும், நம்மில் பலர், 'ஒ....அவங்க எப்படி இந்த மாதிரி படத்துல நடிக்குறது?'
21) அது தப்பு, கலாச்சாரம், குடும்பத்துக்கு எதிரான ஒன்று என சொல்லியே மட்டம் தட்டிவிடுவார்கள்.
22) இதை தான் நான் சொல்ல வருகிறேன்.
23) நான் யார் என்று மற்றவர்களுக்கு காட்டும் கதையில் நல்ல விஷயங்கள் இருந்தாலும், அதில் எதோ ஒரு குறைபாடு உண்டு,
24) 'அப்போ என்ன, இந்த மாதிரி படங்கள் பெண்களை மையப்படுத்தி வரகூடாதா?' என சிலர் நினைப்பீர்கள்.
25) அப்படியில்ல, இப்போன்ற படங்கள் முன்னோடியாக இருக்கட்டும்.
26) ஆனா, இனி வரும் படங்கள் இதே பாணியில் வந்துவிடுமோ என்ற ஒரு அச்சம்.
27) 'நான் என் மனைவிய சாதிக்க விட்டு இருக்கேன்," என்று மார்தட்டி கொள்ளுபவர்கள் பலரின் ஆழ்மனதிலும் இன்னும் 'நான் சுதந்திரம் தருகிறேன்' என்று அதே வட்டத்துக்கு தான் பயணிப்பதாக தெரிகிறது.
28) இங்கு யாரும் யாருக்கும் சுதந்திரம் தர தேவையில்லை.
29) 'என் கணவன் எல்லாம் வீட்டு வேலையை செய்வார்' என்று பல பெண்கள் பெருமைகொள்ளும் அதே மனப்பான்மையும் போகவேண்டும்.
30) கல்யாணத்துக்கு பிறகு வேலைக்கு போவது அல்லது சாதிப்பதும், வீட்டு வேலை பார்ப்பதும் அனைத்தும் இயல்பான ஒன்றாக மாற வேண்டும்.
31) அதனை எப்போது இயல்பான ஒன்றாக பார்க்கிறோமோ, அப்போது ஏற்றதாழ்வு, படத்தில் காட்டிய பிரச்சனை அனைத்தும் இல்லாமல் போகும்.
32) சரி, மறுபடியும் கதைக்கு வருவோம்.
33) ரகுமானின் நடிப்பு நல்லா இருந்துச்சு.
34) ஜோவை மறுபடியும் பார்க்க அவ்வளவு அழகா இருந்துச்சு.
35) தொடர்ந்து நடிங்க அப்படி எல்லாம் சொல்ல மாட்டேன்.
36) சாதிக்க விரும்பும் பெண்கள் போல், எதை செய்ய விரும்புகிறீர்களோ, அதை செய்யுங்கள்! வாழ்த்துகள்!