அடேங்கப்பா!!! என நானே வியந்து பார்க்கிறேன். இந்த வலைப்பூவில் எழுத ஆரம்பித்து 10 வருடங்கள் ஆயிற்று. சும்மா கிறுக்கி எழுதிய கவிதைகளை ஒன்றாக சேர்த்து வைக்கலாம் என ஆரம்பித்த வலைப்பக்கம், இப்போது பல கதைகளையும், பல கட்டுரைகளையும், கவிதைகளையும், திரைவிம்ரசனம், பற்ற பல லொள்ளுகளையும் தாங்கி நிற்கிறது.
ஆதரவு தந்து, ரசித்து படித்து, தொடர்ந்து ஊக்குவித்து கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி.
'you must love yourself' என்று ஆங்கிலத்தில் ஒரு வாசகம் உண்டு. அதனை முழுமையாக அனுபவித்த இடம் இந்த வலைப்பக்கம்! என்னையே நான் ரசித்து வருகிறேன் என் எழுத்துகள் மூலம்.
10 வருடங்களை புரட்டி பார்க்கும்போது, எழுத்திலும் சிந்தனையிலும் கொஞ்சம் முன்னேற்றம் தெரிகிறது என்றால், அதற்கு ஒரே காரணம் நீங்க தான்!!! நன்றி!!
சரி இத்தன வருஷம் எழுதி இருக்கோமே, சிறந்த பதிவுகளுக்கு, அவார்ட் கொடுக்கலாம்னு நினைக்குறேன். இப்பதான் அவார்ட் ஷோ நடத்தறது சர்வ சாதாரணமா போச்சே.....ஹிஹிஹி....
எனக்கு பிடித்த தொடர்கதை: டாடி மம்மி வீட்டில் இல்ல (series 1)
http://enpoems.blogspot.sg/2009/04/daddy-mummy-1_13.html
மக்களுக்கு பிடித்த தொடர்கதை: விண்ணை தாண்டி வந்தாளே
http://enpoems.blogspot.sg/2010/03/1.html
நான் எழுதியதில் ரசித்தது: short films ஆளுங்க தான் பெரிய தலவலி சார்!
http://enpoems.blogspot.sg/2013/06/short-films.html
பாராட்டும் திட்டும் பெற்ற விமர்சனம்: கௌதம் மேனன் படம் செய்வது எப்படி?- சமையல் குறிப்பு
500 பதிவுகளில், எனக்கு பிடித்த சிலவற்றுக்கு இந்த அவார்ட்!!
தொடர்ந்து படிங்க!!! ஆதரவு தாங்க!!