-------------------------------------------
தெறி,fan படங்களுக்கு இடையே சில பல வித்தியாசங்களையும் ஒற்றுமைகளையும் கண்டு அறிந்தேன்.
2) ரெண்டுமே 2.5 மணி நேரம் ஓட. எனக்கு தான் மூன்று நாட்கள் திரையரங்கிலே வாழ்ந்த உணர்வு ஏற்பட்டது.
ஒரு திரைப்படம் 2 மணி நேரத்துக்கு மேலே போனால், எனக்கு நினைவுக்கு வருவது இந்த சின்ன பையனின் குரல் தான்....
(0.55-1.00)- "tarantino எல்லாம் பார்த்தால், படம் தாம்பரம் தாண்டாது? பரவாயில்லையா?
3) காருக்கு எதுக்கு அச்சாணி?
தெறிக்கு எதுக்கு ஏமி?
இந்த கதாபாத்திரத்த நம்ம வடிவுக்கரசிக்கிட்ட கொடுத்து இருந்தாலும், பின்னி பெடல் எடுத்து இருப்பாங்க!
தெறி படத்துக்கு ஏமி தேவையில்லை என்றால், fan படத்தில் ஒரு கதாநாயகி இருந்திருந்தால் நல்லா இருந்திருக்குமோ-னு தோணுச்சு.
4) ஒரு படத்தில் பாடல்களே இல்லை. இன்னொரு படத்தில், சூப்பர் ஹிட் பாடல்கள் உண்டு. (வேறு படங்களின் சூப்பர் ஹிட் பாடல்கள்)
"சுந்தரி கண்ணால் ஒரு செய்தி"
"நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்....."
"என்னடி ராக்கம்மா"
"அலைபாயுதே கண்ணா"
5) கலரும் கால்வாயும்
தெறி படத்தில் கலர் எல்லாம் தெறிக்க விட்டு இருக்காங்க. தனது குருநாதர் ஷங்கர் போலவே அட்லியும், பாடல் காட்சிகளில், பெயர் வைக்காத கலரைகூட அள்ளி பூசிவிட்டு இருக்கிறார். ஷங்கர் போல் அளவாய் அழகாய் பயன்படுத்தி இருக்கலாம்.
"ஏய் இங்க பூசு. ஏய் அங்க பூசு, " என்று கவுண்டமணியின் குரல் தான் எனக்கு கேட்டது.
கலர் கதற கதற தெறித்தது என்றால், fanனில் கால்வாயில் பறந்து பறந்து அடிக்கும் காட்சிகள் கண்ணை கட்டின. அதுவும் Croatia நாட்டில். அந்நாடு எங்கப்பா இருக்கு?
6) "எனக்கு இன்னொரு பெயர் இருக்கு" என்று சொல்லாத ஒரு காட்சி தெறியில் இடம்பெற, " சொல்லுங்க சொல்லுங்க...நீங்க bombayலே என்னாவ இருந்தீங்க?" என்பது தான் தெறியுன் கதை.
ஒரு நடிகனை கடவுளாய் நினைக்கும் ஒரு ரசிகன் மும்பைக்கு செல்வது தான் fan திரைப்பட்டத்தின் கதை.
7) தெறி படத்தில் சில கதை சறுக்கல்கள் இருந்தாலும், ரசிக்க வைத்த விஷயங்கள்- விஜய், குழந்தை நைனிக்கா, விஜய்-சமந்தா காட்சிகள்.
குழந்தை நைனிக்காவின் அட்டகாசங்கள் அனைத்தும் தூள் கிளப்புது.
விஜய்-சமந்தா காதல் காட்சிகள், பழைய காதல் இளவரசன் விஜயை நினைவூட்டுகிறது.
விஜய் இந்த வயதிலும் செம்ம கியூட்-டா, இளமை துள்ளலோடு மிளிர்கிறார்.
ஷாருக் போலவே.
ரசிகனாக நடிக்கும் ஷாருக், அப்படியே 25 வயது இளைஞன் போல் வளம் வருகிறார். இதுவரை அவர் படங்களில் காட்டாத ஒரு நடிப்பை இப்படத்தில் பார்க்கலாம்.