"சிநேகிதனே சிநேகிதனே" பாடல் ஒலிச்சது அரங்கில். புன்னகையித்தேன். ஆஹா வரவேற்பு பாடலே செம்மயா இருக்கே. "இன்னிக்கு தூக்கத்தில் ஒரே லவ் கனவு தான் போ காயு" என கன்னத்தில் கிள்ளாத குறையாய், சராட்டு வண்டியில் பாடலை முணுமுணுத்தபடி அமர்ந்து இருந்தேன்.
படம் ஆரம்பிச்சது. கார்த்தி சிறைல அடைக்கப்படும் காட்சி. வேறு ஒரு இருட்டு சிறைல ஒரு கைதி தண்ணிக்காக தலைய மட்டும், ரொம்ப ரொம்ப சின்ன துவாரம் வழியில நீட்டுவார். அதிகாரி ஆக்ரோஷமா நடந்து வந்து, அவரின் தலைய வலுகட்டாயமா தள்ளிவிட்டு ஜன்னலுக்கு பூட்டு போடுவார்.
செம்ம சீன் போ! வந்துட்டேனு திருப்பி சொல்லு-னு மணிரத்னம் கால் பதித்துவிட்டார் என நினைத்தேன். கார்கில் போர், ராணுவம், தீவிரவாதம், சிறை, தேசப்பற்று. தீப்பற்றும் கொடி மேல நம்மை மறுபடியும் உருள செய்ய போகிறார் என மனதில் வீரத்துடன் தொடர்ந்து ரசித்தேன் படத்தை.
அதுக்கு அப்பரம் அடுத்த வினாடியிலே flashback. 'வான் வருவான்' பாடலுடன் லீலா அறிமுகம் காட்சி. படத்தின் ஹீரோ VC இல்ல. AC தான். Aniyaayathuku Cold.
ஸ்ரீநகரை சும்மா சுத்தி சுத்தி வளையத்து வளையத்து மேகம், அருவி, சாலை, மலை, புது வெள்ளை மழை- அப்படினு ஒரே குளிர்பிரதசமா அணு அணுவா காட்டி தள்ளிட்டார் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன்.
மருத்துவமனையில் அடிப்பட்டு கிடந்த VC எழுந்து உட்கார்ந்து கவிதை பாடுகிறார். அபாஸ் ஒரு படத்துல பாரதி ரசிகனையாய் வந்து கவிதை பாடும் அபத்தமெல்லாம் பார்த்த தமிழ் சினிமாவில் VC கவிதை அரங்கேற்றம் மோசமா தெரியவில்லை என்றாலும், ஏன் எதுக்கு இந்த கவிதை?
கவிதை அரங்கேற்றம் முடிந்து, அடுத்த ஆடல் கலை நிகழ்ச்சி.
டெல்லி கணேஷ் லீலாவின் தாத்தா. அவர் வீட்டுக்கு முன்னாடி ஒரு கண்ணாடி வீடு. அவ்வளவு அழகு. ஆனால், அவரின் கதாபாத்திரம் அந்த கண்ணாடி வீட்டு அளவுகூட இல்லை என்பது மிக பெரிய வருத்தம். ஆர் ஜே பாலாஜியை வச்சு செய்து இருக்கிறார் போல (கடல் படம் விமர்சனத்துக்கு தான் நினைக்குறேன்)
"உனக்கு பெத்து போடனும்," என லீலா குமற, ஆண் ஆதிக்கம், பெண் அடிமைத்தனம் என புதுசா ரசிக்கும் வண்ணம் காட்சிகளை நகர்த்தி கொண்டு போக நிறைய வாய்ப்பு இருந்தாலும், தான் எடுத்த முந்தைய படக்காட்சிகளை தான் மறுபடியும் எடுத்தே தீர்வேன் என கங்கணம் கட்டியிருக்கிறார் மணி சார்.
ஸ்ரீநகரில் இவர்களை தவிர வேறு யாருமே இல்லாதது போல் ஒரு உணர்வு. அது தான் படத்தின் நம்பகத்தன்மையை குறைத்து புதைத்துவிடுகிறது. ராவணன், கடல் போன்ற படங்களை தவிர்த்து, மற்ற மணிரத்னம் படங்களை சும்மா forward செய்து, play button அழுத்தி பாருங்க. அந்த காட்சி ரொம்ப யதார்த்தத்திற்கு அருகாமையில் இருக்கும்.
ஒகே கண்மணி படத்தில், பிரகாஷ்ராஜ் சமையல் செய்துவிட்டு பாத்திரம் கழுவி வைப்பார். லீலா சாம்சன் "கடாய் அடிபிடிச்சு இருக்கு. நல்லா தேச்சு கழுவனும்" என்பார்.
யதார்த்தம். மிடில் கிளாஸ் குடும்ப யதார்த்தம். இதுபோன்ற யதார்த்தம் இல்லாததே மிக பெரிய குறை -காற்று வெளியிடை.
துணைநடிகர்கள் அனைவரும் 'தெய்வம் தந்த வீடு' ஹிந்தி பதிப்பில் நடித்தவர்கள் போல் இருக்கிறார்கள். VCயின் அப்பா, அம்மா, அண்ணன், தம்பி- அனைவரும் 'நம்மில் மேல் என்ன சொல்றான்' தமிழ் வாசம் வீசும் சேட்டு குடும்பம் போல் தெரிகிறார்கள். ஒரு கதாபாத்திரம்கூட மனதுக்கு ஒப்பவில்லை.
அதிலும் அவரின் அம்மாவை லீலாவிடம், அறிமுகப்படுத்தி, "இவங்க அம்மா. பாரதியும் மீன் குழம்பு ஊட்டி வளர்த்தவங்க." என சொல்லும்போது,
மணி சார், petromax lightஏ தான் வேணுமா சார்?
அலைபாயுதே படத்துல பிரமிட் நடராஜான் சொல்வாரே, "அவ ஒரு இழு, இவ ஒரு இழு"
அந்த மாதிரி, லீலாவும் ஒரு பக்கம் கதையை இழுத்துகொண்டு போக, VC இன்னொரு பக்கம் இழுத்துகொண்டு போக, "yawn வருவான் வருவான்"னு பாடிகிட்டு இருந்தேன்.
அதித்தீ ராவ், ரொம்ப நல்லவே கதாபாத்திரத்துக்கு பொருந்தி இருந்தாங்க. ஆனா, படம் இரு கதாபாத்திரங்களை மட்டுமே மையப்படுத்தி இருப்பதால், இன்னும் அதிகமான அழுத்ததை கொடுத்திருக்கலாமோனு தோன்றியது. அப்பரம் நம்ம கார்த்தி. உங்களுக்கும் உங்க அண்ணனுக்கு இதுவே வேலையா போச்சு. உடம்ப குறைச்சால் நடிப்ப வரும்னு கம்பராமாயணத்துல சொல்லியிருக்காங்களா என்ன?
காதல் காட்சிகளில் எல்லாம் நம்ம கார்த்தி, காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் பாலயாவிடம் பேய் கதை சொல்லி பயம் காட்டுவாரே அந்த மாதிரி தென்பட்டார்.
ஆனா, கடைசி 15 நிமிடங்களில் கார்த்தியின் நடிப்பை பாராட்டியே ஆகவேண்டும்.
படத்தில் மிகப்பெரிய ஆறுதலே ஏஆர் ரகுமான் தான்!
வசனங்கள் என்ற பெயரில் permutation and combinationல் வரிகளை எழுதி இருக்கிறார்.
"நீ என்னைய விரும்புறத விட உன்னை அதிகமா விரும்புவேன்.
நீ என்னைய வெறுத்தாலும் விரும்புவேன்.
நீ என்னைய விரும்பலனாலும் விரும்புவேன். "
கபி குபாம்
குபாம் கபி
கம்பிகும்பா
கும்பா கம்பி
பிம்த்தகம்கு
தோழி ஒருத்தி கேட்டா, "அப்போ இனி மணிரத்னம் ரசிகையா இருக்க போறதில்ல நீ. அப்படி தானே?"
உயிரை எடுத்தாலும்,
காற்று வெளியிடை எடுத்தாலும்,
He is my man!