Aug 11, 2019

நேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு?

அஜித் ஏன் திடீர்னு ரிமேக் பண்ணாருனு ஒரு சந்தேகம் வந்துச்சு.

Image result for nerkonda paarvai

சந்தேகத்த சுக்குநூறு ஆக்கி தனது சமூக பார்வையை நேர்கொண்ட பார்வையில நிருபிச்சு இருக்காரு. இந்த படம் பிங் படம் மாதிரி இருக்கா இல்லையா என்பது விவாதம் கிடையாது. அதையும் தாண்டி இந்த படம் இப்போதைய சூழ்நிலைக்கு தேவையா இல்லையா என்பது தான் கேள்வி.

கேள்விக்கு ஆணித்தரமான பதில்- ஆம் ரொம்ப முக்கியமான தேவையான படம்.

யாருக்கு, என்பது அடுத்த கேள்வி?

எல்லாருக்கும் தானே?

நேர்கொண்ட பார்வை போன்ற படங்களை மாஸ் ஹீரோ அஜித் தேர்வு செய்ததே அனைவரும் பார்க்க வேண்டும் என்பதற்காக தானே. ஆனால், படம் பார்த்து சிலர் கூறும் கருத்து, ரொம்ப அச்சத்தை ஊட்டுகிறது.

"பெண்களுக்கான படம்"

"முக்கியமா பெண்கள் பார்த்து திருந்தனும்."

"சிட்டி கேர்ல்ஸ் பாக்கனும்."

"யார் கூப்டாலும் போயிட கூடாது."

படம் என்ன சொல்ல வரது என்பதை ஒரு துளிகூட புரிந்து கொள்ளவில்லை என்றால் அப்பரம்  

இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு எடுக்கனும்?

படம் தோல்வி அடைந்திருந்தால் கூட இவ்வளவு பயம் வந்திருக்காது. எல்லாரும் பார்த்துவிட்டு, புரிந்து கொள்ளாமல் மறுபடியும் அத சாக்கடை எண்ணத்தோடு, 'என் தலயும் நான் நினைச்ச மாதிரியே சொல்லிட்டாரு' என்று பெருமிதம் அடித்து கொண்டு வரும்போது தான் பயமா இருக்கு. பத்து அடி முன்னாடி சமுதாயம் காலடி வைக்க, இது போன்ற கீழ்த்தனமான கருத்து வைத்து இருப்போர் நம்மை பாதாளத்தில் தள்ளிவிடுவார்கள் போல. 


 40, 50 வயதை கடந்தவர்கள் அதிகமாய்  இந்த மாதிரி கருத்தை ஆதரிக்கிறார்கள் என்பதுபோல் தோன்றுகிறது. இளையர்கள் ஓரளவுக்கு அப்படி இல்லை என்று மனம் ஆறுதல் அடைந்தாலும், வீடியோவில் நிறைய பெண்களுக்கு ஏன் இந்த மாதிரி கருத்து உதித்தது?


படம் ஒரு மனிதனை மூன்று மணி நேரத்தில் மாற்றிவிடாது. ஆனால், சிந்திக்க வைக்கும். அப்படி சிந்திக்க வைத்ததால் தான் இக்கட்டுரையே. கொஞ்சம் வருத்தம், கொஞ்சம் கோபம். பெண்களுக்கு மட்டும் அல்ல, மாற்று திறனாளி, திருநங்கை, LGBTQ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என அனைவரின் முன்னேற்றத்திற்கு பல நாடுகளில் சட்டங்கள் மாற்றபட்டு வருகின்றன. இப்படி முன்னோக்கி நமது நேர்கொண்ட பார்வை நல்லதுக்கே போய்கொண்டு இருக்க, நமக்கு குறுகிய பார்வை எதுக்கு?


நோ மின்ஸ் நோ.

மூன்று வார்த்தைகள் என்றாலும், புரிந்து கொள்ள தான் எவ்வளவு கஷ்டம்?