இப்ப தான் திவ்ஸ் பின்னோட்டத்தை படித்தேன். ரொம்ப நாளா ப்ளாக்ல ஒன்னும் எழுதவில்லை என்பதை உணர்ந்தேன். நிறைய காரணங்கள் இருக்கு...
இந்த 'படிப்பு' என்ற விஷயத்தை கண்டுபிடித்தவனை தீவிரமா தேடிகிட்டு இருக்கேன் கொலைவெறியோட!!
இரண்டு வாரத்துக்கு முன்னாடி, கிரிக்கெட் பயிற்சியின் போது muscle pull ஆச்சு. கொஞ்ச நாள்ல சரியாயிடும் என்று பார்த்தால் வலி அதிகரித்துவிட்டது இரண்டு கால்களிலுமே. டாக்டர்கிட்ட போனேன்.
"your muscle fibre is torn. u should not train for 3 weeks." என்ற பெரிய குண்டை என் தலையில் போட்டார். அதிக நேரம் நடக்க கூடாதாம். நிக்க கூடாதாம். கனமான பொருட்களை தூக்க கூடாதாம். கால்களில் 4 மணி நேரத்துக்கு ஒருமுறை icepack வைக்கனுமாம்.
அவர் 'no training' என்ற சொன்னபோது, எனக்கு அழுகையே வந்துச்சு. இப்ப தான் main teamல விளையாட ஆள் select பண்றாங்க. இந்த நேரத்துல இப்படி ஆச்சுன்னு மனசு நொந்துபோச்சு.. அடுத்த வாரம் என் முதல் match விளையாட வேண்டியது....ஆனா போகமுடியாது!!!
கஷ்டம் singleலா வராது. கூட்டமா தான் வரும்! அதுக்கு அப்பரம், கையில ஒரு பெரிய கட்டி மாதிரி வந்து இருக்கு. என்னவென்றே தெரியல! கைய தூக்க முடியல....
கொடுமைக்கு மேல் கொடுமை!
ப்ளாக்ல எழுதும் ஆசையும் உற்சாகமும் இல்லாமல் போய்விட்டது. அதான் இங்க தலைக்காட்ட முடியல.
Aug 24, 2008
Aug 15, 2008
காதல் எனப்படுவது....யாதெனில்
இந்த தொடர் பதிவோட்டத்தில் என்னை இணைத்த திவ்யாவுக்கு நன்றி! எழுத முடியுமா? என்று கேட்டபோது, சரி என்று தைரியமாக சொன்னேன். ஆனால், எழுத உட்காரும்போது, வார்த்தைகள் வர அடம்பிடிக்குது. முக்கியமான போஸ்ட்கள் (அதாவது, இது போன்றவை) எழுதும்போது, ஆழ்ந்த சிந்தனை தேவை. ஆக, பக்கத்து தெருவில் இருக்கும் பார்க் சென்றுவிடுவேன். அங்க உட்கார்ந்து யோசிச்சாவது, ஏதாச்சு தோணுமான்னு தான்! இதற்கு முன்னால் எழுதியவர்களின் சிலர் பதிவுகளை பார்த்து மிரண்டுவிட்டேன்! சரி கவிதையா எழுதிவிடுவோம் என்று வெள்ளை ஜிப்பா போடாத வைரமுத்து போல யோசித்தேன்...
காதல் எனப்படுவது
காட்டுத்தீயாக இருந்தால்
வா,
நாம் இருவரும்
குளிர்க்காய்வோம்!
காதல் எனப்படுவது
கானல் நீராக இருந்தால்
வா,
நாம் இருவரும்
அதில் மறைந்துபோவோம்!
காதல் எனப்படுவது
கரிசல்காடாக இருந்தால்
வா,
நாம் இருவரும்
அதில் நடந்து செல்வோம்!
காதல் எனப்படுவது
புயல் காற்றாக இருந்தால்
வா,
நாம் இருவரும்
கைகோர்த்து பறந்து செல்வோம்!
காதல் எனப்படுவது
ஆகாய சந்தையாக இருந்தால்
வா,
உன் கண்களைபோல் இருக்கும்
நட்சத்திரங்களையும்
உன் முகம்போல் இருக்கும்
நிலாவையும்
வாங்கி வருவோம்!
எழுதிமுடிப்பதற்கு,2 கிலோ மீட்டர் ஓடி முடித்ததுபோல் ரொம்ப tiredaa போயிட்டேன். இதை எழுதுவது கஷ்டம், ஆனா, அடுத்து யாரை கூப்பிடலாம் என்பது ரொம்ப ஈசி!! தற்போது கவிதைகளா கொட்டி தீர்க்கும் கார்த்திக் அவர்களை அடுத்து அழைக்கிறேன்... வாங்கப்பா மின்னல்...!!:)

Aug 13, 2008
ஜோ & சூர்யாவின் மகளுக்கு ஒரு வயசு
ஆகஸ்ட் 10 தேதி தியாவின் முதல் வயசு பிறந்தநாள். புள்ள ரொம்ம்பப cutaa இருக்கு!! 
உலகத்துல 7 பேரு ஒரு மாதிரி இருப்பாங்களாம். அது உண்மை தான் நினைக்குறேன். என் பக்கத்துவீட்டு சீன பையனுக்கு 2 வயசு தான் ஆகுது. அவனும் அசல் தியா மாதிரியே இருக்கான்! ம்ம்ம்...குழந்தைகள் என்றாலே ரொம்ம்பப cute தான் போல.
(படத்தில்- நக்மா, நக்மாவின் தந்தை, சிவக்குமார், சூர்யாவின் அம்மா, தியாவை தூக்கி வைத்திருப்பது சூர்யாவின் தங்கை, சூர்யா, ஜோ)ஆமா, கல்யாணம் ஆனாலே, பொண்ணுங்க ஏன் இப்படி குண்டாபோயிடுறாங்க...ஜோ எப்படி இருந்துச்சு...இப்ப...ம்ம்ம்ம்ம்....
(படங்கள்- www.indiagltiz.com)
Aug 12, 2008
அக்காவுக்கு பிடிக்காத நடிகர்
போன வாரம் நான், என் அக்கா, எங்க தோழன் மூவரும் அஞ்சப்பர் கடைக்கு சாப்பிட போனோம். அவங்க இரண்டு பேரும் தான் சாப்பாடு ஆர்டர் பண்ணாங்க... எனக்கு இருந்த பசி மயக்கத்துல ஒன்னும் புரியல்ல...
சாப்பாடு வந்துடுச்சு... நான் என் வேலைய ஆரம்பித்தேன். சாப்பிட்டு கொண்டிருந்தபோது, தோழன் திடீரென்னு கேட்டேன் "என்ன காயத்ரி,3 வருஷமா காலேஜ் படிக்குற.. boyfriend எவனாச்சு இருக்கானா?" என்று கேட்டான்.
நான் வாயில் கோழியை அமுக்கி கொண்டே "ஆமா, இருக்கான்" என்றேன். அக்காவுக்கு ஒரே ஷாக்!
"விஷால் தான் என் boyfriend" என்றேன் நான்.
"அட த்தூதூதூ...." என்று ஒரு சத்தம் கேட்க, தட்டில் இருந்த என் பார்வை எதிரில் உட்கார்ந்து இருந்த என் அக்காவிடன் சென்றது. அக்கா தான் துப்பினாள்.
"என்ன ஆச்சு"
"எனக்கு பிடிக்காத ஒரு நடிகன்னா, அது விஷால் தான்" என்றாள் அக்கா! இப்போ எனக்கு ஒரே ஷாக்! விஷால பிடிக்காத ஒரு பொண்ணா???
பிடிக்காததற்கு காரணங்களை அடுக்கி கொண்டே போனாள்.
எனக்கு பிடித்ததற்கு காரணங்களை அடுக்கி கொண்டே போனேன்.
தோழன் எங்க சண்டையை ரசித்து பார்த்து கொண்டிருந்தான்.....

Subscribe to:
Posts (Atom)