Oct 2, 2009

ஜஸ்ட் சும்மா(2/10/09)

இந்த வாரம் லீவு. ஆக, நிறைய படங்கள் பார்க்க வாய்ப்பு இருந்தது. the ugly truth, whatever works, he's just not that int you, PS. i love you ஆகிய படங்களை பார்த்தேன். முதல் இரண்டும் தற்போது ஓடிகொண்டிருக்கும் படங்கள். மற்றவற்றை டிவிடியில் பார்த்தேன். இதில் ரொம்ப பிடித்த படம் the ugly truth. ரொம்ப சிரிப்பா இருந்துச்சு!!
பார்த்த அனைத்துமே காமெடி கலந்த காதல் கதைகள் தான்!

the ugly truth மற்றும் PS i love you படங்களில் நடித்த gerard butlerயை ரொம்ம்ம்ம்ம்ம்ப பிடிச்சு போச்சு!!!! ஹிஹி....

------------------------------------------------------------------------------------------

ஜக்குபாய் மற்றும் வேட்டைக்காரன் பாடல்களை கேட்டேன்.

வேட்டைக்காரன்: விஜய் ப்ளஸ் விஜய் ஆண்டனி....கேட்கவா வேண்டும்! ஆட்டம் போட வைக்கும் பாடல்கள். அதிரடியான வரிகள். என் அக்கா பாடலை கேட்டுவிட்டு சிரிச்சா(அவள் ஒரு அஜித் ரசிகை).... என்கிட்ட வந்து, " நான் அடிச்சா தாங்க மாட்டே...." பாடலை கேட்க சொன்னாள். அப்போது தான் முதன் முதலாக பாடலை கேட்டேன். எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. இப்பாடல் காட்சியில் விஜயின் மகன் ஆட போகிறான் என்ற தகவல் கொஞ்ச நாளைக்கு முன்னாடி வந்துச்சு!

புலி உறும்புது பாடலில் ஒரு வரி வரும், "இவன் வரலாற்றை மாற்ற போகும் வருங்காலம் டா"

ம்ம்ம்.....ரொம்ப நல்லா இருந்துச்சு. (என்னைய மாதிரி தீவிரமான ரசிகர்கள் இருக்கும்வரை விஜய் என்ன தான் மொக்கை படங்களை கொடுத்தாலும் டாப்ல தான் இருப்பார்.... உடல் மண்ணுக்கு உயிர் விஜய்க்கு!- அகில உலக விஜய் ரசிகர் மன்றம்)

அடுத்து, ஜக்குபாய் பாடல்கள். இசை அமைத்தவர் எங்க ஊரு ஆளுங்க. சிங்கப்பூரை சேர்ந்தவர்! இத சொல்லும்போதே எனக்கு அம்புட்டு பெருமையா இருக்கு!!! பெயர் ரஃபி. ஏ ஆர் ரகுமானிடம் 10 வருஷமா assistantஆ வேலை பார்த்தவர். ரொம்ப அமைதியான ஒரு நபர் ரஃபி. இங்க நிறைய டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார். அவருடைய 4 தம்பிகளும் இசையில் ஆர்வம் உடையவர்களும்கூட.

முதல் படம் இது அவருக்கு. பெரிய ஹிட் பாடல்கள் இல்லை என்றாலும், ஆப்பிள் லெப்டாப் என்னும் பாடல் கொஞ்ச நல்லா இருக்கு!! கேட்டு பாருங்க.
-----------------------------------------------------------------------------------

oprah winfrey நிகழ்ச்சியில் அபிஷேக் பச்சனும் ஜஸும் கலந்து கொண்டனர். ஹாஹா....ரொம்ப வயதான தம்பதியினர் மாதிரி தெரியுறாங்க....ஹிஹி...நிகழ்ச்சியை பார்க்க இங்க செல்லவும்

http://www.youtube.com/watch?v=_lzu4wYU7Cc&feature=related

Oct 1, 2009

அன்பே, உன்னால் மனம் crazy-4

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் வரை இருவருமே பேசிகொள்ளவில்லை. உள்ளூர இருந்த துயரத்தை இருவருமே காட்டிகொள்ளவில்லை. பயம், வருத்தம், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தனர் இருவரும். வரும் வழியில் விஷ்ணுவிற்கு அடிக்கடி ஆபிஸிருந்து ஃபோன் வந்து கொண்டிருந்தது.

"விஷ்ணு, நம்ம ஹேட் ஆபிஸ் வரைக்கும் போகனும். டில்லிக்கு இன்னிக்கே ப்ளைட் புக் பண்ணவா? சாரி...உங்க வீக்கெண்ட spoil பண்ணிட்டேனா? சாரி...ஆனா இது கொஞ்சம் அவசரம். இந்த வேலைய முடிச்சுட்டு நீங்க இன்னும் நாலு நாளு extra லீவு எடுத்துக்குங்க...பட் இன்னிக்க மட்டும்...கொஞ்சம்....." மறுமுனையில் இருந்த மேனேஜர் வற்புறத்தினார்.

கவலையில் மூழ்கி கிடந்த விஷ்ணு அமைதியாய், "சாரி சார். என்னால போக முடியாது. வேற யாராச்சயும் பாத்துக்குங்க." சொல்லிவிட்டு ஃபோனை வைத்துவிட்டார். அதை கவனித்தாள் தனுஜா. சிறிது நேரம் கழித்து, அதே ஆபிஸர் அதே வேண்டுகோளுடன். ஆனால், எதற்கும் இணங்கவில்லை விஷ்ணு.

இந்த நேரத்தில் தனுஜாவை விட்டு போக அவனுக்கு மனம் வரவில்லை. எப்போதும் கலகலப்பாக இருக்கும் வீடு அன்று சோகபூமியாய் காட்சியளித்தது. தனுஜா படுக்கையில் படுத்து இருந்தாள். அவள் தேம்பி தேம்பி அழுதாள். விஷ்ணு என்ன செய்வது என்று தெரியாமல் சோபாவில் உட்கார்ந்து இருந்தான். மதிய வேளை ஆனது. மதிய உணவை தயாரிக்கும் மனநிலையில் யாரும் இல்லை.

கொஞ்ச நேரம் கழித்து விஷ்ணு தனுஜாவை பார்க்க சென்றான். அவள் அழுவதை கண்ட விஷ்ணு அவளது கன்னங்களில் வழிந்த கண்ணீரை துடைத்தவாறு, "அழாத மா."

எழுந்து உட்கார்ந்த தனுஜா அவன் தோள்மீது சாய்ந்து கொண்டாள்.

"நீ எவ்வளவு ஆசையா இருந்த...ஐ எம் சாரி விஷ்ணு...." அவளால் அழுகையை நிறுத்த முடியவில்லை.

"நீ எதுக்குடா சாரிலாம் சொல்ற....இது யாருடைய தப்பும் கிடையாது. it meant to happen and it has happened. that's all. no one is to be blamed. ஆனா, நீ இப்படி இருக்குறது தான் எனக்கு ரொம்ப கவலையா இருக்கு. cheer up da....please...." என்று அவன் ஆறுதல் சொன்னாலும் அவன் குரலில் தெரிந்தது சோகம்.

மறுபடியும் ஃபோன் வந்தது விஷ்ணுவிற்கு. அப்போது அதை எடுத்து பேச முற்பட்ட விஷ்ணுவின் கைகளிலிருந்து தனுஜா ஃபோனை வாங்கி கொண்டாள். அவள் பேசினாள்,

"சொல்லுங்க சார்...ம்ம்ம்...சரி. no problem sir. he will be there in one hour. thanks."

"தனு, நான் போகலடா....உன்னைய இந்த நிலைமைல....no i don't want to go."

"listen vishnu, i'll be fine soon. நீ கவலை படாம போயிட்டு வா. பாவம்...ரொம்ப முக்கியமான வேலைன்னு சொல்றாருல.....நீ போ....i will be alright soon." கண்ணீர் துளிகளை துடைத்து கொண்டு புன்னகையித்தாள்.

"are you sure?"

ஆம் என்று தலையாட்டினாள். அவனுடைய பெட்டியை தயார் செய்தாள். வாசல் கதவு அருகே நின்று வழியனுப்பி வைத்த தனுஜாவின் நெற்றியில் ஆறுதல் முத்தம் ஒன்று கொடுத்தான் விஷ்ணு.

அரை மணி நேரம் கழித்து வாசல் மணி ஒலித்தது. தனுஜா கதவை திறந்தாள். ஆச்சிரியம்! அங்கே விஷ்ணு. முதன் முதலாக அவனது கண்கள் கலங்கி இருப்பதை கண்டாள். கலங்கிய கண்களுடன் விஷ்ணு, "உன்னைய விட்டு போக முடியலடா" என்று ஓடி வந்து கட்டிபிடித்தான் தனுஜாவை.

*******************************

"we'll be right back after a short commerical break." oprah winfrey சொன்னதை கேட்டு சுயநினைவுக்கு வந்தாள் தனுஜா. அச்சம்பவம் நடந்து ஓராண்டு ஆனதை நினைவு கூர்ந்தாள். அவர்களது நட்பு ஆரம்பித்த விதம், காதல் மலர்ந்த தருணம், கல்யாணம், அவனது சிரிப்பு, அவன் பொழிந்த பாசம், அன்பு. சண்டை போட்டு கொள்ளும் நேரங்களில்கூட அது சண்டையாக முடியாமல் ஏதேனும் காமெடியாகி பேசி முற்றுபுள்ளி வைக்கும் அவனது சாமர்த்தியம் என்று பலவற்றை எண்ணினாள். அவனை ரொம்ப 'மிஸ்' பண்ணுவதாக உணர்ந்தாள்.

திடீரென்று ஒரு சத்தம் அறையிலிருந்து. ஓடி சென்று பார்த்தாள். பொருட்கள் கீழே விழுந்துகிடக்க, அதன் அடியில் விஷ்ணு கிடப்பதை பார்த்து குபீர் என்று சிரித்தாள் தனுஜா.

"அடி பாவி, ஒருத்தன் இங்க விழுந்துகிடக்குறது உனக்கு காமெடியா இருக்கா...." என்றான் விஷ்ணு. பொருட்களை எடுத்து அதன் இடத்தில் வைத்தவாறு தனுஜா,

"நான் தான் சொன்னேன்ல.....ஐயாவுக்கு இந்த மாதிரி வேலையெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு."

"அது என்னமோ உண்மை தான் தனு. பாதி வேலை கூட முடியல. நீங்க பொண்ணுங்க எப்படி தான் எல்லாத்தையும் சரியா செய்றீங்களோ....உங்களுக்கு எல்லாம் தனித்தனியா சிலை வைக்கனும்!"

"இந்த ஐஸ் வச்சது போதும்....." சிரித்தாள் தனுஜா.

"i give up babe. இந்த challengeல நீ தான் ஜெயிச்ச...." விஷ்ணு சொல்ல அதற்கு தனுஜா,

"இல்ல டா...நீ தான் வின்னர்."

அவள் நினைவுகூர்ந்தவற்றை அவனிடம் சொன்னாள். இருவரும் பழைய நினைவுகளை பற்றி பேசி மகிழ்ந்தனர்.

"i think i really miss you." என்றாள்.

"ஹாஹா....thank god. finally you agreed!"

"so........." என்று இழுத்தாள் அவள். அவன் உதடுகள் அருகே சென்றது அவள் உதடுகள்.

"how about the report that you need to send?" என்றான் அவன்.

"all programs cancelled!" என்றாள்.

"you mean there is going to be something something today....."அவன் சிரித்தான்.

"not today....right now!" என்றவளின் உதடுகள் அவனது உதடுகளோடு lock ஆனது. அவ்வாறே அறை கதவும் lock ஆனது.

*PLEASE DO NOT DISTURB THEM*

***முற்றும்***

Sep 27, 2009

அன்பே, உன்னால் மனம் crazy-3

தனுஜாவை வெளியே கூட்டிகொண்டு போக விஷ்ணுவிற்கு ஆசை இருந்தாலும், உள்ளூர ஒரு பயம். ஃபோனில் மட்டுமே பேசி இருக்கிறார்கள். அவ்வபோது பண்டிகை நாட்களில் வாழ்த்து குறுந்தகவல்கள். முதன் முறை சந்திக்க போகும் தருணத்தை எண்ணி விஷ்ணுவிற்கு மகிழ்ச்சி. இருந்தாலும், அவள் அதை எப்படி எடுத்து கொள்வாள் என்று தெரியவில்லை. தனக்கு வேலை கிடைத்துவிட்டது என்னும் தகவலை அவளிடம் நேரில் சொல்ல வேண்டும் என்ற ஆசை.

குறுந்தகவல் அனுப்பினான். குறுந்தகவல் என்னும் ஒன்றை கண்டுபிடித்தவனுக்கு சிலை வைப்பான் விஷ்ணு. அது மட்டும் உறுதி!

விஷ்ணு: ஹாய் தனுஜா, என்ன பண்ற?

தனுஜா: எருமைமாட்டுலேந்து பால் எடுத்துகிட்டு இருக்கேன். பின்ன என்ன மேன்.... project work விஷயமா தலைய பிச்சுகிட்டு இருக்கேன். என்ன இந்த நேரத்துல மெசேஜ்? anything important....

விஷ்ணு:ஹாஹா....ஒன்னுமில்ல சும்மா தான்.வெளியே போகலாமா?

குறுந்தகவலை பார்த்தவுடனே ஃபோன் செய்தாள் தனுஜா.

தனுஜா, "ஹாலோ விஷ்ணு, என்ன சாருக்கு திடீரென்னு என்னைய பாக்கனும்னு தோணுது?" சிரித்தாள்.

விஷ்ணு, "ரொம்ப நாள் பேசிகிட்டு இருக்கோம்.... நேரடியா பாத்துகிட்டா நல்லா இருக்குமேனு தான்..." இழுத்தான்.

"என்ன நல்லா இருக்குமேன்னு...." அவன் இழுத்ததுபோல் இவளும் பாவனை செய்து விஷ்ணுவை கிண்டல் செய்தாள்.

"சரி உனக்கு பிடிக்கலைன்னா, விட்டுடு!" சற்று கோபம் வந்தது விஷ்ணுவிற்கு.

"ஓய் ஓய்....எதுக்கு உனக்கு இப்படி கோபம் வருது. சரி போவோம். எங்க? எப்போ?" என்றாள் தனுஜா.

அவள் ஓகே சொன்னதுமே இளையராஜாவின் RR சவுண்டுகள் அவன் மனதில் அலைபாய்ந்தன.

"how about movie? நாளைக்கு?" கேட்டான் விஷ்ணு.

"முதன் முதலா பாத்துக்கு போறோம்....யாராச்சு படத்துக்கு போவாங்களா? நாளைக்கு i am not free." தனுஜா சொன்னாள்.

"நான் தான் உன்னைய முன்னாடியே பாத்து இருக்கேனே?" அன்று பார்த்ததை தனுஜாவிற்கு ஏற்கனவே சொல்லியிருந்தான்.

"நீ பாத்து இருக்க....நான் உன்னைய பார்த்ததுகிடையாதே? சரி சரி....வரேன்... அங்க யாரு கேன பய மாதிரி இருக்காங்களோ....அது நீயா தான் இருப்பே.... அடுத்த வாரம் திங்கட்கிழம போலாம்" சிரித்தாள் தனுஜா.

"ஐயாவோட smartness நீ பாத்து அசந்துபோயிட போற... அடுத்த வாரமா? இந்த வாரம் வெள்ளிக்கிழம??" என்றான்.

"ஆமா ஆமா....ambulanceலாம் standbyல இருக்க சொல்லிடுறேன்....அழகுல பாத்து மயங்கி விழுந்துட்டேனா? எனக்கு இந்த வாரம் நிறைய வேலை இருக்கு."

"ஷ்ஷ்... சனிக்கிழம?...." என்றான் விஷ்ணு.

"ஃபிரண்ட் அக்காவோட கல்யாணம்?" என்றாள் தனுஜா.

"என்ன எப்ப பாத்தாலும் அது இருக்கு இது இருக்குனு சொல்ற. எங்க ஏரியா எம் பிய பாக்ககூட சீக்கிரம் appointment வாங்கிடலாம் போல...." என்றான்.

"நாங்கலாம் அடுத்த 6 மாசத்துக்கு ஒரே பிஸி. ஏதோ சின்ன பையன் கேட்குறானேன்னு வரேன்....வேட் பண்ண முடியலன்னா.... no problem! i am fine with it." சற்று பிகு பண்ணினாள். ஆனால், அது அவனுக்கு பிடித்து இருந்தது.

"alrite alrite, அடுத்த வாரமே பாப்போம்." என்றவன் நேரம், இடம் போன்ற தகவல்களை கொடுத்தான் அவளிடம்.

அந்த நாளும் வந்தது. குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் காத்துகொண்டிருந்தான் விஷ்ணு. சின்ன பயம், ஒருவித சந்தோஷம்.
தனுஜாவை கண்டுகொண்டான், கையாட்டினான். அவனை நோக்கி அவள் நடந்து வந்தாள்.

இருவரும் புன்னகைகளை பரிமாறிகொண்டனர்.

"ஹாய்." இருவரும் சொன்ன முதல் வார்த்தை. ஃபோனில் அரட்டையும், கிண்டலுமாக இருந்தாலும், நேரில் சந்தித்த போது இருவரும் சற்று அமைதியாக இருந்தனர்.

"என்ன தனுஜா ஃபோன்ல செமயா கிண்டல் அடிப்ப..இப்ப அமைதியா இருக்க?"

"நீ மட்டும் என்னவா.....?" என்று தனுஜா ஆரம்பிக்க, இருவரும் சகஜமாக பேசினர், சிரித்தனர், ஒருவருக்கொருவர் கிண்டல் அடித்து கொண்டனர்.

படம் பார்த்துமுடித்து வெளியே வந்தனர் இருவரும்.

"சாப்பிட போலாமா?" கேட்டான் விஷ்ணு. தனது கைபேசியை ஏதேனும் மெசேஜ் வந்து இருக்கா என்பதை பார்த்தவாறு பதில் அளித்தாள்,

"ம்ம்ம்...போகலாமே?"

"உனக்கு என்ன பிடிக்கும்?" என்று கேட்டான் விஷ்ணு.

"எனக்கு ஓசாமா பல்லு விலக்குற ஸ்டைல் ரொம்ம்ம்ம்ம்ப பிடிக்கும்" என்று நக்கல் அடிக்க, கைகளை அகல விரித்து சிரிக்க ஆரம்பித்தவன் நிறத்தவில்லை.

"ஓய்..control your laughter dude! this is a public place." என்றாள் தனுஜா.

"உனக்கு மட்டும் எப்படி இந்த மாதிரி மொக்கை ஜோக் எல்லாம் அடிக்க வருது... நான் கேட்டது சாப்பாட்டுல என்ன பிடிக்கும்னு?"

"மொட்டையா கேட்டா வேற என்னத்த சொல்றது? சாப்பாடுன்னு நீ சொல்லவே இல்லையே..." என்று பேசி கொண்டே இருவரும் ஒரு உணவகத்திற்குள் நுழைந்தனர்.

சாப்பாடு வருவதற்காக காத்து கொண்டிருக்கும் வேளையில்,

"எனக்கு வேலை கிடைச்சுடுச்சு....உன்கிட்ட சொல்ல தான் இந்த அவுட்டிங்!" என்றான்.

தனுஜா கண்களில் தெரிந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சந்தோஷம் போங்க,

"என்ன இப்ப தான் சொல்ற? congrats man...." என்று அவள் கைகளை நீட்டினாள். அவனும் நீட்டினான். அந்த ஸ்பரிசம் ஒரு கணம் அவனுக்குள் விளக்கமுடியாத மாற்றங்களை கொண்டு வந்தது. அவளையே கண்கொட்டாமல் பார்த்தான்.

"ஹாலோ, ஆர் யூ ஒகே?" அவன் கண் முன் கையாட்டினாள்.

"இல்ல....shake hands பண்ணபோது அருவி தண்ணி பின்னாடி ரிவர்ஸ்ல போய் freeze ஆனுச்சு, காத்து ஒரு நிமிஷம் நின்னு போச்சு. வானத்துல மேகங்களுக்கு ரெட் சிக்னல் விழுந்துச்சு. இந்த மாதிரி ஒரு ஃவீல் வந்துச்சு.....உனக்கு ஒன்னும் ஃவீல் ஆகலையா? என்றான் விஷ்ணு.

சிரித்தபடியே தனுஜா, " ஏன் ஆகல? ரோட்ல மாடு நின்னு மாதிரி. குப்பையில பன்னிக்குட்டிங்க தேடுறத்த நிறுத்துன்னு மாதிரி.....சாக்கடையில எலிங்க ஓடுறது நின்ன மாதிரி இருந்துச்சே....."

மறுபடியும் சத்தம்போட்டு சிரித்தான்.

"நீ ரொம்ப தமிழ் படம் பாத்து கேட்டு போய் இருக்க?" புன்னகையித்தாள் தனுஜா.

அவளது கண்களையும் உதடுகளையும் பார்த்தவண்ணம் இருந்தான். அதை கண்டு கொண்ட தனுஜா மேசையின் மேல் இருந்த அவனது கைகளை செல்லமாய் அடித்து, " hey pervert, stop staring at me."

அவன் புன்முறுவலித்தான்.

"எங்க வேலை? எந்த கம்பெனி?"

"மும்பைல.... " என்றவுடன் அவள் முகத்தில் சோகரேகைகள் பரவுவதை பார்த்தான் விஷ்ணு.

"எப்ப போற?" என்றாள்.

"அடுத்த வாரத்துல...."

"எப்ப வருவ...?"

"திருப்பி எதுக்கு வரனும்? அங்கயே இருந்திட வேண்டியது தான்...." என்றான். தனுஜாவிற்கு கோபம் கலந்த அழுகை வர,

"அப்பரம்....எந்த இதுக்குடா என்னைய...." வாக்கியத்தை முடிக்கவில்லை. வேறு பக்கம் திருப்பிகொண்டாள் முகத்தை.

"உன்னைய....என்ன?" வேண்டுமே என்றே வெறுப்பேற்றினான்.

"ஒன்னுமில்ல." என்றாள்.

"சரி சரி....சும்மா தான் சொன்னேன். லீவு கிடைக்கும்போது திருப்பி இங்க வந்துடுவேன்." என்றான்.

"ம்ம்ம்....." அமைதிகாத்தாள் தனுஜா.

பின்னர், பலமுறை வெளியே சென்றனர். இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து இருந்தாலும், அதை சொல்லி கொள்ள தைரியம் இல்லை. தைரியம் இல்லை என்பதும் இருவருக்கும் தெரியும்.

பம்பாயில் விஷ்ணு பிஸியாக இருந்தான். தனுஜாவிற்கும் வேலை பளு அதிகரித்தது. இருவரும் பேசி கொள்ளும் வாய்ப்புகள் குறைந்தன. தனுஜாவின் பிறந்தநாள் அன்று அவளது ஆபிஸில்....

"ஏய் பேப், உனக்கு யாரோ lobbyல வேட் பண்ணுறாங்க" receptionist சொல்ல தனுஜாவும் வந்தாள். அங்கே விஷ்ணு. அவள் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. பல நாட்கள் பேசவில்லை என்ற குற்ற உணர்வு அவளது கண்களில்.

"விஷ்ணு, what a surprise dude! how have you been?"

"i am good. how are you? happy birthday thanuja"

"தேங் யூ. தேங்ஸ் தேங்ஸ்.....நீ எப்ப மும்பைலேந்து வந்த? ஏன் ஃபோன் பண்ணல?" என்று கேள்விகளை அடுக்கி கொண்டே சென்றாள்.

எந்த கேள்விகளுக்கும் பதில் சொல்லவில்லை விஷ்ணு. அவன் சொன்னது,

"ஐ லவ் யூ தனு. will you marry me?"

என்றாவது ஒரு நாள் சொல்வான் என்று காத்து கொண்டிருந்த தனுஜாவிற்கு அவன் சொன்னது அளவில்லாத சந்தோஷத்தை தந்தது.

***

" ரிப்போர்ட்ட முடிச்சுட்டீயா?" curtain துணிகளை மாற்றியவாறு விஷ்ணு.

"doing it.... do you need help to change the curtains?"

"i'll manage it dear." என்றான். அறைகளுக்கு சென்று ஃபோட்டோ ஃபிரேம்களை சுத்தம் செய்தான். அச்சமயம் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்து கொள்வதற்காக தனுஜா டிவி பார்த்தாள்.

oprah winfrey நிகழ்ச்சியை பார்த்தாள். குழந்தைநல மருத்துவர் ஒருவர் பேசியதை கேட்டு தனுஜாவின் நினைவு அலைகள் பின்னோக்கி சென்றன....

***
"ஐ எம் சாரி mrs vishnu...but உங்களுக்கு miscarriage ஆச்சு." மருத்துவர் கூறினார்.

(பகுதி 4)

Sep 26, 2009

அன்பே, உன்னால் மனம் crazy- 2

பகுதி 1 

தனுஜா பொழிந்து தள்ளினாள் தனது கோபங்களை. மறுமுனையில்,

"ஹாலோ ஹாலோ, யாரு நீங்க? உங்களுக்கு என்ன வேணும்? எனக்கு ஒன்னுமே புரியல...."

தனுஜா, "தப்பு செஞ்சிட்டு, தப்பிக்க பாக்குறீங்களா? உங்ககிட்ட அளவு ஜாக்கெட் கொடுத்து ஒரு மாசம் ஆச்சு. சரியா தைக்க சொன்னா....இப்படி பண்ணி வச்சு இருக்கீங்க?"

"யாரு? சாரி....நீங்க.... ராங்கா ஃபோன் பண்ணிட்டீங்க?"

தனுஜாவுக்கு கோபம் கொந்தளிக்க, "செய்றதயும் செஞ்சுட்டு......" மறுபடியும் 'பூஜை'யை ஆரம்பித்தாள்.

தாங்கமுடியாத விஷ்ணு, "ஸாட்ப்பிட்! நீங்க ஃபோன் பண்ண நம்பர சொல்லுங்க?"

"98*********34" என்றாள்.

சிரித்தபடியே, "எல்லாம் சரி தான்....கடைசில சொன்னீங்களே 34...அது இது இல்ல...என் நம்பர் 43. தப்பா ஃபோன் பண்ணது நீங்க?"

தனுஜா கஞ்சி திண்ண கருப்பான்பூச்சிபோல்(எத்தன நாளைக்கு தான் இஞ்சி திண்ண குரங்குன்னு சொல்றது) ஆனாள்.

"ஐயோ சாரிங்க சாரி.....என் tailor பெயரும் விஷ்ணு தான்.... நான் தான் தப்பா டையல் பண்ணிட்டேன்...சாரி சாரி...." என்றாள் தனுஜா.

"குஷி ஜோதிகா மாதிரி சாரி சொன்னா விட்டுடுவோமா?"

"அப்பரம் என்ன வேணும்?" பவ்யமான குரலில் தனுஜா.

"மானம் நஷ்ட வழக்கு போடுவோம்....சி எம் வரைக்கும் கொண்டு போவோம். பஸ கொளுத்துவோம். காலேஜ் ஸட்ரைக் விடுவோம்....டில்லி வரைக்கும் போகும் இந்த மேட்டர்! ஒரு சின்ன பையன போய்....அதுவும் ஒரு நல்ல சின்ன பையன போய்....." சிரித்தான் விஷ்ணு.

"ஹாலோ மிஸ்ட்டர் இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல...."

"anyway, sorry i gtg. sorry."என்று ஃபோனை கட் செய்ய, விஷ்ணு

"சரியான ஜாக்கெட்ட போட்டு போங்க..ஹாஹா..."

தனுஜா ஃபோன் லைன்னை கட் செய்தாள். விஷ்ணு தனது கைபேசியில் அவளது நம்பரை பார்த்து, "ம்ம்ம்...she has a sweet voice." நம்பரை save செய்துவைத்து கொண்டான்.

சில மாதங்கள் கழிந்தன. ஒருநாள் விஷ்ணு தனது தூரத்த சொந்தக்காரரின் மகளின் காதுகுத்து விழாவிற்கு சென்று இருந்தான். செம்ம போர் அடித்ததால் என்ன செய்வது என்று தெரியவில்லை விஷ்ணுவிற்கு. தனது வயதில் உள்ள பையன்கள் யாருமில்லை அரட்டை அடிப்பதற்கும்.

அவனுக்கு தனுஜாவின் ஞாபகம் வந்தது.

குறுந்தகவல் அனுப்பினான் தனுஜாவிற்கு,

விஷ்ணு: ஹேய் ஜாக்கெட் பொண்ணு, எப்படி இருக்க?

சிறிது வினாடிகள் கழித்து, பதில் குறுந்தகவல் வந்தது.

தனுஜா: ஓய், யாரு இது? mind your language.

விஷ்ணு: அட பாவமே அதுக்குள்ள மறுந்துட்டீயா? நான் தான் ராங் நம்பர் விஷ்ணு... ஜாக்கெட்ட சரியா தைக்கலன்னு நம்மூர் நாட்டாமைக்கு புகார் மனு அனுப்ப பாத்தீங்களே, அந்த பாவப்பட்ட ஜன்மம்.

தனுஜா: ஓ ஓ சாரி சாரி. ஹாய். ஆமா, ஏன் திடீரென்னு ஸ் எம் ஸ்?

விஷ்ணு: ஒன்னுமில்ல சும்மா! போர் அடிச்சது..அதான்...கடலை போடலாம்னு!

தனுஜா: வாட்??? கடலை?? ஹாலோ விஷ்ணு, நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்ல.

விஷ்ணு: ஓ பட், நான் அப்படிப்பட்ட பையன்!

தனுஜா: மனசுல பெரிய காமெடியன் நினைப்பா?

விஷ்ணு: ம்ம்ம்....இப்ப என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க? ஐ மின் இருக்க?

தனுஜா: ஹாஹா...மரியாதையலாம் குறையுது! நான் என்ன பண்ணிகிட்டு இருந்தா உங்களுக்கு...ஐ மின் உனக்கு என்ன? எதுக்கு தேவையில்லாத கேள்வி?

விஷ்ணு: சரி...அப்ப நாட்டுக்கு ரொம்ப தேவையான கேள்விய கேக்குறேன்? உங்களுக்கு தெரியுமா ஜோதிகாவுக்கும் சூர்யாவுக்கும் கல்யாணம் ஆக போகுதுன்னு!! :)

தனுஜா: விஷ்ணு, you are a total crappy fellow i tell u!

விஷ்ணு: but am dead sure that you are very much enjoying it!

தனுஜா: hahaha...whatever dude! நீ படிக்குறீயா? க்ளாஸ்ல கடைசி பெஞ்சா? எப்ப பாத்தலும் பரிட்சைல ஃவேல் பண்ணிடுவீயா?

விஷ்ணு: ஹாஹா...இப்ப உனக்கு மனசுல அலைபாயுதே ஷாலினின்னு நினைப்பா?

தனுஜா: எல்லாம் பொண்ணுங்களும் ஒரு விதத்தில் ஷாலினி மாதிரி அழகு தான். இந்த பசங்கள தான்....மாதவன் மாதிரி ஒருத்தர பாக்குறது ரொம்ம்ம்ம்ம்ப rare! the world is suffering from an imbalance of good guys! tsk tsk...

விஷ்ணு: ஹாஹாஹா....நீங்க சொன்ன ஜோக்க தஞ்சாவூர் பெரிய கோயில தான் எழுதி வைக்கனும்!!

தனுஜா: hoi!! என்ன நக்கலா?

விஷ்ணு: சரி சரி...கூல் கூல்.... நான் வேலை தேடிகிட்டு இருக்கேன்.... நீங்க?

தனுஜா: ஓ..ஐயா வெட்டி ஆபிசரோ? ம்ம்ம்.... நான் ஒரு mncல வேலை பாக்குறேன்.

விஷ்ணு: ஹாலோ அப்படி ஒன்னும் கேவலமா நினைக்காத. வேலை இல்லாம வெட்டியா இருக்குறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா!! அதுக்கலாம் ஒரு தனி கலை இருக்கனும்!

தனுஜா: உனக்கு கொஞ்சம்கூட மானம், ரோஷம் சூடு சொர்ன கிடையாதா?

விஷ்ணு: சாரி பொண்ணுங்ககூட பேசும்போது அதுங்களுக்கு நான் லீவு விட்டுடுவேன்!

இதை பார்த்து விட்டு தனுஜா விழுந்து விழுந்து சிரித்தாள்.

தனுஜா: ஹாஹா.... you are such a funny funny guy! alrite, am busy now. talk to u later.

விஷ்ணு: ஹாலோ, அப்போ என் கதி? என்ன பெரிய பிஸி. இன்னிக்கு சண்டே தானே?

என்ற குறுந்தகவலை அனுப்பவதற்காக முயற்சி செய்தான். ஆனால், நெட்வோர்க் பிரச்சனை என்று கைபேசியில் காட்டியதால், விழா நடக்கும் ஹால்லுக்கு சென்றான். அங்கயும் சரியாகவில்லை. இது சிக்னல் பிரச்சனை என்பதால் ஒரு ரூம்முக்கு சென்றான்.

உள்ளே சரியான கூட்டம். சின்ன குழந்தைகள் விளையாடி கொண்டிருக்க அவன் ரூம் கதவு அருகே நின்று கைபேசியை சரி செய்து கொண்டிருந்த வேளையில் இரு பெண்கள் பேசி கொண்டே வெளியே வந்தனர்.

அதில் ஒருத்தி, "ஏய் என்ன மச்சி, கையும் ஃபோன்னுமா இருக்க? யாருகிட்ட இவ்வளவு நேரமா மெசேஜ் அனுப்பிகிட்டு இருந்த?"

இன்னொருத்தி, "அது ஒன்னுமில்ல மச்சி, அன்னிக்கு சொன்னேன்ல ஒரு ராங் நம்பர் விஷ்ணுன்னு அவன் தான். சும்மா ஸ் எம் ஸ் பண்ணிகிட்டு இருந்தான்..."

அவள், "என்னது? ராங் நம்பர் ஃபிரண்ட்ஷிப்பா? என்ன டி.....பையன் ரொம்ப கடல போடுறானா?"

இவள், "அப்படி சொல்ல முடியாது....பட்....ரொம்ப ஜாலி டைப்."

இவர்கள் பேசியதும் விஷ்ணுவிற்கு ஆயிரம் பட்டாம்பூச்சிகள் புல்லாங்குழல் வாசிப்பதுபோல் இருந்தது. தனுஜாவை அடையாளம் கண்டுகொண்டான். ஆம்ஸ்ட்ராங் நிலவில் மட்டும் கால் அடி வைத்தார் என்றால் விஷ்ணு சந்தோஷத்தால் mars, venus, neptune எல்லாவற்றிலும் கால் அடி வைத்ததுபோல் உணர்ந்தான்.

தனுஜாவை பார்த்தது 3 வினாடி என்றாலும் தன் கேமிரா கண்களால் படம் எடுத்து வைத்து கொண்டான். மனதில் அதை 'develop' செய்ய.

சில பொண்ணுங்களுக்கு அவர்களின் முகபருக்கள்கூட அழகு தான். காலை நேரத்தில் இலைகள் மேல் விழுந்துகிடக்கும் பனித்துளிகள் போல் தனுஜாவின் பொலிவான முகத்தில் கன்னங்களில் ஆங்காங்கே இருந்த பருக்கள்கூட விஷ்ணுவிற்கு அழகாய் தெரிந்தது.

***

"this is for my sweet darling."விஷ்ணு சமையல் அறையிலிருந்து ஒரு கப் ஆரஞ்சு ஜுஸ் கொண்டுவந்தான்.

"எதுக்கு டா இப்போ இது? சொன்ன வேலைய மட்டும் செய்....ஏதாச்சு செஞ்சியா இல்லையா?"

"எல்லாம் on the process of completion..... இந்த ஜுஸ குடிச்சுட்டு தெம்பா ரிப்போர்ட்ட செஞ்சி முடி. alrite. அதுவரைக்கும் உங்களிடமிருந்து விடைபெற்று கொள்வது உன் இம்சை அரசன் விஷ்ணு." சிரித்தபடி மீண்டும் சமையல் வேலைகளை முடிப்பதற்காக சென்றான். திரும்பி வந்தான்.

தனுஜாவின் லெப்டாப்பில் உள்ள 'teri ore' என்னும் இந்திபாடலை ஒலிக்க செய்யவிட்டு, "dedicating this song to you, my sweetheart."என்றபடி தனுஜாவின் கன்னங்களை கிள்ளினான்.
***

"அவள வெளியே கூப்பிடலாமா?" என்றது விஷ்ணுவின் மனசாட்சி.

(பகுதி 3)