Dec 1, 2010

எவன் டி உன்ன பெத்தான், கையில் கிடச்சா செத்தான்!

தலைப்பிலுள்ள வார்த்தைகளுக்கு சொந்தக்காரர், நாம் தேடினாலும் கிடைக்காத ஒரு முத்து, உலக எழுதி வாங்க முடியாத சொத்து, சிவப்பு வைரமுத்து, தாடி வைக்காத வாலி, இலக்கணம் பிடிக்காத பா.விஜய், இலக்கியம் அறியாத நா.முத்துக்குமார் (உஷ்ஷ்ஷ்....இதுக்கு மேல என்னால முடியல...)

தலைப்பிலுள்ள வார்த்தைகளுக்கு சொந்தக்கார் உங்கள் சிம்பு! அவர் நடித்து (அப்படின்னு நினைக்குறேன்...) வெளிவரும் படம் 'வானம்'. அந்த படத்தில் இடம்பெற்ற பாடலில் உள்ள வரிதான் இது 'எவன் டி உன்ன பெத்தான், பெத்தான், பெத்தான், கையில கிடச்சா செத்தான் செத்தான் செத்தான்!'

பாடலை கேட்டவுடன், எனக்கு 'குபீர்'னு சிரிப்பு வந்துவிட்டது. பேஸ்புக்கில் இந்த பாடலின் யூடியுப் லிங்கை போட்டேன், அதற்கு நண்பர்கள் கொடுத்த கருத்துகள் அதைவிட காமெடி. சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணா போயிட்டு.

சிம்பு கதைக்கு வருவோம்.....ஏன் பா ராசா, உன்னையெல்லாம் இப்படி எழுத சொல்லி யாரு கத்துகொடுக்கறது?? அப்பாவா?

என்னமோ போ...சிரிப்பு போலீஸ் மாதிரி...சிரிப்பு கவிஞர் மாதிரி தான் நீ எனக்கு தெரியுற! என்ன இருந்தாலும், பாடலின் வெற்றி உறுதி! நானே 100 முறை கேட்டுவிட்டேன்! (சிரிச்சு ரொம்ப நாளாச்சு பா!!!)


Nov 22, 2010

GUZAARISH- எல்லாருக்கும் பிடிக்காது

சஞ்சய் படம் என்றாலே கொஞ்சம் சர்ச்சை இருக்கும். நிறைய தில் வேணும் சில காட்சிகளை எடுக்க. சென்சார் போர்ட் ஆட்களை சமாளிக்க வேணும். ஏன் நான் அப்படி சொல்றேனா.... இந்த படத்தில் அப்படி ரெண்டு மூனு காட்சி வருது. நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்க.

கதை- euthanasia பற்றி. வாழ்க்கையை தானே முடித்துகொள்வது என்று அர்த்தம். தற்கொலை என்று அதை என்னொரு விதமாகவும் சொல்லலாம். ஆனால், இது சட்டரீதியாக அனுபதி கேட்பது. நிறைய 'நச்' வசனங்கள் இப்படத்தில்.

மொத்த படத்திற்கு பலம் ஹ்ர்த்திக் ரோஷனின் நடிப்பு- யோவ், இத்தன நாளா எங்கய்யா ஒலிச்சு வச்சு இருந்த இந்த மாதிரி நடிப்ப???

பிரமாதம்!!!! பல இடங்களில் என்னை அறியாமலேயே சத்தமாக கைதட்டினேன்.
கண்டிப்பா அடுத்த வருஷம், விருது உண்டு உமக்கு!

படம்- எல்லாருக்கும் பிடிக்காது! கொஞ்சம் art film மாதிரி இருக்கும். இரண்டாம் பாதி முதல் பாதியைவிட மெதுவாய் செல்கிறது.

இருப்பினும், நல்ல நடிப்பிற்கும் கொஞ்சம் வித்தியாசமான கதைக்களத்திற்கும் இப்படத்தை பார்க்கலாம். நிச்சயமாக பார்க்கலாம்:)

Nov 9, 2010

I don't care. நான் இன்னிக்கு எழுதியே தீருவேன்!

ஒவ்வொரு நாளும் ஏதாச்சு பத்தி எழுதனும்னு தான் ஆசை. ஆனா வீட்டுக்கு வந்துட்டா.... படுக்கையில் படுத்து தூங்குவதை தவிர வேறும் எதுவும் உருபடியா செய்றதுல்ல. காலேஜ் நாட்களில் நிறைய நேரம் கிடைக்கும். தினமும் எழுத முடிந்தது. ஆனா... எழுத ஆசை இருந்தாலும் மூட் இல்ல.

நிறைய விஷயங்கள் ஒரே சமயத்தில் நடக்குது வாழ்க்கையில். வேலை!- எவண்டா இத கண்டுபிடிச்சது???

adults world is dangerous. வேலை இடத்தில் கற்று கொண்ட பாடம். எல்லார்கிட்டயும் நல்ல பெயர் வாங்க முடியாது. கொஞ்சம் வெற்றி ஏணியில் ஏற வேண்டும் என்றால் ஒரு சிலரை கீழே தள்ளி தான் ஆக வேண்டும். புதுசா வேலைக்கு வந்தவர்களை வாட்டி எடுக்கும் விதம்- உஷ்ஷ்ஷ்ஷ்....ஒரு சின்ன குழந்தைய போய் (அட அது நான் தாங்க......) இப்படி இந்த மாதிரி 'உலகத்தில்' தள்ளி வீட்டீங்களே?? இந்த பாவம் சும்மா விடுமா?

காலேஜ் நாட்களில் புலம்பவது கூட ஜாலியா இருக்கும். (ப்ளாக்கில் நிறைய எழுதியுள்ளேன்) ஆனால், இப்போது புலம்பவதற்கு கூட நேரம் இல்லை!!

ஒவ்வொரு மனிதனுக்கும் சில கோட்பாடுகள் இருக்கும். அதன் படி நடக்கு முற்படுவான்! ஆனால் அதற்கு முரணாக செயல்பட வேண்டும், குறிப்பா வேலை இடத்தில் பிடிக்காத பலவற்றை செய்ய வேண்டும் என்றால்....எரிச்சலை தவிர வேறு என்ன வரும்??

உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்!!! சரி அத விடுங்க!

எல்லாருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். வா, குவாட்டர் கட்டிங்- படம் பார்க்கலாமா? (யாருச்சும் சொல்லங்களேன்?)

Oct 9, 2010

நல்ல வேள நான் மனுஷனா பிறக்கல!

பிறந்த குழந்தை கையில தூங்கினா மாதிரி ஒரு ஃபீலிங்- இரண்டு மணி நேரம் காத்திருந்த எந்திரன் டிக்கெட் கையில் கிடைத்தபோது!!! சந்தோஷம் தாங்கமுடியல. எத்தன நாளா/வருஷமா காத்திருந்தோம். வந்தது. சரவெடி தான் போங்க.

பலபேர் அலசி ஆராய்ந்து இருப்பாங்க இப்படத்தை பத்தி. சுருக்கமா சொல்லிடுறேன் - படம் படு சூப்பர்!!! திருப்பி இன்னொரு முறை பாக்க போறேன் அடுத்த வாரம்.

ரஜினி ரொம்ப காலத்துக்கு பிறகு கஷ்டப்பட்டு நடித்து இருக்கிறார்! கலாநிதி மாறன் வீட்டு தண்ணீர் குழாயிலிருந்து தண்ணீர் வருதா இல்ல காசு வருதான்னு தெரியல. ஒவ்வொரு frameமிலும் காசை அள்ளி தெளித்த இருக்கிறார். வசனங்கள் நச்!

"நல்ல வேளை நான் மனுஷனா பிறக்கல" என்று கடைசியில் ரோபோ சொல்லும்போது எழுந்து நின்று கை தட்டினேன்!!!

ரகுமான் பாடல்கள் கேட்டவுடனே பிடிக்காது. கேட்க கேட்க தான் பிடிக்கும்! ஐஸ்வர்யாவின் நடிப்பு பரவாயில்ல. ஆனால் முகத்தில் வயதான தோற்றம் கொஞ்சம் தெரிந்தது.

படத்தின் இன்னொரு ஹீரோ- graphics!!!!!!!!!!!! படத்தின் கடைசி 20 நிமிடங்கள் வாவ்! (இருந்தாலும் கொஞ்சம் இன்னும் எடிட் செய்து இருக்கலாம்)

மொத்தத்தில் படம் அருமையிலும் அருமை! தமிழில் ஒரு sci-fic படம், பார்க்கமா இருக்காதீங்க!

(கொசுறு: எனக்கு ஒரு மிகப் பெரிய கேள்வி இருக்கு? படத்தில் ஐஸ்வர்யா ராய் ரஜினியை எத்தன தடவ கிஸ் பண்ணுனாங்க!!??! அவ்வ்வ்வ்வ்வ்வ்... சும்மா சும்மா! ஹிஹிஹிஹி....)