Feb 8, 2012

காதலில் சொதப்பாமல் இருப்பது எப்படி?


உங்கள எப்படிங்க correct பண்றது என்று புலம்பி கொண்டிருக்கும் பல பேருக்கு இந்த போஸ்ட் கொஞ்சம் பிடிச்சிருக்கும்.

இப்போ facebook வந்த காரணத்தால், புதிய நண்பர்களை கண்டுபிடிப்பது என்பது கொஞ்சம் சுலபமா போச்சு! சரி, விஷயத்துக்கு நேரா வரேன். பசங்களுக்கு அவங்களுக்கு பிடிச்ச பெண்ணின் மனதில் இடம் பிடிப்பது எப்படி? அதுக்கு ரெண்டு விஷயம் ரொம்ப தேவை- 1) திறமை 2) பொறுமை.

திறமை- உங்களுக்கு பிடிச்ச பெண்ணுக்கு 1008 நண்பர்கள் facebookல் இருந்தாலும், நீங்க அவங்க மனசுல இடம் பிடிக்கும் திறமை வேண்டும்.

பொறுமை- பொறுத்தார் பூமி ஆழ்வார். இன்னும் கொஞ்சம் பொறுமையாய் இருந்தால், ஒரு பொண்ணு மனசையும் ஆளமுடியும்.

tip no 1: எடுத்தவுடனே அவள் ஃபோன் நம்பரை கேட்பது, ஒரு strict traffic police ஆபிசர்கிட்ட லஞ்சம் கொடுப்பதுபோல். செம்மயா விழுவும்!

ஹாய், எப்படி இருக்கீங்க, எங்க படிக்குறீங்க என்று எல்லாம் கேட்டுவிட்டு, பேச்சை தொடரும் உத்தி/திறமை வேண்டும்.

(அது எப்படிங்க? என்று நீங்க கேட்பது எனக்கு கேட்குது)

அவள் info pageல் பிடித்த புத்தகம், பாடகர், இசை, படம் என்று அவளுக்கு பிடித்து விஷயங்களை போட்டு இருப்பாள். அதை வைத்து 'காயை' நகர்த்த வேண்டும்.

உதாரணம், அவளுக்கு shah rukh khanயை பிடித்து இருக்கு என்று வைத்து கொள்வோம். facebook chat-ல்...

நீங்க: உங்களுக்கு shah rukh khanயை ரொம்ப பிடிக்கும் போல் இருக்கு.

அவள்: yes.


நீங்க: எத்தன வருஷமா அவரோட fan?


அவள்: ரொம்ப வருஷமா. 5வது படிக்கும்போதே.


நீங்க: எல்லா படத்தையும் பார்த்துடுவீங்களா?


அவள்: ஆமா. நீங்க? உங்களுக்கு யார பிடிக்கும்?


எப்போ அவள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டாளோ, அப்போதே உங்களுடன் பேச்சை தொடர ஆசைப்படுகிறாள் என்று அர்த்தம். :) ஒரே topicகில் பேச்சை விடாமல், பலவற்றை சுவாரஸ்சியமாய் சொல்லுங்க, பேசுங்க.



tip no 2: அவள் போடும் எல்லா facebook statusக்கும் 'like' போட்டு நீங்க ரொம்ப வெட்டியா இருக்கீங்கனு காட்டாதீங்க. facebook comments போடும் போது, நகைச்சுவையாகவே அல்லது அறிவுபூர்வமாகவோ போடுங்க. சில நேரங்களில் அவள் ரொம்ப நொந்துபோய் கவலையாய் ஒரு status போட்டால், அதற்கு நீங்க அவளுக்கு தனியாய் ஒரு facebook message அனுப்புங்க.

hi ராஜி

எப்படி இருக்கீங்க? கொஞ்ச நாளாவே, உங்க status எல்லாம் ரொம்ப நொந்துபோய் எழுதுறீங்க? cheer up buddy! கவலைய விடுங்க. ரொம்ப சோகமா போனாலும் உடம்ப நல்லது இல்ல. அதுக்கும் சோகத்த மனசுலே பூட்டி வைக்காம statusஆ போடுறதும் நல்லது தான். atleast உங்க friends ஆறுதலா இருப்பாங்க. கவலையா இருந்தா, friendsகூட வெளியே போயிட்டு வாங்க, இல்லன்னா comedy விடியோஸ் பாருங்க. whenever I am down, I just go to sleep. that's the best remedy for me:) times will be tough but we are tougher! :)

இப்படி ஒரு மெசேஜை போட்டுவிட்டு கூடவே அவங்களுக்கு ஏதேனும் காமெடி clip linkயை அனுப்பிவிடுங்க. 6 ballயையும் 6 சிக்ஸர் போட்ட மாதிரி, சார்! இதுல ரொம்ப முக்கியமான விஷயம், அவங்களுக்கு என்ன சோகம்னு நீங்க கேட்டுவிட கூடாது. அவங்களோட privacyக்கு நீங்க மரியாதை கொடுக்கனும். அவங்களா சொன்னால் தான், அது சரி. 'en frienda pola yaaru machan' என்று அவள் உங்களை பத்தி நினைப்பாள், அப்பரம் நீ தான் என் மச்சான் என்று கூடிய விரைவில் சொல்வாள்!!

(எத்தன நாளைக்கு தான் ஃபோன் நம்பர் வாங்காம, facebookலே இருக்குறது? அப்படினு நீங்க கேட்பது புரியது. அதுக்கு தான் அடுத்த tip)

tip no 3: நேரடியா ஃபோன் நம்பரை கேட்க கூடாது. நீங்கள் ஒரு volunteer charity programme செய்யுறீங்க இல்ல ஒரு sports event தயார் பண்ணுறீங்க, அதுக்கு ஆள் தேவை இல்ல ஒரு முக்கியமான book தேவை அதுக்கு தெரிஞ்சவங்க வேணும் என்று சொல்லிவிட்டு. அப்படி யாரேனும் தெரிந்தால், அவங்க நம்பர் வேணும். எனக்கு உடனே என் நம்பருக்கு message பண்ணுங்க என்று சொல்லிவிட்டு உங்க நம்பரை கொடுத்துவிட்டு உடனே 'facebook chat' லிருந்து offlineக்கு வந்துவிட வேணும். உங்க நம்பர் கொடுத்த மாதிரியும் இருக்கும், அவங்க message பண்ணும் வாய்ப்பும் இருக்கும்.

இங்க தான் பொறுமை தேவை. உடனே நம்பர் வராது. tip no 3யை அவளை நன்கு தெரிந்தபிறகு, 4 அல்லது 5 மாதம் கழித்து பயன்படுத்துவது நல்லது.



பசங்களே, முக்கியமான விஷயம் 'நம்பிக்கை'. தெரியாத பொண்ணு facebookல் உடனே நம்பர் கொடுக்கனும், பாக்கனும், பீச்-க்கு போனும் அப்படின்னு ஒரே பாடலில் பெரிய ஆளாய் ஆகிவிட வேண்டும் என்று கனவு காணகூடாது. (ஒரே பாடலில், தனுஷ் வேண்டும் என்றால் பெரியா ஆளாய் வந்துவிட முடியும். நம்மள ரொம்ப சாதாரணமான மனுஷங்க. அதை புரிந்து பொறுமையாய் இருந்தால், நல்லதே நடக்கும்.)

காதலில் சொதப்பாமல் இருங்க!!

Jan 24, 2012

உன் ஞாபகம்!

கூட்டமாய் ஜாலியாய்
போய் கொண்டிருந்த
தோழி கல்யாணத்தில்
திடீரென்று bore அடித்தபோது
உன் ஞாபகம் வந்ததே?
இதுக்கு பெயர் தான் காதலா?



நண்பனின் வேட்டை

நண்பன், வேட்டை- இரண்டு படங்களையும் பார்த்தேன்.

வேட்டை- இதுக்கு அப்பரம் retire ஆவது நல்லது, maddy! தாவணி போட்டால் தேவையானி/ரம்பா chemistryயை கொண்டு வந்துவிடலாம்னு நினைத்த girlsக்கு ஒன்னே ஒன்னு தான் சொல்லனும்- பன்னிக்குட்டி பவுடர் போட்டாலும், அது பன்னிக்குட்டி தான். சமீரா ரெட்டி, நீங்க பேசாமல் கௌதம் மேனன் படங்களில் மட்டும் நடிப்பது நல்லது. அமலா பால், பரவாயில்ல. ஆர்யா, ம்ம்ம்.... ஒன்னும் சொல்றதுக்கு இல்ல.

லிங்கு, ரவுடிகள் சங்கம் எல்லாம் strike பண்ணா, நீங்க யார வச்சு படம் எடுப்பீங்க?

வேட்டை படக்குழுவினர் பொங்கல் நிகழ்ச்சிகள் அடித்த காமெடிகள் தான் நல்லா இருந்துச்சு. ஆனா, படம் பொங்கலுக்கு தேவையில்லாமல் வந்த செங்கல்!!

----------------------------------------

நண்பன் படத்தை பத்தி எல்லாரும் சொல்லியிருப்பாங்க. நான் ஒன்னே ஒன்னு தான் சொல்லனும்- vijay is back!!!

கோழிய வச்சு chicken tikka பண்ணாங்க director raju ஹிந்தியில்.
அதே கோழிய வச்சு செட்டிநாட்டு கோழி குழம்பு பண்ணாங்க director ஷங்கர் தமிழில்.

இரண்டும் ரசிக்கும் வகையில் இருக்கு. ஆகா, அவங்கள பார்த்து காபி அடிச்சிட்டாங்க, டீ ஊத்திட்டாங்க அப்படினு சொல்றத நிறுத்திவிட்டு வேலைய பார்ப்பதே நல்லது:)))))))))))))))))))

Jan 2, 2012

சிக்குபுக்கு காதல்

'அடடா அட மழை டா அடமழை டா' பாடல் alarmtoneஆக 15வது முறையாக ஒலித்தது. ஷாலினியின் அம்மா ஹாலில் இருந்து கத்தினார், " ஷாலு, காலையிலேந்து எத்தன தடவ..... நீ இப்போ எந்திரிக்க போறீயா இல்லையா?"

ஷாலினி சோம்பல்முறிந்து எழுந்தாள். பாதி தூக்கத்தில் கண்களை முழுவதாய் திறக்காமல் கடிகாரத்தை பார்த்தாள். காலை மணி 6.50. திடுக்கிட்டு போனாள்.
மணி 7.05க்கு எல்லாம் இரயில் இருக்க வேண்டுமே! அவன் சரியாய் அந்த நேரத்திற்கு தான் வருவான். அறை கதவை தள்ளிவிட்டு வேகமாய் குளியலறைக்கு ஓடினாள் ஷாலினி.

"slow..slow..ஏன் இந்த அவசரம்?" ஷாலினியின் அம்மா கேட்டாள், செய்தித்தாளின் முக்கியமான பக்கத்தை (சினிமா செய்திகள்) பார்த்து கொண்டே.

"I have important work to do at office. I need to be there early." என்று சொல்லி கொண்டே heater switchயை on செய்தாள் ஷாலினி.

"வேலையா? ஹாஹா...நீ என்னிக்கு அது எல்லாம் பாத்து இருக்க?" கிண்டல் அடித்தார் அம்மா.

"மா..please... don't tease me."

காலை உணவுகூட சாப்பிடாமல் சிட்டாய் பறந்தாள் இரயில் நிலையத்திற்கு.
மணி 7.04. அந்த இரயில் compartmentல் அவனைத் தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள். சரியாக காலை 7.05க்கு அவன் எப்போதுமே அதே compartmentல் ஏறுவான் கையில் sports bag வைத்து கொண்டு.

ஆமாங்க, இது ஒரு காதல் கதை. ஆனா ஹீரோ பெயர் கார்த்திக் இல்லை.

******************************
(மூன்று மாதங்களுக்கு முன்பு)

தனது தோழிக்கு iphone whatsapp மூலம் செய்தி அனுப்பினாள்.

தோழி: நிஜமா வா? what's his name?

ஷாலினி: எனக்கு எப்படி தெரியும்? இன்னிக்கு காலையில trainல பாத்தேன். ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப cuteஆ இருந்தான். பெயர் எல்லாம் என்ன மூஞ்சில எழுதியிருப்பானா என்ன?

தோழி: சரி, பையன் எப்படி இருப்பான்?

ஷாலினி: சொல்ல வார்த்த இல்ல...

தோழி: அடங்குடி! தூ...தூ... சொல்லு!

ஷாலினி: curly hair, very tall, smooth complexion, shahid kapoor nose, sharp eyes, great structure and அவன் smile பண்ணுவான் பாரு.... பாத்துகிட்டே இருக்கலாம்னு தோணும்.

தோழி: சரி... இப்ப என்ன பண்ண போற?

ஷாலினி: love தான்.

தோழி: எப்படி?

ஷாலினி: அதலாம் தெரியாது... ஆனா பிடிச்சுருக்கு. இவன் தான் எனக்கு அப்படின்னு தோணுது. அவன் பாத்த முதல் என்னென்னமோ மாற்றம். மழை பிடிச்சுருக்கு. இளையராஜா பாட்டு கேட்க ஆரம்பிச்சுட்டேன். அடிக்கடி எனக்குள்ள நானே சிரிச்சுக்குறேன். உலகமே என்னைய பாக்குற மாதிரி ஒரு feeling. bossகூட நல்லவனா தெரியுறான். அப்போ இது love தானே?

*************************************
முகம் தெரியாமல் ஒரு காதல் கோட்டை மாதிரி, பெயர் தெரியாமல் ஒரு காதல். தினமும், அவன் அதே compartmentல் வருவான். அதே இருக்கையில் அமர்வான். ஷாலினி சரியாக அதே நேரத்தில் செல்வாள். அவன் எதிர் இருக்கையில் அமர்வாள். தினமும் பார்த்து கொள்வதால், அவ்வபோது அவனிடமிருந்து ஒரு சின்ன புன்னகை. அவன் புன்னகையித்துவிட்டான் என்றால், அன்று இரவு தோழிகளுக்கு எல்லாம் party! இப்படி சென்று கொண்டிருந்த ஒரு தலை ராகத்தில் tune change mamu!

அவனுடைய பெயரை கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று இன்று முடிவு எடுத்தாள் ஷாலினி. 7.05க்குள் இரயில் நுழைந்தாள். வழக்கம்போல் அவள் அமரும் இருக்கையில் இருந்தாள். ஆனால், அவன் அங்கு வரவில்லை. அவள் மனதில் ஆயிரம் யோசனைகள்.

இந்த பொண்ணுங்களே இப்படி தான்? ரொம்ப யோசிப்பாங்க. சில நேரங்களில் ரொம்ப ரொம்ப ரொம்ப யோசிப்பாங்க.

ஏன் அவன் வரவில்லை? டைம் ஆச்சு? இரயில் கிளம்பிட போகுது? ஐயோ... என்ன ஆச்சு அவனுக்கு? fever? flu? வேற வேலை இடத்துக்கு போயிட்டானா? ச்சே... நான் அப்பவே அவன்கிட்ட.....

என்று யோசித்தவளின் யோசனைகளுக்கு முற்று புள்ளி வைத்தாற்போல் அவன் இரயிலுக்கு நுழைந்தான். போன உயிர் திருப்பி வந்ததுபோல் இருந்தது. ஆனால்....

அவன் கையில் 4 வயது குழந்தை!

ஷாலினியின் மனம் சுக்கு நூறாகியது! திருப்பி வந்த உயிர் மீண்டும் மாயமாய் மறைந்து சென்றது. நாளை வெளிவர வேண்டிய ரஜினி படம் இனி வரவே வராது என்று கேட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது ஷாலினிக்கு. குழந்தையின் பிச்சு விரல்கள் அவனது நெஞ்சில் அடித்து விளையாடியபோது, விதி விளையாடுவதுபோல் உணர்ந்தாள் ஷாலினி.

அழுகை அழுகையாய் வந்தது ஷாலினிக்கு. ஏதோ ஒரு மயானத்தில் தனியாக நிற்பதுபோல் உணர்ந்தாள். அதிகமாய் யோசிக்கும் ஷாலினிக்கு என்ன யோசிப்பது என கூட தெரியாமல் திண்டாடினாள். தொண்டையில் துக்கம் அடைக்க, கையில் இருந்த iphone whatsapp அலறியது.

தோழி: மச்சி, how? success? what's his name?

ஷாலினி: he's married. அவனுக்கு 4 வயசுல ஒரு குழந்தை இருக்கு.

தோழி: omg!! என்ன கொடும இது!

*************************************

ஷாலினி இறங்கும் அடுத்த இரயில் நிலையத்தில் இறங்கியவன், குழந்தையை அவன் அம்மாவிடம் கொடுத்தான்.

அவனது அம்மா, "சித்தப்பாவுக்கு, bye சொல்லு!"

*முற்றும்*