Dec 10, 2015

இந்த மாதிரி பேரிடர் நடந்து இருக்கு, எத பத்தி எழுதுறது?

ஒரு வார காலமாக பேஸ்புக் பக்கமெல்லாம் பேரிடர் நடந்த செய்திகளும், படங்களும் வந்த வண்ணம் இருக்கிறது.

மனம் அழுதது. நிறையவே பதறியது.



சிங்கை என் தாய்நாடாக இருந்தாலும், சென்னையில் சில வருடங்கள் இருந்திருக்கிறேன். அந்த நினைவுகளை அசை போட்ட படி இருக்க, பேரிடர் செய்திகள் பல சமயம் நெஞ்சை உலுக்கியது.

நமக்கு தெரிந்த செய்திகள் இது என்றால், தெரியாமல் போன செய்திகள் எத்தனையோ! கெட்டதிலும், ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது என்றால், அது சென்னைவாசிகளின் மனங்களைப் பற்றி இவ்வுலகத்திற்கு தெரியவந்தது தான்.

எல்லாம் நல்லதுக்கே என்று சாதாரணமாக சொல்லி முடிப்பதா இப்பதிவை என்று தெரியவில்லை. ஆனால்,சென்னையில் இருப்பவர்கள் பல அசாதாரணமான மக்கள் என்பதால் அவ்வாறே முடித்து கொள்கிறேன்.

நான் பேஸ்புக்கில் பார்த்து, பகிர்ந்து கொண்ட சில படங்கள், இதோ:
















Sep 19, 2015

உங்க அம்மா யாருடைய "பிட்டு படம்"?



"உங்க அம்மா, யாருடைய பிட்டு படம்?" என நீங்க நினைக்குறீங்க. அம்மாவும், பெண் என்பதால்....அம்மாவைப் பார்த்து இப்பாடலை பாடுவீங்களா?

என்ன நீ இப்படி அசிங்கமா கேட்குற என்று குமுறும் பலருக்கு, இதோ இதன் உண்மை காரணம்.

இந்த பதிவு எழுத முக்கியமான காரணம் இளம் சூராவளி, குட்டி தளபதி, புரட்சி சின்ன தளபதி, மக்களின் செல்ல பிள்ளை, கன்னி பெண்களின் கனவு கணவா, VIRGIN பசங்களின் ஓபாமா! - ஜீ.வி

படம், பாடல், வசனங்கள் என கொடுத்ததை எல்லாம் அள்ளி பருகி, துப்ப வேண்டும் என்று தோன்றுகிறது. இதுக்கு தான் ஏற்கனவே "A" சான்றிதழ் கொடுத்துங்களே அப்பரம் என்ன சத்தம்?
இதலாம் சும்மா ஒரு ஜாலிக்காக தான் என்று இதை உதாசினப்படுத்த என்னால் முடியவில்லை. காரணம்...காரணங்கள் உண்டு.

1) "A" படங்கள் என்பது ஒரு குறிப்பட்ட வயது பசங்களுக்கு பெண்களுக்கு என்று இருந்தாலும், பெண்களை கேவலப்படுத்தி, அசங்கிபடுத்தி வசனங்களை எடுக்க வேண்டுமா?

2) ஓ delhi belly, AMerican pie படங்கள் எல்லாம் பாக்குறீங்க? தமிழ்ல எடுத்தா என்ன?

யோவ்! இப்படங்களில் பெண்களை கேவலப்படுத்தி பேசவில்லை. பொது விஷயங்களையும் பிரச்சனைகளையும் கொஞ்சம் தைரியமாக சொல்வதே bold movies . திரிஷா இல்லேனா நயன்தாரா- இப்படத்தில் என்ன பொது பிரச்சனை இருந்துச்சு??

3) "நீ எனக்கு பிட்டு படம்?" பாடல்.

ஜீவி பிரகாஷ் மட்டும் குறை கூற முடியாது. இயக்குனர், தயாரிப்பாளர், பாடல் எழுதியவர்- யாருக்குமே இது அபத்தமா தெரியல்லையா? ஒரு தவறை எல்லாரும் சேர்ந்து செய்தால் அது எப்படி சரியாகும்?

டீ கடைகளிலும், டிவியிலும், ரேடியோவிலும், விழாக்களிலும் பாடலை கேட்கும்போது எப்படி இருக்க போகுது?




4)      Displaying FullSizeRender.jpg


அம்மா, பாட்டி, சித்தி, பெரியம்மா, தங்கச்சி, அக்கா எல்லாரும் டைனோசர் காலத்துல இருந்தவங்க இல்ல. அப்போ இவங்களும்.......

(கோபம் வரமாதிரி காமெடி பண்ணிய இயக்குனருக்கு, ஒரு டைனோசர் பொம்மை அனுப்பவும்)

***************************************************

சரி இம்புட்டு கோபம் பிட்டு....ச்சீ கோபம் பட்டு என்ன ஆக போகுது?

சிங்கை தமிழ் வானொலி நிலையத்தில் ஒலிப்பரபாகும் பாடல்களை சென்சார் செய்துவிட்டு தான் ஒலிப்பரப்ப படும்.

அப்படி சென்சார் செய்யப்பட்ட சில பாடல்கள்

1)
கண்டாங்கி கண்டாங்கி
கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும்
கஞ்சா வச்ச கண்ணு

2) why this kolaveri di...
hand la glass
glass la scotch
eyes-u full-aa tear-u


3) சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல
ஹே பத்து நாளா சரக்கடிச்சேன் போதையே இல்ல
உலகம் புரிஞ்சு டிரவ்ஸர் கிழிஞ்சு
இனி வைச்சிக்கிட என் கிட்ட தான் ஒன்னும் இல்ல (2)

(cancel செய்த வார்த்தைகள் வானொலியில் ஒலிப்பரப்ப மாட்டார்கள்)

*********************************************
இப்படி சென்சார் செய்யப்பட்டால் திருந்திடுமா இளைஞர் சமுதாயம்?

கண்டிப்பா இல்ல தான். தேவர் மகன் சிவாஜி சொன்னதுபோல் "இது என்ன பெருமையா? கடமை!"

நமக்கு ஒரு பொறுப்பு இருக்கு. இது நம்ம கடமை. இம்மாதிரியான கொச்சை பாடல்களை தடுக்க முடியாவிட்டாலும், இது தப்பு என்று சொல்ல நாம் அனைவரும் ஏதேனும் ஒன்னு செய்ய வேண்டும்- ஊடகங்களுக்கு அதில் அதிக பொறுப்பு இருக்கு.

இந்த பதிவும் ஏதோ ஒரு வகையில் அப்பொறுப்பை செய்து விட முயல்கிறது.

இந்த மாதிரியான பாடல்களால் ஏற்பட்ட பாதிப்பு எப்ப தெரியும் தெரியுமா?


சூப்பர் சிங்கரில் சின்ன குழந்தைகள் "நீ எனக்கு பிட்டு படம் டி...." என பாட,

அதற்கு வெட்கமில்லாமல் பெற்றோர்கள் ஆட,

அதை கேட்டுவிட்டு நடுவர்கள்... "பிட்டு....அந்த டு...landing note இன்னும் emotionalஆ பாடனும் கண்ணா?" என்று சொல்வார்கள் தெரியுமா                                                                                                              அன்று புரியும் நமக்கு.

Jul 13, 2015

பாகுபலியும் காக்கா முட்டையும்



இரண்டு படங்கள்.
ஒன்று 250 கோடிகளில் உருவாக்கப்பட்டது.
இன்னொறு வெறு 2 கோடியில்.

ஆனால் இரண்டுமே தமிழ் சினிமாவை அடுத்த இடத்துக்கு கொண்டு போய் உள்ளன. தமிழ் சினிமா ரசிகையாய், எவ்வளவு பெருமையாக இருக்கு என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை.


காக்கா முட்டை- ரெண்டு பசங்க பிட்சா சாப்பிட ஆசைப்படும் கதை.

பாகுபலி- பழிவாங்கும் கதை.




ஒற்றை வரி கதையை எப்படி இப்படி பிரமாண்டமாய் எடுத்து இருக்காங்க! இரண்டுமே ஒரு வகையில் பிரமாண்டம் தான்.

காட்சி அமைப்பும் சரி, வசனங்களும் சரி அருமையிலும் அருமை. ரெண்டு படங்களையும் பார்த்து ரசித்து விட்டு தோன்றிய சிந்தனை....

 "ஒரு படத்துக்கு ரொம்ப முக்கியம் திரைக்கதையும் நடிகர் நடிகைகளும் தான்."

காக்கா முட்டை: அந்த ரெண்டு பசங்களும்.... யப்பா!!! அவர்களின் அம்மாவாக நடித்தவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

பாகுபலி: யார் நடிப்பை பற்றி நான் பாராட்டி எழுதுவது? ஒவ்வொரு நடிகை நடிகரும் வெளுத்து வாங்கி இருக்காங்க! ரொம்ப நாளைக்கு அப்பரம் ஒரு படத்தில் நடித்தவர்களின் ரசிகையாய் மாறிவிட்டேன்.

இரண்டு படங்களிலும் பிடித்த இன்னொரு விஷயம்: தமிழ்.

இரண்டு தமிழுமே அழகு தான்!!

இரண்டு படங்களையும் இந்தியர்கள் அல்லாத வேறு இனத்தவர்கள் பார்த்து ரசித்து செல்வதை பார்க்கும்போது, ஆனந்த கண்ணீரை தவிர்க்க முடியவில்லை.


இது போன்று இன்னும் நிறைய படங்கள் வர வேண்டும் என சொல்ல மனசு வருவில்லை. இது போதும் எனக்கு! இந்த சந்தோஷம் அப்படியே மனதில் நீண்ட நாள் இருக்கட்டும்!!


Jun 3, 2015

500th post!!

இது என்னுடைய 500வது பதிவு!!

அடேங்கப்பா!!! என நானே வியந்து பார்க்கிறேன். இந்த வலைப்பூவில் எழுத ஆரம்பித்து 10 வருடங்கள் ஆயிற்று. சும்மா கிறுக்கி எழுதிய கவிதைகளை ஒன்றாக சேர்த்து வைக்கலாம் என ஆரம்பித்த வலைப்பக்கம், இப்போது பல கதைகளையும், பல கட்டுரைகளையும், கவிதைகளையும், திரைவிம்ரசனம், பற்ற பல லொள்ளுகளையும் தாங்கி நிற்கிறது.

ஆதரவு தந்து, ரசித்து படித்து, தொடர்ந்து ஊக்குவித்து கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி.

'you must love yourself' என்று ஆங்கிலத்தில் ஒரு வாசகம் உண்டு. அதனை முழுமையாக அனுபவித்த இடம் இந்த வலைப்பக்கம்! என்னையே நான் ரசித்து வருகிறேன் என் எழுத்துகள் மூலம்.

10 வருடங்களை புரட்டி பார்க்கும்போது, எழுத்திலும் சிந்தனையிலும் கொஞ்சம் முன்னேற்றம் தெரிகிறது என்றால், அதற்கு ஒரே காரணம் நீங்க தான்!!! நன்றி!!

சரி இத்தன வருஷம் எழுதி இருக்கோமே, சிறந்த பதிவுகளுக்கு, அவார்ட் கொடுக்கலாம்னு நினைக்குறேன். இப்பதான் அவார்ட் ஷோ நடத்தறது சர்வ சாதாரணமா போச்சே.....ஹிஹிஹி....

எனக்கு பிடித்த தொடர்கதை: டாடி மம்மி வீட்டில் இல்ல (series 1)
http://enpoems.blogspot.sg/2009/04/daddy-mummy-1_13.html

மக்களுக்கு பிடித்த தொடர்கதை: விண்ணை தாண்டி வந்தாளே
http://enpoems.blogspot.sg/2010/03/1.html

நான் எழுதியதில் ரசித்தது: short films ஆளுங்க தான் பெரிய தலவலி சார்!

http://enpoems.blogspot.sg/2013/06/short-films.html



பாராட்டும் திட்டும் பெற்ற விமர்சனம்: கௌதம் மேனன் படம் செய்வது எப்படி?- சமையல் குறிப்பு


500 பதிவுகளில், எனக்கு பிடித்த சிலவற்றுக்கு இந்த அவார்ட்!! 

தொடர்ந்து படிங்க!!! ஆதரவு தாங்க!!